Thursday, February 5, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 31


தீபா சற்று கண்கள் கலங்கி ஆனால் சிரித்தபடி, "யாராவுது என்ன பாட்டு கேக்கறேன்னு கேட்டா போதும். அவன் வேஷம் போட்டு இருக்கான்னு தெரிஞ்சுடும். அவனுக்கும் ம்யூசிக்குக்கும் ரொம்ப தூரம். I hope they hang on safe" வந்தனா, "சார் யார் அவங்களை கண்காணிக்கறாங்க?" முரளீதரன், "வந்தனா, போலீஸ் ஃபோர்ஸில் ஒரு பத்து வருஷம் இருந்து இருந்தா உனக்கு தெரிஞ்சு இருக்கும். இந்த நெட்வொர்க்குக்கு பேர் இல்லை. இதில் இருப்பவங்க யாரும் யாருடைய உதவியையும் நாடலாம். ஆனா அது சுயநலத்துக்காக இருக்கக் கூடாது. இதில் முதலில் ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மட்டும் இருந்தாங்க. இப்போ அதில் கஸ்டம்ஸ், முப்படைகள், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் இப்படி பல துறைகளில் இருக்கும் ஆஃபீஸர்ஸும் இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கு கீழேயும் ரொம்ப நம்பகமான சில ஆளுங்க இருப்பாங்க. சக்தியும் நித்தினும் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் ஆன உடனே அதில் இருக்கும் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி அவங்களை பார்த்துட்டு அவரோட ஆளை பின் தொடரச் சொன்னார். அந்த ஆள் எடுத்த ஃபொட்டோதான் இது. அவங்க டொமெஸ்டிக் ஏர்ப்போர்ட்டை அடைஞ்சதும் அங்கே இருக்கும் ஸீ.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருத்தர் அவங்க கோவை விமானம் ஏறும் வரைக்கும் கவனிச்சுகிட்டார். இப்ப கோவை உப-கமிஷனர்களின் ஒருவரின் ஆள் கண்காணிச்சுட்டு இருக்கான்" வந்தனா, "அவங்களுக்கு எதாவது ஆபத்துன்னா?" முரளீதரன், "இப்போதைக்கு ஆபத்து எதுவும் இருக்காதுன்னு நான் நிச்சயமா நம்பறேன். மாங்க்ஸ் பாட் நெட்டை கைபற்ற நினைக்கறணும்ன்னா அவங்களைத் தாக்கி பிரயோஜனம் இல்லை. அதிக பட்சம் கிட்நாப் செய்ய முயற்சிக்கலாம். அப்படி எதுவும் நடக்காம பாத்துக்குவாங்க கவலைப் படாதே. அவங்க உயிருக்கு அபாயம் இருந்திருந்தா நான் அவங்களுக்கு முதலிலேயே சொல்லி இருப்பேன். வேற விதமான பாதுகாப்பு கொடுத்து இருப்பாங்க"

வந்தனா, "யோகி அங்கிள் இந்த நெட்வொர்க்கில் .. " அவள் முடிக்கும் முன்னரே முரளீதரன், "எஸ் அஃப்கோர்ஸ்! அவனும் நானும் ஒண்ணாத்தான் இதில் சேர்ந்தோம். However, Manish is yet to graduate to that level yet ... " தீபா, "எங்க அப்பாவுக்கு இதைப் பத்தி தெரிஞ்சு இருக்குமா?" முரளீதரன், "நிச்சயமா! பெரிய க்ரிமினல் லாயரா இருந்தாலும் ரொம்ப நல்லவர். ஒரு சமயம் இந்த நெட்வொர்க்கின் கோரிக்கைக்கு இணங்கி ஒரு கேஸில் இருந்து ஒதுங்கிட்டதா யோகி சொன்னான்" வந்தனா, "அப்ப இந்த நெட்வொர்க்கை வெச்சே தீவிரவாதிகளை வளைச்சுப் பிடிச்சா என்ன?" முரளீதரன், "அப்படி செஞ்சா நிறைய தலைகள் உருளும். தவிர ஃபோர்ஸஸ் தேவைப் படும்போது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு செய்வது பெட்டர்"தீபா, "சுந்தர் அங்கிளும் மனோகரி ஆண்டியும் எங்களுக்கு மாத்தி மாத்தி ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட எங்கே இருக்காங்கன்னு சொல்லலாமா?" முரளீதரன், "அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ ஒரு தலை மறைவான இடத்துக்கு போக ப்ளான் பண்ணி இருக்காங்கன்னு தோணுது. அந்த இடம் எதுன்னு திட்டவட்டமா தெரிஞ்சதுக்கு பிறகு என்ன சொல்றதுன்னு சொல்றேன்" வந்தனா, "அவங்க இண்டியா மொபைல் நம்பர் இன்னும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு" முரளீதரன், "ம்ம்ஹூம் ...They are much smarter than that ... ஆன் செய்ய மாட்டாங்க. இப்போதைக்கு ஈமெயில் ஒண்ணுதான் அவங்களை அணுக இருக்கும் ஒரே வழி" தீபா, "அவங்களை அந்த தீவிரவாதிகளும் ஃபாலோ பண்ணிட்டு இருந்தா?" முரளீதரன், "மும்பை ஏர்ப்போர்ட்டில் அவங்க கோட்டை விட்டுட்டாங்க. அது நிச்சயமா தெரியும்" வந்தனா, "எப்படி?" முரளீதரன், "இம்மிக்ரேஷனில் இருக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவங்க ரெண்டு பேரையும் பாத்ததும் யாருக்கோ ஃபோன் பண்ணி இருக்கான். அதுக்கு பிறகு சந்தேகப் படும்படி ஒருத்தன் அரைவல்ஸ் கேட்டுக்கு வந்து நின்னுட்டு கையில் இருந்த ஒரு ஃபோட்டோவை பாத்துட்டு வர்றவங்க ஒவ்வொருத்தரையும் நோட்டம் விட்டுட்டு இருந்து