Wednesday, February 4, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 28


Monday, 25 May 2009 8:30 AM Shakthivel's Flat, New York திங்கள், மே 25, 2009 காலை 8:30 சக்தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளை புரட்டியபடி காலை உணவருந்திக் கொண்டு இருந்தான். இரண்டாம் பக்கத்தின் ஒரு மூலையில் போலீஸ் கமிஷனரும் அரசாங்க வழக்கறிஞரும் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி பதிவாகி இருந்தது. முந்தைய தினம் மதிய உணவின் போது போது போலி குண்டுகளை வைத்து கடந்த வாரம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு நபர்களை பற்றி நித்தினுடன் பேசி வயிறு வலிக்க சிரித்ததை நினைவு கூர்ந்தான். மேலும் அந்த பேட்டியைப் பற்றி படிககத் தொடங்கினான். முதலில் இருந்து படித்தவன் முடிவில் இருக்கும் சில வரிகளை படிக்கத் தொடங்கியதும் அவன் முகம் சுருங்கியது ... கைபேசியில் ஜாஷ்வாவை அழைத்தான். எங்கேஜ்டாக இருந்தது. சற்று நேரத்தில் ஜாஷ்வா அழைத்தான். ஜாஷ்வா, "ஹாய் ஷக்தி. நீ எதுக்கு கூப்பிட்டேன்னு யூகிச்சேன். நித்தினும் லைனில்தான் இருக்கான். உனக்கு முன்னால் அவன் என்னை கூப்பிட்டான். சொல்லு"

சக்தி, " நம்ம முதல் ரெண்டு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரும் ..." ஜாஷ்வா, "முதலில் நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேக்கறேன். இந்த மூணு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரும் ஆண்டர்ஸன் சொல்லித்தான் நான் செய்யச் சொன்னேன். அவனுக்கு பின்னாடி தீவிர வாதிகள் இருப்பதா நான் சந்தேகிக்கலை. ஏன்னா அவன் ஒரு பிஸினஸ் மேன். தொடர்ந்து அவனுக்கு அவன் ஏற்கனவே ஈடு பட்டு இருக்கும் பிஸினஸ்ஸை நடத்தணும்ன்னு பார்ப்பான். பதினெட்டு மில்லியனுக்காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பான்னு தோணலை" நித்தின், "அது நாம் செஞ்ச ட்ரான்ஸ்ஃபர்தான்னு உனக்கு நிச்சயம் தெரியுமா?" ஜாஷ்வா, "எஸ், எஃப்.பி.ஐ அந்த வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ணி இருக்காங்க. வங்கியில் இருக்கும் ஒருத்தன் மூலம் தெரிஞ்சுகிட்டேன். ஹாஃப்மனுக்கு இன்னும் தெரியாதுன்னு நினைக்கறேன்" சக்தி, "ஓ மை காட்!" நித்தின், "Damn, damn, damn .. " சக்தி, "உனக்கு எப்ப தெரியவந்தது?" ஜாஷ்வா, "வெள்ளிக் கிழமை காலையில்" சக்தி, "அப்பறம் ஏன் எங்க கிட்ட சொல்லலை. அந்த ட்ரான்ஸ்ஃபரை நிறுத்தி இருக்கலாம் இல்லையா?" ஜாஷ்வா, "எனக்கு மேலும் சில விவரங்கள் தேவைப் பட்டுது அதனால் அன்னையில் இருந்து நான் உங்ககிட்ட இன்னும் சில விவரங்களை மறைச்சு