Tuesday, February 24, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 11


"பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு.... "புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை..... "புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் ..! சத்யன் கீழே வந்ததும் சுதாகர் அவன் தோளில் கைப்போட்டு மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வந்தான் “என்ன சுதா அவசரமா வரச்சொன்ன வந்திருக்கிற மான்சிகிட்ட கூட சரியா பேசமா வந்துட்டேன் என்னடா விஷயம்” என்று சத்யன் கேட்க

 “ ம்ம் கொஞ்சம் பொறுமையா இரு சத்யா... மான்சிகிட்ட அப்புறமா கூட பேசிக்கலாம் ஆனா நான் அதை விட முக்கியமான ஒன்னை கண்டு பிடிச்சிருக்கேன்.... என்கூட வா சொல்றேன்”.... என்றவன் சத்யனை அழைத்துக்கொண்டு மான்சியின் மான்சி வந்த காரருகே போனான் காரின் டிரைவர் காருக்குள் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தான்.....



சுதாகர் கார் கதவைதட்டி டிரைவரை கூப்பிட அவன் உடனே பாட்டை நிறுத்திவிட்டு இறங்கி வந்து “என்ன சார்” என்று கேட்டான் “ம் ஒன்னுமில்லப்பா இந்த கார்ல வந்தாங்களே மான்சின்னு அவங்க எந்த ஹோட்டல்ல தங்கியிருக்காங்க... ஏன்னா இந்த காரை ஏதோ பெரிய ஹோட்டல்ல பார்த்த மாதிரி இருந்தது அதனால்தான் கேட்டேன் ”.....என்று டிரைவரை விசாரித்தான்

 “ஆமாம் சார் அவங்க இந்த கார்ல தான் வந்தாங்க.... ஹோட்டல் சுப்ரீம்ல தங்கியிருக்காங்க.... இந்த காரும் ஹோட்டல்ல ஏற்பாடு பண்ணதுதான் சார்”என்று சரியாக பதில் சொன்னான் அதோடு சத்யனுடன் அங்கிருந்து விலகி சற்று தள்ளி வந்த சுதாகர் “ இப்போ உனக்கு ஏதாவது புரியுதா சத்யா” என்று கேட்க சத்யன் முகத்தில் குழப்பத்துடன் “ வீட்டை இங்கே வச்சுகிட்டு இவ ஏன்டா ஹோட்டல்ல தங்கியிருக்கா எனக்கு ஒன்னுமே புரியலை சுதா” என்று சத்யன் பதில் சொல்ல

 “ம் அது அந்த ஹோட்டலுக்கு போன புரிஞ்சுடும் ஆனா என்னோட கணிப்பில் அங்கே உனக்காக ஏதோ பெரிய ஆச்சரியம் காத்திருக்கம்ன்னு எதிர்பார்க்கிறேன்.... சரிவா சத்யா வா போகலாம் “ என்று கூறி இருவரும் சத்யன் காரில் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள் ஹோட்டலுக்கு போனவுடன் சத்யன் கண்கள் ஏதோவொரு இனம் புரியாத எதிர்பார்ப்புடன் எதையோ தேடி அலைந்து ஹோட்டல் ரிசப்ஷனில் மான்சி தங்கியிருக்கும் அறையை பற்றி சுதாகர் விசாரித்தான்

 ரிசப்சனிஸ்ட் பெண் உடனே தன் முன்னால் இருந்த பேரேடை பார்த்துவிட்டு “ அவங்க ரூம் நம்பர் 36 ல் தங்கிஇருக்காங்க ஆனா இப்போ வெளியே போயிருக்காங்க சார்.... அவங்க கூட தங்கியிருக்கும் இன்னொரு லேடி குழந்தையை தூக்கிட்டு இங்கே ஹோட்டலோட பார்க்குக்கு போயிருக்காங்க.... நீங்க அவங்களை பார்க்கனும்னா இப்படியே ரைட் சைடுல இருக்கும் வராண்டாவில் போனா பார்க் வரும் போய் பாருங்க சார்”.... ரொம்ப விபரமாக விளக்கிச்சொல்ல....

