Thursday, February 5, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 32


"thursday, 4 June 2009 4:00 PM Coffee Day Restaurant on Bangalore-Mysore NICE Highway வியாழன், ஜூன் 4, 2008 மாலை 4:00 பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு காஃபீ டே ரெஸ்டாரண்ட் மாலை காஃபிக்கு அந்த ரெஸ்டாரண்டில் நிறுத்தினர். மதிய உணவுக்கு மைசூரில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். பெங்களூரில் கோரமங்களாவில் இருக்கும் சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட் ஒன்றை இணையம் மூலம் அணுகி அதில் தங்க ஏற்பாடுகளை முன்னமே செய்தும் இருந்தனர். வழி நெடுக விவாதித்ததில் அவர்களது திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருந்தனர். சக்தி, "சோ, நாளைக்கு காலையில் ஆஃபீஸுக்கு போக வேண்டாம் கவர்னர் மாளிகைக்கு போய் அங்கே வெச்சு மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென் பொருளை அரசாங்கத்திடம் கொடுக்கலாம். வந்தனாவுக்கு அதுக்கு தகுந்த மாதிரி ஒரு ஈமெயில் அனுப்பறேன். ஓ.கே?" நித்தின், "ஸ்டில், ஆர் யூ ஷ்யூர்? எனக்கு என்னமோ அவனுகளை பிடிச்சு கொடுப்பதில் ஒரு ரிஸ்கும் இருக்காதுன்னு தோணுது" சக்தி, "இல்லைடா. அவனுககூட விளையாட வேண்டாம்ன்னு தோணுது. We have created enough havoc for them in the past few days. நம்மை விட அம்மாவுக்கு, சாந்திக்கு அங்கிளுக்கு ஆபத்துன்னு தோணுது" நித்தின், "இருபத்தி நாலு மணி நேர போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சு இருக்குன்னு வந்தனா ஈமெயிலில் சொல்லி இருந்தா இல்லையா? அப்பறம் ஏன் பயப் படறே?" சக்தி, "எனக்கு ஒரு கட் ஃபீல்"

நித்தின், "சரி, நீ சொல்ற மாதிரி நாளைக்கு நேரா போய் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென் பொருளை கொடுத்தடலாம். வந்தனாவை ஒரு ப்ரெஸ் கான்ஃபரென்ஸுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லு" சக்தி, "சொல்றேன், ஆனா இவ்வளவு சீக்கரம் அவங்களால் ஏற்பாடு செய்ய முடியுமான்னு தெரியலை. கவர்னர் ஊரில் இல்லைன்னா?" நித்தின், "வேறு யாராவது மத்திய அரசு பிரதிநிதி கிட்ட கொடுக்கலாம். வந்தனாவின் பாஸ்கிட்ட கொடுக்கலாம்" சக்தி, "சரி ...பட், அதுக்கு முன்னாடி பெங்களூர் போய் சேர்ந்த உடனே உங்க அப்பாவை காண்டாக்ட் பண்ணனும்" நித்தின், "You mean to take care of the legal side?" சக்தி, "எஸ் .. " நித்தின், "அப்ப நம் ஃபோனையும் நாளைக்கு காலை வரை ஆன் செய்ய வேண்டாம்" சக்தி, "எஸ், ஃபோனை நாளைக்கு காலையில் ஆன் செய்யலாம். நிச்சயம் அடிக்கடி அவனுக ட்ரை பண்ணிப் பாத்து இருப்பாங்க" நித்தின், "ஆனா, நம்மை R&AW ஃபாலோ செஞ்சுட்டு இருப்பதை கவனிச்சு இருந்தா அவனுகளே நம்மை அணுகறதை கைவிட்டுடுவாங்க" சக்தி, "ஆக்சுவலா, நம் முந்தைய ப்ளான் படி அவங்க குன்னூரில் கண்காணிச்ச மாதிரி செய்யக் கூடாதுன்னு தானே அந்த GPS ட்ராக்கிங்க் சாஃப்ட்வேரை நம் ஃபோனில் லோட் செஞ்சு இருக்கோம்?. ஒரு நிமிஷத்துக்கு ஒரு முறை நாம் எங்கே இருக்கோம்ன்னு அவங்களுக்கு துல்லியமா தெரிஞ்சுக்க அந்த லிங்க்கையும் அனுப்பி