Monday, March 16, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 1

பூமியிடம் விடைபெற்றுச் செல்ல தொடங்கியிருந்த அஸ்தமனச் சூரியன், இரவின் வருகைக்காக தனது செந்நிற கிரகங்களால் வானத்தில் வாழ்த்து அட்டையை போல் ஓவியம் வரைந்து கொண்டிருக்க...

மலர்கள் மணம்வீசி நிலவுக்கு வரவேற்பு கவிதை வாசிக்க... பருத்தி வெடித்தார்ப் போல் செவ்வானம் முழுவதும் பஞ்சு பொதிகளாய் மேகங்கள்

அந்திவானம் அற்புதமான அழகை அள்ளித் தெளித்திருக்கும், அந்த வேளையில் சத்யன் தமிழ்ச்செல்விக்காக குச்சனூர் சனிபகவான் கோயில் வாசலில் காத்திருந்தான்.

நிமிடத்துக்கு ஒருமுறை சாலையை பார்ப்பதும் பிறகு தன் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தான் சத்யன்...இன்று சனிக்கிழமை எப்பவுமே மாலை ஐந்து மணிக்கெல்லாம் வரும் தமிழ்ச்செல்வியை இன்று மணி ஆறாகியும் இன்னும் காணலை... தமிழ் இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துடுவா என்று தனக்கே ஆறுதல் கூறி தவித்தபடி காத்திருந்தான் சத்யன்


சத்யன் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்தவனாக பிறந்தவன்... குச்சனூர் ஆண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு படித்து முடித்த மானவன்...
நல்ல உயரத்தில் சற்று ஒடிசலான தேகம்... அடர்ந்த கிராப் தலைமுடி...
அந்த காலத்து ராஜ வம்சத்தினர்க்கு இருப்பது போன்ற அகன்ற நெற்றி,
பார்ப்பவர் மனதை துளையிடுவதை போல கூர்மையான் சற்று பெரிய கண்கள்... நேரான நாசி.. பெண்களை போல் தடித்த உதடுகள்...
முகத்தில் வயதுக்கு மீறிய ரோம வளர்ச்சி.... நல்ல வெளுத்த நிறம் வெயிலின் தாக்கத்தில் மங்கியிருந்தது...
வகுப்பில் நன்றாக படிக்கும் நல்ல மானவன்... வீட்டில் அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து அம்மாவின் புடவைத்தலைப்பில் மறையும் மென்மையானவன்

அவன் அப்பா ஈஸ்வரமூர்த்தி பல ஏக்கர் நிலத்தில் சிலபேரை வைத்து வேலைவாங்கிக் கொண்டு ஊரில் பெரிய மனிதராக கம்பீரமாக நடமாடிக்கொண்டிருப்பவர்...
அவருடைய கம்பீரமான தோற்றம் எதையும் சாதித்துவிடும்....
அவன் அம்மா சாந்தி சத்யனைப் போலவே நல்லவள்.. அழகானவள்.. ஒரு குடும்பபொறுப்புள்ள தாய்...
சத்யனின் தஙகை சங்கீதா ஒன்பதாம் வகுப்பு மானவி அண்ணன் மீது பாசம் கொண்ட அழகான தங்கை... மொத்தத்தில் ஒரு பாசமான குடும்பம்

சத்யன் சிறிதுநாட்களாக காதல் வயப்பட்டிருந்தான்... அவள் பெயர் தமிழ்செல்வி... அதே ஊரில் வசிக்கும் ஏழை விவசாயியின் மகள்... நல்ல குறும்புக்காரி...நல்ல மாநிறத்தில் நாட்டுக்கட்டையான தேகம்.... சத்யனைவிட இரண்டு வயது பெரியவள்... பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயாருடன் விவசாய வேலைக்கு போவாள்...

சத்யனுக்கு அவளை சிறுவயதில் இருந்தே தெரியும்... ஆனால் முகத்தில் மீசை முளைக்க ஆரம்பித்ததில் இருந்துதான் அவன் மனதில் தமிழ் மீது காதலும் முளைக்க ஆரம்பித்திருக்கிறது...

