Wednesday, February 11, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 6


'ம்ம் நானும் உன்கூடவே செத்துடுவேன்னு சினிமா டயலாக்கெல்லாம் சொல்லமாட்டேன் நான் உயிரோடுதான் இருப்பேன் ஏன்னா அப்புறமா நம்ம குழந்தை அனாதையா ஆகிவிடக்கூடாது இல்லையா அதுக்காகத்தான்'என்று அவளுக்கு உடனே பதில் தந்தான்

சத்யன் 'ஏன் இவ்வளவு நாளா அது அனாதையாகத்தானே இருந்தது இப்பமட்டும் என்ன அப்பா அம்மாவோட பங்களாவில் வாழனும்னு அவன் சொல்றானா'என்று மான்சியின் வார்ததைகள் சவுக்கடி போல் வந்தது அவளின் அனாதை என்ற அந்த வார்த்தை சத்யன் மனதை பாதிக்க'சரி மான்சி நீ சொல்றமாதிரியே இருக்கட்டும் அவன் ஒரு கோடீஸ்வரன் பேரன் ஒரு ஆரோக்கியமான நல்ல அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் அவன் ஏன் அனாதை விடுதியில் இருக்கனும் என் பங்களாவில் என் அப்பாவுக்கு பேரனா நமக்கு மகனா இருப்பதில் உனக்கு என்ன வருத்தம்,என்று குரலில் கர்வத்துடன் கூறியவனை ஏளனமாக பார்த்த மான்சி

 

'எனக்கு ஒரு விஷயம்தான் ரொம்ப ஆச்சர்யம்மா இருக்கு என்மகன் என் குடும்பவாரிசு அப்படின்னு இப்ப சொல்றியே உனக்கு உங்கவீட்டில் கல்யாணம் முடிவு பண்ணியிருந்தாஙகளே அந்த கல்யாணம் முடிஞ்சப்புறம் உனக்கு இந்த உன்மை தெரிஞ்சிருந்தா உன்னால என்ன பண்ணியிருக்க முடியும்'என நக்கலுடன் மான்சி கேட்க அதற்க்கும் சத்யன் சளைக்காமல் பதில் சொன்னான்

 'நிச்சயமா அப்படி ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தா தாலி கட்டிய என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை மணந்திருப்பேன் ஏன்னா என் மகனை எந்த சூழ்நிலையிலும் என்னால் விட்டுகொடுக்க முடியாது'என்று உறுதியுடன் கூறிய சத்யன் அவளை சற்று நெருங்கி 'மான்சி நான் செஞ்ச தப்புக்கு சப்பைக்கட்டு கட்றதா நினைக்காதே நான் பிரவீனை விடுதியில் பார்த்ததில் இருந்து இப்போது வரைக்கும் என் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது,


 'ஒருநாளைக்கு உலகத்தில் ஆயிரம் அனாதைகள் உருவாகுறாங்க நாம ஏன் புதுசா இன்னொரு அனாதையை உருவாக்கனும் வேண்டாம்மா ப்ளீஸ் நான் சொல்றதை கேள் நீ என்னை எங்கே வந்து மன்னிப்பு கேட்க சொன்னாலும் கேட்கிறேன் நீ என்ன சொன்னாலு அதுக்கு நான் கட்டுப்படுகிறேன் நம்ம குழந்தைக்கு இந்த சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கொடுக்கனும்னா அது நம்மால் மட்டும்தான் முடியும், 'நீ திருமனத்திற்க்கு சம்மதிச்சா மட்டும் போதும் என்னுடன் சேர்ந்து வாழனும்னு அவசியம் இல்லை திருமணத்துக்கு பிறகு நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு சம்மதிக்கிறேன்


