Wednesday, February 4, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 30


Friday, 29 May 2009 3:30 PM IST Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் பகல் 3:30 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி நகத்தை கடித்தபடி தோழிகள் இருவரும் எஃப்.பி.ஐயிடம் இருந்து அடுத்து வரும் தகவலுக்காக காத்து இருந்தனர். சில மணி நேரங்களுக்கு முன்னர் "நாங்கள் இந்தியா வருவதற்கு விமான நிலையத்தில் இருக்கிறோம். அங்கு வந்த பிறகு தொடர்பு கொள்கிறோம். நாங்க சொன்ன மாதிரி எங்க குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செஞ்சு இருப்பீங்கன்னு நம்பறோம். தயவு செஞ்சு அதை லேசா எடுத்துக்க வேண்டாம்" என்று ஒரு ஈமெயில் சக்தி வந்தனாவுக்கு அனுப்பி இருந்தான். சற்று நேரத்தில் டெலி-கான்ஃபரன்ஸரில் இணைத்து இருந்த தொலைபேசி ஒலித்தது. ஷான், "முரளீ, வந்தனா, தீபா .. இருக்கீங்களா?" முரளீதரன், "சொல்லு ஷான்" ஷான், "God this is going to be my longest night ..நடந்ததை எல்லாம் சொல்றேன். நீங்க கொடுத்த ஐ.பி அட்ரெஸ்ஸை காலையில் தேடி கண்டு பிடிக்கலாம்ன்னு இருந்தேன். திடீர்ன்னு எங்க தீவிரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ் கிட்ட இருந்து ஃபோன் வந்தது. மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னா என்னன்னு கேட்டார். எதுக்குன்னு கேட்டப்ப ஒரு கோரமான துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து பேசறதா சொன்னார். உடனே புறப்பட்டு வரச் சொன்னார். அவர் சொன்ன வங்கி கட்டிடத்துக்கு போனேன். அங்கே எட்டு பேர் விழுந்து கிடந்தாங்க. அதில் ஒருத்தி ஸான்ட்ரா. Yes girls Sandra is dead" என்று பெருமூச்செறிந்தார். தீபா, "வாட், ஸான்ட்ராவா?"

ஷான், "ஆமா. அவளை தவிர அந்த எட்டு பேரில் ஹாஃப்மன் அப்படிங்கற அந்த வங்கியின் ஆஃபீஸர், ஆண்டர்ஸன் ஒருத்தன் அவன் இதுவரைக்கும் எந்த கேஸிலும் பிடிபடவில்லைன்னாலும் கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்களுக்கு இங்கே வசூலான பணத்தை அவங்க ஊருக்கு கடத்தும் கேஷ் ம்யூல் (Cash Mule) ஆபரேஷனில் ஈடு பட்டவன், அடுத்த ரெண்டு பேர் நீ எனக்கு ஃபோனில் விலாசம் அனுப்பின ஜாஷ்வா, பிறகு அவன் மனைவி சஞ்சனா. அடுத்தவன் பாக்கெட்டில் பல்லவ் ஷா அப்படிங்கற பெயரில் பொய் பாஸ்போர்ட் வெச்சுட்டு இருந்தான். ஆனா எஃப்.பி.ஐ டேட்டா பேஸ் ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனில் அவன் அல்-கைதாவை சேர்ந்த ஷொயேப் அஹமத் அப்படின்னு தெரியவந்தது. அவனை தவிர கூலிக்கு துப்பாக்கி தூக்கும் ரெண்டு பேர்." வந்தனா, "ஜாஷ்வா, சஞ்சனாவுக்கு என்ன ஆச்சு?" ஷான், "ரெண்டு பேருக்கும் குண்டடி பட்டு இருக்கு. உயிர் ஊசலாடிட்டு இருக்கு. பிழைப்பது கஷ்டம். ஆனா நாளைக்கு செய்தியில் இருவரும் இறந்துட்டதாதான் செய்தி வரும். தவிர ஷொயேப் அப்படிங்கறவன் செத்துட்டான். ஆனா அவன் உயிரோடு ஆஸ்பத்திரியில் இருப்பதாவும் நியூஸ் வரும்" தோழிகள் இருவரும் விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தனர். ஷான், "சைமண்ட் வில்லியர்ஸுக்கு சஞ்சனாவை முன்னமே தெரியுமாம். அவளிடம் இருந்து காலையில் அவர் சொந்த மொபைலில் கால் வந்து இருக்கு. அந்த மொபைலை வீட்டில் வெச்சுட்டு வந்து இருக்கார். சாயங்காலம் கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு போனதும் மொபைலில் மிஸ்ட் கால் வந்து இருப்பதை பார்த்துட்டு திரும்ப கூப்பிட்டு இருக்கார். அப்ப அந்த பொண்ணு கால் ஆன்ஸர் பண்ணிட்டு எதுவும் பேசாம இருந்து இருக்கு. மத்தவங்க பேசறதில் இருந்து ஒருத்தன் மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்க உபயோகிக்கும் போது அதைப் பத்தி தெரிஞ்சவங்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாதுன்னு சொன்னது கேட்டு இருக்கு. அதுக்கு அப்பறம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு இருக்கு. இவர் வந்து பார்த்தப்ப ஜாஷ்வாவை காரில் கூட்டிட்டு வந்த க்ரிஸ் என்கிற அவன் ஃப்ரெண்ட் மட்டும் உயிரோடு இருந்து இருக்கான். தனக்கு எதுவும் தெரியாதுங்கறான். ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் ரொம்ப வேண்டப் பட்டவனாம். ஒரு ஆபத்தான மீட்டிங்க்குக்கு போறதா அவனை துணைக்கு அழைச்சுட்டு வந்து இருக்கான். எதற்கு அந்த மீட்டிங்க் அப்படின்னு அவனுக்கு எதுவும் தெரியாதுங்கறதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையாவே அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வேண்டப் பட்டவனாம். அவங்க ரெண்டு பேரும் இவனுக்கும் இவன் தங்கைக்கும் ரொம்ப உதவி செஞ்சு இருக்காங்களாம். அவங்களுக்கு பதிலா தன் உயிர் போகக் கூடாதான்னு அழுதுட்டு இருக்கான். மற்றபடி அங்கு நடந்ததை அவன் பார்த்த வரைக்கும் ஒண்ணு விடாம சொன்னான். அவன் சொன்னதில் இருந்து முதலில் ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் தான் ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் சந்திச்சு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வேனில் நாலு பேர் வந்து இருக்காங்க. தவிர, அந்த கூலிக்கு துப்பாக்கி சுடறவங்களும் அந்த வேனில் தான் வந்து இருக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு பக்கம் போய் துப்பாக்கி பிடிச்சுட்டு இருந்து இருக்காங்க. அந்த நாலு பேரில் ஸான்ட்ராவும் ஒருத்தி. அந்த நாலு பேரில் பார்க்க அரபி மாதிரி இருந்த ஒருத்தன்தான் முதலில் பேசிட்டே சுடத் தொடங்கினானாம். அவன் ஜாஷ்வாவை சுட்டு இருக்கான். சஞ்சனா அவனை சுட்டு இருக்கா. பிறகு இந்த க்ரிஸ்ஸும் சஞ்சனாவும் சேர்ந்து மத்தவங்களை சுட்டு இருக்காங்க. கடைசியா ஸான்ட்ராதான் சஞ்சனாவை சுட்டு இருக்கா. அதே சமயம் சஞ்சனா அவளை சுட்டு இருக்கா." தீபா, "Bloody bitch!" ஷான், "Yes, Looks like she was working for somebody else on the side ... ஷான் விவரித்துக் கொண்டு இருக்கையில் முரளீதரன் வேகமாக ஒரு பேப்பரை எடுத்து அதில், "நான் சக்திவேல் நித்தின் இவர்களை பற்றிய விவரத்தை ஷானுக்கு இதுவரை சொல்லவில்லை. நீங்களும் அவர்களைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். பிறகு விவரிக்கிறேன்" என்று எழுதி வந்தனாவிடமும் தீபாவிடமும் காட்டினார். கேள்விக் குறியுடன் பார்த்த வந்தனாவைப் பார்த்து வாயின் மேல் ஒரு விரல் வைத்து மௌனம் காக்கும்படி பணித்தார். ஷான் தொடர்ந்தார். ஷான், "க்ரிஸ்ஸின் மேகஸின் தீந்ததும் அவன் சுடுவதை நிறுத்திட்டான். அப்ப அந்த நாலு பேரில் ஒருத்தன் சுடப்பட்டு விழுந்து கிடந்த அந்த அரபியை இழுத்து வேனில் போட்டுட்டு வேனை கிளப்பிட்டு போயிருக்கான். அவன் உயிரோடு இருந்து இருக்கணும் அதனாலதான் அவனை அங்கே விட்டுட்டு போகவில்லை" முரளீதரன், "சோ, இது அல்-கைதாவின் கை வேலை இல்லையா?" ஷான், "வெரி மச். அவன் ஃபோனில் பேசினதை வெச்சு மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றுவதில் உறுதியா இருபபது போல் தெரியுது. இந்த ஜாஷ்வாதான் நம் ஹார்ஷ்7 அப்படிங்கறது எங்க யூகம். கில்9 மற்றும் மோர்லா ரெண்டு பேரைப் பத்தியும் அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா நமக்கு இன்னும் தெரியாது. அதுதான் எனக்கு இப்ப பெரிய பிரச்சனை. எப்படி அவங்களை கண்டு பிடிப்பது முரளி" முரளீதரன், "ஆஃப் ஹாண்ட் என்னால எதுவும் சொல்ல முடியலை. யோசிச்சுட்டு சொல்றேன். நீங்க ஜாஷ்வாவை பத்தி விசாரிங்க உங்களுக்கு எதாவது க்ளூ கிடைக்கலாம்" ஷான், "ம்ம்ம் ... One more thing .. சைமண்ட் வில்லியர்ஸ் ஃபோனில் பேசிட்டு இருக்கும் போது ஒரு கார் இங்கே இருந்து புறப்பட்டு போயிருக்கு. இவர் நம்பர் நோட் பண்ணறதுக்குள்ள வெளியே போயிருக்கு. அனேகமா, அது கில்9 மற்றும் மோர்லாவா இருக்கலாம். க்ரிஸ்ஸிடம் அந்த காரைப் பத்தி விசாரிச்ச போது அவன் வந்தப்ப இருந்து அந்த கார் ஒரு இடத்தில் நின்னுட்டு இருந்தா சொன்னான். அதில் இருந்து யாரும் இறங்கி வரலைன்னும் சொன்னான். துப்பாக்கி சூடு முடிஞ்சதும் அந்த கார் புறப்பட்டு போய் இருக்கு. ஜாஷ்வாவின் மொபைலில் இருந்து ஒரு கான்ஃபரென்ஸ் காலில் ரெண்டு நம்பர்கள் ராத்திரி 9:30இல் இருந்து அந்த துப்பாக்கி சூடு முடியறவரைக்கும் இருந்து இருக்கு. எங்க யூகம் முதலில் ஜாஷ்வா