Friday, February 13, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 9


''சரி மச்சான் நான் பார்த்துக்கிறேன் எப்படியிருந்தாலும் நீ வாரத்துக்கு நாலுவாட்டி பொண்டாட்டியை பார்க்க வரப்போற அப்புறம் ஏன்டா இவ்வளவு கவலை எல்லா பிரச்சினையும் சீக்கிரமா சால்வாயிடும் நீ தைரியமா இரு ''

என்று வீட்டு மருமகனாக மச்சானை கிண்டல் செய்தவன் சிவாவைப் பார்த்து ''சரி கிளம்பு சிவா இந்த கல்யாணத்தை சாக்குவச்சு மாமியார் வீட்டில் ஒருவாரம் ஓசிச் சாப்பாடு சாப்பிடலாம்னு நினைச்சேன் அது முடியாது போல என்னையும் உங்களோட சேர்த்து விரட்டுறான் சத்யன் ம் எல்லாம் என் நேரம்''என்று போலியாக சலித்து அனைவரையும் இயல்புக்குக் கொண்டுவந்தான் கார்த்திக் ஆனால் சத்யனின் பெற்றோருக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டுவந்த மருமகள் வந்த அன்றே வாழாமல் போவது பெரிய துக்கமாக இருந்தது

ஆனாலும் சத்யனின் வார்த்தைகளுக்காக பொருத்துக்கொண்டார்கள் குழந்தை மான்சி கிளம்பும் போது அழுது பிரச்சனை செய்யக்கூடும் என்று நினைத்த சத்யன் குழந்தையை வேலைக்காரனிடம் கொடுத்து தோட்டத்தில் விளையாட்டு காட்டச்சொன்னான் அனைவரும் காரில் ஏறி அமர மான்சி மட்டும் தயங்கிநின்று சத்யனைப் பார்த்தாள் அவள் கண்களில் இருந்தது ஏக்கமா இல்லை பிரிவுத்துயரா என்று தெரியவில்லை உடனே அவளருகே வந்த சத்யன் அவள் தோள்பற்றி ''என்னம்மா எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே எனக்கு எந்த வருத்தமும் இல்லை நீ என்னைக்காவது மனசு மாறி வருவேன்னு நம்பிக்கை இருக்கு அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் மான்சி ''என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து உடலால் மென்மையாகவும் உள்ளத்தால் வன்மையாகவும் அணைத்துக்கொண்டான்




காரில் ஏறியமர்ந்த மான்சிக்கு ஏனோ தன் உயிரையே விட்டுச்செல்வது போல ஒரு உணர்வு ஏற்ப்பட்டது கார் கிளம்பி ஊட்டி செல்லும் சாலையில் விரைய மான்சி அன்று முழுவதும் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள் உடலும் உள்ளமும் ஒருங்கே சிலிர்த்தது சத்யன் தொட்ட இடத்திலெல்லாம் யாரோ மென்மையாக மயிலிறகால் வருடுவது போல் இருந்தது அடிவயிற்றில் சில்லென்று சிலிர்க்க அந்த சிலிர்ப்பு அவள் தொடையிடுக்கில் ஒரு குறுகுறுப்பை ஏற்ப்படுத்த அவசரமாக தொடையை இடுக்கிக்கொண்டாள்

 ஒருவேளை அன்று கல்லூரியில் அவன் காரில் ஏறச்சொல்லி அழைத்தபோதே அவனுடன் போயிருந்தால் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்குமோ என்று நேசம் கொண்ட மனது ஆயிரம் காரணங்களை கண்டுபிடிக்க முயற்ச்சித்தது முன்பு அவன்மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை இப்போது புதிதாக வந்த காதல் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வென்றுகொண்டிருந்தது புதிதாய் காதல்கொண்ட மனது முதன்முதலாக அவன்மீது கவிதை சொல்லியது

 ''முட்டை ஓட்டிற்குள் ...... ''
முட்டி மோதி வெளிவரத் துடிக்கும்.....
''சிறு பறவைக் குஞ்சாய் ......
''என் இதய கூட்டிற்குள்...... ''
காதல் தவிக்கிறது ..... ''
என்னுள் உறங்கும் நேசநெருப்பு.....
 ''உன் கைப்பட்டு அனையத் துடிக்கிறது
''என் பனிக்காலப் பூங்காற்றே.....
''எனக்கு நீ வேண்டும்....!

ஊட்டிக்கு சென்ற மான்சிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கடந்தது இப்போதெல்லாம் நிறையவே மாறிவிட்டாள் பகலிலேயே கவிழ்ந்து படுத்து தலையனையில் முகம் புதைத்து தூங்கினாள் இரவில் விழித்துக்கொன்டே கனவுகண்டாள் அதிக நேரத்தை தோட்டத்திலேயே கழித்தாள் அங்கே பூக்கும் ஒவ்வொரு பூக்களும் தனக்காகவே பூக்கிறது என்று பூரித்தாள் எங்காவது சிறுகுழந்தையை பார்த்தாள் தூக்கிவைத்துக் கொண்டு முத்தம் கொடுத்து குழந்தையின் கன்னங்களை எச்சில் படுத்தினாள்

சத்யன் வீட்டிலிருந்து கொடுத்தனுப்பிய தனது திருமணப் போட்டோவில் சத்யன் படம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் மல்லாந்து படுத்து மாராப்பின் மறைவில் தன் மார்பில் வைத்துகொண்டாள் அது அந்த ஊட்டியின் குளிருக்கு இதமாக இருக்கும் திடீரென அந்த படத்தில் இருக்கும் சத்யன் தன் மார்பை வருவது போல் இருக்கும் அப்போது ''ஏய் ச்சீ''என்று வாய்விட்டு சொல்லி சத்யன் படத்தை எடுத்து தலையனையின் கீழ் வைத்து கவிழ்ந்து படுத்துக்கொள்வாள் ஏனோ தெரியவில்லை குழந்தையின் நினைவைவிட சத்யனின் நினைவுதான் அவளுக்கு அதிகமாக இருந்தது காரணம் எப்படிஇருந்தாலும் சத்யன் குழந்தையை தன் உயிருக்கு மேலாக பார்த்துக்கொள்வான் என்று என்னமாக இருக்கலாம்

