Friday, February 13, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 10


சத்யன் சாப்பிட்ட தட்டில் கைகழுவிவிட்டு எழுந்து மான்சியின் அருகில் வந்து அவளை நிதானமாக ஏறஇறங்க பார்த்தான் வெள்ளைக்கு பதிலாக சிவப்புச் சேலை கட்டிய தேவதை போல் இருந்தாள் மான்சி அவளுக்கு மிக அருகில் சத்யன் நின்றதால் அவளின் வாசனையைக்கூட சத்யனால் உணர முடிந்தது இமைகளை குடையாக பிடித்து கண்கள் கவிழ்ந்திருக்க நேரான கூர் நாசியில் இருந்த அந்த ஒற்றை சிவப்புகல் மூக்குத்தி அவளின் பால்போன்ற நிறத்துக்கு எடுப்பாக இருக்க சத்யனுக்கு தன் நுனி நாக்கால் அந்த மூக்குத்தியை தீண்டி அவளை சிலிர்க்க வைக்கவேண்டும் போல் இருக்க தன்னை அடக்கிக்கொண்டு அவளின் தேன்சுமந்த இதழ்களை பார்த்தான்

இந்த இதழ்கள் இயற்கையாகவே இவ்வளவு சிவப்பாக இருப்பதால் இவற்றை செம்பருத்தியின் இதழ்கள்ளோடு ஒப்பிடுவதா இல்லை தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஈரமாகவும் மிருதுவாகவும் இருப்பதால் அதிகாலையில் பனித்துளிகளை சுமந்திருக்கும் ரோஜாவின் இதழ்கள்ளோடு ஒப்பிடுவதா என்று சத்யனுக்கு ஒரே குழப்பமாக இருக்க 'ஏன் அந்த இதழ்களை சுவைத்துப் பார்த்தே அதை நீ தெரிந்துகொள்ளளாமே' என்று அவன் மனம் உத்தரவிட இருக்கும் இடத்தை உணர்ந்து சத்யன் மனதை அடக்கிக்கொண்டு ஏக்கத்துடன் அவளின் ஈர இதழ்களைப் பார்த்தான்
 ''உன் இதழ்ப் பெட்டகத்துள்......
 ''எனக்கெனநீ சேமித்து வைத்திருக்கும்......
 ''ஒரு கோடி முத்தங்களை .........
 ''என் உதட்டுச் சாவிகளால் ..... 
''திறந்தெடுக்க முயல்கிறேன் ஆனால்.....
 ''ஒவ்வெரு முறையும் ஒன்று மட்டுமே .......
 ''சாத்தியமாகும் போலிருக்கிறதே ஏன் .......!



மானசி சத்யன் தன்னையே வெறிக்க பார்த்துக்கொன்டிருப்பதை உணர்ந்து 'ச்சே இதென்ன இத்தனை பேர் முன்னால இப்படி வெறிச்சுப் பார்த்துகிட்டு நின்றால் எல்லாரும் என்ன நினைப்பாங்க கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா இல்லை மண்டையில் ஆப்ரேஷன் பண்ணப்ப எல்லாத்தையும் எடுத்திட்டாங்களா 'என்று செல்லக் கோபத்தோடு அவனை வைதவள் சரி அவன்தான் இப்படி நிக்கிறான்னா நானும் அப்படியே நிக்கிறேனே என்று என்னியவளாய் கால்களை பின்னால் ஒரு எட்டு எடுத்து வைக்க நீளமாக விட்டிருந்த புடவை முந்தானையில் கால் தடுக்கி தடுமாற சத்யன் முன்னால் எக்கி அவள் தோள்களை பற்றிக்கொன்டான்