இருக்கான். சக்தியையும் நித்தினையும் அவன் அடையாளம் கண்டுக்கவே இல்லை" தீபா, "சோ, அவங்க இப்ப கோவையில் இருப்பது அந்த கும்பலுக்கு தெரியாது இல்லையா?" முரளீதரன், "இப்போதைக்கு தெரியாது. அங்கேயே கொஞ்ச நாள் வெளியில் நடமாடினா அவங்களுக்கு தெரிஞ்சுடும்" வந்தனா, "எப்படி சொல்றீங்க?" முரளீதரன், "அவங்களுக்கும் நிச்சயம் ஒரு நெட் வொர்க் இருக்கும். அதன் மூலம் தெரியும். ஆனா என் அனுமானம் என்னன்னா அவங்க ரெண்டு பேரும் எதோ ஒரு தனிமையான இடத்துக்கு போக ப்ளான் பண்ணி இருக்காங்க" வந்தனா, "சார், ஜாஷ்வா சஞ்சனா பத்தி நியூஸ்?" முரளீதரன், "ஷான் ஹென்றியை வேறு பிரிவுக்கு மாற்றிட்டாங்க. மாங்க்ஸ் பாட் நெட்டை கைப்பற்றும் வேலையை க்ரிஸ் நேரடியா மேற்பார்வை செய்யற மாதிரி இருக்கு. ஜாஷ்வா-சஞ்சனா பத்தி ஷானுக்கு எந்த தகவலும் தெரியலை. அவன் அன்னைக்கு போனப்ப அவங்க ரெண்டு பேரையும் பாராமெடிக்ஸ் எடுத்துட்டு போனதைப் பாத்து இருக்கான். சைமண்ட் வில்லியர்ஸ்தான் அவங்க நிலமையைப் பத்தி ஷானுக்கு சொல்லி இருக்கார். ஒருவேளை உயிர்பிழைச்சா ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் தீவிரவாதிகளின் தீத்துக் கட்ட முயற்சி செய்வாங்க. அதனால் அவங்க இறந்துட்டதா செய்தி கொடுத்தது சைமண்ட் வில்லியர்ஸ் எடுத்த முடிவு." வந்தனா, "அப்ப எஃப்.பி.ஐ சைபர் க்ரைம் பிரிவு ஜாஷ்வாவை சந்தேகப் படலையா?" முரளீதரன், "சக்தியும் நித்தினும்தான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்கன்னு அவங்களுக்கு நம்பகமான ஒரு சோர்ஸ் மூலம் தெரிய வந்து இருக்காம். மேலும் சக்தியும் நித்தினும் தலை மறைவானதும் அது ஊர்ஜிதமாயிருக்கு" தீபா, "அப்ப ஜாஷ்வா என்ன தான் செஞ்சார்?" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் சர்வர்லெஸ்ஸா ஆகறதுக்கு முன்னாடி ரெண்டு சர்வர்களில் ஒண்ணு அவன் வீட்டில் இருந்து இருக்கு" வந்தனா, "அது எப்படி தெரியவந்தது?" முரளீதரன், "நாம் கொடுத்த ஐ.பி.அட்ரெஸ் ஹார்லத்தில் இருக்கும் ஒரு ஆள் பேரில் வழங்கப் பட்டு இருக்கு. அவனை அணுகினதும் அவன் தனக்கு ஒண்ணும் தெரியாது ஜாஷ்வாதான் அவன் பேரை உபயோகிச்சு அந்த கனெக்க்ஷனை வாங்கினான்னு சொல்லி இருக்கான். அடுத்து, எஃப்.பி.ஐ சைபர் க்ரைம் பிரிவு ஜாஷ்வாவின் வீட்டில் சோதனை பண்ணப் போயிருக்கு. அங்கே இருந்த மூணு கணிணிகளையும் அவங்களால ஸ்டார்ட் செய்யக் கூட முடியலை. எதோ சேலஞ்ச் ரெஸ்பான்ஸ் மாதிரி பாஸ்வர்ட் செட் அப் செஞ்சு வைத்து இருந்ததாம். ஒரு கணிணியில் இருந்த ஹார்ட் டிஸ்கை தனியா எடுத்து வேறு கணிணியில் பொருத்திப் பார்த்தா எல்லாம் என்க்ரிப்ட் செஞ்சு இருந்ததாம். மறுபடி அவன் கணிணியிலேயே பொருத்தி பூட் செஞ்ச உடனே அந்த டிஸ்க் க்ரேஷ் ஆயிடுச்சாம். பயந்துட்டு மத்த ரெண்டு கணிணியையும் தொடாம அப்படியே வெச்சு இருக்காங்க" தீபா, "அவங்க நம்மிடம் ஏன் இதைப் பத்தி சொல்லலை? After all we know much more about Monks Bot Net than them" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யக் கூடிய மென்பொருள் இருக்குமான்னு பார்க்கத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க. அதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள அவங்க விரும்பலை" வந்தனா, "That is really cheap of them ... " முரளீதரன், "தெரிஞ்ச் விஷயம்தானே? ஷானை அந்த ஆபரேஷனில் இருந்து தூக்கினதும் அதனால் தான்" தீபா, "அப்ப ஜாஷ்வா, சஞ்சனாவுக்கு என்ன ஆச்சுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?" முரளீதரன், "அவங்க ரெண்டு பேரையும் சைமண்ட் வில்லியர்ஸ் பொறுப்பில் இருக்காங்க. எனக்கு அவரோட காண்டாக்ட் இல்லை. கடைசியா ஷான்கிட்ட நான் பேசினப்ப கிடைச்ச தகவல் இது. அவரோட காண்டாக்ட் நம்பர் கேட்டு இருக்கேன். Once I talk to him I will let you know" என்றவாறு அவரும் விடைபெற்றுச் சென்றார். தோழிகள் இருவரும் இவ்வளவு நாளும் அவர்களது அலுவலமாக இருந்த தற்காலிக லாப்பிற்கு சென்று தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி பயணித்தனர். தன் மேஜையில் இருந்த சர்வீஸ் பிஸ்டலை வந்தனா இடுப்பில் செருகும் போது பார்த்த தீபா, "என்ன வன்ஸ்? அது தேவையா இருக்குமா?" வந்தனா, "சஞ்சனாவுக்கு பிறகு இதை ஒரு அளவுக்காவது உபயோகிக்க தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான். இனி