அவங்க ரெண்டு பேரையும் வெளியே வராம காரில் இருக்கும் படி சொல்லிட்டு தான் மட்டும் மீட்டிங்கில் கலந்துட்டு இருக்கான். அவங்க ரெண்டு பேருக்கும் அங்கே என்ன நடந்ததுன்னு இன்னும் சரியா தெரியும்ன்னு நினைக்கறேன். அந்த மொபைல் நம்பர் ரெண்டும் ஹார்லத்தில் இருக்கும் ரெண்டு பேரோடது. ஜாஷ்வா அவங்க மூலம் தன் நண்பர்களுக்குன்னு சொல்லி வாங்கி இருக்கான். இதை எல்லாம் வெச்சு பாத்தா ஜாஷ்வாவும் சஞ்சனாவும் அந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஷீல்ட் மாதிரி பாதுகாப்பு கொடுத்துட்டு இருந்து இருக்காங்க"Friday, 29 May 2009 4:30 PM Central European Time Transit Lounge, Frankfurt International Airport, Germany வெள்ளி, மே 29 2009 மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 4:30 மாற்றுப்பயணியர் ஓய்வறை, ஃப்ராங்க்ஃபர்ட் சர்வதேச விமான நிலையம், ஜெர்மனி நியூ யார்க்கில் சற்று தாமதமாக புறப்பட்ட அவர்களது விமானம் சற்று நேரத்துக்கு முன்னர் ஃப்ராங்க்ஃபர்ட் வந்து சேர்ந்து இருந்தது. அடுத்து மும்பை செல்லும் விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ட்ரான்ஸிட் லௌஞ்சில் அமர்ந்த நண்பர்கள் அங்கு இருந்த வை-ஃபையில் அவர்கள் லாப்-டாப்பை இணைத்து முதலில் நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் வலை தளத்துக்கு சென்றனர். முந்தைய தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எஃப்.பி.ஐ இன்னும் விசாரணை நடத்திக் கொண்டு இருந்ததாகவும். அந்த துப்பாக்கிச் சூட்டில் பல்லவ் ஷா என்பவன் மட்டும் உயிரோடு இருப்பதாகவும் மற்றவர் எவரும் உயிர் பிழைக்க வில்லை என்றும் வெளியாகி இருந்தது. இறந்தவர்கள் ஒவ்வொரின் பெயரும் புகைப் படமும் வெளியாகி இருந்தது. உயிரோடு இருந்த பல்லவ் ஷாவின் புகைப் படமும் வெளியாகி இருந்தது. நண்பர்கள் இருவரும் அவர்கள் பயந்தது நடந்ததில் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற முடிவுடன் அமர்ந்து இருந்தனர். சக்தி, "நித்தின், I want them to pay for this" நித்தின், "எஸ், என்ன செய்யலாம்?" சக்தி, "இந்தியா போனதும் எப்படியும் அவனுக நம்மை அணுகுவாங்க. அப்ப அவங்களை கையும் களவுமா பிடிச்சுக் கொடுக்கணும். முடிஞ்சா நாமே அவங்களில் ஒண்ணு ரெண்டு பேரை போட்டுத் தள்ளனும்" நித்தின், "I am game" சக்தி, "சோ, நாம் R&AW கிட்ட போக வேண்டாம். அந்த ஸான்ட்ரா மாதிரி யாராவது அவங்களுக்கு R&AWக்கு உள்ளேயே ஆள் இருக்கலாம். நம்மை அப்படிப் பட்டவங்க யாராவுது நம்மை பார்த்தா நம்மை அணுக மாட்டாங்க. பதிலா, தக்க நேரத்தில் தகவல் கொடுக்கறோம், தீவிரவாதிகளை பிடிக்க தேவையான ஆள்பலத்தோட பெங்களூரில் காத்துட்டு இருக்கும் படி ஒரு மெயில் மட்டும் அனுப்புவோம். திங்கள் கிழமை ஆஃபீஸுக்கு போகலாம். நிச்சயம் அவங்க நாம் அங்கே வரோமான்னு ஆள் வெச்சு பாத்துட்டு இருப்பாங்க. அவங்களே நம்மை அணுகுவாங்க" நித்தின், "ஒரு சின்ன மாற்றம் ... " சக்தி, "என்ன?" நித்தின், "எப்படியும் நாம் கொஞ்ச நாள் லீவ் எடுத்துட்டு போறதா இருந்தோம். ஆஃபீஸுக்கு போறதுக்கு முன்னால் கொஞ்ச நாள் தலைமறைவா இருந்து அவங்களை நம் மாங்க்ஸ் பாட் நெட் மூலமே கொஞ்சம் நோண்டினா என்ன? நமக்கு கிடைக்கும் தகவலை R&AWக்கும் எஃப்.பி.ஐக்கும் முதலில் அனுப்புவோம். அதுக்கு அப்பறம் ஆஃபீஸுக்கு போவோம்" சக்தி, "குட் ஐடியா .. அது மட்டும் இல்லை. அவங்களோட டெபாசிட் வந்த விவரங்களையும் ஜாஷ்வா நம்மிடம் பகிர்ந்துகிட்டதா சொல்லி அனுப்பலாம்" நித்தின், "சக்தி, அதனால் நம் ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் விவரம் எஃப்.பி.ஐக்கு தெரியவரும்" சக்தி, "இல்லை, ஹாஃப்மன் ஜாஷ்வாவுக்கு கொடுத்ததா சொல்லலாம்" நித்தின், "நம்புவாங்களா?" சக்தி, "ரெண்டு பேரும் உயிரோடு இல்லை. அவங்க மூலம் வந்த சில விவரங்களை நாம் எஃப்.பி.ஐக்கு கொடுக்கறோம். நிச்சயம் அவங்களுக்கு அது உதவும். அந்த விவரம் கொடுத்த நம்மை அவங்க சந்தேகிக்க வாய்ப்பு இல்லைன்னு தோணுது. அப்படியே அவங்க சந்தேகிச்சாலும் ... I don't care" என்றபடி தன் வெறுப்பை வெளிப்படுத்தினான். மறுபடி அவன் கண்கள் கலங்கின ... நித்தின், "ஓ.