Thursday, February 19, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 1


விடியல் தன் முகவரியை பூமியில் பதித்துக்கொண்டிருந்தது . புலர்ந்தும் புலராத அந்த காலைப்பொழுது .இரவு முழுவதும் வண்டுகளுடன் புணர்ந்த காரணத்தால் பனியில் குளித்த மலர்களின் தூய்மையுடன் விடிந்துகொண்டிருந்தது.

 பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் இருந்தது அந்த பெரிய வீடு. அந்த ஊரில் இருப்பவர்கள் அந்த வீட்டை பங்களா வீடு என்றுதான் சொல்வார்கள் சிறிது பழமையான அந்த வீட்டின் இளவரசன் சத்யானந்தன். சத்யன் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை எதையும் தனது பேச்சால் சாதித்துவிட கூடியவன் .அவனுக்கு முன் இரண்டு சகோதரிகள் மூத்தவள் ரத்னா திருமணம் ஆகி பெங்களூரில் வசிக்க அடுத்தவள் ரஞ்சனி உள்ளூரில் பக்கத்து தெருவில் வசிக்கும் தன் பெரிய மாமாவின் மூத்த மகனை திருமணம் செய்து உள்ளூரிலேயே வசித்தாள்


அவன் குடும்பத்தை பற்றி விரிவாக சொல்வதானால் அம்மா அமுதா அப்பா சச்சிதானந்தன் .இவர்களுடனே வசிக்கும் தாய்வழி தாத்தா ரத்னவேலு. சத்யனுக்கு இரண்டு தாய்மாமன்கள் மூத்தவர் சுந்தரவேலு தனது மூன்று மகன்களுடன் பல ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு அதே ஊரில் பக்கத்து தெருவில் வசிக்க. இளைய மாமன் ராஜவேலு தனது குடும்பத்துடன் சென்னையில் தியாகராயநகரில் வீடுகட்ட தேவையான அனைத்து பொருட்களுடன் மிகப்பெரிய ஹார்டுவேர் கடை நடத்திவருகிறார்.

ராஜவேலு சத்யனின் அத்தை தனது சகோதரியின் நாத்தனார் (அப்பாவின் தங்கை ) அழகம்மையை மணந்திருந்ததால் இவர்களின் குடும்ப உறவு பலமாக இருந்தது இதோ இன்று கல்லூரியின் விடுமுறை நாட்களை தனது அத்தை வீட்டில் கொண்டாட்டத்துடன் கழிக்க சென்னையில் இருந்து சத்யனின் இளைய மாமனின் ஒரே மகள் மான்சி வருகிறாள்.

 மான்சி வயது பதினேழு கல்லுரியில் முதலாம் ஆண்டை முடித்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பவள். சற்றே பூசினார்ப் போன்ற உடல். மாநிறத்துக்கும் சற்று குறைவாக அகன்ற விழிகளும் கூர்ந்த நாசியும் தடித்துச் சிவந்த இதழ்களும் எப்போதும் குறும்புடன் சிரிப்பும் துடிப்பும் நிறைந்த சுட்டி பெண் ராஜவேலுவுக்கு தன் மகள் மீது அலாதியான பாசம் அவர் அண்ணனுக்கும் பெண் குழந்தைகள் இல்லாததால் மான்சிக்கு அந்த குடும்பத்தில் அவள் தம்பி அஸ்வினை விட அதிக செல்லம் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் மொத்த குடும்பமும் விடும் கண்ணீரை தஞ்சைக்கு திருப்பிவிட்டால் ஒரு போகம் நெல்லே விளையும்