சத்யன் தன் காதலை தமிழ்ச்செல்வியிடம் சொல்லவில்லை... கல்லூரி படிப்பை முடித்துவிட்ட பிறகு சொல்லலாம் என்று இருக்கிறான்... தமிழ் இவனிடம் தனிப்பட்ட முறையில் அன்பாக பழகுவாளே தவிர இவனை காதலிக்கிறாளா என்று தெரியவில்லை




சத்யன் அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக காத்திருந்தான்... தூரத்தில் அவள் வருவது தெரிந்ததும சத்யன் உற்சாகமாக அவளை எதிர் நோக்கி போனான்

இவனை பார்த்ததும் தமிழ்ச்செல்வி ஒரு மலர்ந்த புன்னகையுடன் “ என்ன சத்யா ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கியா... இன்னிக்கு வேல முடிஞ்சு வரவே ரொம்ப லேட்டாயிருச்சு... உங்க வயக்காட்டுல தான் கரும்புக்கு களை வெட்ட போனேன்.... கரும்பு சோனை கையெல்லாம் கிழிச்சுருச்சு சத்யா” என்று தன் இருண்டு கையையும் சத்யன் முன் நீட்டி காண்பித்தாள்

அவள் முழங்கை வரை சிவந்த கோடுகள் தெரிய... சத்யனுக்கு அய்யோ என்று இருந்தது.... “ நீ முழுக்கைச் சட்டை போட்டுட்டு போகவேண்டியது தானே... இதுமாதிரி கையை கிழிக்காதுல்ல” என்று சத்யன் பரிவுடன் சொல்ல

“என்கிட்ட முழுக்கைச் சட்டை இல்லை சத்யா... ஒரு சட்டை தரேன்னு உங்கப்பா நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லிருக்கார்” என்றவள் அங்கிருந்த ஒரு கடையில் கற்பூரம் வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைய.... சத்யன் அவள் கையை பற்றி தடுத்தான்

“கொஞ்சம் இரு தமிழு நான் உன்கிட்ட பேசிட்டு போயிறேன் ... அப்புறமா லேட்டாச்சுன்னா அப்பா திட்டுவார்” என்று சத்யன் கெஞ்சும் குரலில் கூறியதும்

“சரி வா அந்த பக்கமா போய் பேசலாம்” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு கோவிலின் பின்புறமாக போனாள் தமிழ்

“ம் இப்போ சொல்லு என்ன பேசப்போற” என்று ஒரு மரத்தில் ஒயிலாக சாய்ந்தபடி தமிழ்செல்வி கேட்க

“தமிழு நான் படிக்கறதுக்காக சென்னைக்கு போறேன் வர்றதுக்கு மூனு வருஷம் ஆகும்... என் மாமா வீட்டுல தங்கி படிக்கப்போறேன்...நாளைக்கு காலையில போறேன்... நான் போயிட்டு வரவா தமிழு” என்று சத்யன் பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு கேட்க

“அய்ய அதுக்கு ஏன் இப்புடி மூஞ்சிய வச்சுகிட்டு இருக்க... நல்லபடியா போய் படிச்சுட்டு வா... மெட்ராஸ்கார பசங்க கூட சேர்ந்து கெட்டுபோயிறாத... இப்போ போறமாதிரியே நல்ல புள்ளயா திரும்பிவா” என்று தமிழ்ச்செல்வி பெரிய மனுஷியாக புத்திமதி சொல்ல

“அதுக்கில்ல தமிழு நான் வர்றவரைக்கும் என்னை மறக்காம இருப்பியா” என்று சத்யன் ஏக்கமாக கேட்க

