Thursday, February 19, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 2


அந்த விலைவுயர்ந்த பத்திரிகையின் முகப்பில் சத்யன் அழகாக கோட்சூட்டில் இருக்க அவனருகில் ஒயிலாக அவன் தோளில் சாய்ந்து கொண்டு ஒரு அழகான பெண் இருந்தாள் ...மான்சியின் கண்ணீர் வழிந்து அவள் சுடிதாரை நனைத்தது ... இவளை பார்த்து சத்யன் மயங்கியதில் அர்த்தமிருப்பதாகவே மான்சிக்கு தோன்றியது அவ்வளவு அழகியாக இருந்தாள் மணப்பெண் ....மான்சி பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு கட்டிலில் விழுந்து குமுறினாள்

 அவளையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து பார்த்து அந்த பிள்ளைமனம் ஏங்கியது ......இவ்வளவு நாள் தெரியாத துக்கம் இந்த பத்திரிக்கையை பார்த்ததும் கடலலைகள் போல் ஆர்பரித்துக்கொண்டு வந்தது.... வெகுநேரம் குமுறி கண்ணீர் விட்டவள் பிறகு கல்யாணத் தேதி என்றைக்கு என்று பார்த்தாள்....திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தது ....இன்னும் மூன்று நாட்களில் அவளுடைய சொர்க்கம் பறிபோக போகிறது ....அதன்பிறகு தான் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன .. என்று முடிவு செய்தாள் மான்சி

இன்றுதான் சத்யனுக்கும் அந்த அழகி ரம்யாவுக்கும் திருமணம் அன்று மான்சியின் வீட்டில் அனைவரும் அமைதியாகஇருந்தனர்... ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க பயந்தது போல சுவரை பார்த்துக்கொண்டும் தரையை பார்த்துக்கொண்டும் பேசினார்கள் ...ஆனால் எல்லோருமே மான்சியை கண்காணிப்பதில் கவணமாக இருந்தனர் அழகம்மை அன்று சமையல் செய்வதை கூட வேலைக்காரியிடம் ஒப்படைத்துவிட்டு மகளின் அறையிலேயே தவம் கிடந்தாள் ....

ஆனால் மான்சி எந்த சலனமும் இல்லாமல் தனது அன்றாட வேலைகளை செய்துகொண்டு அமைதிகாத்தாள் ராஜவேலுவின் மனம் குமுற அதை வெளிக்காட்டாமல் வேலைக்காரர்களுடன் சேர்ந்து தோட்டத்தை சீராக்கிக்கொண்டு இருந்தார் ....சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அஸ்வின் கூட அன்று அமைதியாக மான்சியின் அறையில் அம்மாவுடன் உட்கார்ந்திருந்தான் மாலை மணி ஏழு இன்னேரம் திருமணம் முடிந்து அனைவரும் கிளம்பியிருப்பார்கள்.....

மணமக்கள் மறுவீடு போயிருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து உள்ளுக்குள்ளேயே மருகிய மான்சி எதையும் வெளிக்காட்டாமல் தம்பியின் நோட்டை எடுத்து படம் வரைந்து கொண்டு இருந்தாள் மான்சி படம் வரைந்து கொண்டிருந்த பென்சிலின் முனை உடைந்துவிட தனது தம்பியிடம் அதை கூறாக்க பிளேடு கேட்டாள்....அவனும் தனது அறையில் தேடி பிளேடை எடுத்து வந்து கொடுக்க ...மானசி அதை வாங்கி பென்சிலை சீவி கூறாக்கிவிட்டு அந்த பிளேடை அந்த நோட்டின் ஒரு பக்கத்தில் மறைத்து வைத்தாள் மான்சியிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாக இருக்கவே அழகம்மை இரவு சமையலை கவணிக்க எழுந்து சமையலறைக்கு போனாள் ...

 ராஜவேலு மறுநாள் கடைக்கு தேவையான பொருட்களை தனது கணக்குப்பிள்ளையிடம் போனில் சொல்லிகொண்டு இருந்தார்...... பால்கனியில் நின்றவாறு அஸ்வின் அன்றைக்கு நடந்த கிரிக்கெட் மேட்சை பற்றி தனது நன்பனுடன் விரிவாக அலசிக்கொண்டு இருந்தான்.... மான்சி அமைதியாக அந்த படத்தை வரைந்து முடித்துவிட்டு அந்த நோட்டில் இருந்த பிளேடை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள் பாத்ரூமுக்குள்ளே இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை மூடி அதன்மீது அமர்ந்தவள் சிறிதுநேரம் கண்களை மூடி யோசித்தாள்

....'இப்போது சத்யா மாமாவுக்கும் அவளுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்க எல்லா ஏற்ப்பாடும் செய்திருப்பாங்க'...'மாமா இன்னேரம் என்னை சுத்தமா மறந்து போயிருப்பார்' ....'அறைக்குள்ளே போனதும் அந்த அழகியை மாமா என்னவெல்லாம் பண்ணுவார்' ....'எத்தனை நாள் இதையெல்லாம் நினைத்து கனவு கண்டு இருப்பேன்' ...'இறுதியில் யாரோ ஒருத்தியை என் மாமா இன்று இரவு அணைத்து உறவு கொள்ள போகிறார்' ....இதை நினைத்ததும் மான்சியின் உடல் நடுங்க மனம் 'ம்ம் சீக்கிரம் செத்துப்போ' என்று அதிகாரமாக உத்தரவிட ....மான்சி தனது மணிக்கட்டைத் திருப்பி அதில் ஓடிய பச்சை நரம்பில் பிளேடால் சரக்கென்று இழுக்க..

