Monday, February 2, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 24


Friday, 3 April 2009 5:00 PM Bouchon Bakery, Time Warner Center, New York வெள்ளி, ஏப்ரல் 3, 2009 மாலை 5:00 பௌச்சன் பேக்கரி, டைம் வார்னர் சென்டர், நியூ யார்க் சக்தி, "என்ன ஜாஷ்? அவசரமா வரச்சொன்னே?" ஜாஷ்வா, "Something has come up" நித்தின், "என்ன?" ஜாஷ்வா, "நாம் 34 கணிணிகளை நேரடியா தொடர்பு கொண்டோம் இல்லையா? அதில் எஃப்.பி.ஐ கண்காணிக்கும் கணிணியும் இருந்து இருக்கு" சக்தி, "ஓ மை காட்" நித்தின், "God! It shows that we are running out of luck" எரிச்சலடைந்த சக்தி, "Oh shut up Nithin! Stop being a doomsayer!!"
நித்தின், "பின்னே? நாலரை லட்சம் கணிணிகளில் எஃப்.பி.ஐ கண்காணிப்பில் இருக்கும் ஒரு கணிணியை நாம் வைரஸ்ஸை பரப்ப தேர்ந்து எடுத்து இருக்கோம்!" ஜாஷ்வா, "கய்ஸ், கய்ஸ்! நீங்க ரேண்டமாதானே தேர்ந்து எடுத்தீங்க? பிரச்சனை அது இல்லை" சக்தி, "வேறு எதாவுது இருக்குன்னு தெரியும். சொல்லு" ஜாஷ்வா, "சக்தி, நீ ஏன் அவ்வளவு நேரம் ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் உக்காந்துட்டு இருந்தே?" சக்தி, "நான் முடிக்க வேண்டிய நாலு செட் கணிணிகளும் முடிச்சுட்டேன். நித்தின் அவனுதை முடிக்கட்டும்ன்னு அங்கேயே உக்காந்துட்டு இருந்தேன். அது சரி. நான் ப்ளூ ஃபின்னுக்கு போனேன்னு உன் கிட்ட சொலல்வே இல்லையே?" ஜாஷ்வா, "எஃப்.பி.ஐ கண்காணிப்பில் இருந்த கணிணிக்கு நீ ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் இருந்து ஆணை கொடுத்து இருக்கே. என் கஸின் ஒருத்தன் அந்த ரெஸ்டாரண்டில் வேலை செய்யறான். அவன் உன்னை அந்த நைட் பாத்தும் இருக்கான். நீ என் ஃப்ரெண்டுன்னு அவனுக்கு தெரியும். இன்னைக்கு எஃப்.பி.ஐயில் இருந்து வந்து விசாரிச்சுட்டு போனதை அவன்தான் எனக்கு ஃபோன் பண்ணினான்" சக்தி, "ரெஸ்டாரண்டில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் இருந்தேன். ஆனா அவங்க வை-ஃபையை இருபது நிமிஷம்தான் உபயோகிச்சேன். அதுக்கு அப்பறம் டிஸ்கனெக்ட் பண்ணிட்டேன். அந்த சமயத்தில் என்னை சுத்தி நிறைய பேர் லாப்-டாப்பில் ப்ரௌஸ் செஞ்சுட்டு இருந்தாங்க. இதில் என்னை எப்படி சந்தேகப் படுவாங்க. முதலாவுது என்னை யாராவுது அடையாளம் காட்டினால் ஒழிய அவங்களுக்கு எப்படி என் மேல் சந்தேகம் வரும்" ஜாஷ்வா, "நியூ யார்க் முழுக்க இப்ப சர்வைலன்ஸ் கேமராக்கள் இருக்கு. நீ அவங்க கணிணியை நேரடியா தொடர்பு கொண்ட நேரத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இருந்த கேமராவில் ரெக்கார்ட் ஆனதை அவங்க பார்க்கப் போறாங்க. உன் முகம் நிச்சயம் அதில் இருக்கும்" சக்தியும் நித்தினும் சற்று நேரம் பேயறைந்த முகத்துடன் அமர்ந்து இருந்தனர். சக்தி, "உனக்கு எப்படி தெரியும்?" ஜாஷ்வா, "அவங்க ரெஸ்டாரண்ட்டில் இருந்த கேமராக்கள் மூலம் ரெக்கார்ட் ஆன டிஸ்க்கை எடுத்துட்டு போயிருக்காங்க" சக்தி, "ஓ மை காட்!"