Tuesday, February 3, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 27


ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன தீபா?" தீபா, "ப்ராஃப், நம்ம யூகங்கள் எல்லத்தையும் ஒரு தடவை ரிவ்யூ செய்யலாமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன திடீர்ன்னு?" தீபா, "இந்த ஸ்டேஜ்ல யூகம்ன்னு எதுவும் இல்லாம டீஸைஃபர்மெண்ட்டில் ஈடுபட்டா புது சர்ப்ரைஸ் எதுவும் இருக்காதுன்னு தோணுது" வந்தனா, "எனக்கும் அது சரின்னு படுது" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, இப்போதைக்கு நாம் என்ன எல்லாம் அஸ்யூம் செஞ்சு இருக்கோம்? ஒவ்வொண்ணா அலசலாம். முதலில் ஈமெயில் மெஸ்ஸேஜ் பகுதிகள் இங்கிலீஷ் யூனிகோடில் இருக்கு"

தீபா, "ப்ராஃப், அது ஒரு அளவுக்கு ஊர்ஜிதப் படுத்தப் பட்ட யூகம். ஊர்ஜிதப் படுத்த முடியாத யூகம் என்ன இருக்கலாம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எண்கள் கொண்ட பகுதிகள், அவைகளில் அளவை வைத்து யூனிகோடில் எண்களாக இருக்கணும் அப்படின்னு யூகிச்சு இருக்கோம்" தீபா, "அந்த யூகத்தை மட்டும் யூனிகோடில் எண்ணாகவோ அல்லது எழுத்தாகவும் கூட இருக்கலாம்ன்னு கொஞ்சம் மாத்திக்கலாமா சார்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஓ, அவங்க ஐ.பி.அட்ரெஸ்ஸையும் எதாவது நொடேஷன் உபயோகிச்சு எழுதி இருப்பாங்கன்னு நீ நினைக்கறயா?" தீபா, "தெரியலை ப்ராஃப். ஒரு வேளை அப்படி உபயோகிச்சு இருந்தா கடைசி நிமிஷத்தில் நமக்கு அது ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்காது. அதனால் தான் சொன்னேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீ சொல்றது சரிதான். பாக்கி இருக்கும் சுற்றுகளில் நாம் யூகிச்சு இருக்கும் எண்கள் கொண்ட பகுதிகளையும் எழுத்துக்களாகவே எடுத்துட்டு செய்யலாம். எண்களா இருந்தாலும் தப்பாக வாய்ப்பு இல்லை" தீபா, "ஓ,கே ப்ராஃப். தாங்க்ஸ்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "தீபா, தீடீர்ன்னு உனக்கு எப்படி இது தோணுச்சு?" தீபா, "எனக்கா தோணலை ப்ராஃப். நித்தின்கூட பேசிட்டு இருந்தேன். அப்ப அவன் சொன்னான்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வந்தனா, நீ சக்திவேல்கிட்ட எதுவும் கேக்கலையா?" வாய் விட்டு சிரித்த வந்தன, "அவசியம் இல்லை ப்ரொஃபெஸ்ஸர். நித்தினும் ஷக்தியும் இதைப் பத்தி பேசியிருப்பாங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவ்வளவு க்ளோஸா அவங்க ரெண்டு பேரும்?" தீபா, "எங்க ரெண்டு பேருக்கும் பொறாமை வரும் அளவுக்கு க்ளோஸ்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒண்ணு சொல்லட்டுமா? இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்களும் அப்படி க்ளோஸ்ஸாத்தான் இருக்கணும்" தீபா, "எப்படி சொல்றீங்க ப்ராஃப்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இது ஒரு ஆள் செய்யக் கூடிய காரியம் இல்லை. அதே சமயம் ரெண்டு பேர் சேந்து செய்யும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்க் இல்லைன்னா செய்ய முடியாது. அதனால்தான் சொன்னேன். Anyway bye for now" என்று விடைபெற்றார். தீபாவும் வந்தனாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்து இருந்தனர்.Friday, 8 May 2009 1:30 PM Shankivel's Flat and Joshua's Flat, New York வெள்ளி, மே 8, 2009 பகல் 1:30 சக்திவேலின் ஃப்ளாட் மற்றும் ஜாஷ்வாவின் ஃப்ளாட், நியூ யார்க் சக்தி நித்தினுடன் தன் ஃப்ளாட்டிலும் ஜாஷ்வா தனது வீட்டிலும் இருந்தபடி அவர்களது முதல் எதிர் திசை பணமாற்றத்தை