ஆனால் நிச்சயமாக இந்த திருமணம் நடக்கனும் மான்சி'என்று தன் தரப்பு வாதத்தை சரியாக எடுத்து சொன்ன சத்யன் களைத்துப்போய் படுக்கையில் உட்கார்ந்தான்அதுவரை அவர்கள் பேசுவதை பொருமையாக கேட்டுகொண்டிருந்த சிவா சத்யனை நெருங்கி 'சார் நீங்க உங்க உடல்நிலையை இப்படி வெச்சுகிட்டு இவ்வளவு பேசினதே போதும் கொஞ்சம்நேரம் ரெஸ்ட் எடுங்க நான் மான்சியோட கொஞ்சம் வெளியே போய் பேசிட்டு வர்றேன்'என்று சத்யனின் தோளைப் பிடித்து படுக்கையில் படுக்கவைத்த சிவா மான்சியை கைப்பற்றி எழுப்பி நிர்மலாவை கண்ணசைவில் வெளியே வரச்சொல்லி தங்கையை அழைத்துகொண்டு தானும் அறையை விட்டு வெளியேறினான்

 குழந்தை பிரவீனை தூக்கிக்கொண்டு நிர்மலாவும் அவர்கள் பின்னால் வர சிவா அந்த மருத்துவமனையின் சறு நந்தவனத்தில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தவன் மான்சியையும் உட்காரச்சொன்னான் குழந்தையுடன் நிர்மலா நிற்க்க சிவா அவளை மான்சிக்கு அறிமுகம் செய்தான் 'மான்சி இவ நிர்மலா சத்யன் சார் குடும்ப டிரஸ்ட் மூலமா நடக்கிற ஆதரவற்றோர் விடுதியில் குழந்தைகளை பார்த்துக்குறா அந்த விடுதி மேனேஜர்ரோட பேத்தி'என்று நிர்மலாவை மான்சிக்கு அறிமுகம் செய்ய மான்சிக்கு சிவா நிர்மலாவை ஒருமையில் அழைத்தது மனதின் ஒரு ஓரத்தில் உறுத்தினாலும் அவள் அதை பற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையில் இல்லை

 இன்று முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்ப்பட்ட அதிர்ச்சியில் அவள் மனம் யானையின் காலிடைச் சருக போல் ஆனது அவள் நிர்மலாவின் கையிலிருந்த பிரவீனையே வெறித்துப் பார்த்துகொண்டிருந்தாள் சிறிதுநேரம் கழித்து சிவாவிடம் திரும்பி 'உனக்கு எல்லா விஷயமும் நேத்திக்கே தெரிஞ்சிருக்கு ஆனா நீ என்கிட்ட எதுவுமே சொல்லல ஏன் எதனால அப்படியாவது உன் தங்கச்சிக்கு அந்த தரமில்லாதவன் கூட ஒரு வாழ்க்கை அமையனும்னு நெனைச்சியா நான் உனக்கு அவ்வளவு பாரமாயிட்டேனா நீ என்னை பாரம்னு நெனைச்சிருந்தா பேசாமா என்னையும் ஏதாவது ஒரு விடுதியில் விட்டுருக்கலாம் அதைவிட்டு இங்க கூட்டிவந்து என்னை இவ்வளவு அசிங்கப்பட வைச்சிருக்க கூடாதுண்ணா

ஏண்ணா இப்படி செஞ்ச எனக்கு இப்பவே என் உயிர் போயிடாதான்னு இருக்கு'என்று மான்சி கண்ணீருடன் உருக்கமாக சிவாவைப் பார்த்து கேட்க அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை நிர்மலாதான் சமாளித்து'என்ன சிவா நீங்க அவங்க இன்னும் எதுவுமே சாப்பிடவே இல்லை நீங்க போய் கேன்டீனில் ஏதாவது இருந்தா வாங்கிட்டு வாங்க அதுவரைக்கும் நான் இவங்க கூட பேசிகிட்டு இருக்கேன்' என்று சிவாவை கண்ஜாடை செய்து போகுமாறு சொல்ல சிவாவும் தன்னால் பதில் சொல்ல முடியாத தன் தங்கையின் கேள்வியில் இருந்து தப்பித்தால் போதுமென்று வேகமாககேன்டீன்நோக்கிபோனான்