இருக்கேன்" நித்தின், "பட் சொல்லு ஜாஷ்வா, தெரிஞ்சே எதுக்கு கடைசி ட்ரான்ஸ்ஃபர் பண்ணச் சொன்னே?" ஜாஷ்வா, "இப்பவும் எனக்கு கன்ஃபர்ம்டா இந்த ட்ரான்ஸ்ஃபர் தீவிர வாதிகளுக்குத்தானான்னு தெரியலை. எப்படி இருந்தாலும் முதல் ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுட்டு மூணாவதை செய்ய மறுத்தா வீணா நம் மேல் சந்தேகம் வரும். யார் நம்மை ட்ரான்ஸ்ஃபர் செய்யச் சொல்லி இருந்தாலும் எதுக்கு அந்த பணம் உபயோகமாகுதுன்னு நமக்கு தெரியாது அப்படிங்கறது அவங்க கணிப்பு. மூணாவது ட்ரான்ஸஃபரை செய்ய மறுத்தா நம்மை சும்மா விடமாட்டாங்க. எப்படியும் இந்த வெள்ளிக் கிழமை நீங்க இந்தியா திரும்பறீங்க. நாங்க ரெண்டு பேரும் சனிக் கிழமை நைட்டு புறப்படறோம். நம்மை அவங்க எந்த விதத்திலும் சந்தேகிக்காத மாதிரி நடந்துட்டு போயிடலாம்ன்னுதான் உங்களை அந்த கடைசி ட்ரான்ஸ்ஃபரை செய்யச் சொன்னேன்" நித்தின், "எஃப்.பி.ஐ நிச்சயம் அந்த மூணு கம்பெனிகளையும் ட்ரேஸ் பண்ணும்" சக்தி, "பண்ணும். ஆனா மாங்க்ஸ்-2 மூலம் அந்த ட்ரான்ஸ்ஃபர் ஆச்சுங்கறதுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்காது. அந்த கம்பெனி உரிமையாளர்களை விசாரணை செய்வாங்க. பிறகு யாரோ உரிமையாளருக்கு தெரியாமல் செய்து இருப்பதா கண்டு பிடிப்பாங்க. யாருன்னு கண்டு பிடிக்க முடியாது" நித்தின், "பட், ஜாஷ் உன்னோட பாங்க் ஸ்டேட்மெண்ட் ... " ஜாஷ்வா, "மாசக் கடைசியில்தான் ஸ்டேட்மெண்ட் போகும். நான் வெள்ளிக் கிழமை மதியமே என்னோட வைரஸ்ஸை டிலீட் பண்ணிட்டேன். இந்த மூணு கம்பெனிகளுக்கு போகும் ஸ்டேட்மெண்டில் நாம் செஞ்ச மூணு ட்ரான்ஸ்ஃபரும் இருக்கும். எஃப்.பி.ஐ சக்தி சொன்ன மாதிரி யாருன்னு விசாரிச்சுட்டே இருப்பாங்க. ஒரு க்ளூவும் கிடைக்காது" சக்தி, "பட் ஜாஷ்வா, நாம் தீவிரவாதிகளுக்கு உதவி இருந்தா என்னால் அதை ஜீரணிக்க முடியாது" ஜாஷ்வா, "ரெண்டு நாளா நானும் அதையேதான் நினைச்சுட்டு குமுறிட்டு இருக்கேன். அப்படி தீவிரவாதத்துக்கு உதவி அது சஞ்சனாவுக்கு தெரிஞ்சா அவ மனசு ரொம்ப கஷ்டப் படும்"நித்தின், "ஓ.கே கய்ஸ். நடந்தது நடந்துடுச்சு. இனி என்ன செய்யலாம்" ஜாஷ்வா, "சில முன்னேற்பாடுகள் .. பர்டிகுலரா நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியது" நித்தின், "என்ன முன்னேற்பாடுகள்?" ஜாஷ்வா, "முதலில் நீங்க ரெண்டு பேரும் உங்க ஃப்ளாட்டை காலி செய்யுங்க. காலி செஞ்சுட்டு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துட்டு தங்குங்க. இன்னும் நாலு நைட்தானே நியூ யார்க்கில் இருக்கப் போறீங்க. அப்பறம், உங்க ரெண்டு பேர் காரையும் திருப்பி கொடுங்க. புதுசா ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்குங்க" சக்தி, "வெய்ட், வெய்ட் எதுக்கு இதெல்லாம்?" ஜாஷ்வா, "உங்களைப் பத்தி எந்த விதமான சந்தேகமும் வரக் கூடாது. உங்க ரெண்டு பேர் வீட்டிலும் இருந்த சர்வர்களின் ஐ.