முடித்து இருந்தனர். மூவரது கைபேசிகளும் கான்ஃபெரன்ஸ் காலில் இணைக்கப் பட்டு இருந்தன. சக்தி, "எப்பவும் நாம் நைட்டில் செய்யும் வேலை இது. இப்படி பட்டப் பகலில் லீவ் போட்டுட்டு செய்யணும்ன்னு தெரிஞ்சு இருந்தா கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்" ஜாஷ்வா, "ஏன் ஆஃபீஸில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கா?" நித்தின், "இல்லை ஜாஷ், பையனுக்கு வந்தனாகூட செலவழிக்க வேண்டிய லீவெல்லாம் இப்படி வீணாகப்போகுதேன்னு கவலை" ஜாஷ்வா, "ஏன் நித்தின்? உனக்கு அப்படி இல்லையா?" சக்தி, "போகற போக்கைப் பார்த்தா அவன் கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போவானாங்கறதே சந்தேகம்" ஜாஷ்வா, "ஒ.கே கய்ஸ். இன்னும் ரெண்டே ரெண்டு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர்ஸ். அப்பறம் கொஞ்ச நாளைக்கு மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்" நித்தின், "ஜாஷ், அடுத்ததும் இப்படி பகலில்தான் இருக்குமா?" ஜாஷ்வா, "அவங்க எப்ப டெபாசிட் செய்யறாங்கறதைப் பொறுத்தது அது. இந்த ட்ரான்ஸ்ஃபருக்கு நேத்து நைட் டெபாசிட் செஞ்சு இருக்காங்க. நாம் எப்பவும் போல அவங்க டெபாசிட் செஞ்ச எட்டு மணி நேரத்துக்குள் நாம் ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்" சக்தி, "நேத்து நைட்டா?" ஜாஷ்வா, "ஆமா, நீ பாங்க் லொகேஷனை பார்க்கலையா? முதல் மில்லியன் ஸ்பெயினில் இருக்கும் எதோ ஒரு ஊரில் இருந்து டெபாசிட் ஆகி இருக்கு. ரெண்டாவது மில்லியன் லெபனானில் டெபாசிட் ஆகி இருக்கு. மூணாவது ஜெர்மனியில் ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில் டெபாசிட் ஆகி இருக்கு" நித்தின், "இந்த ஊருக்கும் கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "அவனுகளுக்கு உலகம் முழுக்க காண்டாக்ட் இருக்கு. கோல்டர் கிரஸண்ட்டிலயும் அவங்களுக்கு டீலிங்க் இருக்கு. இந்த நகரங்களில் எல்லாம் கோல்டன் கிரஸண்டின் ஆபரேஷன் நிறைய இருக்காம்" நித்தின், "கோல்டன் கிரஸண்ட்?" ஜாஷ்வா, "கோக்கெயினுக்கு எப்படி கொலம்பியா மற்றும் பெரு நாடுகளோ அதே மாதிரி ஹெராயினுக்கு வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் பர்மா சேர்ந்த கோல்டன் ட்ரையாங்கிள் (Refer Wikipedia "Golden Triangle (Southeast Asia)" for more info) எனப்படும் பகுதி. காலம் காலமா ஹெராயினுக்கு அது தான் முதல் ஸோர்ஸ். இப்ப பத்து இருபது வருஷங்களா ஈரானின் கிழக்கு பகுதி, அஃப்கானிஸ்தான் அப்பறம் பாகிஸ்தானின் மேற்கு பகுதி இது மூணும் சேர்ந்த கோல்டன் கிரஸண்ட் என அழைக்கப் படும் உலகப் படத்தில் பிறை போன்று தோன்றும் பகுதியில் ஓபியம் மற்றும் ஹெராயின் உற்பத்தி அதிகரிச்சு இருக்கு" சக்தி, "சோ, நம்ம கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்க கோக்கெயின் ஏற்றுமதி செஞ்சு ஹெராயின் இறக்குமதி செய்யறாங்களா?" ஜாஷ்வா, "அப்படித்தான் ஆண்டர்ஸன் சொன்னான்"aturday, 9 May 2009 1:30 PM Make-shift Test Lab, R&AW, New Delhi சனி, மே 9, 2009 பகல் 1:30 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி சனி, ஞாயிறு இருதினங்களிலும் தீபாவும் வந்தனாவும் அலுவலகத்துக்கு வருவது வழக்கமாகி இருந்தது. அன்றைய காலையில் முடிக்க வேண்டியவைகளை முடித்து வந்தனாவின் கேபினில் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தனர். வந்தனா, "தீபா, அன்னைக்கு ப்ராஃப் சொன்னதை யோசிச்சுப் பாத்தியா?" தீபா, "என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்களைப் பத்தித்தானே? எஸ் வெரி