“இதென்னடா சத்யா சின்னபுள்ள மாதிரி பேசுற.. உன்னை போய் என்னால மறக்க முடியுமா... நீ நல்லபடியா போய் படிச்சு பெரியாளா வா.. அதுவரைக்கும் எனக்கு மாப்பிள்ளை வந்தாக்கூட கட்டிக்காமா இருக்கிறேன் என்னா சத்யா சரிதானே” என்று தமிழ் காற்றில் விலகிய தனது தாவணியை சரிசெய்து கொண்டே கூற

அவள் வார்த்தைகளை கேட்ட சத்யனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.. உடனே தன் கைகளில் இருந்த ஸ்வீட் பாக்கெட்டை அவளிடம் கொடுத்து “ இந்த தமிழு எங்கப்பா நேத்து தேனிக்கு போனப்ப வாங்கிட்டு வந்தாரு... என் பங்கை அப்படியே வச்சிருந்து உனக்கு எடுத்துட்டு வந்தேன்” என்று குடுக்க

“ அதை கையில் வாங்கி பிரித்து கொஞ்சம் எடுத்து தன் வாயில் போட்டவள் “ உங்கப்பா எப்பவுமே இப்படித்தான் வாங்கிட்டு வருவாரா...இன்னிக்கு கூட களனியில் வேலை செய்யறப்ப எனக்கு ஒரு கேக் மாதிரி எதுவோ குடுத்தாரு சத்யா ரொம்ப நல்லாருந்துச்சு... சரி எனக்கு நேரமாச்சு நான் சாமிய கும்பிட்டுட்டு வீட்டுக்கு போய் சோறு ஆக்கனும்” தன் கைகளை தாவணியின் முந்தானையில் துடைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி கோயிலை நோக்கி போனாள்

சத்யன் நிமிர்ந்த நடையுடன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு பிறகு தனது சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்துக்கு போனான்

சத்யனுக்கு சென்னைக்கு போக விருப்பமே கிடையாது... அவன் அம்மா சாந்திதான் அவனை வற்புறுத்தி தனது தூரத்து சொந்தகாரர்கள் வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்று ஈஸ்வரனிடம் அனுமதி வாங்கியிருந்தாள்

சத்யனுக்கு சினிமா விளம்பரம் ஓவியம் போன்றவற்றில் ஆர்வமிருந்ததால்... அவனை சென்னைக்கு அனுப்பி விசுவல் கம்னிகேஷன் படிக்க ஏற்பாடு செய்திருந்தாள் சாந்தி...

மறுநாள் காலையில் எழுந்ததும் சத்யன் சென்னை செல்ல அரைமனதோடு தயாராக... அவன் அம்மா ஆயிரம் புத்திமதிகள் சொல்லி அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப... சத்யன் வீட்டு வாசலில் தமிழ்ச்செல்வி நின்றுகொண்டிருந்தாள்

சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது தன்னை வழியனுப்ப அவள் வந்திருக்கிறாள் என்று நினைத்து முகம் மலர “என்ன தமிழு இந்த பக்கம்” என்று சம்பரதாயமாக விசாரிக்க

“ நேத்து உங்கப்பா முழுக்கை சட்டை ஒன்னு தர்றேன்னு சொன்னாரு தமிழு அதான் வந்தேன்... நீ மெட்ராஸ்க்கு கிளம்பிட்டயா” என்று அவள் கேட்க

சத்யனுக்கு அவள் தன்னை பார்க்க வரவில்லை என்றதும் ஏமாற்றமாக இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ ம் கெளம்பிட்டேன் தமிழு” என்றவன் தன் அம்மாவிடமும் விடைபெற்று குச்சனூர் பஸ் நிலையத்தை நோக்கிப் போனான்

அவன் மனம் முழுவதும் தனது தாவணி தேவதை தமிழ்ச்செல்வியின் ஞாபகம்தான்... அய்யோ இந்த மூன்று வருஷம் எப்போது முடியுமோ என்று நினைத்து கலங்கியபடி குச்சனூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ஏறினான்.. சத்யன் திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் போகவேண்டும்