அவ்வளவு பேதகமற்ற பாசமானவர்கள் ஆனால் மான்சிக்கு இவர்களின் மீதுள்ள பாசத்தை விட அத்தைமகன் சத்யன் மீதுதான் அதிக பாசம் இல்லை இல்லை காதல். எல்லோருக்கும் காதல் பருவத்தில் வருமென்றால் மான்சிக்கு தரையில் காலூன்றி நடக்கும் போதிலிருந்தே சத்யன் மீது காதல் அது படிப்படியாக வளர்ந்து இன்று ஆல்போல் வேரூன்றி அரசுபோல் தலைத்திருந்தது அதற்கேற்றாற்ப் போல் அவர்களின் குடும்பத்திலும் சத்யனுக்கு மான்சிதான் என்று நிர்ணயம் செய்துவிட்டார்கள் மான்சிக்கு அத்தை வீட்டுக்கு வருவதை போல் சந்தோஷம் உலகில் வேறெதுவும் இல்லை. அங்கே தானே சத்யன் இருக்கிறான்

அவளுக்கு சத்யனின் அழகில் அலாதியான மயக்கம்.23 வயதில் நல்ல இளங்காலைச் சூரியனின் போல் ஒளிரும் சிவந்த நிறம் . அசாத்தியமான அவனுடைய உயரம் அதற்க்கேற்ற உடல் பருமன். அகன்ற நெற்றி அதை பாதி மறைத்த அடர்த்தியான தலைக்கிராப் அரேபியர்களை போன்ற நேரான கூர்மையான நாசியும் அடர்த்தியான இனைந்த புருவங்கள் அவனுக்கு சிகரெட் பழக்கம் இல்லாததால் பெண்களின் உதடுகளைப் போல் அடர்த்தியான சிவந்த தடித்த உதடுகள்.

இவையெல்லாவற்றையும் விட அவன் வலது தோளில் மேல்ப்புறத்தில் இருக்கும் இருக்கும் அந்த பெரிய பிரவுன் நிற மச்சம் மான்சிக்கு ரொம்ப பிடிக்கும் சத்யன் மேலே சட்டை அணியாமல் வெறும் பனியன் மட்டும் போட்டிருக்கும் நாட்களில் மான்சி அவன் பின்னால் இருந்து எக்கி அவன் தோளைத் தொட்டு அந்த மச்சத்தை தடவிப்பார்த்து ரசிப்பாள் அதைபார்த்து சத்யனுக்கு சிரிப்பு வரும் ''ஏய் கருவாச்சி என்னை தொடாத அப்புறம் உன் கருப்பு எனக்கும் ஒட்டிக்க போகுது '' என்று கிண்டல் செய்வான்

 அப்போதெல்லாம் அவள் அத்தை அமுதா தான் இவளுக்கு சப்போர்ட் பண்ணுவாள். அவளுக்கு கர்ப்பகிரகத்து அம்மன் சிலையை போல் இருக்கும் தனது தம்பி மகள் மான்சி தான் தன் வீட்டின் மருமகள் என்று பெரிய கனவே இருந்தது ஆனால் விதியின் விளையாட்டை யாரறிவார் மான்சி பொள்ளாச்சிக்கு வந்துவிட்டால் சத்யனின் பின்னால் சுற்றுவதை தவிர வேறு வேலையே கிடையாது அவன் மீது அவள் கொண்ட காதலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் .ஒரு மீனை தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் போட்டால் அது எப்படி வாழ்வை முடித்துக்கொள்ளுமோ அதுபோல சத்யனை பிரிந்தால் மான்சியி்ன் வாழ்வில் ஒன்றுமே இல்லை

 அவன் அவளை ஒரு பெரிய பள்ளத்தாக்கில் நிறுத்தி கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடு மான்சி என்றால் அவள் அதை மறு பேச்சின்றி உடனே செய்வாள் அவன் ஒரு டம்ளரில் விஷத்தை ஊற்றி அதை தனது உதட்டில் வைத்து பிறகு அதை மான்சியிடம் கொடுத்து குடி என்றால் அது விஷம் என்று தெரிந்தும் அதை சிரித்துக்கொண்டே அருந்துவாள் அவர்ளுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சத்யன் முன்னே நடந்தால் அவனின் பாதச்சுவடுகளை பார்த்துக்கொன்டே அவன் பின்னே நடப்பாள்.அவன் திரும்பிப்பார்த்து ''ஏய் லூசு என் பின்னால் வந்து என்னடி பண்ற''என்று கேட்டால் அசடு வழிய ''ச்சும்மா மாமா நீங்க முன்னாடி போங்க''என்று அவன் முதுகில் கைவைத்து தள்ளிக்கொண்டு போவாள் அவள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் சில நேரங்களில் நாம் சத்யனுக்கு பொருத்தமாக இல்லையோ ரொம்ப குண்டாக கருப்பாக இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும்

