Saturday, February 28, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 5


"நேத்து அவளுக்கு பொறந்த நாளாலாம் அதான் எல்லாருமா கோயிலுக்கு வந்திருக்காங்க, ரொம்ப நல்லப் பொண்ணா தெரியுறா சத்யா, உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா சத்யா மறுக்கமா சரின்னு சொல்லுப்பா” என்று மான்சியை பற்றிய தகவல்களை படபடவென கலாவதி சொல்ல....

அவள் குரலில் இருந்த ஆர்வத்தில் அந்த பெண்தான் தனது மருமகள் என்ற உறுதி தெரிந்தது

சத்யன் அம்மா சொன்னதை மனதில் அசைபோட்டபடி யோசித்தான் ‘ ம் வசதி குறைவான பொண்ணுன்னா டபுள் ஓகேதான், அப்பதான் நம்மளை கேள்வி கேட்க மாட்டா.... ஆனா மேல படிக்கிறதுக்கு மட்டும் ஒத்துக்கக் கூடாது,.... என்று நினைத்தவன் சேரில் இருந்து எழுந்துகொண்டு

“ ம் சரிம்மா அவங்கிட்ட பேசுங்க.... ஆனா மேல படிக்க மட்டும் நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிடுங்க,.... நகை சொத்து எதுவுமே இல்லாம பொண்ணு மட்டும் வந்தா போதும்னு சொல்லிருங்க,.... நான் என்னிக்கு வரனும்னு முன்னாடியே சொன்னீங்கன்னா அன்னிக்கு இருக்கிற வேலையெல்லாம் ஒதுக்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் தனது அறைக்கு போனான் சத்யன்




சத்யன் எதுவும் தடை சொல்லாமல் உடனே சரியென்றதும்,....கலாவதிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.... “ ம் உடனே அந்த அண்ணாமலைக்கு போன் பண்ணி பேசுங்க” என்று சுந்தரத்தை நச்சரிக்க......

‘”ம் சரி இரும்மா இதோ போண் பண்ணி பேசறேன்” என்று தனது செல்லை எடுத்து அண்ணாமலைக்கு போன் செய்தார் சுந்தரம்.

அடுத்த முனையில் உடனே எடுக்கப்பட " அண்ணாமலை நான் சுந்தரம் பேசுறேன்... என்னப்பா எல்லாரும் நல்லபடியா வீட்டுக்கு போய் சேர்ந்திட்டீங்களா" என்றார் சுந்தரம்

" ம் நல்லபடியா வந்துட்டம்.... நீங்க போன் பண்றேன்னு சொன்னதால அதுக்காகத்தான் காத்திருந்தேன்ய்யா.... என்னங்கைய்யா விஷயம் சொல்லுங்க.... எதுவா இருந்தாலும் செய்யறேன் " என அண்ணாமலை தனது விசுவாசத்தை தன் பேச்சில் காட்ட

" அதுவேற ஒன்னுமில்ல அண்ணாமலை... நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்கறோம்,.... கோயில்ல உன் தங்கச்சி மகளை பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப புடிச்சுபோச்சு,.... எங்க பையன்கிட்டயும் கேட்டோம் சரின்னுட்டான்,.... அதான் நீ உங்க வீட்டுல கலந்துகிட்டு எங்களுக்கு தகவல் சொன்னா நாங்க உன் வீட்டுக்கு வந்து பேசுவோம்.... என்ன அண்ணாமலைஎல்லாரையும் கலந்துகிட்டு சொல்றியா" என்று சுந்தரம் தனது வார்த்தைகளை தடையின்றி தெளிவாக சொல்ல

சிறிதுநேரம் அண்ணாமலைக்கு பேச்சே வரவில்லை..... எதிர் முனையில் சுந்தரம் "அண்ணாமலை லைன்ல இருக்கியா" என்று கேட்ட பிறகு சுதாரித்து

" ம் இருக்கேன்ய்யா உங்க தகுதிக்கு நாங்க எப்படி தோது வருவோம்ய்யா" என அண்ணாமலை தடுமாற

" அட நீ என்னப்பா தகுதி அது இதுன்னு பேசிகிட்டு.... நாம என்ன வெளியாலுங்களா.... பாக்கப்போன தூரத்து சொந்தம் உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி முறைதான் ஆவுது.... இதோபார் அண்ணாமலை ஒரு நகைநட்டு எதுவுமே வேனாம்.... பொண்ண மட்டும் அனுப்பினா போது்ம்.... மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்... நீ நிதானமா யோசிச்சு ஒரு முடிவு பண்ணு நான் நாளைக்கு உனக்கு போன் பண்றேன்" என்று சுந்தரம் இனைப்பை துண்டித்தார்

அண்ணாமலை தனது கையில் இருந்த போனையே சிறிதுநேரம் வெறித்தபடி இருந்தார்.

அண்ணாமலை தன் இருந்த செல்போனையே சிறிதுநேரம் வெறித்தபடி இருக்க......
அவர் மனைவி ராணி அவரின் தோளைத் தொட்டு அவரை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தாள்

“என்னங்க போனையே அப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க, யாரு போன் பண்ணது, என்ன விஷயம்,” என கேட்க.....

