Wednesday, February 4, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 29


ஹாஃப்மன், "ஹல்லோ ஜாஷ்வா, ஹல்லோ சஞ்சனா. மீட் ஆண்டர்ஸன். நீ இதுக்கு முன்னால் ஆண்டஸனை மீட் பண்ணினது இல்லைன்னு நினைக்கறேன்" சஞ்சனா, "ஹல்லோ மிஸ்டர் ஆண்டர்ஸன்" ஜாஷ்வா, "என்ன ஹாஃப்மன்? எதுக்கு இந்த மீட்டிங்க்?" ஹாஃப்மன், "ஷக்தியும் நித்தினும் எங்கே?" ஜாஷ்வா, "வந்துட்டு இருக்காங்க ... " ஹாஃப்மன், "சரி, அவங்களும் வரட்டும் எல்லாம் இருக்கும் போதே சொல்றேன்" ஜாஷ்வா, "என்ன புதிர் போடறே? இதுவரைக்கும் எல்லா டீலிங்க்லயும் நான்தான் இன்வால்வ் ஆகியிருக்கேன். இப்ப என்ன புதுசா?"

ஹாஃப்மன், "இப்ப டீலிங்க் எதுவும் இல்லை. அதான் ஆபரேஷனை வைண்ட் அப் பண்ணிட்டமே? நான் மீட்டிங்க் கூப்பிட்டது வேற ஒரு விஷயத்துக்காக" ஜாஷ்வா, "சரி, ஆண்டர்ஸன், நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும். அந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் மூணும் டெரரிஸ்ட் கும்பலுக்குத்தான் பண்ணினோம்ன்னு உனக்கு முதல்லயே தெரியுமா?" ஆண்டர்ஸன், "தெரியாது. தெரிஞ்சு இருந்தா நான் அதுக்கு ஒத்துட்டு இருக்க மாட்டேன். முதல்ல நீயும் ஹஃப்மனும் கொடுத்த ப்ரொபோசலை கொடுக்க நான் ட்ரக் கார்டல்காரங்களை நேரடியா அணுகினேன். முதல் ஒண்ணு ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது அவங்க கூட டைரக்டா டீலிங்க் வெச்சு இருந்தேன். சில மாதங்களுக்கு அப்பறம் இங்கே நியூ யார்க்கில் இருக்கும் அவங்களோட பிரதிநிதி ஒருத்தன்கூடத்தான் என் எல்லா டீலிங்கும் நடந்தது. அவன்தான் இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸர்களையும் செய்யச் சொன்னான்" ஜாஷ்வா, "இந்த நியூஸ் வெளியானப்பறம் அவனைப் பாத்து நீ கேட்கலையா?" ஆண்டர்ஸன், "ஒரு வாரமா நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அவன் ஃபோன் நாட் ரீச்சபுள்ன்னு வருது. ஹாஃப்மன், உனக்கும் அவனை தெரியுமே. அவனைப் பத்தின நியூஸ் எதாவது கிடைச்சுதா?" ஹாஃப்மன், "இல்லை. ஜாஷ்வா, எங்கே சக்தியும் நித்தினும் இன்னும் காணோம்?" ஜாஷ்வா, "இல்லை ஹாஃப்மன். நீ எதுக்கு வ்ரச்சொன்னேன்னு சொல்லு. நான் அவங்களை வரச் சொல்றேன்" ஹாஃப்மன், "ஓ, அதான் உங்க ப்ளானா? எனிவே என்னால் அதுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனா ஆண்டர்ஸன் நீ கேட்டியே அந்த ட்ரக் கார்டல்காரங்களோட நியூ யார்க் பிரதிநிதி? அவனைப் பத்தி சொல்ல முடியும். அவன் இந்நேரம் ஹட்ஸன் நதியில் இருக்கும் மீன்களுக்கு இரையாகி இருப்பான்"ஹாஃப்மன் சொல்லி முடித்த தருணத்தில் ஒரு கரு நீல நிற வேன் வேகமாக வந்து அவர்கள் நின்ற இடத்துக்கு அருகே நின்றது. அதில் இருந்து அரபு நாட்டவன் ஒருவனும் ஏறக்குறைய இந்தியச் சாயலுடன் ஒரு இளைஞனும் நடுத்தர வயதினன் ஒருவனும் இறங்கினர். நான்காவதாக ஸான்ட்ரா ஆஸ்டின் இறங்கினாள். அவர்களை இறக்கி விட்ட வேன் பின்னோக்கிச் சென்று அவர்களை நோக்கி இருந்தபடி சற்று தூரத்தில் இருந்த சுவற்றருகே நின்றது. அரபு நாட்டவன் மட்டும் நின்று இருந்தவர்கள் அருகே வர மற்ற மூவரும் சற்று பின் தங்கி நின்றனர். ஹாஃப்மன், "ஜாஷ்வா, மீட் மிஸ்டர் மக்ஸூத். அந்த மூணு ட்ரான்ஸ்ஃபரும் நீங்க இவருக்காகத்தான் செஞ்சீங்க" மக்ஸூத், "சோ, மத்த ரெண்டு பேரும் வரலையா?" ஹாஃப்மன், "ஜாஷ்வா நாம் எதுக்கு வரச்சொன்னோம்ன்னு சொன்னாத்தான் அவங்களை