நித்தின், "அப்ப நிச்சயம் சக்தியை சந்தேகப் பட வாய்ப்பு இருக்கு இல்லையா?" ஜாஷ்வா, "அந்த சமயத்தில் அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு உள்ளேயும் அந்த ரெஸ்டாரண்டை சுத்தியும் லாப்-டாப் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகிச்சுட்டு இருந்த ஒவ்வொருத்தரையும் சந்தேகப் படுவாங்க. அதில் சக்தியும் அடக்கம்" சக்தி, "இந்த வீடியோவை வெச்சுட்டு எப்படி கண்டு பிடிப்பாங்க?" ஜாஷ்வா, "என்.எஸ்.ஏ வில் இருக்கும் ஃபோட்டோ ஐ.டி டேட்டா பேஸை பயன் படுத்தி அந்த வீடியோவில் இருக்கும் ஒவ்வொருத்தரும் யாருன்னு முதலில் கண்டு பிடிப்பாங்க" நித்தின், "சக்தியின் ஃபோட்டோ அவங்ககிட்ட இருக்குமா?" ஜாஷ்வா, "நிச்சயம் இருக்கும். உங்களுக்கு விசா கொடுக்கும் போதே உங்க ஃபோட்டோ அந்த டேட்டா பேஸில் சேர்ந்து இருக்கும்" சக்தி, "பட் வீடியோவில் என் பாஸ்போர்ட் ஃபோட்டோவுக்கு மாட்ச் ஆகறமாதிரி இருக்காது. An automated search will be impossible. Someone has to find the right frame that can be used" ஜாஷ்வா, "நான் ஒண்ணும் ஒரு நிமிஷத்தில் அவங்க கண்டு பிடிச்சுடுவாங்கன்னு சொல்லையே? வீடியோவில் இருக்கும் ஒரு முகத்தை அந்த டேட்டா பேஸில் தேடி கண்டு பிடிக்க அவங்களுக்கு குறைஞ்சது ஒரு நாளாவுது ஆகும்" நித்தின், "சோ, அவங்க எடுத்துட்டு போயிருக்கும் வீடியோவில் இருக்கும் ஒவ்வொருத்தரும் யாருன்னு கண்டு பிடிக்கறாங்க. அப்பறம்" ஜாஷ்வா, "ஒருவரை அடையாளம் கண்ட உடனே அந்த நபர் பேரில் ஏற்கனவே எதாவுது போலீஸ் ரெக்கார்ட் இருக்கான்னு பார்ப்பாங்க." என்றவன் தொடர்ந்து "அப்படி பார்க்கறதுக்கும் டேட்டா பேஸ் மற்றும் மென்பொருள் இருக்கு" நித்தின், "என் யூகத்தில் அந்த நேரத்தில் அந்த ரெஸ்டாரண்டிலோ அதுக்கு பக்கத்திலோ இருந்தவங்களில் போலீஸ் ரெக்கார்ட் இல்லாதவங்கதான் அதிகமா இருப்பாங்க. அதுக்கு அப்பறம் ஒவ்வொருத்தரையா அவங்க விலாசத்தை தேடி போய் பார்த்து நேரடி விசாரணை செய்வாங்க. இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "சக்தி, ஒண்ணும் பிரச்சனை இல்லை. அப்படி உன்னை வந்து கேட்டா அந்த நேரத்தில் நீ அங்கே இருந்ததுக்கு தகுந்த அலிபை (alibi - அங்கு இருந்ததற்கு காரணமான ஆதாரம்) இருந்தா போதும் உன்மேல் எந்த சந்தேகமும் வராது" ஜாஷ்வா, "நேரா அவன் ஃப்ளாட்டுக்கு வந்தாங்கன்னா? இல்லை அவன் இல்லாத நேரத்தில் ஃப்ளாட்டுக்குள் நுழைஞ்சு சோதனை போட்டா?" நித்தின், "எப்படியும் இன்னும் ஏழு எட்டு நாளில் பாட் நெட் முழுவதும் மாங்க்ஸ்-2 பரவிடும். அதுக்கு அப்பறம் நமக்கு சர்வர் அப்படின்னு ஒண்ணு தேவையே இல்லை. அது வரைக்கும் என் வீட்டில் இருக்கும் சர்வரையும் ஜாஷ், உன் வீட்டில் இருக்கும் சர்வரையும் தினம் தினம் மாத்தி மாத்தி இயக்கலாம். உடனே சக்திவீட்டில் இருக்கும் சர்வரை முழுக்க ஃபார்மாட் பண்ணி வெறும் விண்டோஸ் அப்பறம் பர்சனல் மேட்டர், கொஞ்சம் கேம்ஸ், மூவீஸ் மட்டும் லோட் பண்ணுவோம்" ஜாஷ்வா, "Sounds