பி.அட்ரெஸ் எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் கண்டு பிடிக்கப் படும். சர்வர் இப்போ அங்கே இல்லைன்னாலும். எங்கேயாவுது டெலிஃபோன் கம்பெனி ரெக்கார்டில் நீங்க இப்போ இருக்கும் அட்ரெஸ் இருக்கும். அந்த ரெண்டு ஃப்ளாட்டும் என் கஸின் ஒருத்தன் பினாமி பேரில் எடுத்துக் கொடுத்தது. எந்த விதத்திலும் உங்க பேர் அதில் சம்மந்தப் படுத்த முடியாது" நித்தின், "பட், நீ உன் கஸினை மாட்ட விட மாட்டியே. உன்னை பிடிப்பாங்க" ஜாஷ்வா, "இலலை. ஐ.பி அட்ரெஸ் விஷயத்தில் மட்டும்தான் மாட்டுவேன். ஃப்ளாட் விஷயத்தில் இல்லை. " சக்தி, "என்ன சொல்றே? புரியலை" ஜாஷ்வா, "முதலில் அந்த ஐ.பி அட்ரெஸ் எந்த விலாசத்தில் இருந்ததுன்னு டெலிஃபோன் கம்பெனிகள் மூலம் தெரிஞ்சுட்டு அந்த விலாசத்துக்கு வந்து விசாரிப்பாங்க. அந்த விசாரணையில் ஒண்ணும் தெரியலைன்னாத்தான் அந்த ஐ.பி.அட்ரெஸ் யாருடையதுன்னு பார்ப்பாங்க. அதுக்கு அப்பறம் அந்த நிறுவனம் வெறும் பேப்பரில் இயங்கும் ஒரு நிறுவனம்ன்னு தெரிஞ்சுக்குவாங்க. அதுக்கு அப்பறம்தான் என்னோட இன்னொரு கஸின், அந்த நிறுவனத்தின உரிமையாளர், அவனை விசாரிப்பாங்க. அந்த சமயத்தில் அவன் என் பக்கம் கை காமிச்சுடுவான். அதுக்குள்ள அனேகமா நீங்க இந்தியாவில் இருப்பீங்க. ஆனா, ஃப்ளாட் விஷயத்தில் நான் மாட்ட மாட்டேன். என் கஸின் அந்த ஃப்ளாட்டை சப்-லெட் பண்ணினதா சொல்லுவான். யார் அதுன்னு தெரியாதுன்னு சொல்லுவான். வாடகையை கேஷா அட்வான்ஸா வாங்கிட்டதா சொல்லுவான். இது நிறைய நடக்கற விஷயம்தான்" நித்தின், "எப்படியோ நீ மாட்டுவேதானே?" ஜாஷ்வா, "நிச்சயம் ஐ.பி அட்ரெஸ் விஷயத்தில் எஃப்.பி.ஐ என்னை விசாரிக்கும். அதை முடிஞ்ச அளவுக்கு நாம் தாமதப் படுத்தினா நமக்கு நல்லது. We can then play by our strengths" சக்தி, "சரி, காரை எதுக்கு ரிடர்ன் பண்ணச் சொல்றே?" ஜாஷ்வா, "ஒரு வேளை சுத்தி இருப்பவங்ககிட்ட விசாரிச்சா. நீங்க உபயோகிச்ச காரை பத்தி யாராவது சொல்ல வாய்ப்பு இருக்கு. எல்லா ரெண்டல் கம்பெனியிலும் தேடுவாங்க. கார் உங்க பேரில் எடுத்தது. உடனே கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு" சக்தி, "சரி. எப்ப மீட் பண்ணறோம்?" ஜாஷ்வா, "நீங்க ரெண்டு பேரும் இந்த முன்னேற்பாடுகளை செய்யுங்க. இதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும். வெள்ளிக் கிழமை நைட் நீங்க புறப்படறீங்க. வியாழக் கிழமை டின்னருக்கு என் வீட்டில் மீட் பண்ணலாம். யூ.