Friday, February 27, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 1



காலைச் சூரியனின் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம் தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இளம் மஞ்சள் வெயிலாக மாறி..... இன்னும் கொஞ்சநேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப்போகும் ஒரு இனிய காலைப்பொழுது

திருச்சியை அடுத்த மணப்பாறை செல்லும் சாலையில் ஒரு மலையடிவாரத்தில் இருந்த அந்த பெண்கள் கல்லூரியின் விடுதியிலிருந்து அவசரமாக தன் தோளில் கிடந்த துப்பட்டாவை சரிசெய்தபடி வந்த மான்சி தனது மணிக்கட்டை திருப்பி பார்த்து வகுப்பு ஆரம்பிக்க இன்னும் நேரமிருப்பதை உணர்ந்து தனது நடையின் வேகத்தை குறைத்து கல்லூரிக்கு செல்லும் செம்மண் பாதையில் நடந்தாள்

மான்சி யாரவது அழுந்த பற்றினால் கூட பற்றிய இடம் கன்றிச் சிவக்கும் அளவுக்கு நல்ல வெளுத்து சிவந்த நிறம்.... அழகான நீள்வட்ட முகம்.... அதில் நீண்ட இமைகளுடன் கூடிய அகன்ற விழிகள்...... கத்தி போன்ற கூர்மையான நாசி..... அதன்கீழே இயற்கையாகவே சிவந்த ஈரமான உதடுகள்..... மிகவும் மெல்லிய தேகம்...... அந்த தேத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத கனத்த மார்புகள்..... அதற்கு கீழே கைகளுக்குள் அடக்கலாம் போன்ற சிற்றிடை..... அதன் கீழே அவளின் மார்புகளுக்கு போட்டியாக பருத்த எடுப்பான பின்புறங்கள்..... இளம்வாழைத்தண்டை போன்ற மெல்லிய கால்கள்..... இவளைப்பார்ப்பவர்கள் எப்படித்தான் இந்த கனத்த மார்புகளையும் பருத்த பின்புறங்களையும் இந்த மெல்லிய கால்கள் சுமக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எழும்.... இதனாலேயே மான்சி எப்போதுமே சற்று லூசான உடைகளையே அணிவாள்




மான்சி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு போஸ்ட் மாஸ்டரின் மகள்..... வீட்டில் ஒரே செல்ல மகளாக பிறந்து தன் தாயின் அன்பில் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவள்.....தனது பத்தாவது வயதில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் தனது தாயை பறிகொடுத்தவிட்டு தந்தையின் ஆதரவில் வாழவேண்டிய சூழ்நிலை...... ஆனால் மான்சியின் அப்பாவால் தனது தனிமையை தாங்கமுடியாமல் இச்சையை அடக்கமுடியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள.....மான்சியின் பிஞ்சுமனம் தன் தந்தையின் அணைப்பை பங்குபோட்டுக்கொள்ள வந்த அந்த புதிய உறவை ஏற்றுகொள்ள முடியாமல் தனிமையில் வெதும்பி கண்ணீர்விட்டது .... தனது தாயின் அறைக்குள்ளிருந்து கேட்கம் சினுங்கள்களும் கொஞ்சல்களும் சத்தங்களும்.... அவளின் ஆதரவற்ற நிலையை அவளுக்கு புரியவைக்க மனதில் ஒரு இனம்புரியாத ஏக்கத்தோடு நாளுக்கு நாள் மெலிந்து உருக்குலைந்து போக ஆரம்பித்தாள்


மான்சியின் சித்தியும் கொடுமைக்காரி இல்லை மான்சிக்கு தேவையானவற்றை ஒரு இயந்திரகதியில் செய்துவிட்டு தனது கணவனுடன் அறைக்குள் போய்விடுவாள் அவ்வளவுதான்……. அதன்பிறகு மான்சி தன் காதை பொத்திக்கொண்டு வெளியே வராந்தாவில் வந்து சுருண்டுகொள்வாள்