மச். அவர் சொன்னது மட்டும் இல்லை. சக்தி உனக்கு சொன்ன விஷயங்கள். நித்தின் எனக்கு சொன்ன விஷயங்கள் இதை எல்லாம் சேர்த்துப் பாரு" வந்தன, "ம்ம்ம் ... யோசிச்சுப் பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு" தீபா சற்று நேரம் மௌனமாக இருந்தாள். வந்தனா, "என்ன யோசிக்கறே?" தீபா, "நித்தின்-சக்தி .... கில்9-மோர்லா .... அந்த கோணத்தில் யோசிச்சேன்" வந்தனா, "அப்ப ஹார்ஷ்7?" தீபா, "Who else? Joshua!" புன்னகைத்த வந்தனா, "காட்! பயமா இல்லை?" தீபா, "நோ வே! அப்படி யோசிக்கவே எக்ஸைட்டடா இருக்கு!! I really wish these dudes have done that .. not that they are not capable" வந்தனா, "அதுதான் ... I don't have an iota of doubt on their capabilities .. the question is .. would they have? அவங்க செஞ்சு இருப்பாங்களா?" தீபா, "சான்ஸே இல்லை. பொதுவா ஹாக்கர் அப்படிங்கற முகமூடிக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கும் ஆளுங்களுக்கு நேர் மாறான ஆளுங்க இதுக மூணும். They are too sincere about everything" வந்தனா, "அதுதான் என் கணிப்பு. ரொம்ப சின்ஸியரான பேர்வழிகள் மூணும். மேலோட்டமா பார்த்தா தெரியலைன்னாலும் ஜாஷ்வா ஒரு hen-pecked husband. சஞ்சனா கஷ்டப் படற மாதிரி அவ ஆதரிக்காத எதுவும் செய்ய மாட்டார். அதே மாதிரிதான் சக்தியும்." தீபா, "ஓ, சக்தி ஆல்ரெடி பொண்டாட்டி தாசன் ஆயிட்டானா?" வந்தனா, "சீ, நான் அப்படி சொல்லலை. குடும்பம் அவனுக்கு ரொம்ப முக்கியம் அதை சொல்ல வந்தேன்"Friday, 15 May 2009 9:00 PM Joshua's Flat, Harlem, New York வெள்ளி, மே 15, 2009 இரவு 9:00 ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம், நியூ யார்க் அன்றும் காலையில் இருந்து பகல் இரண்டு மணி வரை நண்பர்கள் மூவரும் தத்தம் வீடுகளில் இருந்தபடி அவர்கள் ஏற்றுக் கொண்ட இரண்டாவது ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரை முடித்து இருந்தனர். இரவு உணவுக்கு ஜாஷ்வாவின் வீட்டில் கூடி இருந்தனர். சஞ்சனா, "என்ன இன்னைக்கு மூணு பேரும் ரொம்ப டயர்டா இருக்கற மாதிரி இருக்கு?" சக்தி, "ஏண்டா இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபருக்கு ஒத்துகிட்டோம்ன்னு இருக்கு" சஞ்சனா, "ஏன்?" ஜாஷ்வா, "அஞ்சே அஞ்சு மில்லியன். ஆனா அவனுக்கு டெபாசிட் செஞ்ச ப்ரான்சில் இருந்து அந்த ட்ரேடிங்க் கம்பெனியின் கணக்கில் வந்து இருக்கான்னு வெரிஃபை செய்யறதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு" சக்தி, "எங்கே இருந்து பிடிச்சாங்க அந்த மாதிரி ஊர்களை?" சஞ்சனா, "எந்த ஊர்?" சக்தி, "கொயட்டான்னு பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஊர். ஜாஷ், எனக்கு ஒரு சந்தேகம். அங்கே இருக்கும் ஒரு பாங்கில் இருந்து எதுக்கு வயர் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சு இருக்காங்க. நேரடியா கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களோட யூ.எஸ் அக்கௌண்டுக்கே அவங்க செஞ்சு இருக்கலாமே" ஜாஷ்வா, "நான் ஆண்டர்ஸன் கிட்ட கேட்டேன். நான் அன்னைக்கு சொன்னதையே தான் இன்னைக்கும் சொன்னான். யாருக்கு பணம் போகுதுன்னு கொடுக்கறவங்களுக்கு தெரியக் கூடாதாம். அதனால்தான்" சஞ்சனா, "எல்லாப் பணமும் அந்த ஊரில் இருந்துதான் வந்ததா?" நித்தின், "மூணு மில்லியன் மட்டும் அங்கே இருந்து. மத்த ரெண்டு மில்லியனில் ஒண்ணு மறுபடி ஸ்பெயினில் இருக்கும் ஒரு ஊர், மத்தது லெபனானில் இருந்து" சஞ்சனா, "எனக்கு என்னமோ இது ட்ரக் ட்ரேட் சம்மந்தப் பட்ட பணம் இல்லைன்னு தொணுது" ஜாஷ்வா, "ஏன்?"

