Saturday, February 21, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 8


“என்னால இதையெல்லாம் மறந்து உங்களை ஏத்துக்க முடியும்ன்னு தோணலை .... அப்படியே தோண்றினாலும் நிச்சயமா ஏத்து மாட்டேன்னுதான் நெனைக்கிறேன்” “நீங்க சொன்ன காரணத்தை என்னால ஒத்துக்க முடியலை சத்யா அதெப்படி கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பிரிஞ்ச மனைவியை இன்னிக்கு காலையில தான் உங்களுக்கு நினைவு வந்ததா” “ இதை நான் நம்பனும்ன்னு நீங்க நெனைக்கறது எவ்வளவு பெரிய அறிவீனம்” “இதுபோல இன்னெரு முறை நடந்தா சத்தியமா நான் என் உயிரை விட்டுருவேன்....


“அப்படின்னா இப்போ ஏன் உயிரோட இருக்கேன்னு நெனைக்காதீங்க... என்னால இப்போ உயிரை விட முடியாது..ஏன்னா நான் செத்தா என் அண்ணன் வேலு உங்களை சும்மா விடமாட்டான்”.... “இப்பவும் நான் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கனும்னு நெனைக்கிறேன்ல்ல.... நான் ரொம்ப முட்டாள் சத்யன்” “உங்களுக்கு ஒன்னு தெரியுமா இனிமேல் உங்களை மாமான்னு கூப்பிடனும்னு நேத்து நைட்டுதான் ஆசையா நெனைச்சேன்”... “ ஏழு வருஷத்துக்கு முன்னால நீங்க என்னை வேண்டாம்ன்னு சொன்னப்பக் கூட எனக்கு இவ்வளவு வலிக்கலை சத்யன்..ஆனா இப்போவும் கூட வலி தெரியலை ஏன்னா மனசு அந்தளவுக்கு மறத்து போச்சு”

 “ஆனா இப்போ உங்களை சத்யான்னு கூப்பிடுற தகுதிகூட எனக்கு இல்லை...எனக்கு உங்கமேல என்ன உரிமை இருக்கு” “நான் ரெண்டாவது மனைவியா இருக்கறதுக்காக வருத்தப்படலை.... ஆனா அந்த ரெண்டு மனைவிக்கு உண்டான உரிமைகளை நான் யார்கிட்டயும் பிச்சையா வாங்க முடியாது” “இதையெல்லாம் நான் நேத்தே யோசிச்சுப் பார்த்திருக்கனும்.... ஆனா கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு சொல்வாங்களே அது போல ஆயிருச்சு என் நிலைமை”.... “சத்யன் இதுக்கும் மேல நாம ரெண்டு பேரும் சேரனும்னு என்ன கட்டாயம்.... இதுக்கு முன்னாடி நீங்க யாரோ நான் யாரோன்னு இருந்தோமே அதே போல இனிமேலும் இருக்கலாம்”

 “என் மனசு ரொம்ப ரணமாயிருச்சு இனி அந்த ரணத்தை எந்த மருந்தாலேயும் ஆத்த முடியாது” "இது எல்லாத்துக்கும் ஒரே முடிவு நாம ரெண்டு பேரும் விலகிவிடுவது தான் நல்லது... நாம என்ன இவ்வளவு நாள் சேர்ந்தா வாழ்ந்தோம்... ஐயோன்னு மனம் வேதனை பட.... நேத்து சந்திச்சோம் இன்னிக்கு விலகறோம் அவ்வளவுதான் ”

 “தயவுசெய்து இதுக்கும் மேல என்னை வற்புறுத்தினால் அது என்னை தற்க்கொலைக்கு தூண்டுவதற்கு சமம்.. அதனால என்னை விட்டுருங்க சத்யன் நான் கிளம்பறேன்....எனற மான்சி வேகமாக தனது பெட்டியை எடுக்க போக சத்யன் அவள் பின்னாலேயே ஓடி அவள் எதிரில் நின்று “அப்போ உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா.... எனக்காக இன்னும் ஒரே ஒரு முறை நல்லா யோசிச்சு பாரு மான்சி” கண்கலங்க சத்யன் கெஞ்சினான்... “ம்ஹூம் என்னை இப்போ விடுங்க... நான் அப்படி மறுபடியும் யோசிக்கனும்னா என் வீட்டில் போய் யோசிக்கிறேன்.... இங்கே இருக்கிற ஒவ்வெரு நிமிஷமும் எனக்கு நெருப்பு மேல நிக்கிற மாதிரி உடம்பெல்லாம் எரியுது அதனால என்னை விடுங்க நான் போறேன”...என்று மான்சி அவனை பார்த்து கண்கலங்க கையெடுத்து கும்பிட்டு வேண்ட