தனது ஒரே தங்கையின் ஒரே மகளை பார்க்க வந்த மான்சியின் தாய்மாமன் அண்ணாமலை மான்சியின் நிலையைப் பார்த்து தனது மனைவியின் தொல்லையால் தன் வீட்டுக்கும் மான்சியை அழைத்து போகமுடியாமல்....
அவளின் பனிரெண்டாவது வயதில் கொண்டுவந்து விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார்..... அன்றுமுதல் மான்சிக்கு இந்த இருபத்தொரு வயதுவரை ஹாஸ்டல் வாசம்தான்..... அண்ணாமலை மட்டும் தனது தங்கையின் மகளை வாரமொருமுறையாவது வந்து பார்த்துவிடுவார்...... மான்சியின் அப்பா வரதராஜனும் அடிக்கடி வருவார் ஆனால் மான்சியால் அவரிடம் ஒட்ட முடியவில்லை......இப்போதெல்லாம் அவரை அப்பா என்று கூப்பிடுவதை கூட தவிர்த்துவிட்டாள்...... தன்னுடைய இந்த தனிமை வாழ்க்கைக்கு தனது தந்தையின் மறுமணம்தான் காரணம் என்று நினைத்து அவரை ஒதுக்கினாள் .... ஒரு ஆணுக்கு உண்டான வயதின் தாபங்ளும் உணர்ச்சிகளும் அவள் இன்றுவரை புரிந்து கொள்ளாமல் ஒதுங்கியே வாழ ஆரம்பித்தாள்

ஆனால் அவளின் அமைதியான மனதிலும் சிலநாட்களாக காதல் புயல் வீச தொடங்கியிருந்தது..... அவளின் வரண்ட மனதிலும் ஒருவன் நேச விதைகளை தூவி தனது காதல் பார்வைகளால் அதற்க்கு நீர் வார்த்தான்


கல்லூரிக்கு மெதுவாக நடந்து போய்கொண்டிருந்தவளை பின்புறமாக வந்த “ மான்சி” என்ற குரல் தடுத்து நிறுத்த... மான்சி சட்டென திரும்பி பார்த்தாள்..... அவளின் வகுப்பு தோழி ரேகாதான் ஓட்டமும் நடையுமாக இவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்

மான்சியின் பார்வை ஆர்வத்துடன் ரேகாவையும் தாண்டி கல்லூரியின் கேட்டை நோக்கி போக......

அங்கே இவளின் பார்வைக்காகவே காத்திருந்து போல ரேகாவின் அண்ணன் ரகுராம் நின்றிருந்தான்......

மான்சி தன்னை பார்ததும் முகம் மலர புன்னகையுடன் தலையசைத்து ‘கிளம்பட்டுமா’ என்பது போல கேட்க.....

மான்சி முதலில் அவன் முகத்தையே பார்த்தவள் அவன் தலையசைத்ததும் வெட்கத்துடன் தலைகுனிந்து சரி என்பது போல தலையசைக்க.....

ரகு அவளின் அந்த ஒற்றை தலையசைப்புக்காக இந்த உலகையே விலை பேசலாம் என்று நினைத்து தனது பைக்கில் ஏறி உட்கார்ந்து மறுபடியும் அவள் தன்னை பார்க்கிறாளா என்று திரும்பி பார்த்தான்



" என்னுள் உன்னைத் தொலைத்துவிடு....

" கண்டுபிடித்துக் கொடுப்பதற்குக் .....

" கட்டணமாக என்னையே தருகிறேன்...!

மான்சி தனக்கு முன்னால் வந்துகொண்டிருந்த ரேகாவின் தலைக்கு மேலே எட்டி அவனைப்பார்க்கவும் ..... ரகு உற்சாகத்துடன் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்து மறுபடியும் அவளைப் பார்த்து சற்று பலமாக தலையசைத்து விடைபெற.....