எப்பவும் இது என் கூடவே இருக்கும்" Saturday, 30 May 2009 5:30 PM till Thursday, 4 June 2009 9:00 AM A private Guest House, Quail Hill, Coonoor சனி, மே 30, 2009 மாலை 5:30இல் இருந்து வியாழன் ஜூன் 4, 2009 காலை 9:00 வரை ஒரு தனியார் விருந்தினர் மாளிகை, குவேயில் ஹில் பகுதி, குன்னூர் முந்தைய தினம் அவர்கள் திட்டப் படி கோவை சென்று அங்கு ஒரு ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வியை விலைக்கு வாங்கிக் கொண்டு அதில் குன்னூர் சென்றடைந்து இருந்தனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒரு சிறு குடும்பம் தங்குவதற்கான இரு படுக்கை அறைகளும் ஒரு சிறு ஹாலும் கொண்ட ஸுட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக குடி புகுந்தனர். அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்கி அந்த ஹாலில் இரு நாற்காலிகளுடன் போடப் பட்ட மேசையில் தங்கள் மடி கணிணிகளை இணைத்து நெட் கனெக்க்ஷன் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு ஜெட்லாக் விலக சீக்கிரமே படுக்கையை நாடி இருந்தனர். அடுத்த நாள் காலை ... நித்தின், "ம்ம்ம் ... சொல்லு என்ன ப்ளான்?" சக்தி, "தகவல் சேகரிப்பது. அந்த தகவலை R&AWவுக்கும், தேவைப்பட்டா எஃப்.பி.ஐக்கும் கொடுப்பது" நித்தின், "என்ன மாதிரி தகவல்?" சக்தி, "ஐ.எஸ்.ஐக்கு தீவிரவாதிகளுடன் இருக்கும் தொடர்பைப் பற்றின தகவல். இதைத் தவிர தீவிரவாதிகளைப் பத்தி என்ன தகவல் கிடைச்சாலும்" நித்தின், "ம்ம்ம் ... நானும் அதைத்தான் யோசிச்சேன். போன நவம்பர் மும்பையில் நடந்த அட்டாக்குக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதை அமெரிக்காவும் நம்பிட்டு இருக்கு. அவங்களை தீவிரவாதத்துடன் சம்மந்தப் பட்டு இருக்கும் தகவல் கிடைச்சா நிச்சயம் இந்தியாவுக்கு உதவும்" சக்தி, "I want the bastards to pay dearly" நித்தின், "சரி, எப்படி ப்ரொஸீட் பண்ணலாம்?" சக்தி, "நாம் செஞ்ச மூணு ட்ரான்ஸ்ஃபரிலும் ஈடு பட்ட கம்பனிகள், அவங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர், பணம் டெப்பாஸிட் ஆன இடங்கள் இவைகள் நம் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளில் எதிலாவுது இருக்கான்னு பார்க்கலாம்" நித்தின், "ம்ம்ஹூம் ... எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாதிரி விவரங்களை கணிணியில் ஸ்டோர் செய்ய மாட்டாங்க. அப்படியே ஸ்டோர் செஞ்சு இருந்தாலும் அதில் நிச்சயம் ஆண்டி-வைரஸ் அப் டு டேட்டா இருக்கும். மாங்க்ஸ்-2 வேலை செய்யாது" சக்தி, "Trial costs nothing ... ஒரு ஸர்ச்சுக்கான ஆணைகளை அனுப்பலாம் எப்படியும் ரிஸல்ட் வர நேரம் ஆகும். அதுக்குள்ள வேறு என்ன செய்வதுன்னு யோசிக்கலாம்" நித்தின், "சரி ... ஸர்ச் ஸ்ட்ரிங்க்ஸை கொடு நான் அனுப்பறேன்" அவர்கள் செய்த மூன்று ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரில் சம்மந்தப் பட்ட கம்பெனிகளின் பெயர்கள், வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண்கள், மற்றும் பணம் டெபாசிட் செய்யப் பட்ட இடங்கள் இவைகளை பற்றிய விவரங்கள் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளில் எதிலாவது இருக்கிறதா என்று தேடும்படி மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் அத்தனை கணிணிகளுக்கும் ஆணை பிறப்பித்தனர். சக்தி, "சரி, அந்த ஸர்ச் ரிஸல்ட் வரும் வரை என்ன செய்யலாம்?" நித்தின், "Lets put our good old hacking skills to use now .. டார்கெட் செலக்ட் பண்ணு" சக்தி, "ஐ.எஸ்.ஐ ... என்ன செய்யலாம்ன்னு சொல்லு" நித்தின், "அவங்க கணிணிகளை ஹாக் செய்யலாம். மாங்க்ஸ்-2வை நுழைக்க முடியுதான்னு பார்க்கலாம்" சக்தி, "முதலில் அவங்க கணிணிகளில் எதிலாவது மாங்க்ஸ்-2 இருக்கான்னு பார்க்கலாம்" நித்தின், "அதையும் செய்யலாம். அதுக்கு இன்னும் ஒரு ஸர்ச் கமாண்ட் கொடுக்கணும்" அடுத்து ஐ.எஸ்.ஐ, மற்றும் பல ஐ.எஸ்.