Tuesday, February 3, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 26


சஞ்சனா, "நித்தின், நான் ஒண்ணு சொல்லட்டுமா? நீ இப்படி இழுத்து அடிக்கறது அனாவிசியம்ன்னு தோணுது. அந்த விளையாட்டு திரைக்கு பின்னால் தீபா ஒரு ஆழமான பொண்ணு" சக்தி, "உன்னை மாதிரியே" ஜாஷ்வா, "நித்தின். நீ எடுத்த முடிவு சரிதான். ஆனா, தீபா உன்னை இன்னமும் ஆழமா லவ் பண்ணுவான்னு நினைக்கறேன். சோ, தள்ளிப் போடாதே. நாளைக்கே அவளை கூப்பிட்டு சொல்லிடு" சஞ்சனா, "வேண்டாம் டியர். இந்த மாதிரி விஷயத்தை ஃபோனில் சொல்றது சரி இல்லை. நேரடியா பார்த்ததுக்கு அப்பறம் காலம் தாமதிக்காம சொல்லட்டும்" பெருமூச்செறிந்த நித்தின், "ஓ.கே! ட்ரிங்க்ஸ் போதும் டின்னர் ஆர்டர் பண்ணலாம். ஜாஷ், சஞ்சனா நாளைக்கு விடிகாலையில் உங்களுக்கு ஃப்ளைட்"சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் ஜாஷ்வா, "இன்னொரு முக்கியமான விஷயம்" சக்தி, "என்ன?"
ஜாஷ்வா, "கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்க மூணு குட்டி குட்டி ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி கேட்டு இருக்காங்க. இதை ஒரு ஃபேவர் மாதிரி கேட்டு இருக்காங்க. நாம் வேண்டாம்ன்னா வற்புறுத்த மாட்டாங்கன்னு நினைக்கறேன்" நித்தின், "என்ன? கொஞ்சம் விளக்கி சொல்லு" ஜாஷ்வா, "இந்த மூணும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர்ஸ். அவங்க இங்கே சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்காம். அதை அவங்க யூ.எஸ்ஸுக்கு வெளியில் டெபாசிட் செஞ்சா இங்கே இருக்கும் அக்கௌண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியுமான்னு கேட்டாங்க" சக்தி, "அதாவது, உன் பாங்கில் கணக்கு வெச்சு இருக்கும் கம்பெனிக்கு அவங்க வெளியில் இருந்து டெபாசிட் செய்வாங்க. நாம் இங்கே இருக்கும் அவங்க சொல்ற அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யணும். இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "ஒவ்வொரு மாதமும் வினியோகஸ்தர்களிடம் இருந்து அவ்வளவு பணம் போகுதே அதில் இருந்தே அவங்க எடுத்து கொடுக்கலாமே?" ஜாஷ்வா, "அவங்க இப்ப பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பார்ட்டிகளுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லையாம். இந்த பார்ட்டிகள் இருப்பதுகூட வினியோகஸ்தர்களுக்கு தெரியக் கூடாதாம். நான் அப்படி கேட்பேன்னு தெரிஞ்சு அவங்களே அந்த விளக்கத்தை கொடுத்ததா ஆண்டர்ஸன் சொன்னான்" சக்தி, "மூணு ட்ரான்ஸ்ஃபரா? குட்டி குட்டின்னா? எவ்வளவு?" ஜாஷ்வா, "மொத்தம் பதினெட்டு மில்லியன். முதலில் அஞ்சு, ரெண்டாவது மூணு அப்பறம் கடைசியா பத்து மில்லியன்" சக்தி, "எப்ப பண்ணனும்?" ஜாஷ்வா, "அடுத்து வரும் மூணு வெள்ளிக் கிழமைகளில்" நித்தின், "Funny! ஏன் வெள்ளிக் கிழமைகளில்?" ஜாஷ்வா, "நானும் கேட்டேன். இது வாரக் கடைசியில் செய்யும் பேமெண்ட் அப்படின்னு சொன்னான்" நித்தின், "பிரச்சனை எதுவும் இருக்காதுன்னு நினைக்கறேன். நீ என்ன சொல்றே சக்தி?" சக்தி, "லுக்ஸ் ஓ.