மான்சி வெட்கப் புன்னகையுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்

அவள் பின்னே வந்த ரேகா “ ஏய் மான்சி இங்கே என்னடி நடக்குது.... என்னை பக்கத்தில் வச்சுகிட்டே என் அண்ணனை சைட் அடிக்கிறயா....இருஇரு இனிமேல் ரகுவை வீட்டில் விட்டுட்டு என்னோட ஸ்கூட்டியில் காலேஜுக்கு வந்திர்றேன் அப்புறமா ரெண்டு பேரும் எப்படி சைட்டிக்கிறீங்கன்னு பார்க்கலாம்” என்று குறும்புடன் கூற

மான்சியின் முகம் சோகத்தை சுமக்க “ அவர் கிளம்பட்டுமான்னு கேட்டார்... நான் சரின்னு தலையாட்டினேன் அவ்வளவுதான்.... இதுக்கு போய் ஏன் அவரை வரவேண்டாம்ன்னு சொல்ற”.....என்று கவலை தோய்ந்த குரலில் கூற

“ அதைதான் ஏன்னு கேட்கிறேன்.... அவன் கொண்டுவந்து விட்டது என்னை.... ஆனால் கிளம்பட்டுமான்னு கேட்கறது உன்கிட்டே.... அதுதான் எனக்கு புரியவேயில்லை” என்று ரேகா அப்பாவியாய் கைகளை விரித்து கேட்டாள்

மான்சியின் கண்கள் லேசாக கலங்க “ ஸாரி ரேகா இனிமே நீங்க ரெண்டு பேரும் வர்ற நேரத்தில் நான் வரமாட்டேன் “ என்று சோகமாக சொல்ல


“ ஏய் நான் சும்மா விளையாட்டுக்குதான்டி சொன்னேன் அதுக்குபோய் கண்கலங்கற.... ரகு என்னடான்னா என்னை கொண்டு வந்து விடுறேன்ற சாக்கில் வந்து காலேஜ் கேட்கிட்ட தவமிருக்கான்.... நீ என்னடான்னா கரெக்டா அவன் வர்ற நேரத்தில்தான் விடுதியில இருந்து வெளியே வர்ற....அன்னிக்கு நீ தலைவலின்னு சொல்லி காலேஜ்க்கு வரலை...ரகு என்னை கொண்டுவந்து விட்டுட்டு நீயும் வருவே வருவேன்னு கேட்டுக்கிட்டயே தவமிருக்கான் கடைசியா வாட்ச்மேன் வந்து என்ன வேனும்னு விசாரிச்சதும்தான் பைக்கை எடுத்துகிட்டு போயிருக்கான்......நான் சாயங்காலம் வீட்டுக்கு போனா என்னமோ பெண்டாட்டியை பறிகொடுத்தவன் போல ஆபிஸ்க்கு கூட போகாம உட்கார்ந்திருக்கான்.... உனக்கு தலைவலி அதனாலதான் காலேஜ்க்கு வரலைன்னு சொன்னதும் அவசரமா குளிச்சுட்டு தெருக்கோடியில் இருக்கும் பிள்ளையாருக்கு போய் தேங்காய் உடைக்கிறான்.... என்னடா இதெல்லாம்ன்னு கேட்ட ஒன்னுமில்ல ரேகான்னு அசடு வழியறான்” .... என்று ரேகா தனது அண்ணனைப் பற்றி வளவளவென்று பேசிக்கொண்டே இருக்க

இவளின் சலசலப்புக்கு மான்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போகவே .... தன் முன்னால் போன மான்சியை கைபிடித்து தடுத்து நிறுத்தி அவளின் கண்களை நேராகப் பார்த்து...

” ஏன் மான்சி எதுவுமே பேசமாட்டேங்குற.... நீயும் ரகுவும் ரொம்ப நாளா ஒருத்தரையொருத்தர் விரும்புறீங்கன்னு எனக்குதெரியும்.... ஆனா எப்பதான் ரெண்டுபேரும் மனம்விட்டு பேசுவீங்க.... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி கண்ஜாடைலயே பார்த்துக்குவீங்க மான்சி..... நான் வேனும்னா நீங்க ரெண்டுபேரும் பேசறதுக்கு ஏற்பாடு பண்ணவா.... ஏன் கேட்கிறேன்னா உன்னோட படிப்பு முடிய இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு அதுக்குள்ள ரெண்டுபேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க....
என்ன மானசி நான் ஏற்பாடு செய்யவா”... என்று அவள் கண்களை பார்த்தபடி ரேகா கேட்க