கே டன்"Saturday, 30 May 2009 9:30 AM Chatrapati Shivaji International Airport, Mumbai சனி, மே 30, 2009 காலை 9:30 சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை ஒன்பது மணி நேரப் பிரயாணத்தில் முதல் ஆறு மணி நேரமும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர். மும்பையை அடைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது அடுத்த திட்டத்தைப் பற்றி விவாதிக்க தொடங்கினர். சக்தி, "ஏர்போர்ட்டுக்கு உள்ளேயே ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வேண்டிய மேக்-அப்பை போட்டுக்கணும்" நித்தின், "எனக்கு மேக்-அப் கொஞ்சம்தான். உனக்குத்தான் நேரம் எடுக்கும்" சக்தி, "நல்ல வேளை பிஸினஸ் க்ளாஸ்ல டிக்கட் எடுத்தோம். பிஸினஸ் க்ளாஸ் லௌஞ்சில் ப்ரைவேட் ரூம்ஸ் இருக்கு. நிதானமா செஞ்சுக்க முடியும்" நித்தின், "ஆனா அது தேவையாடா?" சக்தி, "நம்மை எப்படி ட்ரேஸ் பண்ணுவாங்கன்னு தெரியலை. நான் அவங்க இடத்தில் இருந்தா நாம் அமெரிக்காவை விட்டு புறப்பட்டுட்டோம்ன்னு தெரிஞ்ச உடன் இங்கே ஏர்போர்ட்களை கண்காணிக்க ஏற்பாடு செஞ்சு இருப்பேன்" நித்தின், "அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுட்டோம்ன்னு அவங்களுக்கு அடுத்த நாள் தான் தெரிஞ்சு இருக்கும். அதுவும் ஆஃபீஸ்ல விசாரிச்சு இருந்தா. ஆனா எந்த ஏர்போர்ட்டில் வந்து இறங்குவோம்ன்னு அவனுகளுக்கு எப்படி தெரியும்?" சக்தி, "நாம் அந்த ஈமெயிலை அனுப்பாம இருந்து இருந்தா R&AW என்ன செஞ்சு இருப்பாங்க?" நித்தின், "எல்லா ஏர்போர்ட்டில் இருக்கும் போலீஸ் ஃபோர்ஸையும் அலர்ட் பண்ணி இருப்பாங்க. இம்மிக்ரேஷன் க்ளியரன்ஸ் ஆன உடனே போலீஸ் ஃபோர்ஸுக்கு நாம் வந்துட்டோம்ன்னு தெரிஞ்சு இருக்கும். உடனே தகவல் R&AWவுக்கு கொடுப்பாங்க" சக்தி, "அதேதான் இப்பவும் நடக்கும். நிச்சயம் அவனுகளுக்கு எல்லா ஊர்லயும் போலீஸ் ஃபோர்ஸ்ல காண்டாக்ட் இருக்கும். R&AWவுக்கு பதிலா இவனுகளுக்கு தகவல் போகும்" நித்தின், "சோ, என்ன செய்யப் போறோம்?" சக்தி, "ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் இம்மிக்ரேஷன் க்ளியரன்ஸ் முடிஞ்சதும் பிஸினஸ் க்ளாஸ் லௌஞ்சில் ப்ரைவேட் ரூம் எடுத்து நம் மேக்கப்பை முடிச்சுக்கறோம். அடுத்தது ஏர்போர்ட் ஷட்டில் சர்வீஸ் க்யூவுக்கு போறோம். அங்கே நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க. வெளியில் வந்தது டாக்ஸி பிடிப்போம்ன்னு நினைச்சுட்டு இருப்பாங்க. பத்தரை மணிக்கு ஜெட் ஏர்வேஸ் கோவை ஃப்ளைட் பிடிக்கறோம்"

நித்தின், "கோவையில் என்ன ப்ளான்?" சக்தி, "ரெண்டேகால் மணி நேர ஃப்ளைட். போய் சேரும்போது பேங்க்ஸ் திறந்து இருக்கும். பாங்க் போறதுக்கு முன்னாடி செகண்ட் ஹாண்ட் கார் விக்கறவங்களை அணுகி ஒரு வண்டியை விலை பேசறோம். அங்கே இருந்து பேங்க்குக்கு போய் வண்டிக்கும் சேர்த்து கேஷ் எடுத்துக்கறோம். காசை கொடுத்து வண்டியை எடுத்துட்டு நேரா குன்னரில் இருக்கும் என் ஃப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸுக்கு போறோம். அங்கே உக்காந்து நம் நோண்டல் வேலையை தொடங்கறோம்" நித்தின், "நெட் கனெக்க்ஷன் அங்கே நல்லா இருக்குமா?" சக்தி, "சூப்பரா இருக்கும். ஒரு 4MBPS லைனில் அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒவ்வொரு ரூமுக்கும் கனெக்க்ஷ்ன் கொடுத்து இருப்பதா சொன்னான். தவிர ஒரு பாக்-அப் லைனும் இருக்குன்னு சொல்லி இருக்கான். நேத்து நான் பேசினப்ப அந்த பாக்-அப் லைனை நமக்குன்னு ஒதுக்கிக் கொடுப்பதா சொன்னான்" நித்தின், "Sounds good. ஆனா, நம்ம ஆளுங்க நம்மை தேடாம இருக்கணும்" சக்தி, "நம்மை தேட வேண்டாம்ன்னு ஈமெயில் அனுப்பி இருக்கோம். இருந்தாலும் அவங்க கண்ணிலும் படாம இருக்கத்தான் இந்த ஏற்பாடு" லுஃப்தான்ஸா விமானம் ஃப்ராங்க்ஃபர்டில் இருந்து சற்று காலதாமதமாக வந்து இறங்கியிருந்தது. பாக்கேஜ் கரூஸலில் இருந்து தங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் க்ளீயரன்ஸ் முடித்து வெளிவந்த சக்திவேலும் நித்தினும் உடனே பிஸினஸ் க்ளாஸ் பயணிகளுக்கான