அவன் உடல் மட்டும்தான் சென்னை கிளம்பியது உள்ளம் குச்சனூரில் அந்த தாவணிப் பெண்ணின் முந்தானையை பிடித்துக்கொண்டு உலாவந்தது



“ பாவாடை தாவணியில்

“ நீ அழகுதான்

“ அதைவிட அழகு

“ அடிக்கடி அதை நீ

“ சரிசெய்து கொள்ளும் அழகு

“ நீ தாவணி உடுத்த

“ கற்றுக்கொண்டதை சொல்லேன்

“ நான் கவிதை எழுத

“ கற்றுக்கொண்டதை சொல்கிறேன்

சென்னை வந்த சத்யனுக்கு ஒரே காங்க்ரீட் காடுகளாய் தெரிந்த அந்த மாநகரத்தை பார்க்கவே வித்யாசமாக இருந்தது

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதனருகிலே ஒரு குடிசையை கட்டி... என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் சென்னையில் இன்னமும் தேயாமல் ஓடிக்கொண்டிருந்தது

ஆற்றில் நீச்சல் பழகி, கண்மாயில் நீந்தி விளையாடி, குளத்தில் குதித்து கும்மாளமிட்ட சத்யனுக்கு.. ஒரே பக்கெட் தண்ணீரில் அத்தனை வேலைகளையும் முடிப்பது என்ற இந்த சென்னை வாழ்க்கை ரொம்பவே சிரமமாக இருந்தது...

சென்னை மாநகரின் தண்ணீர் தட்டுபாடு.... குடிக்கும் தண்ணீரில் இருந்து, டாஸ்மார்க் கடைகளில் க்யூவில் நிற்க்கும் நம்நாட்டு குடிமகன்கள் வரைக்கும் தெளிவாக தெரிந்தது



அடுத்த பிளாட்டில் கொலை நடந்து அந்த பிணம் அழுகி அதன் நாற்றம் வெளியே வரும்வரை அதை கவனிக்காத பிளாட் வாசிகளும்.... பக்கத்து வீட்டின் புருஷன் பொண்ட்டி சன்டையில் பஞ்சாயத்து பேசபோய் மண்டையை உடைத்துக்கொள்ளும் குடிசைவாசிகளும் சரிசமமாக நிறைந்த சென்னையை மனதில் நிலைநிறுத்த சத்யன் வெகுவாக முயற்சித்தான்

தலையில் முக்காடிட்டு தன் காதலன் பின்னால் அமர்ந்து தங்களின் மார்பு பந்துகளால் அவன் முதுக்கு ஒத்தடமிட்டு கைகளால் அவன் இடுப்பை சுற்றிவளைத்து கொண்டு இரண்டுச் சக்கர வாகனத்தில் பயனம் போகும் பட்டணத்து சிட்டுகளைப் பார்த்து வாயைப் பிளப்பான் சத்யன்... நாமும் இதேபோல் தமிழ்ச்செல்வியுடன் ஒருநாளைக்கு போகத்தான் போகிறோம் என்று நினைத்துக்கொள்வான்

காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டான்... இப்போதெல்லாம் அவனுடைய மொத்த கவனமும் படிப்பில் தான் இருந்தது... அவனுக்கு மனதில் நிறைய ஆசைகள் இருந்தன ... தன் தங்கையை படிக்கவைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்...

எந்தநேரமும் வயல், வரப்பு ஆடு மாடு வேலையாட்கள் என்று கஷ்டப்படும் தன் அம்மாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டு ஒரு ராணியைப் போல் வாழவைக்க வேண்டும்.... என் அம்மா ராணி என்றால் என் தமிழ்ச்செல்விதான் இளவரசி... அவளை பைக்கில் உட்காரவைத்து இந்த சென்னையையே சுற்றிவர வேண்டும்....