இருக்கோம். ஆனா அதுக்கு இப்போ யூஸ் இல்லை" அவரகள் இருவரது கைபேசியிலும் GPS எனப் படும் Global Positioning System வசதி இருந்தது. பொதுவாக அந்த வசதி கைபேசியை உபயோகிப்பவர் தாம் இருக்கும் இடத்தை கூகுள் மேப் (Google Map) மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வேறு மென்பொருளை எழுதி தங்களது கைபேசிகளில் புகுத்தி இருந்தனர். அந்த மென்பொருள் ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு முறை கைபேசி இருக்கும் இடத்தை துல்லியமாக இணையத்தில் அவர்கள் அமைத்து இருந்த சர்வருக்கு அனுப்பும். சர்வரில் அவர்கள் புகுத்தி இருந்த வெப் சர்வீஸ் என்ற வகையான மென்பொருள் கைபேசியில் இருக்கும் மென்பொருள் அனுப்பும் விவரத்தை சேகரித்து வைக்கும். அவர்கள் கைபேசியை இயக்கிய நிமிடத்தில் இருந்து சர்வரில் அவர்கள் இருந்த வலை தளத்தின் ஒரு பக்கத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் காட்டும் படி அமைத்து இருந்தனர். அந்த பக்கத்திற்கான லிங்க்கை வந்தனாவுக்கு ஈமெயில் செய்து இருந்தனர். Thursday, 4 June 2009 5:30 PM Bangalore International Airport, Devanahalli, Bangalore வியாழன், ஜூன் 4, 2008 மாலை 5:30 பெங்களூர் சர்வதேச விமான நிலையம், தேவணஹள்ளி, பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இறங்கிய வந்தனாவும் முரளீதரனும் தங்களது பெட்டிகளுக்காக பாக்கேஜ் கரூஸலில் காத்து இருந்தனர். பெங்களூரில் தேவையான உதவிகளுக்கு உள்நாட்டு அமைச்சகத்தின் மூலம் ஏற்பாடுகளை செய்து முடித்தபின் மதியம் மூன்று மணிக்கு விமானத்தில் ஏறி இருந்தனர். வந்தனாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வந்தனா, "ம்ம்ம் .. நீங்க சொன்னது சரி. மூணு மணிக்கே வந்து ஷக்தி-நித்தின் ஆஃபீஸுக்கு பக்கத்தில் இருக்கும் ராயல் ஆர்கிட் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கா" முரளீதரன், "ம்ம்ம் .. நேரடியா போய் நித்தினை காண்டாக்ட் செய்ய வேண்டாம்ன்னு சொல்லு. அவங்க எப்படியும் நாளைக்கு ஃபோன் ஸ்விட்ச் ஆன் செய்வாங்க. அதுக்கு பிறகு ஃபோனில் மட்டும் பேசச் சொல்லு" வந்தனா, "சரி சார். நாம் எங்கே தங்கப் போறோம்?" முரளீதரன், "நம் கெஸ்ட் ஹவுஸில் தங்கலாம்ன்னு நினைச்சேன். What do you say?" வந்தனா, "தீபா தங்கி இருக்கும் ஹோட்டல் இன்னும் வசதியா இருக்கும் இல்லையா சார்?" முரளீதரன், "அவங்க ஆஃபீஸுக்கு பக்கத்தில் இருப்பது அவங்களை உடனடியா அணுக வசதிதான். ஆனா நாம் ஏற்பாடு செஞ்ச மாதிரி RATFஇல் (Rapid Action Task Force) இருப்பவங்களை சந்திச்சு பேசணும்ன்னா அது வசதிப் படாது. அனாவிசியமா ஆள் நடமாட்டம் அதிகமானா யாராவது சந்தேகப்பட வாய்ப்பு இருக்கு. ஒண்ணு செய்யலாம். நீ அந்த ஹோட்டலில் போய் தங்கு. நான் கெஸ்ட் ஹவுஸில் தங்கறேன்" வந்தனா, "சரி சார். நான் அவ ரூமிலேயே தங்கிக்கறேன்" முரளீதரன், "ஓ.