good. But what about alibi?" முகம் மலர்ந்த சக்தி, "கவலையே படாதே. அன்னைக்கு ப்ளூ ஃபின்னுக்கு போறதுக்கு முன்னாடி நான் என் ஆஃபீஸுக்கு போய் அங்கே இருந்த வை-ஃபை நெட்வொர்க்கை உபயோகிச்சேன். ஆஃபீஸ் செக்யூரிட்டி ஸ்டாஃப் கிட்ட ஒரு டாக்யூமெண்ட் விட்டுட்டு போயிட்டேன்; எடுத்துட்டு போக வந்தேன்னு சொல்லிட்டு உள்ளே போனேன். வெளியே வந்த பத்து நிமிஷத்துக்குள்ள ப்ளூ ஃபின்னில் இருந்தேன்" ஜாஷ்வாவின் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்தது .. நித்தின், "டேய், அதான் அவ்வளவு சீக்கரம் அன்னைக்கு உன் வேலையை முடிச்சுட்டு எனக்கு ஃபோன் பண்ணினேயா? இலவச வை-ஃபை ஃஜோன் இருக்கும் இடங்களை தேடி நான் எங்கே எல்லாம் சுத்துனேன் தெரியுமா?" ஜாஷ்வா, "ஓ.கே. கய்ஸ், சக்தி ஃப்ளாட்டில் இருக்கும் சர்வரை இன்னைக்கே ஃபார்மாட் செஞ்சுடுங்க. அப்பறம் அந்த இணைய கனெக்க்ஷனையும் நாளைக்கே டிஸ்கனெக்ட் செய்யறதுக்கு ஏற்பாடு செஞ்சுடறேன். நீ ஃப்ளாட்டில் இருக்கணுங்கற அவசியம் இல்லை. உன் அப்பார்ட்மெண்ட் பில்டிங்க்கில் கீழ பேஸ்மெண்ட்டில் இருக்கும் ஜங்க்ஷன் பாக்ஸில் டிஸ்கனெக்ட் செஞ்சுடுவாங்க. எபப்டியும் உன் லாப்டாப் உபயோகிக்க இன்னும் ஒரு கனெக்க்ஷன் இருக்கு இல்லையா? அதையே அந்த கணிணியிலும் கனெக்ட் பண்ணிடுங்க" நித்தின், "ஓ.கே. டன்" ஜாஷ்வா விடைபெற்றான். நண்பர்கள் இருவரும் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருந்து மூன்று சர்வர்களில் ஒன்றுக்கு விடைகொடுப்பதில் அந்த இரவின் பாதியை கழித்தனர்.Monday, 13 April 2009, 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஏப்ரல் 13, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அந்த வார ரிவ்யூ மீட்டிங்குக்காக அனைவரும் கூடி இருந்தனர். முரளீதரன், "வந்தனா, ஷான் நம்முடன் சில விவரங்களை பகிர்ந்து கொள்ளணுமாம் இப்போ டெலிகான்ஃபரென்ஸில் வர்றார்" சிறுது நேரத்தில் டெலிகான்ஃபரென்ஸில் ஷான் அவர்களுடன் கலந்து கொண்டார். ஷான், "வீடியோவில் இருந்தவங்கள் எல்லோரையும் இன்னும் முழுசா அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. என்.எஸ்.ஏவில் இருப்பவங்க அவங்க ப்ரொஸீஜர் படி முதலில் பார்க்க வெளிநாட்டவர்களை மாதிரி இருப்பவங்களை மட்டும் அடையாளம் கண்டு பிடிச்சு எங்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. மொத்தம் நூற்று இருபது பேர்களில், பதினெட்டு பேர் வெளிநாட்டவர்கள். அதில் மூன்று பேர் இந்தியர்கள், மூணு பேரில் ரெண்டு பேர் நியூ யார்க்கில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்காங்க. லாங்க் டர்ம் விசாவில் வந்து இருப்பவர்கள். ஒருத்தர் அலுவலக வேலையா இந்தியாவில் இருந்து பிஸினஸ் விசாவில் வ்ந்து இருக்கார். பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பவர். இவங்க மூணு பேரையும் பாக் க்ரௌண்ட் ஸர்ச் பண்ணனும். முரளீ, நான் உங்களுக்கு