சஞ்சனா, "நான் இருந்த இயக்கம் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடு பட்டு இருந்துது. கோல்டன் கிரஸண்ட்டின் பண போக்கு வரத்து ஈரானில் இருக்கும் டெஹ்ரானில்தான் நடக்கும். இல்லைன்னா பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில்" ஜாஷ்வா, "சக்தி, ப்ராஞ்ச் டீடெயில்ஸ் எல்லாம் தனியா ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கியா?" சக்தி, "Now that you asked .. போன தடவை செஞ்ச ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் டீடெயிலும் இருக்கு. அவங்க கிட்ட இருந்து எந்த கன்ஃபர்மேஷனும் வரலையே" ஜாஷ்வா, "அப்படி வந்தாலும் டிலீட் பண்ணாதே?" நித்தின், "எதுக்கு சொல்றே ஜாஷ்வா? அது நமக்குத்தானே ரிஸ்க்?" ஜாஷ்வா, "உங்க லாப்டாப்பில் இருக்கா இல்லை டெஸ்க்டாப்பிலா?" சக்தி, "டெஸ்க் டாப்பில்தான். லாப்டாப்பை இந்த மாதிரி விஷயம் எதுக்கும் உபயோகிக்க மாட்டேன்" ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் ஸோர்ஸ் கோட் எல்லாம் எங்கே இருக்கு?" நித்தின், "அது மட்டும் எங்க ரெண்டு பேர் லாப்டாப்பில் என்க்ரிப்ட் செஞ்சு ஸ்டோர் ஆகி இருக்கும். தவிர, இன்டர்நெட்டில் இருக்கும் ஒரு சர்வரிலும் ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்கோம்" ஜாஷ்வா, "அப்படின்னா இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் விவரங்களையும் என்க்ரிப்ட் செஞ்சு அந்த சர்வரில் ஸ்டோர் செஞ்சுடு" நித்தின், "எதுக்கு சொல்றே ஜாஷ்?" ஜாஷ்வா, "ஜஸ்ட் ஒரு முன் ஜாக்கிரதைக்காக .. " சக்தி, "சரி செய்யறோம் ஜாஷ். டேய், எதுக்கு முன் ஜாக்கிரதைன்னு கேக்காதே அப்பறம் அவன் ஒர் பெரிய லெக்சர் அடிப்பான். எனக்கு பசிக்குது"Monday, 18 May 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், மே 18, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முரளீதரன், "என்ன ப்ரொஃபெஸ்ஸர்? எவ்வளவு தூரம் வந்து இருக்கோம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சனிக் கிழமை சாயங்காலத்தில் இருந்து நானும் உங்க டெஸ்ட் லாப்பில்தான் இருக்கேன். முடிஞ்ச மாதிரி இருக்கு ஆனா நமக்கு தேவையான விவரத்தைத் தவிர எல்லாம் கிடைச்சு இருக்கு" முரளீதரன், "என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" வந்தனா, "நான் சொல்றேன் சார். சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸைத் தவிர மெஸ்ஸேஜ்களில் இருக்கும்மற்ற எல்லா பகுதிகளையும் டிக்ரிப்ட் செஞ்சாச்சு. ஒரு அளவுக்கு துல்லியமாவே செஞ்சு இருக்கோம்" முரளீதரன், "ஒரு அளவுக்குன்னா?" வந்தனா, "கமா, ஃபுல் ஸ்டாப் மாதிரி எழுத்துக்களை தவிர மத்த எழுத்துக்கள் எல்லாம் அப்படியே விளம்பர ஈமெயில் மெஸ்ஸேஜுக்கு மாட்ச் ஆகுது. அதே மாதிரி எந்த கணிணிக்கு மேஸ்ஸேஜ் வந்து இருக்கோ அந்த கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்ஸும் தெளிவா தெரியுது. ஆனா சர்வரின் ஐ,பி.