ஐ சம்மந்தப் பட்ட பெயர்கள் கொண்ட வரிகள் எந்த கணிணியிலாவது இருக்கின்றனவா என்று தேடும் படி ஆணை பிறப்பித்தனர். மதியத்துக்குள் அவர்களின் முதல் தேடலுக்கு பதில்கள் வரத்தொடங்கின. ஜெர்மனியில் பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் ஒரு கணிணியில் அங்கு டெப்பாசிட் செய்த பணத்தை பற்றிய தகவல்கள் ஒரு கணிணியில் இருந்தது. அந்த கணிணியில் இருந்த ஈமெயில்களை இணையத்தில் அவர்கள் அமைத்து இருந்த பிரத்தியேக சர்வருக்கு அனுப்ப ஆணை பிறப்பித்தனர். இதை முடிக்கையில் முன்னிரவு ஆகி இருந்தது. அடுத்த நாள் காலை .... சக்தி, "I think we are being watched ... " நித்தின், "என்ன சொல்றே?" சக்தி, "காலையில் நான் ஜாகிங்க் போனேன். இந்த ரோட் முக்கில் ஒரு மாருதி காரில் ஒருத்தன் உக்காந்துட்டு இருந்தான். ஆளை பாத்தா காரிலேயே தூங்கி இருப்பான் போல இருந்தது. நான் அந்த காருக்கு நோக்கி போகும் போது அவன் ஸெல்ஃபோன் அடிச்சுது எடுத்து பேசிட்டு நான் வர்றதைப் பார்த்தான். அப்பறம் தலையை குனிஞ்சுட்டான். அங்கே ரைட்டில் திரும்பி நான் மேலே போகும் ரோட்ல ஓடினேன். அடுத்து ரெண்டு ரோட் பிரியும் இடத்தில் அதே மாதிரி ஒருத்தன் ஒரு பைக்கில் உக்காந்துட்டு சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தான். நான் ஒரு பத்து கிலோமீட்டர் ஓடி இருப்பேன். ஒவ்வொரு பிரிவிலும் யாராவது நின்னுட்டு இருந்தாங்க. திரும்பி வரும்போது நான் முதலில் பார்த்த அதே ஆள் வேறு ஒரு பிரிவில் நின்னுட்டு இருந்தான்" நித்தின், "பார்க்க எப்படி இருந்தாங்க" சக்தி, "எல்லோரும் ஆர்மிக் காரங்க அது நிச்சயம்" நித்தின், "என்ன செய்யலாம்?" சக்தி, "நம்மை பிடிக்க வந்தவங்கன்னா இந்நேரம் வந்து பிடிச்சு இருப்பாங்க. எதுக்காகவோ அல்லது யாருக்காகவோ வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. இப்போதைக்கு தனியா வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டாம். நாம் செய்ய நினைச்சதை சீக்கிரம் முடிக்கலாம்" நித்தின், "சரி"சக்தி, "நித்தின், அந்த ஷொயேப் ரொம்ப நாளா மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிச்சுட்டு இருந்ததா சொன்னான் இல்லை?" நித்தின், "ஆமா" சக்தி, "எப்படி கண்காணிச்சு இருப்பான்?" நித்தின், "எஸ்! நம் ஆளுங்க செஞ்ச மாதிரி, அவங்க கணிணிகளில் எதிலாவுது மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தி அது என்ன செய்யுதுன்னு பாத்து இருப்பான்" சக்தி, "அப்ப அது மத்த கணிணிகளுக்கும் பரவி இருக்கும் இல்லையா?" நித்தின், "எஸ்! ஆனா எப்படி அந்த கணிணியை தேடிக் கண்டு பிடிப்பது?" சக்தி, "அவன் பெயர், அப்பறம் மக்ஸூத்தின் பெயர், வெறுமனே மாங்க்ஸ் பாட் நெட் அப்படிங்கற வரி இது எல்லாம் எந்த ஈமெயிலிலாவுது அல்லது டாக்குமென்ட் எதிலாவது இருக்கான்னு ஸர்ச் பண்ணினா தெரியும்" அன்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் பல பரபரப்பான விவரங்களை சேகரித்தனர். இவைகளை தவிர அவர்களின் தேடலில் ஒரு மிக சுவாரஸ்ஸியமான ஒன்றை கண்டு பிடித்தனர். பல கணிணிகளும் சர்வர்களும் கொண்ட ஒரு லோகல் ஏரியா நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு கணிணியில் மட்டும் மாங்க்ஸ்-2 புகுந்து இருந்தது. அங்கு இருந்தபடி வெளியுலகுடன் தொடர்பு கொண்டு இருந்தது. அந்த அமைப்பில் இருக்கும் மற்ற கணிணிகளுக்கு பரவ வில்லை. சக்தி, "இந்த பாட் நிச்சயம் ஒரு லான்னில் கனெக்ட் ஆகி இருக்கு. அதோட ஐ.பி அட்ரெஸ்ஸையும் கேட்வே செட்டிங்க்ஸ்ஸையும் பார்" நித்தின், "இது எப்படி சாத்தியம்?" சக்தி, "இந்த கணிணியில் ஆண்டி-வைரஸ் செட்டிங்க்கை பாரு. ஆன்-லைன் அப்டேட் டிஸ்ஸேபிள் ஆகி இருக்கு. அதுக்கு இன்னும் மான்க்ஸ்-2வின் சிக்னேச்சரே தெரியாது. மாங்க்ஸ்-2வுக்கு சிகப்பு கம்பளம் விரிக்காத குறையா வரவேத்து நுழைய வெச்சு இருக்கு" நித்தின், "எஸ் .. இந்த கணிணியின் ஓனர் சுத்த மடையனா இருப்பான் போல இருக்கு. சோ, வெளியில் இருக்கும் எதோ பாட் இதை தொடர்பு கொண்டு இதுக்குள் மாங்க்ஸ்-2வை புகுத்தி இருக்கும் இல்லையா? இருந்தாலும் வைரஸ் பரவறதுக்கு நாம் எழுதின லாஜிக் படி இந்த மாதிரி புகுவதற்கு பத்து லட்சத்தில் ஒரு வாய்ப்புதான் இருக்கும். சுத்தியும் ஃபயர்வால். ஒவ்வொரு கணிணியிலும் அப்-டு-டேட் ஆண்டி-வைரஸ். நம்ப முடியலை" சக்தி, "இன்னும் ஒரு யூகம். மாங்க்ஸ்-2 புகுந்து இருக்கும் ஒரு லாப் டாப்பை யாரோ தற்காலிகமா இந்த லான்னில் கனெக்ட் செஞ்சு இருக்காங்க. அது நம் ஷொயேப்பாக கூட இருக்கலாம்" நித்தின், "அப்படி யாராவது கனெக்ட் செஞ்சு இருந்தா அரை மணி நேரத்தில் ஆண்டி-வைரஸ் இல்லாத ஒவ்வொரு கணிணியிலும் பரவி இருக்கும். நிச்சயம் அந்த மாதிரிதான் இந்த கணிணிக்குள் இது புகுந்து இருக்கணும். ஆனா ஒரு சந்தேகம். ஷொயேப் அல்-கைதாவை சேர்ந்தவன். ஆனா இந்த லான்னில் இருக்கும் கணிணிகளின் எண்ணிக்கை. சுத்தி இருக்கும் சர்வர்களின் அடையாளம் எல்லாம் பார்த்தா இது பெரிய கம்பியூட்டர் செண்டர் மாதிரி இருக்கு. அல்-கைதாவிடம் இந்த மாதிரி செண்டர் இருக்க வாய்ப்பு இருக்கா?" சக்தி, "பொறு, யாரோட கணிணின்னு முதல்ல பார்க்கலாம்" சற்று நேரத்துக்கு பிறகு நித்தின், "எஸ்! இது ஐ.