 ஆனால் அவள் மனதில் எப்போதாவது வரும் பழைய நினைவுகளும் குளிக்கும் நேரங்களில் தன் மார்பில் இருந்த காய்த்து போன சத்யனின் பல் தடமும் தலைவாரி பூச்சூடும் போது தெரியும் வெட்டப்பட்ட கூந்தலும் அவளுக்கு நடந்த பயங்கரத்தையும் கொடுமையையும் பரைசாற்றும் அப்போது ரொம்பவே பயந்து சோர்ந்து தவித்து போவாள் மான்சி தனக்கு மட்டும் ஏன் ஒருமுறையான் வாழ்கை அமையவில்லை என்று வேதனைப்படுவாள் அதுமாதிரியான சமயங்களில் சத்யனுடனான குடும்ப வாழ்க்கை ஒரு பெரிய கேள்விகுறியாக எழுந்து நிற்க்கும்

 இப்படியே கற்பனை செய்தும் யோசித்தும் பயந்தும்மே பத்து நாட்க்கள் ஓடிவிட்டது இந்த பத்து நாட்களில் சத்யன் போனில் நிறைய பேசினான் குறும்புத்தனமாக பேசி மான்சியை ஏங்க வைத்தான் ஆனால் நேரில் வரவில்லை அவன் மான்சி தன்னை நேரில் காணமுடியாமல் ஏங்கி தவிக்க வேண்டும் என்று நினைத்தான்சத்யன் நினைத்தது போல் மான்சி அவனைத் தேடி தவிக்கவில்லை ஆனால் ஏன் அவன் வரவில்லை என்றுமட்டும் யோசித்தாள் தனக்கு இருக்கும் மனநிலையில் கோவை சென்று அவனுடன் குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தாள் அப்படி கோவை போனால் சத்யன் மீது இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த அன்பும் நேசமும் அவன் தனக்கு செயத கொடுமைகளை நினைத்தே பொய்த்து போகும் என்று உறுதியாக என்னினாள்

அதனால் அவனை பார்க்காமல் அவனுடன் இணைசேரமலும் இப்படியே இருந்தால் அவன்மீது புதிதாக வந்திருக்கும் இந்த அன்பும் நேசமும் அப்படியே மாறாதிருக்கும் என்று தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டாள் மான்சி ஒருநாள் கோவையில் இருந்து சத்யன் வீட்டு கார் அவள் வீட்டு வாசலில் வந்து நின்றது மான்சி சென்று பார்பதற்கு முன் அவள் மனம் ஓடிச்சென்று காரின் அருகே நின்றது வந்தது சத்யன் இல்லை அவன் பெற்றோர்கள் காரிலிருந்து இறங்கிய அவர்களுக்கு மான்சியின் முகத்தில் இருந்த ஆர்வம் சந்தோஷமத்தை கொடுத்தது வீட்டுக்குள்ளே வந்த சத்யனின் பெற்றோர்கள் அனைவரிடமும் சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு மான்சியின் அம்மா வேதாவிடம் ''உங்களிடம் பேசத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல வேதாவும் ஆர்வத்துடன் சொல்லுங்க சம்மந்தி என்றாள்

 கண்ணன் தான் பேச்சை ஆரம்பித்தார்''உனக்கு நம்ம நிர்மலாவை தெரியுமில்லம்மா எங்க டிரஸ்டில் வேலை செய்ற கேசவன்னோட பேத்திதான் நிர்மலா ரொம்ப நல்ல பொண்ணு நம்ம சிவாவும் நிர்மலாவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க இது உனக்கு ஏற்க்கனவே தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் ''என்றவர் நிறுத்தி வேதாவை பார்க்க அவள் உடனே ''ஆமாண்ணா நம்ம மான்சி கல்யாணத்துல நானும் பார்த்திருக்கேன் ரொம்ப நல்ல பொண்ணாத்தான் தெரியுது சிவாவுக்கும் வயசு இருபத்திஒன்பது ஆகுது சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிர்றது நல்லது நீங்கதான் அதுக்கு ஏற்பாடு பண்ணனும்''என்று வேதம் கண்ணனிடம் கேட்க அவருக்கு வந்த வேலையில் முக்கால்வாசி முடிந்துவிட்டது போல நிம்மதியாக இருந்தது

 ''அதுக்காகத்தானம்மா நாங்களே வந்தோம் நான் நேத்து ஆசிரமம் போய் கேசவனை பார்த்து இது விஷயமாக பேசினேன் அவரும் என்னோட இஷ்டப்படி பார்த்து முடிக்கச்சொல்லியிருக்கார் நீங்க எல்லாரும் ஒருநல்லநாள் பார்த்து கோவை வந்து நிர்மலாவை முறைப்படி பார்த்து பொண்ணு கேட்டுட்டீங்கன்னா அதன்பிறகு மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குவோம் நீ என்னம்மா சொல்ற''என்று அவர் கேட்க ''நான் என்னண்ணா சொல்றது நீங்களே ஒருநாள் பார்த்து சொல்லுங்க அன்னிக்கே நாங்க வந்து பார்க்கிறோம்''என்றவள் திரும்பி சிவாவைப் பார்த்து ''நீ என்ன சிவா சொல்ற ''என்று மகனை கேட்டாள்