அட்ரெஸ் மட்டும் இன்னும் scrambledஆ இருக்கு" முரளீதரன், "என்ன தீபா ரொம்ப சைலண்டா இருக்கே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவளுக்கு நேத்தில இருந்தே நாம் எங்கேயோ தப்பு பண்ணறோம்ன்னு தோணிட்டு இருக்கு" தீபா, "ஆமா சார். We are missing something out ... " முரளீதரன், "ஸ்க்ராம்பிள்டா இருக்குன்னா என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இந்த சர்வர் ஐ.பி அட்ரெஸ் மட்டும் நாங்க மாட்ச் செய்யும் எந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் மாட்ச் ஆக மாட்டேங்குது" முரளீதரன், "ஐ.பி.அட்ரெஸ்ஸில் எண்கள் மட்டும்தானே இருக்கும். எழுத்துக்களுடன் எதுக்கு மாட்ச் செய்யறீங்க?" தீபா, "நான் தான் சார் அதை செய்யச் சொன்னேன். ஒரு வேளை அவங்க எண்களை அப்படியே 1, 2, 3ந்னு எழுதாமல் அதுக்கு பதிலா வேறு ஒரு நொடேஷன் உபயோகிச்சு இருந்தா கண்டு பிடிக்க வசதியா இருக்கும்ன்னு யூனிகோட் எழுத்துக்கள் கூடவும் மேட்ச் செஞ்சோம்" முரளீதரன், "யூனிகோட் எழுத்துக்கள்ன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "யூனிகோடில் ஏராளமான எழுத்துக்கள் இருக்கும். உலகத்தில் இருக்கும் வெவ்வேறு மொழிகளில் இருக்கும் எழுத்துக்களும் யூனிகோடில் இருக்கு. ஆனா மாங்க்ஸ் பாட் நெட் காரங்க இதுவரைக்கும் ஆங்கிலத்தை தவிர எந்த மொழியும் உபயோகிச்சது இல்லை என்கிற காரணத்தினால யூனிகோடில் இருக்கும் எண்களுக்கான குறிகள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் இவைகளை மட்டும் வெச்சு மாட்ச் செஞ்சோம். மெஸ்ஸேஜில் எழுத்துக்கள் கொண்ட பகுதிகள் எல்லாம் துல்லியமா டீகோட் ஆகி இருக்கு. எண்கள் கொண்ட பகுதியான கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்கூட அழகா டீகோட் ஆகி இருக்கு." முரளீதரன், "கணிணியின் ஐ.பி அட்ரெஸ்ன்னா? யூ மீன் எந்த கணிணிக்கு மெஸ்ஸேஜ் வந்ததோ அந்த கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்ஸை சொல்றீங்களா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா. ஆனா சர்வரின் ஐ.பி அட்ரெஸ் மட்டும் மாட்ச் ஆக மாட்டேங்குது" முரளீதரன், "அதை மட்டும் அவங்க வேறு மொழி எதிலாவுது எழுதி இருந்தாங்கன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சார், ஐ.பி.அட்ரெஸ்ஸில் வெறும் எண்கள்தான் இருக்கும். எல்லா மொழிகளிலும் எண்கள் .... " என்று நிறுத்தினார் தீபா, "மை காட்! ப்ராஃப்!! They are using some other numerals .. like Roman, " ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீ சொல்றதும் சரிதான். ஆனா அதே லைனில் யோசிச்சா அவங்க மத்த மொழியில் இருக்கும் நியூமரலுக்கு பதிலா மத்த எழுத்துக்களை உபயோகிச்சு இருக்க முடியும்ன்னு தோணுது இல்லையா? அதாவது, நீ அன்னைக்கு சொன்ன மாதிரி Aன்னா ஒண்ணு, Bன்னா ரெண்டு, Cன்னா மூணுங்கற மாதிரி மத்த மொழியில் இருக்கும் alphabetsஐ உபயோகிச்சு இருந்தா? அப்படிப் பார்த்தா எத்தனை மொழிகளை மாட்ச் செய்வது" முரளீதரன், "சரி ப்ரொஃபெஸ்ஸர். நம்ம கிட்ட இப்ப சூப்பர் கம்பியூட்டர் இருக்கு. யூனிகோடில் இருக்கும் எல்லா மொழிகளையும் மாட்ச் செஞ்சு பாத்தா என்ன? அதுக்கு எத்தனை நாள் ஆகும். எப்படியும் மே மாசக் கடைசின்னுதான் நாம் கிரிஸ்டஃபருக்கு வாக்கு கொடுத்து இருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி அதையும் செஞ்சு பாத்துடலாம். இன்னும் ரெண்டு வாரம் ஆகும்" Thursday, 21 May 2009 4 Accused of Bombing Plot at Bronx Synagogues Four men were arrested Wednesday night in what the authorities said was a plot to bomb two synagogues in the Bronx and shoot down military planes at an Air National Guard base in Newburgh, N.Y. The men, all of whom live in Newburgh, about 60 miles north of New York City, were arrested around 9 p.m. after planting what they believed to be bombs in cars outside the Riverdale Temple and the nearby Riverdale Jewish Center, officials said. But the men did not know the bombs, obtained with the help of an informant for the Federal Bureau of Investigation, were fake. ..... வியாழன்ம், மே 21 2009 நியூ யார்க் டைம்ஸ் தினசரியில் வெளிவந்த ஒரு செய்தியின் சாரம் ப்ராங்க்ஸ் பகுதியில் இருக்கும் யூத மத ஆலயத்தை குண்டு வைத்து தகர்க்கவும் நியூபர்க் பகுதியில் இருக்கும் ஏர் நேஷனல் கார்ட் விமானத் தளத்தின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் திட்டமிட்ட நான்கு நபர்களை நேற்று இரவு எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நான்கு நபர்களும் நியூ யார்க் நகரத்தில் இருந்து 60 மைல் தொலைவில் இருக்கும் நியூபர்க் என்னும் இடத்தை சேர்ந்தவர்கள். நேற்று இரவு 9 மணி அளவில் ரிவர்டேல் யூத மத ஆலயத்தில் வெடி குண்டு வைத்த பிறகு அவர்கள் கைது செய்யப் பட்டனர். உண்மையான வெடி குண்டுகளுக்கு பதிலாக வெற்று குண்டுகளை எஃப்.பி.ஐ அவர்களுக்கு மறைமுகமாக கொடுத்து இருந்தது ...Friday, 22 May 2009 9:30 AM Federal Plaza - NYPD Head Quarters - US Attorney's Office வெள்ளி, மே 22, 2009 காலை 9:30 ஃபெடரல் ப்ளாஸா, FBI தலைமை அலுவலகம் - நியூ யார்க் காவல் துறை தலைமை அலுவலகம் - அரசாங்க வழக்கறிஞ்யர் அலுவலகம் FBI Agent சைமண்ட் வில்லியர்ஸ், "ஹல்லோ கமிஷனர் கெல்லி. ஹல்லோ அட்டார்னி ஸ்னைடர். இன்னைக்கு அந்த நாலு பேரையும் கோட்டில் ஆஜராக வைக்கப் போறீங்களா?" அரசாங்க வழக்கறிஞர் எரிக் ஸ்னைடர் (US Attorney Eric Snyder) "ஆஃபீஸர் வில்லியர்ஸ், நீங்க எங்களை இப்ப தர்மசங்கடமான நிலமையில் நிறுத்தி இருக்கீங்க. அந்த நாலு பேரையும் சுத்தி எதோ மர்மம் இருக்கு அதை மறைச்சு அவங்களாகவே இந்த காரியத்தை செஞ்சதா ப்ரெஸ்ல சொல்லச் சொல்லறீங்க. அவங்களுக்கு ஏது பணம் அப்படின்னு யாராவுது கேள்வி கேட்டா?" சைமண்ட் வில்லியர்ஸ், "ப்ரெஸ்ஸைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. நீங்க அந்த ப்ரெஸ் மீட்டில் பேசவேண்டிய பேச்சை ஏற்கனவே நாங்க எல்லா பத்திரிகைகளுக்கும் டி.வி சானல்களுக்கும் கொடுத்தாச்சு. They have alredy bought the story. அவங்க நாம் சொல்றதை நம்பறாங்க" நியூ யார்க் காவல் துறை தலைமை அதிகாரி ரேய்மண்ட்.W.