எஸ்ஸில் எங்க வீட்டில் கடைசி டின்னர்" மூவரும் மனம் தோய்ந்து இருந்தனர். மூவரின் மனதிலும் அளவிலா பதட்டம். ~~~~~~~~~~~~~~~~~~~~~ அடுத்த இரண்டு நாட்களில் ஒரு அளவுக்கு அவர்கள் மனம் தெளிவு அடைந்து இருந்தது. அவர்களையறியாமல் தீவிரவாதத்துக்கு உதவி இருந்ததால் முன்னர் மறைக்கலாம் என்று இருந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பற்றி வந்தனாவிடன் தானே கூறப் போவதாக சக்தி முடிவெடுத்தான். புதனன்று மதியம் இருவரையும் ஜாஷ்வா அழைத்து மாலை நாலு மணி அளவில் பர்ல் டைனரில் சந்திக்கும் படி அழைத்தான் இக்கதையின் முதல் இடுகையை காண்க .... Thursday, 28 May 2009 9:30 PM US-EST Basement of xyz Bank (where Joshua works) வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 9:30 ஜாஷ்வா பணிபுரியும் வங்கிக் கட்டிடத்தின் கீழ்த்தளம் நித்தினும் சக்தியும் ஜாஷ்வா சொன்னது போல் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து அந்த பேஸ்மெண்டை அடைந்தனர். மேல் தளத்தில் இருந்து வரும் படிகளின் பக்கத்தில் இருக்கும் பகுதி தெரியும்படியான அதே சமயம் அங்கு நின்று இருப்போரின் கண்ணுக்கு எளிதில் படாத ஒரு இடத்தில் காரை நிறுத்தி காரிலே அமர்ந்த வண்ணம் கைபேசியில் ஜாஷ்வாவை அழைத்தான். ஜாஷ்வா, "என்ன சக்தி, நித்தின், கான்ஃப்ரென்ஸ் காலில் கனெக்ட் பண்ணி இருக்கீங்களா?" சக்தி, "எஸ்" ஜாஷ்வா, "உங்க ரெண்டு பேர் ஃபோனிலும் அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு சார்ஜ் இருக்கா?" நித்தின், "ம்ம்ம் ..அதுக்கு மேலயே இருக்கு. பட், அடுத்த ரெண்டு மணி நேரம் ஆகுமா என்ன?" ஜாஷ்வா, "பொதுவா ஹாஃப்மன் சொன்னா சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துடுவான். அதனால் தான் நான் அவன் பார்க்கறதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் அங்கே வந்து வெய்ட் பண்ணச் சொன்னேன்" சக்தி, "ஜாஷ், எந்த விதமான பிரச்சனையும் இல்லைன்னா நீ சிக்னல் கொடுக்கும் போது அங்கேயே தூரத்தில் நிக்கும் காரில் இருந்து நாங்க இறங்கி வந்தா .. அவனுக தப்பா எடுத்துக்க மாட்டானுகளா?" ஜாஷ்வா, "தப்பா எடுத்துட்டா அது அவங்க ப்ராப்ளம். நம்மை பொறுத்தவரை நாம் முன் ஜாக்கிரதையா இருக்கோம்" நித்தின், "தமாஷா இருக்கப் போகுது ... எப்படியோ சரி" ஜாஷ்வா, "நித்தின், தயவு செஞ்சு லைட்டா எடுத்துக்காதே" நித்தின், "நோ ஜாஷ்வா, நிச்சயம் லைட்டா எடுத்துக்க மாட்டேன்" சக்தி, "சஞ்சனா எங்கே? நீ எங்கே இருக்கே?" ஜாஷ்வா, "கெஸ்? ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில்!"