திடீரென அவளுக்கு சுடிதார் போட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்து தானாகவே சிரித்துக்கொள்வான்... பைக்கில் இரண்டு பக்கமும் கால்போட்டு அவளுடைய திரண்ட மார்புகளை தன் முதுகில் அழுத்துக்கொண்டு போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து சிலிர்த்துக்கொள்வான்

சென்னை வாழ்க்கையில் ஒருநாள் ஒரு நிமிடமாக கடந்தது.... முதல் வருடம் படிப்பு முடிந்து லீவில் குச்சனூர் போனபோது தமிழ்ச்செல்வி அவள் அக்காவுக்கு பிரசவம் என்று தாராபுரம் போய்விட சத்யன் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி வந்தான்

இரண்டாவது வருடம் இவனால் ஊருக்கு போகமுடியவில்லை... விடுமுறையில் கம்பியூட்டர் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னையிலேயே தங்கிவிட்டான்...

இன்னும் ஒரு வருடம் தானே கண்மூடி கண் திறப்பதற்குள் கழிந்துவிடும் என ஆறுதல் பட்டுக்கொண்டே தனது கவனத்தை விளம்பர படங்கள் எடுப்பதின் நுணுக்கங்களை செலுத்தி கவனத்துடன் கற்றுக்கொண்டான்

மூன்று வருடம் படிப்பு முடிந்து குச்சனூர் கிளம்ப தயாராகி கொண்டிருந்த போது... அவன் அம்மாவிடம் இருந்து அவன் செல்லுக்கு போன் வந்தது... ஆன் செய்து பேசினான்

“ என்ன சத்யா கிளம்பிட்டயா” என்று அவன் அம்மாவின் அன்பு குரல் கேட்க

“ம் ரெடியாகிக் கிட்டே இருக்கேன்மா... உனக்கு இங்கருந்து ஏதாவது வாங்கிட்டு வரனும்னா சொல்லும்மா நான் வாங்கிட்டு வர்றேன்” என்று சத்யன் கேட்டதும்

“அதெல்லாம் ஒன்னும் வேனாம் சத்யா நீ கிளம்பி வந்தா போதும்” என்றவள் எதையோ சொல்லத் தயங்குவது போல இருக்க

“என்னம்மா விஷயம் சொல்லுங்க” என சத்யன் வற்புறுத்தியதும்

“ ஒன்னுமில்ல சத்யா நானும் சங்கீதாவும் இப்போ பெரியகுளத்தில மாமா வீட்டுல இருக்கோம்பா... நீ குச்சனூர் போகவேண்டாம் நேரா இங்க வந்துரு” என்று அமைதியாக கூற

சத்யன் அவசரமாக “ என்னம்மா மாமா தாத்தா யாருக்காவது உடம்பு சரியில்லையா ஏன் பெரியகுளம் போனீங்க” என்று பதட்டமாக கேட்டான்

“ இங்க யாருக்கும் ஒன்னும் இல்ல நாங்க சும்மாதான் வந்திருக்கோம் சத்யா... நீ மாத்தி மாத்தி கேள்வி கேட்காம சீக்கிரமா புறப்பட்டு பெரியகுளம் வா” என்று கூறிவிட்டு இனைப்பை துண்டித்து விட்டாள் சாந்தி

சத்யனுக்கு குழப்பமாக இருந்தது ... ஏன் அம்மா பெரியகுளம் வரச்சொன்னாங்க என்று பலவாறு யோசித்தும் அவனுக்கு விடைக் கிடைக்காமல் குழப்பமான மனநிலையில் கிளம்பினான்

சென்னையிலெ இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸில் கிளம்பி அதிகாலையில் திண்டுக்கலில் இறங்கியவன் அங்கிருந்து பஸ்ஸில் கிளம்பி பெரியகுளம் வந்து அவன் மாமா வீட்டை அடைந்த போது காலை ஐந்துமணி ஆகியிருந்தது 

சத்யன் தனது செருப்பை வாசலில் விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைய ... அவன் அப்பாவை தவிர அவன் குடும்பத்தின் மற்ற அத்தனை பேரும் அங்கே இருந்தனர்...