கையில் இருந்த மொபைலை தன் சட்டை பாக்கெட்டில் போட்டபடி “ம் காலையில கோயில்ல பார்த்தோமே, அந்த ரைஸ்மில் முதலாளி அவர்தான் ராணி போன் பண்ணார்” என்றார்.

முகத்தில் புதிதாக ஒரு ஆர்வத்துடன் “ என்ன விஷயமாம், காலையில கோயில்லயே ஏதாவது நல்ல விஷயமா பேசனும்னு நம்பர் வாங்கினார், அதைப்பத்தி தான் பேசினாரா” என ராணி கேட்க

“ இருஇரு சொல்றேன்” என்ற அண்ணாமலை சுற்றிலும் பார்த்துவிட்டு “ மான்சி எங்க ராணி” என விசாரிக்க

“ அழுக்குத்துணியை எல்லாம் எடுத்துகிட்டு.... துவைச்சு எடுத்துட்டு வர்றேன்னு பசங்களோட அருவிக்கு போயிருக்கா”

“ ராணி அந்த மில்லுகாரர்க்கு ஒரு பையன் இருக்காரு.... சத்யன்னு பேரு.... கீழ்க்கட்டளை போற வழியில் பெரிய மரபட்டறை வச்சு நடத்துறார்.... அவருக்கு நம்ம மான்சிய பொண்ணு கேட்டுதான் இப்ப போன் பண்ணாங்க..... கோயில்ல பார்த்து மான்சியை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சாம்..... எந்த நகை மத்த எதுவுமே வேனாம்னு சொல்றாங்க. பொண்ணக் குடுத்தா மட்டும் போதுமாம்....நல்லா யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லச்சொல்லி சொன்னாரு” என்று இன்னும் திகைப்பு விலகாத குரலில் அண்ணாமலை கூற

முகம் முழுவதும் சந்தோஷத்தில் மலர “ என்னங்க சொல்றீங்க அவ்ளோ பெரிய பணக்காரவீட்டில் மான்சியை பொண்ணு கேட்டாங்களா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,... எனக்கு அப்பவே தெரியும் அந்த அம்மா மான்சியவே வச்சக் கண்ணு எடுக்காம பார்த்துகிட்டே இருந்தாங்க... ம் எப்படியோ இனிமேலாவது அந்த புள்ள மான்சி நல்லா இருக்கட்டும்”..என்று ராணி உன்மையான அக்கரையுடன் அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்டு சொல்ல


“ இரு ராணி அவசரப்படாதே,.... இதுக்கு மேல அவ அப்பாவை கேட்கனும்.... மான்சிகிட்ட கேட்கனும்,... அவ சம்மதிக்கனுமேன்னு எனக்கு கவலையா இருக்கு ராணி.... ஏன்னா இது ரொம்ப பெரிய சம்மந்தம்.... நாம கனவுல நெனைச்சாக்கூட இதுமாதிரி ஒரு இடம் மான்சிக்கு கிடைக்காது” என்று கவலையான குரலில் அண்ணாமலை கூற

“ என்னங்க நீங்க சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் வருத்தப்பட்டுகிட்டு இருக்கீங்களே,... மான்சி சம்மதிக்காம என்ன பண்ணுவா,... அவகிட்ட பேசி சம்மதிக்கவைப்போம்,... நீங்க கவலைபடாதீங்க” என்று ராணி தன் கணவரை தேற்றினாள்

“ மான்சி சம்மதிக்கலைன்னா என்ன பண்றது ராணி,... நான் ஏன் சொல்றேன்னா படிச்ச பொண்ணு... படிக்கிற இடத்தில் காதல் அதுஇதுன்னு ஏதாவது இருந்து... அவனைதான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னா நம்மலால என்ன பண்ண முடியும் ராணி,.... ஏன்னா இப்பல்லாம் படிக்கப்போற இடத்தில் பிள்ளைங்க எல்லாம் இதைத்தவிர வேற என்ன செய்றாங்க,... அதான் பயமாயிருக்கு,... அந்த அய்யா வேற ரொம்ப ஆர்வத்தோட பேசறாரு... என்ன செய்றது ராணி” என சலிப்புடன் அண்ணாமலை பேச

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்த ராணி சிறிதுநேர அமைதிக்கு பிறகு “நீங்க சொல்றதும் சரிதான்... ஆனா நம்ம மான்சி அதுமாதிரி எல்லாம் பண்றப் பொண்ணு இல்லைங்க.... ரொம்ப பொறுப்பானவ.... அப்படியே இருந்தாலும் அவளுக்கு நம்ம எடுத்து சொல்லி புரியவைப்போம்,” என்றவள்

கொஞ்சநேரம் இப்படியும் அப்படியுமாக நடந்து எதையோ யோசித்துவிட்டு “ ஏங்க எனக்கு ஒரு யோசனை தோனுது,... மான்சி இதுக்கு சம்மதிக்கலைன்னா.... பிரச்சனை வேறமாதிரி அவளுக்கு சொல்லனும்,... நீங்க மட்டும் அமைதியா ஏடாகூடமா வாயைவிடாம நான் சொல்றபடி செய்ங்க,.. எல்லாம் சரியா நடக்கும்” என்று ராணி ரொம்ப தைரியமாக பேச

