Friday, February 27, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 2


அவளுடைய குழப்பமான முகத்தை பார்த்துக்கொண்டே “ மான்சி நான் சொலறதை கவனமா கேளு.... நான் உன்னை முதன்முதலாக சந்திச்சப்ப உன்னோட அழகுதான் என்னை கவர்ந்தது....
வீட்டுக்கு வந்து ரேகாகிட்ட உன்னை பத்தி விசாரிச்சேன்.....
அவ உன் குடும்பத்தை பத்தியும் உன்னோட இளவயது இழப்புகளை பத்தியும் நிறைய சொன்ன....
அதன்பிறகுதான் உன்னை மனசார நேசிக்க ஆரம்பிச்சேன்...
வாழ்ந்தா உன்கூடதான் வாழனும்னு முடிவு பண்ணேன் மான்சி ....
உன்னை எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும் கலங்கவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்”.... இதை அவன் சொல்லிகொண்டு இருக்கும் போதே இவன் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்தது


ரகு அதில் ஒரு கப்பை எடுத்து மான்சியின் முன்பு வைத்துவிட்டு..”ம் சாப்பிடு மான்சி” என்று சொல்லிவிட்டு இவன் கப்பில் இருந்த ஐஸ்கிரீமை ஸ்பூனால் கிளறிக்கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தான்


“என்னடா இவன் இவ்வளவு நாளா இதையெல்லாம் சொல்லாம இப்போ வந்து சொல்றானேன்னு நீ நெனைப்ப....
உன்னோட படிப்பு என்னால டிஸ்டர்ப் ஆகக்கூடாதுன்னுதான் நான் இவ்வளவு நாளா பொருமையா இருந்தேன்....
இன்னும் ஒரு மாசத்துல உன் படிப்பு முடிஞ்சதும் என் அப்பா அம்மாவோடு வந்து உன் மாமாகிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேசனும்னு நெனைச்சேன் மான்சி....
ஆனால் இப்போ உடனடியாக சொல்லவேண்டிய சூழ்நிலை வந்திருச்சு மான்சி” என்று தயங்கி நிறுத்தியவன்....




அவளின் வலதுகையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டான் .... இவ்வளவு நேரம் தெளிவாக இருந்த அவனது முகம் இப்போது கவலையுடன் இருக்க மெலிந்த குரலில் பேசினான்


“மான்சி என் ஆபிஸ்ல எனக்கு பிரமோஷன் குடுத்து ஆறுமாச டிரைனிங்காக என்னை யுஎஸ் அனுப்பறாங்க....
இந்த விஷயத்தை என் வீட்ல கூட இன்னும் யாருக்கும் சொல்லலை உன்கிட்டதான் மொதல்ல சொல்றேன்....
மொதல்ல எனக்கு யுஎஸ் போக விருப்பமில்லை....
ஆனால் இந்த பிரமோஷனால நம்ம பியூச்சர் நல்லாருக்கும்ன்னு யோசிச்சபிறகுதான் போகலாம்னு முடிவு பண்ணேன்.....
என்ன மான்சி நான் போகட்டுமா” என்று அவள் கண்களையே பார்த்துக்கொண்டு ரகு கேட்க


அவன் அவளை முன்நிறுத்தி அப்படி கேட்டது மான்சிக்கு அவளை எங்கே வான்மேகங்களுக்கு நடுவில் சிம்மாசனமிட்டு அமர்த்தியது போல இருக்க அவள் முகம் பூவாய் மலர “அதான் உங்க பியூச்சர்க்கு நல்லதுன்னு சொல்றீங்களே பின்ன என்ன போகவேண்டியதுதானே”....

என்று சொல்லி அவள் வாயை மூடும்முன் “நான் சொன்னது நம்மோட பியூச்சர் நல்லாயிருக்கும்னு.... என்னோட பியூச்சரை பத்தி இல்லை” என்று அழுத்தமான குரலில் ரகு கூற

தனது வார்த்தை அவனை பாதித்ததை உணர்ந்த மான்சி சந்தோஷச் சிரிப்புடன் “இன்னும் ஆறுமாசம் தான அதன்பிறகு இங்க வரப்போறீங்க.... அதுக்கு போய் ஏன் இப்படி முகத்தை உம்முன்னு வச்சிருக்கீங்க... சந்தோஷமா போய்ட்டு வாங்க” என்று மான்சி தெளிவாக சொல்ல