நிர்மலா குழந்தையை கீழே விட்டு மான்சியின் அருகில் அமர்ந்தவள் சிறிதுநேரம் அமைதியாக மான்சியை பார்த்தவள் பிறகு மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் 'ஏன் மான்சி நான் ஏதாவது உங்கள் விஷயத்தை பத்தி பேசினா தப்பா நினைப்பீங்களா'என்று பீடிகையுடன் கேட்க 'ம்ஹூம் என்ன கேட்கனுமோ கேளுங்க ஏன்னா இப்ப என் வாழ்க்கையை பத்தி நானே முடிவெடுக்க முடியாத நிலைமையில் இருக்கேன் இப்பவந்து யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கதான் வேனும் சொல்லுங்க'என்று விரக்தியாய் மான்சி கூறினாள்

 'ஏன் இப்படி விரக்தியா பேசறீங்க உங்களை பற்றிய எல்லா விஷயமும் உங்க அண்ணன் என்கிட்ட சொல்லிருக்கார் நான் அவ்வளவு முக்கியமானவளான்னு நினைக்காதீங்க அதைப்பற்றி நான் பிறகு ஒருநாள் சொல்றேன்'என்ற நிர்மலா நன்றாக மான்சியின் பக்கம் திரும்பி உட்கார்ந்து ''இதோ பாருங்க மான்சி மன்னிப்பு கேட்கிறது மனுசகுணம் மன்னிப்பை வழங்குவது தெய்வகுணம்ன்னு,சொல்லுவாங்க நீங்க ஒரு தெயவமாக இருந்து அவரை மன்னிக்கனும் இதை ஏன் நான் அவர் சார்பா கேட்கிறேன்னா அன்னிக்கு குழந்தையை பார்க்க வந்தவர்

விடுதில தியான மண்டபத்தில் அவர் விட்ட கண்ணீரை என் கண்னால் பார்த்தவ மறுபடியும் தப்பு செய்றவன் திமிர்பிடிச்சவன் பகல்வேஷம் போடறவன் இவங்கல்லாம் மறைவா போய் கண்ணீர் விடமாட்டான் நேர நமக்கு முன்னாடியே கண்ணீர்விட்டு நடிப்பான் ஆனா இவர் அப்படியில்லை அவர் செஞ்சது பெரிய தப்புதான் அதை நீங்க இந்த சின்ன குழந்தைக்காக மன்னிக்கனும் இவனை பாருங்க இந்த நாலுநாளாதான் நல்லா சாப்பிடுறான் நல்ல துணி உடுத்தறான் இவனை அவங்க எல்லாரும் ஒருநிமிடம் கீழே விடாம தாங்கறாங்க மான்சி உங்களுக்கு தெரியாது நான் விடுதியில் பல பிள்ளைகள் கூட இருந்திருக்கேன்

அம்மா அப்பா இல்லாமல் அந்த பிள்ளைங்க படுற கஷ்டத்தை என் கண்னால பார்த்திருக்கேன் அது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா அந்த கஷ்டம் இந்த பிஞ்சு குழந்தைக்கு வரனுமான்னு நீங்கதான் முடிவு செய்யனும் சத்யன் மட்டும் இப்ப என்ன கேட்கிறார் இந்த குழந்தைக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து வேனும்னு தானே அதன்பிறகு நீங்க அவர்கூட வாழலேன்னா கூட பரவாயில்லை திருமணம் மட்டும் நிச்சயமா நடக்கனும்னு சொல்றார் அது உங்களுக்கு சாதகமான விஷயம் தானே மான்சி

அதை ஏன் நீங்க வேண்டாம்ன்னு சொல்றீங்க என்னை கேட்டா இதுதான் உங்களுக்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம்ன்னு சொல்லுவேன் எப்படி கேட்கீறீங்களா அவரை கலயாணம் செய்து அன்னைகே அவரை நீங்க பிரிஞ்சு போனீங்கன்னா அதைவிட ஒரு ஆம்பிளைக்கு அசிங்கம் வேறென்ன இருக்கு நீங்க இதை நிதானமா யோசிச்சு பாருங்க புரியும்'என்று மூச்சுவிடாமல் பேசிய நிர்மலா குழந்தை எங்கே ஓடுவதை பார்த்து அவனிடம் போக மான்சி தன் சகவயதுள்ள ஒரு பெண் சொல்லிய வார்த்தைகளை மறுபடியும் தன் மனதில் ஓட்டிப் பார்த்தாள்