கே" ஜாஷ்வா, "ஒரே ஒரு மாற்றம். அவங்களே, or rather ஹாஃப்மனே எந்த கம்பெனி அக்கௌண்ட் மூலம் செய்யணும்ன்னு சொல்லுவான்" சக்தி புருவங்கள் முடிச்சிட, "ஏன்?" ஜாஷ்வா, "ஹாஃப்மனோட செக்க்ஷன் மாறப் போகுது. அதுக்கு அப்பறம் நம் பழைய லிஸ்டில் இருக்கும் கம்பெனிகள் வேற ஆடிட்டருக்கு போயிடும். இந்த மூணும் அவனுக்கு ஷ்யூரா போகாதுன்னு தெரியுமாம். அதனால் சொல்றதா சொன்னான்" நித்தின், "Do you find anything fishy?" ஜாஷ்வா, "முதலில் கொஞ்சம் சந்தேகமா இருந்துது. அப்பறம் விசாரிச்சதில் அவன் சொன்னது சரிதான்னு தெரிஞ்சுது" சக்தி, "அப்ப செய்யலாம். After all we have made so much money thanks to them" ஜாஷ்வா, "எதுக்கும் நான் உங்களுக்கு புதன் கிழமை கன்ஃபர்ம் பண்ணறேன். எனக்கு இன்னும் ஒரு சின்ன ட்வுட் இருக்கு" நித்தின், "என்ன ட்வுட்?" ஜாஷ்வா, "ஹாஃப்மனே விண்ணப்பித்ததால்தான் இந்த செக்க்ஷன் மாற்றம்" சக்தி, "நம்மை மாதிரி அவனும் இந்த ஆபரேஷன் சம்மந்தப் பட்ட கம்பெனிகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளப் பார்க்கறான்னு நினைக்கறேன்" ஜாஷ்வா, "அது சரிதான். ஆனா எதுக்கு இந்த வாரமே விலகிக்கணும். அடுத்த மூணு ட்ரான்ஸ்ஃபரும் முடிஞ்சதுக்கு அப்பறம் விலகி இருக்கலாம் இல்லையா?" நித்தின், "நம்மை மாதிரியே அவனுக்கும் இப்பத்தான் ஆண்டர்ஸனிடம் இருந்து தெரிய வந்து இருக்கும்" ஜாஷ்வா, "அதைத்தான் நான் மறைமுகமா வெரிஃபை பண்ணப் போறேன். ஏன்னா, ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் அடிக்கடி பேசிப்பாங்க. எப்படி கடைசி நிமிஷம் வரை தெரியாம இருந்து இருக்கும்ன்னு யோசிக்கறேன்" சக்தி, "சரி, நீ விசாரிச்சுட்டு ப்ரொஸீட் பண்ணலாம்ன்னா சொல்லு. செய்யலாம்"Sunday, 3 May 2009, 10:00 AM General Rathod's Residence, New Delhi ஞாயிறு, மே 3, 2009 காலை 10:00 ஜெனரல் ராத்தோட்டின் இல்லம், புது தில்லி ஜெனரல் ராத்தோட் காலை உணவை முடித்தபின் அன்றைய தின செய்தித்தாளில் மூழ்கி இருந்தார். சாப்பாட்டு அறையில் இருந்து வந்தனா வந்து கொண்டு இருந்தாள். வாசலில் வந்து நின்ற பென்ஸ் காரில் இருந்து சுந்தர் தேஷ்பாண்டே இறங்கினார். அவர் வீட்டு வாசலை நெருங்க, வந்தனா பின் தொடர எழுந்து வந்த ஜெனரல் ராத்தோட், "எஸ் ப்ளீஸ்?" சுந்தர், "ஜெனரல் ராத்தோட்?" என்றவர் வ்ந்தனாவைப் பார்த்து புன்னகைத்து "வந்தனா?" ஜெனரல் ராத்தோட், "எஸ் தட்ஸ் ரைட்" சுந்தர் கையை நீட்டியவாறு, "ஐ யம் சுந்தர் தேஷ்பாண்டே" என்றபிறகு வந்தனாவைப் பார்த்து "நித்தினோட அப்பா" தேஷ்பாண்டே என்ற பெயரைக் கேட்டதும் யூகித்த வந்தனா முகம் மலர, "வாங்க அங்கிள்" என்று உள்ளே அழைத்துச் சென்றாள். வந்தனா, "அவ இன்னும் தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கறேன். கூப்பிடறேன். வாங்க நீங்க ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுங்க" சுந்தர், "பரவால்லை வந்தனா, வரும் வழியில் ஃப்ரெண்ட் ஒருத்தருடன் ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டுத்தான் வர்றேன். ஒரு டீ மட்டும் கொடு" ஜெனரல் ராத்தோட், "நீங்க இப்ப வந்து இருப்பது நல்லது. ஹைதராபாத்தில் இருந்து வந்ததில் இருந்து தீபா ரொம்ப டல்லா இருந்தா. என்ன பிரச்சனைன்னு வந்தனாகிட்டகூட சொல்லலையாம். நீங்க அவகூட பேசுங்க" சுந்தர், "அதுக்குத்தான் வந்து இருக்கேன்" ஜெனரல் ராத்தோட், "என்ன ப்ரிச்சனை? நான் தெரிஞ்சுக்கலாமா?" சுந்தர், "ஒண்ணும் இல்லை ஜெனரல். Lovers' quarrel. நான் என் மகனோடு நேத்து பேசும் போது சொன்னான். எனக்கும் நாளைக்கு இங்கே வேலை இருந்தது. நான் பொதுவா வார நாட்களில்தான் டெல்லி வருவேன். வரும்போது தீபாவை லஞ்சுக்கோ அல்லது டின்னருக்கோ கூட்டிட்டு போவேன். அப்படி செய்யறதுக்கு பதிலா இன்னைக்கு தீபாகூட அதிக நேரம் செலவிடலாம்ன்னு என் ட்ரிப்பை ப்ரிபோன் பண்ணிட்டு வந்து இருக்கேன்" ஜெனரல் ராத்தோட், "Oh that's very nice of you"மாடியில் இருந்து வந்தனாவுடன் வந்த தீபா சுந்தரின் அருகே அமர்ந்தாள். தீபா, "ஹல்லோ அங்கிள்" அவளது முக வாட்டம் சுந்தரின் மனதை வதைத்தது. சுந்தர், "ஹெல்லோ தீபா, எப்படி இருக்கே?" தீபா, "ஐ யம் ஃபைன் அங்கிள்" சுந்தர், "நான் இன்னைக்கு முழுக்க ஃப்ரீ. வா வெளியில் போய் எங்கேயாவுது சுத்தலாம்" தீபா, "சாரி, எனக்கு மூட் இல்லை அங்கிள்" சுந்தர், "அது எனக்கு தெரியும் அதனால்தான் வந்து இருக்கேன்" என்று அவர் சொல்லச் சொல்ல தீபா குலுங்கி அழத்தொடங்கினாள். வந்தனா, "ஏய், தீபா என்ன ஆச்சு?" தன் வருங்கால மருமகளின் அருகே நிருங்கி அமர்ந்த சுந்தர் அவள் தோள்களை பிடித்து அணைக்க அவர் தோளில் முகம் புதைத்த தீபா அழுகையை தொடர்ந்தாள். எல்லோரும் ஆறுதல் சொல்ல மெதுவாக அவளது அழுகை அடங்கியது. சுந்தர், "போய் சேஞ்ச் பண்ணிட்டு வா. வெளியில் போகலாம்" என்ற அன்புக் கட்டளைக்கு பணிந்த தீபா ஆடை மாற்றி அவருடன் வெளியில் சென்றாள் தான் அஃபிலியேட் மெம்பராக இருந்த டெல்லி கால்ஃப் க்ளப்பை அடைந்ததும் அழகான புல்வெளிகளைப் பார்த்தபடி இருந்த லௌஞ்சில் ஒரு மூலையில் இருந்த மேசையை தேர்ந்து எடுத்து அவளை அமரச் செய்து எதிரில் அமர்ந்தார். சுந்தர், "என்ன, நித்தின் கல்யாணம் இப்ப வேண்டாம்ன்னு சொன்னானா?" தீபா, "அப்படி சொல்லலை. இன்னும் முழுசா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுட்டதுக்கு அப்பறம் முடிவெடுக்கலாம்ன்னு சொன்னான்" சுந்தர், "நீ எப்ப இருந்து அவனை லவ் பண்ண ஆரம்பிச்சே?" தீபா, "அவனைப் பார்த்த முதல் நாளே" சுந்தர், "அவனும் உன்னை பார்த்த முதல் நாளே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்." தீபா, "நானும் அப்படித்தான் நினைச்சேன்" சுந்தர், "இன்னமும் உன்னை