சுதாகர் அவளுக்கு நன்றி கூறிவிட்டு சத்யனை அழைத்துக்கொண்டு பார்க்குக்கு போனான் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் தபஸ்யாவை தூக்கிவந்து பார்க்கில் காற்றோட்டமாக வைத்திருந்த அஞ்சனா தன்னை நோக்கி வந்த அந்த இருவரையும் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள்..... அஞ்சனா ஏற்கனவே சத்யனை மான்சியின் லேப்டாப்பில் போட்டோவாக பார்த்திருப்பதால் சத்யனை அடையாளம் தெரிந்து லேசாக புன்னகைத்தாள் சத்யனுக்கு குழப்பமாக இருந்தது

 இந்த பெண் ஏன் தன்னை பார்த்து புன்னைகைக்கிறாள் என நினைத்து அஞ்சனா அருகே போக.... சுதாகரும் அவன் பின்னே போனான் அஞ்சனாவோ மான்சி வார்த்தையை மீறி எதுவும் செய்யகூடாது என்று நினைத்தாலும்.... அந்த சிறு குழந்தை தன் தகப்பனின் அணைப்பில் இருக்கவேண்டும் என்று நினைத்த அவளது தாயுள்ளம் தன் கையில் இருந்த தபஸ்யாவை சத்யனின் கையில் திணித்தாள் சத்யன் அதிர்ச்சியில் உறைந்து போய் தன் கையில் இருந்த குழந்தையின் முகத்தை பார்க்க....அவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை அவனைப்பார்த்ததும் சிரித்தது....

 அவன் பின்னால் இருந்த சுதாகர் “ நான் இதை தான்டா உனக்கு இங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கன்னு சொன்னது.... அனேகமாக இது மான்சியோட குழந்தையாகத்தான் இருக்கும்..... ஆனா இது உன்னோட குழந்தையும்தான் எனக்கு தோனுது சத்யா.... இந்த குழந்தையின் விஷயத்தில் மான்சி நம்ம எல்லாரையும் நல்ல ஏமாத்திட்டா சத்யா.... உனக்கு புரியுதா சத்யா” என்று நன்பனை கேட்டான் சுதாகர் சத்யனுக்கா புரியாது குழந்தையை கையில் வாங்கியதுமே அந்த குழந்தையின் ஜாடையை பார்த்து அது தன் குழந்தைதான் என்று சத்யனுக்கு புரிந்துவிட்டது....

 ஆனால் தன் குழந்தையின் பிறப்பைப் பற்றி தன்னிடமே மறைத்த மான்சியை என்ன செய்வது என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டிருந்தான். சத்யனுக்கு மான்சியின் மீது பயங்கர ஆத்திரம் வர குழந்தையை தன் மகளை மார்போடு அணைத்துக்கொண்டு அஞ்சனாவையும் அழைத்துக்கொண்டு சுதாகருடன் மருத்துவமனைக்கு விரைந்தான்

 " கோழிக்குள் முட்டை வைத்து .... "
முட்டைக்குள் கோழி வைத்து.... "
 வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் -
அந்த " ஏழையின் பெயர் இறைவன்.

 சத்யன் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக முன்னே போக அஞ்சனாவும் சுதாகரும் அவன் பின்னாலேயே வந்தனர்..... சத்யன் குழந்தையை தோளில் வைத்துக்கொண்டு கார் சாவியை சுதாகரிடம் வீசியெறிந்து “காரை நீ ஓட்டுடா” என்று கூறிவிட்டு அஞ்சனாவுடன் பின் சீட்டில் உட்கார்ந்தான் அப்போது அஞ்சனா வைத்திருந்த செல்போன் ஒலிக்க அவள் மிரட்சியுடன் சத்யனைப் பார்த்தாள்......