அண்ணாமலைக்கு ஒன்னுமே புரியவில்லை குழப்பத்தோடு “ ஏய் ராணி என்ன பண்ணப்போற,... பாவம் நம்மலை நம்பி இருக்கிற பொண்ணு அது மனசு நோகும்படி ஏதாவது செஞ்சிறாத ராணி” என்று கெஞ்சலான குரலில் அண்ணாமலை சொன்னதும்

“அட என்னங்க நீங்க... எனக்கு மட்டும் அவமேல அக்கரை இல்லையா... அவ எனக்கு பொண்ணு மாதிரிங்க,... ஆனா குழந்தைக்கு கசக்குமேன்னு மருந்து கொடுக்காம இருக்க முடியுமா,.... அதுபோலதான் இதுவும்,... இவ்வளவு நாளா தனியா இருந்து நம்மலத் தவிர வேற எந்த ஆதரவும் இல்லாம கஷ்டப்பட அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரவேண்டியது நம்மலோட கடமைங்க,... அதுக்காக அவ கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்ணீர் விடட்டும் பரவாயில்லை,... ஆனா அதுக்கப்புறம் அந்த பெரிய வீட்டில் மகாராணியைப் போல வாழும்போது எல்லாம் சரியாயிடும்,... நீங்க எதுக்கும் கவலைபடாதீங்க அவ வந்ததும் அவகிட்ட நான் பேசறேன்” என்று ராணி சொன்னதும்தான் அண்ணாமலைக்கு நிம்மதியாக மூச்சே வந்தது

அகத்தியர் அருவியின் கீழே ஓடும் ஓடையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த மான்சி துணிகளை அலசிப் பிழிந்து பாறைகளின் மேல் காயவைத்துவிட்டு.... பக்கத்தில் அவளுக்கு உதவிக் கொண்டிருந்த அண்ணாமலையின் இளையமகன் சந்துருவிடம்

“ சந்துரு துணியெல்லாம் காயட்டும் நாம போய் குளிச்சுட்டு வந்துரலாமடா” என கேட்க

“ வேனாம்க்கா அங்கபாரு லேடிஸ்ங்க யாருமே குளிக்கலை... வெறும் ஆம்பளைங்க மட்டும்தான் குளிக்கிறாங்கா, தண்ணி ரொம்ப வேகமா விழுகுது.... நாம துணியெல்லாம் எடுத்துகிட்டு வீட்ல போய் குளிக்கலாம்” என்று சந்துரு அருவியை பார்த்துக்கொண்டே கூறியதும்

மான்சியும் கவனித்தாள் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பெண்கள் யாருமே குளிக்கவில்லை... “ சரிவாடா நாம வீட்டுக்கே போய் குளிச்சுக்கலாம்” என்று ஏமாற்றத்துடன் மான்சி உலர்ந்த துணிகளை எடுத்து வாளியில் வைத்துக்கொண்டு முன்னே போக

அவளின் ஏமாற்றமான முகத்தை பார்த்த சந்துரு “ வாளியை குடுக்கா நான் எடுத்துட்டு வர்றேன்” என்று வாளியை அவளிடமிருந்து வலுகட்டாயமாக வாங்கிக்கொண்டு அவளுடன் நடந்தவன்

“நேத்து இங்க மழை பேஞ்சதுல்ல அதான் தண்ணி அதிகமா கொட்டுது.... நாளைக்கு கம்மியாயிரும் அப்ப வந்து குளிக்கலாம் அக்கா நீ கவலை படாதே ” என்று ஏதோ மான்சியின் பெரிய துக்கத்துக்கு ஆறுதல் சொல்பவன் போல சந்துரு சொன்னதும்....

மான்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது.... அவன் தலையில் கைவைத்து முடிகளை கலைத்துவிட்டு “ நான் எதுக்குடா கவலைப்படனும்... நாம என்ன இங்கே புதுசாவா குளிக்கப் போறோம்.... இன்னிக்கு இல்லேன்னா இன்னெரு நாளைக்கு குளிச்சா போச்சு” என்று சிரித்தபடி அவனுடன் நடந்தாள் மான்சி.... அவள் மனம் அமைதியாக சிந்தித்தது

மான்சியின் மனதில் மாமாவின் குடும்பத்தின் மேல் அளவுகடந்த பாசம், பற்றுதல் உண்டாகியிருந்தது,... இவர்களே இல்லையென்றால் வாழ்க்கையில் விரக்தியில் செத்து இருப்பேன்....

மாமாவுக்கும் மாமிக்கும் தான் என் மேல் எவ்வளவு பாசம்.... வீட்டின் எவ்வளவோ கஷ்டத்திலும் இருந்தாலும் நேற்று தனக்கு பிறந்தநாள் என்றதும் ஒருஜோடி தங்கவளையலும் அழகான விலையுயர்ந்த புடவையும் வாங்கி பரிசளித்த மாமியையும்..... கேக் சாக்கலேட் என்று வாங்கி எல்லோருக்கும் கொடுத்து அமர்க்களப்படுத்திய அவர்கள் பிள்ளைகளையும் நினைத்து அவள் மனம் கசிந்தது...