அப்போது சிவா தன் கைகளில் நான்கு மாம்பழச்சாறு பாட்டில்களுடன் வந்து ஆளுக்கு ஒன்றாக கொடுத்து நிர்மலாவை பார்த்து 'இப்ப அன் டைம்மா இருக்கிறதால எதுவும் இல்ல நிலா இதுதான் கிடைச்சது பிரவீனுக்கு மெதுவா குடிக்கவை'என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த இன்னெரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான் மான்சி தன்னிடம் கொடுத்த பாட்டிலை கையிலேயே வைத்திருக்க நிர்மலா பிரவீனை குடிக்க வைத்து தானும் குடித்து காலியான பாட்டில்களை பெஞ்சின் கீழ் வைத்துவிட்டு நிமிர்ந்தவள்

மான்சி அப்படியே வைத்திருப்பதை பார்த்து குடிங்க மான்சி என்று கூற அப்போது கீழே நின்றுகொண்டிருந்த குழந்தை மான்சி கையிலிருந்த பாட்டிலை பார்த்து அவள் முழங்கால் அருகே போய் நின்று தன் தாடையை அவள் முட்டியில் ஊன்றி அந்த கூல்டிரிங்க் பாட்டிலை நோக்கி கைநீட்டி 'உனக்கு வேனாவா அப்ப எனக்கு ததியா'என்று மழலையில் கேட்டது

 மான்சிக்கு தொண்டையில் ஏதோ அடைத்தது போல் இருந்தது அவள் மார்புகள் இரண்டும் திடீரென அதிக பளுவாகி கழுத்துக்கு கீழே கணப்பது போல் இருக்க மார்க்காம்பில் ஒரு இனம்புரியாத குறுகுறுப்பு ஏற்ப்பட்டது வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒன்று பந்தாக கிளம்பி அவள் நெஞ்சுக்குழியில் வந்து அடைத்து நின்றது அவள் படும் இம்சை தெரியாத குழந்தை அவள் மடியில் ஏற முயற்ச்சித்து அன்று பார்த்து அவள் கட்டிவந்த நைலக்ஸ் புடவை குழந்தையை ஏறவிடாமல் வழுக்கிவிட்டது

 இதையெல்லாம் கவனித்த நிர்மலா மெதுவாக நழுவி சிவா உட்கார்ந்திருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டாள் மறுபடியும் மறுபடியும் குழந்தை ஏற முயற்சிக்க புடவை வழுக்கிவிட மான்சி அவளையும் அறியாமல் கையை நீட்டி குழந்தையை வாரியெடுத்து தன் மார்போடு அணைத்து கரகரவென கண்ணீர் வடிக்க குழந்தை அவள் தன் கையால் அவள் கண்ணீரை துடைத்தது

 மான்சி தன் கையில் இருந்த கூல்டிரிங்கை குழந்தையின் வாயில் சாய்க்க
குழந்தை சிறிது குடித்துவிட்டு உனக்கு என்று பாட்டிலை அவள் வாயில் சரித்தது அது தவறி அவள் புடவையில் சிந்தியது அதை பார்த்து குழந்தை பெரிய மனிதன் போல் கண்களை அகல விரித்து 'அச்சச்சோ'என்று கன்னத்தில் கைவைக்க மான்சிக்கு சிரிப்பு வர வாய்விட்டு சிரித்தாள் சிவா தன் தங்கை சிரிப்பதை ஆச்சரியமாக பார்த்து கண்கலங்க