ரொம்ப ஆழமா லவ் பண்ணறான்" தீபா, "பின்னே எதுக்கு அப்படி சொல்றான். டீஸ் பண்ணற மாதிரி தெரியலை. This is not funny" என்று அவள் சொல்லச் சொல்ல கண்கள் குளமாகின. சுந்தர், "அவனுக்கு சில இன்செக்யூரிட்டீஸ் இருக்கும்மா" தீபா, "நோ வே! கர்வம்ன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்" சுந்தர், "இல்லை தீபா அவன் வாழ்க்கையில் நடந்ததை, எங்க ரெண்டு பேரையும் ரொம்ப பாதிச்ச விஷயத்தை சொல்றேன்" அதுக்கு அப்பறம் நீ சொல்லு.முதலில் மேனகாவைப் பற்றியும் அவர்களின் மணவாழ்வையும் பற்றிக் கூறினார். தாயுக்கும் மகனுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த பாசத்தையும் மகனது இரண்டு வருடப் பிரிவு மேனகாவின் மனத்தில் ஏற்படுத்திய வலியைப் பற்றிக் கூறினார். அச்சமயம் அவளை விலக்கி தன் வேலையே கதி என்று தான் இருந்ததாலும் அவளுக்குள் இருந்த பாலுணற்சியின் உந்துதலாலும் அவள் எடுத்த முடிவைப் பற்றிக் கூறினார். பிறகு தனக்கும் தன் மகனுக்கும் ஒரே சமயத்தில் அவளது நடத்தையைப் பற்றி தெரிய வந்ததைக் கூறினார். தானும் தன் மகனும் மேனகாவை தண்டிக்க எடுத்த முடிவுகளைக் கூறினார். பிறகு மேனகா தன் வாழ்வை முடித்துக் கொண்ட விதத்தைப் பற்றிக் கூறினார். பேசுவது அறியாமல் கண்கள் குளமாகி வழிந்தோட தீபா அமர்ந்து இருந்தாள். சுந்தர், "அதுக்கு அப்பறம் அவன் பைத்தியம் பிடிக்காமல் இருந்தான்னா அதுக்கு அவனுக்கு கணிதத்தின் மீதும் அல்காரிதங்களின் மீதும் இருந்த ஆர்வம் மட்டுமே காரணம். அப்படியும் ரொம்ப சினிகலா இருப்பான். கல்யாணம், காதல் இவைகளைப் பற்றி ரொம்ப கேவலமா பேசுவான். அவன் தன் தாயை ரொம்ப நேசிச்சான் அதே சமயம் அவளோட செயல்களை வெறுத்தான். எங்க அப்பா அம்மாவைக் கூட மதிக்காம நடந்துக்குவான். குடும்ப வாழ்க்கை எல்லாம் சுத்த வேஷம் அப்படின்னுகூட ஒரு காலகட்டத்தில் அவன் மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அவன் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணிப்பனான்னு நான் நிறைய நாள் கவலைப் பட்டது உண்டு" தீபா, "அங்கிள், நான் அவனை மீட் பண்ணும் போது அவன் அப்படி இல்லையே" சுந்தர், "சக்தியை சந்திச்சு அவனோட நட்பு கிடைச்சதுக்கு அப்பறம்தான் கொஞ்சம் மனுஷனானான். அதுக்கு அப்பறம் மனோகரி, சாந்தி இவங்க ரெண்டு பேரும் அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தாங்கன்னு சொல்லணும். அவன் பெங்களூரில் இருந்த ரெண்டு வருஷத்தில் மும்பைக்கு என்னை பார்க்க நாலஞ்சு தடவை வந்து இருப்பான். ஐ மீன், அவன் என்னை வெறுக்கலை. என் மேல அவனுக்கு ரொம்ப மதிப்பு இருக்கு. ஆனா, என் கிட்ட அவன் ரொம்ப க்ளோஸ்ன்னு சொல்ல முடியாது. நானும் அவனை ஒரு ஃப்ரெண்ட் மாதிரித்தான் நடத்தினேன். ஆனா அதே ரெண்டு வருஷத்தில் இருபது தடவையாவுது அவன் ஈரோட்டுக்கு வீக் எண்டுக்கு