அங்கே ஆழமாய் விழுந்த அந்த ரத்தக்கோடு அவள் உடம்பில் இருந்த ஒட்டு மொத்த ரத்தத்தையும் அதன் வழியே வழியவிட்டது \ சமையலறையில் இருந்து எதையோ எடுப்பதற்காக வெளியே வந்த அழகம்மை அஸ்வின் பால்கனியில் நின்றுகொண்டு போனில் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து ''டேய் அஸ்வின் உன்னை அக்கா ரூமில் தானே இருக்க சொன்னேன் இங்கே என்ன பண்ற''...என்று கோபத்துடன் கேட்க ''அம்மா பிரன்ட் பேசினான் இதோ போறேன்''...என்று செல் போனை கட்செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மான்சியின் அறைக்கு போனான்

 அறையில் மான்சி இல்லாததை பார்த்தவன் பாத்ரூமிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு சரி பாத்ரூம் தானே போயிருக்கிறாள் நிம்மதியாக மூச்சுவிட்டு கட்டிலில் உட்கார்ந்து அவள் வரைந்த நோட்டைப் பார்த்தான் ...படம் அருமையாக வந்திருந்தது சிறிதுநேரம் ஆக இன்னும் இவள் உள்ளே என்ன செய்கிறாள் என்று நினைத்த அஸ்வின் லேசாக கைகால்கள் உதற வேகமாக எழுந்து போய் பாத்ரும் கதவைத்தட்ட .....உள்ளேயிருந்து எந்த பதிலும் வராமல் போகவே சற்றே பலமாக கதவைத் தட்டினான் ...

இப்போதும் பதில் இல்லாது போகவே பதட்டத்துடன் ''ஏய் மான்சி இன்னும் உள்ளே என்னடி பண்ற கதவை திற''என்று உரக்க குரல் கொடுத்து கத்த ஆரம்பித்தான் அவனின் பதட்டமான குரல் கேட்டு வெளியே போனில் பேசிக்கொண்டு இருந்த ராஜவேலு போனை வீசியெறிந்துவிட்டு பதறி ஓடி வந்து மகனிடம் ''என்னடா மான்சி எங்கே''என்று கேட்க .... அஸ்வின் கண்களில் கண்ணீர் வழிய ''அப்பா நான் இப்போதான் உள்ளே வந்தேன் ரொம்ப நேரமா மான்சி பாத்ரூமில் இருக்காப்பா கூப்பிட்டா பதிலே இல்லப்பா '' என்று அழுகையுடன் கூறினான்இப்போது ராஜவேலு கதவை பலமாக தட்டினார்

பதில் இல்லாது போகவே கதவை தன் தோளால் இடிக்க ...அஸ்வின் வெளியே ஓடி வேலைக்காரர்களையும் அழகம்மையையும் அழைத்து வர வேலைக்காரர்கள் ராஜவேலுவை விலக்கி விட்டு அவர்கள் மாறிமாறி கதவை தகர்க்க அது பெயர்ந்து விழுந்தது அனைவரும் உள்ளே ஓட ...அங்கே மான்சி அமர்ந்தவாறு சுவரில் சாய்ந்து தலை தொங்கியபடி இருக்க இடது கையின் மணிக்கட்டில் இருந்து ரத்தம் கீழே வழிந்து சிறு ஓடையாக ஓடி கழிவுநீர் போகும் பாதையில் இறங்கியது

 அதை பார்த்துமே அய்யோ மகளே என்று கதறி அழகம்மை மயங்கி விழ மற்ற அனைவரும் தலையில் அடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தனர் அவர்கள் வீட்டு டிரைவர் மட்டும் சற்று சுதாரித்து மான்சியின் வலதுகை நாடியை பிடித்து பார்த்தான் அது தனது துடிப்பை இன்னும் விடாமல் லேசாக துடிக்க''சார் சார் இன்னும் உயிர் இருக்கு தூக்குங்க சார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் ''என்று டிரைவர் கத்தினான் ராஜவேலு கண்ணீருடன் டிரைவரை கையெடுத்துக்கும்பிட்ட டிரைவர் மான்சியின் சுடிதார் துப்பட்டாவால் ரத்தம் வழிந்த கையை கட்டு போட்டு அவளை தூக்க மற்றவர்களும் அவனுக்கு உதவினர்

 அடுத்த சில மணி நேரத்தில் மான்சி சென்னையின் பிரபல மருத்துவமனையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் அஸ்வின் அழுதுகொண்டே தனது பெரியப்பாவுக்கு போன் செய்து விபரம் செல்ல அடுத்த ஏழு மணிநேரத்தில் பெரியப்பாவின் குடும்பம் மொத்தமும் கதறிய படி ஆஸ்பத்திரிக்கு வந்தனர் அடுத்த நான்கு நாட்களும் மான்சிக்கு நினைவு திரும்பவேயில்லை ...மான்சிக்கு நிறைய ரத்தம் வீனாகிவிட அவளின் அண்ணன்கள் மூவரும் மாறிமாறி அவளுக்கு ரத்தம் கொடுத்தனர் .....