வரவைப்பானாம்" மக்ஸூத், "ம்ம்ம் ... பரவால்லை. அவங்க வரத்தேவை இல்லை நான் ஜாஷ்வாவிடம் மட்டும் பேசறேன்" ஜாஷ்வா, "எதுக்கு எங்களை வரச்சொன்னே? உனக்கு என்ன வேணும்?" மக்ஸூத், "மாங்க்ஸ் பாட் நெட்" மௌனம் காத்த ஜாஷ்வா சஞ்சனா இருவரையும் பார்த்து மக்ஸூத், "என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? விளக்கமா சொல்றேன். உங்க மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தி கேள்விப் பட்டதும் மேலிடத்தில் இருந்து இதை எப்படியாவது கைப் பற்றணும்ன்னு முடிவு எடுக்கப் பட்டது." பிறகு பின்னால் நின்ற நடுத்தர வயதினனைக் காட்டி, "இவரோட அரசாங்கத்துக்கும், .... அரசாங்கம்ன்னு சொல்ல முடியாது. அரசாங்கத்தில் ஒரு பகுதியும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் அதே விருப்பம். எங்க மேலிடத்துடன் பேசினதுக்கு அப்பறம் மாங்க்ச் பாட் நெட்டை நாங்க ரெண்டு பேரும் பகிர்ந்துக்கறதா முடிவெடுத்தோம். எஃப்.பி.ஐயில் இருக்கும் ஸான்ட்ராவை நாங்க ரெக்ரூட் செஞ்சோம். என்ன ஒரு தமாஷ் பாத்தியா? இந்தியாவே எங்களுக்கு உதவத் தொடங்குச்சு. இந்தியாவின் R&AWவில் நடப்பது எல்லாம் எங்களுக்கு ஸான்ட்ரா மூலம் தெரிய வந்தது. இதுக்கு நடுவில் ஒரு பாட் நெட் மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமாங்கற கேள்வியை ஹாஃப்மன் எங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட விசாரிச்சார். இதில் எதோ மர்மம் இருக்குன்னு நான் ஹாஃப்மனை அணுகினேன். ஹாஃப்மன் உங்க ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி விவரிச்சார். எப்படியும் உங்களுக்கு கொடுக்கறதுக்காக எங்களுக்கு பணம் தேவைப் பட்டது. அந்த பணத்தை உங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலமாவே ட்ரான்ஸர் செய்ய வெச்சு எப்படி அந்த ஆபரேஷனை செய்யறீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம். இப்ப விலை பேச வந்து இருக்கேன்" ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோடது இல்லை. நாங்க புறப்படறோம்" மக்ஸூத், "உன்னோட இடத்தில் நான் இருந்தா நான் அப்படி புறப்பட்டுப் போக மாட்டேன். உனக்கு ரெண்டு பக்கமும் தூரத்தில் நின்னிட்டு இருக்கும் வேன்களைப் பார்" இருபுறமும் சற்று தூரத்தில் அவர்களை நோக்கி நின்று கொண்டு இருந்த வேன்களின் மேற்கூரையில் கையில் தொலைநோக்கி அமைப்பு கொண்ட ஸ்னைப்பர் ரைஃபில் எந்தியவாறு இருவர் அமர்ந்து இருந்தனர். சஞ்சனா பின்புறம் கட்டி இருந்த இரு கை விரல்களையும் துப்பாக்கி போல் அமைத்து தனது இருபுறத்தையும் நோக்கி சைகை காட்ட அதை காரில் இருந்த க்ரிஸ் கவனித்தான். சஞ்சனாவுக்கு வலப்புறம் ரைஃபில் ஏந்தி வேனில் மேல் அமர்ந்தவனை அவன் அதற்கு முன்னமே பார்த்து இருந்தான். இடப்புறம் இருந்தவனை எதிரில் இருந்த தூண் மறைத்து இருந்ததெனிலும், சஞ்சனாவின் சைகையில் இருந்து யூகித்தான். தன் துப்பாக்கியை டாஷ் போர்டில் இருந்து எடுத்துக் கொண்டான். வலப்புறம் ரைஃபில் ஏந்தி இருந்தவனையும் சஞ்சனாவுக்கு எதிரில் நின்று இருந்தவர்களையும் அவனால் குறி பார்க்க முடிந்தது. சில கணங்கள் மலைத்து நின்றாலும் சுதாரித்துக் கொண்ட ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோடது இல்லை என்பது உண்மை. நீ எங்களை துன்புறுத்தினால் அது உங்களுக்கு கிடைக்கப் போறது இல்லை. அவங்களுக்கு நான் ஒரு பிரதிநிதி அவ்வளவுதான். என்னைப் பத்தி அவங்களுக்கு ஒரு