 சிவா என்ன சொல்வான் அவனும் நிர்மலாவும் தானே மறைமுகமாக இந்த ஏற்பாடுகளை செய்தது தனது தங்கை சத்யனுடன் சேர்ந்து வாழவதற்காக நிர்மலாவும் அவனும் இது எப்பவோ எடுத்த முடிவு சிவா வாயெல்லாம் பல்லாக ''ம் எல்லாம் பெரியவங்க நீங்கல்லாம் பார்த்து எது செய்தாலும் எனக்கு ஓகே ''என்றான் கண்ணன் சிரித்துக்கொண்டே ''நாங்க பார்த்து எது செய்தாலும் ஓகே ன்னா அப்ப கல்யாணத்தை ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு வச்சுக்கலாம்ன்னு சொனனா உனக்கு ஓகேயா''என்று சிவாவை கிண்டல் செய்ய அவன் டன் கணக்கில் அசடு வழிந்தான் அதன்பிறகு ஒருநல்ல நாள் பார்த்து அனைவரும் கோவைக்கு நிர்மலாவை பெண்பார்க்க கிளம்ப மான்சி மட்டும் பிடிவாதமாக வரமறுத்தாள்

அங்கே வந்தால் தன்மனம் சத்யனிடம் சரணாகதியடைந்து விடும் என்று மனதுக்குள் பயந்துதான் வரமறுத்தாள் பிறகு வேறு வழியில்லாமல் கார்த்திக் சுமித்ரா என அனைவரும் கிளம்பிச் சென்றார்கள் அங்கே ஏற்க்கனவே சத்யன் குடும்பத்தினர் தயாராக இருக்க ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஆசிரமத்துக்கு போனார்கள் சத்யனுக்கு மட்டும் மான்சி வராதது ஏமாற்றமாக இருந்தாலும் இதை அவன் எதிர்ப்பார்த்தே இருந்தான் அவள் தன்னை மனதில் வரித்துக்கொண்டது சதயனுக்கு தெரியும் ஆனால் அதை ஒத்துக்கொள்ளத்தான் அவளுக்கு மனமில்லை என்று நினைத்தான்

என்று அவள் இவனை ஒருமையில் அழைத்தது மாறி பன்மையில் அழைக்க ஆரம்பித்தாளோ அப்போதே சத்யன் மான்சி தன்னை நேசிக்க ஆரம்பித்துவிடுவாள் என்று உறுதியாக நம்பினான் காலம் அவள் மனப்புண்களை ஆற்றி தன்னை அவளுடன் சேர்க்கும் நாள் வெகுதூரமில்லை என்று நினைத்தான் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அனைவரும் அமர்ந்து சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து நிர்மலாவை அழைத்து வந்து சபையில் நிறுத்தி அனைவரும் அவளது சம்மதத்தை கேட்டனர் நிர்மலா சிவாவின் முகத்தையும் பிறகு சத்யனின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு

''நான் சிவாவை மனசார விரும்பறேன் எனக்கு அவங்க குடும்பத்தில் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் அதனால எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் ஆனால் ஒரு நாத்தனார் வாழாவெட்டியா இருக்கிற வீட்டில் நான் எப்படி போய் சந்தோஷமாக வாழமுடியும் அதனால் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே மான்சி சத்யன் சார் வீட்டுக்கு வந்தால் மட்டுமே இந்த கல்யாணம் நடக்கும் என் முடிவில் எப்பவுமே எந்த மாற்றமும் இருக்காது நான் ஏதாவது தவறா பேசியிருந்தால் நீங்க எல்லோரும் என்னை மன்னிக்கனும்''என்று நிர்மலா நிமிர்ந்து நின்று தீர்மானமாக சொன்னாள் சத்யனுக்கே இப்போதுதான் அவள் யோசனை புரிய விழிகளில் நன்றியோடு ஒரு தாயை மகன் பார்ப்பது போல பார்த்தான்

 நிர்மலா கண்ணசைத்து சத்யனை எதுவும் பேசவேண்டாம் அமைதியாக இருக்கும்படி சொல்ல சத்யன் சரி என்று தலையசைத்தான் அனைவருக்கும் நிர்மலா சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது கண்ணன் சிவாவைப் பார்த்து ''என்ன சிவா நிர்மலா இப்படி சொல்றா இதைப்பற்றி நீ என்னப்பா சொல்றே ''என்று கேட்க சிவா இதுவிஷயமாக ஏற்கனவே முடிவு செய்திருந்ததால் பட்டென்று உடனே பதில் சொன்னான்

''நான் என்ன சொல்ல முடியும் இது நிர்மலாவோட முடிவு இதுல எந்த மாற்றமும் இல்லைன்னு அவ சொன்னபிறகு நாம இங்கே இருக்கிறது சரியில்லை நாம கிளம்பறதுதான் நல்லது''என்று எழுந்து கொண்டான் நிர்மலாவை பெண்பார்க்க சென்றது வெற்றியில் முடிந்ததா இல்லை தோல்வியில் முடிந்ததா என்று புரியாமலேயே அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர் மான்சி அவர்களின் வரவுக்காக வீட்டில் காத்திருந்தாள் அவளுக்கு நிர்மலாவை ரொம்ப பிடித்துவிட்டது எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடப்பது அனைவருக்கும் பிடித்தமான அவளது குணம் சிவாவுக்கும் அவளுக்கும் இருக்கும் மன ஒற்றுமை பொருத்தம் என இப்படி எல்லா சிறப்புகளும் நிறைந்த அவள் அண்ணியாக வருவதை தன் குடும்பம் செய்த பாக்கியமாகக்கருதினாள்

 தனக்கு ஒரு சகோதரியை போல தோள்கொடுத்த நிர்மலாவுக்கும் சிவாவுக்கும் சீக்கிரமே திருமணம் முடிந்து அவள் தன் வீட்டுக்கு எப்போது வருவாள் என்று ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தாள் மான்சி வெளியே கார் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த மான்சி தனது தாயாரின் சோகமான முகத்தையும் சிவாவின் கவலையான முகத்தையும் தான் முதலில் பார்த்தாள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை காருக்குள்லேயே உட்கார்ந்திருந்த சுமித்ராவைப் பார்த்து