 சத்யன் அதற்க்கு மேல் எதுவும் இதை பற்றி பேசாமல் “சரி மான்சி நீ கிளம்பு நான் இதுக்கு மேல உன்னை வற்புறுத்த மாட்டேன்... ஆனா இனிமேல் இங்கே உன்னை நெனைச்சே ஒருத்தன் கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருப்பான்ங்கறதை நீ மறந்திடாதே... அவ்வளவு என்னால சொல்ல முடியும்....சரிவா நானே உன்னை கொண்டு போய் புதூரில் நம்ம வீட்ல விட்டுர்றேன்.”என்ற சத்யன் கைநீட்டி அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஜீப்பில் கொண்டு போய் வைத்தான் அவன் பின்னாலேயே வந்த மான்சி
“இல்ல நான் ஏதாவது பஸ்ஸில போய்க்கிறேன் .. நீங்க உங்க வீட்டுக்கு போங்க” என்று மான்சி சொன்னதும் .. வெடுக்கென்று அவளை திரும்பி பார்த்த சத்யன் கோபத்துடன் “ஏன்டி என்னை இப்படி சித்ரவதை பண்ற அந்த பஸ்ஸில வர்றது ஏன் என்கூட வரக்கூடாதா.. ஏறு ஜீப்ல”.. என்று கடுமையாக அதட்ட... மான்சி எதுவும் பேசாமல் ஏறி உட்கார்ந்து கொண்டாள்

 "நீ நீந்தி விளையாட.... "என் கண்ணீர் குளமா.... "கிடைத்தது ....? "உன் காலடிபட்ட இடத்தில்.... "சுவடுகள் விழவில்லை.... "காரணம்- நீ நடந்தது.... "மண்ணில் அல்ல... "என் மார்பில்.... ஜீப்பை ஸ்டார்ட் செய்து கிளம்பி சத்யன் அந்த மண்சாலையில் படுவேகமாக ஓட்டிக்கொண்டுப் போனான்.... அவன் ஜீப்பை ஓட்டம் வேகத்தில் அவனின் கோபம் தெரிந்தது.... ஏற்கெனவே சிவந்திருக்கும் சத்யனின் முகம் மேலும் சிவந்து காலைச் சூரியனின் உதயகிரகணம் போல் செந்நிறமாகியிருந்தது... அவனது அடர்த்தியான தலைமக்கேசம் கலைந்து காற்றில் அலைபாய்ந்து நெற்றியில் கற்றையாக விழுந்திருந்தது.... நெற்றியின் நரம்புகள் வரியோடி புடைத்திருந்தன... இரவு முழுவதும் விழித்திருந்ததால் கண்கள் இரண்டும் கொவ்வை பழம்போல் சிவந்திருக்க கண்களின் கீழே கருவளையம் விழுந்திருந்தது...

 கோபத்தின் காரணமாய் மூக்கின் நுனி அடர்த்தியான ரோஸ் நிறத்தில் விடைத்துக்கொண்டு இருந்தது.... உதடுகளை அழுத்தமாக வைத்து கீழுதட்டை பற்களால் கடித்து எதையோ அடுக்கிக்கொண்டு இருந்தான்..... கழுத்து நரம்புகள் விரைத்து புடைத்திருக்க.... நெஞ்சை நிமிர்த்தி விரைப்பாக அமர்ந்து ஜீப்பை வேகமாக செலுத்திக் கொண்டு இருந்தான்.. இந்த நிலையில் அவனை பார்த்தால்...நேற்று இரவு புது மனைவியுடன் முதலிரவை இன்பமாய் முடித்துவிட்டு... காலையில் வந்த அவசரத் தகவலால் அரக்கப்பரக்க எழுந்து அரைமனதுடன் புது மனைவியை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு போகும் கோபக்கார மருமகனை போல இருந்தான்

 அவன் கோபத்தில் ரோசம் வந்து ஜீப் அதிகமாக குலுங்க.... மான்சி தலைக்கு மேல் தொங்கிய பெல்ட்டை பிடித்துக்கொன்டாள்.....மெதுவாக ஓரக்கண்ணால் சத்யனைப் பார்த்தாள்.... நாயர் சொன்னதும் அவசரமாக கிளம்பி வந்திருப்பான் போலிருக்கிறது வெறும் சாம்பல் நிற அரைநிஜாரும் வெள்ளைநிற கையில்லா பனியனும் அணிந்திருந்தான்... மான்சிக்கு ஐயோ இதோடவா பொள்ளாச்சி வரை வரப்போகிறான் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தாள் என்ன நினைப்பார்கள்.. ம்ம் இரவு முழுவதும் தூங்கி எழுந்து அப்படியே வருகிறான் என்று நினைப்பார்கள்.... ஆமாம் இவன் பல் தேய்த்து வாயை கழுவினானா என்று அவசரமாய் எண்ணமிட்டது