நிர்மலா 'ஷ்'அவன் தொடையில் கிள்ள சிவா தொடையை தடவிக்கொண்டே 'ஏய் ஏன்டி இப்ப கிள்ளுன' என்று கிசுகிசுப்பாக கேட்க அவள் எல்லாம் என்னால தான் என்று இல்லாத சட்டையின் காலரை தூக்கிவிடுவது போல் தன் சுடிதாரின் காலரை தூக்கி விட்டு அவனைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள் இருவரும் நடமாடுவது போல் மான்சியையும் குழந்தையையும் தனியாகவிட்டு பக்கத்தில் இருந்த பூச்செடிகளை பார்க்க நகர்ந்தனர்

 மான்சி இன்னும் குழந்தையை தூக்கி போட்டு பிடித்து அவன் கன்னங்களில் தன் கன்னங்களை தேய்த்து முகம் முழுவதும் சிரிப்புடன் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்அந்த பெரிய விசிறிவாழையின் மறைவில் நின்ற சிவாவும் நிர்மலாவும் மான்சியை கவனித்துவிட்டு அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி நின்று கொண்டனர் 'ஏய் நிலா நான் கேன்டீன் போனதும் மான்சிகிட்ட என்ன பேசின'என்று ஆர்வத்துடன் சிவா கேட்க 'ம்ம் என்ன பேசினேன் நடைமுறை வாழ்கையை பற்றி அவங்களுக்கு எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்' 'அதுதான் என்னன்னு கேட்கிறேன்' என்று சிவா வற்புறுத்த நிர்மலா மான்சியிடம் தான் பேசியது ஒன்றுவிடாமல் சிவாவிடம் சொல்ல சிவா தன் கைகளால் நெற்றியில் அறைந்து கொண்டான்

 'போச்சு எல்லாமே போச்சு ஏன்டி நீ என்ன லூசாடி கல்யாணம் பண்ண அன்னிக்கே பிரிஞ்சு போறதுக்கு எதுக்குடி கல்யாணம் செய்யனும் சும்மாவே அவ சத்யன் மேல ரொம்ப வெறுப்புல இருக்கா இப்ப நீ வேற எரியிற நெருப்புல் எண்ணெய்ய ஊத்திவிட்ருக்க என்ன நிலா இது ' என்று சிவா சலிப்புடன் கேட்க 'அதுதான் நிலாவேட டெக்னிக் நான் சொல்றத கவனமா கேட்டுட்டு அப்புறமா என்னை குறை சொல்லுங்க இப்போ உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு முதல்ல ஒத்துக்கட்டும் அதன்பிறகு அவங்க நிச்சயமாக சத்யன் சாரை பிரியமாட்டாங்க அதுக்கு நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்' என்றவள் சற்று எக்கி சிவாவின் காதில் ஏதோ சொல்ல சிவாவின் முகம் சட்டென மலர்ந்தது

 'ம்ம் எப்படி என்னோட பிளான்' என்று நிர்மலா கேட்க சிவா சிரித்தபடி 'ம்ம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்ற பார்க்கலாம் நடக்கும்ன்னு எனக்கும் நம்பிக்கை வருது'என்ற சிவா நிலாவை சற்று நெருங்கி 'ஏய் நிலா கொஞ்சம் அந்த பிள்ளையார் கோயில் பின்னாடி வரய சும்மா கொஞ்சநேரம் ஒரே ஒரு உம்மா இப்பவே குடுக்கனும் ப்ளீஸ் 'என்று கண்களில் தாபத்துடன் கேட்க 'அய்யோ என்ன உங்களுக்கு மண்டை குழம்பிப்போச்சா பட்டபகலில் போய் ச்சே என்ன விளையாடுறீங்களா'என்று ரகசியமாக எச்சரிக்கை குரலில் நிர்மலா அதட்டினாள்

 'ஏய் ஏய் ப்ளீஸ்டி அங்கே மறைவாத்தானே இருக்கு என் குடும்பத்துக்காக இவ்வளவு செய்திருக்க அதான் உனக்கு ஒரு உம்மா உடனே குடுக்கனும் வா நிலா'என்று அவளின் விரல்ப்பற்றி சிவா இழுக்க 'அடடா என்னங்க இது நேரங்காலம் தெரியாம உன் குடும்பம் என் குடும்பம்ன்னு பிரிச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க அங்கே பாருங்க உங்க தங்கச்சியை அவங்க அப்புறம் நம்மை காணேம்ன்னு தேட போறாங்க வாங்க' என்று அவன் கையை பிடித்து இழுத்துகொண்டு மறைவிலிருந்து வந்தாள்