எஸ்.ஐயின் கம்பியூட்டர் செண்டரில் இருக்கும் ஒரு கணிணி. ஒரு ப்ரோக்ராமரோடது. Funny, they still have such designations" சக்தி, "ஹல்லோ! நம்ம அரசாங்கத்திலும் அந்த மாதிரி பதவிகள் இன்னும் இருக்கு" நித்தின், "என் கை இப்ப துருதுருங்குது. என்ன செய்யலாம் சொல்லு. எல்லா கணிணியிலும் ஆண்டி-வைரஸ்ஸை டிஸ்ஸேபிள் செஞ்சுடலாமா? அப்ப மாங்க்ஸ்-2 எல்லாத்திலும் பரவிடும்" சக்தி, "டேய் கொசவா! போட்டுத் தள்ளனும்ன்னு நான் இருக்கேன். நீ என்னவோ கண்ணமூச்சி ஆடலாங்கற? அந்த செண்டரில் இருக்கும் சர்வர் எல்லாத்தையும் ரிகவர் ஆகமுடியாத மாதிரி க்ரேஷ் பண்ணற வழியைப் பாரு" அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் கம்பியூட்டர் செண்டர் (அதை Nerve Center எனக் கூட அழைக்கலாம்!) செயலற்று நின்றது. அடுத்த நாள் பெங்களூர் புறப்பட்டு செல்வதாகவும் அதற்கு அடுத்த நாள் அவர்கள் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை தீவிரவாதிகள் அணுகுவார்கள், அவர்களை எங்கு எப்போது சந்திப்பது என்று முடிவெடுத்தவுடன் அந்த சந்திப்பின் விவரங்களை அறிவிப்பதாகவும் ஒரு ஈமெயில் எழுதினர். அடுத்ததாக மேல் அதிகாரிகளுக்கு கொடுக்கச் சொல்லி மற்றும் ஒரு ஈமெயில் எழுதினர். அவர்கள் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் பாஸ்வர்ட் கொடுத்தால் மட்டும் திறக்கக் கூடிய ஃஜிப் ஃபைல்களாக மாற்றி ஒரு ஃபைல் ஷேர் வெப் சைட்டில் ஏற்றி இருந்தனர். எல்லாவற்றையும் ஒரு பட்டியலிட்டு அப்பட்டியலை அந்த ஈமெயிலில் அனுப்பினர். அந்த ஈமெயிலில் இனி வரும் நாட்களில் அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை கோடிட்டு காட்டி இருந்தனர். அந்த விதிமுறைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த விவ்ரங்களை பகிர்ந்து கொள்வதாகக் கூறினர். வியாழனன்று காலை ஒன்பது மணியளவில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்பட காருக்கு வந்தனர். சக்தி, "நித்தின், அந்த ஆள்தாண்டா முதல் நாள் ரோட் முக்குல காரில் உக்காந்துட்டு இருந்தவன் ... " நித்தின், "இப்ப கேட்கிட்ட நின்னுட்டு இருக்கான்" சக்தி, "என்ன செய்யலாம்?" நித்தின், "அவன் மட்டும் தனியாத்தான் நிக்கறான்" சக்தி, "ஒரு வேளை மத்தவங்க நாம் போற வழியில் இருந்தா?" நித்தின், "நாம் எங்கே போறோம்ன்னு அவங்களுக்கு தெரியப் போறது இல்லை" சக்தி, "I doubt it ... பரவால்லை வண்டியை எடு" கேட்டை நெருங்கும் போது அங்கு நின்று இருந்தவன் அவர்களை கைகாட்டி நிறுத்தி ஒரு கனமான கேரி பாக்கை சக்தியிடம் நீட்டி, "This is for your safety .. have a safe journey" என்றவாறு அங்கு இருந்து நகர்ந்தான். அந்தப் பைக்குள் இந்திய ராணுவ முத்திரையுடன் இரு கைத் துப்பாக்கிகள் இருந்தன.Thursday, 4 June 2009 11:30 AM Conference Room, R&AW Headquarters, CGO Complex, New Delhi வியாழன் ஜூன் 4, 2009 காலை 11:30 கலந்தாய்வுக் கூடம், R&AW தலைமை அலுவலகம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி கூடி இருந்தவர்கள்: வெளியுறவு அமைச்சகத்தின் காரியதரிசி, R&AWவின் டைரக்டர், ஜாயிண்ட் டைரக்டர், முரளீதரன், வந்தனா மற்றும் தீபா. திரையில் சக்திவேல் தயாரித்து அனுப்பிய பட்டியல் தெரிந்தது. காரியதரிசி, "டைரக்டர் என் சர்வீஸில் இந்த மாதிரி ஒரு இன்டெலிஜன்ஸ் இன்புட் இதுவரைக்கும் கிடைச்சது இல்லை" டைரக்டர், "அவங்க ரெண்டு பேரும் நமக்கு கொடுத்ததை முழுக்க உபயோகப் படுத்தணும் இல்லைன்னா இதையே ப்ரெஸ்ஸுக்கும் அனுப்பறதா மிரட்டி இருக்காங்க. சில விவரங்கள் கார்கில் போர் சமயத்தை சேர்ந்தது. இதை பயன் படுத்தினா அரசியல் ரீதியா பிரச்சனை வரலாம். அதுக்கு என்ன சொல்றீங்க?" காரியதரிசி, "இங்கே வர்றதுக்கு முன்னாடி SMKவுடன் PMஐப் போய் பாத்துட்டு வந்தோம். PCயும் வந்து