 சத்யன் அஞ்சனாவிடமிருந்து செல்லை வாங்கி யார் என்று பார்த்தான்.... மான்சிதான் போன்செய்திருந்தாள் சத்யன் மறுபடியும் போனை அஞ்சனாவிடமே கொடுத்து “ நானும் சுதாகரும் இங்கே வந்திருப்பதைப் பற்றி எதுவும் மான்சியிடம் சொல்லவேண்டாம்.... அவ எது சொன்னாலும் சரின்னு மட்டும் சொல்லுங்க “ என்று தனக்கு தெரிந்த இந்தியில் சொல்லி அஞ்சனாவுக்கு புரியவைக்க சரியென்று தலையசைத்த அஞ்சனா

செல்லை ஆன் செய்து மான்சியிடம் சிறிதுநேரம் இந்தியில் பேசிவிட்டு பிறகு இனைப்பை துண்டித்து சத்யனை பார்த்து “ மான்சியம்மா அவசரமா அவங்களோட அம்மா வீட்டுக்கு போறாங்களாம் அதனால அவங்க வர இன்னும் கொஞ்சநேரம் ஆகுமாம் அதுவரை குழந்தையை ஜாக்ரதையா பார்த்துக்கச் சொன்னாங்க” என அஞ்சனா சத்யனிடம் சொல்ல சுதாகர் காரை மருத்துவமணைக்கு நோக்கி செலுத்திக்கொன்டிருக்க சத்யன் அவசரமாக ‘’அப்படின்னா நீ உடனே வண்டியை மான்சி வீட்டுக்கு திருப்பு சுதா” என்று கூறியதும் சுதாகர் காரை மான்சி வீட்டுக்கு திருப்பினான்

 சத்யனின் கோபமும் அவசரமும் சுதாகருக்கு லேசான பயத்தை கொடுக்க “ டேய் சத்யா கொஞ்சம் பொறுமையா இருடா அங்க மான்சி வீட்டுக்கு வந்து அனாவசியமாக எதாவது பேசிட போற அப்புறமா பெரிய பிரச்சனையாயிடும் சத்யா ப்ளீஸ்டா நிதானமா இரு” என்று நன்பனை எச்சரித்தான் சத்யன் தன் மடியில் இருந்த குழந்தையை பார்த்துக்கொண்டே “டேய் சுதா என் குழந்தையோட முகத்தை பாருடா.... இவளை என்கிட்ட இருந்து மறைக்கிற அளவுக்கு நான் அப்படி என்னடா அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்.... ஒரே ஒரு வார்த்தை அந்த ரம்யாவோட பெயரைச்சொல்லிட்டேன் அது அவ்வளவு பெரிய குற்றமா இதன்பிறகும் நான் அவளை சும்மாவிடனும்னு சொல்றியா
ம்ஹூம் முடியாது சுதா.....

 அன்னிக்கு நடந்த பிரச்சனைக்கு நானும் எவ்வளவோ அவள் காலில் விழாத கொறையா கெஞ்சி பார்த்துட்டேன் அவ என்னை ரொம்ப அலட்சியப்படுத்திட்டா........ தப்பு என்னமோ என் மேலதான்ற மாதிரியும் அவ மனசை காயப்படுத்துற போல அந்த நேரத்தில் நான் ரம்யாவோட பெயரைச் சொன்னது மன்னிக்க முடியாத குற்றங்றது மாதிரியும் எவ்வளவு மோசமா என்னை நடத்தினா தெரியுமா.... ச்சே இந்த பத்துமாசமா அவ இல்லாம என் மனமும் உடலும் தவிச்ச தவிப்பு என்னால சொல்லமுடியாது சுதா........ 

ஒவ்வொரு ராத்திரியும் ஒவ்வொரு யுகம் மாதிரி கழித்தேன்.... அது போல எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரி இருக்கிறது ரொம்ப சித்ரவதைடா ..... அவளோட இந்த புறக்கணிப்பை என்னால ஏத்துக்கவே முடியலை சுதா மனசெல்லாம் அப்படியே கொதிக்குது சுதா ”.... என்று சத்யன் மனம் குமுறலை தன் வார்த்தைகளில் வெளிப்படுத்தினான் சுதாகர் காரின் வேகத்தை வெகுவாக குறைத்து