கே" பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு புது ஈமெயில் வந்ததற்கான அறிவிப்பை கைபேசியில் படித்தாள். வந்தனா, "சார், சக்தி மறுபடி ஒரு மெயில் அனுப்பி இருக்கான். படிக்கறேன்" என்றவாறு அவனது ஈமெயிலை படித்துக் காட்டினாள் முரளீதரன், "ஐ திங்க் சென்ஸிபிளா முடிவு எடுத்து இருக்காங்க. முதலில் இருந்த வெறியில் தீவிரவாதிகளை பிடிச்சுத் தரணும்ன்னு முடிவு எடுத்து இருப்பாங்க. இப்ப யோசிச்சு இந்த முடிவை எடுத்து இருக்காங்க. நான் இப்பவே ஜே.டிகிட்ட செக்ரடரியை காண்டாக்ட் செய்யச் சொல்றேன். ப்ரெஸ் ரிலீஸுக்கு நீ நாளைக்கு காலையில் ஏற்பாடு செய். அவங்க காலையில் வரட்டும் ப்ரெஸ் ரிப்போர்டர்ஸ் எல்லாம் வந்ததுக்கு அப்பறம் ஹாண்ட் ஓவர் செய்யட்டும்" மனதில் பெரும் நிம்மதியுடன் வந்தனா, "ஓ.கே சார்" வந்தனா கைபேசியில் தீபாவை அழைத்து தான் அங்கு வருவதாக அறிவித்தாள். மாலை ஏழு மணியளவில் வந்தனா ராயல் ஆர்கிட் ஹோட்டலில் தீபா எடுத்து இருந்த அறையை அடைந்தாள். Thursday, June 4 2009 7:30 PM A Serviced Apartment in Koramangala, Bangalore வியாழன், ஜூன் 4, 2009 மாலை 7:30 பெங்களூர் கோரமங்களா பகுதியில் இருக்கும் ஒரு சர்வீஸ்ட் அபார்ட்மென்ட் மாலை ஏழு மணியளவில் அவர்கள் புக் செய்து இருந்த சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டை அடைந்து இருந்தனர். இருவரும் அறையில் இருந்த தொலைபேசி மூலம் தங்களது பெற்றோரின் கைபேசியிகளில் தொடர்பு கொண்டனர். மனோகரியின் கைபேசி நாட் ரீச்சபிள் என்று வந்தபின் வீட்டில் இருக்கும் தொலைபேசியை சக்தி அழைத்தான். ஸ்பீக்கர் ஃபோன் வசதி இல்லாததால் அறையில் இருந்த தொலைபேசி இணைப்பில் சக்தி பேச குளியல் அறையில் இருந்த இணைப்பில் நித்தின் பேசினான். சக்தி, "ஹல்லோ அம்மா" நித்தின், "ஹல்லோ ஆண்டி" மனோகரி, "சக்தி, நித்தின் எங்கேடா இருக்கீங்க? பத்திரமா இருக்கீங்களா?" சக்தி, "பத்திரமா இருக்கோம்மா. இப்பத்தான் பெங்களூர் வந்து சேர்ந்தோம்" நித்தின், "ஆண்டி. நீங்க ஜாக்கிரதையா இருக்கீங்களா? உங்களுக்கு செக்யூரிட்டி போட்டு இருக்காங்களா?" மனோகரி, "போட்டு இருக்காங்க. ஆனா ஈரோட்டுக்குள்ள எனக்கு செக்யூரிட்டிக்கு என்னடா அவசியம்?" சக்தி, "இல்லைம்மா அவனுகளை பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் ... " சொல்லச் சொல்ல அவன் குரல் உடைந்தது மனோகரி, "தெரியும். சீரியஸா இருக்காங்கன்னு கடைசியா தகவல் வந்தது அதுக்கு அப்பறம் அவங்களைப் பத்தி தகவல் இல்லைன்னு வந்தனா சொன்னா?" நித்தின், "வாட்? சீரியஸ்ஸா இருக்காங்களா? அவங்க இறந்துட்டதா நியூஸ் வந்தது?" மனோகரி, "அவங்க பாதுகாப்புக்காக அப்படி செய்தி கொடுத்து இருக்காங்களாம்" நித்தின், "Oh! Thank God!! ஆண்டி .. நீங்க எங்களுக்கு ரொம்ப ஆறுதலான நியூஸை கொடுத்து இருக்கீங்க" சக்தி, "பட், இன்னும் அவங்க க்ரிட்டிகலாத்தான் இருக்காங்க இல்லையா?" மனோகரி, "இல்லைடா. எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் பத்திரமா பிழைச்சுக்குவாங்கன்னு இருக்கு. ரெண்டு பேருக்கும் ஆண்டவன் அளவுக்கு அதிகமான கஷ்டத்தை எல்லாம் சின்ன வயசிலேயே கொடுத்துட்டான்" நித்தின், "Let us hope your words come true aunty" மனோகரி, "அது சரி, உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு அபாயம் இருக்கும் போது போலீஸுக்கு போகாம ஏண்டா எங்கேயோ சுத்திட்டு