சஞ்சனா அவனிடம் இருந்து கைபேசியை வாங்கி, "என்ன அண்ணா? எங்க ஆளோட க்ளோக் அண்ட் டாகர் ப்ளான் எப்படி?" சக்தி, "என்ன நீயும் ஜோக் அடிக்கறே?" சஞ்சனா, "சும்மா சொன்னேன். இந்த மீட்டிங்க் ஜாலியாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அப்படி இல்லைன்னா அடுத்த செகண்ட் நான் சீரியஸ் ஆகிடுவேன். பயப்படாதே" சக்தி, "சஞ்சனா, ஜாஷ்வா ஒரு கன் எடுத்துட்டு வர்றான். உன் கிட்ட சொன்னானா?" சஞ்சனா, "நானும் இன்னொண்ணு எடுத்துட்டு வரேன். இந்த ஆளோட ஷூட்டிங்க் திறமையில் எனக்கு நம்பிக்கை இல்லை" நித்தின், "ஏய், சஞ்சனா, பீ சீரியஸ் .. எனக்கு பயமா இருக்கு" சஞ்சனா, "நீங்க ரெண்டு பேரும் பேசாம காரில் உக்காந்துட்டு வேடிக்கை பாத்துட்டு இருங்க ஒரு பிரச்சனையும் இல்லைன்னா மட்டும் வாங்க. பிரச்சனை எதுன்னாலும் நான் பாத்துக்கறேன். ஓ.கே? இரு ஜாஷ்கிட்ட கொடுக்கறேன்" ஜாஷ்வா, "என்ன சக்தி, எதாவது ஆள் நடமாட்டம் தென்படுதா?" சக்தி, "இல்லை. " ஜாஷ்வா, "சரி, நாங்க இங்கே இருந்து புறப்படறோம். சரியா அங்கே பத்து மணிக்கு எங்க கார் உள்ளே நுழையும். என் கஸின் க்ரிஸ் காரை ஓட்டிட்டு வருவான். நானும் சஞ்சனாவும் பின் சீட்டில் இருப்போம். நாங்க இறங்கினதுக்கு அப்பறம் பக்கத்தில் இருக்கும் பார்கிங்க் ஸ்லாட்டில் என் கஸின் காரை நிறுத்திட்டு வெய்ட் பண்ணுவான். ஓ,கே? எந்த காரணத்தைக் கொண்டும் லைனை கட் பண்ண வேண்டாம்" சக்தி, "ஓ.கே" சக்தியும் நித்தினும் காரில் அமர்ந்த வண்ணம் வெளியில் பார்த்துக் கொண்டு இருந்தனர். சரியாக பத்து மணிக்கு ஜாஷ்வாவின் கார் உள்ளே நுழையும் போது வங்கியின் மேல் தளத்தில் இருந்து வரும் படிகளில் ஹாஃப்மனும் ஆண்டர்சனும் இறங்கி வந்து கொண்டு இருந்தனர் .... ஜாஷ்வாவும் சஞ்சனாவும் காரில் இருந்து இறங்கி ஹாஃப்மனுக்கு கை குலுக்கி சிரித்தவண்ணம் பேசத்தொடங்கினர். ஜாஷ்வா, சஞ்சனாவை ஆண்டர்சனுக்கு அறிமுகப் படுத்தியதையும் சரளமாக சஞ்சனா ஹாஃபமனுடனும் ஆண்டர்ஸனுடனும் பேசிக் கொண்டு இருந்ததை காரில் இருந்த் நண்பர்கள் இருவரும் கண்டனர். நித்தின், "சீ .. ஒரு ப்ராப்ளமும் இல்லை .. " சக்தி, "இரு இரு .. பார்ககலாம் .. " அப்போது ஒரு கரு நீல நிற வேன் பேஸ்மெண்ட் வாசலில் இருந்து வேகமாக வந்து சற்று நேரத்துக்கு முன்னால் ஜாஷ்வாவும் சஞ்சனாவும் இறங்கிய இடத்தில் நின்றது ...Friday, 29 May 2009 8:30 AM IST Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் காலை 8:30 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முரளீதரன், "என்ன ப்ரொஃபெஸ்ஸர் இவ்வளவு சீக்கிரம் வரச் சொன்னீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு வழியா வேலை முடிஞ்சுது. நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கணும் அதுக்குத்தான்" தீபாவும் வந்தனாவும் ஒன்று சேர்ந்து "ஐ.