“அப்படின்னா நான் வர்றவரைக்கும் எனக்காக இதே அன்போட காத்திருப்பாயா மான்சி”

என்று ரகு கிறக்கமான குரலில் கேட்க மான்சி தலைகவிழ்ந்து “ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல

ரகு தன்னுடைய கைகளுக்குள் இருந்த அவள் கையை எடுத்து தன் உதடுகளில் பதிக்க.... இதை எதிர்பார்க்காத மான்சி அதிர்ந்து போய் அவன் கைகளை உதறிவிட்டு பதட்டத்துடன் எழுந்து நின்றுவிட்டாள்

“ஸாரி ஸாரி மான்சி நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்.... எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க மான்சி ப்ளீஸ் உட்கார்” என்று ரகு கெஞ்ச

மான்சி சுற்றிலும் தன்னை வேடிக்கை பார்பதை உணர்ந்து மறுபடியும் உட்கார்ந்துவிட்டாள்

“ஸாரி மான்சி இதெல்லாம் உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் என்னை மன்னிச்சுடும்மா” என இறங்கிய குரலில் ரகு மறுபடியும் பரிதாபமாக கேட்க

அவனின் அந்த குரல் மான்சியை என்னவோ செய்ய “ பிடிக்காதுன்னு இல்லை பொதுஇடத்தில் இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணதும் கொஞ்சம் பதட்டமாகிட்டேன்” என்று அவனை சமாதனப்படுத்த கூறினாள்

“அப்படின்னா தனிஇடத்தில் சொல்லிட்டு கொடுத்தா ஓகேயா” என்று ரகு குறும்புடன் கேட்க

“ம்ம் ஆசைதான் அதுக்கு வேற ஆளைப்பாருங்க” என்றவள் “ இன்னும் ரேகாவை கானோம் வாங்க வெளியே போய் பார்க்கலாம்” என்று எழ முயற்ச்சிக்க

“கொஞ்சம் இரு மான்சி இன்னும் ஒருவிஷயம் இருக்கு” என்று அவளை தடுத்தவன் தனது இடுப்பை எக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய நகை டப்பாவை எடுத்து அவள் முன் நீட்டி

“இது நம்முடைய இந்த முதல் சந்திப்புக்கு என்னோட அன்பு பரிசு வாங்கி பாரு மான்சி” என்று அவள் கையில் வைக்க

மான்சி அதை வாங்கி திறந்து பார்த்தாள் உள்ளே ஒரு சிறிய பிளாட்டினம் மோதிரம் இருந்தது.... மான்சி நிமிர்ந்து அவனைப்பார்த்து “இப்போ எதுக்கு இதெல்லாம்” என்றாள்

“என்ன மான்சி இப்படி கேட்டுட்ட இந்த ரெண்டு வருஷத்துக்கு அவனவன் என்னென்னவோ குடுத்திருப்பான் நான் ஏதோ என்னால முடிஞ்சது இந்த மோதிரத்தை குடுத்தேன்” என்று ரகு கிண்டல் குரலில் கூற

மான்சி அந்த மோதிரத்தை நகை டப்பாவில் இருந்து வெளியே எடுத்து பார்க்க....

"குடு மான்சி நான் போட்டுவிடறேன்" என்று ரகு கையை நீட்ட

"இல்ல பரவாயில்லை நானே போட்டுக்கிறேன்" என்ற மான்சி தன் விரலில் அந்த மோதிரத்தை போட்டப்பார்த்தாள்....அவளின் எந்த விரலுக்கும் போகாமல் மோதிரம் ரொம்பவும் லூசாக இருந்தது....

ரகுவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது " சரி நான் அப்புறமா போட்டுக்கிறேன்" என்று மான்சி மோதிரத்தை தனது கைப்பையில் வைத்துகொண்டாள்

அப்போது ரேகா வருவது தெரிய இருவரும் அமைதியாக ஏற்கனவே கரைந்திருந்த ஐஸ்கிரீமை மேலும் கலக்கி கரைத்தனர்


ரேகா வருவதை பார்ததும் இருவரும் அமைதியாகிவிட.....

மான்சி அருகில் அமர்ந்த ரேகா “ஏய் இது ரெண்டுபேரும் ஐஸ்கிரீமை கூழாக்கிட்டீங்க.... ச்சே சாப்பிடமா இப்படி வேஸ்ட் பண்றது நேஷனல் வேஸ்ட்ப்பா”.... என்று சலிப்புடன் கூறிவிட்டு மான்சியைப் பார்க்க.....