 “ சத்யா நீ சொல்றது எனக்கும் புரியுதுடா ஆனா இப்போ நீபோய் பிரச்சனை பண்ணா அதையே சாக்கா வைச்சு மான்சி மறுபடியும் உன்னை விட்டு பிரிஞ்சுபோகத்தான் நினைப்பாங்க”என்று சுதாகர் சொல்ல “அதையும்தான் பார்க்கலாமே எப்படி மறுபடியும் என்னைவிட்டு போறான்னு இனிமேல் ஒன்னு நான் உயிரோட இருக்கனும் இல்லை அவ உயிரோட இருக்கனும்..... இல்லையா ரெண்டு பேருமே சாகனும் அதுதான் இப்போ நடக்க போகுது”..... என்று சத்யன் உட்சபட்ச கோபத்தில் உறும.... அதைகேட்ட சுதாகரும் அஞ்சனாவும் கலக்கத்துடன் அவனை பார்த்தனா்

 “ டேய் சத்யா இவ்வளவு ஆத்திரம் வேனாம்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு..... எதுவாயிருந்தாலும் பேசி தீர்க்கலாம் சத்யா.... மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனையே இல்லைடா.... இப்போ நீங்க ரெண்டுபேரும் தனி ஆட்கள் இல்லை உங்களுக்கு மத்தியிலே ஒரு குழந்தை இருக்கு... அதனால்தான் சொல்றேன் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடி எல்லாம் சரியாக நடக்கும்..... இதுலவேற வேலு சார் இன்னிக்கு வர்றதா இருந்தது வந்துட்டாரா இல்லையான்னு தெரியலை...


 ச்சே உன் வாழ்க்கையில் மட்டும் ஏன்டா இத்தனை குழப்பம்” என்ற சுதாகர் இயலாமையுடன் தன் கைகளை ஸ்டேர்லிங்கில் குத்தி கொண்டான் இப்படி இவர்களின் வாக்குவாதம் நீண்டுகொண்டே போக மான்சியின் வீடும் வந்துவிட்டது சத்யன் குழந்தையை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு காரிலிருந்து இறங்கி கார் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைய அவன் பின்னாலேயே சுதாகரும் அஞ்சனாவும் பதட்டத்துடன் ஓடினார்கள்



மூடியிருந்த வீட்டுக் கதவை தடாலென்று திறந்துகொண்டு சத்யன் உள்ளே போக அங்கே ஹாலில் மான்சியின் அப்பா அம்மா... சத்யனின் அம்மா.... வேலு ரஞ்சனி என எல்லோரும் இருந்தனர் கதவு தடாலென்று திறந்த சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க.... தோளில் குழந்தையுடன் கோபத்தில் முகம் கோணி சிவக்க நின்ற சத்யனைப் பார்த்து அதிர்ந்துபோய் எல்லோரும் எழுந்து நின்றுவிட்டனர்

 “ அத்தை எங்க உங்க பொண்ணு மான்சி.... மொதல்ல இங்க வரச்சொல்லுங்க” என்று சத்யன் கோபத்தில் இரைந்து கத்த தன் அறையில் அஸ்வினுடன் எதையோ தேடிக்கொண்டிருந்த மான்சி சத்யனுடைய குரலைக்கேட்டு பதட்டமாக வெளியே வந்தவள்.... சத்யன் தோளில் கிடந்த தபஸ்யாவையும் அவன் பின்னால் நின்ற அஞ்சனாவையும் பார்ததும் எல்லாமே புரிந்துவிட... மான்சியின் முகம் பேயறைந்தது போல மாற அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டாள்

 தான் அறியாமலே தன் குழந்தையை தூக்கி வந்துவிட்டனே என்ற வறட்டு ஈகோ அவள் மனதில் தலைதூக்க......மான்சி என்ன செய்கிறோம் என்று புரியாமலே அவசரமாக சத்யனை நெருங்கியவள் “ யாரைக்கேட்டு குழந்தையை தூக்கிட்டு வந்தீங்க... அதுக்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கு... விடுங்க குழந்தையை”.. என்று கத்தி ஆவேசத்துடன் சத்யனிடம் இருந்து குழந்தையை பிடுங்க முயற்ச்சிக்க சத்யன் இடக்கையால் குழந்தையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு வலதுகையை சுழற்றி மான்சியின் கன்னத்தில் பொளேரென பலமாக ஒரு அறைவிட்டான்.....