அனுப்பின மெயிலில் அவங்க டீடெயில்ஸ் இருக்கு. நீங்க மத்தவங்களுக்கு அதை காட்டுங்க. நான் லைன்ல இருக்கேன் மேற்கொண்டு எதாவுதுன்னா டிஸ்கஸ் பண்ணலாம்" முரளீதரன் தன் கணிணியில் இருந்த மெயிலை திறந்து அதில் இருந்த மூன்று அட்டாச்மெண்டுகளை ஒவ்வொன்றாக திறந்து காட்டினா. மூன்றாவதாக வந்த PDF ஃபைலில் இருந்த முகம் வந்தனாவில் கண்களை அகல வைத்தது. கீழே "சக்திவேல் முத்துசாமி" என்ற பெயரை எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். வந்தனா, "ஷான், நீங்க அனுப்பி இருக்கும் மூணாவது நபரை நான் கிளியர் பண்ணறேன். அது என் ஃபியான்ஸே" ஷான், "Don't tell me! என்ன மாதிரி கோயின்ஸிடன்ஸ் இது? என்னால் நம்ப முடியலை. அவன் அந்த நேரத்தில் அங்கே எதுக்கு இருந்தான்?" சக்தியை துளியும் சந்தேகிக்காவிட்டாலும், அவன் அங்கு இருக்க தகுந்த ஆதராம் இல்லை என்றால் அவனும் சந்தேகத்துக்கு உரியவனாக கருதப் படுவான் என்று உணர்ந்தாள். வந்தனா, "ஷான், அந்த ரெஸ்டாரண்ட் மார்கன் ஸ்டான்லி கட்டிடத்துக்கு பக்கத்தில் இருக்கா?" ஷான், "ஆமா, ரொம்ப பக்கத்தில்" வந்தனா, "அப்படின்னா நிச்சயம் அந்த வீடியோ ஃபுட்டேஜில் அவர் ஃபோனில் பேசற மாதிரி இருக்கும். உங்க டைம் சுமார் ஒரு மணிக்கு அந்த ரெஸ்டாரண்டில் இருந்து எனக்கு ஃபோன் செஞ்சார். அப்ப எந்த ரெஸ்டாரண்டில் இருக்கேன்னு சொல்லலை. ஆஃபீஸில் எதோ மறந்து விட்டுட்டு போனதை எடுத்துட்டு வீட்டுக்கு போற வழியில் காஃபி குடிக்க அந்த ரெஸ்டாரண்டுக்கு போனதா என்னிடம் ஃபோனில் சொன்னார். அவரோட ஆஃபீஸுக்கு அவர் போயிருந்தாரான்னு நீங்க விசாரிச்ச உங்க ட்வுட் கிளியர் ஆகிடும் இல்லையா? தவிர, அவரோட பாக்ரவுண்ட் விவரம் எல்லாம் நான் உங்களுக்கு மெயில் பண்ணறேன்"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஷான், அவன் பாக்ரவுண்டை பத்தி கவலையே படவேண்டாம். இந்த சக்திவேல் இப்ப இந்தியாவில் இருந்து இருந்தா நாங்க எங்க வேட்டையில் உபயோகிச்சு இருப்போம். அவனோட ப்ரொஃபெஸ்ஸர் அவனைப் பத்தி அப்படி உயர்வா சொல்லி இருக்கார்" முரளீதரன், "ஷான், நான் இதுக்கு முன்னாடியே அவனை பத்தி நல்லா விசாரிச்ச அனுபவம் இருக்கு" என்று சொல்லும்போதே வந்தனா முகம் சிவந்தாள். ஷான், "நீங்க ஏன் விசாரிச்சீங்க?" என்றதும் முரளீதரன் வந்தனாவின் வீட்டாருக்காக விசாரித்ததையும் பிறகு நடந்தவற்றைப் பற்றியும் சொன்னார். முரளீதரன், "ஷான், பார்த்த உடனே சந்தேகப் படும்படி யாரும் இல்லையா?" ஷான், "மாங்க்ஸ் பாட் நெட் விஷயத்தில் சந்தேகப் படும்படி யாரும் இல்லை. ஆனா, வேறு விதத்தில் சந்தேகப் படும்படி ஒரு நபர் அந்த வீடியோவில் இருந்தார்" முரளீதரன், "வாட்? இது என்ன கோயின்ஸிடன்ஸ்?" ஷான், "ஆமா, அந்த நபர் அல்-கைதாவுடன் சம்மந்தப் பட்டவர்ன்னு நம்பகரமான இடங்களில் இருந்து தகவல் வந்து இருக்கு. இன்னும் ஃபோட்டோ ஐ.