 சிவா அவள் கையை சுரண்டியபடி காதருகே குனிந்து அப்ப இன்னிக்கு நைட் வேனும்னா குடுக்கட்டுமா அங்கேயே வெயிட் பண்றேன் உனக்காக'என்று சொல்லிக்கொண்டு வந்தவன் மான்சியருகி்ல் வந்ததும் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்இருவரும் மான்சி அருகில் வரும்போது குழந்தை மான்சியின் மடியில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கேட்க அவள் உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்

அதை ரசித்துக்கொண்டே சிவா மான்சியருகே அமர்ந்தான் அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி 'அண்ணா இவனை பார்த்தியா எவ்வளவு கேள்வி கேட்கிறான் என்னால பதிலே சொல்லமுடியாலை ரொம்ப புத்திசாலியா இருக்கான்ண்ணா'என்று சொல்லிவிட்டு சிரிக்க தன் தங்கையின் முகத்தில் நான்கு வருடம் கழித்து வந்திருக்கும் இந்த புன்னகை நிறந்தரமாக அவள் முகத்திலேயே இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்தது

 அந்த பாசமுள்ள அண்ணன் மனது 'சரிம்மா நேரமாகுது குழந்தைக்கு ஏதாவது சாப்பிடக் குடுக்கனும் வா கேன்டீன் சாப்பிட்டு வரலாம்'என்று சிவா கூப்பிட அதற்க்குள் சத்யன் வீட்டு டிரைவர் வேகமாக அவர்களை நோக்கி வந்தான் வந்தவன் சிவாவிடம் 'குழந்தை, சின்னம்மா, உங்களையெல்லாம் சத்யன் ஐயா சாப்பிட வரச்சொன்னாங்க வீட்ல இருந்து சாப்பாடு கொண்டுவந்திருக்கோம் சார் வாங்க' என்று கூப்பிட அவன் சின்னம்மா என்று மான்சியை பார்த்து சொன்னது மான்சிக்கு அதுவரை இருந்த சிரிப்பு மாறி முகத்தில் கடுமை வந்தது

 ' சாப்பாடெல்லாம் வேண்டாம் நாங்க வெளியே சாப்பிட்டுக்கிறோம்'என்று மான்சி சொல்ல

'நீங்க சாப்பிட வரலைன்னா அவரும் எப்பவுமே சாப்பிடமாட்டாராம் அப்படின்னு சொல்லசொன்னார்ம்மா' என்று மறுபடியும் பணிவுடன் டிரைவர் கூற மான்சிக்கு புகைந்தது என்ன பட்டினியா இருந்தா இருக்கட்டுமே யாருக்கென்ன என்று அலட்சியமாக நினைத்தாள்

 'ஐயோ அவருக்கு வேளைக்கு மருந்து சாப்பிடனுமே இப்பவே டைமாயிருச்சு மான்சி சீக்கிரமா வா போகலாம்' ச என சிவா தங்கையை கைபற்றி எழுப்ப அவள் அண்ணா என்று அதட்டி சிவாவை முறைத்தாள் சிவா தர்மசங்கடத்துடன் நிர்மலாவை ஏதாவது சொல்லேன்டி என்பது போல பார்த்தான் அதற்க்குள் உணவைப்பற்றி பேசியதும் குழந்தை வயிற்றை தடவி நிர்மலாவைப் பார்த்து 'அக்கா ப்பூவா வேனும் பதிக்குது'என்று கேட்டான் உடனே இதுதான் சாக்கு என நினைத்த நிர்மலா'ஐயோ குட்டிபையனுக்கு பசியெடுத்துகிச்சா அம்மாவையும் கூட்டிட்டு வா செல்லம் சாப்பிட போகலாம்'என்று மான்சி அழைக்கும் பொறுப்பை நைசாக குழந்தையிடம் ஒப்படைக்க