மான்சி ஸ்பூனால் இன்னும் நன்றாக ஐஸ்கிரீமை கலக்கிக்கொண்டு இருக்க.....அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரகு...... “ என்ன மான்சி வேற கொண்டு வரச்சொல்றேன்.... அதை எடுத்து வை” என்று கூறி மான்சி எதிரில் இருந்த கப்பை எடுத்து தள்ளி வைத்தான்

“டேய் அண்ணா நானும் இங்கதான் இருக்கேன் எனக்கு ஏதாவது ஆடர் பண்ற ஐடியா இருக்கா” என்று ரேகா நக்கலாக கேட்டாள்

“ம் உனக்கு என்ன வேனும்னு சொல்லு ரேகா” என்ற ரகு பேரரை அழைக்க

“ ம்ஹூம், ரொம்ப நேரமாயிடுச்சு அதனால எதுவும் வேண்டாம்.... மொதல்ல இவளை கொண்டுபோய் நான் ஹாஸ்டல்ல விடனும் இல்லேன்னா அந்த வார்டன்னுக்கு பதில் சொல்லமுடியாது.... ஏற்கனவே அனுப்பமுடியாதுன்னு சொன்னவரை கொஞ்சிகேட்டு இவளை கூட்டிட்டு வந்தேன்” என்ற ரேகா எழுந்துகொண்டு கிளம்பு என்பது மான்சியை பார்க்க.... அவள் ரகுவை பார்த்தாள்

அவள் அனுமதிக்காக தன்னை பார்த்தது ரகுவுக்கு உற்சாகத்தை கொடுக்க..... மலர்ந்த முகத்துடன் “ ம் கிளம்பு மான்சி” என்று அவனும் எழுந்துகொண்டான்
மான்சியும் ரேகாவும் வெளியே வர.... பில்லுக்கானப் பணத்தை கொடுத்துவிட்டு ரகுவும் வெளியே வந்தான்.....

சென்று கொண்டிருந்த ஒரு காலி ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அதில் இவர்களை ஏத்திவிட்டவன்.... உள்ளே குனிந்து கையை நீட்டி “மான்சி” என்று அழைத்தான்

மான்சி அமைதியாக இருக்க.... ரேகா அவள் கையை எடுத்து ரகுவின் கைகளில் வைக்க... ரகு மான்சியின் கையை பிடித்துக்கொண்டு.... “மான்சி கவனமா படி.... மனசுல எந்த குழப்பமும் வேண்டாம்..... நான் என்னிக்கு யுஎஸ் கிளம்பறேன்னு ரேகாகிட்ட தகவல் சொல்றான்..... என்னை அனுப்பிவைக்க நீ கட்டாயம் ஏர்போர்ட் வரனும்.... வருவியா மான்சி...?.” என்று அவள் விரல்களை வருடிக்கொண்டே ரகு கேட்க

மான்சி நிமிர்ந்து அவன் கண்களை பார்த்துக்கொண்டே “ம் வருவேன்” என்று தலையசைத்து கூற

ரகுவின் மனதில் பாரதிராஜாவின் படங்களில் வரும் வெள்ளை தேவதைகள் வந்து கைகளை விரித்து லாலாலா என்று பாட்டு பாடி நடனமாட...... கண்களில் தேக்கிய அபரிமிதமான காதலோடு மான்சியின் விரல்களை முத்தமிடுவதற்குக்காக தன் உதட்டுக்கு எடுத்துச்செல்ல....

ஆட்டோ டிரைவர் திரும்பப் பார்த்து “சார் எனக்கு நேரமாச்சு வேற சவாரிக்கு போகனும் கிளம்பட்டுமா சார்” என்று கேட்க

ரகு ஏமாற்றத்துடன் மான்சியின் கையை விட்டுவிட்டு “பை மான்சி” என்று விடைகொடுத்தான்

ஆட்டோ கிளம்பியதும் மான்சி எதையோ பெரிதாக சாதித்தவள் நிம்மதியுடன் சீட்டில் சாய்ந்து கொள்ள..... ரேகாதான் புலம்பிக்கொண்டே வந்தாள்

“ச்சே இவனெல்லாம் ஒரு அண்ணனா என் மூஞ்சக்கூட திரும்பிப் பார்க்கலை..... இப்பவே இப்படின்னா ரெண்டுபேருக்கும் மேரேஜ் ஆயிட்டா யார் நீன்னு கேட்ப்பான் போல”.... என்று புலம்பியவள் மான்சியிடம் திரும்பி