 தோள்களை பற்றியவன் அவளை அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள அவன நெஞ்சில் முகம் வைத்திருந்த மான்சிக்கு 'இவனுக்கு இதே வேலையாப்போச்சு எப்பபாரு எல்லார் முன்னாடியும் அணைச்சிகிட்டு ச்சே இப்படியா டைட்டா பிடிக்கறது எனக்கு தோள் வழிக்கும்ன்னு கொஞ்சம் கூடவா தெரியாது' என்று எண்ணினாலும் அவன் மார்பில் வந்த அந்த ஆண்மையின் வாசனை அவளை அங்கேயே முகத்தை ஆழமாக பதிக்கவைத்தது யப்பா இது என்ன வாசனை என்று நினைத்து மூச்சை இன்னும் ஆழமாக இழுத்து சுவாசிக்க அது அவள் மூளைக்குப் போய் சுர்ரென்று ஏறியது

 அப்போது பின்னால் இருந்து யாரோ அவள் முந்தானையை பற்றி இழுப்பது போல் இருக்க அவசரமாக அவனிடம் இருந்து விலகி திரும்பி பார்த்தாள் அங்கே குழந்தை பிரவீன் அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் மான்சி குழந்தையையே பார்த்தாள் இவனை எப்படி இவ்வளவு நேரம் மறந்தோம் குழந்தையா வந்து என்னைத் தொட்டதும்தான் நினைவு வருகிறதே ச்சே இங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பாங்க என்று நினைத்து மனம் வருந்தியபடி மான்சி நிற்க்க சத்யனுக்கு அவளின் நிலைமை புரிந்திருக்கவேண்டும் சட்டென குனிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருகையில் குழந்தையை தாங்கி மறுகையால் மான்சியின் இடுப்பைச் சுற்றிவளைத்து பாதி அணைத்தார்போல் அவளை சாப்பாட்டு மேசையருகே அழைத்துச் செல்ல மான்சிக்கு கூச்சமாக இருந்தது

 மான்சி மெதுவாக தன் இடையில் அவன் கையை அகற்ற முயற்ச்சித்தாள் ம்ம் அவனா விடுவான் அவள் இடுப்பில் தன் ஐந்து விரல்களையும் அழுத்திவைத்து கொத்தாகப் பற்றிக்கொண்டான் மான்சி மனதுக்குள் சிறு புகைச்சல் எட்டிப்பார்க்க வேறுவழியின்றி அவனுக்கு அருகில் நாற்காலியில் உட்க்கார்ந்தாள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த சத்யன் ''ம் சிவா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம் ''என்று உத்தரவிட சிவாவும் சாப்பிட உட்கார்ந்தான்

 சிவாவுக்கோ தனது கண்ணெதிரில் நடந்த மான்சி சத்யன் ரொமான்ஸ்ஸை பார்த்து காதல் எக்குத்தப்பாக உச்சியில் ஏற உடனே போய் நிர்மலாவைப் பார்த்தே ஆகவேண்டிய நிலைமை ச்சே காதல் செய்தாலும் இம்சை காதல் செய்பவர்களை பார்த்தாலும் இம்சைதான் போல 
''நான் மடல் விரித்து .....
 ''மனம் பிரித்து.....
 ''நினைவை வருத்தி .....
 ''வின் நோக்கி.....
 'கருவைச் சுருக்கி.....
 ''நான் கவிதை புனைந்தாலும் ....
 ''அது முழுமை பெறுவதென்வோ......
 ''என் மார்பில் நீ சாய்ந்து ....
 ''மெல்ல முத்தமிட்டு....
 ''நன்றாயிருக்கிறது என....
 ''சினுங்கலாக நீ உரைக்கும் அந்த ....
 ''மந்திரத் தருனம் தான்....
 ''உரைப்பாயா கண்மணி..........?

மான்சிக்கு தட்டு வைத்துவிட்டு என்னம்மா சாப்பிடுறீங்க என்று சமையல்காரன் கேட்க அவள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாள் சத்யன் அவளை திரும்பி பார்த்துவிட்டு சமையல்காரனிடம் ''அவளுக்கு இட்லி மட்டும் வச்சிட்டு சிவாவுக்கு என்ன வேனும்னு கேட்டுட்டு வை''என்று வீட்டு எஜமானாய் உத்தரவிட்டான் சிவா அமைதியாக சாப்பிட சத்யன் தனது தட்டிலிருந்து எடுத்து மடியிலிருந்த மகனுக்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட மான்சி தனக்கு வைத்த இரண்டு இட்லியை உதிர்த்து உதிர்த்து புட்டாக மாற்றிக் கொண்டிருந்தாள்