அவளின் அம்மாவும் பெரியம்மாவும் சென்னையில் உள்ள ஒரு கோயில் கூட தவராமல் போய் எல்லா தெய்வங்களையும் கும்பிட்டனர்...அவளின் அப்பாவும் பெரியப்பாவும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிகொண்டு ....புதிதாக கல்யாணம் ஆன சத்யனை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு திட்டித்தீர்த்தார்கள் .

சரியாக ஜந்தாவது நாள் ...இவ்வளவு பேர்களின் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் கண்ணீரும் மான்சியை எமனிடம் இருந்து மீட்டுவந்தது மிகவும் சிரமத்துடன் கண்களை திறந்த மான்சி சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் பார்த்துவிட்டு இறுதியாக வேலுவை பார்த்து ''நான் பிழைச்சுட்டேனா அப்ப சத்யா மாமா வந்துட்டாரா ''என்று ஈனஸ்வரத்தில் கேட்டாள் அதை கேட்டதும் வேலு தன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான் .....இப்போ மட்டும் சத்யன் அவன் கையில் கிடைத்தால் அவனை கழுத்தை நெரித்தே கொன்று இருப்பான் ....

அது மருத்துவமனை என்றும் பார்க்காமல் சத்யனை வாய்க்கு வந்தபடி திட்டினான் ....மற்றவர்களுக்கு அவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது பாவம் இதயெல்லாம் அறியாத சத்யன் ஏற்கனவே முடிவு செய்தபடி திருமணம் முடிந்த அன்றே மலேசியா போய் அங்கேயிருந்து தேன்நிலவுக்காக சுவிசர்லாந்து சென்றுவிட்டான்

 அவனின் பெற்றோர்களுக்கு மட்டும் மான்சியின் நிலைமை வேலு வீட்டு வேலைக்காரன் மூலமாக தெரியவந்தது ....கலங்கி கண்ணீர் விட்டு மான்சியை எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய் பார்ப்பது என்று தவித்தனர் மான்சியின் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்தது.... அதன்பிறகு மான்சி எல்லோரிடமும் பேசுவதை தவிர்த்து எப்போதும் எதையாவது யோசிப்பவள் போலவே இருக்க .....மான்சியை கவுன்சிலிங் செய்வதற்கு மனநல டாக்டர் வரவழைக்கப்பட்டார் அன்று மாலை மான்சியை பரிசோதிக்க வந்த டாக்டர்க்கு ஐம்பது வயதிருக்கும் ஆனால் பேச்சில் செயலில் நாற்பதை கொண்டு இருந்தார் ....

சிறிதுநேரம் எதுவும் பேசாமல் மான்சியின் முகத்தையே பார்த்தவர்...பிறகு என்கூட மருத்துவமனையின் தோட்டத்துக்கு வர்றியா சும்மா கொஞ்ச நேரம் வாக்கிங் போற மாதிரி பேசிட்டு வரலாமா''என்று அன்போடு கூப்பிட்டார் மான்சிக்கு முதலில் எரிச்சலாக இருந்தாலும் அவர் குரலில் இருந்த அமைதியும் அன்பும் அவளை தலையசைக்க வைத்தது டாக்டரும் மான்சியும் தோட்டத்தில் நடந்து அங்கேயிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தனர் ....டாக்டர் தன்னை பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக்கொன்டார் ...

திருப்பி மான்சியின் பெயர் என்னவென்று கேட்டார் மான்சி சிறிது மவுனத்திற்கு பிறகு ''என் பெயர் மான்சி'' என்று கூறினாள் அதன்பிறகு டாக்டர் சிறிதுசிறிதாக அவளிடம் பேச்சுக்கொடுத்து அவளின் மனதில் இருக்கும் மொத்த விஷயங்களையும் வரவழைத்தார் ....அவரின் கனிவான பேச்சும் அன்பான அனுகுமுறையும் மான்சி ரொம்ப பிடித்துவிட தன் மனதில் இருந்ததை எல்லாம் அவரிடம் சொன்னாள்.

எல்லாவற்றையும் கேட்ட டாக்டர் ''அப்படின்னா உன்னோட பிரன்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்கன்னு தான் நீ காலேஜ்க்கு போகலையா ''என்றவர் அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு ''இதோ பாரும்மா மான்சி எனக்கு ரெண்டு பொண்ணு ஒருத்தி கனடாவில் எம் எஸ் பண்றா சின்னவ இப்போதான் ப்ளஸ்ட்டூ எழுதியிருக்கா.....பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியாதா.....

உன் மாமா நீ கருப்பாக இருக்கேன்னு வேனாம்ன்னு சொல்லிட்டாருங்குற ஒரே காரணத்துக்காக நீ இப்படி செய்திட்டயே ஒரு நிமிடம் உன்னை பெத்தவங்களை யோசிச்சு பார்த்தியா .....நீ கருப்புன்னு அந்த முட்டாள் சொன்னா நீ நம்பிர்றதா .....நீ எவ்வளவு அழகான பொண்ணுன்னு தினமும் நீ பார்க்கிற கண்ணாடி உனக்கு சொல்லலை....இதோபார் மான்சி நீ நல்லா படிக்கனும் நிறைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கனும்....