மான்சியின் முகம் வெட்கச்சிவப்பை பூசிக்கொள்ள தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி வேண்டாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்

“ ச்சே எப்படியாவது ஒழிஞ்சு போங்க உங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் மாட்டிகிட்டு அவஸ்தை படுறேன் “ என்று எரிச்சலுடன் கூறிய ரேகா மான்சியை முந்திக்கொண்டு கோபமாக கல்லூரிக்குள் நுழைந்தாள்

அன்று மாலை கல்லூரி முடிந்து மான்சியும் ரேகாவும் வெளியே வந்தனர்..... ரேகா எதையோ வழவழவென்று பேசிக்கொண்டே வர.... மான்சிக்கு எதுவுமே காதில் விழவில்லை....

அவள் சிந்தனை எல்லாம் காலையில் ரேகா சொன்ன விஷயத்திலேயே இருந்தது..... ‘இன்னும் ஒருமாதமே இங்கே இருக்கப்போகிறேன் அதன்பிறகு Msc படிக்க மாமா எந்த காலேஜ்ல சேர்ப்பாரோ... அப்படியிருக்க ரேகா சொன்னது போல ஏன் ரகுவிடம் பேசகூடாது.....என்று நினைத்தாள்

‘ஆனால் இந்த இரண்டு வருடங்களாக அவன் தினமும் மான்சி பார்த்து முகம் மலர புன்னகை செய்வதும்... தலையசைத்து கிளம்பட்டுமா என்பதும்..... அதிகமாகப் போனால் எப்படியிருக்க மான்சி என்ற ஒரு வார்த்தையை தவிர வேறெதுவும் பேசியதில்லை.... மான்சி இதுவரை ஜந்து முறை ரேகாவின் வீட்டுக்கு போயிருக்கிறாள்.....

அப்போதெல்லாம் அவள் ரேகாவிடமும் அவள் அம்மாவிடமும் மான்சி தன் காதுகளில் தொங்கும் ஜிமிக்கிகள் ஆட தலையைச் சாய்த்து விழிகளை விரித்து விரல்களை நீட்டி மடக்கி விரித்து நடனம் புரிந்தபடி பேசும் அழகை சற்று தள்ளிநின்று கைகட்டி ரசித்தபடி பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர அப்பவும் மான்சியிடம் பேச முயற்சித்ததில்லை.....

இப்படி அவன் மனதில் இருப்பதைப் பற்றி தெரியாமலேயே அவனிடம் தன் இதயத்தை இழந்துவிட்டோமே.....இப்போ அவனிடம் வலியப்போய் பேசினால் இல்லை நான் சும்மாதான் உன்னை பார்த்தேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது....என்று மான்சிக்கு குழப்பமாகவும் இருந்தது 

ஆனால் அவள் மனது சொன்னது அவன் நிச்சயமாக உன்னை காதலிக்கிறான் என்று.... ஏனென்றால்.... அவன் கண்கள் பொய் சொல்லவில்லை அது தினமும் அவன் காதலை மான்சியிடம் சொன்னது..... இவளைப்பார்த்தாலே மலர்ந்துவிடும் அவன் முகமும்.... பேசத்துடிக்கும் அவனின் உதடுகளும்..... இவள் திரும்பிப்பார்க்க மாட்டாளா என்று அவன் தவிக்கும் தவிப்பையும் பார்க்கும்போது இவள் மீது அவனுக்கு காதல் இல்லை என்று எப்படி சொல்வது

ஆனால் ஏன் அவன் எதையுமே சொல்லாமாலே இந்த இரண்டு வருடங்களாக மவுனம் சாதிக்கிறான்..... அவன் மவுனத்துக்கு காரணம் என்ன.... ஒன்றுமே புரியவில்லையே என மான்சியின் மனம் தவித்தது

‘இதெல்லாம் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரோ என்று கலக்கமாகவும் இருந்தது.... சிறுவயதிலிருந்தே தகப்பனுக்கும் மேலாக தன்னிடம் அன்பு காட்டும் அவருக்குத்தெரியாமல் தன் வாழ்க்கையில் எதுவுமே நடக்கக்கூடாது என்று நினைத்தாள்.....

