Friday, February 6, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 34


thursday, 19 November 2009 9:00 PM Sanjeevini Restaurant, Saunders Beach, New Providence, The Bahamas வியாழன், நவம்பர் 19, 2009 இரவு 9:00 சஞ்ஜீவினி உணவகம், சாண்டர்ஸ் பீச், நியூ ப்ராவிடன்ஸ், தி பஹாமாஸ் முன்னிரவில் தொடங்கிய அந்த பார்ட்டியில் யாரும் இன்னமும் சாப்பாட்டைத் தொடவில்லை. சுடச் சுட வந்து கொண்டு இருந்த ப்ரான்ஸ், நண்டு மற்றும் மீன் வகை வருவல்களை கொறித்தபடி எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர். மனோகரி, "டேய், அந்தக் கருமத்தை சீக்கரம் முடிச்சீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டுப் போய் தூங்கலாம்" வந்தனா (அழகான தமிழில்), "ம்ம்ம் .. சொல்லுங்க அத்தை. குடிக்க ஆரம்பிச்சதில் இருந்து நாளைக்கு சஞ்சனாவுக்கு வளைகாப்பு சீமந்தம் வெச்சு இருக்கறதை சுத்தமா மறந்தாச்சு" சக்தி, "சஞ்சனா, இவளுக்கு தமிழில் ட்ரிங்க் பண்ணறதை இதை விட கொஞ்சம் நாசுக்கா எப்படி சொல்லறதுன்னு சொல்லித் தரியா?"

வந்தனா, "ஹல்லோ! ட்ரிங்க் அப்படின்னா குடின்னு அர்த்தம்" நித்தின், "இல்லை வந்தனா, தண்ணி அடிக்கறதுன்னு சொல்லு" சக்தி, "இவரு பெரிய தமிழ் புலவரு உதவிக்கு வந்துட்டாரு" அப்போதுதான் அவர்களுடன் வந்து அமர்ந்த சஞ்சனா, "பரவால்லை வன்ஸ், நாளைக்கு ஒன்பதரை மணிக்குத்தானே. இப்போ ரொம்ப லேட்டாகலே" ஜாஷ்வா, "ம்ம்ம் .. இது தான் ஒரு நல்ல ரெஸ்டாரண்டியருக்கு அழகு! சாப்பாட்டை விட லிக்கரில்தான் நிறைய சம்பாதிக்கலாம்ன்னு சொல்றா" மனோகரி, "எப்படி ஜாஷ்வா? சாப்பாடு நீங்களே சமைக்கறது. அதில் தானே லாபம் அதிகம்?" ஜாஷ்வா, "லாப விகிதம்ன்னு பார்த்தா சாப்பாட்டில்தான் அதிகம். ஆனா யாரும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட மாட்டாங்க. ஆனா ட்ரிங்க் பண்ணறது அப்படி இல்லை. நம் டேபிளையே உதாரணத்துக்கு எடுத்துக்குலாம். நித்தினுக்கு மூணுதான் லிமிட்ன்னு ஸ்மால் ஸ்மாலா குடிச்சுட்டு இருக்கான். ஆல்ரெடி அஞ்சாவது ஸ்மால் உள்ளே போயிட்டு இருக்கு. ஆனா எப்படியும் இன்னும் மூணு உள்ளே போகும். சக்திக்கு ரெண்டு லார்ஜுக்கு மேல் எவ்வளவு குடிச்சாலும் அதே நிதானத்தில்தான் இருப்பான். இப்போ மூணாவது லார்ஜில் இருக்கான். என்னோடதும் இது மூணாவது. இவ்வளவு நேரமும் ஸ்டார்ட்டர்ஸ் (Starters - சாப்பாட்டுக்கு முன், பொதுவாக மது பானங்கள் அல்லது சூப்புடன் சாப்பிடும் வறுவல் போன்ற பதார்த்தங்கள்) பாருங்க எவ்வளவு ஆர்டர் செஞ்சு இருக்கோம். இதுக்கு