லௌஞ்சில் இருக்கும் ப்ரைவேட் ரூம் ஒன்றிற்குள் பெட்டிகளுடன் புகுந்தனர். மறுபடி விமானம் ஏறுவதற்கு முன்னர் நண்பர்கள் இருவரும் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் எஞ்சி இருந்த நேரத்தில் சில பொருட்களை வாங்கி இருந்தனர். சக்திவேல் அங்கு ஒரு முடிவெட்டும் ஹேர் க்ரூமினங்க் கிட், கதரைப் போன்று தோற்றமளிக்கும் உயர்தர லினன் ஷர்ட், தடிமனான ஃப்ரேம் கொண்ட பவர் இல்லாத கண் கண்ணாடி, ஒரு விலை உயர்ந்த தோல் ப்ரீஃப் கேஸ் ஆகியவைகளை வாங்கி இருந்தான். நித்தின் மார்புக்கு குறுக்கே மிக கொச்சையான ஒரு வாசகம் அச்சிட்டு இருந்த இளம் கல்லூரி மாணவர்கள் அணியும் டீ-ஷர்ட் ஒன்றையும், இன்னொரு கருப்புக் கண்ணாடியையும், தொப்பியும் வாங்கி இருந்தான். நியூ யார்க்கில் புறப்படுவதற்கு முன் தினம் காலைக்கு பிறகு அவன் ஷேவ் செய்வதை தவிர்த்து இருந்தான். இவைகளின் உதவியுடன் நண்பர்கள் இருவரும் வெளிவரும் போது உருவத்தில் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றினர். சக்திவேல் பார்ப்பதற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசியலுக்குள் நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் ஒரு நடுவயது தொழில் அதிபர் போல் காட்சியளித்தான். எப்போதாவது உதவும் என்று பெட்டியில் வைத்து இருந்த வேஷ்டியும் கால் செருப்புகளும், மனோகரி வற்புறுத்தி அனுப்பிவைத்த விபூதிப் பொட்டலமும், தங்கைக்காக வாங்கி இருந்த கெட்டியான தங்கச்சங்கிலியும் அவனுக்கு அந்த தோற்றத்தை கொடுக்க உதவி இருந்தன. அருகில் நித்தின் மூன்று நாள் தாடியுடன் அவனது மகனைப் போல் தோன்றினான்.Saturday, 30 May 2009 10:30 AM Conference Room, R&AW Headquarters, CGO Complex, New Delhi சனி, மே 30, 2009 காலை 10:30 கலந்தாய்வுக் கூடம், R&AW தலைமை அலுவலகம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி ஜாயிண்ட் டைரக்டர் அவர்களுக்காக காத்து இருந்தார். முரளீதரன், வந்தனா மற்றும் தீபா உள்ளே நுழைந்தனர். ஜாயிண்ட் டைரக்டர், "Please take your seats .. " முரளீதரன், "என்ன சார்? அவசரமா வரச்சொன்னீங்களாமே?" ஜாயிண்ட் டைரக்டர், "முரளீ, நீ என்னை ரொம்ப தர்மசங்கடமான நிலையில் நிறுத்தி இருக்கே" முரளீதரன், "என்ன சார் ஆச்சு? எனக்கு ஒண்ணும் புரியலை" அப்போது R&AWவின் டைரக்டரும் வெளியுறவு அமைச்சகத்தின் காரியதரிசியும் உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து நின்றனர். டைரக்டர், "ம்ம்ம் ... ப்ளீஸ் ப்ரொஸீட் .. " காரியதரிசி, "மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தியும் அதை உருவாக்கினவங்களைப் பத்தியும் முழுவதும் தெரிஞ்சுட்டே அவங்களை நாம் இவ்வளவு நாளும் ஏமாத்தி இருக்கோம்ன்னு அதிகார பூர்வமா கம்ப்ளெயிண்ட் வந்து இருக்கு. They are shouting that we made a fool of them" முரளீதரன், "இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் எங்களுக்கு தெரியாது" ஜாயிண்ட் டைரக்டர், "வந்தனா, என்னது இது? நீ ஒரு பொறுப்புள்ள போலீஸ் ஆஃபீஸர் அப்படின்னுதானே உன்னை இந்த பிரிவில் சேர்த்தேன்?" வந்தனா, "நீங்க என்ன சொல்றீங்க புரியலை. ஆனா இதுவரைக்கும் நான் என் கடமையில் எந்த தவறும் செய்யலை" காரியதரிசி, "ம்ம்ம் ... சக்திவேல் முத்துசாமி அண்ட் நித்தின் தேஷ்பாண்டே. இவங்க ரெண்டு பேருடனும் நீங்க உங்க அசைன்மெண்ட் ஆரம்பிச்ச நாளில் இருந்து தொடர்பு இருந்து இருக்கு அப்படின்னு ஆதாரத்தோட அமெரிக்க அரசாங்கம் சொல்லுது" முரளீதரன், "அவங்க ரெண்டு பேர்தான் மாங்க்ச் பாட் நெட்டை உருவாக்கினாங்கன்னு எஃப்.பி.