“ஏன்டி ஐஸ்க்ரீமைக்கூட சாப்பிடாம அப்படி என்னத்தடி பேசினீங்க”என கேட்க

“ம்ஹூம் அதை உங்க அண்ணன் கிட்டயே கேளு” என்று மான்சி வெட்கத்துடன் பதில் சொன்னாள்

“ம்ம் எல்லாம் என் நேரம்” என்று ரேகா சலித்துக்கொண்டாள்

அதன்பிறகு நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க..... இதோ ரகு யுஎஸ் போய் இன்றோடு ஒருவாரமாகிவிட்டது.... ரகு அடிக்கடி ரேகாவின் மூலமாக மான்சியிடம் பேச முயற்சித்தான்... மான்சி இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டாள்

கல்லூரியின் இறுதிநாளில் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு.... ஊருக்கு செல்ல தனது மாமாவின் வரவுக்காக காத்திருந்தாள்.....

ரேகா அவளைவிட்டு நகராமல் அவளுடனே இருந்தாள்..... ரேகாவுக்கு மான்சியை பிரிவது தன் உயிரையே பிரிவது போல முகத்தை துக்கமாக வைத்திருந்தாள்

“ஏய் மான்சி நீ ஊருக்கு போனதும் உடனே ஒரு செல்போன் வாங்குடி.... அப்பதான் தினமும் உன்கூட பேச முடியும்.... ரகுகூட நேத்து போன் பண்ணி உனக்கு ஒரு செல் வாங்கிக்கொடுக்கச் சொன்னான்.... நான் வாங்கித் தரவா மான்சி” என்று ரேகா கவலையுடன் கேட்க

“ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம் நான் எதுன்னா என் மாமாவோட செல்ல இருந்து பேசறேன்.... ஆனா நீ என் மாமா நம்பரை உன் அண்ணன்கிட்ட குடக்கதே.... அப்புறம் மாமா ஏதாவது தப்பா நெனைப்பாரு ரேகா ப்ளீஸ்”என்று மான்சி கெஞ்ச.... ரேகா சரியென்று தலையசைத்தாள்

மான்சிக்கு ஏன் இன்னும் மாமாவை காணவில்லை என்று கவலையுடன் கல்லூரியின் வாசலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்
மான்சிக்கு மாமாவின் ஊர் பாபநாசம் போவதென்றால் ரொம்ப பிடிக்கும்..... அங்கே போய் இருக்கும் கொஞ்ச நாளில் அருகில் இருக்கும் முண்டன்துறை, மணிமுத்தாறு, பாபநாசம் அருவி, களக்காடு, பேச்சிப்பாறை... என்று தினமும் ஒரு சுற்றுவதுதான் அவளுக்கு வேலை..... மாமாவின் மகன்கள் இருவரும் இவளைவிட இளையவர்கள் என்பதால் இவளுக்கு அவர்களுடன் அரட்டையடிக்கவே நேரம் பத்தாது....

இளவயதில் தன் தாயை பறிகொடுத்திருந்தாலும்..... தன் தாயைவிட பலமடங்கு பாசத்தை கொட்டும் தன் மாமாவை மான்சி கடவுளுக்கு நிகராக எண்ணினாள்

அவளுடைய காத்திருப்பு வீணாகாமல் அவள் மாமா வந்து சேர மான்சி உற்சாகத்துடன் எழுந்து அவரை நோக்கி போனாள்

“மான்சியம்மா மன்னிச்சுக்கோம்மா பஸ் கிடைக்க கொஞ்சம் லேட்டாயிருச்சு..... எல்லார்கிட்டேயும் சொல்லிட்டயா நாம கிளம்பலாமா மான்சி” என்று அண்ணாமலை கேட்க

“ம் நான் எப்பவோ ரெடி மாமா உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்”.... என்ற மான்சி ரேகாவிடம் திரும்பி “நான் கிளம்பறேன் ரேகா” என்று கூற.... ரேகா சோகமாக தலையசைத்து மான்சிக்கு விடைகொடுத்தாள்

" இடையில் ஒரு வேலி இருந்தால் நட்பு.....

" எப்போதும் பசுமையாக இருக்கும்...!