இருந்தார். எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். முந்தைய அரசாங்கம் சம்மந்தப் பட்டதும் இருக்குங்கற பேச்சும் வந்தது. PM இந்த விஷயத்தில் கட்சிப் பகையை உள்ளே நுழைக்கக் கூடாதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டார். அதோட நிறுத்தாமல் எங்க முன்னாடியே ஆப்போஸிஷன் லீடரை ஃபோனில் கூப்பிட்டு இதைப் பத்தி எங்க முன்னாடியே விவரிச்சு அவரோட ஒப்புதலையும் வாங்கினார். நாங்க எல்லாம் அசந்து போய் உக்காந்துட்டோம். சோ, கவலையே படாதீங்க. அந்த யங்க்ஸ்டர்ஸ் நினைச்சபடி இந்த விவரங்கள் எல்லாம் உடனடியா உபயோகப் படுத்தப் படும். முதலில் அமெரிக்க அரசாங்கத்துக்கு தாக்கல் செய்யப் போறோம். அவங்க சம்மதிக்கலைன்னா ஐ.நா சபையில் அறிவிக்கப் போறதா மிரட்டப் போறோம்" டைரக்டர், "அது மட்டும் இல்லை சார், சில விவரங்கள் நம் உதாசினத்தையும் காட்டுது" காரியதரிசி, "இதைப் பத்தி PCகூட SMK டிஸ்கஸ் பண்ணினார். சரி செய்ய வேண்டிய விஷயங்கள். நாம் கோட்டை விட்டதைப் பத்தி நியூஸ் வெளியானா பரவால்லைன்னு PC சொல்லிட்டார். சோ, நோ வொர்ரி. அவங்களுக்கு நம் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்ன்னு சொல்லுங்க" முரளீதரன், "Last but not the least .. மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்க முழுக்க நம் கையில் ஒப்படைக்க மாட்டோம்ன்னு சொல்லி இருக்காங்க. அது சட்ட விரோதமான செயல் எதிலும் ஈடுபடலைன்னு நாம் தெரிஞ்சுக்க ஒவ்வொரு நாளும் மாங்க்ஸ் பாட் நெட்டில் என்ன நடக்குதுன்னு நமக்கு அறிவிக்கும் படி ஒரு மென்பொருளை நமக்கு கொடுப்பதா சொல்லி இருக்காங்க. ஆனா மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யக் கூடிய மென்பொருளை யாருக்கும் கொடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. நல்ல விஷயம் எதுவான்னாலும் மாங்க்ஸ் பாட் நெட்டை உபயோகிப்பதற்கு உதவறதாவும் சொல்லி கண்டிஷன் போட்டு இருக்காங்க. What about that?" காரியதரிசி, "எல்லா கண்டிஷனும் நமக்கு ஓ.கே. PM இதை ரொம்ப அப்ரிஷியேட் பண்ணினார். அந்த ரெண்டு பேரையும் இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் நேரடியா பார்த்து தன் பாராட்டை தெரிவிப்பதா சொன்னார். ஆனா அமெரிக்கா இதுக்கு நிச்சயம் ஒத்துக்காது. அதை பிறகு பாத்துக்கலாம். நம்மை மீறி அவங்க ரெண்டு பேரையும் அமெரிக்க அரசாங்கம் மிறட்டப் போறது இல்லை" டைரக்டர், "பட் முரளீ அவங்க பாதுகாப்புக்கு நம் உதவி தேவை. அப்படி இருக்கும் போது இந்த பசங்க இந்த மாதிரி எல்லாம் கண்டிஷன் போடறது எனக்கு பிடிக்கலை" தீபா, "சாரி சார். அவங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு இப்பவும் அவங்க உங்ககிட்ட கேட்கலை. இந்த மாதிரி ஜீனியஸ்களுக்கு ஆபத்து வரக்கூடும்ன்னு தெரிஞ்சும் பாதுகாப்பு கொடுக்காம இருந்தீங்கன்னா நானே உங்களுக்கு எதிரா ப்ரெஸ் ரிலீஸ் கொடுப்பேன்! I will take you all to court!!" காரியதரிசி, "காட்! யார் இந்த பொண்ணு?"

ஜாயிண்ட் டைரக்டர் சலிப்புடன், "நம் அரசாங்கத்துக்கு உள்ளயே இருக்கும் ஒரு டெரரிஸ்ட் சார் இவ" கலகலப்புடன் அந்த கூட்டம் கலைந்தது வந்தனா, "சார், பெங்களூருக்கு நீங்க போறீங்கதானே? நானும் வரேன்" தீபா, "நானும்" முரளீதரன், "சாரி தீபா, வந்தனா ஒரு போலீஸ் ஆஃபீஸர். உன்னை நான் அனுமதிக்க முடியாது" முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த தீபா, "சரி, நான் இங்கே உக்காந்துட்டு நகத்தை கடிச்சுட்டு இருக்கப் போறது இல்லை. எங்க ஊருக்கு போறேன்" முரளீதரன், "நானே சஜ்ஜஸ்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன். ஊரில் கொஞ்ச நாள் இரு உன் நித்தினை பத்திரமா நாங்க கொண்டு வந்து ஒப்படைக்கறோம்" திபா எழுந்து சென்றதும் வந்தனா, "அவ ஹைதராபாத் போவான்னு நினைக்கறீங்களா?" முரளீதரன், "சான்ஸே இல்லை. நிச்சயம் நமக்கு முன்னாடி பெங்களூரில் இருப்பா. அதிகார பூர்வமா நான் அவளை சேர்த்துக்க முடியாது அதான் அப்படி சொன்னேன். நிச்சயம் உன்னை காண்டாக்ட் பண்ணுவா நீ அவளை பாத்துக்கோ"பல வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் காடுகளுக்குள் இருந்த ஒரு பயிற்சி முகாம் பதினெட்டில் இருந்து இருபது வயதுக்குள் பயிற்சியில் இருக்கும் பல போராளிகளுக்கு பயிற்சியாளர் வெவ்வேறு வகையான துப்பாக்கிச் சண்டைகளின் நுணக்கங்களை