உன்னை அழகில்லைன்னு சொன்ன உன் மாமா முன்னால அவனை விட அழகான பல ஆண்களை உன் அதிகாரத்தின் கீழ் வேலைசெய்யும்படி நீ முன்னுக்கு வரனும் ....உனக்கு சம்மதம்னா சொல்லு உங்க அப்பாவிடம் நான் பேசறேன் ...நீ கனடா போய் மேல படி நீ தங்குவதற்கும் உனக்கு துணையாகவும் எல்லாம் என் மகள் ஆர்த்தி இருப்பா...

இனிவரும் தடை கற்களை எல்லாம் உனது வெற்றியின் படிக்கற்களாக மாற்று ....உனக்கு திறமையும் அறிவும் நிறைய இருக்கு அதை உன்னோட முன்னேற்றத்துக்கு பயன்படுத்து...அதைவிட்டு என் மாமா என்னை வேனாம்ன்னு சொல்லிட்டார்ன்னு முட்டாள் தனமா இப்படியெல்லாம் செய்யாதே ...

என்ன கனடா போக உனக்கு சம்மதமா இன்னும் இரண்டு நாள் டைம் எடுத்துக்க நல்லா யோசித்து ஒரு முடிவு பண்ணு ...மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன்" என்று டாக்டர் உறுதியுடன் கூற ...மான்சி முகத்தில் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அதன்பிறகு நாட்கள் விரைந்து செல்ல..... மான்சி படிபடியாக குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியே வருவதற்குள் டாக்டர் அவள் கனடா செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ...

அவருக்கு தன் மகளை ஒத்த வயதுடைய மான்சியை ரொம்ப பிடித்துவிட்டது ...இப்படி சிறுவயதில் அவளுடைய வாழ்க்கை வீனாகிவிட கூடாது என்பதால் கவனத்துடன் ராஜவேலுவை கலந்துகொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் மான்சியின் அவளை தனியாக வெளிநாடு அனுப்ப பயமாக இருந்தாலும் இப்போதைக்கு அதுதான் சரியான முடிவு என்று நினைத்தனர் ......

டாக்டர்ரின் கனிவான பேச்சாலும் புத்திமதிகளாலும் மான்சியின் மனநிலை வெகுவாக மாறியிருந்தது.... தனது தற்கொலை முயற்சியை நினைத்து அவளே வெட்கப்படும் அளவுக்கு மாறியிருந்தாள் ....கனடாவில் இருக்கும் டாக்டரின் மகள் ஆர்த்தியிடம் போனில் பேசினாள் ....மான்சியை விட வயதில் மூத்தவளான ஆர்த்தி அன்பானா பேச்சில் தனது அப்பாவை மிஞ்சுபவளாக இருந்தாள் ... இதோ மான்சி கனடா கிளம்பும் நாளும் வந்தது

அனைவருக்கும் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் ...மான்சியிடம் மாற்றங்களும் சந்தோசமும் நிம்மதியை தந்தது .....வேலு மட்டும் தங்கைக்கு ஆயிரம் புத்திமதிகளை சொல்லிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றினான் ....வேலுவின் மனைவி ரஞ்சனி தனது தம்பியின் தவறுக்காக மான்சியிடம் மன்னிப்பை வேண்டினாள் ஆனால் மான்சி அதையெல்லாம் மறந்துவிட்டதாக கூறினாள் மான்சிக்கு சத்யன் பற்றிய ஞாபகங்கள் வரும்போதெல்லாம் தனதுஇடதுகையின் மணிக்கட்டில் இருக்கும் அந்த ஆழமான வெட்டப்பட்டு பிறகு தையல் போடப்பட்ட தழும்பை பார்த்துக்கொள்வாள்

அது அவள் மனதில் ஒரு வன்மத்துடன் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியை கொடுத்தது அவள் கனடா புறப்பட..... அவளை வழியனுப்ப வந்த அவள் குடும்பத்தினர் விட்ட கண்ணீரை கூவத்துக்கு திருப்பியிருந்தால் கூவம் சுத்தமாகியிருக்கும் அவ்வளவு கண்ணீர் விட்டனர் அதுவும் வேலுவும் அழகம்மையும் அழுத அழுகையைப் பார்த்து ஏர்போர்ட்டில் இருந்த பாதிபேர் தங்கள் கைகுட்டையை மூக்கில் வைத்து மூக்கை சிந்தினர்

.....டாக்டர்க்கு இவர்களையெல்லாம் பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு இந்தகாலத்தில் இவ்வளவு பாசமான குடும்பமா என்று பார்த்து வியந்து போனார்.... மான்சி எல்லோருக்கும் கையசைத்துவிட்டு விமானத்தில் ஏறினாள ....அஸ்வினுக்கும் டாக்டர்க்கும் மற்றவர்களை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது இங்கே இப்படியிருக்க.... அங்கே தனது தேன்நிலவை முடித்துக்கொண்டு தனது அழகு மனைவியுடன் பொள்ளாச்சி திரும்பிய சத்யனை..... அந்த ஊர்மக்களில் இருந்து அவனின் நெருங்கிய நன்பர்கள் அவன் அம்மா அப்பா வேலைக்காரர்கள் என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதியை பார்பது போல வெறுப்புடன் பார்த்தனர்