டி செக் செய்யாத எதோ துறைமுகம் வழியா அமெரிக்காவுக்குள் நுழைஞ்சு இருக்கான். அவனை இப்ப நாங்க க்ளோஸா வாட்ச் பண்ணிட்டு இருக்கோம்" ஷான் விடைபெற்ற பிறகு ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன கோயின்ஸிடன்ஸ் வந்தனா இது? எதோ விதத்தில் உன் ஃபியான்ஸே நமக்கு உதவப் போறார்ன்னு எனக்கு தோணுது" முரளீதரன், "சரி, ப்ரொஃபெஸ்ஸர் உங்ககிட்ட இருந்து என்ன அப்டேட்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முரளி, நீங்க சொன்ன மாதிரி வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருக்கு சூப்பர் கம்ப்யூட்டரை உபயோகிக்க முடியுமா?" முரளீதரன், "ஏன் திடீர்ன்னு கேக்கறீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ரொம்ப இழுக்குது சார். சுற்றுக்கள் அதிகமாகும்போது கோட்ஐ மாத்தி எழுதும் நேரம் அப்பறம் இந்த கணிணி எடுத்துக்கும் நேரம் எல்லாம் அதிகமாகிட்டு வருது ரொம்ப காம்ப்ளிகேடட் சைஃபர் உபயோகிச்சு இருக்காங்க. ஜூலை கடைசியில் கூட முடிக்க முடியுமான்னு தெரியல" முரளீதரன், "சூப்பர் கம்ப்யூட்டர் உபயோகிக்கணும்ன்னா மென்பொருள் எல்லாம் மாத்தணும்ன்னு சொன்னீங்களே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்த்தோம் மென்பொருளை மாத்த ஒரு மாசம் அனாலும். அதுக்கு அப்பறம் பதினைந்து நாளில் பாக்கி இருக்கும் சுற்றுகளை முடிச்சுடலாம்ன்னு தோணுது" முரளீதரன், "அதுக்கு முதலில் அரசாங்கத்திடம் இருந்து பர்மிஷன் கிடைக்கணும். முயற்சி செய்யறேன். உங்க கிட்ட ஃப்ரீயா ஆளுங்க இருந்தா மாத்தி எழுதும் வேலையை தொடங்குங்க. ஓ.கே? தீபா, வந்தனா உங்ககிட்ட எதாவுது அப்டேட்?" தீபா, "மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எல்லா கணிணியிலும் இப்ப அந்த புது வைரஸ் பரவி இருக்கு. ஆனா அன்னைக்கு மாதிரி நேரடி ஆணை எதுவும் வரலை"
முரளீதரன், "இந்த புது வைரஸ் எந்த விதத்திலாவுது மாறுபட்டு இருக்கா?" தீபா, "ஆமா சார், முன்னே எல்லாம் நிறைய மெஸ்ஸேஜ்கள் வைரஸ்ஸிடம் இருந்து வெளியில் போகும். தான் இருப்பதை சர்வருக்கு தெரிவிக்கும் படியான மெஸ்ஸேஜ்கள் அப்படின்னு அவைகளை பத்தி நாங்க யூகிச்சு இருந்தோம். இப்ப அந்த மாதிரி மெஸ்ஸேஜ் ஒண்ணும் வெளியே போறது இல்லை. தவிர, நாம் முன்பு சேகரிச்ச மெஸ்ஸேஜகள் கூட ஒப்பிட்டுப் பார்த்தா இப்ப அதுக்கு வரும் மெஸ்ஸேஜ்கள், அது அனுப்பும் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் முற்றிலும் மாறு பட்டு இருக்கு" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு வேளை அவங்க சைஃபரை மாத்தி இருப்பாங்களோ?" வந்தனா, "அதைத் தான் நாங்களும் நினைக்கறோம். இது எல்லாம் அந்த நூறு மெஸ்ஸேஜ்கள் ஒண்ணா வந்ததில் இருந்து நடந்த மாற்றங்கள்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முன்னே மாதிரி இன்னொரு முறை டேம்பர் பண்ணிப் பாருங்களேன்" வந்தனா, "பாத்தோம். அதே மாதிரி தன்னை தானே அழிச்சுக்குது" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சைஃபரைத்தான் மாத்தி