அந்திமாலைப் பொழுது,இரவுப் பெண்ணின் வருகைக்காக, மரங்கள் மலர்தூவ, தென்றல் தாலாட்ட, சூரியன் நாணிச் சிவந்து மேகங்களுக்கு பின்னால் தன் முகம் மறைக்க, சந்திரன் வரட்டுமா வேண்டாமா என்பது மெல்லிய கீற்றாய் தலைகாட்ட, இருள் தனது கரங்களால் பூமியை தழுவும், அழகான மாலைப்பொழுது..

தென்காசியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செல்லும் வழியில், மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் ஒரு அழகான மலைகிராமம்,....எங்கு பார்தாலும் பசுமை, தூரத்தே தெரிந்த மலைத்தொடரும், குளிர்ச்சியுடன் வரும் இதமான சாரல் காற்றும், வெகு ரம்யமான ஊர்

அங்கே இருந்த மலையடிவாரத்தில், ஒரு மிகப்பெரிய மரப்பட்டறையில் பிரமாண்டமான மரங்களை துண்டு போடும் இஞ்ஜினின் பெல்ட் அறுந்துவிட, அங்கிருந்தவர்கள் புதிய பெல்ட்டை மாட்டும் முயற்சியில் இருந்தனர், அந்த பட்டரையின் உரிமையாளன் சத்யனும் அவர்களுடன் சோர்ந்து பள்ளத்தில் இறங்கி பெல்டை மாட்ட, அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த சட்டையில் ஆயிலும் கிரீஸ்ம் கறையை ஏற்படுத்தியது,...

சத்யனுக்கு உதவிக்கொண்டு இருந்த பட்டரையின் மேஸ்திரி வீரமுத்து “ சின்னய்யா நீங்க மேல ஏறுங்க, இருக்கிறவங்க பார்த்துக்கிறோம், உங்க துணியெல்லாம் கறையாகுது, அவ்வளவுதான் சின்னய்யா வேலைமுடிஞ்சிருச்சு, நீங்க மொதல்ல மேல ஏறுங்கய்யா”... என்று அதட்டி அன்பு கட்டளையாக சொல்ல

சத்யன் அவனைப்பார்த்து சிரித்துவிட்டு “ இதுக்கு மேலயும் நான் இங்க நின்னா நீயே என்னை தூக்கி மேல போட்டுருவ போல.... ம் என்ன முத்து அப்படித்தான” என்று சிரித்தப்படி கேட்டுவிட்டு மேலே ஏறினான்

அவன் மேலே வருவதற்காகவே காத்திருந்து போல, முத்துவின் பொண்டாட்டி அமுதா ஒரு டீசர்டை எடுத்துவந்து, அவனிடம் கொடுத்து “ உங்க அறையில இருந்து எடுத்துட்டு வந்தேன் சின்னய்யா, இதை போட்டுகிட்டு சட்டையை கழட்டுங்க நான் தொவச்சு எடுத்துட்டு வர்றேன், ம் கழட்டுங்க சின்னய்யா”.. என்று பிடிவாதமாக கேட்க

சத்யன் பள்ளத்தில் இருந்த முத்துவை எட்டிப்பார்த்து விட்டு “ ஏய் உனக்கு ரொம்ப குளிர்விட்டுபோச்சுடி உள்ள உன் புருஷன் இருக்காங்குற பயமே இல்லாம என்கிட்ட சட்டையை கழட்டச் சொல்ற, ம் உன்னையெல்லாம் நல்லா வேலை வாங்கினாதான் கொழுப்பு அடங்கும்” என்று நக்கலாக கூறியபடி சத்யன் தனது சட்டையை கழட்டி அமுதாவின் தோளில் போட்டுவிட்டு அவள் கையில் இருந்த டீசர்டை வாங்கி தலை வழியாக மாட்டினான்

அமுதா தன் தோளில் கிடந்த சத்யனின் சட்டையில் வந்த வியர்வை வாசனையும் அவன் உபயோகிக்கும் பாடி ஸ்ப்ரேயின் வாசனையும் கலந்து ஒருவித ரம்யமான வாசனை வர அந்த சட்டையை எடுத்து தன் முகத்தை மூடி வாசனையை அழமாக உள்ளித்தாள்

“ ஏய் அமுதா அதை ஏன்டி மோந்து பார்க்கிற அதான் நான் இருக்கேன்ல, இன்னிக்கு நைட்டு வர்றேன், என் உடம்பு முழுக்க நல்லா நக்கிப்பாரு” என்று கிண்டல் குரலில் கூறியவன், பள்ளத்தில் வேலை முடிந்து எல்லோரு மேலே வருவது தெரிய

“ ஏய் மொதல்ல இடத்தை காலிபண்ணு உள்ள எல்லா வேலையும் முடிஞ்சுபோச்சு, உன் புருஷன் இப்போ மேல வரப்போறான், போடி இங்கருந்து” என்று ரகசியமாக அமுதாவை அதட்ட....