பி.அட்ரெஸ் கிடைச்சுடுச்சா" என்றனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "கிடைச்சு இருக்கு ஆனா எந்த மொழின்னு ஒவ்வொரு மொழி யூனிகோடையும் வெச்சு பார்க்கணும். அந்த சூப்பர் கம்பியூட்டரில் யூனிகோட் ஃபாண்ட் ஆங்கிலத்தைத் தவிர எதுவும் இல்லை" தீபா, "எங்கே அந்த டிக்ரிப்ட் செஞ்ச மெஸ்ஸேஜஸ்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி ஒரு பென் ட்ரைவை நீட்டினார். தீபா உடனே அதை தன் கணிணியில் இணைத்து அதில் இருந்ததை தன் கணிணிக்கு இறக்கம் செய்தபின் வந்தனாவிடம் பென் ட்ரைவை நீட்டினாள். வந்தனாவும் தன் கணிணியில் அதை காப்பி செய்த பிறகு தீபாவின் இருக்கையின் அருகே அமர்ந்தாள். தீபா அந்த மெஸ்ஸேஜகள் கொண்ட் ஃபைலை வர்ட் பேடில் திறந்தாள். அவள் கணிணியிலும் ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியின் ஃபாண்டும் இல்லை. தீபா, "ஏய், சாரி வன்ஸ். என் லாப்டாப்பிலும் எந்த ஃபாண்டும் இல்லை. உன்னுதில் இருக்கா?" வந்தனா, "என் லாப்டாப்பில் ஹிந்தி ஃபாண்ட்ஸ் மட்டும் இருந்தது. இப்ப ரீஸண்டா தமிழ் கத்துக்கறதுக்காக தமிழ் ஃபாண்டும் கூட லோட் பண்ணி இருக்கேன். எதுக்கும் என் லாப் டாப்பில் அந்த மெஸ்ஸேஜ் ஃபைலை திறந்து பார்க்கலாம்" வந்தனாவின் கணிணி ஐ.பி.அட்ரெஸ் இருக்கும் பகுதிகளை ௬१.௨३.௪५.௩७ என்று காட்டியது. வந்தனா, "ஹேய், இது தமிழா?" அருகே வந்து அதைப் பார்த்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா, தமிழ் நியூமரல் ஆனா அதுக்கு பக்கத்தில் இருப்பது ஹிந்தி நியூமரல். எஸ், தமிழும் ஹிந்தியும் கலந்து இருக்கு" என்றவாறு இன்னொரு முறை கணிணித் திரையைப் பார்த்து 61.23.45.37 என்று அருகில வொயிட் போர்டில் எழுதினார். பேயறைந்த முகத்துடன் தோழிகள் இருவரும் பாத்துக் கொண்டு இருந்தனர் ... முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், மராட்டிக்கும் அதே நியூமரல்ஸ் தானே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா, அது தவணகிரி ஃபாண்ட் நிறைய வட இந்திய மொழிகளுக்கு பொறுந்தும்" முரளீதரன், "அப்படின்னா அந்த ஐ.பி.