போயிருப்பான். Oh! I owe so much to Shakthi, Manohari and Shanthi" தீபாவுக்கு மனோகரி நித்தினும் அவளுக்கு ஒரு மகன்தான் என்று சொன்னதும் சாந்தி சக்தியிடம் இருந்தது போலவே நித்தினிடம் உறவு கொண்டாடியதும் நினைவுக்கு வந்தது. அவள் கண்கள் மீண்டும் பனித்தன. சுந்தர், "அவன் மனசில் ஒரு பெண்ணுக்கு உயர்ந்த உதாரணம்ன்னா அது அவன் தாய்தான். அதே சமயத்தில் அப்படிப் பட்ட ஒரு பெண் நம்பிக்கை துரோகம் செய்வான்னு பயந்தான். அவன் முதல் முதலில் பார்த்தப்ப உன்னை தன் தாய் மாதிரி ஒரு பெண்ணா பார்க்கலை. அவன் மனசில் அந்த சமயத்தில் இருந்த ஒரு பெண்ணோட இமேஜுக்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தே. உன்னை பார்த்த முதல் நாளில் இருந்து காதலிச்சான். உன்னோட அறிவையும் விளையாட்டுத் தனத்தையும் மட்டும் அவன் நோட்டீஸ் பண்ணல. நீ அவன் மேல எத்தனை அன்பு வெச்சு இருக்கேன்னு அவனுக்கு நல்லா தெரியும். ஆனா கல்யாணம்ன்னு பேச்சு வந்ததும் அவனுக்குள் சில பயங்கள், சந்தேகங்கள், தன்னைப் பத்தி, தான் செஞ்ச காரியத்தைப் பத்தி தாழ்வு மனப்பான்மை இது எல்லாம் சேர்ந்து அவன் குழம்பிப் போயிருக்கான்"
தீபா, "அவன் உங்க கிட்ட சொன்னானா அங்கிள்?" சுந்தர், "முதலில் சக்தி என்னைக் கூப்பிட்டு பேசினான். உன் கிட்ட பேசினதைப் பத்தி சக்திக்கு சொல்லி இருப்பான் போல இருக்கு" சற்று எரிச்சலோட பார்த்த தீபாவைப் பார்த்து புன்னகைத்த சுந்தர், "தீபா, அவங்க ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப ஆழமானதும்மா. ஒருத்தனுக்காக ஒருத்தன் உயிரைக் கொடுபானுக. கொஞ்ச நாளா ஜாஷ்வாவைப் பத்தி நித்தின் சொல்லும்போது அவன் குரலில் அதே மாதிரி ஒரு அன்னியோன்னியத்தை பார்க்கறேன். தயவு செஞ்சு அதைப் பாத்து பொறாமை படாதே" தீபா, "சொல்லுங்க அங்கிள், நான் என்ன செய்யணும்" சுந்தர், "சக்தி, மனோகரியை அவன் கூட பேசச் சொல்லட்டுமான்னு கேட்டான். நான் தான் வேண்டாம் முதலில் தீபா பேசட்டும்ன்னு சொன்னேன். அவனுக்கு ஃபோன் பண்ணி கல்யாணம் எப்பன்னு நீ முடிவு செய்யப் போவதா ஆணித்தரமா சொல்லு. பேசாம கேட்டுப்பான். அதே சமயம் அவனோட அன்பா நடந்துக்கோ. அது போதும். மேனகா போனதுக்கு அப்பறம் அவனுக்கு அந்த மாதிரி அன்பு மனோகரிகிட்டதான் கிடைச்சுது. நீ அவனுக்கு அந்த மாதிரி அன்பை கொடும்மா. அது போதும்" தீபா, "ஐ அம் சாரி அங்கிள்! என் நித்தினை நானே தப்பா புரிஞ்சுட்டேன். இனி நீங்க கவலைப் படாதீங்க. I will take care of him" என்று தழ தழத்த குரலில் சொன்னதும் சுந்தரின் கண்கள் குளமாகின. சுந்தர், "Thank you my child" தீபா, "மனோகரி ஆண்டிகிட்டயும் பேசி அவங்களை நித்தின்கூட பேசச் சொல்லறேன்" Wednesday, 6 May 2009 11:30 AM புதன் மே 6, 2009 காலை 11:30 தீபா நித்தினை கைபேசியில் அழைத்தாள் தீபா, "ஹாய் நித்தின்" நித்தின், "ஹாய் தீபா" தீபா, "டின்னர் ஆச்சா? என்ன பண்ணிட்டு