கவலையும் இல்லை" பிறகு பின்னால் நின்று கொண்டு இருந்த இந்தியச் சாயல் கொண்ட இளைஞனிடம் மக்ஸூத் "என்ன பண்ணலாம் ஷொயேப்?" என்று கேட்டான்ஷோயேப், "ஹாய், ஐ அம் ஷொயேப் அஹ்மத். நானும் ஒரு ஹாக்கர்தான். மாங்க்ஸ் பாட் நெட்டை நீ உருவாக்கலைன்னு தெரியும். சக்திவேல், நித்தின் இவங்க ரெண்டு பேர்தான் அதை உருவாக்கி இருப்பாங்கன்னும் தெரியும். கடந்த ஒரு வருஷமா நீ அவங்களுக்கு ஒரு மென்டரா இருந்துட்டு இருக்கே. இப்போ சர்வர் இல்லாம இயங்கற மாதிரி செஞ்சதுக்கு அப்பறம் அதுக்கு ஆணை பிறப்பிக்க ஒரு மென் பொருள் இருக்கும். நிச்சயம் அந்த மென்பொருள் உன்னிடம் இருக்கும்ன்னு நினைக்கறேன்" ஜாஷ்வா, "மிஸ்டர் மக்ஸூத், நான் ஹார்லத்தில் பிறந்து வளர்ந்தவன். நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உபயோகிச்சுக்கணுன்னு எனக்கு நல்லா தெரியும். என் கிட்ட அந்த மென் பொருள் இருந்தா நிச்சயம் உங்ககிட்ட விலை பேச ஆரம்பிச்சு இருப்பேன். உங்களுக்காக நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்றேன். ஆனா அவங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியலை" ஷொயேப், "யூ ஸீ ஜாஷ்வா, நீங்க அந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சபோது எதுக்கு எந்த கம்பெனி மூலம் செய்யணும்ன்னு சொன்னோம் தெரியுமா? மாங்க்ஸ் பாட் நெட் எப்படி இயங்குதுன்னு உன்னிப்பா கவனிக்கறதுக்கு. அப்படி கவனிச்ச போது நீங்க ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கு உபயோகிச்ச அந்த கம்பெனியின் கணிணியில் நடந்த ஒவ்வொண்ணையும் விரிவா இவெண்ட் ட்ரேஸ் (Event Trace) ரெக்கார்ட் செஞ்சு வெச்சு இருக்கேன். அதை எஃப்.பி.ஐக்கு அனுப்பினா போதும் அவங்க ரெண்டு பேரையும் உள்ளே தள்ளிடுவாங்க. ஸோ, எங்களோட ஒத்துழைப்பதைத் தவிர அவங்களுக்கு வேற வழி இல்லை" ஜாஷ்வா, "அதே சமயத்தில் எங்கே இருந்து எல்லாம் பணம் வந்து இருக்குன்னு எஃப்.பி.ஐக்கு தெரிய வாய்ப்பு இருக்கு இல்லையா?" மக்ஸூத், "எல்லாம் கேஷ் டெபாசிட்ஸ் ... உங்க ஆபரேஷனின் விதி முறைகள் உனக்கே மறந்துடுச்சா?" ஜாஷ்வாவின் முகத்தில் சிறு பிரகாசம் தோன்றி மறைந்தது. ஹாஃப்மன் சற்று துணுக்குற்று மக்ஸூத்தைப் பார்த்தான். ஜாஷ்வா, "இல்லை மிஸ்டர் மக்ஸூத். ரெண்டு டெபாசிட்ஸ் நேரடியா ஒரு வங்கி கணக்கில் இருந்து வந்தது .. அதுவும் பாகிஸ்தானில் இருக்கும் கொயெட்டா அப்படிங்கற ஊரில் ஒரு வங்கிக் கிளையில் கணக்கில் இருந்து வந்தது. இந்த விஷயமும் எஃப்.பி.ஐக்கு தெரியவரும்" முதலில் பின்னால் நின்று இருந்த நடுத்தர வயதினனை பார்த்து முறைத்த மக்ஸூத் சற்று சுதாரித்தபின், "அந்த ஊரைப் பத்தி உனக்கு தெரியுமா? அரசாங்கமே இல்லாத ஊர் அது. அந்த ஊரில் இருக்கும் ஒரு வங்கிக் கணக்கின் விவரங்களை வெச்சுட்டு எஃப்.பி.ஐயினால் ஒண்ணும் செய்ய முடியாது" என்றான். இருப்பினும் அவன் முகத்தில் அந்த நம்பிக்கை இல்லை என்பதை ஜாஷ்வா கவனிக்க தவறவில்லை. அப்போது சஞ்சனாவின் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்த அவளது கைபேசி சிணுங்கியது. முறைத்துப் பார்த்த மக்ஸூது அவள் அதை எடுத்து ஆஃப் செய்து மறுபடி மேல் பாக்கெட்டில் போடுவதை கண்ட பிறகு மக்ஸூத், "Any way ... அவங்களை எப்படி வழிக்கு கொண்டு வருவதுன்னு எங்களுக்கு நல்லா தெரியும். எல்லாருக்கும் சொந்த பந்தம்ன்னு இருக்கும் இல்லையா? ம்ம்ம்ம் ..