பிறகு எவ்வளவு சாப்பிடப் போறோம்? மொத்த லாபம்ன்னு பார்த்தா லிக்கரிலும் லிக்கரினால் உள்ளே போகும் ஸ்டார்டர்ஸ்களிலும்தான்" மனோகரியின் பார்வையால் சக்தியும் நித்தினும் நெளிவதை பொருட்படுத்தாமல் விளக்கிக் கொண்டு இருந்தான். தீபா, "உனக்கு இதுதான் கடைசி. போதும்" என்று கட்டளையிட நித்தின், "ஜாஷ், உதாரணம் சொல்றதுக்கு உனக்கு வேற டேபிள் கிடைக்கலையா?" வந்தனாவின் முறைப்புக்கு சக்தி இஞ்சி தின்ற குரங்கைப் போல் சிரிக்க அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் கன்னத்தை கிள்ளி அருகில் முகத்தைக் கொண்டு வந்த பிறகு அருகில் மனோகரி இருப்பதை உணர்ந்து முகம் சிவந்து நகர்ந்தாள். சஞ்சனா, "சித்தி, இந்த மாதிரி ஞயான் கொடுக்கறதில் எங்க வீட்டுக்காரர் பெரிய ஆள். ஆனா பர்சேஸுக்கு மட்டும் இவரை அனுப்பக் கூடாது. ஃபிஷ் மார்க்கெட்டில் இருக்கும் மீனவர்களுக்கு எல்லாம் இவர்தான் பாரி வள்ளல். இவன் பொண்ணு படிப்புக்கு, அவன் பாட்டி வைத்தியத்துக்குன்னு வாரி வாரி வழங்கிட்டு வருவார். அவனுக எல்லாம் சாயங்காலம் பாரில் குடிச்சுட்டு சொல்லி சிரிச்சுட்டு இருப்பானுக" ஜாஷ், "Hey I am not that daft (நான் ஒண்ணும் அந்த அளவுக்கு பேக்கு இல்லை)" தீபா, "Yes, only a little daft (ஆமாம், கொஞ்சம்தான் பேக்கு)" ஜாஷ்வா, "Come on .. Deepa .. you could do better than that!" தீபா, "சாரி, ஜீஜாஜி என் அக்காகிட்ட இருந்து தொத்திகிச்சு" மறுபடி கடலலைகளிடம் போட்டியிடும் அளவுக்கு சிரிப்பலைகள் அந்த ரம்மியமான இரவை நிறப்பின. மனோகரி, "அப்பாடா, ஒரு வழியா எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. நேத்து கௌரியும் அதையே சொல்லிட்டு இருந்தா" வந்தனா, "இல்லை அத்தை. உங்க மகன் இன்னும் எனக்கு தான் செஞ்ச காரியங்கள் எல்லாத்தையும் முழுசா சொல்லலை. ஜாஷ்வாவும் இருக்கும்போது சொல்றேன்னு தள்ளிப் போட்டுட்டு இருக்கார்" தீபா, "எஸ் ஆண்டி. நானும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டு இருக்கேன். நித்தின் தள்ளிப் போட்டுட்டே இருக்கான்" மனோகரி, "சரி, இப்ப சொல்லுங்கப்பா என்னதான் செஞ்சீங்க?" ஜாஷ்வா சுருக்கமாக கொலம்பியன் ட்ரக் கார்ட்டலுக்கு பணப் பரிமாற்றம் செய்ததில் ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் செய்தது வரை சொல்லி முடித்தான். மனோகரி, "சக்தி, ஏண்டா உனக்கு இந்த வேலை? எந்த கெட்ட காரியத்திலும் ஈடு படலைன்னுதானே எங்கிட்ட சொன்னே? இனி நீ என்ன சொன்னாலும் நான் எப்படி நம்பறது?" வந்தனாவின் முகமும் இறுகி