 சத்யன் அறைந்த வேகத்தில் மான்சி ஒரு சுற்று சுற்றி சுழன்று போய் விழ அவளை ஓடிவந்து தாங்கிக்கொண்ட வேலு...... “டேய் யார் வீட்ல வந்து யாரைடா அடிக்கிறே.... அவளை கைநீட்ட நீ யார்ரா” என்று இரைந்த படி மான்சியுடன் ஆத்திரமாக சத்யனை நோக்கி வந்தான் .. அதற்க்குள் சுதாகர் ஓடிவந்து வேலுவை தடுத்து “ அது அவங்க ரெண்டுபேருக்கும் உண்டான பிரச்சனை அதை அவங்களே பேசி தீர்த்துக்கட்டும் இதில் நீங்க தலையிடாதீங்க “ என்று கூற வேலுவின் கோபம் இன்னும் அதிகமானது “

இவனுக்கும் என் தங்கச்சிக்கும் என்ன சம்மந்தம் இருக்கு... இவங்க ரெண்டுபேர்க்கும் என்ன பிரச்சனை வர போகுது “ என நக்கலாக கேட்க வேலுவின் தோளில் தலைசாய்த்து இருந்த மான்சிக்கு சத்யன் அறைந்ததில் காதுகள் இரண்டும் குப்பென்று அடைத்துக்கொள்ள....பார்ப்பவை எல்லாம் நிறமாறித் தெரிந்தது

 வீட்டில் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நடக்கிறது என்று புரியாமல் பதட்டத்துடன் வேடிக்கைப் பார்க்க சத்யன்க்கு இப்போ மான்சியை விட வேலுவின் மீது வந்த கோபம் தலைக்கேற” இவளுக்கும் எனக்கும் என்ன சம்மந்தமா... இதோ இருக்கு பார் சம்மந்தம் “ என்று தன் தோளில் இருந்த குழந்தையை தூக்கி வேலுவின் முகத்துக்கு நேராகப் பிடித்து “ இவதான் எங்க ரெண்டு பேருக்கும் சம்மந்தம்..... எனக்கும் மான்சிக்கும் பிறந்தது எனக்கே தெரியாம பிறந்த குழந்தை...... தங்கச்சி தங்கச்சிங்கிறயே இப்போ தெரியுதா இவ உன் தங்கச்சி இல்ல என் பொண்டாட்டி என் மகளுக்கு அம்மான்னு “ என்று சத்யன் எகத்தாளமாக கூற

 அங்கிருந்த அனைவரும் ஏககாலத்தில் “என்னது” என்று கூவ..... வேலு அதிர்ந்து போய் மான்சியை தன் தோளில் இருந்து விலக்கி நிறுத்தி “ என்னம்மா மான்சி இதெல்லாம் இவன் என்ன சொல்றது உன்மையா” என்று அவளை உலுக்கி கேட்டான் மான்சியால் எதுவுமே பேசமுடியாமல் விக்கல் கேவல் எதுவுமின்றி கண்களில் கண்ணீர் கரகரவென வழிய அங்கிருந்த அனைவரையும் மிரள மிரள பார்த்தாள்

 சத்யனுக்கு அவள் கண்ணீரைப் பார்த்து மேலும் ஆத்திரம் வர “ ஏய் நீலிக்கண்ணீரா வடிக்கிற இந்த குழந்தை யாரோடதுன்னு சொல்லுடி எல்லார்கிட்டயும் “ என மான்சியை அதட்டி விரட்ட இப்போது மான்சியின் மிரண்ட பார்வை சத்யன் பக்கம் திரும்பியது ‘ ஐயோ என்னை பேசி பேசியே கொள்ளாதே...ஒட்டுமொத்தமா கொன்னுடு என கெஞ்சுவது போல் பரிதாபமாக பார்க்க அந்த பார்வை சத்யனின் இதயத்தை கூர் அம்புகளை கொண்டு தாக்க.... அடுத்த நிமிடம் அவன் மனதில் மான்சியின் மீது இருந்த கோபமெல்லாம் பொடிப்பொடியாக சிதறியது...... சத்யன் கண்கள் கலங்க உதடுகள் துடிக்க எதுவும் பேசாமல் தன் வலது கையை விரித்து வா என்று அவளைப்பார்த்து தலையசைத்தான்