மாங்க்ச் பாட் நெட்டை விலைக்கு வாங்க உங்க மூணு பேருக்கும் தலைக்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்க தயாரா இருந்தோம். வெல் ... ஒரு பத்து மில்லியன் மிச்சம்" ஆண்டர்ஸன், "ஜெண்டில்மென், இது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். ஹாஃப்மன் என்னை எதுக்கு இங்கே வரச்சொன்னான்னு எனக்கு தெரியலை. நீங்க அனுமதிச்சா நான் புறப்படறேன்" மக்ஸூத், "நான் தான் உன்னை வரவழைக்கச் சொன்னேன். ஏன்னா, ஒன்ஸ் நாங்க மாங்க்ஸ் பாட் நெட்டை உபயோகிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம், அதைப் பத்தி தெரிஞ்ச வெளியாள் யாரும் உயிரோட இருக்கக் கூடாது" என்ற படி தன் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்த பிஸ்டலை எடுத்து ஆண்டர்ஸனின் நெற்றியில் சுட்டான். ஹாஃப்மன், "வாட் தெ ஹெல் ... " என்றதற்கு மேல் எதுவும் எதுவும் சொல்வதற்கு முன் அவனது நெற்றிப்பொட்டை துளைத்த தோட்டா அவன் உயிரையும் பிரித்தது. மக்ஸூத் ஜாஷ்வாவின் பக்கம் திரும்பி, "Its a pity. நீ இல்லாமல் மாங்க்ஸ் பாட் நெட் இயங்காதுன்னு நினைச்சேன். சாரி ஜாஷ்வா, அவங்க ரெண்டு பேர்கிட்ட பேசிக்கறோம். அவங்களை தேடி கண்டு பிடிக்கறதில் எந்த பிரச்சனையும் இருக்காது. எங்களுக்கும்" என்ற பிறகு மறுபடி பின்னால் நின்று கொண்டு இருந்த நடுத்தர வயதினனைக் காட்டி, "இவரோட அரசாங்கத்துக்கும் நிறைய உளவாளிகள் இருக்காங்க. அவங்களுக்கு லோக்கல் மாஃபியா எல்லாம் ரொம்ப பழக்கம்" என்றபடி ஜாஷ்வாவை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினான்.சஞ்சனா தனது பிஸ்டலை எடுத்து மக்ஸூதை சுட்டாள். ஆனால் அதற்குள் ஜாஷ்வாவின் மார்பை மக்ஸூதின் குண்டு துளைத்து இருந்தது. அடுத்த கணம் க்ரிஸ் தன் கண்பார்வையில் இருந்த ரைஃபில் ஏந்தியவனை வீழ்த்தினான். சஞ்சனா தனக்கு இடப்புறம் ரைஃபில் ஏந்தி இருந்தவனின் குறிக்கு தப்புவதற்காக கீழே நிலத்தில் உருண்டாள், தொடர்ந்து "அண்ணா வராதே போ" என்று உரக்க கத்தினாள். க்ரிஸ் அடுத்து ஷொயேபை வீழ்த்தினான். அவர்களுடன் இருந்த நடுத்தர வயதினன் வேனுக்கு உள்ளிருந்த தனது துப்பாக்கியை எடுக்க வேன் கதவை திறந்தான். ஸான்ட்ரா ஆயுதம் தரித்து இருப்பாள் என்று சஞ்சனா எதிர்பார்க்கவில்லை. தூண் மறைத்து இருந்ததால் ஸான்ட்ரா க்ரிஸ்ஸின் கண்பார்வையிலும் படவில்லை. ஆனால் ஸான்ட்ராவின் பயிற்சியின்மை உருண்டு வந்த சஞ்சனா சட்டென எழுந்து ரைஃபில் ஏந்தியவனை சுடும்வரை சஞ்சனாவுக்கு போதிய அவகாசத்தை கொடுத்தது. ஸான்ட்ரா தன் கைத்துப்பாக்கியை எடுத்து எஃப்.பி.ஐ பயிற்ச்சி முகாமில் சொல்லிக் கொடுத்த படி பிடித்து நின்று சுடுவதற்கு ட்ரிக்கரை அழுத்தும் அதே தருணத்தில் சஞ்சனா அவளை நோக்கி சுட்டாள். இருவரது குண்டுகளும் அவைகள் ஏவப் பட்ட இலக்கை துளைத்தன. குண்டடி பட்ட சஞ்சனா சரிந்து வீழ்ந்து சலனமற்றுக் கிடந்தாள். தொண்டைப் பகுதியில் நுழைந்த தோட்டா முதுகுத்தண்டை முறிக்க ஸான்ட்ரா முகத்தில் இது நிஜமா என்ற கேள்விக் குறியுடன் கண்கள் அகல உயிர் நீத்தாள். கையில் துப்பாக்கியுடன் திரும்பிய நடுத்தர வயதினன் க்ரிஸ்ஸை நோக்கிச் சுட க்ரிஸ் தூணுக்கு பின்னால் ஒளிந்தவாறு சரமாரியாக சுட்டான். அவனது தோட்டாக்கள் ஒன்றும் நடுத்தர வயதினனை தாக்க வில்லை. அவனது பரெட்டா துப்பாக்கியில் இருந்த ஒன்பது குண்டுகளும் தீர்ந்தன. துப்பாக்கி சூடு நிச்சயம் நடக்கும் என்று அறியாததால், மாற்றுக் கார்ட்ரிட்ஜ் கொண்டு வந்து