இருக்கணும். நம்மிடம் இருக்கும் மெஸ்ஸேஜ்களில் இருந்து சர்வர் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கறதுதான் இப்போதைக்கு கூடிய சீக்கிரம் செய்யக்கூடிய ஒரே வழி. அதில் கவனம் செலுத்துவோம்"Tuesday, 14 April 2009 11:30 AM Make-shift Test Lab, R&AW, New Delhi செவ்வாய், ஏப்ரல் 14, 2009 காலை 11:30 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி சாலையில் நடந்து கொண்டு இருந்த வேலையினால் அவர்களது அலுவலகத்தின் லீஸ் லைன் எனப்படும் நெட் கனெக்க்ஷன் துண்டிக்கப் பட்டது. வந்தனா எழுந்து ஒரு உதவியாளரிடம் மாற்று இணைப்பை இணைக்கும்படி கூறியபிறகு தீபாவின் இருக்கைக்கு வந்தாள். தீபா மிக சுவாரஸ்ஸியமாக அங்கு இருந்த கணிணிகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டு அவளிடம் வந்தாள். வந்தனா, "என்ன பார்க்கறே? லீஸ் லைன் டவுன். பாக்-அப் கனெக்க்ஷனை கனெக்ட் பண்ணச் சொல்லி இருக்கேன்" தீபா, "தெரியும்." என்றவள் பரபரப்பான முகத்துடன் "அவங்களை கனெக்ட் பண்ண வேண்டாம்ன்னு சொல்லு" வந்தனா, "எதுக்கு?" தீபா, "சொல்றேன். முதல்ல அவங்ககிட்ட சொல்லிட்டு வா" துணுக்குற்ற வந்தனா தோழியின் சொல்லுக்கு பணிந்து மறுபடி அந்த உதவியாளரை நாடி தான் சொல்லும் வரை மாற்று இணைப்பை இணைக்க வேண்டாம் என்று கூறி வந்தாள். வந்தனா, "ஏய், என்னன்னு சொல்லு" தீபா, "மாங்க்ஸ் பாட் நெட் சர்வர் இல்லாமல் இயங்குது" வந்தனா, "வாட்?" தீபா, "இங்கே பார்" வந்தனா, "வைரஸ் எல்லாம் ஓடிட்டு இருக்குன்னு சொல்றியா? ஒரு மாசத்துக்கு மேல நெட் கனெக்க்ஷன் இல்லைன்னாத்தான் வைரஸ் ஸ்டாப் ஆகும். இது நமக்கு முதல்லயே தெரியுமே?" தீபா, "அது மட்டும் இல்லை. நேத்து சில கணிணிகளில் இருந்து போற மெஸ்ஸேஜ்ஜை மறுபடி டாம்பர் பண்ணி இருந்தேன். ஆனால் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் நேத்து சாயங்காலமே வந்துடுச்சு. இப்போ இன்னும் ஒரு கணிணியில் மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் பண்ணி இருக்கேன். என்ன ஆகுதுன்னு பாக்கலாம்" வந்தனா, "என்ன ஆகும்ன்னு நினைக்கறே?" தீபா, "என் கணிப்பு சரியா இருந்தா. இங்கே இருக்கும் வேறு ஒரு கணிணியே இந்த கணிணிக்கு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை கொடுக்கும்" வந்தனா, "சரி, சில மணி நேரங்கள் வெயிட் பண்ணலாம். நான் பாட்டர்ன் மாட்சிங்க் கணிணி இருக்கும் இடத்துக்கு போயிட்டு வர்றேன்" ஒரு மணி நேரத்தில் தீபா வந்தனாவை கைபேசியில் அழைத்தாள். தீபா, "எஸ்! நான் சொன்னது சரி. இங்கே பார் இந்த நூறு கணிணிகளும் .. இல்லை இல்லை தொண்ணூத்து ஆறு கணிணிகளும் ஒரு மாங்க்ஸ் பாட் நெட் மாதிரி இயங்குது. வெளி உலகத்தின் கூட கனெக்க்ஷன் இல்லை. இருந்தாலும் ஒரு கணிணியின் மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் செஞ்ச உடனே இந்தக் கணிணிகளுக்குள் ஒண்ணு அதுக்கு தன்னை தானே அழிச்சுக்க ஆணை அனுப்பி