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அவ்வளவாக ஒட்டுதல் இல்லாமல் இருந்த மாமி இப்போது தன்மீது உன்மையான பாசத்துடன் பழகுவது மான்சிக்கு இறந்துபோன தன் தாயே மறுரூபத்தில் வந்தது போல இருந்தது....


" அன்பே என்னை மறப்பதற்காவது ....

" என் நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்.!

" தோல்விதான் வெற்றிக்கு முதல்படி....

" காதலுக்கு பொருந்தாது இந்த பழமொழி..!


அவள் சித்தியை பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வரும்போது பார்த்தது... இப்போது அவளுக்கும் இரண்டு பெண் ஒரு ஆண் என மூண்று பிள்ளைகள் பிறந்து விட்டதால் இவளின் அப்பாவின் பாசம் சுத்தமாக வற்றிப்போய்விட்டது

தன்னை பெற்றத் தகப்பனே எப்போதாவது வருடத்துக்கு ஒருமுறை வந்து கடமைக்காக பார்த்துவிட்டு போகும் போது.... அண்ணாமலை வாரம் ஒருமுறை வந்து அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக்கொடுத்து கனிவும் அன்புமாக தன்னை கவனத்துடன் பார்த்துக்கொண்ட விதம் மான்சிக்கு கண்களில் நீரை வரவழைத்தது

மாமா மாமிதான் இப்படியென்றால்... அவர்கள் பிள்ளைகள் அதற்க்கு மேலே பாசத்தை தங்களது ஒவ்வெரு செயலிலும் காட்டினார்கள்..... பெரியவன் சந்தீப் கிரிக்கெட் விளையாட அதுஇதுன்னு வெளியே அதிகமாக சுற்றினாலும் வீட்டுக்கு வரும்போது தன்னுடைய சேமிப்பில் இருந்து மான்சிக்கு பிடித்தமான பொருளை வாங்கிக்கொடுத்து தனது பாசத்தை காட்டுவான்......

சின்னவன் சந்துரு அவனுக்கு ஒருபடி மேலபோய்... நேற்று பிறந்தநாளின் போது அவன் சேர்த்துவைத்திருந்த பணத்தில் ஒரு மெல்லிய வெள்ளிக்கொலுசை வாங்கி மான்சிக்கு பரிசளித்தான்... இவள் வந்ததிலிருந்து அவளைவிட்டு பிரியாமல் அக்கா அக்கா வால்போல கூடவே சுற்றுவான் சந்துரு.... அவனுக்கு தன்னுடைய தேவதை போன்ற அக்காவை தெருவில் உள்ளவர்கள் நன்பர்கள் என அனைவரின் முன்பும் கைகோர்த்து அழைத்துப்போவது என்றால் ரொம்ப சந்தோஷம்....

மான்சியோ இவர்களின் அன்புக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று நினைத்து சுயபச்சாதாபத்துடன் கலங்கினாள்
இவள் அமைதியாக வருவதை பார்த்து சந்துரு மான்சி கைகளை பற்றி “ என்னக்கா உம்முன்னு வர்றே.... ரொம்ப தூரம் நடந்தது கால் வலிக்குதா.... வேனும்னா கொஞ்சநேரம் எங்கயாவது உட்கார்ந்துட்டு போவமா ” என்று பரிவுடன் கேட்க

“ம் அதெல்லாம் ஒன்னுமில்ல சந்துரு அடுத்து என்ன படிக்கலாம்னு யோசனை பண்ணிகிட்டே வந்தேன்” என்று சமாளித்துவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் மான்சி

தொலைவிலேயே மான்சி வருவதை கவனித்த ராணி.... அண்ணாமலையிடம் ஜாடையில் எதுவும் பேசவேண்டாம் என்றாள்

வீட்டுக்குள்ளே வந்த மான்சி பின்புறம் துணிகளை மறுபடியும் காயவைத்துவிட்டு... பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தாள்

வந்ததும் அவளுக்கு சாப்பாடு வைத்த ராணி “ என்ன மான்சி அருவியில குளிக்கலையா” என்று கேட்க

சாப்பாட்டை பிசைந்து வாயில் வைத்துக்கொண்டே “ இல்ல மாமி தண்ணி ரொம்ப அதிகமா கொட்டுதுன்னு லேடிஸ் யாரும் குளிக்கலை... ஆமா எங்க மாமி சந்துருவை கானோம் என்னோடதான வந்தான்” என மான்சி விசாரிக்க

“ நீ குளிக்கும் போதே சாப்டுட்டு அவசரமா எங்கயோ போயிருக்கான்” என்று ராணி சுரத்தே இல்லாமல் பதில் சொல்ல

அப்போதுதான் மான்சி அவளை கவனித்தாள்... சாப்பாட்டை தட்டில் போட்டுவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டு ஊர் கதையெல்லாம் மான்சியிடம் பேசும் ராணி முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சோகமாக இருக்க...