 இவ்வளவு நாட்களாக அவன்மீது வீம்பில் முறைத்துக்கொண்டு இருந்த மான்சிக்கு... இப்படியெரு பலகீனமான நேரத்தில் சத்யனின் அந்த ஒற்றை தலையசைப்பு போதுமானதாக இருந்தது....அவளை இழப்பதற்கு மான்சி தன் தோள்களை பற்றியிருந்த வேலுவின் கைகளை உதறிவிட்டு “ மாமா “ என்று உரக்க கூச்சலிட்டு ஓடிச்சென்று அவன் கைகளில் தஞ்சமடைய அவள் அழைத்த மாமா என்ற அந்த ஒரு வார்த்தை சத்யன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை வெளியே கொண்டு வர.... பொலபொலவென வழிந்த கண்ணீருடன் மான்சியை வளைத்து இறுக்கி மிக வன்மையாக தன் மார்போடு அணைத்துக்கொண்டான்

 இருவரும் கட்டுப்படுத்தவே முடியாதபடி குலுங்கி கண்ணீர் விட.... சத்யனின் கண்ணீர் அவனின் நேசத்தை மான்சிக்கு புரியவைக்க...... மான்சியின் கண்ணீர் அவளது இழப்புக்களை சத்யனுக்கு புரியவைத்தது இவன் அவளை “அழாதே மான்சி” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்காமல் அவளை சமாதானம் செய்ய அவள் இவனை “நீங்க அழாதீங்க மாமா” என்று அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து பதில் சமாதானம் செய்ய..... இவர்களின் இந்த கண்ணீர் சமாதானத்தை பார்த்து அந்த வீட்டிலிருந்த அனைவரும் கண்கலங்கினர்

 " காதலைப் பயிரிட்டு.... " கவிதையை அறுவடைசெய்தேன் ....
 " என்னிடம் நீ காதலைச் சொல்லவேண்டாம்.... "
ஒரு கவிதையாவது வாங்கிப் போ .... "
அப்போதுதான் உனக்கு புரியும்..... "
அது தண்ணீரால் வளர்ந்தது அல்ல...... "
என் கண்ணீரால் என்று .....!

 மான்சி சத்யனின் பரந்த மார்பில் முகம் புதைத்து தன் கண்ணீரால் அவனின் மார்பு ரோமங்களை நனைத்துக்கொண்டிருக்க........ சத்யன் தன் மார்பில் விழுந்து அழுதுகொண்டிருந்த மான்சியின் உச்சந்தலையில் முகத்தை வைத்து தன் கண்ணீரால் அவளின் கூந்தலை நனைத்துக்கொண்டிருந்தான் அப்போது சத்யனின் கையிலிருந்த குழந்தை தபஸ்யா இவர்கள் அழுகையை பார்த்து தானும் அழ ஆரம்பித்தது.....

 குழந்தையின் அழுகையால் சத்யன் சட்டென சுயநிலைக்கு வந்து தன் மார்பில் இருந்த மான்சியை விலக்கி நிறுத்திவிட்டு குழந்தையை தன் இருகைகளிலும் ஏந்தி “ ச்சு என்னம்மா அழறீங்க ஒன்னுமில்லடாச் செல்லம் அழக்கூடாது..... இங்கே திரும்பி அம்மாவை பாருங்க..... என் சின்னக்கண்ணம்மா இனிமேல் அழக்கூடாது அதான் அப்பா வந்துட்டேன்ல எங்கே சிரிங்க பார்க்கலாம்” என்று சத்யன் தன் மகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு கொஞ்ச அதுவரை அமைதியாக அவர்களின் கண்ணீரை கண்டு தானும் கண்ணீர் விட்டு கொண்டிருந்த சத்யனின் அம்மா அமுதா