அட்ரெஸ் தமிழும் மராட்டியும் கலந்து இருக்கு. What do you say girls?" தோழிகள் இருவரும் தங்கள் கைபேசியில் தங்கள் காதலர்களை அழைத்தனர். அவர்கள் இருவரது கைபேசிகளும் எங்கேஜ்ட்டாக இருந்தன. முரளீதரன், "என்ன வ்ந்தனா, தீபா, அவங்க ரெண்டு பேர்ன்னு உனக்கு சந்தேகமா இருக்கா?" தீபா, "அவங்க ரெண்டு பேரும் அவங்க இல்லைன்னு ப்ரூவ் ப்ண்ணற வரைக்கும் அவங்க ரெண்டு பேர்தான்னு முடிவா இருக்கோம். God! I am going to kill him!!" முரளீதரன், "நீ என்ன சொல்றே வந்தனா?" வந்தனா, "முதலில் அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்" முரளீதரன், "நான் இப்பவே ஷானுக்கு ஃபோன் பண்ணி இந்த ஐ.பி.அட்ரெஸ்ஸை ஃபாக்ஸில் அனுப்பறேன். அவங்க ஃபிஸிகலா லொகேட் பண்ணட்டும்" தீபா தன் கணிணியில் இருந்து தலையை நிமிர்த்தி, "இல்லை சார். அந்த ஐ.பி.அட்ரெஸ் இப்போ உபயோகத்தில் இல்லை. எப்ப அவங்க சர்வர்லெஸ்ஸா மாத்தினாங்களோ அப்பவே நாம் யூகிச்ச மாதிரி அந்த ஐ.பி.அட்ரெஸ்ஸை சரண்டர் பண்ணி இருப்பாங்க" முரளீதரன், "சரி, அவங்க யாருக்கு வழங்கப் பட்டு இருந்ததுன்னு கண்டு பிடிக்கட்டும்" தோழிகள் இருவரும் தங்கள் கைபேசியில் தங்கள் காதலர்களை அழைத்த வண்ணம் இருந்தனர். அவர்கள் இருவரது கைபேசிகளும் எங்கேஜ்ட்டாக இருந்த வண்ணம் இருந்தன. நித்தினும் சக்தியும் அப்போது காருக்குள் இருந்தபடி சற்று தூரத்தில் நடக்கவிருக்கும் அகோரத்தைப் பார்க்கவிருந்தனர். Thursday, 28 May 2009 ... Earlier during the day Joshua's Residence, Harlem, New York வியாழன், மே 28 2009 ... காலையில் இருந்து மாலை வரை ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம், நியூ யார்க் அன்று காலையில் இருந்து சஞ்சனா மனதுக்குள் அன்று இரவு ஹாஃப்மன் மற்றும் ஆண்டர்ஸனுடன் நடக்கப் போகும் மீட்டிங்கைப் பற்றி பல்வேறு கோணத்தில் அலசினாள். ஜாஷ்வா அலுவலகத்துக்கு சென்ற பிறகு சில முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கினாள். சில வருடங்களுக்கு முன்னர் ஜாஷ்வாவை மணமுடித்ததும் அமெரிக்க பிரஜையாவதற்கு சஞ்சனா விண்ணப்பித்து இருந்தாள். அத்தகைய விண்ணப்பங்கள் பல் வேறு துறைகளுக்கும் செல்லும். எஃப்.பி.ஐயின் ஒப்புதலுக்காக சென்ற விண்ணப்பம் சைமண்ட் வில்லியர்ஸின் கைக்கு சென்றது. சிறு தேடலுக்கு பிறகு சஞ்சனாவின் வரலாற்றை அவர் அறிந்தார். முதலில் "Not Approved" என்ற முத்திரையை பதிக்க எண்ணியவர் அவளது புகைப் படத்தை மறுபடி ஒரு முறை பார்த்து யார் அவளுக்கு ஸ்பான்ஸர் செய்வது என்று பார்த்தார். ஜாஷ்வாவின் வரலாற்றை அலசினார். மிகவும் சுவாரஸ்ஸியம் அடைந்த சைமண்ட் வில்லியர்ஸ் அடுத்த நாள் சஞ்சனாவை நேரில் வரச் சொன்னார். அவளுடன் சில மணி நேரம் பேசி