 சிவா சாப்பிடும் வரை காத்திருந்த சத்யன் '' ம் சொல்லுங்க சிவா என்ன விஷயமா வந்திருக்கீங்க ''என்று கேட்க சிவா இந்த நேரடியான கேள்வியால் ஒருகணம் தடுமாறி பிறகு சமாளித்து''அது வந்து மான்சிதான் காலையில என்னை எழுப்பி கோவைக்கு போகனும் என்னை பஸ்ஸில் ஏத்தி விடுன்னு சொன்னா சரின்னு நானும் கிளம்பி கூட சேர்ந்து வந்தேன் ''என்று மான்சியை பார்த்து கொண்டே கூறினான்

 ''ஓ அப்படியா''என்று போலியாக கண்களை விரித்து ஆச்சரியப்பட்ட சத்யன் பக்கத்தில் மான்சியை பார்க்க அவள் இப்போது தன் தட்டில் இருந்த உதிர்ந்த இட்லியை சிறு சிறு பாகங்களாக பிரித்து கொண்டிருந்தாள் சத்யன் பட்டென அவள் கையை பற்றி ''என்ன மான்சி பண்ணிகிட்டு இருக்க பிடிக்கலைன்னா வேற ஏதாவது வச்சி சாப்பிடு ''என்று கூற அவள் வேறு எதுவும் வேண்டாம் என்பது போல தலையசைத்தாள் '

'சரி அப்ப போய் கைகழுவிவிட்டு வா ''என்று கூற மான்சிக்கு இவன் ஏன் தன்னை இப்படி அதிகாரம் செய்கிறான் என்று மனம் முரண்டினாலும் எழுந்து அவன் சொன்னதை செய்துவிட்டு மறுபடியும் வந்து நின்று கொள்ள ''ம் ஏன் நிக்கிற இங்கேயே வந்து உட்காரு உணவுதான் வேண்டாம் ஜூஸ்ஸாவது குடிக்கிறாயா ''என்று கேட்க அவள் எதுவும் பதில் சொல்லாமல் முதலில் அமர்ந்திருந்த இருக்கையிலேயே வந்து அமர்ந்து கொண்டாள

 வேலைக்காரன் எடுத்துவந்த ஜூஸை வாங்கி அவள் எதிரில் வைத்த சத்யன் ''ம் இப்ப சொல்லு எதுக்காக இங்கே கிளம்பி வந்திருக்க ''என்று வெகு நிதானமாக கேட்க மான்சி நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து 'ப்ளீஸ் எதையும் கேட்காதேயேன்''என்பது போல இறைஞ்சுதலாய் தன் விழிதிறந்து பார்க்க ஒவ்வெரு நாளும் தன்னை ஏங்க வைத்த தன் நினைவை விட்டு அகலாத அந்த பிரவுன் நிற கண்களை பார்த்து ரசித்து கொண்டே

''இல்ல மான்சி நீ எதற்காக வந்திருக்கன்னு சொல்லித்தான் ஆகவேண்டும் ''என்று இரக்கமின்றி கேட்டான் மான்சிக்கு கோபமாக வந்தது பெரிய இவரு இவர் கேட்டவுடனே பதில் சொல்லனுமாக்கும் என்று மனதுக்குள் சினுங்கிகொண்டே ''இனிமேல் உங்கவீட்டில் இருக்கலாம்ன்னு வந்தேன்''என்று மெல்லிய குரலில் கூறினாள்

 ''என் வீட்டில் இருக்கலாம்னுதான் வந்தியா என்கூட இல்லையா ''என்று குரலில் குறும்புடன் கேட்க மான்சி வெடுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்து முறைக்க ''சரி சரி அதுக்கு ஏன் முறைக்கிறாய் உன் முடிவில் எந்த மாற்றமும் கிடையாதே ஏன் கேட்கிறேன்னா நம்ம குடும்பம் கோவையில் ஒரளவுக்கு மரியாதையான கௌரவமான குடும்பம் இங்கேயிருந்து அடிக்கடி மருமகள் வீட்டைவிட்டு வெளியேறினால் அவ்வளவு நன்றாக இருக்காது அதனால தான் கேட்குறேன் உன்னோட முடிவில் எந்த மாற்றமும் கிடையாதே ''என்று மறுபடியும் திருப்பி திருப்பி கேட்க இப்போது மான்சிக்கே குழப்பமாகிவிட்டது.