இருக்கே?" நித்தின், "ம்ம்ம் ... ஆச்சு. ஜஸ்ட் ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தேன். யூஷுவலா ஸ்கைப்பில் கூப்பிடுவே. இன்னைக்கு ஏன் ஃபோன்ல?" தீபா, "கேபினில் இருந்து பேசப் பிடிக்கல. வெளிய ஒரு காஃபீ ஷாப்பில் இருந்து பேசிட்டு இருக்கேன்" நித்தின், "ம்ம்ம் ... அப்பறம் என்ன விசேஷம்" தீபா, "விசேஷம் ஒண்ணும் இல்லை. நம்ம கல்யாணம்தான்" நித்தின், "வாட்?" தீபா, "ஆமா. சண்டே சுந்தர் அங்கிள் வந்து இருந்தார். நீயே ஒரு டேட் ஃபைனலைஸ் பண்ணுன்னு சொன்னார். அதுக்காகத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "ஏய், நான் லாஸ்ட் டைம் சொன்னது மறந்துடுச்சா?" தீபா, "என்ன சொன்னே?" நித்தின், "இன்னும் கொஞ்சம் நாள் .. " தீபா, "இன்னும் கொஞ்சம் நாள் என்ன செய்யறதா உத்தேசம்?" நித்தின், "ஒருத்தரை ஒருத்தர் ...." தீபா, "உன்னைப் பத்தி முழுசா நான் புரிஞ்சுகிட்டேன். நீ என் கிட்ட சொல்லாத ஒண்ணு ரெண்டையும் சுந்தர் அங்கிள் சொல்லிட்டார். என்னைப் பத்தி உனக்கு சொல்லாதது ஒண்ணுமே இல்லை. இன்னும் என்ன ஒருத்தரை ஒருத்தர்ன்னு? சொல்லு?" நித்தின், "அப்பா என்ன சொன்னார்?" தீபா, "எல்லாத்தையும் சொன்னார். முதல்ல உனக்கு நடந்ததை நினைச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுக்கு அப்பறம் உன் மேல எக்கச்சக்கமா கோபம் வந்தது. இன்னும் கோபமாத்தான் இருக்கேன்" நித்தின், "என்ன கோபம்?" தீபா, "என்ன திமிர் இருந்தா நீ ஐ லவ் யூ சொன்னதுக்கு அப்பறம், அவ்வளவு எல்லாம் சுத்தினதுக்கு அப்பறம், கிஸ்ஸெல்லாம் அடிச்சதுக்கு அப்பறம், இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தை சாக்கா வெச்சு கல்யாணத்தை தள்ளி வெக்கலாம்பே?" நித்தின், "சின்ன விஷயமா? I wanted to murder my mom for God's sake!" தீபா, "சோ வாட்? அடிக்கடி நான் ஒரு க்ரிமினல் லாயரோட பொண்ணுங்கறதை மறந்துடற." நித்தின், "ஒரு க்ரிமினல் லாயரோட பொண்ணா யாரோ அப்படி செஞ்சதை கேள்விப் பட்டு இருப்பே. உன் கணவன் அந்த மாதிரி செஞ்சான் அப்படிங்கறதை உன்னால் ஜீரணிக்க முடியுமா?" தீபா, "ஜோரா முடியும்" நித்தின், "ஏன்?" தீபா, "ரொம்ப ஸிம்பிள். ஐ லவ் யூ. and I want to be Mrs. Deepa Deshpande. நீ எப்பவோ பண்ணினதைப் பத்தி எனக்கு கவலையே இல்லை" நித்தின், "Not only that Deeps. .." தீபா, "நித்தின் நீ சில விஷயங்களை புரிஞ்சுக்கணும். நீ உன் அப்பா இல்லை. நான் உன் அம்மா இல்லை. என்னைப் பத்தி கவலைப் படாமல் வேலையே கதின்னு உன்னால் இருக்க முடியாது. உன்னைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைச்சுக் கூட பாக்க முடியாது. You know that I love so much ... Don't you love me?" என்று தழதழத்த குரலில் முடித்தாள். நித்தின், "You know that I do baby" தீபா, "அப்படின்னா என்னை கல்யாணம் பண்ணிக்கறே. ஓ.கே?" நித்தின் "ஓ.