மான்சியின் தாயார் இறந்த பிறகு அவளுக்கு சேரவேண்டிய தாய்வழி சொத்துக்களை விற்று மான்சியின் பெயரில் வங்கியில் போட்டுவிட்டு அதிலிருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் இந்த பத்து வருடங்களாக தனது பணத்திலேயே மான்சியின் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளம் தனது மாமாவின் சம்மதத்துடன்தான் தனது வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைத்தாள்

ஆனால் கிராமத்து மனிதாரான அவர் இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வாரோ என்று பயமாகவும் இருந்தது......அப்படியே ரகு தனது சம்மதத்தை சொன்னாலும் எதையுமே தன் மாமாவிடம் பேசியபிறகே முடிவு செய்யவேண்டும்’ என மான்சி எதையெதையோ போட்டு மனதை குழப்பி ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் தவித்தபடியே வர..

ரேகா அவள் தோளில் கைவைத்து “ ஏய் என்னடி உனக்கு குழப்பம்.... காலையிலிருந்து உன் முகமே சரியில்லை..... எதையோ யோசிச்சுகிட்டே இருக்க.... கேட்டா சொல்லமாட்டேங்கற..... இன்னிக்கு கிளாஸ்ல வேற சரியா கவனிக்காம அந்த சுடுமூஞ்சி மேக்ஸ் லெக்சரர்கிட்ட நல்ல திட்டு வாங்கின..... என்னடி ஆச்சு உனக்கு.” என ரேகா கவலையான குரலில் கேட்க




மான்சி தலைகுனிந்து எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்

“ அடச்சே எதை கேட்டாலும் இப்படி தலையசைத்தே பதில் சொல்லு ..... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அந்த அசைக்கிறத் தலையை அப்படியே கிள்ளியெறியலாம் போல இருக்கு.... ஆனால் எனக்கு அண்ணியா வரப்போறவ தலையில்லாத முண்டமாக இருந்தா நல்லாயிருக்காதேன்னு தான் விடுறேன் இல்ல அவ்ளோதான்..... என்னை காலேஜ்ல எல்லாரும் கிண்டல் செய்றாங்கடி எப்படி இந்த உம்முனாமூஞ்சிக்கிட்ட போய் பிரன்ட்ஸிப் வெச்சுருக்கேன்னு ச்சே எப்பத்தான் நீ மாறுவே மான்சி ” என ரேகா எரிச்சலுடன் பேச
“ நான் எப்பவுமே இப்படித்தான்.... உனக்கு பிடிக்கலைன்னா என்கூட பேசாதே ரேகா” என்று கறாராக மான்சி கூறியதும்

ரேகாவுக்கு முணுக்கென்று கோபம்வர “ இதை நான் மூணுவருசத்துக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும் இனிமேல் யோசிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை.....
நீ என்வீட்டுக்கே அண்ணியா வரப்போற இந்த நேரத்தில் உன்னை பிடிக்கலைன்னு நான் சொன்னா என் அண்ணன்காரான் என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்பான்....
அவனுக்கு உன்மேல அவ்வளவு பைத்தியம்.... யப்பா இந்த ரெண்டு உம்னா மூஞ்சியும் சேர்ந்து எங்கவீட்டையே தியான மண்டபம் மாதிரி ஆக்கப்போகுதுங்கன்னு நினைக்கிறேன்”.. என்று ரேகா தன் தலையில் கைவைத்தபடி சொல்ல

அப்போது அவள் மொபைல் ஒலித்ததுயாரென்று ரேகா பார்த்துவிட்டு மான்சியை பார்த்து கண்சிமிட்டி “ ஏய் உன் ஆளுதான்டி லைன்ல இருக்கான் பேசறியா” என்று மொபைலை மான்சியிடம் நீட்ட.... அவள் கலவரத்துடன் தலையசைத்து இரண்டி பின்னேப் போனாள்