 இவன் சொல்வதை பார்த்தால் நான் இங்கே இவன் சொல்படி கேட்டு இவன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்று சொல்வதை போல இருக்கிறதே ம்ஹூம் இது சரியில்லை முதலி ல்எல்லாவற்றையும் பேசி ஒரு முடிவு எடுத்தபிறகுதான் எதையுமே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செயதவளாய் நிமிர்ந்து சத்யனை பார்த்து ''உங்களிடம் நான் தனியாக பேசவேண்டும்''என்று கிசுகிசுப்பாய் மான்சி கூற '' ம் சரிவா மாடிக்கு என்னோட அறையில் போய் பேசலாம் ''என்றவன் குழந்தையை சிவாவிடம் கொடுத்துவிட்டு மாடிப்படிகளில் தாவி ஏற அவன் நடையில் தெரிந்தது அவன் மனதின் உற்ச்சாகம்

 ''அன்றொரு நாள் கோபத்தில் .... '
'என்னை விரும்பவில்லை ...... '
'மறந்துவிடு என்றாய் ......
 ''மறந்துவிட்டேன் '
'உன்னை அல்ல... '
'நீ சொன்ன மொழிகளை.....!

 தனது அறைக்குள் நுழைந்த சத்யன் நின்று திரும்பி வாசலிலேயே நின்ற மான்சியை பார்த்து தன் இடைவரை குனிந்து நெற்றியில் சலாம் வைத்து ''வெல்கம் மை ரூம் மை டியர் பியான்ஸி ''என்று குறும்புடன் கூற அவன் செய்கை மான்சி முகம் நிறைந்த புன்னகையையும் மனம் நிறைந்த காதலையும் வரவழைத்தாலும் அதை அவனிடம் மறைத்து திரும்பி நின்று கொண்டு ''ம்க்கும் இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை''என்று தன் தோளில் முகவாயை இடித்து பழித்து காண்பித்தாள்

 ''ஏய் மான்சி வேற எதுல நான் கொறைச்சல்ன்னு சொல்ற வேனும்னா என்னோட வேலையெல்லாம் எப்படின்னு காட்றேன் அப்புறமா ஐயா தேர்றேனா இல்லையான்னு பாரு என்ன ரெடியா''என்று அவளை நெருங்கனான் மான்சி பயத்துடன் பின்னால் நகர்ந்து கதவை ஒட்டி நின்று கொண்டு ''அய்யோ நான் சும்மாதான் சொன்னேன் நீங்க அங்கேயே இருங்க கிட்ட வராதீங்க''என்று பதட்டத்துடன் சொல்ல சத்யனுக்கு அவளுடைய பதட்டம் அவனை மிகவும் பாதித்தது

ம்ஹூம் அவ்வளவு சீக்கிரம் இவள் மாறாது காரணம் தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய கொடுமைதான் என்பதை உணர்ந்து ''சரி சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்னவோ பேசனும்னு சொன்னியே இப்போ பேசு ''என்று குரலில் குளிர்ச்சியை வரவழைத்துக்கொண்டு சத்யன் கூற சிறிதுநேரம் தன் புடவை முந்தானையை விரலில் சுற்றி சுற்றி இழுத்தவள் ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில் ''அது நான் எங்க அம்மா வீட்டுலயே இருந்தா சிவா அண்ணனுக்கு கல்யாணமே ஆகாது போல இருக்கு அதனால்தான் கிளம்பி வந்துட்டேன் ''என்று கூற