கே" தீபா, "நீ என்னை பேபின்னு கூப்பிட்டதும் ஞாபகம் வருது. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நமக்கு குழந்தை வேண்டாம். ஒரு அம்மாவா எப்படி இருக்கணும்ன்னு நான் முதல்ல கத்துக்கணும். That is with your help" நித்தின், "நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?" தீபா, "ஒண்ணும் பண்ண வேண்டாம். எனக்கு நீ ஒரு குழந்தை மாதிரி இருந்தேன்னா போதும்" நித்தின், "I don't know what to say but I love you" தீபா, "ஐ நோ! சரி...., நான் கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணனும். எப்ப வெச்சுக்கலாம் நம் கல்யாணத்தை? சக்தி-வந்தனா ஜூன் பதினைந்தாம் தேதிக்கு அப்பறம்ன்னு முடிவு செஞ்சு இருக்காங்க. அவங்க அப்பாவும் மனோகரி ஆண்டியும் டேட் ஃபைனலைஸ் பண்ணும் போது நம்முதும் பண்ணி ஆகணும்" நித்தின், "எதுக்கு?" தீபா, "உடன் பிறவா சகோதரன் உன் கல்யாணத்துக்கு வரவேண்டாமா? சஞ்சனா நிச்சயம் சக்தி கல்யாணத்துக்கு வருவா. ஜாஷ், புது வேலையில் சேரப் போறார். நிறைய லீவ் கிடைக்காது. அவங்க கல்யாண தேதிக்கு பக்கத்திலேயே நம்முதும் இருந்தா ஒரே ட்ரிப்பில் அவங்களால ரெண்டு கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ண முடியும்" நித்தின், "எஸ், நான் அதைப் பத்தி நினைக்கவே இல்லை" தீபா, "தெரியும். சோ, நான் சுந்தர் அங்கிளை மனோகரி ஆண்டிகிட்ட பேசிட்டு டேட் ஃபைனலைஸ் பண்ணச் சொல்றேன். ஓ.கே?"நித்தின், "தீப்ஸ், இன்னும் என்னைப் பத்தி உனக்கு தெரியாதது எதாவுது இருந்தா என்ன செய்வே?" தீபா, "எதுவா இருந்தாலும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடி சொல்லிடு. இல்லைன்னா உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது" நித்தின், "ஹா! ஹா! சரி, எந்த அளவுக்கு உன் அசைன்மெண்ட் முடிஞ்சு இருக்கு?" தீபா, "எல்லாம் உனக்கு சக்தி சொல்லி இருப்பான். மறுபடி எதுக்கு கேக்கறே?" நித்தின், "இன்னும் ஒரு முறை கேட்டு வெரிஃபை பண்ணிக்கத்தான்?" தீபா, "சூப்பர் கம்பியூட்டர் உபயோகிச்சு டிக்ரிப்ட் செஞ்சுட்டு இருக்கோம்" நித்தின், "எதை டிக்ரிப்ட் செய்யறீங்க?" தீபா, "இண்டர்நெட் மூலம் வந்த மெஸ்ஸேஜஸ்" நித்தின், "அந்த மெஸ்ஸேஜஸ்ல எதாவது ரகஸியமான விவரம் இருக்கா? நீ என்ன விவரம்ன்னு சொல்ல வேண்டாம்." தீபா, "அந்த மெஸ்ஸேஜஸ்ல ஒரு ஐ.பி.அட்ரெஸ் இருக்கு. அதை கண்டுபிடிக்கணும்" நித்தின், "அந்த ஐ.பி.அட்ரெஸ் எந்த மெஸ்ஸேஜ்ல இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?" தீபா, "எல்லா மெஸ்ஸேஜஸ்லயும் அந்த ஐ.பி.