விளக்கி முடித்து இருந்தார். பயிற்சியாளர், "இப்ப நான் கடைசியா சொல்லப் போறதிலும் காண்பிக்கப் போறதிலும் நல்லா கவனம் செலுத்தணும்" வகுப்பில் சல சலப்பு நீங்கி அமைதி நிலவியது. பயிற்சியாளர், "இவ்வளவு நெரமும் எதிராளியை எப்படி சுடறதுன்னு சொல்லிக் கொடுத்தேன். இப்ப நான் எப்படி சுடுபடறதுன்னு சொல்லிக் கொடுக்கப் போறேன்" திகைப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த இளம் பிஞ்சுகளைப் பார்த்து சிரித்த பயிற்சியாளர், "ஆம், நான் சொல்றது சரிதான். துப்பாக்கிச் சண்டையில் குண்டடி படறது சகஜம். சில குண்டடிகள் காலிலோ கையிலோ படலாம். சில சமயம் உடலில் படலாம். உடலில் குண்டடி பட்டும் தொடர்ந்து சுட்டு சண்டையில் ஜெயிக்கணும்ன்னு கனவு காணக் கூடாது. முக்கால் வாசி நேரம் அது முடியாது. அதனால் உடலில் எங்கே குண்டடி பட்டாலும் முதலில் செத்து விழறமாதிரி விழணும். செத்து விழுந்தவங்களை சுட்டு யாரும் புல்லட்டை வேஸ்ட் பண்ண மாட்டாங்க. விழும்போது ஒரு கை குப்பிக்கு எவ்வளவு அருகே இருக்க முடியுமோ அவ்வளவு அருகே இருக்கணும். இது எதிராளி நம்மை கைப் பற்றாம இருப்பதற்கான முன்னேற்பாடு. அடுத்ததா கண்ணை மூடி உங்க உடலில் எங்கே அடிபட்டு இருக்குன்னு உணர்ந்து அதன் தீவிரத்தை அனுமானிக்கணும். ஒரு நிமிஷத்தில் எவ்வளவு ரத்தம் போகுதுன்னு உங்களுக்கே கணிக்க முடியும். அதை வெச்சு எப்படிப் பட்ட காயம்ன்னு அனுமானிக்கலாம். அடி ரொம்ப சின்னதா இருந்தா மட்டும் எழுந்து சுடணும். இல்லைன்னா சண்டை முடியற வரைக்கும் படுத்துக் கிடக்கணும்" ஒரு போராளி அதற்கு, "சண்டை முடிஞ்சதும் எதிராளி நமக்கு உயிர் இருக்கான்னு பார்த்தா?" பயிற்சியாளர், "நீங்க விழும் இடத்தை வெச்சு சண்டை எப்படி முடிஞ்சுதுன்னு உங்களுக்கே தெரியும் அவன் பக்கத்தில் வரும்போது முதலில் பல்லால் குப்பியை கடிச்சுட்டு எதிராளியை சுட்டுட்டு குப்பியை கடிச்சு செத்துப் போகணும்" பிறகு அதை செயல் முறையில் ஒரு உதவியாளரை காண்பிக்க வைத்தார். அந்த வகுப்பில் இருந்த ஒவ்வொரு போராளியையும் அச்செயலை செய்து காட்ட வைத்து திருத்தங்களைச் சொன்னார். முடிவில், "இதை நீங்க இன்னும் நல்லா ப்ராக்டீஸ் செய்யணும். ஒவ்வொருத்தரும் சஞ்சனா, சந்தோஷ் மாதிரி சரியா செய்யணும். இது உங்க உயிர் பிரச்சனை. கவனக் குறைவு கூடாது" என்று வகுப்பை முடித்தார்.hursday, 4 June 2009 வியாழன், ஜூன் 4, 2008 ஒரு தொலைபேசி உரையாடல் நபர்-1, "அங்கே உன் நிலவரம் என்ன?" நபர்-2, "அந்த பசங்க ரெண்டு பேரும் எங்கே இருக்காங்கன்னே தெரியலை. ஆனா அவங்க ஆஃபீஸுக்கு ரெண்டு மூணு நாள் கழிச்சு வருவதா சொல்லி இருக்காங்க. மேற்கொண்டு அவங்களிடம் இருந்து அவங்க ஆஃபீஸுக்கு எந்த தகவலும் வரலை. So in the next couple of days they must be reporting for work" நபர்-1, "என்ன செய்யலாம்ன்னு இருக்கே?" நபர்-2, "Any suggestions?" நபர்-1, "மாங்க்ஸ் பாட் நெட் மூலம் தான் கம்பியூட்டர் செண்டரை க்ரேஷ் செஞ்சு இருக்காங்கன்னு இப்ப நல்லா தெரிஞ்சு போச்சு. பணத்துக்காக அவங்க நமக்கு அதை கொடுப்பாங்கங்கற நம்பிக்கை எனக்கு இல்லை" நபர்-2, "சரி, பணம் மிச்சம். அவங்களை வேற விதமாத்தான் சம்மதிக்க வைக்கணும்" நபர்-1, "அவங்களோட ஃபேமிலியை கண்காணிச்சீங்களா?" நபர்-2, "ம்ம்ம் ... நோட்டம் விட்டோம் .. அவங்க ரெண்டு பேர் வீட்டையும் சுத்தி பாதுகாப்பு போட்டு இருக்காங்க" நபர்-1, "எதுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காங்க?" நபர்-2, "அமெரிக்க அரசாங்கமும் அவங்களுக்கு வலை விரிச்சு தேடிட்டு இருக்கும் இல்லையா? அவங்க இந்திய அரசாங்கத்திடம் சொல்லி இருப்பாங்க. இவனுகளும் அமெரிக்காவின் கைப் பொம்மைதானே? இவனுகளும் ஏன் எதுக்குன்னு கேட்காம அவனுகளை தேட ஆரம்பிச்சு இருப்பானுக" நபர்-1, "சோ, என்ன செய்யப் போறே?" நபர்-2, "மும்பையில் இருக்கற லாயர் வீட்டை அவ்வளவு சுலபமா அணுக முடியாது. அந்த வீட்டு லொகேஷன் அப்படி. ஆனா ஈரோட்டில் இருக்கும் ப்ரொஃபெஸ்ஸர் வீட்டில் சுலபமா நுழைஞ்சடலாம்" நபர்-1, "பாதுகாப்பு போட்டு இருக்காங்கன்னு சொன்னே?" நபர்-2, "இந்தியாவில் பாதுகாப்புன்னா என்னன்னு நமக்கு தெரிஞ்ச விஷயம்தானே? வீட்டில் இருக்கும் ரெண்டு கான்ஸ்டபிள்ல ஒருத்தன் தண்ணி கேஸு. இன்னொருத்தன் தண்ணி அடிக்காமயே கொரட்டை