ராணியின் முகவாட்டம் மான்சிக்கு மனதில் சுருக்கென்றது....ஏதாவது பிரச்சனையா... எப்பவும் வார்த்தைக்கு ஒருமுறை மான்சி மான்சி என்று கூப்பிடும் மாமா வேற அமைதியா தரையில படுத்திருக்கார்... என்னன்னு தெரியலையே என்று குழம்பியவள்... அவசரமாக சாப்பிட்டு கைகழுவிவிட்டு வந்தாள்

வந்தவள் ராணியின் தோளில் கைப்போட்டு தனது தாடையை அவள் தோள் வளைவில் வைத்துக்கொண்டு “ என்ன மாமி டல்லா இருக்கீங்க மாமாவும் என்னவோ மாதிரி இருக்கார் என்ன விஷயம் மாமி சொல்லுங்க” என்று தன்மையாக கேட்க

தனது தோளில் இருந்த மான்சியின் தாடையை விலக்கிவிட்டு கையை பிடித்து தன்பக்கமாக திருப்பிய ராணி “ அது ஒன்னுமில்ல மான்சி விடு... எங்க பிரச்சனை எங்களோடவே போகட்டும்... உனக்கு அது வேனாம்” என சலிப்புடன் கூறியதும்

“என்ன மாமி இப்படி பிரிச்சு பேசுறீங்க... என்னை உங்க மக மாதிரின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவீங்களே உங்க மகளாய் இருந்தா இப்படி பேசுவீங்களா” என கண்கலங்கி மான்சி சொல்ல




மான்சியின் கண்ணீர் ராணியின் மனதை பிசைய.... “ அது ஒன்னுமில்ல மான்சி நேத்து நாம கோயில்ல பார்த்தோமே ஒரு பணக்காரங்க... உன் மாமாகிட்ட கூட ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாங்களே அவங்கதான் மான்சி..... மாமா நாலு வருஷத்துக்கு முன்னாடி அவங்க மில்லுலதான் நெல் வியாபாரம் பார்த்தார்.... இடையில ரொம்ப நஷ்டமாயிட்டதால மாமா யாவரத்தை விட்டுட்டார்... ஆனா அவங்ககிட்ட வாங்கின பணத்தை உன் மாமா திருப்பி குடுக்கவேயில்லை... நிறைய நஷ்டங்கிறதால எங்களால திருப்பி குடுக்க முடியலை... அவங்களும் இவ்வளவு நாளா கேட்கவேயில்லை... இப்போ என்னடான்னா...... என்று ராணி சொல்லிகொண்டு இருக்கும் போதே மான்சி அவள் பேச்சை மறித்து

“ இப்போ திருப்பி கேட்கிறாங்களாக்கும்.... அதுக்கென்ன மாமி திருப்பி குடுத்துட்டா போச்சு... என்னோட நகை, அப்புறமா என் பேர்ல இருக்கிற அம்மாவோட பணம் எல்லாத்தையும் ரெடி பண்ணி குடுத்திடலாம் மாமி” என்று உற்ச்சாகமாக கூற

அவளுடைய பேச்சு ராணியையும் கலங்க வைத்தது “ மான்சி அதுஒன்னும் கொஞ்சமானப் பணம் இல்லை நாலு வருஷத்துக்கு வட்டியோட சேர்த்து கிட்டத்தட்ட ஆறு ஏழு லட்சம் கண்க்கு வரும்.... நீ சொல்ற மொத்தத்தையும் ரெடி பண்ணா ரெண்டு லட்சம்தான் தேறும்... மீதி பணத்துக்கு இந்த வீட்டைத்தான் விக்கனும்... சரி அப்படியே வித்து குடுத்துட்டாலும் அதுக்கப்புறம் சந்தீப்புக்கும் சந்துருவுக்கும் படிக்கவைக்க நாங்க என்ன செய்றது... உன்னை மேல படிக்க வைக்கனும் கல்யாணம் பண்ணிக் குடுக்கனும்.. இதுக்கெல்லாம் நாங்க என்ன பண்றது மான்சி... வேற எந்த வருமாணம் எங்களுக்கு இருக்கும்மா மான்சி” என்று கலங்கிய குரலில் ராணி கூறியதும்


மான்சிக்கு அப்போதுதான் அவர்களின் நிலைமையின் தீவிரம் புரிய “ அப்புறம் என்னதான் செய்றது மாமி.... அவங்ககிட்ட வேனும்னா பேசிப்பார்க்கலாமா மாமி” என கலவரக் குரலில் கேட்க

ராணி அவள் முகத்தை பார்த்துக்கொண்டே “ இப்போ அவங்களும் உடனடியா பணம் வேனும்னு கேட்கலை... இன்னும் சொல்லப்போனா பணமே வேனாம்னு சொல்றாங்க.... ஆனா அதைவிட வேற ஒன்னு கேட்டாங்க” என்று தயங்கி நிறுத்த

“ வேற என்ன மாமி கேட்டாங்க சொல்லுங்க... நம்மளால முடிஞ்சா குடுத்துடலாம்” என்றாள் மான்சி அவசரமாக

“ ம் அவங்க உன்னை அவங்களோட மகனுக்கு பொண்ணு கேட்கிறாங்க... உன்னை கோயில்ல பார்த்துட்டு அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சாம்... இப்பதான் போன் பண்ணி விஷயத்தை சொல்லி உன்னை அவங்க மகனுக்கு கேட்டாங்க....