இருக்கவில்லை. எதிர் புரமிருந்து துப்பாக்கிச் சூடு வருவது நின்றதும் அந்த நடுத்தர வயதினன் சுற்றி வீழ்ந்து கிடந்தவரைப் பாத்தான். பிறகு மக்ஸூத் இன்னும் சாகவில்லை என்பதை அவன் கழுத்தில் கைவைத்துப் பார்த்து அறிந்தவன் அவனை மட்டும் வேனுக்குள் தூக்கிக் கிடத்தி வேனை கிளப்பி அங்கு இருந்து சென்றான். காரில் இவ்வளவு நேரமும் உறைந்து போய் அமர்ந்து இருந்த சக்தி காரை விட்டு வெளிவர எத்தனித்த போது நித்தின் அவனை கையைப் பற்றி இழுத்தான். அப்போது F.B.I என்ற எழுத்துக்கள் பொறித்த கருப்பு நிற கார் வேகமாக உள்ளே வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ் சுற்று முற்றும் வீழ்ந்து கிடந்தவர்களைப் பார்த்த பின் "ஓ ஷிட்! ஷிட்" என்று உரக்கக் கத்தினார். பிறகு அவர்களுக்கு முதுகு காட்டி நின்றபடி தன் கைபேசியை எடுத்து பேசத் தொடங்கினார். "I need paramedics, CSI team and a bunch of body bags immediately" என்று வீழ்ந்து கிடந்த ஜாஷ்வாவின் அருகே நின்று அவர் கைபேசியில் பேசியது நித்தினுக்கும் சக்திக்கும் தெளிவாகக் கேட்டது. நித்தின் அச்சமயம் காரை வேகமாகக் கிளப்பி வெளியில் எடுத்து வந்தான். சைமண்ட் வில்லியர்ஸ் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் கார் அந்த கட்டிடத்திற்கு வெளியே வந்து இருந்தது. சக்தி வாய்விட்டு அழுது கொண்டு இருந்தான். நித்தினின் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தாலும் அவனது சமயோசிதம் அவனிடம் இருந்து விடைபெற்று போகவில்லை. காரை அருகில் இருந்த ஒரு பல மாடி கார் பார்க் கட்டிடத்துக்கு எடுத்துச் சென்று நிறுத்தினான். சக்தி, "காட், ஏண்டா வந்தே. அவளுக்கு ... அவங்க ரெண்டு பேருக்கும் .. இன்னும் உயிர் இருக்கலாம்" நித்தின், "இருக்கலாம். ஆனா நம்மால என்ன செய்ய முடியும்? அந்த எஃப்.பி.ஐகாரன் பாராமெடிக்ஸ் உடனே வரச் சொன்னான் இல்லை? அவங்களுக்கு உயிர் இருக்கான்னு பார்த்து தெரிஞ்சுக்க உன்னையும் என்னையும் விட அவனுக்கு நல்லா தெரியும். இப்போதைக்கு நாம் என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்" என்றபடி தன் கைபேசியில் அவ்வளவு நேரமும் ஜாஷ்வாவின் கைபேசியுடன் இருந்த இணைப்பை அணைத்தான். சில கணங்களில் அவனது கைபேசி சிணுங்கியது. மறுமுனையில் இருந்து தீபா, "யூ ஸ்கௌன்ட்ரல் ... How dare you play hide-and-seek with me?" என்று கத்தினாள் சற்று நேரம் மௌனம் காத்த நித்தின், "தீபா, இப்ப நீ எதுவும் பேசாதே. நான் சொல்றதை கவனமா கேளு. எங்க ரெண்டு பேரையும் அல்-கைதாவும் ஐ.எஸ்.ஐயும் தேடிட்டு இருக்கு. ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் அவங்க ...." என்றவனுக்கு மேலும் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது. பிறகு தொடர்ந்து, "They want Monks Bot Net. உடனே எங்க அப்பா, மனோகரி ஆண்டி ஷாந்தி அப்பறம் புனேவில் இருக்கும் எங்க தாத்தா, பாட்டி, இவங்க எல்லோருக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. மிறட்டறதுக்காக அவங்களில் யாரை வேணும்னாலும் கைப்பற்றி பணயக் கைதியா உபயோகிக்கலாம். எங்க ரெண்டு பேர் ஃபோனும் நாங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணப் போறோம். ஈமெயில் பண்ணறேன்" என்ற பிறகு இணைப்பைத் துண்டித்தான்.Friday, 29 May 2009 10:00 AM IST Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் காலை 10:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி வந்தனாவும் முரளீதரனும் தீபா பேசிக் கொண்டு இருந்ததை கவனித்துக் கொண்டு இருந்தனர். முடிவில் அவள், "நித்தின் .. வெய்ட்" என்று அலறிய பிறகு பேயறைந்த முகத்துடன் இருவரையும் பார்த்தாள். தீபா, "He is not very coherent .. அவன் சொன்னதை அப்படியே சொல்றேன்" என்றபடி அவன் சொன்னதை ஒப்பித்தாள். வந்தனா, "ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் என்ன ஆச்சு .. ?" தீபா, "தெரியலை ... அவன் மேல எதுவும் சொல்லை" வந்தனா, "ஓ மை காட்!" என்ற படி முதலில் முகம் இறுக அமர்ந்து இருந்தவள் சில நிமிடங்களில் தீவிர வாதம் தன் வாழ்க்கையில் மறுபடி விளையாடுவதை எண்ணிக் கண் கலங்கினாள். முரளீதரன், "அந்த ஜாஷ்வா யார்? அவன்தான் ஹார்ஷ்7ஆ?" தீபா, "ஆமா ... I think so .. No I am sure. Besides he is so close to us all" முரளீதரன், "அந்த ஜாஷ்வாவின் விலாசம் உங்களுக்கு தெரியுமா? இப்பவே ஷானை அவனை தேடி கண்டு பிடிக்க சொல்றேன்" தீபா தன் ஐ-ஃபோனில் ஸ்டோர் செய்து வைத்து இருந்த விலாசத்தை ஷானுடைய மொபைலுக்கு அனுப்பினாள். முரளீதரன், "வந்தனா, தீபா, எப்படி தீவிரவாதிகளுக்கு இவங்கதான்னு தெரிஞ்சுதுன்னு தெரியலை. பட், Any way, அப்படி தெரிஞ்சு இருந்தால் அவங்க ரெண்டு பேரையும் பிடிக்க they will not leave any stone unturned. முதலில் நித்தின் சொன்ன மாதிரி அவங்க எல்லோருக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாம்" வந்தனா, "சார், நிச்சயம் அவங்க எதுக்கு பாதுகாப்புன்னு கேப்பாங்க .. " முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னு சொன்னா புரியுமான்னு தெரியலை. அப்படியே புரிஞ்சாலும் எதோ பூதாகரமான விஷயமா அவங்க புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் விளக்கி சொல்வதை தவிர வேற வழி இல்லை"

வந்தனா, "சரி, நான் இப்பவே மனோகரி ஆண்டிகிட்ட பேசறேன். தீபா, நீ சுந்தர் அங்கிள்கிட்ட பேசு" Thursday, 28 May 2009 11:30 PM US-EST Hotel room where Nithin and Shakthi were staying வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 11:30 நித்தினும் சக்திவேலும் தங்கி இருந்த ஹோட்டல் அறை காரை அந்த பார்க்கின் லாட்டிலேயே விட்டு விட்டு டாக்ஸியில் ஹோட்டலை அடைந்து இருந்தனர். முதலில் ஸ்தம்பித்து இருந்த சக்தி இப்போது தன்னிலைக்கு வந்து இருந்தான். சக்தி, "சஞ்சனா ஜாஷ்வா நிலைமையை எப்படி தெரிஞ்சுக்கறது?" நித்தின், "அனேகமா நமக்கு முன்னாடி வந்தனா-தீபாவுக்கு தெரியவர வாய்ப்பு இருக்கு. அவங்க எஃப்.பி.ஐகூடத்தானே வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க?" சக்தி, "எனக்கு என்னமோ சைபர் க்ரைம் பிரிவுக்கும் நாம் பாத்த எஃப்.பி.ஐ ஆளுக்கும் சம்மந்தம் இல்லைன்னு தோணுது" நித்தின், "எப்படி சொல்றே?" சக்தி, "அந்த நியூ யார்க் டைம்ஸ் ஆர்டிகிளில் இருந்த ஃபோட்டோவில் அந்த ஆள் இருந்தான்னு நினைக்கறேன்" நித்தின், "அவன் எப்படி அங்கே வந்தான்?" சக்தி, "அவங்க பேசிட்டு இருந்தப்போ சஞ்சனாவொட மொபைல் அடிச்சுது. அவ அதை எடுத்து ஆஃப் பண்ணின விதத்தை பார்த்தா அன்ஸர் பட்டனை அழுத்திட்டு மேல் பாக்கெட்டில் அலுங்காம வெச்ச மாதிரி இருந்தது. எதிர் முனையில் யாரோ அதுக்கு அப்பறம் நடந்ததை கேட்டு இருக்கணும். அனேகமா அது அந்த அதிகாரியா இருக்கலாம்" நித்தின், "அவ மொபைல் நம்பரை வெச்சுட்டு அது இருக்கும் கட்டிடத்தை கண்டு பிடிச்சு வந்து இருக்கான். காரை பார்க் பண்ண வந்தவனுக்கு அங்கேயே சஞ்சனா விழுந்து கிடந்ததை பார்க்க முடிஞ்சது. அதான் அவளை ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி ஆதங்கத்தோட 'ஓ ஷிட்' அப்படின்னு கத்தினான். சரியா?" சக்தி, "யெஸ் .. " நித்தின், "பட், அந்த ஸான்ட்ரா எஃப்.