விடரவன். வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிக்காம ரெண்டு பேரும் பத்து மணிக்கு மேல் ஒண்ணா நின்னுட்டு பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எதுக்கு இந்த பாதுகாப்புன்னு தெரியலை. விடிகாலை ரெண்டு மணியில் இருந்து அஞ்சு மணி வரைக்கும் அவனுக விடற கொரட்டை சத்தம் அந்த வீதி முழுக்க கேட்குது." நபர்-1, "So what is going to be your modus operandi?" நபர்-2, "மூணு மணி வாக்கில் அந்த ரெண்டு கான்ஸ்டபிள்ஸையும் சத்தம் இல்லாமல் முடிச்சுட்டு வீட்டுக்குள் நுழைஞ்சு ரெண்டு பேரையும் தூக்கிடலாம்ன்னு இருக்கேன். ஆனா அந்த பசங்களை பத்தி நியூஸ் கிடைச்சப்பறம் செய்யலாம்ன்னு இருக்கேன்" நபர்-1, "ஏன் வெய்ட் பண்ணறே?" நபர்-2, "என்னையும் இம்ரானையும் தவிர இப்போதைக்கு இந்தியாவை நல்லா தெரிஞ்சவங்க கிடைக்கல. தமிழ்நாட்டில் ஒரு இயக்கம் இருக்கு. முன்பு கோவையில் பாம்ப் பளாஸ்ட் ஆபரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா பண்ணி இருக்காங்க. அவங்களோட ஆளுங்களை உபயோகிச்சுக்க சொல்லி மேலிடத்தில் சொன்னாங்க. தூக்கறதுக்கு வேணும்ன்னா அந்த ஆளுங்களை உபயோகிக்கலாம். ஆனா அந்த பெண்களை சேஃபா பாத்துக்க இங்கே இருக்கும் யாரையும் நம்ப முடியாது. இவனுகளே அந்த பொண்ணுங்க மேல கை வெச்சுடுவாங்க" நபர்-1, "அவங்க சேஃப்டியை பத்தி ஏன் அவ்வளவு கவலைப் படறே?" நபர்-2, "அவனுகளோட ஃப்ரெண்டையும் அவன் மனைவியையும் போட்டதுக்கே இந்த மாதிரி வேலை செஞ்சு இருக்காங்க. தூக்கிட்டு போய் அவங்க பத்திரமா இருக்காங்கன்னு காண்பிக்கணும். நிச்சயம் அந்த சக்திவேல் அவன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசணும்ன்னு சொல்லுவான். அப்ப பொண்ணுங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்தாத்தான் நம்மை நம்புவான். இல்லைன்னா என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது" நபர்-1, "அப்ப அந்த பசங்களை பத்தின நியூஸ் கிடைச்சதும் அந்த ரெண்டு பேரையும் தூக்கிட்டு அவனுகளை காண்டாக்ட் பண்ணப் போறியா?" நபர்-2, "அந்த ப்ரொஃபெஸ்ஸர் அம்மா வீட்டு லாண்ட் லைனை டாப் செய்ய ஏற்பாடு செஞ்சு இருக்கேன். அவங்க வீட்டுக்குள் ஒரு சிக்னல் ஜாம்மரை ஒளிச்சு வெச்சு இருக்கேன். வீட்டுக்குள் செல்ஃபோன் வேலை செய்யாது. சம்மர் ஹாலிடேஸுங்கறதால அந்த அம்மாவுக்கு காலேஜ் கொஞ்ச நேரம்தான். நிறைய நேரம் அம்மாவும் பொண்ணும் வீட்டில் தான் இருக்காங்க. அவனுக நிச்சயம் ஃபோனில் கூப்பிட்டு பேசுவாங்கன்னு தோணுது. அவனுக இருக்கும் இடம் கன்ஃபர்ம் ஆன அன்னைக்கே நைட்டு தூக்கிட்டு பெங்களூர் கூட்டிட்டு போயிடப் போறேன். அங்கே அவனுகளை காண்டாக்ட் பண்ணப் போறேன்" நபர்-1, "ஸ்டில், நம் கையில் மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுத்துட்டு அவங்க சும்மா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை" நபர்-2, "எனக்கும் அதில் சுத்தமா நம்பிக்கை இல்லை. மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யும் ஸாஃப்ட்வேர் நம் கைக்கு வந்து அதை உபயோகிக்க தெரிஞ்சுட்டதும் அவங்களை போட்டுத் தள்ளிடலாம்ன்னு இருக்கேன்" நபர்-1, "அவங்க R&AWவை அல்லது FBIஐ அணுகி இருப்பாங்களா? அப்படி அவங்க அணுகி இருந்தால் அல்லது R&AWவுக்கு நாம் அவங்களை அணுகப் போறோம்ன்னு தெரிஞ்சு இருந்தா நமக்குத் தான் ஆபத்து"

நபர்-2, "நிச்சயம் அணுகி இருக்க மாட்டாங்க. அப்படி அணுகினா அவங்க நமக்கு செஞ்ச ட்ரான்ஸ்ஃபர் விஷயத்தை சொல்லியே ஆகணும். அப்ப அவங்கதான் மாட்டிக்குவாங்க இப்போதைய அமெரிக்க சட்டம் இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப கடுமையானது. தீவிரவாதத்துக்கு உதவி செய்யறவங்களை வருஷக்கணக்கில் உள்ளே தள்ளிடுவாங்க. அது அவனுகளுக்கும் தெரியும். எந்த அரசாங்கத்தையும் அணுகாம நம்மிடம் பேசுவாங்க. அதனால்தான் பணம் வாங்கிட்டு மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்க ஒத்துக்குவாங்கன்னு நினைக்கறேன்" நபர்-1, "அப்படி பணம் வாங்கிக்க சம்மதிச்சா?" நபர்-2, "இவங்களை நம்ப முடியாது. விடுவிச்சதுக்கப்பறம் என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது. போட்டுத் தள்ளறதுதான் சரி" நபர்-1, "சரி, இன்ஷா அல்லா முடிச்சுட்டு வா. க்ஹுதா ஹஃபீஸ்" நபர்-2, "இன்ஷா அல்லா. க்ஹுதா ஹஃபீஸ்

No comments:

Post a Comment