அதுக்கு உன் மாமாவும்... அதுக்கென்ன என் தங்கச்சி மக என் வார்த்தையை மீறமாட்டா.... எனக்கு சம்மதம் அவ வந்ததும் ஒரு வார்த்தை சொல்லிட்டு.... நீங்க என்னிக்கு பொண்ணு பார்க்க வரனும்னு நான் தகவல் சொல்றேன்னு சொல்லிட்டார்....அப்போ போன்ல தைரியமா சம்மதம் சொல்லிட்டாரு

ஆனா இப்போ நீ என்ன சொல்லுவியோனெனு கலங்கிபோய் படுத்துருக்காரு... என்ன மான்சி உனக்கு சம்மதம்தான.... எங்க கடனுக்காக உன்னை பலிகடா ஆக்குறோம்னு நெனைக்காத...

உனக்கு சம்மதமில்லன்னாலும் ஒன்னும் பிரச்சனையில்லை இந்த வீட்டை வித்து அவங்களுக்கு பணத்தை செட்டில் பண்ணிடுவோம்.... ஆம்பளபசங்க தான எப்படியாவது பொழச்சுக்குவாங்க... நீ எங்களுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம் மான்சி” என்று ராணி மூச்சுவிடாமல், சரியான ஏற்ற இறக்கங்களுடன், தெளிவான குரலில் சொல்ல.... அவள் பேசியதை கேட்டாள் கல்கூட கரைஞ்சு போய்விடும் போல இருந்தது


ஆனால் மான்சி தன் காதுகளில் இடிபோல விழுந்த செய்தியால்... கரைந்து போகாமல் கல்போல்.... அதிர்ந்து போய் அசையாமல் அப்படியே நின்றாள்
மான்சிக்கு தன் காதுகளில் விழுந்த எதையுமே நம்பமுடியவில்லை.... எதுவுமே பேசாமல் பின்புறத்தில் இருந்த துணிதுவைக்கும் கல்லில் போய் அமர்ந்தாள்

ராணி அவளை தடுக்கவில்லை .... தனியாக சிந்தித்து தானாகவே அவள் ஒருமுடிவுக்கு வரட்டும்... அதுவரைக்கும் நாம ஒதுங்கி இருப்பதுதான் நல்லது .... என்று நினைத்து அமைதியாக வெளித் தின்னையில் போய் உட்கார்ந்துகொண்டாள்

மான்சி தனது குழம்பிய மனதை வெகுசிரமப்பட்டு ஒரு நிலைக்கு கொண்டுவந்தாள் ....

மாமி என்ன சொல்றாங்க....? நம்ம அந்த பணக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டா இவங்க பிரச்சனையெல்லாம் தீர்ந்துடுமா....?

அதெப்படி முடியும் நான் இன்னும் படிக்கனும்.... பெரிய வேலைக்கு போய் சந்தீப்பையும் சந்துருவையும் படிக்க வச்சு பெரிய ஆளாக ஆக்கனும்....

அதையெல்லாம் விட பெரிய விஷயம் பணத்துக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம் .....? கடன்பாக்கிக்காக கல்யாணம் பண்றது சரியா வருமா....?

இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா இந்த குடும்பத்தோட நிலைமை என்னாகும் .... சந்தீப் சந்துரு இவங்களோட வாழ்க்கை என்னாகும்.....

எதைஎதையோ போட்டு மனதை குழப்பிக்கொண்டு இருந்த மான்சிக்கு தன் மாமா குடும்பத்தின் நிலைமைதான் கண்ணெதிரில் வந்து பயமுறுத்தியதே தவிர .....

ரகுவை பற்றிய நினைப்பு ரொம்ப தாமதமாகத்தான் வந்தது.... அவன் ஞாபகம் வந்ததும்.... நான் வரும்வரைக்கும் காத்திரு என்று சொன்ன அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றுதான் யோசித்தாளே தவிர.....

தன்னுடைய காதலை எப்படி இவர்களுக்காக பலிகொடுப்பது என்பதைப் பற்றிய யோசனையே வரவில்லை.... அந்தளவுக்கு தன் மாமா குடும்பத்தின் மீதான பாசம் அவள் கண்களை மறைத்து அவள் காதலை புறம் தள்ளியது ....