''என்ன அண்ணி ஏன் எல்லாரும் டல்லா இருக்கீங்க போன வேலை என்னாச்சு''என்று படபடவென கேட்க சுமித்ரா அவளை கையசைத்து தடுத்து''மான்சி நீ ஈவினிங் சும்மா இருந்தா சிவாக்கூட எஸ்டேட்க்கு வா அங்கே பேசிக்கலாம் இப்போ அம்மாகிட்ட எதுவும் கேட்காதே அவங்க ரொம்ப மனம் நொந்து போயிருக்காங்க நாங்க கிளம்பறோம் மான்சி ''என்று சுமித்ரா சொல்ல உடனே கார் கிளம்பியது மான்சிக்கு சுமித்ரா சொன்னது முதலில் ஒன்றுமே புரியவில்லை சிவா நிர்மலா திருமணத்தில் எந்த வித எதிர்ப்போ இடையூறோ கிடையாது இது நன்றாகவே மான்சி தெரியும் அப்படியிருக்க ஏன் எல்லாரும் ரொம்ப சோகமாக இருக்காங்க என்று மனம் குழம்பியவள் சரி எதுவாக இருந்தாலும் இன்றுமாலை சுமித்ரா வீட்டுக்கு போனால் தெரிந்துவிடப் போகிறது அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்று நினைத்த மான்சி மாலைச்சூரியனின் மறைவுக்காக காத்திருந்தாள்

அன்று மாலை மான்சி சிவாவிடம் தன்னை சுமித்ராவின் எஸ்டேட் பங்களாவுக்கு அழைத்து போகும்படி சிவா ''எதற்க்கு மான்சி'' எனறான் ''நிர்மலாவை பொண்ணு பார்த்துட்டு வந்தீங்கள்ள அண்ணா அது விஷயமா ஏதோ பேசனும்னு வரச்சொன்னாங்க ''என்று மான்சி கூறினாள் ''ம் அதுக்காக அங்கே ஏன் போகனும் அதை பத்தி நானே சொல்றேன் என்றவன் மான்சிக்கு முதுகு காட்டி திரும்பி நின்று ''அவ அந்த நிர்மலாவுக்கு ரொம்ப திமிரு மான்சி நம்மை எல்லாரையும் அவளுக்கு பிடிச்சிருக்காம் ஆனால் என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா''என்று குரலில் அளவுகடந்த சோகத்தை வரவழைத்து கொண்டு சிவா சொன்னான்

 மான்சி உச்சபட்ச அதிர்ச்சியில் ''என்னண்ணா சொல்ற நிர்மலாவா இந்தமாதிரி சொன்னா ஏன் எதுனால அப்படி சொன்னா''என்று பின்புறமாக அவன் தோளில் கைவைத்து கேட்க ''அது ஏன்ம்மா உனக்கு விட்டுத்தள்ளு என்னோட தலையெழுத்து எப்படியோ அதன்படி நடக்கட்டும் ''என்று விரக்தியான குரலில் சிவா கூற ''அண்ணா மொதல்ல நீ திரும்பி என்னை பார்த்து பேசு''என்ற மான்சி அவன் தோளைப் பிடித்து தன்பக்கமாக திருப்பி ''இப்ப சொல்லு உன்னை கல்யாணம் பண்ண நிர்மலாவுக்கு என்ன கஷ்டமாம் ம் சொல்லுண்ணா ''என்று மானசி அவன் தோள் பற்றி உலுக்கி கேட்டாள்

 மான்சிக்கு இது பெரிய அதிர்ச்சிதான் அவள் இந்த மூன்று மாசமாய் சிவாவையும் நிர்மலாவையும் நன்றாக கவனித்து இருக்கிறாள் இருவரின் அன்யோன்யமும் பார்வை பரிமாற்றங்களும் கண்களில் தெரியும் ஏக்கங்களும் மான்சிக்கு நன்றாக தெரியும் அப்படியிருக்க நிர்மலா ஏன் திடீரென்று இப்படி மாத்தி பேசுகிறாள் என்று மான்சிக்கு குழப்பமாக இருந்தது பதில் சொல் அண்ணா என்பது போல் சிவாவை பார்த்தாள் சிவா சிறிதுநேரம் தயங்கி பிறகு ''நாத்தனார் வாழாவெட்டியாக இருக்கிற வீட்டில் நான் எப்படி கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்த முடியும்ன்னு சொல்றா மான்சி அந்த நிர்மலா ச்சே நான் இதை அவள்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை மான்சி என்னை அத்தனை பேர் எதிரில் அவமானப்படுத்திட்டா ''என்று தன்வலதுகையால் இடதுகை உள்ளங்கையில் குத்தி போலியான தன் கோபத்தை காண்பித்தான்

சிவா மான்சி முகம் இறுகி கண்களை இறுக மூடி கைவிரல்களை மடக்கி தன் கொதிப்பை அடக்க முயற்ச்சித்தாள் வாழாவெட்டி என்ற வார்த்தை அவள் மனதை பலமாக தாக்கியது நான் நானா வாழாவெட்டியா என்று மான்சி உள்ளுக்குள் குமுற 'ஆமாம் தாலி கட்டிய புருஷனை பிரிஞ்சு ஒருபொண்ணு தனியா அம்மா வீட்டுக்கு வந்தா அவள் வாழாவெட்டிதான் இதுகூடவா உனக்கு தெரியாது,என்று அவள் மனமே அவளை நக்கல் செய்ய மான்சி துடித்துப்போனாள். வெகுநேரம் கண்களை முடி தன் கொதிப்பை அடக்கியவள் பிறகு கண்திறந்து சிவாவைப் பார்த்து ''அதுக்கு நீ என்னண்ணா சொன்ன ''என்று கேட்டாள்