மான்சியின் மனது..... அவன் பல் தேயத்தால் உனக்கென்ன தேய்க்காவிட்டால் உனக்கென்ன... என்று அவள் அறிவு எரிச்சல்பட்டது.... இல்ல நைட்டெல்லாம் இந்த வாயை வச்சுத்தானே எல்லாம் செய்தான் அதான் காலையில் எழுந்து வாயையாவது கழுவினானா என்றுதான்.... என மான்சியின் பெண்மை நிறைந்த மனது வெட்கத்துடன் சொன்னது சத்யன் உதடுகளை அழுத்தமாக வைத்துக்கொண்டு அவளிடம் எதுவும் பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்க... மான்சி காய்ந்திருந்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்துகொண்டு “ என்னை டாப்சிலிப் பஸ்ஸ்டாண்டிலேயே விட்ருங்க நான் பஸ்ல போய்க்கிறேன்”என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..

சத்யன் வேகமாக திரும்பி எதுவும் பேசாமல் தன் சிவந்து பார்வையால் அவளை முறைத்தான் ‘அய்யா பெரிய இவரு மொறைக்கிறாரு... இவரு மொறைச்சா நாங்க அப்படியே பயந்து போயி இவருக்கு பணிஞ்சு போவமாக்கும் ம்ம் நெனைப்புத்தான் என்று மான்சி மனதில் எண்ணமிட்டாலும் அவனின் பார்வைக்கு பதில் சொல்பவளாக... “அது நீங்க தூங்கி எழுந்து இந்த மாதிரி வந்துட்டீங்க இதோட எப்படி பொள்ளாச்சி வரை போறது” என்று தயங்கிபடி அவன் உடையை கைகாட்டி மான்சி சொல்ல வெகுநேரம் வாயை திறக்காத சத்யன் அவளை திரும்பி நேராகப் பார்த்து

“ ஏன் டிரஸ் போட்டுதானே இருக்கேன் நிர்வாணமா ஒன்னும் இல்லையே.... அப்படியே நிர்வாணமா இருந்தாலும் அதனால உனக்கென்ன வந்தது.... விடியவிடிய ரெண்டு பேரும் ஒட்டுதுணி கூட இல்லாம நிர்வாணமாக அணைச்சுகிட்டு தானே கிடந்தோம்....இப்ப மட்டும் பார்க்க கண்ணு கூசுதா”....என்று சத்யன் வேண்டும் என்றே விளக்கமாக எகத்தாளமாக கேட்டான். மான்சி தன் கைகளால் காதுகளை பொத்திக்கொண்டாள்.... அவளுக்கு ச்சே இவனிடம் போய் ஏன் உடையை பத்திச் சொன்னோம் என்று ஆகிவட்டது.

 “என்ன காதை பொத்திக்கிட்ட நீ காதை பொத்தினால் நேத்து நைட்டு நடந்ததெல்லாம் இல்லேன்னு ஆயிருமா... "இல்ல அப்புறமா நாம ரெண்டு பேரும் மறுபடி மறுபடியும் செய்ததெல்லாம் எதுவும் உன்மை இல்லைன்னு ஆயிருமா"…. "இல்ல இந்த மாதிரி டவுசரோட வந்தா எவனாவது கல்லால் அடிப்பான உன் அண்ணன்காரன் வேலு உள்பட"... "ஏன்னா உனக்கு ஏதாவதுன்னா அவன் என்னை காலி பண்ணிடுவான்னு நீதானே சொன்ன அதையும் இன்னிக்கு பார்த்துறேன் அவனா நானான்னு".... "யாரை யார் காலி பண்றாங்கன்னு பார்க்கலாம் அமைதியாக இருந்தா என்னை என்ன கேனையன்னு நெனைச்சிட்டானுங்களா"....