அப்போது மறைவுக்கு சென்று கண்ணீர் வடிப்பாள் அப்போதெல்லாம் சத்யனின் இளைய சகோதரி ரஞ்சனிதான் அவளைத் தேற்றுவாள் ''ஏய் மான்சி இதெல்லாம் பப்பி பேட்டுடி இன்னும் ஒரு வருஷம் ஆச்சுன்னா கரைஞ்சு போயிடும் அப்புறமா ஒல்லியா இன்னும் கொஞ்சம் கலரா ஆயிடுவே ''என்று மான்சியை கண்ணீர் விடாமல் கவனமாக பார்த்துக்கொள்வாள். காரணம் ரஞ்சனியின் கணவன் வேல்முருகன் தனது தங்கையின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் கூட ரஞ்சனியின் முதுகுத் தோளை உறித்து விடுவான் அந்தளவுக்கு தன் சித்தப்பா மகள் மான்சியின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவன் மான்சி தன்து அம்மாவிடம் நிறைய முறை ''அம்மா எனக்கும் மாமாவுக்கும் எப்பம்மா கல்யாணம் பண்ணுவீங்க இன்னும் எவ்வளவு நாளும்மா ஆகும் ''என்று நச்சரிப்பாள்

 அழகம்மையும் மகளை பார்த்து சிரித்து ''ஏய் இன்னும் உனக்கு பதினெட்டு வயசே ஆகலை அதுக்குள்ள கல்யாணமா இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுடி உன்னை கொண்டுபோய் அங்க தள்ளுவதுதான் எங்களுக்கு முதல் வேலை ''என்பாள் மான்சிக்கு இந்த பதில் எரிச்சலை வரவழைக்கும் ''ஏன் அந்த காலத்தில் நம்ம பாட்டிங்க எல்லாம் சின்னவயசுல தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அவங்கல்லாம் நல்லாத்தானே வாழ்ந்தாங்க ''என்று பதில் வாதம் செய்வாள் அதன்பிறகு அழகம்மைக்கு அவளை சமாதானம் செய்வது பெரும்பாடாகிவிடும் ஆனால் இவை அனைத்தும் சத்யனிடம் உள்ளதா என்று கேட்டால் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .


அவனுக்கு சற்றே குண்டாக பேசும் விழிகளும் சிரிக்கும் உதடுகளும் கால் சலங்கை சத்தமிட துள்ளல் நடைப்போட்டு தன் வீட்டில் வளையவரும் மான்சியை பிடிக்கும் . இருவரின் திருமணத்தை பற்றி வீட்டில் பேசினால் சிரித்தபடியே ''இப்போ எதுக்கும்மா கல்யாணம் இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் ''என்று மழுப்பலான பதிலை சொல்வானே தவிர வேண்டாம் என்று தீர்மானமாக கூறமாட்டான் மற்றபடி இதை காதல் என்று எப்படி சொல்வது இன்று மனதில் ஆயிரம் கனவுகளுடன் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கால் வைத்த மான்சி லக்கேஜ்களை கூட எடுக்காமல் கூட வந்த அம்மாவின் கத்தலை லட்சியம் செய்யாமல் அவசரமாக கீழே குதித்து சுற்றிலும் கண்களை சுழற்றி சத்யனை தேட.