இருக்கீங்க?" நித்தின், "கவலையே படாதீங்க ஆண்டி. நாளைக்கு காலையில் முதல் வேலை அதுதான்." சக்தி, "நான் செஞ்ச இந்த வேலையை உங்ககிட்ட இருந்து மறைச்சதுக்கு சாரிம்மா" மனோகரி, "நீ சொல்லி இருந்தாலும் எனக்கு ஒண்ணும் புரிஞ்சு இருக்காது. ஆனா ஒரு வருஷமா நீங்க செய்றதை கண்டுபிடிக்கும் வேலையில் வந்தனாவும் தீபாவும் இருப்பது தெரிஞ்சும் அவ கிட்ட ஏண்டா மறைச்சே?" நித்தின், "ஆண்டி, அப்ப நாங்க டெவலப் செஞ்சதை தூக்கி அவங்ககிட்ட கொடுத்துடணும்ன்னு சொல்றீங்களா?" மனோகரி, "தப்பா எதுவும் செய்யலைன்னா எதுக்கு மறைக்கணும்?" சக்தி, "அம்மா, நாங்க செஞ்சது முழுக்க முழுக்க சட்ட பூர்வமா சரின்னு சொல்ல முடியாது. ஆனா யாருக்கும் எந்த தீங்கும் நாங்க விளைவிக்கலை. உண்மையில் இந்த அளவுக்கு அபாயம் வரும்ன்னு நினைக்கலை. அது எங்க தப்பு. உனக்கும், வந்தனாவுக்கும் எல்லாம் இதனால் அவமானம். சாரி" மனோகரி, "அவமானம் என்னடா? உலகமே வியக்கும் ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கேன்னு பெருமையாத்தான் இருக்கு. நீ மறைச்சேன்னு உன் மேல் கோவப் பட்டாலும் வந்தனாவுக்கு என்னை விட ரொம்ப பெருமை. உன் வருங்கால மாமனார் மாமியார் ரெண்டு பேரும் எனக்கு ஃபோன் பண்ணி பயப் படாம இருக்கச் சொன்னாங்க. அவங்களுக்கும் ரொம்ப பெருமைதான்" மேற்கொண்டு தாங்கள் செய்தவற்றைப் பற்றி தாயிடம் கூறவேண்டாம் என்று மறைத்தாலும் வந்தனாவிடம் எல்லா உண்மைகளையும் கூற அந்தக் கணமே முடிவெடுத்தான். சக்தி, "ஹப்பா! அப்படின்னா வந்தனா என்னை ஒண்ணும் பண்ண மாட்டான்னு சொல்லுங்க" மனோகரி, "அதுக்கு நான் க்யாரண்டி இல்லை. உன்னை ஒரு வழி பண்ணத்தான் போறா" சக்தி, "அம்மா இப்ப நாங்க ரொம்ப பேசலை. ஷாந்திகிட்ட ஃபோனைக் கொடுங்க அவகிட்ட பேசிட்டு வெச்சுடறேன். நாளைக்கு எல்லாம் நல்ல படியா முடிஞ்சுடும். உடனே புறப்பட்டு வந்தனாவையும் கூட்டிட்டு ஈரோட் வர்றேன்" மனோகரி, "ஓ, வந்தனா பெங்களூரில் இருக்காளா?" சக்தி, "நிச்சயம் இந்நேரம் வந்து இருப்பா" நித்தின், "அனேகமா என்னோட பிசாசும் வந்து இருக்கும் ஆண்டி. அவளையும் கூட்டிட்டு வர்றேன். பை" பிறகு சாந்தியிடம் அண்ணன்மார் இருவரும் சிறுது நேரம் பேசியபின் விடைபெற்றனர். அடுத்து மும்பையில் சுந்தரை அழைத்தனர். நித்தின், "ஹாய் டாட்" சக்தி, "ஹெல்லோ அங்கிள்" சுந்தர், "Good Lord, Nithin, Shakthi, where are you guys?" நித்தின், "We just reached Bangalore dad" சுந்தர், "சக்தி, உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு ஃப்ரெண்ட்ன்னு நினைச்சேன். ஏன் என்கிட்ட இதைப் பத்தி இதுவரைக்கும் சொல்லலை?" நித்தின், "டாட், யாருக்கும் தெரியாம செஞ்சாத்தான் அது ஹாக்கிங்க். அது உங்களுக்கே தெரியும் ... " சக்தி, "அங்கிள், இதை டெவலம் செய்ய ஆரம்பிச்சப்போ இவ்வளவு பவர்ஃபுல்லா அமையும்ன்னு நாங்க நினைக்கலை. டெவலப் செஞ்சதுக்கு அப்பறம் வெளியில் யாருக்கு சொன்னாலும் அபாயம்ன்னு சொல்லலை" சுந்தர், "தென் எப்படி தீவிரவாதிகளுக்கு நீங்கதான் அதை டெவெலப் பண்ணினீங்கன்னு தெரிஞ்சுது?" சக்தி, "அங்கிள் அது ஒரு பெரிய கதை. உங்களை நேரில் பார்க்கும் போது ஒண்ணு விடாம