 “ டேய் டேய் குழந்தையை அப்படி தலைக்கு மேல தூக்கிப்போட்டு கொஞ்ச கூடாதுடா” என்று சொல்லிக்கொன்டே வேகமாக சத்யனிடம் வந்து “ இப்படி குடுடா குழந்தையை” என சத்யனிடமிருந்து பிடுங்காத குறையாக தனது பேத்தியை வாங்கி கொள்ள அவளின் பின்னாலேயே வந்த அழகம்மையும் ரஞ்சனியும் குழந்தையை மாற்றிமாற்றி கொஞ்ச ஆரம்பித்தனர்

 நடந்ததை ஜீரணிக்க முடியாமல் ஒதுங்கி நின்றிருந்த வேலு வேதனை முகத்துடன் ‘என்னம்மா இதெல்லாம்’ என்பது போல் மான்சியை பார்க்க.... அதேசமயம் மான்சியும் வேலு பார்த்துவிட்டு அவனருகில் வந்து வேலு கைகளை எடுத்து அதில் தன் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீருடன் “ என்னை மன்னிச்சிடுண்ணா” என்று கேட்டதும் “ ம் நான் என்னம்மா உன்னை மன்னிக்கிறது அங்கப்பாரு சித்தப்பாவை எப்படி உடைஞ்சு போய் உட்கார்ந்திட்டார்” என வேலு மான்சியின் அப்பாவை சுட்டி காட்ட மான்சி வேகமாக தன் அப்பாவிடம் போய் அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவரின் முழங்காலில் தன் முகத்தை

“ அப்பா என்னை மன்னிச்சிடுங்க .... நான் என்னதான் படிச்சாலும் பெரிய அந்தஸ்த்தான வேலையில் இருந்தாலும் கடைசியில் சத்யா மாமாவின் மேல இருந்த காதல்தான் ஜெயிச்சதுப்பா.... அவரோட முதல் மனைவி மாமவை அவமானப்படுத்தி பேசிட்டான்னு தெரிஞ்சதும் என்னால பொருத்துக்க முடியலை அப்பா.... அந்த ஒரே காரணத்துக்காகவே நான் என்னையே அவருக்கு கொடுத்துட்டேன்ப்பா..... அந்த சமயத்தில் என் மனசுக்கு எது தப்பு எது சரின்னு எனக்கு தெரியலைப்பா..... என் மாமாவை ஆண்மையில்லாதவன்னு ஒருத்தி சொல்லிட்டாளே என்ற ஆதங்கம் மட்டும்தான் என் மனசில் இருந்தது......

 ஒருத்தனை உன்மையா நேசிக்கிறவ என்ன செய்வாளோ அதைத்தான் நான் செய்தேன்........ அது எனக்கு அசிங்கமாவோ கேவலமாவோ தோணலைப்பா..... இல்லை இல்லை இது அசிங்கம் கேவலம்ன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா நீங்க எனக்கு என்ன பணிஸ் பண்ணாலும் நான் ஏத்துக்கிறேன்........ ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா ப்ளீஸ்ப்பா” என்று மான்சி கண்ணீருடன் தன் அப்பாவிடம் கெஞ்சினாள் அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த சத்யனுக்கு எல்லாமே புரிந்துபோனது.....

 அவள் ஏன் தன்னை தேடி டாப்சிலிப் வந்தாள் என்பதும் புரிந்தது...... வந்தவள் ஏன் தன்னிடம் சிரித்து பழகி தாராளமாக நடந்துகொண்டாள் என்பதும் புரிந்தது........ அன்று இரவு ஏன் தன்னுடைய செயல்கள் அனைத்துக்கும் ஒத்துழைத்தாள் என்பதும் புரிந்தது...... அப்படி ஒத்துழைத்தவள் ஏன் தன்மானத்தோடு தன்னைவிட்டு விலகி போனாள் என்பதும் புரிந்தது.... தன் வாழ்க்கையை துச்சமென மதித்து என் வாழ்வு சிறக்க தன்னையே கொடுத்த இவளை இனி எப்படி போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் புரிந்தது..... மனமெங்கும் மான்சியின் மீதான நேசம் மத்தாப்பூவாய் பூத்து சிதற வேகமாக மான்சியின் அப்பாவிடம் போய் நெடுக்க அவர் காலில் விழுந்தான்