அங்கே வந்திருந்தது சத்யன் வீட்டு டிரைவர்தான் . இவள் தேடுவதை கண்டு அருகில் வந்தவன் முதலில் லக்கேஜ்களை இறக்கிவிட்டு அவளருகே வந்து ''வாங்கம்மா போகலாம் ''என்று அழைத்தான் ''ம் போகலாம் ஆமா சத்யா மாமா வரலையா ''என்று மான்சி கேட்க ''இல்லம்மா அவரு அவங்க பெரியக்கா வீட்டுல ஏதோ விஷேசம்ன்னு பெங்களூர் போயிருக்கார் போய் நாலுநாள் ஆச்சு நாளை மறுநாள் வருவார்ன்னு வீட்டில பேசிக்கிட்டாங்கம்மா ''என்று டிரைவர் பதில் சொன்னான் மான்சிக்கு உள்ளே குமுறியது தன் அம்மாவிடம் திரும்பி ''அம்மாதெரிஞ்சிருந்தா இன்னும் இரண்டு நாள் கழிச்சே வந்திருக்கலாம் இப்போ மாமா இல்லாம இங்கே என்னம்மா பண்றது ச்சே கிளம்பின நேரமே சரியில்லை ''என்று கைகால்களை உதறிக்கொண்டு எரிச்சல் பட்டாள்

 அழகம்மைக்கு தன் மகளை பார்த்து சிரிப்புதான் வந்தது *''ஏன்டி உன் மாமனை தவிர இந்த ஊரில் நமக்கு வேற யாருமே இல்லையா பேசாம வா மொதல்ல வீட்டுக்கு போய் உன் பெரியப்பா கிட்ட சொல்லி மொதல்ல உன்னை ஒரு வழிப் பண்ண சொல்லனும் போய் கார்ல ஏறு ''என்று மகளை செல்லமாக மிரட்டி காரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்தாள் மான்சிக்கு முதலில் சத்யன் இல்லாதது பிடிக்கவில்லை என்றாலும் பிறகு தனது அண்ணன் பிள்ளைகளுடன் ஜாலியாக ஊரைச்சுற்ற ஆரம்பித்தாள்

அடிக்கடி ஊர் எல்லையில் நின்று சத்யனின் கார் வருகிறதா என்று பார்ப்பாள் ஆனால் அவளுக்கு தெரியவில்லை சத்யன் பெங்களூரில் இருந்து அவளுக்கு துக்கத்தை வாங்கிவந்து பரிசளிக்கப் போகிறான் என்று

 " உன்னிடம் உணர்ச்சிபூர்வமாக ... '
ஏற்ப்பட்டது இந்த ஈர்ப்புநிலை... ''
உன் ரசனை,பேச்சு,அறிவு.கம்பீரம், 
''இவையெல்லாம் என்னை ஈர்த்தது '
'உன்னுடன் சேர்ந்து பகிர்ந்து... ''
பரவசம் கொள்ள .... ''எத்தனை கோடி விஷயங்கள்...?
 ''உன் மேல் நான் கொண்ட .... ''
அன்பின் ஆயுள் .... ''
மரணம் வந்தென்னை மடியேந்தும் ''
நிமிஷம் வரை ..! ''இன்று நீ யோசிப்பதை ....
 ''தவிர்த்து விடாதே ...நாளை... ''
ஒரு காதல் தோல்விக்கு .... ''
நாள் குறித்து விடாதே ...? ''
வண்டு போலும் என் மனதை ..... ''
துளைத்துச் செல்பவனே... ''
உன் பார்வை அன்று ..... ''ஆயுதமேந்தி வந்தது..... 
''அன்பெனும் ஆயுதம் .... ''இன்றோ ... 
''என் விழியோரம் இரு சோக ..... ''
அரும்புகளை அறிமுகப்படுத்தி....
 ''தங்கத்தை புடம்போட்ட தீயாய்.... '
'என் இதயத்தை தீக்குளிக்க வைத்து....
 ''நீ தனி வழி சென்ற மாயமென்ன....?

இவர்கள் இருவரும் சத்யன் வீட்டுக்குள் நுழைந்தபோது மான்சியின் அத்தை தலையில் கைவைத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள் இருவரையும் பார்த்தவுடன் ஓவென்று அழுதபடி வந்து மான்சியை கட்டிபிடித்து கதற. வேலு அத்தையை மான்சியிடமிருந்து விலக்கி நிறுத்தி ''அத்தை ஏன் இப்படி அழுறீங்க மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க''..என்று வேலு கேட்க உடனே கண்களில் கண்ணீர் வழிய தன் மருமகன் வேலுவை பார்த்து ''ஐயோ வேலு நான் என்னத்த சொல்றது.... பெரியவ ரத்னா வீட்டு விஷேத்துக்கு போன சத்யன் அங்கே யாரோ ரத்னாவோட புருஷனுக்கு சொந்தக்காரா பொண்ணு மலேயாவில் இருந்து வந்திருக்காளாம்..

ரொம்ப அழகியாம் அவளைதான் கட்டிக்குவேன்னு வந்து சொல்றான் ....உடனே என்கூட வந்து அவளை பொண்ணு கேளுங்கன்னு சொல்றான் ...நானும் உன் மாமாவும் எவ்வளவு எடுத்து சொன்னோம் அவன் கேட்கலை ...அந்த பொண்ணுதான் வேனும்னு பிடிவாதமா இருக்கான்... அதனால உன் மாமா கோபத்திலஅவனை அடிச்சுட்டாங்க..இப்போ என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான்..நான் என் அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன பதல் சொல்லுவேன் ....

இப்படி என் தலையில் கல்லைத் தூக்கி போட்டுட்டானே...''என்று அத்தை அழுது புலம்பினாள் வேலு பிரமை பிடித்தவனாய் நின்றான் அருகில் தொப்பென்று விழும் சத்தம் கேட்டு சுதாரித்தவன் திரும்பி மான்சியை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வழிய அப்படியே தரையில் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள்... வேலு அவசரமாக குனிந்து தங்கையை தூக்கி தன் தோளில் சாய்த்து ''மான்சி கண்ணம்மா அழாதம்மா சத்யன் கிட்ட நான் என்னன்னு விசாரிக்கிறேன்'' என்று உருக்கமாக தங்கைக்கு ஆறுதல் சொல்ல.... அப்போது மாடியிலிருந்து சத்யன் இறங்கி வந்தான்

 சத்யனை பார்த்ததும் தனது தங்கையுடன் வேகமாக அவனருகில் வந்த வேலு ''என்ன சத்யா அத்தை என்னென்னமோ சொல்றாங்க என்னதான் நடக்குது இங்கே எனக்கு ஒன்னும் புரியலை''என்று குழப்பத்துடன் அவனிடம் கேட்க ''ம் என்ன நடக்குதா..... என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை எனக்கு கல்யாணம் செய்துவைங்கன்னு கேட்டேன் ..அதுக்கு இவங்க ஒத்துக்காம பழங்கதை பேசிகிட்டு இருக்காங்க..'என்று சத்யன் எரிச்சலாக கூறினான் '' அந்த பொண்ணு உன் மனசுக்கு பிடிச்சவன்னா அப்போ இவ யாரு''என்று வேலு தன் தங்கையை காண்பித்து கேட்டான்

 ''மாமா நீங்களும் இவங்களை மாதிரியே புரியாம பேசாதீங்க ....எனக்கு மான்சிய பிடிக்கும் ஆனா அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியாது ...அவளோட நிறத்துக்கும் என்னோட நிறத்துக்கும் பொருந்துமானனு நீங்களே யோசிச்சு பாருங்க......மான்சிக்கும் எனக்கும் எந்த விதத்திலேயும் பொருத்தம் கிடையாது ....அதுவுமில்லாம சொந்தத்தில் கல்யாணம் செஞ்சா பிறக்கின்ற குழந்தை ஊணமாக பிறக்கும்ன்னு எல்லாரும் சொல்றாங்க அதனால அதையும் ஒரு காரணமாவச்சுக்கங்க ....மாமா எனக்கு அந்த பொண்ணுதான் வேனும்...யார் என்ன சொன்னாலும் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை ....