 "முன்னாடி ஒதுங்கிப் போனேன்னா அது வேற ஆனா இப்போ அப்படியில்லை ரெண்டுல ஒன்னு பார்க்காம விடமாட்டேன்".... "என்ன சொன்ன உன் வேலு அண்ணன் என்னை சும்மா விடமாட்டானா... அதையும்தான் பார்க்கலாம்".... "அக்கா புருஷனாவது மயிராவது எவனும் எனக்கு தேவையில்லை".... "உன்னை எவனுக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுக்காமா வீட்டுல வச்சுகிட்டு அவன் என்ன பண்ணப்போறானாம்"....என்று சத்யன் ஜீப்பை விட அதிகமாக ஆத்திரத்துடன் உறும அவன் முகம் நெருப்புப் பந்து போல ஜொலித்தது மான்சி கைகால்கள் தடதடவென உதற ஆரம்பித்தது...

அடப்பாவி இவன் சொல்றதை பார்த்தால் நேத்து இங்கே நடந்ததை வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி விளக்கம் கேட்ப்பான் போல இருக்கே.... அடக்கடவுளே இதுக்குத்தான் இப்போ கூடவே வர்றானனா.... இப்போ என்ன செய்றது என்று யோசித்த மான்சி .... "சத்யன் ஜீப்பை கொஞ்சம் நிறுத்துங்க" என்று அவசரமாக சற்றே உரக்க சத்தமிட்டு கத்த.... சத்யன் நச்சென்று பிரேக்கை அழுத்த.... வேகமாக ஓடிக்கொண்டு இருந்த ஜீப் பயங்கர சத்தத்துடன் நின்றது

 "அவசர பிரிவில் இருக்கும் ....
 "நோயாளியை .... "எட்டிப் பார்ப்பது போல்.... "
ஒரு முறையாவது என்னைப் பார்....
. "என் காதல் உயிர் பெறும்.

ஜீப்பை நிறுத்திய சத்யன் அவளை பார்த்து “ எதுக்கு வண்டியை நிறுத்தச்சொன்ன”...என்று கோபமாக கேட்க.... மான்சிக்கு அவன் கோபத்தை கண்டு உள்ளூர பயம் வந்தாலும் சமாளித்துக் கொண்டு அவனை நேராகப் பார்த்து..”நீங்க இப்போ என்ன சொன்னீங்க”..என்று நடுக்கத்துடன் கேட்டாள் “ம் ஏன் உன் காதிலே விழவில்லையா.... உன்கூட பொள்ளாச்சிக்கு வர்றேன்னு சொன்னேன்... அங்கே வந்து எவன் என்னை என்ன கேள்வி கேக்குறான்னு பார்க்கறேன்னு சொன்னேன் இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்க்காம விடப்போறதில்லன்னு சொன்னேன்”...என்று சத்யன் சொல்லி முடிக்கும் முன மான்சி அவன் கைகளை அவசரமாக பற்றிக்கொண்டாள்...

 “ ஐயோ சத்யன் வீட்ல போய் இங்கே நடந்ததை சொல்லி பிரச்சனை பண்ணாதீங்க அப்புறமா எல்லாரும் என்ன நினைப்பாங்க.... நான் யார் முகத்திலேயும் முழிக்க முடியாது.... சத்யன் நீங்க யார்கிட்டயும் இதை பத்தி சொல்லாதீங்க.... அதோட என் மானமே போயிடும்.... நீங்க பொள்ளாச்சிக்கு வரவேண்டாம் இப்படியே திரும்பி போயிருங்க... என்று மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டு கெஞ்ச “ம்ம அதுமட்டும் நடக்காது மான்சி உன் அண்ணன் என்னை சும்மா விடமாட்டான்னு சொன்னேல....இப்போ போய் அவன்கிட்டேயே கேட்கிறேன் டேய் வேலு மச்சான் நானும் உன் தங்கச்சியும் நேத்து நைட்டெல்லாம் ஐஞ்சு வாட்டி *** டா இப்போ என்னை என்னடா பண்ணப்போறன்னு....ம் சொல்லு மான்சி நான் சொல்றது கரெக்டா தானே”... என்று சத்யன் வக்கிரமாக சிரித்துக்கொண்டே மான்சியிடம் கேட்க... மான்சிக்கு எல்லாமே புரிந்து போனது.....