சொல்றேன். உங்க உதவியும் தேவைபடுது எங்களுக்கு" சுந்தர், "என்ன? சம்பாதிச்ச பணத்தை எல்லாம் கணக்கில் கொண்டு வருவதற்கா?" நித்தின், "Not only that dad .. சில விஷயங்களில் நாங்க மாட்டிக்க கூடும். அதுக்கு" சுந்தர், "தீபாகிட்ட பேசினப்போ சட்ட விரோதமா நீங்க எதுவும் செய்யலைன்னு சொன்னா!" சக்தி, "There are something we did that are grey areas as for as legality is concerned .." சுந்தர், "Tell me this ..உங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலம் தெரிஞ்சே யாருக்காவுது எந்த விதத்திலாவுது தீமை செஞ்சீங்களா?" நித்தின், "சத்தியமா இல்லை" சக்தி, "அந்த மாதிரி நாங்க செய்ய மாட்டோம்ன்னு உங்களுக்கு தெரியாதா அங்கிள்?" சுந்தர், "தெரியும். ஒரு கன்ஃபர்மேஷனுக்காக கேட்டேன். எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க. நீங்க என்ன செஞ்சு இருந்தாலும் எந்த அரசாங்கமும் உங்களை பிடிக்காமல் இருக்க நானும் வீரபத்ர ராவும் கியாரண்டி கொடுக்கறோம்" நித்தின், "அவரை நாங்க இதுவரைக்கும் அணுகவே இல்லை டாட்" சுந்தர், "நீங்க மாங்க்ஸ் பாட் நெட்டை வெச்சுட்டு அரசாங்கத்தை கிண்டல் அடிக்கற மாதிரி எதாவுது செஞ்சு இருக்கலாம். அதை வெச்சுட்டு அமெரிக்க அரசாங்கம் உங்களை அரெஸ்ட் செய்யப் பார்க்கும்ன்னு தீபா யூகிச்சு இருக்க்கா. உடனே அவளோட அப்பாவை அலர்ட் பண்ணி இருக்கா. அவர் என்னிடம் பேசினார். நான் ஆல்ரெடி ரெண்டு அமெரிக்கன் லாயர்ஸ் கூட பேசியாச்சு"

சக்தி, "வாவ், ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்" சுந்தர், "Shakthi ...stop alienating me. அது சரி, அந்த தீவிரவாதிகளை பிடிச்சுக் கொடுக்க நீங்க ஏன் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கறீங்க?" நித்தின், "இல்லை டாட். அந்த ப்ளான் ட்ராப்ட்" சுந்தர், "பேசாம அந்த மாங்க்ஸ் பாட் நெட்டை இந்திய அரசாங்கத்திடம் சர்ரண்டர் செஞ்சுடுங்க. அப்பறம் அவனுகளுக்கு உங்களை துரத்தி ஒரு பிரயோஜனமும் இருக்காது" சக்தி, "அங்கிள், இதை பத்தி நீங்க இன்னும் முழுசா தெரிஞ்சுக்கலை. அரசாங்கத்திடம் கூட நாங்க கொடுக்க விரும்பலை. நல்லதுக்கு மட்டும்தான் இதை உபயோகிக்கணும். நாங்க இதை எந்த விதமான கெட்ட விஷயத்துக்கும் உபயோகிக்காமல் இருக்க உத்திரவாதம் கொடுக்கத் தயார். எங்களை கண்காணிக்க அரசாங்கத்துக்கு உதவும்படி மாங்க்ஸ் பாட் நெட்டின் நடவடிக்கை அத்தனையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருள் எழுதி இருக்கோம். அதை மட்டும்தான் அரசாங்கத்திடம் கொடுக்கப் போறோம்" சுந்தர், "சரி எவ்வளவு நாள் இந்த மாதிரி ஒளிஞ்சு விளையாடப் போறீங்க?" நித்தின், "டாட், நாளைக்கு காலையில் பெங்களூர் கரவர்னர் மாளிகைக்கு போய் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென்பொருளை அவங்க கிட்ட கொடுத்துட்டு ப்ரொட்டெக்க்ஷன் கேக்கப் போறோம். ஒரு ப்ரெஸ் ரிலீஸுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கோம். டி.வில நியூஸ் வந்துதுன்னா அந்த தீவிரவாதிகள் எங்களை அணுகுவதை மறந்துடுவாங்க" சுந்தர், "Go ahead! I am proud of you my Boys!!"