அப்படி பிடிவாதமா எனக்கு மான்சிய கட்டிவச்சீங்கன்னா அப்புறமா என்ன நடக்கும்ன்னு நான் சொல்லமாட்டேன் செய்து காட்டுவேன்.....அதன்பிறகு அய்யோன்னாலும் வராது அம்மானாலும் வராது போன உயிர் போனதுதான் ஆமா சொல்லிட்டேன்'' என சத்யன் பிடிவாதமான குரலில் பேசி முடிக்க வேலு ஏதோ சொல்ல வாயெடுக்க அவனை தடுத்த மான்சி ''வாண்ணா நம்ம வீட்டுக்கு போகலாம் ''என்றாள் அவளுக்கு எல்லாமே புரிந்துவிட்டது

....தன்னுடைய காதல் பைத்தியக்காரத்தனமானது என்று புரிந்தது .... தன்னை கல்யாணம் செய்தால் அது தற்க்கொலைக்கு சமமானது என்று சத்யன் சொன்னது புரிந்தது ...ஆனால் இதெல்லாம் புரிந்தும் ஏன் இன்னும் தான் உயிருடன் இருக்கிறோம் என்பது மட்டும் அவளுக்கு புரியவில்லை ....... மான்சியை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குள் போன வேலு மான்சியை சோபாவில் உட்காரவைத்துவிட்டு வேகமாக சமயலறைக்குள் நுழைந்து தன் மனைவி ரஞ்சனியை தேட அவள் சமையல் செய்துகொண்டு இருந்தாள் வேலு அவள் தலைமுடியை கொத்தாக பற்றி தரதரவென்று ஹாலுக்கு இழுத்து வர ரஞ்சனி ஒன்றும் புரியாமல் அவன் கைகளில் இருந்து தன் கூந்தலை விடுவித்து கொள்ள போராடினாள்

ஆனால் அவளை இழுத்து வந்து வாசற்படியை தான்டி அவளை வெளியே தள்ளினான் வேலு வீட்டின் அத்தனை வேலைக்காரர்கள் வேடிக்கைப் பார்க்க ரஞ்சனி அவமானத்தில் துடித்து ''என்னங்க ஆச்சு உங்களுக்கு... ஏன் இப்படி நடந்துக்கிறீங்க... நான் என்ன தப்பு செஞ்சேன்''என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் ''ஏய் தப்பு பண்ணது நீ இல்லடி உன் தம்பிதான்.. அவனுக்கு என் தங்கச்சிய விட அழகான பொண்ணு வேனுமாம் ...அதனால நீயும் எனக்கு வேண்டாம்... இன்னும் ஐஞ்சு நிமிஷம் உனக்கு டைம் தர்றேன் அதுக்குள்ள நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிறனும்... இல்லேன்னா இங்கே ஒரு கொலை விழும் ம் கிளமபு ''என்று ஆத்திரத்துடன் கர்ஜித்தான்

 அதற்க்குள் அங்கே வந்த அவன் அம்மா''டேய் வேலு என்னடா இது அசிங்கமா வேலைக்காரங்க முன்னாடி இப்படி பண்றே ...அவ அப்படி என்னதான் செய்தா இவ்வளவு மோசமா நடந்துக்குற''என்றவள் கீழே விழுந்து கிடந்த மருமகளை தூக்க.... வேகமாக தன் அம்மாவின் கையிலிருந்து ரஞ்சனியை இழுத்து மறுபடியும் கீழே தள்ளி தன் காலால் எட்டி உதைத்து''ஏய் இங்கயே இருந்து சீன் போடதே ...உன் அம்மா வீட்டுக்கு ஓடிப்போயிரு.. எனனை கொலைகாரன் ஆக்காதே''என உச்சபட்சக் கோபத்தில் கத்தினான்

 சத்தம் கேட்டு அங்கே வந்த அவன் பிள்ளைகள் இருவரும்.... இதையெல்லாம் பார்த்து தனது அம்மாவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டு அவர்களும் சேர்ந்து அழ ஆரம்பித்தனர் நிலைமை மோசமாவதை கண்ட அவன் அம்மா ஒரு வேலைக்காரனை கூப்பிட்டு ''ஐயா தோப்புல இருப்பாரு போய் ஐயாவை கூட்டிட்டு வா ''என்று உத்தவிட அவன் தோப்புக்கு ஓடினான் அதுவரை பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்த மான்சி மெதுவாக எழுந்து வெளியே வந்து ரஞ்சனியின் அருகில் போய் அவளை கைகொடுத்து தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு தன் அண்ணனை திரும்பிப்பார்த்து