தங்கையின் குமுறல் சிவாவின் மனதை நோகச் செய்தாலும் அவள் சத்யனுடன் நல்லபடியாக சேர்ந்து வாழவேண்டுமே என்ற ஆசையில் மனதை கல்லாக்கிக்கொண்டு ''ம் மான்சி அவ இஷ்டப்படியே இருக்கட்டும்அவளை வீட்டில் இருந்து அனுப்பிட்டுதான் என் கல்யாணம் நடக்கனும்னு அப்படிப்பட்ட கல்யாணமே எனக்கு வேண்டாம் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்''என்றான்


சிவா உறுதியான குரலில் அவன் பதிலை கேட்டு அமைதியாக இருந்த மான்சி தன் மனதை நிலைப்படுத்த சிறிது அவகாசம் எடுத்து கொண்டாள் பிறகு ''சரிண்ணா இதைப்பற்றி பிறகு பேசலாம் இப்போ என்னை சுமித்ரா வீட்டுக்கு கூட்டிப்போய் விடு அவங்க வரச்சொன்னாங்க என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு வர்றேன்''என்றவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் வேகமாக போய் சிவாவின் பைக் அருகில் நின்றுகொண்டாள்

 சிவாவும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவளை சுமித்ரா வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்தான் சுமித்ரா மான்சியை வரவேற்று அவள் வீட்டு தோட்டத்திற்கு அழைத்து போய் இருவரும் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள் மான்சியின் முகத்தை பார்த்து அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை யூகித்த சுமித்ரா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள ''ஏன் மான்சி கோவையில் நடந்ததைப்பத்தி சிவா ஏதாவது சொன்னாரா''என்று கேட்க ''ம்''என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் மான்சி

 ''மான்சி உங்களுக்கு நான் புத்தி சொல்றதா நினைக்காதீங்க நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க நிர்மலா சொன்னதில் எந்த தப்பும் இல்லை அவ இடத்தில் யார் இருந்தலும் இதைத்தான் சொல்லியிருப்பாங்க. நீங்க இப்படி வீட்டில் இருக்கும் போது அவங்க எப்படி புதுசா கல்யாணம் செய்து உங்க முன்னாடி வாழமுடியும். நான் எதைப்பற்றி சொல்றேன்னு உங்களுக்கு புரியும்.சிவா எப்படிப்பட்டவர்ன்னு எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும் சிவா இவ்வளவு நாளா உங்களை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கவணமாக பார்த்துகிட்டவர் இப்போ உங்களால்தான் அவருடைய கல்யாணம் தடைபடுது இந்த பிரச்சனையை நீங்க மட்டும்தான் தீர்க்கமுடியும் இப்போ உங்க அண்ணன் வாழ்க்கையே நீங்க எடுக்க போற முடிவில்தான் இருக்கு வீட்டுக்குப் போய் நல்லா யோசிச்சு பாருங்க நான் சொன்னதெல்லாம் சரியா தவறான்னு உங்களுக்கு தெரியும் மான்சி இதை நான் என்னோட அண்ணனுக்காக கேட்களை சிவா இயல்பாகவே ரொம்ப நல்லவர் அவர் வாழ்க்கை அவருக்கு பிடிச்ச பொண்ணோட அமையனும் அதுக்காகத்தான் கேட்கிறேன் ''என்று மூச்சு விடாமல் பேசிய சுமித்ரா மான்சியின் முகத்தை பார்த்தாள்

 மான்சிக்கு சுமித்ரா சொன்னவைகள் எல்லாம் சம்மட்டியால் தலையில் தாக்கியது போல் வலித்தாலும் அதில் இருக்கும் உன்மை நன்றாகவே உறைத்தது பேச்சு வராமல் தொண்டை அடைக்க அதை கனைத்து சரிசெய்து கொண்டு மெதுவான குரலில் ''நீங்க சொன்னது எல்லாமே சரிதான் நான் கொஞ்சம் யோசிக்கனும் என்னை யாரையாவது விட்டு எங்க வீட்டில் விட ச்சொல்லுங்க ''என்று மான்சி கூற '

ம் சரி வீட்டில் கார்த்திக் இருக்கார் அவரை கொண்டுபோய் விடச் சொல்றேன் வீட்டுக்கு போய் நல்லா நிதானமா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க மான்சி''என்றவள் எழுந்து கார்த்திக்கை அழைத்து வர வீட்டுக்குள் போனாள் சுமித்ரா வீட்டுக்கு வந்த மான்சி மனம் மிகவும் பலவீனப்பட்டிருக்க தன் தாயாரிடம் தலை வலிக்கிறதென்றும் தன்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு படுத்தவளுக்கு தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போயிற்று வெடித்துச் சிதறிய உள்ளத்தின் குமுறலை வாயை விரலால் பொத்தி அடக்க முயன்றாள்

அது விரல்களையும் விம்மலாக வெடித்தது ஒருகணம் கையில் கிடைத்த சொர்க்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது மறுகணம் எங்கே அதை தவர விட்டுவிடுவோமோ என்ற தவிப்பு அவளை விதிர்க்கச் செய்தது மனமே இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க அவன் தனக்கு செய்த கொடுமை மட்டும் மறக்கமுடியாமல் நெஞ்சத்தின் ஓரம் சிறு நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது.