அடுத்து தத்தம் காதலியரிடம் பேசினர். சக்தி வந்தனாவை அவளது கைபேசியில் அழைத்தான். சக்தி, "ஹாய் ஹனி" வந்தனா, "ஹாய் டியர்" சக்தி, "ஹனி, உன் குரலைக் கேட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு" வந்தனா, "ரொம்ப ஐஸ் வெக்காதே. ஈமெயிலில் திட்ட முடியலை. I am really mad at you ..உன் கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு நான் இருக்கேன். How dare you hide something from me? நீதான் மோர்லான்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?" சக்தி, "ஏன் அழுதே?" வந்தனா, "தெரியலை. ஒரு வருஷமா நீ ரகஸியமா செஞ்சுட்டு இருப்பதை நான் அதே ஒரு வருஷமா தேடிட்டு இருந்ததை நினைச்சேன். ரொம்ப கஷ்டமா இருந்துது. தீபா கூட கிண்டல் அடிச்சா" சக்தி, "ஆனா நீ என் கிட்ட மறைச்சே. இல்லையா?" வந்தனா, "அது என் வேலை சம்மந்தப் பட்டது. எப்படி உன் கிட்ட வெளிப்படையா சொல்ல முடியும் சொல்லு?" சக்தி, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோட வேலை இல்லைதான். ஆனா இப்ப உனக்கு அதைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கும். அதுக்கு நான் என் வேலையை விட அதிக மதிப்பு கொடுக்கறேன். அதை கைப் பற்றும் வேலையில் நீ இருக்கேன்னு தெரிஞ்சும் நான் எப்படி உன் கிட்ட வெளிப் படையா சொல்ல முடியும் நீ சொல்லு" வந்தனா ஸ்தம்பித்துப் போனது அவளது மௌனத்தில் இருந்து தெரிந்தது. வந்தனா, "பட், இதைச் சொல்லு. மாங்க்ஸ் பாட் நெட்டை விளம்பர ஈமெயில் அனுப்புவதை தவிர வேற எதுக்காவுது உபயோகிச்சு இருக்கீங்களா?" சக்தி, "ஹனி, எங்களால் யாருக்கும் எந்த நஷ்டமோ கெடுதலோ வரலை. இது சத்தியம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் உன்னிடம் எதையும் மறைக்காம சொல்றேன். சரியா?" வந்தனா, "சக்தி, நான் மனோகரி ஆண்டி கிட்ட பேசும் போது அவங்க உன் அப்பா எப்படி செத்துப் போனார்ன்னு சொன்னாங்க. உனக்கு மேற்கத்திய அரசுகள் மேல் இருக்கும் வெறுப்பு எனக்கு நல்லா தெரியும். நீ என்ன செஞ்சு இருந்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். நம் ரெண்டு பேருக்கும் இடையே இனிமேல் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது" சக்தி, "ஐ லவ் யூ" வந்தனா, "தெரியும். அதைவிட பல மடங்கு ஐ லவ் யூ. புரிஞ்சுக்கோ" சக்தி, "I am the luckiest person on earth" வந்தனா, "சரி, நாளைக்கு நீ கடைசியா எழுதிய மெயில் படிதானே ப்ளான்? மறுபடி அதில் எந்த மாற்றமும் இல்லையே?" சக்தி, "இல்லை. நாளைக்கு காலையில் கவர்னர் மாளிகைக்கு போறோம். நீ இப்போ எங்கே இருக்கே?" வந்தனா, "பெங்களூரில் ராயல் ஆர்கிட் ஹோட்டலில் தீபாவோட இருக்கேன். என் பாஸும் பெங்களூரில்தான் இருக்கார். நாங்க எல்லாம் இன்னைக்கு மத்தியானம் வந்தோம்" சக்தி, "கவர்னர் ஊரில் இருக்காறா?" வந்தனா, "ஊரில் தான் இருக்கார். ஹோம் செக்ரடரியும் ஃபாரின் செக்ரடரியும் நாளைக்கு வர்றாங்க. ப்ரெஸ்ஸுக்கும் சொல்லி ஆச்சு. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ரொம்ப ஃபேமஸாகப் போறீங்க" சக்தி, "வேற வழி இல்லைடா. இல்லைன்னா யூ.