பி.ஐகாரிதானே. அவதானே சஞ்சனாவை சுட்டா?" சக்தி, "சுடறதுக்கு அவ எடுத்துகிட்ட நேரம் ரொம்ப அதிகம்.. அதனால்தான் அதுக்குள்ள சஞ்சனா அந்த வேன் மேல இருந்தவனை சுட்டுட்டு திரும்பி ஸான்ட்ராவை சுட முடிஞ்சுது" நித்தின், "Still she was a fraction of a second late .. " சொல்லச் சொல்ல இருவரின் கண்களும் மறுபடி குளமாகின. இருவரும் மௌனமாக அமர்ந்து இருந்தனர். நித்தின், "இப்ப என்ன செய்யலாம் ... " சக்தி, "நாம் எங்கே வேலை செய்யறோம்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். நாளைக்கு வெளியே அந்த பக்கம் போகும் போது நம்மை வளைச்சுப் பிடிக்க முடியும்" நித்தின், "எப்பவும் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளிலே இருந்தா பிடிப்பது கஷ்டம்" சக்தி, "சரி, அவங்க கிட்ட இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?" நித்தின், "Obviously we have to approach FBI. இப்பவே எஃப்.பி.ஐயை அணுகலாமா?" சக்தி, "வேண்டாம். ஜாஷ்வா-சஞ்சனா நிலமை என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் அணுகலாம்" நித்தின், "அதுவரைக்கும் இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கலாம்ன்னு சொல்றியா?"சக்தி, "திரும்பி இந்தியாவுக்கு இன்னைக்கே போகலாம். இப்படி யோசிச்சுப் பாரு. அங்கே விழுந்து கிடந்தது ஹாஃப்மன், ஆண்டர்ஸன், ஜாஷ்வா, சஞ்சனா, ஷொயேப், ஸான்ட்ரா அப்பறம் ரைஃபில் வெச்சுட்டு இருந்த ரெண்டு பேர். ஆண்டர்ஸனுக்கும் ஹாஃப்மனுக்கும் நெத்தியில் குண்டு பாய்ஞ்சது. ஸான்ட்ரா தொண்டை வழியா குண்டு போய் பின்னால தெரிச்சுது. அவ உடம்பு கீழே சரியரதுக்கு முன்னாடி தலை துவண்டுச்சு. அதனால இவங்க மூணு பேரும் நிச்சயம் செத்துட்டாங்கன்னு நினைக்கறேன். அந்த ரைஃபில் வெச்சுட்டு இருந்தவங்க பக்கமே அந்த எஃப்.பி.ஐகாரன் போகலே. சஞ்சனா, ஷொயேப், ஜாஷ்வா இவங்க மூணு பேரோட உடலை மட்டும்தான் பார்த்தான். உடனே பாரமெடிக்ஸ்ஸை வரச்சொல்லி ஃபோன் பண்ணினான். அதனால் இந்த மூணு பேரில் நிச்சயம் ஒருத்தராவது உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு. ஜாஷ்வாவோ, சஞ்சனாவோ உயிரோடு இருந்தா கண்விழிச்சதும் நிச்சயம் எஃப்.பி.ஐ மூலம் நம்மை கான்டாக்ட் பண்ணுவாங்க. ஆனா அதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகலாம். அதுக்குள்ள நாம் இந்தியா திரும்பி போயிடலாம். அங்கே இருந்தே, மே பீ, R&AWமூலமாவே அணுகலாம். என்ன சொல்றே?" நித்தின், "ரெண்டு பேரும் உயிர் பிழைக்கலைன்னா .. " மௌனம் காத்த சக்தி சற்று நேரத்துக்கு பிறகு தொண்டை அடைக்க, "I can't see the dead body of any of my near and dear again... (என் நெருங்கிய சொந்தம் எதோட பொணத்தையும் என்னால இனி பார்க்க முடியாது)" என்றான். நித்தின், "Me too .. (நானுந்தான்)" புறங்கையால் கண்களை துடைத்த சக்தி மூக்கை உறிஞ்சியபடி, "அப்படி ஆகி இருந்தா மாங்க்ஸ் பாட் நெட் நம்முதுன்னு தீவிரவாதிகளுக்கு எப்படி தெரியும்ன்னு எஃப்.பி.