 ''அப்படின்னா எனக்காகவும் குழந்தைக்காகவும் வரலை உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் நடக்கனும்னு தான் வந்திருக்க ''என்று பிசிறடித்த குரலில் கேட்கதனது அறைக்குள் நுழைந்த சத்யன் நின்று திரும்பி வாசலிலேயே நின்ற மான்சியை பார்த்து தன் இடைவரை குனிந்து நெற்றியில் சலாம் வைத்து ''வெல்கம் மை ரூம் மை டியர் பியான்ஸி ''என்று குறும்புடன் கூற அவன் செய்கை மான்சி முகம் நிறைந்த புன்னகையையும் மனம் நிறைந்த காதலையும் வரவழைத்தாலும் அதை அவனிடம் மறைத்து திரும்பி நின்று கொண்டு

 ''ம்க்கும் இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை''என்று தன் தோளில் முகவாயை இடித்து பழித்து காண்பித்தாள் ''ஏய் மான்சி வேற எதுல நான் கொறைச்சல்ன்னு சொல்ற வேனும்னா என்னோட வேலையெல்லாம் எப்படின்னு காட்றேன் அப்புறமா ஐயா தேர்றேனா இல்லையான்னு பாரு என்ன ரெடியா''என்று அவளை நெருங்கனான் மான்சி பயத்துடன் பின்னால் நகர்ந்து கதவை ஒட்டி நின்று கொண்டு ''அய்யோ நான் சும்மாதான் சொன்னேன் நீங்க அங்கேயே இருங்க கிட்ட வராதீங்க''என்று பதட்டத்துடன் சொல்ல சத்யனுக்கு அவளுடைய பதட்டம் அவனை மிகவும் பாதித்தது

ம்ஹூம் அவ்வளவு சீக்கிரம் இவள் மாறாது காரணம் தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய கொடுமைதான் என்பதை உணர்ந்து ''சரி சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்னவோ பேசனும்னு சொன்னியே இப்போ பேசு ''என்று குரலில் குளிர்ச்சியை வரவழைத்துக்கொண்டு சத்யன் கூற சிறிதுநேரம் தன் புடவை முந்தானையை விரலில் சுற்றி சுற்றி இழுத்தவள் ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில்



''அது நான் எங்க அம்மா வீட்டுலயே இருந்தா சிவா அண்ணனுக்கு கல்யாணமே ஆகாது போல இருக்கு அதனால்தான் கிளம்பி வந்துட்டேன் ''என்று கூற ''அப்படின்னா எனக்காகவும் குழந்தைக்காகவும் வரலை உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் நடக்கனும்னு தான் வந்திருக்க ''என்று பிசிறடித்த குரலில் கேட்க ''ம் அப்பிடியெல்லாம் இல்லை எனக்கும் இங்கேதான் நிறைவான ஒரு வாழ்க்கை இருக்கும்ன்னு தோனிச்சு அதான் கிளம்பி வந்தேன்

ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேனும் என்னோட மனசு முழுமையா மாறுவதற்கு அதுவரைக்கும் நான் .....'என்று மான்சி தயக்கத்துடன் வார்த்தையை முடிக்காமல் நிறுத்த ''ம் சொல்லு மான்சி அதுவரைக்கும் நீ ''என்று சத்யன் அவளை மேலே சொல்லும்படி ஊக்கப்படுத்தினான் ''அதுவரைக்கும் நான் தனியாகவே இருந்துக்கிறேன்''என்று மான்சி முடித்தாள்

 சத்யன் அவளிடம் இதை எதிர்ப்பார்த்துதான் இருந்தான் அவள் இங்கே வந்ததே பெரிய விஷயம் அப்படி இருக்க அவளை எதற்காகவும் வற்புறுத்த கூடாது என்று முடிவு செய்தான் அவள் மனம் மாறும் வரை அவன் காத்திருக்க தயார் ஆனால் ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தால் வரும் பிரச்சனைகளை யோசித்து பார்த்தான் பிறகு மான்சியிடம் ''மான்சி உன் மனம் எனக்கு புரியுது ஆனால் கீழே பார்த்தே இல்ல வேலைக்காரர்களில் இருந்து என் அம்மா அப்பா வரை எல்லோருக்கும் நீ வந்ததில் ரொம்ப சந்தோஷம் இப்படியிருக்க நீயும் நானும் தனித்தனியாக இருந்தால் ஏதாவது பிரச்சனைகள் சங்கடங்கள் வரலாம் அதனால இந்த அறையிலேயே நீயும் நானும் தனித்தனியா இருந்துக்கலாம் வெளியே யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை

ம் என்ன சொல்ற மான்சி'' என்று சத்யன் அவளை கேட்டான் மான்சிக்கும் அவன் சொல்வது நியாயமாக தோன்றியது மெதுவாக அந்த அறையை நோட விட்டாள் இளஞ்சிவப்பு வண்ணச் சுவர்களுடன் அழகான வேலைபாடுகள் நிறைந்த மிகப்பெரிய அறை அறையின் நடுவில் போடப்பட்டிருந்தபெரிய கட்டிலில் பத்து இஞ்ச் உயரத்தில் நுரைரப்பர் மெத்தை அதில் அழகான பாம்பே டையிங் விரிப்பு அதன் மேல் பட்டு உறையிட்ட தலையனைகள் அந்த அறையில் சகலவிதமான வசதிகளும் இருந்தன அவற்றையெல்லாம் மான்சி பார்த்துக்கொன்டிருக்க சத்யன் அவளருகில் வந்து ''என்ன ரூம் பிடிச்சிருக்கா பிடிக்கலைன்னா சொல்லு மாத்திரலாம்'' என்று கேட்டான்

 ''ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம் ரூம் நல்லாதான் இருக்கு''என்று மான்சி கூற ''அப்போ இங்கேயே தங்கிக்கிறேன்னு சொல்றியா''என்று அவளின் உறுதியை தெரிந்து கொள்ள சத்யன் கேட்க ''ம்''என்று ஒற்றை வார்த்தையில் தலையசைத்து மான்சி சம்மதம் தெரிவித்தாள் சத்யனுக்கு அப்பாடா என்று பெருமூச்சு வந்தது பாவம் அவனுக்கு தெரியவில்லை அழகான பொண்டாட்டியை பக்கத்தில் படுக்க வச்சிகிட்டு நாம சும்மா இருப்பதென்றால் அது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று திருப்தியுடன் மூச்சு விட்ட சத்யன் ''சரி வா மான்சி ''என்று அவளை நோக்கி தன் வலதுகையை நீட்டினான்

 மான்சி அவன் நீட்டியக்கையை பற்றாமல் தயங்கி நின்று இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலையா என்பது போல் அவனை பார்க்க சத்யன் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து ''இதோ பார் மான்சி உனக்கென்ன என் கூட இப்போ செக்ஸ் வச்சுக்க விருப்பமில்லை அதை நான் ஏத்துக்கிறேன் ஆனால் அதுக்காக இப்படி கையை பிடிப்பது தொட்டு பேசுவது இதெல்லாம் தப்பு ஒன்னும் கிடையதே இப்படி நீ கதவையும் நான் உன் முதுகையும் பார்த்து பேசினால் எப்படி உன் மனம் மாறும் நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாது மான்சி உன்னை கசக்கி முகரக்கூடாது என்று பார்க்கிறேன் நீ தானாவே கனியனும்னு நான் நினைக்கிறேன்