தன்னுடைய பழைய நாட்கள் நினைவுக்கு வந்து அவள் உடல் மற்றும் மனதின் பலம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியடையச் செய்தது பழைய நினைவுகள் மனதில் புதிதாய் வந்த காதலை சட்டென்று உயர்ந்து சீறிப் பாய்ந்து இந்த பிரபஞ்சத்தையே சுழற்றி எறியும் சுனாமியாய் சுழற்றிப் போட்டது புது நகரத்தில் மொழி தெரியாத குழந்தையை போல் தவித்து விழித்தது அவள் மனது மனது காட்டாற்று வெள்ளத்தின் போக்கைப் போல எங்கெங்கோ சென்று சுழன்று பழயை நினைவுகள் கறையை உடைக்க தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவாவது எங்காவது ஓடிவிடலாமா என்று இருந்தது

மான்சிக்கு மான்சியின் மனம் இவ்வளவு உழன்று அடி மனதில் இருந்த மாய உணர்வுகளையும் சேர்த்து தட்டி எழுப்ப அங்கே தன் குழந்தையின் மீது உண்டான கலப்பற்ற பாசமும் சத்யன் மீதான நேசமும் மட்டும் மிச்சமாய் இருக்க இப்போது மான்சிக்கு ஒன்று புரிந்தது அது வலிமையான இல்லறத்துக்கு அஸ்திவாரமே குழந்தைகள் தான் என்பது தன்னுடைய முதல் காதல் கல்யாணம் என்ற ஆயுதத்தை ஏந்தி வந்து அவளுக்குள் அழுத்தமாய் தன் தடத்தை பதித்துவிட்டு போயிருந்தது

மான்சிக்கு இப்போது புரிந்தது ஆனாலும் இப்போது சத்யன் மீது ஆதாரமற்ற நேசம் உருவாகியிருந்தாலும் அவன் தொடுகைகளை மட்டும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று ஆணித்தரமாக நம்பினாள் மான்சி உறக்கம் வந்து கண்களை தழுவ வந்த அத்தனை கனவுகளிலும் சத்யனின் பிம்பங்களே மிக பிரம்மாண்டமாக தெரிந்தது மனதில் இருந்த மாய உணர்வுகள் விசுவரூபம் எடுத்து அவனின் நினைவுகளையே அவளுக்கு பரிசளித்தது நாளை விடிலை நினைத்து இன்று இரவே அவள் மனம் வெட்கப் போர்வை போத்திக்கொண்டது இரவு வெகுநேரம் அவனின் நினைவுகளை ஞாபகங்களை மனம் தத்தெடுத்ததால் மான்சி விழித்து கிடந்தாள்

 நேசம் கொண்ட மான்சியின் மனது புதிதாய் கவிதை வாசித்தது

 ''அன்று உன்னைப்பார்த்ததை தவிர்த்திருந்தால்......
 ''இன்று என் மனம் உடைந்து போனதையும் தவிர்த்திருக்கலாம்.........
 ''நேற்று நீ என் இதயத்தை திருடியதற்காக ............
 ''இன்று காதல் நீதிமன்றத்தில் கைதியாய் நான்.........!

மான்சி இரவு வெகுநேரம் கழித்து தூங்கினாலும் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது எழுந்தவள் பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டு முகம் கழுவிவிட்டு தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள் இரவில் விழித்திருந்தது அவள் கண்களை சுற்றி கருவளையமாக தெரிய ச்சே என்ன இது கோவை போகிற நேரத்தில் கண்கள் இப்படியிருக்கிறதே என்று நினைத்து மறுபடியும் சோப்பை குழைத்து கண்களை சுற்றி நன்றாக கழுவினாள்

இவ்வளவு நாட்களாக தன் அழகை பேணிப் பாதுகாத்ததில்லை இப்போதுஅவள் விழிகளை சுற்றியிருந்த அந்தகருவளையம் அவளுக்கு பெரும் குறையாக இருந்தது அதுவும் இந்த ஊட்டியின் நடுங்க வைக்கும் குளிரில் இத்தனை முறை முகம் கழுவிக்கொள்பவள் இவளாகத்தான் இருக்கும் அவளுக்கே தன்னை நினைத்து சிரிப்பு வந்தது முகத்தை சரிசெய்து கொண்டு நேராக ஹாலில் போடப்பட்டிருந்த மூங்கில் சோபாவில் தலைவரைக்கும் கம்பளியால் போர்த்திக் கொண்டு படுத்திருந்த சிவாவிடம் வந்து அவனை உலுக்கி எழுப்ப சிவா அலறியடித்துக்கொண்டு எழுந்து மான்சியை பார்த்து விழித்தான்

 '' என்னண்ணா அப்படி முழிக்கிற நான்தான் மான்சி என்ன நிர்மலா அண்ணிக்கூட கனவிலே டூயட் பாடிக்கிட்டு இருந்தியா டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா ஸாரிண்ணா ''என்ற தங்கையைப் பார்த்து சிவா இன்னும் பெரிதாக கண்களை விழித்துப் பார்த்தான் மான்சி இதுபோல் பேசி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றைய அவள் பேச்சு கனவே என்று நினைத்து அவசரமாக தன் கையில் கிள்ளிப் பார்த்துக்கொன்டான் சிவா

 அவன் செயல் மான்சிக்கு சிரிப்பை வரவழைக்க வாய்ப்பொத்தி உடல் குலுங்க சத்தமாக சிரிக்க சிவா ஆகா இது கனவில்லை நிஜம்தான் என்று கம்பளியை உதறி எழுந்தான் ''என்னம்மா இவ்வளவு சீக்கிரமே எழுந்துட்ட ஏன் தூக்கம் வரலையா ''என்று அக்கரையுடன் சிவா தங்கையை விசாரிக்க ''அதெல்லாம் நல்லாதான் தூங்கினேன் இப்போ மணி 5-30 ஆகுது நீ என்னமோ நான் நடுச்சாமத்தில் எழுந்த மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்க போண்ணா ''என்று மான்சி சினுங்கினாள் சிவாவுக்கு அவளின் பேச்சு நான்குவருடத்துக்கு முந்தைய பழைய மான்சியை ஞாபகப்படுத்த அந்த அதிகாலையிலும் கண்கலங்க எங்கே அழுதுவிடுவோமோ என்று அஞ்சி அவசரமாக பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு வந்தான்