 சத்யன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவனுக்கு முதலில் சொல்லப்பட்ட தகவல் மான்சியின் தற்கொலை முயற்சிதான் ...அதைக்கேட்டு அதிர்ந்து போன சத்யன் தனது அம்மாவிடம் மான்சிக்கு என்னாச்சு விசாரித்தான் ....அவள் கண்ணீருடன் மான்சி செத்து பிழைத்த கதையைச் சொல்ல.... சத்யனின் மனதில் கடுமையான ஒரு வலி பரவ.... முதன்முதலாக தான் செய்தது தவறோ என்று சிந்திக்க ஆரம்பித்தான்....

ஒரு சிறுப்பெண்ணி்ன் வாழ்க்கை அநியாயமாக தன்னால் முடிந்து போயிருக்குமே என்று வருந்தினான் .....அவளை பிடிக்கவில்லை என்றால் முதலில் இருந்தே அவள் நெருக்கத்தை தவிர்த்திருக்கலாம்...அதைவிட்டு அவளிடம் நன்றாக பழகிவிட்டு இறுதியில் தான் அப்படி சொன்னது அவள் மனதை எவ்வளவு பாதித்திருக்கும் என்று மனதுக்குள் குமுறினான் சத்யன் திடீரென மான்சியை நினைத்து இவ்வளவு வேதனை படுவதற்கும் காரணம் இருந்தது ....

அது என்னவென்றால் அவளை உதாசீனப் படுத்தியதின் பாதிப்பு அவனின் திருமணவாழ்க்கையில் அப்பட்டமாக தெரிந்தது...ஆமாம் சத்யன் ஒவ்வொரு நாள் இரவும் தன்னுடைய புது மனைவியிடம் தாம்பத்யத்தை மண்டியிட்டு கைநீட்டி பிச்சையாக யாசித்துக் கொண்டு இருந்தான்
 ''முத்தமென்றும் மோகமென்றும்....
 ''சத்தமிட்டுச் சத்தமிட்டு..... ''
புத்திகெட்டு போனதொரு காலம்-இன்று...
 ''ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்...! '
'கட்டிலிலும் மெத்தையிலும் ..... ''
காலமறி யாதிருந்து .... ''
தட்டிவிட்ட பந்துவிளை யாட்டு -இன்று... ''
உடல் கெட்டபின்பு வந்ததடி பாட்டு..!

 சத்யனுக்கு வாய்த்த மனைவி ரம்யா தான் அழகி என்ற காரணத்தை வைத்தே சத்யனை அடிமைப்படுத்த முயன்றாள் ... மேல்நாட்டு காலாச்சாரத்தில் மூழ்கிக்கிடந்த அவளின் தேவைகள் அதிகாமாக இருந்தது ...தான் காலால் இட்ட வேலைகளை சத்யன் தலையால் செய்யவேண்டும் என்று நினைத்தாள் அவள் நினைத்து பொருட்களை வாங்க வேண்டும் என நினைத்தாள் ....சத்யனும் அவளுக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கிக்கொடுத்து அவளை திருப்தியாக வைத்திருக்க முயற்ச்சித்தான் ...

 ஆனால் அவள் எதிலும் திருப்தி அற்றவளாக இருந்தாள்....நிறைய இடங்களுக்கு சுற்றினாள்...வீட்டில் செய்யும் உணவுகள் தனக்கு பிடிக்கவில்லை என்று தகராறு செய்து ஒவ்வொரு நாளும் ஜந்து நட்சத்திர ஓட்டல்களில் இருந்து உணவுகளை வீட்டுக்கு வரவழைத்துதான் உண்டாள் .... நிறைய இரவு நேர விருந்துகளுக்கும் முறையற்ற பார்ட்டிகளுக்கும் போக ஆரம்பித்தாள்.....

அப்போதும் சத்யன் எஜமானின் காலைச் சுற்றிக்கொண்டு பின்னால் ஓடும் ஒரு செல்ல நாய்க்குட்டியைப் போல அவளின் பின்னால் சென்றான்... சத்யன் ஒருநாள் இரவு அவளிடம் உறவுகொள்ள சத்யன் பலஆயிரங்களை செலவு செய்யவேண்டியிருந்தது ....அவளின் தேவைகள் ஆயிரங்களை கடந்து லட்சங்களை கடந்து கோடிகளில் வந்து நின்றபோதுதான்....சத்யன் இவளுடன் தனக்கு நடந்த திருமணம் பெரும் தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.... அடிக்கடி மலேசியா போகவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள்... வேறு வழியின்றி சத்யனும் அவளுடன் சென்றான்... அங்கே ரம்யாவுக்கு இருந்த ஆண் நன்பர்களை பார்த்து சத்யன் அதிர்ந்து போனான் ....