இருந்தது. சஞ்சனா, "ஆண்டி, வந்தனா, இவங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்னென்னவோ செஞ்சு இருக்க முடியும். இவங்க போதைப் பொருள் கடத்தறதுக்கோ விக்கறதுக்கோ துணை போகலை. வித்து வந்த காசை இவங்க ட்ரான்ஸ்ஃபர் செய்யலைன்னா வேற யாராவுது வேறு வழியில் செஞ்சு இருப்பாங்க. பணம் வெளியே போகாம தடுக்கறதுனால போதைப் பொருள் உள்ளே வருவதையோ அல்லது அதன் விற்பனையையோ அவங்களால தடுக்க முடியாது. இதைத்தான் எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ஸும் சொன்னார். ஆனா அந்த தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினதை தவிர்த்து இருக்கலாம். ட்ரக் கார்டல் காரங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கோம்ன்னு நினைச்சுட்டு ஒத்துகிட்டாங்க. சுட்டுப் போட்டாலும் இவங்களால எந்த பிஸினஸ்ஸும் செய்ய முடியாது" தீபா, "Come on வன்ஸ், எங்க அப்பாகிட்டயோ சுந்தர் அங்கிள்கிட்டயோ பேசிப் பாரு. உலகத்தில் அவனவன் என்னென்ன அட்டூழியம் எல்லாம் செய்யறாங்கன்னு தெரியும். இதுக்குப் போய் சக்தியை இப்படி கோவிச்சுக்கறீங்களே?" சக்தி (கண் கலங்க கர கரத்த குரலில்), "அம்மா, அமெரிக்காவிலேயே இருக்கும் கஸ்டமர்ஸ் ஆர்டர் செஞ்சு இருந்தும் ஒருவேளை கேன்ஸர் வரக்கூடும்ன்னு ஏஃஜோ டை உபயோகிச்ச பொருள்களை உள்ளே வரவிடாம அமெரிக்க அரசாங்கமும் தடுத்தது. அப்போ அந்த பொருளை தயாரிச்ச அத்தனை ஏழை தொழிலாளிகளைப் பத்தியோ அதை எல்லாம் வாங்கி நியாயமான லாபம் வெச்சு ஏற்றுமதி செஞ்ச அப்பா மாதிரி வியாபாரிகளைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுதா? அவங்க செஞ்சது நியாயம்ன்னா நான் செஞ்சதும் நியாயம்தான்" மனோகரி, வந்தனா இருவரின் கண்களும் கலங்கின. மனோகரி, "சாரிடா கண்ணா. உங்க அப்பா போனது உன்னை இந்த அளவுக்கு பாதிச்சுதுன்னு தெரியலை. சரி, இனி நீ இந்த மாதிரி காரியம் எதுலயும் ஈடு பட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு" சக்தி, "அம்மா, இனிமேல் கெட்டவங்களுக்கு உதவறமாதிரி எந்த காரியத்திலும் ஈடு படமாட்டேன்னு சத்தியம் பண்ணறேன். எந்த கெட்ட செயலையும் நான் செய்ய மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, எல்லா விஷயத்திலும் அரசாங்கம் விதிச்ச சட்டப் படிதான் நடப்பேன்னு என்னால சத்தியம் பண்ண முடியாது" வந்தனா, "ஏன் சக்தி?" சக்தி, "அரசாங்கம் எல்லா விஷயத்திலும் சரியா இருந்தா எதுக்கு வந்தனா முரளி சாரோட அந்த நெட்வொர்க்? கடைசியில் எங்களை பாதுகாக்க அந்த நெட்வொர்க்கைத் தானே நம்பினே? அரசாங்கத்தை நம்பலை இல்லையா?"