''ஏண்ணே உனக்கு என்ன பையித்தியமா பிடிச்சிருக்கு.... அவர் என்னை வேனாம்னு சொன்னதுக்கு இவங்க என்ன செய்வாங்க.... இப்படி மிருகத்தனமா நடந்துக்கிறியே ''என்றவள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு உள்ளே போனாள் ''வேனாம் மான்சி அவளை வீட்டு உள்ளே சேர்க்காதே ...என் தங்கச்சிக்கே அவளோட அம்மா வீட்டில் இடம் இல்லேன்னா ...இவளுக்கு மட்டும் இங்கே என்ன வேலை..''என்று வேலு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர மூக்கை உறிஞ்சிக்கொண்டு தனது தங்கையிடம் கூற அதற்க்குள் அவன் அப்பா சுந்தரவேலுவும் மான்சியின் அம்மா அழகம்மையும் அங்கே வந்து சேர ....கொஞ்ச நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல ஆனது ....

 யார் என்ன சொன்னாலும் வேலு ஒத்துக்கொள்ளவில்லை.. ரஞ்சனியை சத்யன் வீட்டுக்கு அனுப்புதிலேயே குறியாக இருந்தான்..அவன் தன் தங்கையை அங்கே அவமானப்படுத்திவிட்டதாக கொதித்துப் போனான் ...ரஞ்சனி அவன் காலில் விழுந்து தான் போய் தனது தம்பியிடம் பேசுவதாக சொன்னாள் .. அதற்க்கு மான்சி ஒத்துக்கொள்ளவில்லை அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்ட மான்சி ''தயவுசெய்து எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்க ...இனிமேல் போய் சத்யா மாமாவிடம் இதை பத்தி யாரும் எதுவும் பேசவேண்டாம் ...அவர் ஒன்னும் இதுவரைக்கும் என்னை கல்யாணம் செய்துக்கிற எண்ணத்தில் பழகலைன்னு சொன்னபிறகு நாம அவரை தப்பு சொல்லக்கூடாது ...

அவர் மனசுப்படி அந்த பொண்ணையே அவர் கல்யாணம் பண்ணிக்கட்டும் யாரும் அதை தடுக்காதீங்க... அப்படி மீறி தடுத்தீங்கன்னா அப்புறமா என்னை யாரும் உயிரோடவே பார்க்க முடியாது ''என்று மான்சி தீர்மானமாக சொல்ல. வேலு அவளின் கையைப்பிடித்து தன் முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பித்தான் .. ஏற்கனேவே மான்சிக்கு ஒன்று என்றால் உயிரையே விடக்கூடிய அவளின் சொந்தங்கள் அனைவரும் கண்ணீர் விட அந்த வீடே துக்கம் நடந்த வீடுபோல் ஆனது மறுநாளே சென்னைக்கு கிளம்பினர்

மான்சியும் அழகம்மையும் ..மான்சி தன் அண்ணனிடம் சத்யன் வீட்டிற்க்கு போய் எதுவும் கலாட்டா செய்யகூடாது ...ரஞ்சனியை எக்காரணம் கொண்டும் அடித்து துண்புறுத்த கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டுதான் ரயிலில் ஏறினால் அவளுக்கு மன உளைச்சல் அதிகமாக கண்ணை முடிக்கொண்டு சீட்டில் படுத்துவிட்டாள்... அவளின் மூடிய கண்களில் கண்ணீர் வழிந்தது "ஆமாம் உங்களையே நீங்கள் தியாகம் செய்ய முன் வரும்போதுதான் .... '' உங்களின் கண்ணீரே உங்களை தூய்மைப் படுத்தும் ....!