ஐ அல்லது R&AW நிச்சயம் கேப்பாங்க. அப்ப என்ன சொல்லப் போறோம்?" நித்தின், "ஜாஷ்வா ஹாஃப்மனிடம் சொன்னதா சொல்லலாம். ஈமெயில் விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தை வசூலிக்க அந்த அக்கௌண்டை ஓபன் செய்ய ஹாஃப்மனின் உதவி ஜாஷ்வாவுக்கு தேவைப் பட்டுதுன்னு சொல்லலாம். அவன் கெட்டவன்னு ஜாஷ்வாவுக்கு தெரியாதுன்னு சொல்லலாம். ஆனா அந்த மக்ஸூத் சொன்ன மாதிரி நம்மை போட்டுக் கொடுக்க வாய்ப்பு இருக்கு" சக்தி, "அந்த ஷொயேப் பிழைச்சாத்தான் அல்-கைதாகாரங்க நம்மை போட்டுக் கொடுக்க முடியும்" நித்தின், "எப்படி சொல்றே?" சக்தி, "Event-trace எடுத்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கான்னு சொன்னான் இல்லையா?" நித்தின், "ஆமா ... " சக்தி, "அவன் ஒரு ஹாக்கர். அப்படின்னும் சொன்னான் இல்லையா?" நித்தின், "Yes I get what you mean .. " அவன் எப்படி அந்த ஆதாரத்தை ஸ்டோர் செய்து வைத்து இருப்பான் என்பதை அல்-கைதாவில் இருக்கும் மற்றவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று யூகித்தனர். சக்தி, "பட் உயிரோட இருந்தாலும் எஃப்.பி.ஐ அவனை அவ்வளவு சீக்கரம் விடப் போறது இல்லை" நித்தின், "விடும். பாகிஸ்தான் அரசாங்கம் அவனை அவங்களோட ஆள்ன்னு சொல்லி விட வைப்பாங்க" சக்தி, "எனக்கு நம்பிக்கை இல்லை"

நித்தின், "என்னதான் இந்தியாவோட நல்ல உறவு இருந்தாலும். Pakistan always enjoys a soft-corner from US. மறந்துடாதே" சக்தி, "அனேகமா அவங்க இதில் சம்மந்தப் பட்ட மாதிரியே காண்பிச்சுக்க மாட்டாங்க. ஏன் சொல்றேன்னா, வந்தனா-தீபா நம் பழைய சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை எப்படியும் கண்டு பிடிச்சுடுவாங்க" நித்தின், "கண்டு பிடிச்சுட்டாங்கன்னு நினைக்கறேன்" சக்தி, "எப்படி சொல்றே?" நித்தின், "ஃபோனை எடுத்ததும் கண்ணா மூச்சி ஆடறியாடா பொறுக்கின்னு கத்தினா" சக்தி, "ம்ம்ம்ம் No wonder there were so many missed calls from Vanthana. சோ, அவங்க தேடல் ஜாஷ்வாவில் முடியும். அதே நேரம் அவன் அடிபட்டு" ... மறுபடி பெருமூச்செறிந்தவன் "God! I hope and pray they both are alive" என்றபடி தொடர்ந்தான், "அதே நேரம் அவன் இந்த சம்பவத்தில் இருந்ததால் மாங்க்ஸ் பாட் நெட்டுக்கும் அந்த துப்பாக்கி சூட்டுக்கும் சம்மந்தம் இருக்குன்னு எஃப்.பி.ஐ முடிவெடுக்கும். இதை ஐ.எஸ்.ஐ காரங்களும் யூகிப்பாங்க. அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் ஆர்வத்தை எஃப்.பி.ஐகிட்ட காண்பிச்சுக்க மாட்டாங்க" நித்தின், "முதலில் புறப்படறதுக்கான ஏற்பாடுகளை செய்யலாம்" அலுவலகத்தில் வேலைகள் எல்லாம் முடிந்து இருந்த தருணத்தில் அவர்களுக்கான் செண்ட் ஆஃப் பார்ட்டிக்காக மட்டுமே அடுத்த நாள் செல்ல வேண்டி இருந்தது. நிச்சயம் கூடிய விரைவில் திரும்பி வருவதாக அலுவலக நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பினர். ஃபோன் பாங்கிங்க் வழியாக அவர்களது மாங்க்ஸ் பாட் நெட் மூலம் வந்த பணத்தை வைத்து இருந்த கணக்கில் இருந்து ஒரு கணிசமான தொகையை தங்களது க்ரெடிட் கார்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தனர். பிறகு அடுத்த நாள் காலை இரண்டரை மணிக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக மும்பை புறப்பட இருந்த லுஃப்தான்ஸா விமானத்தில் பிஸினஸ் க்ளாஸ்ஸில் இருவருக்கும் புக் செய்தனர். நடு இரவில் இருவரும் ஒரு டாக்ஸியில் ஏர்போர்ட்டை நோக்கி பயணித்தனர்.

No comments:

Post a Comment