வந்தனா, "அப்படின்னா இப்ப நீ இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கம் ரெண்டுக்கும் உங்க மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்க கொடுத்து இருக்கும் மென்பொருள்?" சக்தி, "அரசாங்கத்துக்கு கொடுத்து இருக்கும் மென்பொருள் நாங்க எதை எல்லாம் அவங்க கண்காணிக்கலாம்ன்னு நினைக்கறோமோ அதை மட்டும் கண்காணிக்கும்" வந்தனா, "அப்படின்னா நீ தப்பா எதுவும் செய்யலைன்னு நான் எப்படி நம்பறது?" சக்தி, "உண்மையா மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் எல்லாத்தையும் கண்காணிக்கும் மென்பொருளின் காப்பி உனக்கு நான் கொடுக்கறேன். இல்லைன்னா நீ வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வா. நான் உனக்கு மாங்க்ஸ் பாட் நெட்டின் ஸோர்ஸ் கோடையே கொடுக்கறேன். ஒவ்வொண்ணும் சொல்லித்தறேன்" தன் கணவன் தன் மீது வைத்து இருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும் வந்தனா உறுகினாள். வந்தனா, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். மறுபடி இந்த மாதிரி சிக்கலில் மாட்டாம இருக்கணும்" என்று தொடங்கியவள் "ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் நடந்த மாதிரி உனக்கு எதாவுது ஆச்சுன்னா என்னால அதை தாங்கிக்க முடியாது" என்று தழுதழுத்த குரலில் முடித்தாள். சஞ்சனா, "கவலையே படாதே. எல்லாம் இந்த ஆளினால் வந்த வினை. நான் இவருக்கு கடிவாளம் போட்டு வெச்சு இருக்கேன். என்னால இனி குழந்தைங்களை விட்டுட்டு இவர் பின்னால் துப்பாக்கி தூக்கி குண்டடி பட முடியாது" நித்தின், "But, நீங்க ரெண்டு பேரும் பிழைச்சது நிஜமாவே ஒரு அதிசயம்தான் சஞ்சனா" சஞ்சனா, "இவர் பிழைச்சது மிரக்கிள்ன்னு சொல்லு" வந்தனா, "ஏன் உனக்கும் தானே அடி பட்டுது?" சஞ்சனா, "அந்த பொம்பளை சுடத் தெரியாம சுட்டா. அந்த குண்டு காலர் போனுக்கும் நெஞ்சுக்கூட்டில் முதல் எலும்புக்கும் நடுவில் போய் மாட்டி கிட்டு நின்னுது. ஒரு அபாயமும் இல்லைன்னு எனக்கு அப்பவே தெரியும்"மனோகரி, "அங்கே என்னதான் நடந்துது சஞ்சனா?" சஞ்சனா, "அன்னைக்கு காலையில் எனக்கு தெரிஞ்ச எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ன்னு ஒருத்தர், அவருக்கு ஃபோன் பண்ணினேன். தீவிரவாத தடுப்புப் பிரிவில் இருப்பவர். அவர் எடுக்கலை. அந்த மீட்டிங்க்கின் போது அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. அந்த சமயத்தில்தான் தீவிரவாதிகள்தான் அந்த மீட்டிங்க்குக்கு வரச்சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுது. நான் ஆன்ஸர் பட்டனை அமுக்கிட்டு அங்கே நடப்பதை அவர் கேட்கற மாதிரி ஃபோனை பாக்கெட்டில் வெச்சுகிட்டேன். முதலில் இவரை அந்த மக்ஸூத் சுட்டான். அண்ணனுக்கு அடிபட்ட மாதிரி இவருக்கும் நுரையீரலில் குண்டு பாஞ்சுது. அதுவும் இடதுபக்கம். ஆனா அதிர்ஷவசமா இருதயத்தை உறசிட்டு போயிடுச்சு. நான் மத்தவங்களை சுட்டதுக்கு பிறகே சான்ட்ரா கைல துப்பாக்கியை பார்த்தேன். நானும் அவளும் ஒரே சமயத்தில் சுட்டோம். அவ செத்து விழுந்தா. எனக்கு குண்டடி பட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. எப்படியும் சைமண்ட் வில்லியர்ஸ்ஸுக்கு இது எல்லாம் கேட்டு இருக்கும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்ன்னு தெரியும். அந்த ஐ.