இதை எண்ணி அவளின் இன்னெரு மனம் வாடியது.... இவ்வளவு அன்பு வைத்த ரகுவை துறந்துவிட்டு.... உன் மாமாவின் குடும்பத்துக்காக தியாகம் செய்வது சரியா என கேள்விகேட்டது....அப்படியானால் உன்னுடைய காதல் பொய்யானதா... உள்ளத்தில் ஒருத்தனையும் ., படுக்கையில் இன்னெருத்தனையும் வைத்து கொண்டு பகல்வேசம் போடும் ஒருசில பெண்களைப் போலத்தான் நீயுமா என்று மனம் சாடியது

ஆனால் மான்சியின் குழம்பிய மற்றொரு மனம் அதற்க்கும் ஒரு காரணம் சொன்னது.... ரகுவின் படிப்புக்கும், அழகுக்கும் ,அறிவுக்கும், நல்ல உத்யோகத்துக்கும் என்னை விட நல்ல பெண் கிடைப்பாள்.... ஆனால் என் மாமாவின் குடும்பத்துக்கு என்று என்னைவிட்டால் யார் இருக்காங்க....

என் காதலைவிட சந்தீப் சந்துரு இவர்களின் படிப்பு , அவர்களின் பிற்கால வாழ்க்கை இவையெல்லாம் ரொம்ப முக்கியமல்லவா.... என் காதலைச்சொல்லி இவர்களின் எதிர்காலத்தை என்னால் நிச்சயமாக அழிக்க முடியாது

இவ்வளவு நாளா என்னை பாதுகாத்து. வளர்த்து. படிக்கவச்ச என் மாமாவுக்கு என் உயிரையும் தருவேன் எனும்போது .... இரண்டு வருடத்திற்கு முன் வந்த காதலை ஏன் தியாகம் செய்யக்கூடாது

குடும்பத்துக்காக எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை தியாகம் செய்துவிட்டு.... பெற்றோர்கள் பார்த்துவைக்கும் முன்பின் பார்த்தறியாத... முகம் தெரியாத ஒருவனை மணந்து சந்தோஷமாக வாழவில்லையா .... அவர்களெல்லாம் வாழ்க்கையில் தோற்று தற்கொலையா செய்துகொண்டார்கள் ....

ஏன் நானும் அதுபோல் வாழக்கூடாது.... நான் மட்டும் காதலையே சுவாசித்து காதலையே நினைத்து வாழ்ந்து இந்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குலைக்க வேண்டுமா.... இது பெரிய நம்பிக்கை துரோகமில்லையா.... இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தின் மேல் ஏறி நின்றுதான் என் காதல் கொடியை ஏற்றவேண்டுமா... இது நியாயமா....

என்று பலவாறு யோசித்த மான்சி இறுதியாக தன் திடமற்ற, பலமற்ற காதலை அந்த கிணற்றடியில் புதைத்துவிட்டு ... எழுந்து வீட்டுக்குள் போனாள்



" காதலைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் ...

" தோல்வியடைந்த காதலில் மட்டும்தான்...

" ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துக் கிடக்கிறது....

" விடுபட்ட காரணங்கள் கோடிக்கணக்கில்....

" கொட்டிக் கிடக்கிறது.!

" பேசாத மொழிகள் இல்லை...

" பேசாத விழிகள் இல்லை...- இருந்தும்

" சில இதயங்கள் காதலை ..

" விழுங்கி விடுகின்றன.!


வீட்டுக்குள் நுழைந்த மான்சி நேராக அண்ணாமலையிடம் போய் அவர் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அவரிடம் கொடுத்தாள்

“ மாமா அவங்க வீட்டுக்கு போன்போட்டு என்னை பொண்ணு கேட்டு நாளைக்கே வரச்சொல்லுங்க” என்று மான்சி உறுதியான குரலில் கூற

அண்ணாமலை உடனே எழுந்து அமர்ந்து அவள் முகத்தை “ மானும்மா எங்களுக்காக எதையும் முடிவெடுக்காத.... உன் மனசுக்கு எது நல்லதுன்னு படுதோ அதுமாதிரி செய்... ஏன்னா வாழப்போறது நீ... இப்போ நாங்க சொன்னோம்ன்னு அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு அப்புறமா பின்னாளில் நீ சிரமப்படக்கூடாது மானும்மா... இவ்வளவு வேகம் வேனாம்டா கொஞ்சம் நிதானமா யோசிடா கண்ணம்மா” என்று கண்கலங்க அண்ணாமலை சொன்னதும்

“மாமா என் குடும்பத்தை கஷ்டப்பட விட்டுட்டு நான் சுயநலமாக இருக்கமாட்டேன்... நீங்க எல்லாரும்தான் என்னோட வாழ்க்கை.... இப்பஎன்ன நல்ல இடத்தில் தானே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.... இதில சிரமப்பட என்ன இருக்கு மாமா.... ஆனால் எனக்கு உங்கமேல ஒரு மனவருத்தம் மாமா” என்று மான்சி நிறுத்த

“ என்னம்மா வருத்தம்” என்று பதட்டமாக அண்ணாமலை கேட்க

“ ம் என்ன வருத்தமா... நீங்க இந்த முடிவை என்னை கேட்காமலே எடுத்திருக்கலாம்.... உனக்கு கல்யாணம் இந்த தேதியில் இந்த இடத்தில் நீ வாம்மான்னு நீங்க சொல்லியிருந்தா நான் என்ன மறுக்கவா போறேன்..... ஆனா நீங்க என்கிட்ட சொல்ல சங்கடப்பட்டு இந்த மாதிரி முடங்கிப்போய் படுத்திருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா....