அவளுக்கு நடந்தவற்றை பற்றி அறிந்தார். சஞ்சனா, "ப்ளீஸ் மிஸ்டர் வில்லியர்ஸ்? .. என் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கொடுப்பீங்களா? இதை நான் எனக்காக மட்டும் கேட்கலை என் ஜாஷ்வாவுக்காகவும் கேட்கறேன்" சைமண்ட் வில்லியர்ஸ், "I will do more than that! எனக்கும் ஒரு மகள் இருக்கா. உன்னைப் பார்த்தா என் பொண்ணு மாதிரி இருக்கு ... I wish you all the best" சஞ்சனா, "I thank you so much Sir" சைமண்ட் வில்லியர்ஸ், "சஞ்சனா, இது என் சொந்த மொபைல் நம்பர். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் நீ அதில் என்னை அழைக்கலாம். நான் நேத்து உன்னை கூப்பிட்டது என் அஃபீஷியல் மொபைல் நம்பர். அதில் வரும் கால் எல்லாம் லாக் ஆகும். அதனால் தான் இந்த நம்பரை உனக்கு கொடுக்கறேன். ஆனா ஒண்ணு. சில சமயம் நான் அதை ஆஃபீஸுக்கு எடுத்துட்டு வரமாட்டேன். அந்த சமயத்தில் அவசரமா எதுக்காவது கூப்பிடணும்ன்னா மட்டும் என் அஃபீஷியல் மொபைலில் கூப்பிடு" சஞ்சனா அந்த நம்பரை தன் கைபேசியில் ஸ்டோர் செய்து இருந்தாள். சைமண்ட் வில்லியர்ஸ்ஸை அவரது சொந்த கைபேசியில் அழைத்தாள். பதில் ஏதும் வரவில்லை. அவரது அரசாங்க கைபேசியில் அழைத்தாள். அது அணைக்கப் பட்டு இருந்தது. அன்று முழுவதும் அவருக்கு கோர்ட்டில் இருக்க வேண்டிய வேலை. ஆகவே தன் சொந்தக் கைபேசியை எடுத்து சென்று இருக்கவில்லை. கோர்ட்ட வளாகத்தில் இருக்கும் போது கைபேசியை அணைத்து வைப்பது அவரது வழக்கம். வந்தனா மேலும் சில முறை அழைத்தும் பதில் இல்லை. பிறகு அவர் உதவியை நாடுவதை மறு பரிசீலனை செய்து அந்த எண்ணத்தை கைவிட்டாள்.

பிறகு தங்களுடன் இரவு காரோட்டி வரப் போகும் க்ரிஸ்ஸை அழைத்து பேசினாள். தனக்கு இன்னும் ஒரு துப்பாக்கி வேண்டும் என அவனிடம் ஏற்பாடு செய்யச் சொன்னாள். அவனையும் முன்னேற்பாடாக ஒரு துப்பாக்கியை கொண்டு வரச் சொன்னாள். Thursday, 28 May 2009 10:00 PM US-EST Basement of xyz Bank (where Joshua works) வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 10:00 ஜாஷ்வா பணிபுரியும் வங்கிக் கட்டிடத்தின் கீழ்த்தளம் ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் இறக்கி விட்ட பிறகு க்ரிஸ் அவர்கள் நின்று இருந்தற்கு வலது பக்கம் சற்று பின்னால் தள்ளி காரை பார்க் செய்து காரில் அமர்ந்து இருந்தான். சஞ்சனா சொல்லி இருந்த படி அவள் முதுகும் பின்னால் கட்டி இருந்த அவளது கைகளும் அவன் இருந்த இடத்தில் இருந்து நன்றாக பார்க்க முடிந்தது.

No comments:

Post a Comment