எஸ்.ஐக்காரன் அப்பத்தான் வேனுக்கு உள்ளே இருந்து கன்னை எடுத்தான். நான் செத்து விழற மாதிரி விழுந்தேன்" தீபா, "அவன் சந்தேகப் படலையா?" சஞ்சனா, "நானும் கொஞ்ச நாள் ஒரு போராளியா இருந்ததில் கத்து கிட்டது. ஒரு துப்பாக்கி சண்டையில் யாரும் கீழே விழுந்தவங்களை சுட்டு குண்டை வேஸ்ட் பண்ண மாட்டாங்க" வந்தனா, "ஓ, யா! சே, இதை போலீஸ் ட்ரெயினிங்கில் சொல்லிக் கொடுகக்லை!!" மறுபடி சிரிப்பலை ... சஞ்சன தொடர்ந்தாள், "மக்ஸூத்துக்கும் என்னை மாதிரி அடி பெருசா படலை. ஆனா நிஜமாவே மயக்கமாகி விழுந்து இருந்தான். அவனை மட்டும் அள்ளிப் போட்டுட்டு அந்த ஐ.எஸ்.ஐக்காரன் போனான். கொஞ்ச நேரத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி சைமண்ட் வில்லியர்ஸ் வந்தார். நான் அவரிடம் ஒரு டீல் போட்டேன். அவரும் அதுக்கு ஒத்துகிட்டார்" சக்தி, "டீலா? என்ன டீல்?" சஞ்சனா, "அந்த தீவிரவாதிகளுக்கு யார் யார் மூலம் எங்கே இருந்தெல்லாம் பணம் வந்ததுங்கற டீட்டெயில்ஸ் எல்லாம் கொடுக்கறேன். அதுக்கு பதிலா எனக்கும் ஜாஷவாவுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்ன்னு கேட்டேன். அவர் விட்னஸ் ப்ரொடெக்க்ஷன் ப்ரோக்ராம் மூலம் பாதுகாப்பு கொடுப்பதா ஒத்துகிட்டார். உடனெ ஜாஷ்வாவையும் என்னையும் அவருக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பினார். எங்க மேல் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துகிட்டார். மாங்க்ஸ் பாட் நெட்டில் இவருக்கும் பங்கு இருக்குன்னு எஃப்.பி.ஐயில் இருக்கும் மத்த அதிகாரிகள் வந்து கேட்டப்ப ஜாஷ்வா தான் அதை எழுதலை. சக்தியும் நித்தினும்தான் அதை எழுதினாங்க. தான் அவங்களுக்கு ஒரு ஃப்ரெண்ட், ஈமெயில் விளம்பரம் கொடுக்க மட்டும் உதவறேன்னு சொன்னார். முதலில் நம்பலைன்னாலும் சைமண்ட் வில்லியர்ஸ் தன் இன்ஃப்ளூயன்ஸை உபயோகிச்சு எங்களை ரிலீஸ் பண்ணினார். இவர் ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும். நாங்க இங்கே வந்தோம். கரெக்டா அதே சமயத்தில் அண்ணனுக்கும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இருந்தது. அமெரிக்காவில் இருந்து நாங்க அண்டர்க்ரவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பின பணம் பத்தின விவரங்கள் அண்ணன் கிட்ட கொடுத்து வெச்சு இருந்தோம். அண்ணன் அனுப்பின உடனே இந்த கட்டிடத்துக்கு ஃபுல் செட்டில்மெண்ட் பண்ணிட்டு மத்த வேலையில் இறங்கினோம்" மனோகரி, "சரி, இங்கே உனக்கு நல்ல கைனகாலஜிஸ்ட் இருக்காங்களா?" சஞ்சனா, "ஓ, ஒரு இண்டியன் டாக்டர் கப்பிள் இருக்காங்க. நல்லா பாத்துக்கறாங்க" தீபா, "ஹேய், சஞ்சனா, ஆணா பெண்ணான்னு தெரிஞ்சுட்டீங்களா?" சஞ்சனா, "நானும் இவரும் கடைசி வரைக்கும் தெரியாமலே இருக்கட்டும்ன்னுதான் இருந்தோம். ஆனா எனக்கு அடிபட்டதால் டாக்டர்ஸ் ஆறு மாசம் வரைக்கும் ஒவ்வொரு மாசமும் அல்ட்ரா ஸ்கேன் செயய்ச் சொன்னாங்க. போன தடவை ஸ்கேன் எடுக்கப் போனப்போ. எங்களுக்கு ஆல்ரெடி தெரியுன்னு நினைச்சுட்டு இங்கே இருக்கும் டாக்டரம்மா 'உன் பையனும் பொண்ணும் நல்லா இருக்காஙக' அப்படின்னு சொன்னா" நித்தின், "வாவ், சோ ஜூனியர் சஞ்சனா, ஜூனியர் ஜாஷ்வா ரெண்டு பேருமா?" ஜாஷ்வா, "எஸ்

No comments:

Post a Comment