 வேலு தனது மற்ற இரு தம்பிகளுக்கும் போன் செய்து சென்னையில் சித்தப்பா வீட்டுக்கு வர சொல்லியிருந்தான் .....இவனுக்கு அடுத்தவன் தனஞ்செயன் கொச்சினில கடற்படையில் வேலை செய்து கொண்டு தனது மனைவி ஒரு மகனுடன் அங்கேயே இருக்க ....மூன்றாமவன் சந்திரபோஸ் மதுரையில் காவல் துறையில் அதிகாரியாக அங்கேயே தன்மனைவி ஒருமகளுடன் இருந்தான் இருவரும் வேலு போன் செய்ததும் பதறியடித்துக்கொண்டு வந்தனர்

இவர்களுக்கும் தங்களது ஒரே தங்கை மான்சியிடம் அன்பு மிக்கவர்கள் மான்சியின் பெரியப்பா சுந்தரவேலுவும் அப்பா ராஜவேலுவும் கூடி பேசி இனிமேல் தங்களுடைய சகோதரி அமுதாவுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் எந்த ஒட்டு உறவும் இனிமேல் இல்லை என்றும் அவர்களின் வீட்டு நல்லது கெட்டது எதுக்கும் யாருமே போகக்கூடாது என்றும் முடிவு செய்தனர் அவர்கள் மகன்களும் அதை ஒத்துகொள்ள ......அனைவரும் மான்சியை கவணமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஊர்களுக்கு கிளம்பினர்

 இது எதையுமே அறியாத மான்சி தனக்கு நேர்ந்த இந்த கொடுமையான இழப்பை எப்படி ஈடு செய்வது என்று தெரியாமல் குழம்பி அவளுடைய அறையை வெளியே வராமால் உள்ளேயே அடைந்து கிடந்தாள்... அவளுக்கு கல்லூரிக்கு போகவும் விருப்பமில்லை அங்கே போனால் சக தோழிகளிடம் என்னவென்று செல்லவது... இதுவரை சத்யனின் போட்டோவை காட்டி கல்லூரியில் பீற்றிக்கொள்ளாத நாள் கிடையாது ....இப்போது அவர்களிடம் என் மாமாவுக்கு என்னை பிடிக்கவில்லையாம் ...வேறு பொண்ணுக்கும் அவனுக்கும் கல்யாணம் என்று எப்படி செல்வது ...என்றெல்லாம் பலவிதமாக எண்ணி மனம் குமுறினாள்

மான்சி வீட்டில் உள்ளே அனைவரும் அவள் மனமொடிந்து போய் ஏதாவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாளோ என்று பயந்து ஆள்மாற்றி ஆள் அவளுக்கு காவலிருந்தனர் நாட்கள் விரைந்து செல்ல ஒருநாள் சத்யனின் அப்பாவும் அம்மாவும் அவனுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு மான்சியின் வீட்டுக்கு வந்தனர்... தனது அக்கா கணவரிடம் மரியாதையின்றி பேசி பழக்கமில்லாத ராஜவேலு ...சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்




மான்சி அதிர்ந்து போய் நிற்க்க ..அழகம்மைதான் அவர்களிடம் சன்டையிட்டு ''ஏன் இங்கே வந்தீங்க நாங்கல்லாம் உயிரோடு இருக்கமா இல்லை செத்துட்டோமான்னு பார்க்க வந்தீங்களா ''என்று கூச்சலிட்டு கத்த ....சுதாரித்த மான்சி தன் தாயை அடக்கினாள் இவர்கள் யாருமே பத்திரிக்கையை பெற்றுக்கொள்ளாததால் அங்கிருந்த சோபாவில் பழத்தட்டுடன் பத்திரிக்கையை வைத்துவிட்டு சத்யனின் பெற்றோர் கண்ணீருடன் வெளியேறினர்

 அழகம்மை அழுதுகொண்டே சமையலறைக்கு போய்விட மான்சி நடுங்கும் விரல்களால் நால்புறமும் மஞ்சள் தடவப்பட்ட அந்த பத்திரிக்கையை எடுத்து பிரித்தாள்.



No comments:

Post a Comment