இருக்கு" வந்தனா, "இது எப்படி சாத்தியம்?" தீபா, "அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை சர்வர்லெஸ் பாட் நெட்டாக மாத்திட்டாங்க" வந்தனா, "அவங்க எதாவது ஆணை கொடுக்கணும்னா?" தீபா, "அன்னைக்கு பாத்த IRC சானல் மூலம் ஆணை கொடுக்க எதோ வழி இருக்கு. எந்த கணிணி மூலமும் கொடுக்க முடியும். அவ்வளவு ஏன்? அவங்க கிட்ட இருக்கும் கணிணியிலேயே வைரஸ்ஸை புகுத்தி அதை சர்வர் மாதிரி உபயோகிக்க முடியும்" வந்தனா, "சோ, இது தான் அவங்க வைரஸ்ஸில் செய்த மாற்றமா? நல்ல வேளை இவங்க இப்படி செய்யறதுக்கு முன்னாடி அந்த மெஸ்ஸேஜ்களை சேகரிச்சோம்" தீபா, "எனக்கு என்னமோ நாம் சேகரிச்சதனால் தான் இவங்க இப்படி செய்து இருக்காங்கன்னு தோணுது" சற்று நேரம் யோசித்த வந்தனா, "இல்லை. அவங்க யூ.எஸ்ஸை விட்டு வெளியே எங்கேயோ போகப் போறாங்க" தீபா, "யூ.எஸ்ஸில் இருந்தா? எப்படி சொல்றே?" வந்தனா, "அன்னைக்கு யூ.எஸ்ஸுக்கு உள்ளே அதுவும் நியூ யார்க்கில் இருந்துதான் அந்த நேரடி ஆணை வந்துது. அதனால் மாங்க்ஸ் பாட் நெட்டின் சூத்திரதாரிகள் நியூ யார்க்கில் தான் இருக்காங்க அப்படிங்கறது தெளிவாயிடுச்சு இல்லையா?" தீபா, "எஸ்! நான் அந்த லைன்ல யோசிக்கலை. ஆனா அங்கே இருந்து வெளியே போகப் போறாங்கன்னு எப்படி சொல்றே" வந்தனா, "பழைய படி சர்வர் இருக்கும்படி இருந்து இருந்தா, அவங்க நியூ யார்க்கை விட்டு வெளியில் போகணும்ன்னா என்ன செஞ்சு இருப்பாங்க?" தீபா, "சர்வரை இடம் மாற்றி அமைச்சு இருப்பாங்க. அல்லது வேணுங்கற இடத்தில் இன்னொரு சர்வர் அமைச்சுட்டு பழைய சர்வரின் இணைப்பை துண்டிச்சு இருப்பாங்க" வந்தனா, "சர்வர்ன்னு ஒண்ணு இல்லைன்னா?" தீபா, "அவங்க எங்கே இருந்து வேணும்னாலும் ஆபரேட் பண்ணலாம்" வந்தனா, "உடனே இதை முரளி சார் கிட்ட சொல்லணும்" என்றவாறு கைபேசியை எடுத்தாள்.Tuesday, 14 April 2009 1:00 PM Blue Fin Restaurant, Broadway, New York செவ்வாய், ஏப்ரல் 14, 2009 மதியம் 1:00 ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட், ப்ராட்வே சாலை, நியூ யார்க் நித்தின், "ஏண்டா? ஒரு தடவை இங்கே வந்து உன் முகம் வீடியோவில் ரெக்கார்ட் ஆகி இருக்கு. எதுக்கு மறுபடியும் இங்கே?" சக்தி, "மறுபடி வந்தாத்தான் என் மேல் சந்தேகம் வராது. எப்படியோ ஆஃபீஸுக்கு இவ்வளவு பக்கத்தில் இருக்கு. இவ்வளவு நாளா லஞ்ச் சமயத்தில் இங்கே வந்தது இல்லைன்னு இங்கே சஜ்ஜஸ்ட் பண்ணினேன்" உணவருந்திக் கொண்டு இருக்கையில் ஜாஷ்வா சக்தியை கைபேசியில் அழைத்தான். சக்தி, "என்ன ஜாஷ்வா?" ஜாஷ்வா, "இந்த வெள்ளிக் கிழமை சாயங்காலம் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா?" சக்தி, "நாம் எல்லாம் வெளியே டின்னருக்கு போலாம்ன்னு பேசிட்டு இருந்தோமே? மறந்துடுச்சா?" ஜாஷ்வா, "ஓ, ஆமா. மறந்துட்டேன்...." சக்தி, "என்ன விஷயம்? நீ என்னவோ சொல்ல தயங்கற மாதிரி இருக்கு" ஜாஷ்வா, "தயக்கம் இல்லை. எனக்கே ப்ரோஸீட் பண்ணலாமா வேண்டாமான்னு