அதுக்காக என்னை ஏமாந்தவன்னு நெனைச்சிறாதே எனக்கும் என் அழகான பொண்டாட்டியை அணைச்சிகிட்டு தூங்கனும் காலையில அழகான அவள் முகத்தில் விழிக்கனும் அவ கையால சாப்பிடனும் சாப்பிட்ட பிறகு அவள் முந்தானையில் கையை துடைக்கனும் ஒரு தலைவலி வந்தால் கூட அவள் கையால் தைலம் தேய்க்கனும் தோட்டத்து புல்வெளி நடுவில் நான் உன் மடியில் தலைவைத்து என் நெஞ்சில் நம் மகனை போட்டுக்கொண்டு படுத்துக்கனும் இப்படி ஏகப்பட்ட ஆசைகள் என் மனசிலும் இருக்கு அதுக்கெல்லாம் நீயும் ஒத்துழைக்கனும் நான் உன் விருப்பமில்லாமல் செக்ஸுக்காக வற்புறுத்த மாட்டேன் இப்போதைக்கு அதை மட்டும் நீ நம்பினால் போதும் மற்றதையெல்லாம் இனிவரும் காலங்களில் பார்த்துக்கலாம் என்ன ஓகேயா ''என்று ஒரு நீளமான சொற்பொழிவை நடத்தியவன் போல களைத்துப் போய் மான்சியை பார்த்து கேட்க மான்சி வியப்புடன் அவனை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்

இவனுக்குள் இவ்வளவு ஆசையா இவை அனைத்தும் இனி என் வாழ்க்கையில் நடக்கபோவதா இதற்க்கெல்லாம் இவன் தகுதியானவன்தானா இவன் இயல்பிலேயே நல்லவன் தானா ஏன் முன்பு என்னிடம் அப்படி கொடூரமாக நடந்துகொண்டான் இப்போது ஏன் இப்படி மாறிவிட்டான் என்னிடம் இருக்கும் எது இவனை இப்படி மாற்றியது நானா இல்லை என் வயிற்றில் பிறந்த குழந்தையா இவன் மனதை மாற்றியது ஏன் இவ்வளவு பெரிய பணக்காரனுக்கு வேறு பெண்ணா கிடைக்காது எவ்வளவு அசிங்கங்கள் நடந்தாலும் அதை கார்பெட்டின் கீழே தூசியை தள்ளி மறைப்பது போல் மறைத்துவிட்டு திருமணம் செய்ய இந்த பணக்காரர்களுக்கா தெரியாது ஏன் காத்திருந்து என்னை மனந்தான் செய்த தப்புக்காக என்றால் பிறகு ஏன் நான்கு வருடம் கழித்து வந்தான் இப்படி ஏகப்பட்ட ஏன் ங்கள் அவள் மனதை போட்டு குழப்ப சத்யனையே பார்த்துக்கொண்டிருந்தாள்

 சத்யன் அவள் முன்னால் சொடக்குப்போட்டு அழைத்து ''என்ன மான்சி மறுபடியும் ஏதாவது குழப்பமா ''என்று கேட்க ''ம்ஹூம் இனிமேல் எந்த குழப்பமும் கிடையாது வாங்க கீழே போகலாம் ''என்று இப்போது மான்சி அவனை நோக்கி கையை நீட்ட சத்யன் நீட்டிய அவள் கையை அவசரமாக இருக பற்றிக்கொண்டான் இந்த புது முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று இறைவனை வேண்டினான்

 ''ஆதவன் வரவுக்காக.... ''
மொட்டவிழக் காத்திருக்கும் .... ''
மலர்களின் மௌன தவமாய்.... ''
வெளிச்சக்காதலன் வரவுக்காக.... ''
இசைக்காமல் காத்திருக்கும் .....
 ''குயில்களின் அசையா தவமாய்... 
''உனக்காக நான் காத்திருக்கிறேன்...
 'என்னை புரிந்துகொண்டு .... '
'ஏற்றுக் கொள்வாயா....
 ''என் இனியவளே....!

இருவரும் ஜோடியாக கைபிடித்து வருவதை பார்த்த சத்யனின் பெற்றோர் கண்கலங்க சிவா நிம்மதி பெருமுச்சுடன் கையில் இருந்த பிரவீனை முத்தமிட்டான் தன் பிடியில் இருந்த சத்யனின் கையை விட்டுவிட்டு சிவாவிடம் இருந்த பிரவீனை வாங்கி தன் மார்போடு அணைத்து உச்சியில் முத்தமிட்டாள் மான்சி சத்யன் மான்சியின் அருகில் வந்து தானும் குழந்தைக்கு முத்தமிட்டான்