 நான் கிடைக்கவில்லை ஊருக்கு போகிறேன் என்றதும்.... இவன் இப்படியெரு ஆயுதத்தை பயன்படுத்துகிறானா.... இவனிடம் நமது கோபம் செல்லுபடியாகாது என்று மனதில் நினைத்தவள் “ இதோ பாருங்க சத்யன் நான் உன்மையிலேயே உங்களை உயிரா நேசிச்சு தான் உங்ககூட சந்தோஷமா இருந்தேன் .... ஆனா நீங்க அதை எல்லார்கிட்டயும் சொன்னா அது நமக்குள்ள நடந்த உறவையே கொச்சை படுத்தற மாதிரி இருக்கும்.... அதனால நம்ம பிரச்சனையை நாமலே பேசி தீர்த்துக்கலாம் வேற யாரும் இதிலே தலையிட வேண்டாம்... என்ன சொல்றீங்க”... என சத்யனைப் பார்த்து கேட்க சத்யனுக்கு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு ‘அப்படி வாடி வழிக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டு

 “ நம்ம பிரச்சனையை எப்படி பேசி தீர்த்துக்கலாம்ன்னு சொல்ற .... நீதானே நம்ம ரெண்டு பேருக்கும் இனிமேல் ஒத்துவராதுன்னு சொன்ன... அதான் வீட்டுக்கு போய் வீட்ல இருக்கிற பெரியவங்ககிட்ட நடந்ததை சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வருமா வராதான்னு கேட்கலாம்ன்னு பார்த்தேன்.... இப்போ பார்த்தா நீ இப்படி சொல்ற... சரி உன் யோசனையைச் சொல்லு சரியா வருதான்னு பார்க்கலாம்”... என்று என்னவோ இவளுக்காக பெரிதாக எதையோ விட்டு்க் கொடுப்பவனை போல சத்யன் நக்கலாக பேச... மான்சிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது....

இருந்தாலும் தற்போதைய சூல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து தனது கோபத்தை தனித்து கொண்டு....”சத்யன் நான் சொல்றதை கேளுங்க நீங்க இன்னிக்கு காலையில அதுமாதிரி உங்க மனைவியோட பெயரை சொன்னது தப்புதானே.......... என்று அவள் சொல்லிகொண்டு இருக்கும் போதே சத்யன் அவளை கையசைத்து தடுத்து “அவ இப்போ என்னோட மனைவி இல்லை அது முடிஞ்சுபோன கதை அதை மறுபடியும் கிளறாதே.... இப்போதைக்கு என் பொண்டாட்டி நீதான்.... இதை நீ ஒத்துக்கலைன்னாலும் உன்மை இதுதான் இதை யாராலுமே மாத்த முடியாது”.... என்று தன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு அலட்சியமாக சொல்ல........ மான்சிக்கு உள்ளே புகைந்தது

 “ அதை பத்தி பிறகு யோசிப்போம்....என்னால காலையில நடந்த எதையுமே ஏத்துக்க முடியலை.... மூளை செயலிழந்து போனாப்ல இருக்கு.... நீங்க எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கொடுக்கனும்.... அதுக்கு நாம கொஞ்ச நாள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்காம விலகியிருக்கனும்.... எனக்காக நீங்க இதுக்கு ஒத்துக்கனும்”.... என மான்சி அவனை வேண்டி கேட்க.............சத்யன் அவளை நம்பாமல் பார்த்தான்

 “இதை எப்படி மான்சி நான் நம்பறது.... இங்கேயிருந்து போனபிறகு என்னை ஏமாத்திட்டேனா நான் என்ன பண்றது சொல்லு “.... என்னமோ இருவரும் பலவருடங்களாக ஒத்துமையா வாழ்ந்து இன்னிக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சனைக்கு மான்சி ஊருக்கு போவதுபோல சத்யன் பேசியது மான்சிக்கு கடும் ஆத்திரத்தை உண்டு பண்ண.....”ஆமாம் என்னை நம்பித்தான் ஆகனும் உங்களுக்கு வேற வழியில்லை.... அப்படி நம்ப முடியலைன்னா நான் ஏழு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த முடிவைத்தான் இப்பவும் எடுக்கனும்.... எனக்கும் வேற வழியில்லை.’’....... என்று கோபமாய் பேசிய மான்சி...... தான் பிளேடால் அறுத்துக் கொண்டு தையல் போடப்பட்ட தனது கையின் மணிக்கட்டை சத்யன் முன்னால் நீட்டி கான்பிக்க......