"அப்போ நான் உங்க மகளைப் போலன்னு சொன்னதெல்லாம் உன்மையில்லையா... என்மேல் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாதா.... இதெல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது ... என்னை இந்த குடும்பத்தில் இருந்து பிரிச்சு வச்சுட்டீங்களோன்னு பயமா இருக்கு... உங்களோட இந்த பணப் பிரச்சனையே இல்லேன்னா கூட,....நீங்க சொன்ன நான் இதுக்கு சம்மதிப்பேன் மாமா ” என மான்சி கண்களில் கண்ணீர் வழிய கூறியதும்

“அப்படியெல்லாம் பேசத பாப்பா.... நீ எங்களுக்கு பிறக்களைன்னாலும் எங்க மகதான் மான்சி ” என்று அண்ணாமலை அவள் கைகளை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விட ஆரம்பிக்க....

அவர்கள் அருகில் வந்து நின்ற ராணிக்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது... நெல்லையப்பா இந்த நல்ல பொண்ணுக்கு நாங்க அமைச்சு தர்ற இந்த வாழ்க்கை நல்லபடியா இருக்கனும் அதுக்கு நீதான் அருள் புரியனும் சாமி ... என்று நெல்லையப்பரை மனமுருக வேண்டினாள்...

பிறகு சுதாரித்துக்கொண்டு கண்களை துடைத்துவிட்டு “ ஐய்ய என்ன இது சந்தோஷமா இருக்க வேன்டிய நேரத்தில் மாமாவும் மருமகளும் மாத்தி மாத்தி கண்ணீர் விட்டுகிட்டு இருக்கீங்க...ம் எழுந்திரிங்க ரெண்டுபேரும்.... மான்சி நீபோய் முகம் கழுவிட்டு மாமாவுக்கு சாப்பாடு எடுத்துவை” என்றதும்

“என்ன மாமி மாமா இன்னுமா சாப்பிடலை ரொம்ப நேரமாகுதே.... மாமா வாங்க சாப்பிட.... அவங்களுக்கு சாப்ட்டுட்டு அப்புறமா போன் பண்ணலாம் ” என்று அண்ணாமலையின் முதுகில் கைவைத்து மான்சி தள்ளிக்கொண்டு போனாள்
அவர்கள் பின்னாலேயே வந்த ராணி “ அவரு எங்க சாப்ட்டாரு.. அந்த போன் வந்ததில் இருந்து நீ என்ன சொல்லுவியோன்னு குழப்பத்துலயே அப்படியே சுருண்டு படுத்துக்கிட்டாரு” என்றதும்

“அய்யோ உங்களை மீறி நான் என்ன மாமா சொல்லப்போறேன்... இந்த கல்யாணத்தில் எனக்கு பூரண சம்மதம் போதுமா மாமா” என்று மான்சி கூறியதும்




“ ம் இதுபோதும்மா இனி எல்லா ஏற்ப்பாட்டையும் தைரியமா செய்வேன்” என்று முகத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓட அண்ணாமலை கூறினார்

அதன்பிறகு அண்ணாமலை சாப்பிட்டு முடித்துவிட்டு காலண்டரில் நல்ல நேரம் பார்த்து.... சுந்தரம் வீட்டுக்கு போன் செய்து இவர்களின் சம்மதத்தை சொல்ல

உடனே குரலில் சந்தோஷம் துள்ள “ நாங்க நாளைக்கே உங்க வீட்டுக்கு வர்றோம் அண்ணாமலை.... பெரிசா எதையும் செய்யாதீங்க... சும்மா சம்பிரதாயத்துக்கு வந்து பொண்ணப் பார்த்துட்டு போறோம்.... மத்ததையெல்லாம் பிறகு பேசிக்கலாம்... ஆனா கல்யாணத்தை ரொம்ப சீக்கிரமா வைச்சுக்கனும் அண்ணாமலை ... உங்களுக்கு சம்மதம் தானே” எனறு சுந்தரம் கேட்க

“ நீங்க எப்படி செய்ஞசாலும் எங்களுக்கு சம்மதம்ங்க” என அண்ணாமலை கூறியதும்

“அப்ப நாளைக்கு வர்றோம் அண்ணாமலை வச்சிர்றேன்” என்ற சுந்தரம் இனைப்பை துண்டித்தார்

அண்ணாமலைக்கு தன் தங்கை மகள் இவ்வளவு பெரிய இடத்தில் ஒரு இளவரசியைப் போல வாழப்போகிறாளே என்ற சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை

ஆனால் அவள் எப்படி வாழப்போகிறாள் என்பதை முடிவு செய்வது விதிதானே



" உனக்கு நான் எனக்கு நீ என்று .....

" யார்வேண்டுமானாலும் காதலை....

" முடிவு செய்யலாம்....

" யார் யாருடன் வாழவேண்டும் .....

" என்பதை விதி மட்டுமே முடிவு செய்யும்!

"இதில் யாராவது மாற்றம் செய்ய முடியுமா .....?



No comments:

Post a Comment