கெல்லி (Raymond W Kelly), "Did you give them an option? அரசாங்க முத்திரையோட இதுதான் நடந்தது. இதுக்கு மேல் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லி இருப்பீங்க." சைமண்ட் வில்லியர்ஸ், "கமிஷனர், 9/11க்கு அப்பறம் நிறைய பேர் கேள்வி கேக்கறதை நிறுத்திட்டாங்க" எரிக் ஸ்னைடர், "சரி, என்னதான் நடந்தது? ஏன் இந்த ஹஷ் ஹஷ்?" சைமண்ட் வில்லியர்ஸ், "நிஜமா நாங்களே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா நடந்ததை புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்கோம். எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன். நம் நாட்டில் இருக்கும் பல சிறைச்சாலைகளில் இருந்து விடுதலையாகிப் போகும் கைதிகள் பலரை ஒரு அல்-கைதா தீவிரவாதி அணுகினதா எங்களுக்கு தகவல் வந்து இருந்தது. ஆனா, யார் அந்த தீவிரவாதி, யார் அவனுக்கு இங்கே அடைக்கலம் கொடுத்து இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியலை. இந்த நாலு பேரும் மே 2008ல் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனவங்க. எங்க இன்ஃபார்மர் ஒருத்தன்கிட்ட இவங்க நாலு பேரும் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பெரிய ஆபரேஷனில் கலந்துக்கப் போறதாவும் அது முடிஞ்ச உடனே நாட்டை விட்டு போகறதாவும் பெருமை அடிச்சுட்டு இருக்காங்க. இது நடந்தது ஜூன் 2008ல். இந்த விவரம் தெரிஞ்சதும் நாங்க இவங்களை வாட்ச் பண்ண தொடங்கினோம். நாங்களே எங்க ஆள் ஒருத்தனை ஆயுதம் சப்ளை செய்யறவன்னு மறைமுகமா அவங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சோம். ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு பிறகு இந்த நாலு பேரும் வெடி மருந்து மற்றும் ஏவு கணை வேணும்ன்னு அவனை அணுகி இருக்காங்க. அவன் உடனே எங்களுக்கும் சொன்னான். அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாம் உங்களுக்கும் தெரியுமே?" எரிக் ஸ்னைடர், "அல்-கைதாவுடன் அவங்க ஒப்பந்தம் என்ன?" சைமண்ட் வில்லியர்ஸ், "அல்-கைதா இவங்களுக்கு இந்த தாக்குதலுக்கு பதினெட்டு மில்லியன் டாலர் கொடுக்கறதா ஒத்துட்டு இருக்கு. எட்டு மில்லியன் தாக்குதலுக்கு முன்னால். பாக்கி பத்து மில்லியன் வெற்றிகரமா தாக்குதலை முடிச்சதும்ன்னு. எந்த இடங்களை தாக்கணும்ன்னு அல்-கைதா அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கு" கமிஷனர் கெல்லி, "அது சரி, இப்ப நீங்க ஏன் அல்-கைதா பின்னணியில் இருப்பதை சொல்ல வேண்டாம்ன்னு சொல்லறீங்க?" சைமண்ட் வில்லியர்ஸ், "இந்த தாக்குதலை அல்-கைதா முழுசா ப்ளான் பண்ணாமல் ஏதோ அவசரத்தில் தொடங்கின மாதிரி தெரியுது. சொன்ன மாதிரி அவங்களுக்கு எட்டு மில்லியன் ஒரு வங்கி கணக்கில் டெபாசிட் ஆகி இருப்பதை காண்பிச்சு இருக்காங்க. இவங்களும் அதில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து எங்க இன்ஃபார்மருக்கு கொடுத்து இருக்காங்க. ஆனா பாக்கி பணம் அவங்க கைக்கு போறதுக்கு முன்னால் அவங்களை கொல்ல அல்-கைதா திட்டம் போட்டு இருந்திருக்கு" கமிஷனர் கெல்லி, "ஓ, அதனால் தான் அன்னைக்கு அவங்களை அரெஸ்ட் செய்ய அவ்வளவு பந்தோபஸ்தா?" சைமண்ட் வில்லியர்ஸ், "ஆனா, எங்களால அல்-கைதா தீவிர வாதியை பிடிக்க முடியலை. நாங்க போறதுக்கு முன்னால் அவன் தப்பிச்சுட்டான்"எரிக் ஸ்னைடர், "அந்த வங்கி கணக்கைப் பத்தி விசாரிச்சு