அதை பார்த்தவுடனே சத்யனின் கோபம்.. நக்கல்.. .ஏளனம்.. அலட்சியம்..எல்லாம் காணாமல் போக... காற்று போன மாதிரி சட்டென அடங்கி “ சரி மான்சி நீ கிளம்பு நான் அங்கே வந்து யார்கிட்டயும் எதுவும் சொல்லலை..... உன்னோட இஷ்டப்படி இரு.... ஆனா என்னை புரிஞ்சுக்க முயற்ச்சிப் பண்ணு...... நான் செய்ததை மன்னிச்சு என்னை ஏத்துக்க மான்சி... அது மட்டும் எனக்கு போதும்.... சரி வா போகலாம்”.... என்று குரலில் சுரத்தே இல்லாமல் பேசிவிட்டு சத்யன் ஜீப்பில் ஏறினான்

 மான்சிக்கு அப்பாடா என்று பெருமூச்சு வர நிம்மதியாக ஜீப்பில் ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்தாள் ஆனால் சத்யனின் முகம் செத்த பிணத்தின் முகம் போல கருத்து இறுகியிருந்தது. சத்யன் அத்தோடு மவுனமாகிவிட... ஜீப் வழியில் எங்கேயும் நிற்க்கவில்லை..... பொள்ளாச்சியில் சத்யன் வீட்டில் சென்று ஜீப் நின்றதும்.... மான்சி ஜீப்பிலிருந்து இறங்காமல் சத்யனை திரும்பி பார்க்க..... அவன் என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டான் “நீங்க உள்ளே வந்து யார்கிட்டேயும் எதுவும் சொல்ல மாட்டீங்களே” என மான்சி கண்கலங்க சத்யனிடம் கேட்டாள் சத்யனுக்கு அவளை கண்கலங்க பார்த்ததும் மனசு அய்யோ என வேதனை பட்டது....

ச்சே இவளை அப்படி பேசி மிரட்டியிருக்க கூடாதோ என நினைத்தவன்....சற்று நகர்ந்து அவளுடைய கையை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டான் “மான்சி உன் மனசு வேதனை படும்படி நான் எப்பவுமே நடந்துக்க மாட்டேன்.... எனக்கு உன் சந்தோஷம் ரொம்ப முக்கியம் மான்சி... ஆனால் நீ என்னை விட்டு போய்டுவியோ என்ற பயத்தில் தான் அப்படி பேசிவிட்டேன்.... மத்தபடி நீ நினைப்பதைத்தான் எப்பவுமே செய்றதுன்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு மான்சி... அதனால என்னை பத்தி நீ பயப்பட வேண்டாம் வா போகலாம்.” என்ற சத்யன் அவள் கையை விடுவித்து விட்டு இறங்கி வீட்டுக்குள் போனான்

 அவன் பின்னே போன மான்சி வீட்டில் தன்க்கு கொடுத்திருந்த அறைக்கு போய்விட... சத்யன் யாரிடமும் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து விட... ரஞ்சனி மட்டும் இவர்கள் இருவரையும் கவனித்தாள்.... ஏன் இவங்க ரெண்டு பேரும் இப்படி உம்முன்னு இருக்காங்க என நினைத்துக்கொண்டே மான்சியின் அறைக்கு போனாள் ரஞ்சனியை பார்த்ததும் மான்சி சற்றே மிரண்டு அவசரமாக.... “என்ன அண்ணி” என்று கேட்டதும் “இரு இரு ஏன் இப்படி பதற்றமா இருக்க நான் சும்மாதான் வந்தேன்...ஆமா உனக்கு சத்யனுக்கும் ஏதாவது பிரச்சனையா அவனும் முறைச்சு கிட்டு ரூமுக்கு போறான் ... நீயும் என்னவோ இங்கே ரொம்ப பதற்றமா இருக்க என்ன விஷயம் மான்சி.”

என ரஞ்சனி கேட்டதும் மான்சி அவளுக்கு என்ன பதில் சொல்வது புரியாமல் ஒருகணம் விழித்து பிறகு சமாளித்துக்கொண்டு “ ம் அதெல்லாம் ஒன்னும் இல்லே அண்ணி எனக்கு காலையில அவசரமா ஒருதகவல் வந்தது அதனால கிளம்பிட்டேன்.... அவர் தூங்கிகிட்டு இருந்தார் அப்படியே தூக்கக்கலக்கத்தில் வந்ததால் அப்படி இருக்காரோ என்னவோ”என்று மனதை திடப்படுத்திக்கொண்டு பதில் சொன்னாள் சிறிதுநேரம் அவள் முகத்தையே உற்று பார்த்த ரஞ்சனி “அது சரி நீ ஏன் இப்படி என்னவோ நாலுநாளா சாப்பிடாம கண்முழிச்சு கஷ்டப்பட்டவ மாதிரி இருக்க என்னம்மா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா”என்று கரிசனமாக கேட்க