ஐக்கு எப்படி தெரிஞ்சுது?" டைரக்டர், "இன்னும் திட்ட வட்டமா அவங்களுக்கு தெரியலை. அவங்க ரெண்டு பேராத்தான் இருக்கும்ன்னு யூகிச்சு இருக்காங்க" முரளீதரன், "சார், முதலில் நான் என் பக்கத்தில் என்ன நடந்ததுன்னு விளக்கி சொல்றேன். அப்பறம் நீங்க சொல்லுங்க. வந்தனாவும் தீபாவும் அவங்க ரெண்டு பேரையும் முதல் முதலா அசைன்மெண்ட் எடுத்துக்கப் போனப்பதான் சந்திச்சாங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அதுக்கு பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுப் போக காதலிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்பறம் அவங்க குடும்பங்களும் சந்திச்சு பேசி கல்யாணத்துக்கு நாள் குறிக்க இருக்காங்க. சக்தியோ நித்தினோ தாங்கள் தான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினதா இதுவரைக்கும் வந்தனாகிட்டயும் தீபாகிட்டயும் சொன்னது இல்லை. அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுவரைக்கும் வந்தனாவோ தீபாவோ தாங்கள் என்ன அசைன்மெண்டில் இருக்கோம்ன்னு சக்தி, நித்தின் கிட்ட சொன்னது இல்லை. சோ, நாம் அவங்களை ப்ளேம் பண்ண முடியாது. பட், நிச்சயம் சக்தி, நித்தினுக்கு வந்தனாவும் தீபாவும் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிக்கும் வேலையில் இறங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சு இருக்கு. கடைசியா நித்தின் தீபா ஃபோனில் பேசினப்ப அவன் எங்களுக்கு தெரியும் அப்படிங்கற மாதிரி மாங்க்ஸ் பாட் நெட்டை தீவிர வாதிகள் கைப் பற்ற முயற்சி செய்வதா சொல்லி இருக்கான்." டைரக்டர், "நீங்க சொல்றது உண்மையா இருந்தா, இந்த மாதிரி ஒரு கோயின்ஸிடன்ஸை என் சர்வீஸில் இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை" காரியதரிசி, "பட் முரளீதரன், அந்த மாதிரி ஒரு வேலையை செஞ்சவங்களுக்கு நீங்க வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கு" தீபா, "எந்த மாதிரி வேலை? இதுவரைக்கும் அவங்க எந்த சட்ட விரோதமான செயலிலும் ஈடு படலை. மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்னல்லாமோ செய்ய முடியும் ஆனா அவங்க அந்த மாதிரி எதுவும் செய்யலை. வெறும் விளம்பர ஈமெயில் அனுப்பினாங்க" தீபாவின் பேச்சில் முரளிதரனும் ஜாயிண்ட் டைரக்டரும் சற்று நெளிந்தனர். காரியதரிசி சற்று தடுமாறி விழிக்க, முரளீதரன் அவர் உதவிக்கு வந்து மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி விளக்கிச் சொன்னார். காரியதரிசி, "இருந்தாலும் முரளி இது ஒரு ஜாயிண்ட் ஆபரேஷன். உங்களுக்கு தெரிஞ்சப்பறமும் எஃப்.பி.ஐகிட்டே நீங்க ஏன் சொல்லலை?" முரளீதரன், "சார், மாங்க்ஸ் பாட் நெட் இந்த கால கட்டத்தில் ஒரு அணு ஆயுதம் மாதிரி. அதை உருவாக்கினவங்க இந்தியர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இல்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் இருந்தபோதே அதை உருவாக்கின இந்தியர்கள். இந்தியர்கள் உருவாக்கிய அப்படிப் பட்ட ஒரு சக்திவாய்ந்ததை எதுக்கு அமெரிக்காவுக்கு தூக்கிக் கொடுக்கணும்? அமெரிக்க அரசாங்கம் அவங்களை வளைச்சுப் பிடிச்சு எப்படியாவது அவங்ககிட்ட இருந்து மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்ற முயற்சி செய்யும். இப்பவும் சக்தியும் நித்தினும் அவங்க கையில் கிடைக்காததால்தான் இந்த அளவுக்கு சத்தம் போடறாங்க. கிடைச்சு இருந்தா அவங்களை எங்கேயாவது அடைச்சு வெச்சுட்டு இன்னும் தேடிட்டு இருப்பதா நம்மிடம் பொய் சொல்லி இருப்பாங்க. அவங்க ஸ்தானத்தில் இருந்து இருந்தா நானும் அதைத் தான் செஞ்சு இருப்பேன். எப்படியும் இன்னைக்கு அல்லது நாளைக்கு இந்தியா வந்துடுவாங்க. அதுக்கு பிறகு நாம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொண்டு மாங்க்ஸ் பாட் நெட் யார் கையில் இருக்கணும்ன்னு முடிவெடுக்கலாம். அதை முழுக்க முழுக்க அமெரிக்காவிடம் ஒப்படைக்க சக்தியும் நித்தினும்கூட விரும்ப மாட்டாங்க. அதனால் தான் ஷான்கிட்ட அவங்க ரெண்டு பேரையும் பத்தி சொல்லலை" டைரக்டர், "வெல் டன் முரளி"காரியதரிசி, "My God! I really appreciate what you have done!! நான் உடனே இதை SMK சார் மூலம் PMக்கு ஒரு அப்டேட் கொடுக்கச் சொல்றேன். அவங்க காட்டின அதிகாரத்தைப் பார்த்தா நிச்சயம் அவங்க ப்ரெஸிடெண்ட்டை நம் பி.எம்கிட்ட பேசச் சொல்லுவாங்க. நீங்க மேற்கொண்டு என்ன செய்வதுன்னு பாருங்க. அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாது. ஹோம் மினிஸ்ட்ரி மூலம் ஒரு நேஷன்வைட் அலர்ட் கொடுக்கச் சொல்லலாமா?" முரளீதரன், "சார், We know our forces are infiltrated. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம். இதுக்கு நடுவில் சக்தியிடம் இருந்து நேத்து நைட்டு ஈமெயில் வந்து இருக்கு. அவங்க இந்தியா வந்ததும் உடனே நம்மை அணுகப் போறது இல்லையாம். அவங்க ரெண்டு பேரையும் ஜாஷ்வா-சஞ்சனா இழப்பு ரொம்ப பாதிச்சு இருக்கு. தீவிரவாதிகள் தங்களை அணுகுவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அதுக்கு நல்ல சமயம் வரும்வரை எங்கேயோ தலைமறைவா சில நாட்கள் இருந்துட்டு அதுக்கு அப்பறம் பெங்களூர் வருவதாவும் பெங்களூரில் தீவிரவாதிகளை பிடிக்க தகுந்த ஆள் பலத்தோட காத்து இருக்கும்படியும் சொல்லி இருக்காங்க" காரியதரிசி, "யார் இந்த ஜாஷ்வா, சஞ்சனா?" முரளீதரன், "ஜாஷ்வாதான் அந்த மூணாவது ஹாக்கர் அமெரிக்காவில் அவங்க இருந்தப்ப அவங்களுக்கு ஒரு மெண்டர் மாதிரி இருந்தவன். சஞ்சனா அவன் மனைவி. சக்திவேலும் சஞ்சனாவும் அண்ணன் தங்கை மாதிரி பழகிட்டு இருந்தாங்க" டைரக்டர், "Too many personal involvement in this case ... I am not happy about it" முரளீதரன், "Neither am I. ஆனா இந்த சமயத்தில் அதை நமக்கு சாதகமா பயன் படுத்திக்கலாம்" ஜாயிண்ட் டைரக்டர், "சரி, பிடிபடாம இருக்கற அளவுக்கு அவங்களுக்கு திறமை இருக்கா?" முரளீதரன் வந்தனாவையும் தீபாவையும் பார்த்து பெருமூச்சு விட்ட பிறகு, "இது அவங்களா எடுத்த முடிவு. எங்களுக்கு என்னவோ அவங்க ரெண்டு பேரும் அடுத்த சில நாட்களில் எதோ செய்யப் போறாங்கன்னு தோணுது"

காரியதரிசி, "அவங்களால என்ன செய்ய முடியும்?" முரளீதரன், "அவங்க உருவாக்கின மாங்க்ஸ் பாட் நெட் அவங்க கன்ட்ரோலில் இருக்கு. நிறைய செய்யலாம்" ஜாயிண்ட் டைரக்டர், "பழிவாங்க எதாவது செய்வாங்கன்னு தோணுதா?" முரளீதரன், "எஸ்!" காரியதரிசி, "யாரை?" முரளீதரன், "Obviously தீவிரவாதிகளைதான். ஆனா எப்படின்னு எங்களால யூகிக்க முடியலை" டைரக்டர், "இதனால் அவங்களுக்குத்தானே இன்னும் அபாயம்?" முரளீதரன், "அதுவும் அவங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். ஆனா சார், அந்த மாதிரி ஒரு மென்பொருளை எழுதினவங்க நிச்சயம் முன்னேற்பாடோடதான் செயல் படுவாங்கன்னு தோணுது" டைரக்டர், "இருந்தாலும் நீங்க ஏன் அவங்களை தேடிக் கண்டு பிடிக்காம இருக்கீங்க?" முரளீதரன், "தேடி கண்டுபிடிச்சாலும் அரெஸ்ட் செய்யப் போறது இல்லை. செய்யவும் முடியாது. அவங்க ரெண்டு பேருக்கும் அவங்களுக்கு தெரியாமல் பாதுகாப்பு மட்டும் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை ஸீ.பி.ஐ மூலம் செஞ்சு இருக்கேன்." என்றவர் ஜாயிண்ட் டைரக்டரைப் பார்த்து, "Sorry சார், உங்களை கேட்காமல் செஞ்சுட்டேன்" ஜாயிண்ட் டைரக்டர், "அதனால் என்ன பரவால்லை. சார் சொன்ன மாதிரி அவங்க இப்ப நேஷனல் ட்ரெஷர் அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாது" முரளீதரன், "I will put my best efforts in it Sir" காரியதரிசி, "தாங்க்ஸ் முரளி. இந்திய அமெரிக்க உறவுக்கு நீங்க ஒரு புதுப் பரிமாணத்தை கொடுத்து இருக்கீங்க" முரளீதரன், "பட், இதனால் NTROவை அமைப்பதில் அவங்களோட மத்த ஒத்துழைப்பு கிடைக்காம போகுமா? அதுதான் என் பயம்" காரியதரிசி, "NTROவின் அமைப்பினால் அமெரிக்க அரசாங்கமும் பயன் அடையப் போகுது. இப்ப இந்த மாங்க்ஸ் பாட் நெட் விஷயத்தில் நம் நடத்தையினால் இனிமேல் எல்லா விஷயத்திலும் நம்மை கொஞ்சம் மரியாதையா நடத்துவாங்க. அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்க." டைரக்டர், "சோ முரளி, அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாமல் பாத்துக்குங்க" முரளீதரன், "நிச்சயமா சார். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். அவங்க எப்படி சக்தி-நித்தின் இவங்க ரெண்டு பேர்தான்னு கண்டு பிடிச்சாங்க?" ஜாயிண்ட் டைரக்டர், "இறந்து போனதா அறிவிச்ச ஜாஷ்வாவின் ஜாக்கெட்டில் ஒரு க்ளாக் செமி ஆடோமாடிக் இருந்து இருக்கு. க்ரைம் சீனில் இருந்த மத்த பொருள்களோட இதிலும் கைரேகை எதாவது இருக்கான்னு பார்த்து இருக்காங்க. அதில் சக்திவேல் நித்தின் இவங்க ரெண்டு பேர் கைரேகையும் இருந்து இருக்கு" காரியதரிசி, "ஓ, இப்ப எல்லாம் அமெரிக்காவுக்குள் நுழையும் எல்லார் கைரேகையும் அவங்க டேட்டா பேஸில் ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்காங்க இல்லையா?" ஜாயிண்ட் டைரக்டர், "எஸ் சார். ... அவங்க பாஸ்போர்ட் நம்பரை வெச்சுட்டு எங்கே எல்லாம் போயிருக்காங்கன்னு ஸர்ச் பண்ணி இருக்காங்க. அங்கே இருந்த ஒரு வருஷத்தில் வெவ்வேறு ரிசார்ட்களில் தங்கி இருக்காங்க. பலமுறையும் இவங்க தங்கின நாட்களில் ஜாஷ்வாவும் சஞ்சனாவும் தங்கி இருக்காங்க. பல முறை எல்லொருக்கும் ஜாஷ்வாவே பே பண்ணி இருக்கான். இதனால் கில்9 மோர்லா அப்படிங்கறது சக்திவெல் நித்தினாத்தான் இருக்கும்ன்னு யூகிச்சு இருக்காங்க. ஒரு முறை ஒரு ரிசார்ட்டுக்கு ஜாஷ்வாவின் விருந்தினரா சக்திவேல், நித்தின், வந்தனா, தீபா இந்த நாலு பேரும் போய் இருக்காங்க. அதைப் பார்த்தப்பறம்தான் நம் மேல் சந்தேகம் வந்து இருக்கு" முரளீதரன், "ம்ம்ம் ... கண்டு பிடிச்சுடுவாங்கன்னு தெரியும் இவ்வளவு சீக்கரம் கண்டு பிடிப்பாங்கன்னு நினைக்கலை" டைரக்டர், "தீவிரவாதம் என்கிற விஷயத்தில் இப்ப எல்லாம் அமெரிக்கா ரொம்ப வேகமா செயல் படுது. Any how, அவங்களை பத்திரமா பாத்துக்குங்க வெளி ஆளுங்களை பத்தி மட்டும் நான் சொல்லலை முரளீ. உங்க ரெண்டு டீம் மெம்பர்ஸ்கிட்ட இருந்தும் அவங்களை நீங்க காப்பாத்த வேண்டி இருக்கும். அவங்க கைக்கு கிடைச்சதும் தீபாவும் வந்தனாவும் அவங்களை ஒண்ணும் செய்யாம பாத்துக்குங்க" என்று ஜோக் அடித்து தோய்ந்து போயிருந்த தோழிகள் இருவரின் முகத்திலும் சிறு புன்னகை வரவழைத்தபடி காரியதரிசியுடன் விடைபெற்றுச் சென்றார்.ஜாயிண்ட் டைரக்டர், "சோ முரளீ, The ball is in your court again .. இந்த ஆபரேஷன் முடியறவரைக்கும் தயவு செஞ்சு எதையும் என்கிட்ட மறைக்காதே .. I don't like cuttting a sorry figure" முரளீதரன், "You know very well it was not intentional ... Anyhow இனிமேல் உங்களை எந்த விதமான தர்மசங்கடத்திலும் ஆழ்த்த மாட்டேன்" ஜாயின்ட் டைரகரும் விடைபெற்றுச் சென்றார். வந்தனா, "சார், இந்நேரம் லாண்ட் ஆகி இருந்தா நியூஸ் வந்து இருக்கணும் இல்லையா? ஸீ.பி.ஐயிடம் தகவல் கொடுக்க சொன்னீங்களா?" முரளீதரன், "நான் அவரிடம் ஸீ.பி.ஐ மூலம் பாதுகாப்பு கொடுத்து இருக்கேன்னு சொன்னது பொய்" வந்தனா, "என்ன சொல்றீங்க?" தீபா, "என்ன சார் இப்பத்தான் அவர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றேன்னு சொன்னீங்க?" முரளீதரன், "ம்ம்ம் புளுகினேன்!" வந்தனா, "சார், பீ சீரியஸ்" முரளீதரன், "The risk of loosing a piece of intelligence increases with the number of ears it reaches. என்னதான் என்னோட பாஸ் ஆக இருந்தாலும் யாராவது அவரிடம் இதைப் பத்தி கேட்பாங்க. தெரிஞ்சும் தெரியாத மாதிரி அவரால் காண்பிச்சுக்க முடியாது. லீக் அவுட் ஆகும். ஐ.எஸ்.ஐ நம் அரசாங்க அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு விரிசலையும் பயன் படுத்திட்டு இருக்கு."

வந்தனா, "அப்ப அவங்களுக்கு பாதுகாப்பு?" முரளீதரன், "அதைப் பத்தி நீ கவலைப் படாதே. I have a network of friends. அவங்க பாத்துப்பாங்க" வந்தனா, "சரி, இப்ப அவங்க எங்கே இருக்காங்க?" முரளீதரன், "இரு சொல்றேன்" என்ற பிறகு அவரது கைபேசிக்கு வரிசையாக வந்து இருந்த எஸ்.எம்.எஸ்களைப் பார்த்து முடிவாக வந்து இருந்ததைப் பார்த்தபின், "இப்போ அவங்க கோவையில் ஒரு செகண்ட் ஹாண்ட் கார் டீலர்கிட்ட பேசிட்டு இருக்காங்க. நாம் மீட்டிங்க் போறதுக்கு முன்னாடி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி ஏர்போர்ட் ஷட்டில் உபயோகிச்சு டொமெஸ்டிக் ஏர்ப்போர்ட்டுக்கு போனாங்க. சக்தி அருமையா வேஷம் போட்டுட்டு இருந்தான். எங்க ஆளுக்கு சந்தேகம் அவன்தானான்னு எனக்கு எம்.எம்.எஸ் அனுப்பி கன்ஃபர்ம் பண்ணினான். இதோ பாரு" என்றவாறு கையில் ப்ரீஃப் கேஸுடன் ஒரு கோவைத் தொழில் அதிபர் போல் முன்னால் சக்தி நடக்க பின்னால் ஒரு மாணவனைப் போல் காதில் ஐ-பாட் சொருகிய நித்தின் காட்சியளிக்கும் புகைப்படத்தைக் காட்டினார். வாங்கிப் பார்த்த வந்தனா கண் பனிக்க, "அவனோட அப்பா மாதிரி இருக்கான்" என்றபடி தீபாவிடம் அதை காட்டினாள்.

No comments:

Post a Comment