இவன் எதிரிலேயே அவர்களுடன் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டுக்கொண்டு பின்னிரவில் வீடுவர ஆரம்பித்தாள்....இவனையும் அவர்களுடன் வந்து நடனமாடச் சொன்னாள் ... சத்யனுக்கு இதுபோன்று பழக்கங்கள் இல்லாததால் மறுத்துவிட ...அத்தனைபேர் எதிரிலும் அவனை பட்டிக்காட்டான்.. பேக்கு என்றெல்லாம் கிண்டல் செய்து அவமானப்படுத்தினாள்....கிட்டத்தட்ட மலேசியா வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இந்தியா திரும்ப வேண்டும் என அவன் ரம்யாவை அழைக்க அவள் பின்னர் வருவதாகவும் அவனை மட்டும் இந்தியா போகச்சொன்னாள்

....சத்யனும் தன் குடும்பத்தை மனதில் கொண்டு உடனே கிளம்பி இந்தியா வந்தான்.. சத்யனுக்கு திருமணம் முடிந்து இன்றோடு ஒருவருடம் முடிந்து விட்டது... ஆனால் ரம்யா மலேசியா போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டது... சத்யனும் அவளை வரவழைக்க எவ்வளவோ முயற்ச்சிகள் செய்தான் அவள் இந்தியா வர மறுத்தாள்...அவனுக்கு அவள் வேண்டுமென்றாலும் அவனுடன் அவள் இனிமேல் சேர்ந்து வாழவேண்டும் என்றாலும் சரி அதற்காக அவள் போட்ட நிபந்தனைகளை கேட்டு சத்யன் அதிர்ந்து போனான் ...

ஆமாம் அவனுடைய மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு அவளுடன் மலேசியா வந்து செட்டிலாகும்படி வற்புறுத்தினாள் .....அப்படி அவன் மலேசியா வர மறுத்தால் அவளுக்கு விவாகரத்து வழங்கி அவளை சுதந்திரமாக இருக்கவிட வேண்டும் என்று அவனிடம் சொல்ல .... சத்யன் இரண்டுக்குமே மறுத்தான்..

அவனுக்கு அவள் அழகில் இருந்த மயக்கம் ஒருபுறம் தனது குடும்ப கௌரவம் ஒருபுறமும்மாக...எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தத்தளித்தான் ....அவனுடைய வாழ்க்கையை நினைத்து அவனை பெற்றவர்கள் கண்ணீர் விடாத நாளே இல்லை சத்யன் இப்போதெல்லாம் நிறைய குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்து அவற்றில் தனது சோகங்களையும் துக்கங்களையும் ஏன இளமையையும் சேர்த்து தொலைக்க ஆரம்பிததான்...

 கடவுள் தனக்கு கொடுத்த ஒரு அற்புதமான வரமான வாழ்க்கையை தொலைத்து விட்டு தான் தேர்ந்தெடுத்து இந்த கேவலமான நரகவாழ்வை எண்ணி எண்ணி மனம் ஏங்கினான் ....மான்சியை பற்றிய நினைவுகள் இப்போதெல்லாம் அதிகமாக அவனை பாதிக்க ஆரம்பித்தது மான்சிக்கு கனடாவில் ஆமில்டன் மொஹாக் யுனிவர்சிட்டியில் பி இ படிப்பதற்காக இடம் கிடைத்திருந்தது ஆர்த்தி தங்கியிருந்த இடம் அமைதியாக ரொம்ப அழகாக இருந்தது..... மான்சிக்கு அங்கே கனுக்கால் வரை கொட்டிக்கிடக்கும் பனித்துகள்களை பார்த்து ஆச்சரியமாக இருக்கும் ஆர்த்தி ரொம்ப கலகலப்பானவளாக இருந்தாள்

ஆனால் சிலவிஷயங்களில் ரொம்ப கண்டிப்பானவளாகவும் இருந்தாள் ...அவர்கள் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டில் ஒரு வயதான பெண்ணும் அவளுக்கு துணையாக ஒரு ஆண் லாயரும் இருந்தார்கள் அவர்களுக்குள் என்ன உறவு முறை என்று ஆர்த்திக்கே தெரியாது.....மான்சி அதைப்பற்றி கேட்டால் ம் அவர்களால் நமக்கு தொல்லையில்லாத பட்சத்தில் அவர்கள் எப்படியிருந்தால் நமக்கென்ன என்று சொல்லி சிரிப்பாள்

 ஆர்த்தியின் லட்ச்சியமெல்லாம் மனயிலில் எம் டி முடித்து மேலும் அதைப்பற்றிய சில ஆராய்ச்சிகள் செய்து பெரிய ஆளாக வரவேண்டும் பிறகு இந்தியா சென்று தனது அப்பாவுக்கு மனநல மருத்துவமனை ஒன்று பெரிதாக கட்டித்தர வேண்டும் என்ற ஆக்கபூர்வமான லட்சியங்கள் இருந்தன கனடாவில் இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் ஆண்களும் பெண்களும் வந்து தங்கி படித்துக்கொண்டு இருந்தனர் ....