 “ம்ஹூம் உடம்புக்கு ஒன்னும் இல்லை அண்ணி நேத்து நானும் சத்யனும் அங்கே சுத்தி பார்க்கலாம்னு போனப்போ ஒரு யானைக் கூட்டம் எங்களை விரட்டுச்சு அதுங்க கிட்டே இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு” என்று எதைஎதையோ பேசி சமாளித்து ரஞ்சனியை வெளியே அனுப்பிய மான்சி அவசர அவசரமாக தான் சென்னை கிளம்புவதற்கு ரெடியானாள் அதற்க்குள் அழகம்மை அங்கே வந்து “என்னடி இப்போ எங்க கிளம்பற” என கேட்க “இல்லம்மா என் பிரன்ட் அர்ச்சனா அவ கம்பெனியில் எனக்கு ஜாப்க்கு ஏற்பாடு பண்ணிருக்காளாம் நான் உடனே போகனும் நீங்க வேனா இருந்து வாங்க நான் கிளம்பறேன்” என்று மான்சி தீர்மானமாகச் சொன்னாள்

 அவள் அப்படி சொன்னதும் வேறு வழியில்லாமல்” சரி மான்சி அப்ப நீ கிளம்பு நான் தாத்தாக்கூட ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்” என்று சொன்ன அழகம்மை மான்சி சென்னை கிளம்புவதற்கானா ஏற்பாடுகளை செய்தாள் மான்சி சென்னைக்கு போவதை ரஞ்சனி மூலம் கேள்விப்பட்ட வேலு அவசரமாக சத்யன் வீட்டுக்கு வந்தவன் நேராக மான்சி அறைக்கு போக அங்கே சத்யன் இருந்தான்...

ஆனால் மான்சி அங்கே இல்லை “சத்யா மான்சி எங்க போயிருக்கா”என வேலு சுவற்றை பார்த்துக்கொண்டு கேட்க “எனக்கு தெரியாது நானும் இப்போதான் வந்தேன் பாத்ரூமில் இருக்கான்னு நெனைக்கிறேன்” என்று தரையை பார்த்துக்கொண்டு பதில் சொன்னான் அப்போது பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்த மான்சி இருவரையும் பார்த்துவிட்டு திகைப்புடன் அப்படியே கதவின் மேல் சாய்ந்துவிட்டாள் "என்னம்மா அதுக்குள்ளே ஊருக்கு கிளம்பறயமே ரஞ்சனி சொன்னா என்னாச்சு மான்சி" என வேலு கேட்டதும் மான்சி திரும்பி சத்யனைப் பார்த்தாள்

 அவனோ மான்சி முகம் கழுவியதால் தண்ணீர் கழுத்தில் வழிந்து மார்பை நனைத்திருக்க அதையே உற்று பார்த்துக்கொண்டு இருக்க..... அதை பார்த்ததும் மான்சிக்கு ஆத்திரம் வர ச்சே என்ன மனுஷன் இவன் அண்ணன் எதிர்லேயே இப்படி பார்க்கிறானே என நினைத்து திரும்பிக்கொன்டு வேலுவுக்கு பதில் சொன்னாள் அவள் சொன்னதை கவனமாக கேட்ட வேலு "சரிம்மா நீ கிளம்பு நான் கூட்டிட்டு போய் ரயில்வே ஸ்டேஷனில் விடுறேன்" என்றதும் சத்யன் அவசரமாக எழுந்தான்சத்யன்

அவசரமாக எழுந்து மான்சியின் அருகில் வந்து நின்று கொண்டு “இல்ல இல்ல மான்சியை நானே ஸ்டேஷனுக்கு கூட்டிப்போறேன்.... நீங்க ஏதாவது வேலை இருந்தா அதை பாருங்க” என்று சத்யன் கூற வேலு முகம் கோபத்தில் ரத்தமென சிவக்க “ என் தங்கச்சிய கூட்டிப்போகறத விட எனக்கு வேற வேலை எதுவும் இல்லை...” என சத்யனைப் பார்த்து சொன்னவன் மான்சியிடம் திரும்பி “ ம் புறப்படு மான்சி” என்று அதிகாரமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் வேலு போனவுடன் சத்யன் மான்சியை பார்த்து “ என்ன உன் அண்ணன் என் தங்கச்சி என் தங்கச்சின்னு உருகுறான்... பாவம் அவன் தங்கச்சி நேத்து நைட்ல இருந்து என் பொண்டாட்டி ஆயிட்டான்னு அவனுக்கு தெரியாதில்ல... நான் வேனும்னா போய் அதை விளக்கமா சொல்லிட்டு வரவா மான்சி’” என்று சத்யன் ஏளனமாக கேட்க .....