“ சரி சரி அதுக்குப்போய் ஏன் இப்படி அலற்ர நானே பேசறேன்” என்றவள்....சற்றுத்தள்ளி நின்று ரகுவிடம் வெகுநேரம் பேசிய ரேகா மொபைலை அனைத்து தனது கைப்பையில் போட்டவாறு உற்சாகத்துடன் மான்சி அருகில் வந்தாள்

“ ஏய் மான்சி எப்படியோ என் அண்ணனுக்கு தைரியம் வந்துருச்சுடி இன்னிக்கு ஆறுமணிக்கு உன்னை ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிவரச்சொன்னான் உன்கிட்டே ஏதோ முக்கியமா பேசனுமாம்.... ம்ம் நீ போய் ரெடியாகு நான் வார்டன்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கறேன்” என்று ரேகா மான்சியின் தோளில் கைப்போட்டு விடுதிக்கு தள்ளிக்கொண்டு போக

மான்சிக்கு இருண்டு கிடந்த தன் உலகமே சட்டென வெளிச்சமானது போல இருக்க அந்த வெளிச்சத்தின் பிரதிபலிப்பு அவள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது

விடுதியில் தனது அறைக்குள் நுழைந்தவள் மான்சி புத்தகப்பையை கட்டிலில் எறிந்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தவளுக்கு எந்த உடையை அணிவது என்று குழப்பமாக இருந்தது..... ரகுவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரியவில்லையே என்று வருந்தினாள்.... ச்சே ரேகாவிடம் கேட்டிருக்கலாமே என்று தன்னை கடிந்துகொண்டவள்.... ம்ஹூம் அவளிடம் கேட்டால் நிச்சயம் கிண்டல் செய்தே தன்னை கொன்றுவிடுவாள் என நினைத்து .... அவளுக்கு பிடித்த வெள்ளைநிறத்தில் எம்பிராய்டரி வேலைபாடுகள் நிறைந்த ஒரு அழகான சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு தயாராகி வெளியே வந்தாள்

அதற்க்குள் வார்டனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வந்த ரேகா மான்சியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் “ வாவ் சூப்பர்டி யப்பா எவ்வளவு அழகுடி நீ.... ம்ம் உன் அழகில் மயங்கி எங்கண்ணன் இன்னிக்கு மட்டையாகப் போறான்.....சரி சரி வா மணி இப்பவே 5-40 ஆயிருச்சு நாம போக சரியாயிருக்கும்” என்று மான்சியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கல்லூரியைவிட்டு வெளியேறி ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் ஏறி அமர்ந்து போகவேண்டிய இடத்தை சொல்ல ஆட்டோ வேகமெடுத்தது


" மனிதன் நிலவில் காலடி வைத்தது அதிசயமில்லை....

" காதலில் காலடி வைப்பதுதான் அதிசயம்

" மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்.....

" புதிய கண்டுபிடிப்பு.......காதல்..!

மான்சியும் ரேகாவும் ஐஸ்கிரீம் பார்லர் சென்று இறங்கியபோது இவர்களுக்கு முன்பே ரகு வந்து அங்கே காத்திருந்தான்.....

மான்சியைப் பார்த்ததும் ரகுவின் சிவந்த முகத்தில் கன்னங்குழிய அழகிய சிரிப்பு தோன்ற முகம் பளிச்சென்று மலர்ந்து வா என்பது போல் தலையசைத்தான்... அவன் கண்களுக்கு ரேகா தெரியவேயில்லை

மான்சி அவனை பார்த்ததும் வெட்கமாய் புன்னகைத்து ரேகாவின் பின்னால் மறைய.... ரேகா அவளை இழுத்து முன்னால் விட்டுவிட்டு “ அண்ணா இவளை உள்ளே கூட்டிப்போய் உட்காரவை எனக்கு பக்கத்தில இருக்கிற புக் ஷாப்ல கொஞ்சம் வேலையிருக்கு போயிட்டு வந்துர்றேன்” என்று ரேகா நாசுக்காக நழுவி போக.....