அவள் இவனுக்கு உதட்டை சுழித்து காட்டிவிட்டு சட்டையை தோளில் போட்டுக்கொண்டு திரும்ப..... “ போடி போ நைட்டு வந்து அந்த சுழிக்கிற உதட்டை கடிச்சிர்றேன்” என்று சத்யன் கிசுகிசுப்பாய் கூறினான்

இஞ்ஜின் வேலை முடிந்து மேலே ஏறிவந்த முத்து..... திரும்பி தன் மனைவி தோளில் சத்யனின் சட்டையை பார்த்துவிட்டு “ என்னய்யா சட்டையை கழட்டி அமுதாகிட்ட குடுத்தீங்களா,... அதுவும் சரிதான் இப்பவே நல்லா தொவச்சிட்டா கறை போயிரும்” என்று வெகுளித்தனமாக கூறிவிட்டு கறையாகிப்போன தனது காக்கிச்சட்டையை கழட்டினான்

“சரி முத்து நான் என் ரூமுக்கு போறேன் நீபோய் குளிச்சுட்டு வா கொஞ்சம் கணக்கெல்லாம் பார்க்கனும், லோடு எல்லாம் வேற போகாம அப்படியே நின்னுபோச்சு, மொதல்ல அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணனும், நீ கொஞ்சம் சீக்கிரமா வா முத்து எல்லாத்தையும் பார்த்திரலாம்” என்று கூறிய சத்யன் வழியில் கிடந்த ராச்சஸ மரங்களை லாவகமாக தாண்டி சற்று தொலைவில் இருந்த ஏஸி செய்யப்பட்ட தன்னுடைய சிறிய வீட்டுக்கு போனான்.

சத்யன் அந்த கிராமத்து பெரிய வீட்டுக்காரரின் ஒரே வாரிசு, நல்ல உயரம், மாநிறத்துக்கும் சற்று கீழாக.... அடர்த்தியான மீசையுடன், ரொம்ப கம்பீரமாக இருப்பான், பெயருக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லை, பெருத்த பணத்தால் பிஞ்சிலேயே பழுத்து விட்டவன், தனது தாயைத் தவிர மற்ற பெண்களின் மீது கொஞ்சம் கூட மரியாதையோ நம்பிக்கையோ இல்லாதவன், ஏனென்றால் அவன் அறிந்த பெண்களின் தரம் அப்படி, சில பெண்கள் இவனின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கிகிடக்க, சில பெண்கள் இவனின் பணத்திலும் அதிகாரத்திலும் மயங்கிகிடந்தனர்

நமது குடும்பத்தில் இவனாவது படிக்கட்டும் என்று இவன் அப்பா, இவனை சென்னையில் ஒரு பிரபலமான கல்லுரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க, இவன் நான்கு வருடம் படித்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது சிவில் இன்ஜினியரிங்க்கே பதிமூன்று அரியர் வைத்துவிட்டு வந்தான் ..... அதையும் இந்த மூன்று வருடங்களாக எழுதி கிளியர் பண்ண முயற்சிக்கிறான், ஆனால் அதில் ஒன்றைக் கூட இன்னும் கிளியர் பண்ணவில்லை,

இவனுக்கு படிப்புதான் வரவில்லையே தவிர பிசினஸில் ரொம்ப கெட்டிக்காரன், தனது பரம்பரையே நெல்மண்டி வைத்து ரைஸ்மில்கள் நடத்த, இவன் அந்த பழைய ரைஸ்மில்லை நவீனமாக்கி மாடர்ன் ரைஸ்மில்லாக மாற்றியிருந்தான், அதன்பிறகு இந்த பிரமாண்டமான மரப்பட்டறையை ஆரம்பித்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மரங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்துகொண்டு இருந்தான்