 வந்தவன் ''என்ன மான்சி என்னம்மா விஷயம் ரொம்ப உற்சாகமா இருக்கிற மாதிரி தெரியுது உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கும்மா''என்று சிவா உணர்ச்சிகரமாக பேச மான்சியின் முகத்தில் ஓடிய வெட்க்க ரேகையால் முகம் சிவப்பை பூசிக்கொண்டது வெட்கப்பட்ட முகத்தை அண்ணனிடம் மறைத்து திரும்பி நின்று ''அண்ணா நான் கோவை போகனும் என்னை வந்து பஸ்ஸில் ஏத்திவிடு நான் போறேன் ''என்று கூற இப்போது சிவா மறுபடியும் தன் கையை கிள்ளிப் பார்த்து இது கனவில்லை என்று உறுதிசெய்து கொள்ளவேண்டியிருந்தது

 ''என்ன மான்சி என்னாச்சு கோவை போகனும்னு சொல்ற நிஜம்தானா''என்று சிவா உறுதியாக கேட்க ''ஆமாம் அண்ணா இப்பவே போகனும் உனக்கு எஸ்டேட்டில் ஏதாவது வேலையிருக்கும் அதனால என்னை மட்டும் பஸ் ஏத்திவிட அப்படியே அவர் வீட்டுக்கு எப்படி போகனும்னு சொல்லு நான் போயிக்கிறேன் தயவுசெய்து இதுக்கு மேல என்னை துருவித்துருவி கேட்காதே நான் எதுவுமே சொல்லமாட்டேன் ''என்று காதுகளில் புதிதாய் போட்டிருந்த ஜிமிக்கிகள் ஆட அழகாக தலையசைத்து பேசினாள் மான்சி சிவாவுக்கு உற்ச்சாகத்தில் எகிறிக் குதித்து ஓவென்று கத்தி அந்த ஊட்டியையே தன் கூச்சலால் எழுப்ப வேண்டும் போல் இருந்தது

சந்தோஷத்தில் மான்சியின் முழங்காலைப் பற்றி அலேக்காக தூக்கி சுற்ற ஆரம்பிக்க சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த வேதம் தன்மகனையும் மகளையும் பார்த்து''டேய் சிவா என்னடா இது அவ என்ன சின்னகுழந்தையா இப்படி தூக்கிகிட்டு சுத்துற கீழே விடுடா ''என்று சிரிப்புடன் கூற சிவா மான்சியை கீழே விட்டுவிட்டு தன் தாயிடம் மான்சியின் மனமாற்றத்தை கூறி அவள் கோவை புறப்பட ஏற்ப்பாடு செய்யச்சொன்னான் அதை கேட்ட அந்த தாயின் கண்களில் கரகரவென கண்ணீர் வழிய தன் மகளை அணைத்துகொண்டாள் மான்சி பஸ்ஸில் கிளம்புகிறேன் என்றதும் சிவா வேண்டாம் கார்த்திக்கின் காரை எடுத்துச் செல்லலாம் என்றான்

மான்சி அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை ''வேண்டாம்ண்ணா நான் கோவை போறது யாருக்கும் தெரியவேண்டாம் அவருக்கு கூட போன் செய்து சொல்லாதே சஸ்பென்ஸ்ஸாவே இருக்கட்டும் ''என்று வெட்கத்துடன் மான்சி கூற ''சரி சரி உன்னோட இஷ்டம் சீக்கிரமா ரெடியாகு நானும் ரெடியாகி வர்றேன்''என்று சிவா பாத்ரூமை நோக்கி ஓடினான் மான்சியும் போய் குளித்துவிட்டு வந்தவளுக்கு இப்போது பெரும் குழப்பம் அதான் எந்த புடவையை கட்டுவது என்ற குழப்பம்தான் சத்யனு என்ன நிறம் பிடிக்கும் என்றுகூட தனக்கு தெரியாதே என்று வருந்தினாள் திருமணத்திற்கு எடுத்த மாதுளம் முத்துக்கள் நிற பட்டுபுடவையும் அதை சத்யன்தான் தேர்வு செய்தான் என்று சுமித்ரா சொன்னதும் ஞாபகம் வர அதே மாதுளம் முத்துக்கள் நிறத்தில் தன்னிடம் இருந்த குந்தன் வேலைபாடுகள் நிறைந்த ஒரு புடவையை எடுத்து கட்டிகொண்டு கண்ணாடியில் புடவை விளம்பரத்தில் வருபவள் போல் முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு தன்னைத்தானே சுற்றிச்சுற்றி பார்த்துகொண்டாள்

தன் அழகைப் பார்த்து தானே நாணத்துடன் சிரித்துக்கொண்டாள் குளித்துவிட்டு வந்த சிவா தனது தங்கையைப் பார்த்து கண்களை அகலவிரித்து ஆச்சர்யத்தோடு சிரித்து ''ம்ம் இன்னிக்கு சத்யன் கிளீன் போல்ட்தான்''என்று கிண்டல் செய்தவன் மான்சியின் அருகே வந்து கண்கலங்க அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி ''மான்சி உன்னோட முழுவிருப்பத்தோடத்தான கோவை போற எனக்காக இல்லையே உன்மையை சொல்லு மான்சி ''என்று கேட்க ''ம்ஹூம் அதெல்லாம் இல்லண்ணா நானே விரும்பித்தான் போறேன் என்னோட இடம் அதுதான் எனக்கு இப்போ புரிஞ்சிருச்சு மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது என்ன என்னால உடனே அங்கே ஒன்றிப்போக முடியாது போகப்போக சரியாயிடும்ன்னு நினைக்கிறேன் ''என்றவள் ''சரி கிளம்பும் போது கண்கலங்காதே அண்ணா அப்புறமா இன்னோரு விஷயம் உடனே இந்த விஷயத்தை போன் பண்ணி என் வருங்கால அண்ணிகிட்ட சொல்லிறாதே அப்புறமா சொல்லிக்கலாம்'' என்று மானசிகூற அப்போதுதான் சிவாவுக்கு நிர்மலாவின் ஞாபகமே வந்தது இன்று அவளையும் சந்திக்க போறோம் என்று