மான்சிக்கு திடீரென்று ஒரு பதட்டம் வந்து உடலில் ஒட்டிக்கொள்ள ரகுவை பார்ப்பதை தவிர்த்து திரும்பி நின்று போக்குவரத்தை மிகவும் கவனமாக பார்ப்பவள் போல பார்க்க..... சிறிதுநேரத்தில் அவளின் பிடரியில் சூடான மூச்சு காற்றுப்பட.... சட்டென மான்சியின் உடல் விரைத்துக்கொண்டது

“ இன்னும் எவ்வளவு நேரம் மான்சி நான் உன் பின்னாலே நிக்கனும்.... எனக்கு ஓகேதான் ஆனா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க மான்சி வா உள்ளே போகலாம்” என்று மெல்லிய குரலில் ரகு அழைக்க

அவனுடைய குரல் அவள் பிடரியில் பட்டு அவள் உடலை மேலும் சிலிர்க்க வைத்தது..... இப்போது உள்ளே போக திரும்பினால் நிச்சயம் அவன்மீது மோதவேண்டியிருக்கும்.... முன்னால் நகர்ந்தால் பிளாட்பாரத்தை விட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்..... அது அவனை அவமதிப்பது போலாகிவிடும் ..... என்ன செய்யலாம் என்று மான்சி யோசித்தபடி இருக்க

“ என்ன மான்சி தயக்கம் ரேகா இல்லாததால் நான் ஏதாவது இண்டீசன்டா பிகேவ் பண்ணுவேன்னு நெனைக்கறயா மான்சி “ என மறுபடியும் அவன் ரகசியகுரலில் கேட்டான்

மான்சிக்கு அந்த குரல் ரொம்ப சித்ரவதையாக இருந்தது.... இதுவரை அனுபவித்தறியாத உணர்வுகள் அவள் உடலிலும் மனதிலும் சடசடவென எழ..... அவசரமாக தன் கைகளை இறுக்கி மூடி..... கால்விரல்களை தரையில் அழுத்தி ஊன்றி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றாள்.... ச்சே இவன் ஏன் என் பின்னால் நின்றுகொண்டு பேசியே என்னை சிலிர்க்க வைக்கிறான்... என நினைத்து மெதுவாக பக்கவாட்டில் நகர்ந்து திரும்பி ஐஸ்கிரீம் கடைக்குள் போக

“ ம் அப்படியே திரும்பி என்மேல் சாய்வேன்னு பார்த்தேன் ம்ஹூம் ரகு உனக்கு அவ்வளவுதான்டா அதிர்ஸ்டம் “ என்று போலியாக சலித்தபடி ரகு பின்னால் வர.....

அவனின் பேச்சை கேட்ட மான்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது.... தன் வாயைப் பொத்திக்கொண்டு களுக்கென்று சிரித்துவிட்டாள்

“ ச்சே இதைக்கூட என்னைப்பார்த்து செய்யக்கூடாதா நீ சிரிச்சு நான் இதுவரை பார்த்ததேயில்லை மான்சி “ என்று ரகு ஏக்கம் நிறைந்த குரலில் கூற

மான்சிக்கு ஏக்கம் நிறைந்த அந்த குரல் மனதில் புகுந்து என்னவோ பண்ண சட்டென நின்றுவிட்டாள்

ரகுவுக்கு மான்சியின் மனநிலை புரிய “ மான்சி வழியிலேயே நிக்க வேனாம்.... அதோ அங்கே ஏழாம் நம்பர் டேபிள் ரிசர்வ் பண்ணிருக்கேன் வா போகலாம்” என்று கூறிவிட்டு அவன் முன்னால் போய் ஒரு சீட்டில் அமர மான்சி அவன் எதிர் சீட்டில் அமர்ந்தாள