 குழந்தையும் அவள் சொல்லிக்கொடுத்தபடி சரியாக மான்சியின் கையைப்பற்றி 'அம்மா வா சாபிதலாம்' என்று அழைக்க முதன்முறையாக தன்னை தன் மகன் அம்மா என்று அழைத்த அந்த வார்த்தை மான்சியின் உயிர்வரை தீண்டியது மறுபடியும் குழந்தை 'அம்மா பசிக்குது வா, மான்சியின் கையைப்பிடித்து இழுக்க வேறு வழியில்லாமல் மான்சி சாப்பிடுவதற்க்காக சத்யனின் அறைக்கு போனாள்சத்யன் அறையில் நடுவில் ஒருசிறு டேபிளும் இரண்டுபக்கமும் இரு சேர்களு்ம் போடப்பட்டு டேபிளில் ஒரு மெகாசைஸ் கேரியரில் உணவு வைக்கப்பட்டிருந்தது


 நிர்மலா சிவாவை சீண்டி காதருகில் அவங்க உட்கார்ந்து சாப்பிடட்டும் நாம அப்புறமா சாப்பிடலாம் என்று கிசுகிசுக்க 'ம்ம்'என்றான் ஆனால் சத்யனோ 'சிவா வாங்க நாம சாப்பிடலாம் அவங்க இரண்டு பேரும் அப்புறமா சாப்பிடட்டும் என்று லேசாக தடுமாறி எழுந்து வந்து சேரில் உட்கார்ந்துகொண்டான் வேறு வழியின்றி சிவாவும் இன்னொரு சேரில் அமர சத்யன் மகனை நோக்கி கைநீட்டி அழைத்து மெதுவாக தூக்கி தன் மடியில் வைத்து கொண்டான் 'அவனை கீழே விடுங்க சார் நிர்மலா சாதம் ஊட்டுவா மொதல்ல நீங்க சாப்பிடுங்க,என்று சிவா சொல்ல சத்யன் அவனை பார்த்து சிரித்து 'ம்ம் பராவாயில்லை சிவா நானே ஊட்றேன் என் கையில் எதுவும் காயம் இல்லையே'என்றான்

 மான்சி ஒதுங்கி நிற்க்க நிர்மலா உணவு பறிமாற வந்தாள் சத்யன் அவளை கைநீட்டி தடுத்து நீங்க இருங்க நிர்மலா மான்சி பரிமாறட்டும் என கூற மான்சி அவனை பார்த்து முறைத்தாள் 'என்ன மான்சி உன்னை சாப்பாடுதானே பரிமாறச்சொன்னேன் நான் என்னவோ எனக்கு ஊட்டிவிடச்சொன்ன மாதிரி முறைக்கிற'என்று சத்யன் கிண்டலாக சத்யன் கேட்க மானசியின் முகம் கோபத்தில் ஜிவ்வென்று சிவந்துவிட்டது

 'இவ்வளவு சூடு வேண்டாம் மான்சி ஏற்கனவே இங்க சாப்பாடு ரொம்ப சூடாத்தான் இருக்கு ஆனால் இன்னைக்கு நீ போட்டால் மட்டுமே சாப்பிடுவேன் 'என்று சத்யன் பிடிவாதத்துடன் குறும்பு குரலில் கூறினான் நிர்மலா மான்சியிடம் வந்து 'ப்ளீஸ் மான்சி ஏற்கனவே ரொம்ப நேரமாயிருச்சு சாப்பிட்டு சார் மருந்து வேற எடுத்துக்கனும் நீங்க போய் பரிமாறுங்க வாங்க' என்று கைப்பற்றி இழுத்து டேபிளருகே நிற்க்க வைத்தாள் மான்சி வேண்டாவெறுப்பாக தலைகுனிந்து இருவருக்கும் தட்டுவைதது சாதம் வைக்க குழந்தை அப்பனுக்குமேல குறும்புடன் கையை டேபிளில் ஊன்றி தலையை பக்கவாட்டில் சாய்த்து மான்சியை பார்த்து கண்சிமிட்டி 'அம்மா'என்று சிரித்தான்