மான்சி தலையில் கைவைத்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். சத்யன் அவள் தோளைப் பற்றி எழுப்பி தன் எதிரில் நிறுத்தி அவளின் கலங்கிய கண்களை பார்த்துக்கொண்டே “ பயப்படாத மான்சி நான் எதுவும் சொல்லலை..... ஆனா நீ போய் உன் அண்ணங்கிட்ட நீ என்கூட ஸ்டேஷன் வர்றதா சொல்லனும்.... அதுவும் இப்பவே சொல்லிட்டு அவன வரவேண்டாம்ன்னு சொல்லு போ”... என்று அவள் தோளில் கைவைத்து வெளியே தள்ளிக்கொண்டு போனான்

 மான்சி அறைக்கதவை நெருங்கியதும் சத்யனின் கையை தட்டிவிட்டு “ நான் போய் அண்ணனிடம் சொல்றேன் நீங்க வெளியே போங்க” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு அண்ணனைத் தேடி போனாள் சத்யன் அவள் போவதையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு தனது அறைக்கு போனான்.... சத்யன் அறைக்கு போய் கொஞ்ச நேரத்தில் மான்சி அவன் அறைக்கு வந்தாள்.... சத்யன் திரும்பி ஆச்சரியமாக அவளை பார்த்து “ என்ன மான்சி என் ரூமுக்கு வந்திருக்க உன் அண்ணனிடம் பேசிட்டியா’ என கேட்டான்

 “ ம் எப்படியோ பேசி சமாளிச்சு அவரை வீட்டுக்கு அனுப்பிட்டேன்.... ஆனா அவர் புரியாம என்னை சந்தேகப்படுற மாதிரி பார்த்துட்டு போறார்.... ஏன் நீங்க இப்படி என்னை மிரட்டிகிட்டே இருக்கீங்க சத்யா.... எனக்கு நீங்க பண்றது சுத்தமா பிடிக்கலை யார் கூட்டிப் போனா என்ன ஏன் இப்படி நடந்துக்கிறீங்க’’என மான்சி கண்ணீருடன் தலைகவிழ்ந்து சொல்ல சத்யன் மான்சியின் முகத்தை தன் விரல்களால் நிமிர்த்தி அவள் நெற்றியில் தனது உதடுகளை பதித்து “ வேனாம் மான்சி அழாதே நான் ஒன்னும் உன்னை மிரட்டலை.... இன்னும் கொஞ்ச நேரம் உன்கூட உன்னை பார்த்துகிட்டு இருக்கனும்னு நெனச்சேன்...

அதுக்காகத்தான் அப்படி சொன்னேன் இது தப்பா மான்சி... உன்னை நானே ரயில்வே ஸ்டேஷன் கொண்டு போய் விடுறேன் மறுக்காதே மான்சி ப்ளீஸ்” என்று சத்யன் கெஞ்சலாக கேட்டான் அவன் கைகளில் தான் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து கொண்டு இருப்பதை உணர்ந்த மான்சி அவன் கைகளை விலக்கிவிட்டு சற்று தள்ளி நின்று “ நீங்க உன்மையிலேயே என்மேல் அன்பு வச்சுருக்கீங்கன்னா நான் சென்னைக்கு போனபின் என் மனசு மாறுகிற வரைக்கும் நீங்க காத்திருக்கனும் இதுதான் நீங்க எனக்கு செய்ற பெரிய உதவி..... என்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யமாட்டேன்னு தயவுசெய்து என் தலைமேல் கைவைத்து சொல்லுங்க’’.... என்று தீர்க்கமாக கேட்டாள்


சத்யன் அவள் முகத்தையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு பிறகு அவள் தலைமீது கைவைத்து “ மான்சி என்னால உனக்கு எந்த தொல்லையும் வராது இது உறுதி.... உன் மனது மாறுகிற வரைக்கும் நான் காத்திருப்பேன் இதுவும் உறுதி.” என்று சொன்னதும் மான்சி அவனிடமிருந்து விலகி வாசல் கதவருகே போய் நின்று “ நான் கீழே போய் ரெடியாகிறேன் நீங்க சீக்கிரமா வாங்க” என்று சொல்லிவிட்டு வேகமாய் கீழே போய்விட்டாள்

 மான்சி அனைவரிடமும் விடைபெற்று காரில் ஏற.... வேலு மட்டும் சத்யனை முறைத்துக்கொண்டு இருக்க.... மான்சியும் சத்யனும் காரில் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு கிளம்பினார்கள்

 மான்சி காரின் முன்புறத்தில் அமர்ந்திருக்க சத்யன் காரை ஓட்டியபடி மவுனமாக வந்தான்.... கார் ஆனைமலையை கடந்து பொள்ளாச்சி சாலையில் விரைந்தது....



No comments:

Post a Comment