ஆனால் அனைரும் பார்ட்டைம் வேலை செய்து கொண்டே படித்தனர் ....இதை பற்றி மான்சி ஆர்த்தியிடம் கேட்டபோது 'பகுதிநேரமாக வேலை செய்யவில்லை என்றால் இங்கே கட்டுபடியாகாது 'என்றாள் ஆர்த்தியும் தனது தோழியொருத்தியின் உதவியுடன் ஒரு பொக்கே ஷாப்பில் வேலை செய்தாள் ...மான்சிக்கும் அங்கேயே வேலைக்கு ஏற்பாடு செய்தாள் கனடா மான்சிக்கு நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுத்தது ....ஆனால் மான்சி அதில் நல்லவைகளை மட்டுமே கற்றுக்கொண்டாள்


இப்போதெல்லாம் மான்சிக்கு ஒருநாளைக்கு இருபத்திநாலு மணிநேரம் போதவில்லை.... தனக்கு காதலில் ஏற்ப்பட்ட தோல்வியை தனது முன்னேற்றத்திற்கான வெற்றிபடிகளாக மாற்றினாள் .....அவளது வாழ்க்கையின் லட்சியமே படிப்பு என்று ஆனது...

அவளது உழைப்பு வீண்போகாமல் அந்த யுனிவர்சிட்டியில் முதல் இருபத்தைந்து மானவர்களில் மான்சியும் ஒருத்தியாக வந்தாள் நான்கு வருட படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வேலைகிடைத்தது .....அந்த வேலையில் சேருவதற்கு முன் ஒருமுறை இந்தியா வந்தவள் தனது பெரியப்பா குடும்பத்தை சென்னைக்கே வரவைத்து பார்த்துவிட்டு மறுபடியும் கனடா திரும்பினாள் .... அங்கே வேலை செய்துகொண்டே மேல் படிப்பை முடித்தாள்....பிறகு அதிக சம்பளத்தில் லாஸ்வேகாஸ்ஸில் வேறு வேலை கிடைக்க அங்கே இடம் பெயர்ந்தாள் ...

அவளுக்கு இந்த வாழ்க்கை பழகிப்போனாலும் ..இடைஇடையே எப்போதாவது சத்யனின் ஞாபகம் வரும் ....அவனை பற்றிய தகவல்களையும் இவள் கேட்பதில்லை என்பதால் அவள் குடும்பத்தினர் இந்த ஏழு வருடங்களாக அவனை விஷயங்கள் எதுவும் அவளுக்கு சொல்லவில்லை ....மான்சி இன்னேரம் சத்யன் இரண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருப்பான் என்று நினைப்பாள் ...அதுபோன்ற அவனை பற்றிய நினைவு வரும் சமயங்களில் தன்னை வேலைகளில் மூழ்கடித்துக் கொள்வாள் அன்று அவள் தம்பி அஸ்வினிடம் மெயில் வந்திருந்தது ....

பெரியப்பாவிற்க்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றும் அவளை பார்க்க வேண்டும் என்று துடிப்பதாகவும் உடனே இந்தியா வருமாறு தகவல் வந்திருந்தது ... மான்சி மனம் தயங்கினாலும் அவளின் பெரியப்பா பாசம் அவளை இந்தியாவுக்கு இழுத்து வந்தது இந்தியாவில் சென்னைக்கு வந்த மான்சியை டாக்டரும் அண்ணன் வேலுவும் அஸ்வினும் வரவேற்று அழைத்துச்சென்றனர் வேலுக்கு மான்சியை பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது....

இது என் தங்கைதானா என்று வாய்பிளந்து பார்த்தான்...மான்சியின் அதிகமான படிப்பும்.. மேல்நாட்டு நாகரீகமும்..கைநிறைய சம்பாதிக்கும் பணமும் ...அவளை பெருமளவு மாற்றியிருந்தது நுனிநாக்கு ஆங்கிலமும் ..நாகரீகமான உடைகளும் ...தோள் வரை வெட்டப்பட்ட கூந்தலும்...அதிக உடற்பயிற்சியால் மெலிந்து அழகாகி இருந்த தேகமும்...மேல்நாட்டு வாசத்தால் அவளின் நிறம் கூட மாறி போய் வெண்மையாகி இருந்தது

 அவள் பெரியப்பா சென்னை மருத்துவமனையிலேயே அனுமதிக்க பட்டிருக்க மான்சி போய் பார்த்தாள்.....அவர் அப்படியொன்றும் மோசமான நிலையில் இல்லை வாக்கிங் ஸ்டிகை ஊன்றிக்கொண்டு ஒரளவுக்கு நடந்தார் மான்சி அவருடன் சிறிது நேரம் இருந்து விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினாள் ....வேலுதான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்....

கார் கண்ணாடியின் வழியாக சென்னையின் நெரிசலை பாரத்துக் கொண்டு வந்த மான்சியை திரும்பி பார்த்த வேலு ''ஏன் மான்சி இன்னும் எத்தனைநாள் இங்கே இருப்ப....எவ்வளவு நாளைக்கு லீவு போட்டுருக்க ...என்று கேட்க ''இல்லண்ணா லீவு எதுவும் போடலை ...அந்த நிறுவனத்தில் ஆறுமாச ஒப்பந்தத்தில் தான் வேலை செய்தேன் ...இங்கே வரும்போது கிட்டத்தட்ட அது முடிஞ்சுபோச்சு ....இனிமேல் அங்கே போன புதுசாதான் ஒப்பந்தம் போடனும் அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை ''என்று மான்சி தன் அண்ணனுக்கு விளக்கி கூறினாள்