ஆனால் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வதில் அதைவிட கெட்டிக்காரன், இவனுக்கு எப்போதுமே ஜாலியாக இருக்கவேண்டும், பெண்கள் விஷயத்தில் இவன் பலகீனமானவனா இல்லை இவனிடம் வரும் பெண்கள் பலகீனமானவர்களா என்பது ஒரு புரியாத புதிர், அந்தளவுக்கு பெண்களை இவன் தேடிப் போவான், சிலநேரங்களில் பெண்கள் இவனைத்தேடி வருவார்கள், இவனிடம் ஒருமுறை படுத்த பெண்கள் மறுபடியும் தானாகவே இவனைத்தேடி வருவார்கள், அவ்வளவு திருப்தியாக பெண்களை அனுபவிப்பான், ஆனால் ரொம்பவும் பாதுகாப்பாகத்தான், இதோ இந்த அமுதாகூட இவனின் பேச்சிலும் கம்பீரத்திலும் மயங்கி இவனிடம் தானாகவே வந்து தன்னை இழந்தவள்தான்,


இவனின் விஷங்களை ஓரளவுக்கு கேள்விப்பட்ட இவன் அம்மா இவனுக்கு உடனடியாக திருமணம் செய்யவேண்டும் என்று தன் கணவனை நச்சரித்து, இப்போது இருவரும் மும்முரமாக இவனுக்கு திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் எந்த பெண்ணும் அமையாமல் தவித்து கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்

இப்படிபட்ட சத்யனுக்கு ஒருப் பெண்ணை திருமணம் செய்துவைத்தால், அந்த பெண்ணின் கதி என்னாகும், பாவம் அதோ கதிதான்

முத்து சத்யன் போவதையே ஆச்சரியமாக பார்த்தவன் பக்கத்தில் இருந்த இஞ்ஜின் ஆப்ரேட்டரிடம் ,.... “யப்பா என்னமாதிரி மனுஷன் இவரு, எவ்வளவு சுறுசுறுப்பு, காலையில பார்த்தா வீட்டுக்கு பின்னாடி இருக்கிற ரைஸ்மில்லை கவனிச்சுகிறாரு, அப்புறமா பண்ணையை வேற போய் பார்த்துக்கறாரு, மத்தியானத்துக்கு மேல இங்கவந்து பட்டறை வேலையையும் பார்த்துகிறார், ம் இந்த மாதிரி மனுஷன் வேற எங்கய்யா இருப்பாரு” என்று சத்யனைப் பற்றி பெருமையாக பேசினான்

தென்காசியில் சத்யனுக்கு ஒரு ரசிகர்மன்றம் ஆரம்பித்தால் அதற்க்கு முத்துவை கொள்கைப்பரப்பு செயலாராக நியமிக்கலாம், அந்தளவுக்கு சத்யன் மேல் மரியாதையும் அன்பும் வைத்திருப்பவன், சத்யனின் சுண்டுவிரல் நகம் பெயர்ந்துவிட்டால் தனது கட்டைவிரலை அறுத்துக்கொள்ளும், ஒரு நேர்மையான விசுவாசி முத்து

முத்து பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஆப்ரேட்டர் ‘ ம் அதையெல்லாம் மட்டுமா கவனிச்சுக்கறார் உன் பொண்டாட்டியையும் சேர்த்துத்தான் நல்லா கவனிக்கிறார்’ என்று வாய்வரை வந்ததை சொல்லாமல், நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு, மொதல்ல நம்ம வேலை ஒழுங்கா காப்பாத்திக்கனும், என நினைத்து தனது வேலையை பார்க்கப் போனான்

பட்டறையில் வேலை செய்பவர்களுக்காக பட்டறைக்குள்ளேயே சிமிண்ட் சீட் போடப்பட்ட சிறு சிறு வீடுகளை கட்டிக்கொடுத்திருந்தான் சத்யன்

முத்து தனது சின்ன முதலாளி சத்யனைப் பற்றியே யோசித்தபடி தனது வீட்டுக்குள் போக, அங்கே அமுதா சத்யனின் சட்டையை ரொம்ப கவனமாக சோப்புப் போட்டு தேய்த்துக்கொண்டு இருந்தாள்

“ ஏய் அமுதா சின்னய்யா சட்டையை கவனமா தேய் ரொம்ப விலை ஒசந்தது” என்று அமுதாவிடம் சொல்லிவிட்டு தன் சட்டையை தானே துவைத்து காயப்போட்டுவிட்டு அவசரமாக குளிக்க போனான்