அவன் கண்கள் மான்சியை தவிர வேறெங்கும் திரும்பவில்ல “ மான்சி என்னுடைய பலநாள் கனவு இன்னைக்குத்தான் நிறைவேறியிருக்கு..... இதுவரைக்கும் உன்னை நான் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை மான்சி.....உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மான்சி இன்னிக்கு என்ன நாள் தெரியுமா...........” என்று சொல்லிவிட்டு ரகு பாதியிலேயே நிறுத்திவிட்டு மான்சியின் முகத்தை ஆழமாக பார்க்க

மான்சிக்கு ஒன்றும் புரியவில்லை இன்னிக்கு என்ன நாள்.... இவன் பிறந்தநாளாய் இருந்தால் நிச்சயம் ரேகா சொல்லியிருப்பாள்.... வேறு என்வாயிருக்கும் என்று யோசித்துப் பார்த்து ஒன்றும் புரியாமல்...... என்ன நாள் என்று அவன் முகத்தை பார்த்து விழியசைவில் கேட்டாள்

“ ம்ஹூம் இப்படியெல்லாம் கண்ணசைவில் கேட்டால் சொல்லமாட்டேன்.... வாயைத்திறந்து கேட்டால்தான் சொல்வேன்” என்று அவளின் செப்பு இதழ்களை பார்த்தபடி ரகு சொல்ல

மான்சி சிறிது தயக்கத்திற்குப் பிறகு “ இன்னிக்கு என்ன நாள்” என்று சின்ன குரலில் கேட்க

“ ம் இரண்டு வருஷத்துக்கு முன்னே என்னோட அழகு தேவதையை நான் முதன்முதலாக சந்திச்ச அந்த பொன்னான நாள்.... அவள் கண்களால் என்னை கைதுசெய்த நாள்.... நான் என் இதயத்தை அவள் காலடியில் சமர்ப்பணம் செய்த நாள்... உனக்கு புரியுதா மான்சி” என்று அவள் கண்களை பார்த்துக்கொண்டே ரகு கேட்டான்

மான்சிக்கா புரியவில்லை அவள் இதயம் ஒருமுறை நின்று பிறகு துடித்தது.... அவனுடைய நேசத்தை அவன் வார்த்தைகளில் சொல்ல.... நான் ஏன் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி அவள் மனதில் பலமாக எழுந்தது.... அப்படியானால் எனது நேசம் பலமற்றதா...... இல்லையே தினமும் இவனைப் பார்க்க ஏங்கித்தவித்தேனே அதெல்லாம் பொய்யா...... என்று எண்ணமிட்டுக் கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்க்க

அவளின் கலங்கிய கண்களை பார்த்தும் பதட்டமான ரகு “ என்ன மான்சி உனக்கு நான் சொன்னது பிடிக்கலையா” என்று கேட்க

மான்சி அதில்லை என்பது போல தலையசைத்தாள்

பதட்டம் தனிந்தவனாக தன் நெஞ்சில் கைவைத்து நிம்மதியாக மூச்சுவிட்ட ரகு
“அப்ப வேறென்ன மான்சி” என ரகு மென்குரலில் கேட்டான்

“நான் இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கலையே ஏன்” என்று அவனிடமே மான்சி திருப்பி கேட்டாள்

அவள் கண்ணீரின் காரணத்தை அறிந்து மனம் ரெக்கைகட்டி பறக்க “ச்சீ இதுக்கு போயா கண்கலங்கின நான் என்னவோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன்.... மான்சி உனக்கு படிக்கவே நேரம் சரியாயிருக்கும் இதுல நாம சந்திச்சதை எப்படி நாள் தேதியெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியும்.... அதுவுமில்லாம நான்தானே முதலில் உன்னை பார்த்தேன் அதனால எனக்கு இன்னும் அந்த நாள் பசுமையா என் ஞாபகத்தில் இருக்கு.... சரி மான்சி இதையெல்லாம் விடு நான் இதைவிட முக்கியமான ஒருவிஷயத்தை பத்திதான் இப்போ பேசவந்தேன்” என்று நிறுத்திவிட்டு அவள் முகத்தை உற்று பார்க்க




No comments:

Post a Comment