 “ மாமா மான்சிக்கு என்மீதான காதலை தவறா பயன்படுத்திய நான்தான் தப்பு செய்தவன்.... அதனால என்னை மன்னிச்சிடுங்க.... இனிமேல் மான்சியும் குழந்தையும் தான் என் வாழ்க்கையே.... தயவுசெய்து எங்களை மன்னிச்சு ஏத்துக்கணும் மாமா..” என்று சத்யன் வேன்ட... அவசரமாக எழுந்த ராஜவேலு சத்யனை தூக்கி அணைத்து

“ சத்யா இது நீங்க ரெண்டுபேரும் பிறந்தப்பயே கடவுள் போட்ட முடிச்சு இதை யாராலையும் மாத்த முடியாது சத்யா..... ஆனா எல்லாமே இப்படி முறையில்லாம நடந்ததை நெனைச்சாதான் ரொம்ப வருத்தமா இருக்கு.... இருந்தாலும் பரவாயில்லை நீங்க ரெண்டுபேரும் ரொம்ப நாளைக்கு சந்தோஷமா வாழனும்னு வாழ்த்தறேன் சத்யா” என்றவர் பக்கத்தில் இருந்த மான்சியையும் சேர்த்து அணைத்துக்கொன்டார்.

சிறிதுநேரத்தில் அங்கிருந்த கூச்சல் குழப்பம் எல்லாம் அடங்க.... சுதாகர் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விடைபெற..... வேலு தன் அப்பாவுக்கு போன் செய்வதற்காக தோட்டத்துக்கு போக.....மிச்சமிருந்த அனைவரும் தங்களது வீட்டுக்கு வந்த புதுவரவான தபஸ்யாவை சுற்றிலும் சூழ்ந்துகொண்டனர் மான்சி ரொம்பவே களைத்துப்போனவளாக சுவற்றில் சாய்ந்துகொள்ள..... அவளருகில் வந்த சத்யன் சுவற்றில் சாய்ந்திருந்த அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக்கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்....

 அவள் கன்னத்தில் இவனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருக்க... சத்யன் குனிந்து தன் உதட்டால் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்... மான்சி அவன் சட்டையை கொத்தாக பற்றி தன்னோடு அவனை நெருக்கி இழுக்க..... சத்யன் தன் உதட்டை விலக்கிவிட்டு தன் சொரசொரப்பான அடிநாக்கால் அவள் கன்னத்தை அழுத்தமாக நக்கிவிட்டு அவள் சிவந்த கன்னத்துக்கு ஒத்தடமிட..... மான்சி ஸ்........ என்று மெல்லியதாக சத்தமிட்டாள்



அப்போது அவர்கள் பின்னால் “ ம்ம் போதும்போதும் நிறுத்துங்க மிச்சமெல்லாம் தனியா ரூமிலே வச்சுக்கங்க “ என்ற அஸ்வினின் கிண்டல் குரல் கேட்டது...... இருவரும் அவசரமாக விலகி மான்சி தலையை குனிந்துகொள்ள.... சத்யன் அஸ்வினைப் பார்த்து லேசாக அசடுவழிய.... 

அவர்களை பார்த்து சிரித்த அஸ்வின் “ ம் ரொம்ப வழியுது தொடச்சுகங்க மாமா “ என்றவன் சத்யன் நெருங்கி அவன் கைகளை பிடித்து குலுக்கி “ சத்தமில்லாம வெளியவே தெரியாம ரகசியமாக அப்பாவான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மாமா”.. என்று கூற இப்போது மான்சியைவிட அதிகமாக சத்யன் வெட்கத்துடன் நெளிந்தவாறு தலையை குனிந்தான் .....

அவனைப்பார்த்து எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.... கூச்சத்துடன் சத்யன் மான்சியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தோட்டத்துக்கு ஓடினான்


No comments:

Post a Comment