இப்படி அனைவரும் பிரவீனை மாறி மாறி முத்தமிட அவன் வெட்கத்துடன் கன்னத்தை துடைத்து கொண்டு தன் தாயின் தோளில் முகத்தைவைத்து கொண்டு அனைவரையும் பார்த்து சிரிக்க ஒரு குழந்தையின் வரவு ஒரு குடும்பத்தையே எப்படி மாற்றிவிடுகிறது சத்யன் தன் குழந்தையை கொஞ்சியபடியே ''என்ன சிவா நீங்க இன்னுமா ஆசிரமத்திற்கு கிளம்பலை ''என்று கிண்டலாக கேட்க சிவா வெட்கத்துடன் வளைந்து நெளிந்து ''ம்ம் இதோ கிளம்பிட்டேன் சார் ''என்று கூறினான் ''ஒருநிமிஷம் இருங்க என்னை இப்ப என்னென்னு கூப்பிட்டீங்க சாரா ஏன் சிவா மான்சி என்னை புருஷனா ஏத்துகிட்டாலும் உங்களுக்கு என்னை மச்சானாக ஏத்துக்க முடியலை அப்படித்தானே சிவா... ''என்று சத்யன் வருத்தத்துடன் கேட்க ''ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க முதல்ல இருந்தே அப்படி கூப்பிட்டதால் பழகிப்போச்சு இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திக்கிறேன்'' என்று சிவா கூற '

'ம் சரி சரி உடனே கிளம்புங்க இல்லேன்னா நிர்மலா நீங்க வராததுக்கு நான்தான் காரணம்ன்னு என்னை பண்ணி திட்டப்போறா ''என்று சத்யன் குறும்புடன் கூற சிவா வெட்கமாய் சிரித்தபடி உடனே கிளம்பினான் சில சமயங்களில் ஆண்களின் வெட்கம் கூட பேரழகாய் இருப்பது ஏன்....? அன்று மதிய உணவின் போது சத்யனின் ஆசையை நினைவில் வைத்து மான்சிதான் அவனுக்கு உணவு பரிமாறினாள்

அவன் சாப்பிட்டு முடித்ததும் கை துடைக்க தன் முந்தானையை கொடுத்தாள் சத்யன் இதுதான் சாக்கு என்பதுபோல் கையை துடைத்துவிட்டு முந்தானையை அதிகமாக இழுத்து தான் அணிந்திருந்த சட்டைக்குள் லேசாக வியர்த்திருக்க அவள் புடவையால் தன் மார்பை துடைத்தான் மான்சி தன் தோளில் புடவையை ஜாக்கெட்டோடு சேர்த்து வைத்து பின் குத்தியிருந்ததால் தப்பித்தாள் இல்லையென்றால் அவள் மார்பு சேலை முழுவதும் அவன் கைகளில் சுருண்டிருக்கும் ''ப்ச் இதென்ன விளையாட்டு சேலையை விடுங்க யாராவது பார்க்க போறாங்க ''என்று மான்சி வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து புடவையை இழுத்து பறித்துக்கொண்டாள்




பிறகு சத்யன் தன் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக பேச முன்னால் இருந்த அலுவலக அறைக்கு போய்விட... குழந்தையை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை வாங்கிக்கொண்டு போய்விட தனித்து விடப்பட்ட மான்சிக்கு நேற்று இரவுமுழுவதும் தூங்காததால் தூக்கம் கண்ணை சுழற்ற மாடிக்குபோய் சத்யன் அறையில் ஒரு விரிப்பை எடுத்து கீழே விரித்து படுத்துகொண்டாள் படுத்தவுடன் தூங்கியும் விட்டாள்

 அப்பாவிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த சத்யன் கீழே படுத்து உறங்கிக்கொண்டிருந்த மான்சியையே சிறிதுநேரம் பார்த்துகொண்டு இரு்ந்தான் பிறகு அவள் படுத்திருந்த அதே விரிப்பில் இன்னெரு தலையனையை போட்டு அவளருகே படுத்து தூங்கும் அவள் முகத்தையே வெகுநேரம் பார்த்தகொண்டு இருந்தான்



No comments:

Post a Comment