இருக்கு" சக்தி, "ஹேய் மேன், கொஞ்சம் விளக்கி சொன்னா நாங்களும் உன் கூட சேர்ந்து யோசிப்போம்" ஜாஷ்வா, "நீங்க எங்கே இருக்கீங்க இப்ப?" சக்தி, "ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிட்டுட்டு இருக்கோம்" ஜாஷ்வா சிரித்தபடி, "சோ உன் மேல் எந்த சந்தேகமும் வரக்கூடாதுன்னு அந்த ரெஸ்டாரண்டுக்கு வாடிக்கையாளர் ஆயிட்டையா? இரு நித்தினையும் கூப்பிட்டு கான்ஃபரென்ஸில் போடறேன்" சக்தி, "அவன் என் முன்னாலதான் உக்காந்துட்டு இருக்கான். நான் ஸ்பீக்கர் ஃபோனில் போடறேன்" ஜாஷ்வா, "அது வேண்டாம்ன்னுதான் நான் கான்ஃபரென்ஸ் போடறேன்னு சொன்னேன். வெயிட்" நித்தின், "ஹே ப்ரோ! என்ன விஷயம்" ஜாஷ்வா, "ஹாஃப்மன் நம்மை எல்லாம் அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர கூப்பிட்டான்" சக்தி, "நம்மை எல்லாம்ன்னா?" ஜாஷ்வா, "நான், சஞ்சனா, நீ அப்பறம் நித்தின்" நித்தின், "எங்களைப் பத்தி அவனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "எனக்கு கூட ரெண்டு பேர் வொர்க் பண்ணறாங்கன்னு அவன் கிட்ட சொல்லி இருக்கேன். அது உனக்கு தெரியும் இல்லையா?" நித்தின், "தெரியும். ஆனா யார்ன்னு அவனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "யாருன்னு அவனுக்கு தெரியாது. என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு உதவறாங்கன்னு மட்டும் தெரியும். இந்த ஆபரேஷன் முடியப் போகுது. அதுக்கு முன்னாடி ஒரு கெட் டுகெதர் அப்படின்னு கேட்டான். அதான் உங்க கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்ன்னு இருக்கேன்" நித்தின், "Do you smell anything fishy?" ஜாஷ்வா, "ஆக்சுவலா இல்லை .. But I am not comfortable" சக்தி, "ஆண்டர்ஸனும் வர்றானா?" ஜாஷ்வா, "காட்! நோ!! சக்தி, ஆண்டர்ஸன் மட்ட ரகமான ஆள். ட்ரக் கார்டல்காரங்களுக்கு அவன் ஒரு காண்டாக்ட் அவ்வளவுதான். ஹாஃப்மன் அவனுக்கு அதுக்கு மேல் மரியாதை கொடுக்க மாட்டான்" சக்தி, "உன் அபிப்பராயத்தில் ஹாஃப்மன் எப்படி பட்டவன்?" ஜாஷ்வா, "ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட் அண்ட் ஸ்மூத். மற்றபடி நம்மை மாதிரித்தான்" நித்தின், "அப்பறம் ஏன் நீ அன்ஈஸியா ஃபீல் பண்ணறே?"
சக்தி, "அதுவும் வீட்டுக்குத்தானே கூப்பிட்டு இருக்கான்?" ஜாஷ்வா, "அதனால்தான் போலாம்ன்னு தோணுச்சு. உங்களுக்கு எதாவது பிரச்சனை இருக்கா?" சக்தி, "எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வாட் நித்தின்?" நித்தின், "நோ ப்ராப்ளம் ஜாஷ்" ஜாஷ்வா, "சரி, இந்த மாதிரி விஷயத்தில் சஞ்சனா ரொம்ப ஷார்ப். அவளைக் கேட்டுட்டு அப்பறம் கூப்பிடறேன்" மறுபடி அரை மணி நேரத்தில் ஜாஷ்வா கூப்பிட்டான். சக்தி, "சஞ்சனா என்ன் சொன்னா?" ஜாஷ்வா, "எதாவது பிரச்சனை பண்ணற ஆள் வீட்டுக்கு கூப்பிட மாட்டான்னு சொன்னா. சோ, போலாமா?" சக்தி, "ஓ.கே. நாங்க உன் வீட்டுக்கு வந்துடறோம் அங்கே இருந்த ஓண்ணா போலாம்"

No comments:

Post a Comment