எஸ் கவர்ன்மெண்ட் எங்களை அரெஸ்ட் செய்யாமல் இருக்க இதுதான் ஒரே வழி" வந்தனா, "ஏன் உங்களை அரெஸ்ட் செய்யணும்?" சக்தி, "நாங்க தீவிரவாதிகளுக்கு உதவினோம்ன்னு சொல்லி அரெஸ்ட் செய்யலாம். ஆனா அவங்களோட முக்கிய காரணம் மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றுவதாத்தான் இருக்கும்" வந்தனா, "எங்க பாஸும் அதையே தான் சொன்னார். கவலைப் படாதே உன்மேல் யாரோட சுண்டு விரலும் படாம பாத்துக்க நான் இருக்கேன்" சக்தி, "வாவ்! ஜாஷுக்கு சஞ்சனா மாதிரி எனக்கு ஒரு வந்தனா!! க்ரேட்!!!" வந்தனா, "ஹல்லோ, உனக்காக மட்டும் இல்லை. நீ கண்டு பிடிச்சு வெச்சு இருக்கியே ஒண்ணு? அதுக்காகவும்தான்" சக்தி, "நான் கண்டு பிடிச்சது உனக்கு பிடிக்கலையா?" வந்தனா, "சீ, விளையாட்டுக்கு சொன்னேன். எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு." சக்தி, "I am waiting for tomorrow. அதுக்கு அப்பறம் உன்னை கூட்டிட்டு ஈரோட் போறேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒருதரம் என் வீட்டையும் பாத்துக்கோ. அப்பறமா என்னடா இந்த மாதிரி ஒரு ஏழையை கல்யாணம் பண்ணிட்டனேன்னு சொல்லக் கூடாது" வந்தனா, "இந்த மாதிரி மறுபடி பேசினா I will kill you. ஐ லவ் யூ. அதைச் சொல்லும் போது நீ பணக்காரனான்னு பாத்து சொல்லலை" சக்தி, "ஹே, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்" வந்தனா, "சரி, கல்யாண டேட் நாம் ப்ளான் பண்ணினபடிதானா?" சக்தி, "ம்ம்ம்ம் ... ஜாஷ் சஞ்சனாவைப் பத்தி கன்ஃபர்ம்டா நியூஸ் வந்ததுக்கு அப்பறம் முடிவெடுக்கலாமே. ப்ளீஸ்?" வந்தனா, "நீ சொல்லுவேன்னு தெரியும். சும்மா கேட்டேன். எனக்கு புரியுது. Let us hope they are well" சக்தி, "You know something? I have started praying for that!" வந்தனா, "இந்த ஒரு வாரமா அது எனக்கு ஒன் மோர் ப்ரேயர்" சக்தி, "சரி, நாளைக்கு பார்க்கலாம். ஓ.கே?" வந்தனா, "O.k Chellam" சக்தி, "வாட் என்ன சொன்னே?" வந்தனா, "ஏன் அப்படி சொன்னா பிடிக்கலையா?" சக்தி, "ஹேய், வேற எதாவது தமிழில் பேசேன் ... " வந்தனா, "ம்ம்ஹூம் ... கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கோ. அதுக்கப்பறம் பாரு. பை" சக்தி, "பை ஹனி"அடுத்து நித்தின் தீபாவை அழைத்தான். நித்தின், "ஹாய் தீபா" மறுமுனையில் தீபா, "ஹாய் ஹீரோ" நித்தின், "ஹேய், எப்படி இருக்கே?" தீபா, "ம்ம்ம் நான் கேட்க வேண்டிய கேள்வி அது" நித்தின், "ஐ ஆம் ஃபைன். மூணு நாள் குன்னூரில் இருந்தோம். சாயங்காலம் பெங்களூர் வந்து கோரமங்களாவில் ஒரு சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டில் தங்கி இருக்கோம்" தீபா, "தெரியும்" நித்தின், "எப்படி?" தீபா, "நீங்க மும்பை ஏர்ப்போர்ட்டில் இறங்கினதில் இருந்து உங்க ரெண்டு பேரின் ஒவ்வொரு மூவும் முரளீதரன் சாரின் நெட் வொர்க் கண்காணிச்சுட்டு வந்து இருக்கு. இப்போ R&AWவின் சர்வேய்லன்ஸ் டீம் உங்களை கண்காணிச்சுட்டு இருக்கு" நித்தின், "ஹே, அப்படி செஞ்சா அந்த தீவிரவாதிகளுக்கு தெரிஞ்சுடும் அவங்க எங்களை அப்ரோச் பண்ண மாட்டாங்க" தீபா, "பண்ணாட்டா பரவால்லை. நாளைக்கு காலைல கவர்னர் மாளிகைக்கு நீங்க போனதுக்கு அப்பறம் உங்களை அப்ரோச் பண்ணுவதை