தனது அறைக்கு வந்த சத்யன் ஏஸியை ஆன் செய்துவிட்டு அங்கே இருந்த கட்டிலில் உட்கார்ந்து, மணிக்கட்டை திருப்பி நேரம் பார்க்க, மணி ஆறு பத்து ஆகியிருந்தது, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்,...... வீட்டுக்கு போனா தூங்கமுடியாது, ஏற்கனவே ஐஞ்சு நாளா எதுவுமில்லாம காஞ்சுபோய் கிடக்கேன் இந்த அமுதா வேற நல்லா உசுப்பேத்தி விட்டுட்டா, நேரமாகி போச்சு இல்லேன்னா வேற எங்கயாவது போகலாம்,

இன்னிக்கு இங்கேயே இருந்து முத்துவை பட்டறையில் லோடு ஏத்தச் சொல்லிட்டு அமுதாவை இங்க வரச்சொல்லி போட வேண்டியதுதான், என சத்யன் யோசிக்கும் போதே வெளியேயிருந்து முத்துவின் குரல் சின்னய்யா என்று கேட்க

சத்யன் எழுந்து சென்று கதவைத் திறந்து “வா முத்து” என்று கூப்பிட முத்துவின் பின்னாலேயே அமுதா சத்யனின் சட்டையை தோளில் போட்டுக்கொண்டு உள்ளே வந்தாள்

“ சட்டையை பாத்ரூம்ல இருக்கிற கம்பியில மாட்டு அமுதா நல்லா காஞ்சுரும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு முத்துவிடம் சில கணக்குகளை பற்றி பேசிவிட்டு இன்று இரவு அனுப்பவேண்டிய மற்றும் வரவேண்டிய லோடுகளை பற்றிய விவரங்களை சொன்னான் சத்யன்




அப்போது முத்துவுக்கு பின்னாலிருந்து அமுதா ஏதோ ஜாடைக்காட்ட, அதை புரிந்துகொண்ட சத்யன், “ஏன் முத்து ரெண்டு பசங்களை வச்சுகிட்டு நீ ஏன் இங்க சின்ன வீட்ல இருந்து சிரமப்படுற, இன்னும் கொஞ்சநாள்ல உன் பையன் ஸ்கூலுக்கு போகனும், இங்கேயிருந்து ஸ்கூல் வேற ரொம்ப தூரம், என்ன செய்யலாம் முத்து” என்று சத்யன் முத்துவிடம் யோசனைகேட்க,......

அமுதா தன் கணவன் என்ன சொல்லப்போகிறானோ என்று பதட்டத்துடன் முத்துவின் வார்த்தைக்காக காத்திருக்க

முத்துவுக்கு தன் சின்னமுதலாளி தன் குடும்பத்தைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பது, அவனுக்கு தலைகால் புரியாத சந்தோஷத்தை கொடுக்க “ நீங்களேஎன்ன பண்றதுன்னு சொல்லுங்கய்யா அதுமாதிரியே நான் செய்றேன்” என்று முகமெல்லாம் சிரிப்புடன் சொன்னான்

“ நானும் இதைப்பத்தி யோசிச்சு வச்சுருக்கேன் முத்து, நம்ம வீட்டுக்கு பின்னால வீட்டுவேலை செய்றவங்களுக்குன்னு அப்பா சின்ன சின்ன வீடுகளை கட்டிவச்சிருக்கார், நீ குடும்பத்தோட அங்க வந்திரு, நீ பட்டறைக்கு வேலைக்கு வந்ததும், அமுதா அம்மாவுக்கு உதவியா வீட்டு வேலை செய்யட்டும், இல்லைன்னா ரைஸ்மில்லுல கூட அவளுக்கு தெரிஞ்ச ஏதாவது வேலை செய்யட்டும், பசங்களையும் கீழ்கடையம் ஸ்கூல்ல சேர்த்திறலாம், என்ன சொல்ற முத்து நல்லா யோசிச்சு சொல்லு” என்று நைசாக பேசிய சத்யன்

முத்துவின் பின்னால் இருந்த அமுதாவைப் பார்த்து ‘எப்படி’ என்பதுபோல் கண்ணால் கேட்க, அவள் சிரிப்புடன் கண்சிமிட்டினாள்

இவர்களின் எண்ணங்களை அறியாத முத்து “நான் என்ன சொல்றது சின்னய்யா, உங்க இஷ்டப்படி செய்யுங்க, என்னிக்கு வரனும்னு மட்டும் சொல்லுங்க அன்னிக்கி குடும்பத்தை கொண்டுவந்து அங்கே விட்டுர்றேன்” என்று அப்பாவியாக முத்து கூற






No comments:

Post a Comment