 அதைக்கேட்டு சிறிதுநேரம் அமைதியாக காரை ஓட்டியவன் பிறக தொண்டையை செருமிக்கொண்டு ''மான்சி இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருப்ப உனக்கும் வயசு 27ஆகுது சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணிக்கம்மா ...நம்ம வீட்டுல எல்லாருக்கும் இதே நினைப்புதான் நீ என்னம்மா முடிவெடுத்திருக்க''என்று மெல்லிய குரலில் வேலு கேட்டான் ''ம்ஹூம் இதுக்குத்தான் நான் இந்தியா பக்கமே வரமாட்டேன்னு சொன்னது வந்தா இதைத்தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும் ''என மான்சி குரலில் எரிச்சலுடன் கூற

அவளை கைநீட்டி தடுத்த வேலு ''மான்சி இதை நானா கேட்கலை அப்பாவும் சித்தப்பாவும் தான் கேட்க சொன்னாங்க ''என்றவன் காரின் வேகத்தை குறைத்து மான்சியிடம் ''ஏன் மான்சி நீ இன்னும் அந்த சத்யனையே மனதுல நெனச்சுகிட்டு இருக்கியா உன்மையை சொல்லு ''என்று அவளின் கண்களை பார்த்து நேரடியாக வேலு கேட்டான் இந்த நேரடி கேள்வியால் மான்சி ஒருகணம் தடுமாறினாலும் பிறகு சமாளித்து ''என்ன சொல்ற நீ நான் ஏன் அவரை நினைக்கனும் அதெல்லாம் எப்பவே மறந்தாச்சு ...ஆனா எனக்கு கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்னை யாரும் வற்புறுத்தாதீங்க ''என்று மான்சி பிடிவாதமான குரலில் கூறினாள்

 ''நீ என்னம்மா இப்படி சொல்ற நீ எங்கவீட்டுக்கு இருக்குற ஒரே பொண்ணு உனக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணனும்னு பெரியவங்க ஆசை படுறாங்க''என்று சொன்னவன் கார் இன்ஜினை சுத்தமாக ஆப் செய்துவிட்டு நேராக மான்சியின் பக்கம் திரும்பி உட்கார்ந்தான் ''மான்சி உனக்கு அந்த சத்யன் மேட்டர் எதுவுமே தெரியாதில்லையா ..இப்போ அவன் எங்கே இருக்கான்னு அவன் நன்பன் சுதாகரை தவிர யாருக்குமே தெரியாது'...என்று முடிப்பதற்குள் ..

மான்சி அதிர்ச்சியுடன் ''ஏன் என்னாச்சு அண்ணா ''என்று படபடப்புடன் கேட்டாள் அவளின் படபடப்பை பார்த்து ''இப்போ தான் அவனை மறந்துட்டேன்னு சொன்ன இப்போ அவனை காணோம்னு சொன்னதும் இப்படி பதற்ற''..என்றான். வேலு அதன்பிறகு சத்யனை பற்றிய விஷங்களை மடமடவென்று மான்சியிடம் கொட்ட ஆரம்பித்தான் ''சத்யன் கல்யாணம் செய்துகிட்ட பொண்ணு சரியில்லை மான்சி...அவள் ரொம்ப மோசமானவள் மான்சி அது தெரியாம நம்ம பய போய் கவுந்துட்டான் அவளுக்கு குடிப்பழக்கம் இருக்காம் ..

வெளி ஆம்பிளைங்க சவகாசம் வேற உண்டு போல இவனும் எப்படியாவது அவளை திருத்தி பொள்ளாச்சிக்கு கூட்டிவறனும்னு முயற்ச்சி பண்ணான் ...ஆனா அந்த பொண்ணு மலேசியாவை விட்டு வரமுடியாதுன்னு சொல்லிருச்சு ... நான் உனக்கு வேனும்னா உன் சொத்து மொத்ததையும் வித்துட்டு நீயும் வா நாம மலேசியாவிலேயே செட்டில் ஆகிறலாம்னு சொல்லிருக்கா ...இவன் அதுக்கு சம்மதிக்கவே இல்லை ..அப்புறமா அந்த பொண்ணு விவாகரத்து கேட்டு வழக்கு போட்டுச்சு ஜீவனாம்சமாக ஒரு பெரிய தொகையை கேட்டு நோட்டீஸ் அனுப்பினா

இவன் அவ்வளவு தொகைக்கு ஒத்துக்கலை ...இந்த கேஸ் கோயமுத்தூர் கோர்ட்டில் கேஸ் ரொம்ப நாள் நடந்தது...இவன் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது அவளை என்கூட சேர்ந்து வாழச்சொல்லுங்கன்னு சொல்லியிருக்கான் ..அதுக்கு அவ இவனை ரொம்ப கேவலமா பேசி அவமானப்படுத்தியிருக்கா ..

அதன்பின் இவன் அவளுக்கு உடனே விவாகரத்தையும் குடுத்து ஜீவனாம்சமா கேட்ட பணத்தையும் கொடுத்துட்டான் ''என்று வேலு நிறுத்திவிட்டு மான்சியை பார்த்தான் ... அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை ஆனால் கண்கள் மட்டும் கலங்கியிருப்பது போல வேலு தெரிந்தது....

அவளிடம் இருந்து எந்த பேச்சும் வராமல் போகவே மறுபடியும் இவனே ஆரம்பித்தான் .



No comments:

Post a Comment