சுத்தமா மறந்துடுவாங்க" நித்தின், "பிசாசே, எனக்கு உன்னை பார்க்கணும்ன்னு இருக்கு" தீபா, "சாரிடா கண்ணா. நான் கிளம்பி நேரா அங்கே வரலாம்ன்னு இருந்தேன். வந்தனாவும் முரளி சாரும் உங்க கண்ணாமூச்சி ஆட்டம் முடியறவரைக்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. இப்ப நீ சொல்லு நான் உடனே அங்கே வர்றேன்" நித்தின், "இல்லை. அவங்க சொன்னது சரிதான். வராதே. நான் நாளைக்கு வரைக்கும் பொறுத்துக்கறேன்." தீபா, "சரி. எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?" நித்தின், "ஒரு வருஷம் உன்னை தவிக்க விட்டேன்னு கோவமா இல்லையா?" தீபா, "முதலில் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சு. ஆனா இந்த ஒரு வருஷத்தில் எவ்வளவு கத்துட்டேன் தெரியுமா? அதுவும் உன்னாலே! I am happy and proud of you" நித்தின், "தாங்க்ஸ் டார்லிங்க்" தீபா, "அப்பா, ஒரு தடவை என்னை டார்லிங்க்ன்னு கூப்பிட வைக்கறதுக்கு எவ்வளவு ஐஸ் வெக்க வேண்டி இருக்கு. இல்லைன்னா எப்பவும் பிசாசு" நித்தின், "ஹேய், சாரி டார்லிங்க் ... இனிமேல் எப்பவும் டார்லிங்க்தான் ஓ.கே?" தீபா, "இல்லை. நீ என்னை எப்பவும் போல பிசாசுன்னே கூப்பிடு. அதுவும் எனக்கு பிடிச்சு இருக்கு" நித்தின், "சரி, நீ எதுக்கு வந்து இருக்கே. அங்களை கண்காணிப்பது போலீஸ் வேலையாச்சே. உன்னை எப்படி அல்லவ் பண்ணினாங்க?" தீபா, "அஃபீஷியலா நான் லீவில் இருக்கேன். என் சொந்த செலவில் பெங்களூர் வந்து ராயல் ஆர்கிட்டில் ரூம் எடுத்து தங்கிட்டு இருக்கேன்" நித்தின், "ஓ .. Now I get it. அப்பறம் நீ உங்க அப்பாவை அலர்ட் பண்ணினதுக்கு தாங்க்ஸ்" தீபா, "தாங்க் எல்லாம் பண்ணாதே. நான் செஞ்சது முழுக்க முழுக்க சுயநல நோக்கத்தில். நீ அமெரிக்கக் கம்பி எண்ணப் போயிட்டா அப்பறம் நான் யாரை கல்யாணம் செஞ்சுக்கறதாம்?" நித்தின், "ஜாஷ் சஞ்சனாவை பத்தி நினைச்சாத்தான் ரொம்ப ஆதங்கமா இருக்கு" தீபா, "I am keeping my fingers crossed" நித்தின், "You are telling me .. நான் கோவிலுக்கு போகலாம்ன்னு இருக்கேன்!!" தீபா, "ஆனா மனோகரி ஆண்டிதான் அவங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகாதுன்னு ரொம்ப தெளிவா இருக்காங்க"

நித்தின், "அவங்க நினைச்ச மாதிரி ஆக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயார்" தீபா, "ஒரு வேளை அவங்களை அமெரிக்க அரசாங்கம் ஜெயிலில் போட்டுட்டு உங்களை மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்கச் சொன்னா?" நித்தின், "உங்க அப்பாவும் எங்க அப்பாவும் எதுக்கு இருக்காங்க? சர்வதேச கோர்ட்டில் அமெரிக்காவை கிழி கிழின்னு கிழிக்கணும்" தீபா, "குட்! I love you so much!! நான் இதைத் தான் உன் கிட்ட எதிர்பார்த்தேன்" நித்தின், "And you know I love you as much" தீபா, "சரி, நாளைக்கு பார்க்கலாம். ரொம்ப லேட் ஆயிடுச்சு சீக்கரமா தூங்கு நாளைக்கு ப்ரெஸ் கான்ஃபரென்ஸில் பார்க்க ஃப்ரெஷ்ஷா இருக்கணும்" நித்தின், "ஓ.கே.பை" அடுத்த நாளைப் பற்றிய எதிர்பார்ப்புடன் நண்பர்கள் இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.

No comments:

Post a Comment