அவன் மனம் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்தது மான்சி சிவா இருவரும் கிளம்பிபோய் கோவை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்க்கார இவர்களுக்காகவே காத்திருந்தது போல அந்த பஸ் உடனே புறப்பட்டது ஆனால் அந்த பஸ்ஸுக்கு முன்பே மான்சியின் மனம் வேகமாக கோவையை நோக்கி சென்றது ஆயிரம் கனவுகளுடன் ஆயிரம் போராட்டங்களுடன் மான்சிக்கு அந்த காலைநேர குளிர்காற்று மனதில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்ப்படுத்தியது

 ''ஏரிக்கரையில் இதமான குயிலின் கூவல் .....
 ''காற்றுக்கு தலையாட்டும் பச்சை நெல்வயல்......
 ''கோவில்களில் அழகிய புறாக்களின் சிறகடிப்பு......
 ''மலைச்சாரலில் பனிசுமந்த ரோஜாக்களின் தலையசைப்பு.....
 ''அழகான சீருடையில் பள்ளி செல்லும் மழலைகள்......
 ''இவைகள் மட்டுமே எனக்குள் அறிமுகம்......
 ''அறிமுகமில்லாதது ......
 ''உன் மனதுள் புதைந்திருக்கும் ...... 
''உணர்வுகளின் உன்மை முகம்....!

மான்சியும் சிவாவும் கோவை பஸ்டாண்டில் இரங்கி ஒரு ஆட்டோவில் ஏறியபோது மணி காலை 9-5 ஆகியிருந்தது ஆட்டோ சத்யன் வீட்டுக்கு செல்ல அந்த மிகப்பெரிய வீட்டின் முன் ஆட்டோ நின்ற போது மான்சிக்கு வயிற்றில் சில்லென்ற உணர்வு ஏற்ப்பட அவசரமாக பக்கத்தில் இருந்த சிவாவின் கையை பிடித்துக்கொண்டாள் ''ம் என்ன மான்சி இது ஏன் இப்படி பதட்டப்படுற இது உன் வீடு மான்சி இங்கே யாருமே உனக்கெதிராக நடக்கமாட்டாங்க நடக்கவும் சத்யன் விடமாட்டார் நீ தைரியமா உள்ளே போ ''என்றவன் தங்கையின் கையை பற்றிதைரியம் சொல்லிவிட்டு ஆட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மூடியிருந்த பெரிய கேட்டில தட்டினான்

 கதவைத்திறந்து வெளியே வந்த வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் பார்த்து பதட்டத்துடன் ''ஐயோ ரொம்ப நேரமா நிக்கிறீங்களா சின்னம்மா பெட்டிய என்கிட்ட குடுங்க நான் எடுத்துட்டு வர்றேன்''என்றவன் மான்சி கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு உற்ச்சாகமாக முன்செல்ல மான்சிக்கு தன்னுடைய வரவு ஒரு சாதாரண வேலைக்காரனை கூட உற்ச்சாகப்படுத்தியுள்ளது தெரிந்தது

 வாட்ச்மேன் கதவருகிலேயே நின்றுவிட சிவாவும் மான்சியும் உள்ளே போனார்கள் அங்கே முதலில் இருந்த ஹாலில் யாருமே இல்லை பக்கவாட்டில் இருந்த வேறு அறையில் பேச்சு குரல் கேட்க இருவரும் அங்கு போனார்கள் அது டைனிங் ஹால் வீட்டின் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க சத்யன் மான்சிக்கு முதுகு காட்டி எதிர்பக்கம் பார்த்தபடி உட்க்கார்ந்து இருக்க இவர்களை முதலில் பார்த்தது கண்ணன் தான் அவசரமாக 'வா சிவா வாம்மா மான்சி ''என்று கூப்பிட சத்யன் சட்டென்று திரும்பிப் பார்த்து மான்சியை கண்டதும் சாப்பிட்ட கையோடு திகைப்புடன் எழுந்து நின்றுவிட்டான்

பிறகு சுதாரித்து ''வாங்க சிவா ''என்றவன் மான்சியை வாயால் அழைக்காமல் கண்களால் அழைத்தான் மான்சியின் மனம் பொய்யாய் சினுங்கியது 'ம்க்கும் ஐயாவுக்கு வாயால கூப்பிட முடியாதோ அதென்ன இத்தனை பேர் முன்னாடி கண்ணால் ஜாடை காட்றது இரு இரு உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்' என்று மனதுக்குள் அவனுடன் செல்லமாய் சீண்டி விளையாடியவள் நேரில் குனிந்த தலையை நிமிராமல் நின்றாள்




சத்யன் அவள் முகத்தை நிமிர்வாள் பார்க்கலாம் என்று சிறிதுநேரம் அவளைப்பார்த்து விட்டு அவள் நிமிர்ந்து பார்க்காததால் ஏற்ப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சிவாவிடம் திரும்பி ''என்ன இது திடீர்னு என்னிடம் சொல்லியிருந்தா நான் ஊட்டிக்கு கார் அனுப்பியிருப்பேன் இப்போ எப்படி வந்தீங்க''என்று கேட்க ''ஊட்டியில் இருந்து பஸ்ஸில் வந்து இங்கே ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தோம் சார் நான் கார்த்திக் சார்கிட்ட கார் கேட்டு எடுத்திட்டு போகலாம்னு சொன்னேன் மான்சிதான் வேனாம்னு சொல்லிடா''என்று சிவா பதில் சொன்னான்

 அதற்க்குள் சத்யனின் அம்மா மரகதம் ''எப்படியும் ஊட்டியில் காலையில ஆறு மணிக்கெல்லாம் கிளம்பியிருப்பீங்க சரி வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம் ''என்று அழைக்க சிவா கையிலிருந்த பேக்கை சுவற்றோறமாக வைத்துவிட்டு போய் வாஷ்பேசினில் கைகழுவ மான்சி நின்ற இடத்திலேயே கால்களில் வேர்பிடித்து நின்றாள்


No comments:

Post a Comment