 சத்யன் முன்பு இப்போதுதான் குழந்தை மான்சியை அம்மா என்று கூப்பிட்டதால் சத்யன் மடியிலிருந்த மகனை குனிந்து முத்தமிட்டு 'அவ அம்மா சரி நான் யார்டா செல்லம்'என்று கொஞ்சியபடி கேட்க குழந்தை பதில் சொல்லும்முன் மானசி 'ம் அது வேதாளம்டா குட்டி'என்று மகனிடம் கூற ' 'ஆமாம் பிரவீன் நான் வேதாளம்தான் இனிமேல் உங்கம்மா தலையில்தான் ஏறி உட்காரப்போறேன் எறங்கவே மாட்டேன்'என்று மான்சியை பார்த்து கண்சிமிட்டி கூறினான்

சத்யன் மான்சி கோபத்துடன் சாப்பாட்டை கரண்டியில் அள்ளி சத்யனின் தட்டில் சத்துடன் தட்டினாள் ஒருவழியாக சிறு சண்டைகளும் ஊடல்களுமாக அனைவரும் சாப்பிட்டு முடிக்க மான்சி மட்டும் கடைசிவரைக்கும் முகத்தில் துளிக்கூட சிரிப்பேயில்லாமல் கோபமாகவே இருந்தாள் சத்யனுக்கு இன்றுதான் அதிகமாக திருப்தியாக சாப்பிட்டது போல் இருந்தது இது என்றும் தனக்கு நிறந்தரமாக வேண்டும் என்று முதன்முறையாக கடவுளை வேண்டினான் இதுதான் சரியான சந்தர்ப்பம் இரவு மானசி ஊட்டிக்கு கிளம்புவதற்கு முன்பு திருமணம் என்றைக்கு என்று முடிவு செய்து விடவேண்டும் என்று மனதில் நினைத்தான் சத்யன்

 'மழை வருமுன் வரும் மண்வாசனை.....
 'இடி வருமுன் வரும் மின்னல் கீற்று.....
 'கவிதை வருமுன் வரும் கற்பனை ஊற்று....
'எனக்கு பிடித்த இவையனைத்துமே என்னுள்....
'இத்தனை மனஅதிர்வைத் தந்ததில்லை..........
'மழலை வருமுன் வரும் மந்திரச் சிரிப்பொலியை விட..!

சாப்பிட்டு முடித்தவுடன் சத்யன் தனது அப்பாவையும் சித்தப்பாவையும் டிரைவரை அனுப்பி அறைக்கு வரவழைத்தான் பிறகு நேரடியாகவே சிவாவை பார்த்து கேட்டான் 'என்ன சிவா உங்க தங்கை என்ன முடிவு பண்ணிருக்கா என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அவ என்ன சொல்றா எப்ப கல்யாணத்துக்கு தேதி வைக்கலாம்ன்னு கேளுங்க'என்று மான்சியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சத்யன் கேட்க சிவா தன் தங்கையை திரும்பி பார்த்தான் மான்சி குழந்தையை தூக்கி கையில் வைத்துக்கொண்டு குழந்தையின் காதில் ஏதோ சொல்ல அதற்க்கு பிரவீன் கைதட்டி சிரித்து மான்சியின் நெற்றியில் முட்ட அவள் 'ஸ் ஆ'என்று வலிப்பது போல் நடித்து நெற்றியை தேய்த்துவிட்டாள்

 

அதை பார்த்து ரசித்த சத்யன் மெதுவாக எழுந்து அவளருகே வந்து 'ஏய் உன்னை உதைக்கனும் அம்மாவை முட்டலாமா தலைவலிக்கும்மில்ல'என்று சத்யன் மகனை செல்லமாக விரல் காட்டி எச்சரித்தான் உடனே குழந்தை மான்சியிடமிருந்து அவனிடம் தாவ இதை எதிர்பார்க்காத சத்யன் பிரவீனை கைநீட்டி தூக்குவதற்குள் தடுமாறி மான்சியின் தோளில் கைவைத்தான்



No comments:

Post a Comment