இருப்பீங்களே? அதில் இருந்து என்ன தெரிய வந்தது?" சைமண்ட் வில்லியர்ஸ், "அதிலும் நிறைய மர்மங்கள் இருக்கு" கமிஷனர் கெல்லி, "என்ன மர்மம்?" சைமண்ட் வில்லியர்ஸ், "விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்க அந்த கணக்குகளை பத்தி கேட்காதது எங்க தப்பு. இவங்க கிட்ட அந்த கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கையெழுத்துப் போட்ட செக் லீஃப்ஸ் கொடுத்து இருக்காங்க. தவிர இருபத்து ஐந்து ஆயிரம் டாலர் வரைக்கும் லிமிட் இருக்கும் ஒரு டெபிட் கார்ட்டும் கொடுத்து இருக்காங்க. இவங்களும் அந்த டெபிட் கார்டை உபயோகிச்சுத்தான் பணம் எடுத்து இருக்காங்க. அந்த செக் லீஃப்களில் இருக்கும் கையெழுத்துக்கும் அந்த கணக்கை தொடங்கினவர் கையெழுத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்யறதுக்கு முன்னாடியே அதில் இருந்த பணம் எல்லாம் கேமன் ஐலண்டில் (Cayman Island) இருக்கும் ஒரு கணக்குக்கு அனுப்பிட்டாங்க. அது யாரோ பினாமியின் பெயரில் தொடங்கிய கணக்கு. அந்த கணக்கின் உரிமையாளர் இப்போ உயிரோடே இல்லை. ஆனா அந்த கணக்குக்கு ரெண்டு வியாபார நிறுவனங்களிடம் இருந்து அந்த எட்டு மில்லியன் வந்து இருக்கு. முதல் மூணு மில்லியன் ஒரு ஈரானியனுக்கு சொந்தமான நிறுவனம். நாங்க விசாரிக்கப் போனபோது அவன் கொல்லப் பட்டு இருந்தான். இரண்டாவது நிறுவனமும் லெபனானில் இருந்து இங்கே குடியேறிய ஒரு தனி ஆளுக்கு சொந்தமானதுதான். அவன் இப்போ அமெரிக்காவில் இல்லை. லெபனானுக்கு வியாபர விஷயமா போயிருப்பதா சொல்றாங்க. நாங்க அவனைப் பிடிக்க வலை வீசி இருக்கோம். ஆனா உண்மையா பிணமாத்தான் பிடிபடுவான் அப்படிங்கறது எங்க யூகம்" கமிஷனர் கெல்லி, "இந்த பணத்தை யார் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சது?"

சைமண்ட் வில்லியர்ஸ், "எல்லாம் ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர்ஸ். இந்த நிறுவனங்களின் சொந்தக்காரர்களே கணிணி மூலம் செஞ்சு இருக்காங்க. அந்த இரண்டு நிறுவனக் கணக்குகளையும் ஃப்ரீஸ் பண்ணி இருக்கோம். ஆனால், அதில் இருந்து எந்த தடயமும் கிடைக்கும்ன்னு எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை" எஃப்.பி.ஐ அந்த நிறுவனங்களின் கணிணிகளை பரிசோதிப்பதற்குள் அவைகளில் இருந்த மாங்க்ஸ்-2 தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது! மாங்க்ஸ்-2 மூலம் நடந்த ட்ரான்ஸ்ஃபர் என்று துளியும் எஃப்.பி.ஐ சந்தேகிக்க வில்லை!! எரிக் ஸ்னைடர், "ஆஃபீஸர் வில்லியர்ஸ். சரி, இது ஒரு ஸென்ஸிடிவான கேஸ். நீங்க சொல்ற மாதிரி ப்ரெஸ் மீட்டில் சொல்றேன். ஆனா, பணம் எப்படி வந்ததுன்னு நிச்சயம் யாராவது கேப்பாங்க. கேட்கலைன்னாலும் மக்கள் சந்தேகப் படும்படியா எழுதுவாங்க." சைமண்ட் வில்லியர்ஸ், "சரி, அப்படின்னா. எட்டு மில்லியன் டாலர் அவங்களுக்கு வெளி நாட்டில் இருந்து வந்து இருக்குன்னு மட்டும் ப்ரெஸ் மீட்டில் சொல்லுங்க. யாரிடம் இருந்து அந்த பணம் வந்து இருக்குன்னு நாங்க விசாரிச்சுட்டு இருப்பதா சொல்லுங்க. இது அந்த தீவிரவாதி எங்களை திசை திருப்பிட்டதா நினைக்க உதவும்" எரிக் ஸ்னைடர், "சரி"

No comments:

Post a Comment