அட்ரெஸ் இருக்குன்னு தெரியும். அது என்னன்னு கண்டுபிடிக்கணும்" நித்தின், "வாவ், ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே?" தீபா, "கடுப்பு ஏத்தாதே. I find it so damn difficult. இதுக்குதான் உன்னால ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன்." நித்தின், "சாரி, எப்படியோ. சீக்கரம் உன் அசைன்மெண்ட்டை முடி. அதையும் இதையும் சொல்லி எனக்கு கல்யாண ஆசையை உண்டு பண்ணிட்டே. ஃபர்ஸ்ட் நைட்டில் அசைன்மென்ட்டை பத்தி பேசினா கொன்னுடுவேன்" தீபா, "எங்க அசைன்மென்ட் ஜூன் 4ம் தேதிக்குள்ள முடிஞ்சுடும்ன்னு சக்தி சொல்லலையா?" நித்தின், "உங்க பாட்டர்ன் மாட்சிங்க் ரௌன்ட்ஸ் எல்லாம் முடிஞ்சுடுமா?" தீபா, "ம்ம்ம் ... முடியணும்" நித்தின், "ஸ்டில் ... உங்க யூகம் எதாவது தப்பா இருந்தா இன்னும் சில சுற்றுக்கள் தேவைப் படும் இல்லையா?" தீபா, "So far our assumptions have proved right. பட், எதாவது தவறா யூகிச்சு இருந்தா இன்னும் சில சுற்றுக்கள் தேவைப் படும்தான். என்ன பண்ணறது?" நித்தின், "இதுவரைக்கும் ஊர்ஜிதப் படுத்தாத விவரம் எதையும் யூகிக்காமல் செஞ்சா கடைசி நிமிஷத்தில் புதுசா எந்த தடங்கலும் வராது" தீபா, "யூ ஹாவ் அ பாய்ண்ட்" நித்தின், "சரி, எதை வெச்சு உங்க டீகோடை வெரிஃபை செய்வீங்க?" தீபா, "அந்த மெஸ்ஸேஜ்களுக்குள்ள புதைந்து இருக்கும் வேறு ஒரு பகுதி எங்களுக்கு என்னன்னு தெரியும். அதாவது அந்த பகுதிமட்டும் என்க்ரிப்ட் செஞ்சதுக்கு (குறியீட்டு முறையில் எழுதுவதற்கு) முன்னால் எப்படி இருந்ததுன்னு தெரியும்" நித்தின், "அந்த பகுதி Numericஆ இல்லை alpha-numericஆ?" தீபா, "டெக்ஸ்ட் மேட்டர் ... alpha-numeric" நித்தின், "ஆனா ஐ.பி அட்ரெஸ் எண்களைக் கொண்டது இல்லையா?" தீபா, "ஆமா, ஆனா ஐ.பி.அட்ரெஸ்ஸும் டெக்ஸ்ட் மாதிரியே யூனிகோடில் ஸ்டோர் ஆகி இருக்குங்கறது எங்க யூகம். ஐ.பி அட்ரெஸ் இருக்கக்கூடிய பகுதிகள் எல்லாம் யூனிகோட் எண்களாகவும் மத்த பகுதிகள் யூனிகோட் எழுத்துக்களாகவும் இருக்கு" நித்தின், "யூனிகோட் எண்களா?" தீபா, "ஐ மீன் அரபிக் நியூமரல்" (i.e., 1, 2, 3, 4 etc) நித்தின், "எப்படி சொல்றே?" தீபா, "எண்களை வேற எப்படி எழுத முடியும்?"
நித்தின், "ஏன் முடியாது, நீ சொல்றது டெஸிமலில். அதுக்கு பதிலா பைனரியில் (BINARY) எழுதலாம், ஆக்டலில் (OCTAL) எழுதலாம், ஹெக்ஸா டெஸிமலில் (HEXADECIMAL) எழுதலாம். அவ்வளவு ஏன் ஒன்று அப்படிங்கறதுக்கு A, ரெண்டு அப்படிங்கறதுக்கு B, மூணுக்கு C, நாலுக்கு D அப்படின்னு கூட எழுதலாம் இல்லையா. எழுதறவங்களுக்கும் படிக்கறவங்களுக்கும் புரியும்ன்னா எப்படி வேணும்னாலும் எழுதலாம்" தீபா, "மை காட்! இதுவும் நீ சொல்றது சரிதான். போடா நாயே. முதல்லயே நான் கூப்பிட்டப்ப எனக்கு ஹெல்ப் பண்ண வந்து இருக்கலாம் இல்லை?" நித்தின் வாய்விட்டு சிரித்தான் தீபா, "சரி, பார்க்கலாம். நான் அப்பறம் கூப்படறேன்" நித்தின், "ஹேய் ... " தீபா, "என்ன?"
நித்தின், "ஐ லவ் யூ" தீபா, "மீ டூ ... " நித்தின், "பை. " தன் இருக்கைக்கு வந்த தீபா முதலில் வந்தனாவை தன் இருப்பிடத்துக்கு அழைத்து ப்ரொஃபெஸ்ஸரை தொலைபேசியில் அழைத்து ஸ்பீக்கர்ஃபோனை இயக்கினாள்.

No comments:

Post a Comment