ஆனால் அத்தனைபேரும் எளவு வீட்டில் இருப்பதுபோல் இருக்க
சத்யன் தன் தோளில் இருந்த பையை எடுத்து வீசிவிட்டு தன் அம்மாவிடம் ஓடினான்... “அம்மா என்னம்மா ஆச்சு... அப்பா எங்க அவருக்கு என்ன ஆச்சு” என்று கலவரத்துடன் கேட்க

அவன் அம்மா பதிலே சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்து கதறியழுதாள்
அம்மா அழுவதை பார்த்து சங்கீதாவும் அவன் இன்னொரு தோளில் சாய்ந்து அழுதாள்

சத்யனுக்கு ஒன்றுமே புரியவில்லை தன் தோளில் இருந்த தன் தாயின் முகத்தை நிமிர்த்தி “ அம்மா அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு தயவுபண்ணி அழுவாம விஷயத்தை சொல்லும்மா” என்று கண்ணீர் குரலில் கேட்க

“உங்கப்பனுக்கு என்ன கேடு அந்த ****** மவன் நல்லா சுகமாத்தான் இருக்கான்” என்று சத்யனுக்கு பின்னால் இருந்து கர்ஜனையான அவன் மாமாவின் குரல் கேட்க

சத்யனின் குழப்பம் இன்னும் அதிகமானது ... மாமா இப்படியெல்லாம் அப்பாவை பேசமாட்டாரே... ஒருவேளை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பெரிய சண்டையா... என்று நினைத்து அதை தன் அம்மாவிடமே கேட்டான்

அதற்க்கும் பதில் சொல்லாமல் சாந்தி கண்ணீருடன் தலையசைக்க... சத்யன் தன் அம்மாவை விட்டுவிட்டு எழுந்து தனது தாய்மாமனிடம் வந்தான்

“மாமா என்ன விஷயம்னு சொல்லுங்க... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையா... அம்மா ஏன் இப்படி அழறாங்க” என்று கேட்க

“இனிமேல் உங்கம்மா காலம் பூராவும் அழவேண்டியதுதான்... அந்த மாதிரிதானே உங்கப்பன் பண்ணிட்டான்” என்று அவன் மாமா கூற ... அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது

சத்யனுக்கு ஏதோ பெரியதாக நடந்திருக்கு என்று புரிய... தன் மாமாவை பார்த்தான்

அவர் இவனை தன் தோளில் சாய்த்து “ இவ்வளவு பெரிய புள்ளைகளை வச்சுகிட்டு அந்த படுபாவி என்ன வேலை பண்ணிருக்கான் பாரு” என்று கண்ணீர் குரலில் கூற

சத்யன் அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு “அப்பா என்ன மாமா செய்துட்டார்” என்று அவரை வற்புறுத்தி கேட்க

“ ம் உங்கப்பன் அவன் வயக்காட்டில் வேலை செய்ற யாரோ ஒரு சிறுக்கியை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டான்” என்று சத்யனின் மாமா சொல்ல
சத்யன் தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது

அதிர்ந்து போய் “ என்ன மாமா சொல்றீங்க” என்ன அதிர்ச்சியான குரலில் கேட்க

“ ஆமாம் சத்யா அவன் கல்யாணம் பண்ணிகிட்டு ஐஞ்சு மாசம் ஆச்சு.... அதுக்கு முன்னாடியே உங்கப்பனுக்கும் அவளுக்கும் தொடுப்பு இருந்திருக்கும் போல அந்த நாரச்சிறுக்கி வயித்துல வாங்கிகிட்டா போல உடனே உங்கப்பன் ஏதோ கோயில்ல வச்சு தாலியை கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான் ...



"அன்னிக்கு இங்க வந்த உன் அம்மா இங்கயே தான் இருக்கா... இதெல்லாம் சொன்னா உன் படிப்பு கெட்டு போயிடும்னு நாங்க எதுவுமே உனக்கு சொல்லலை சத்யா... இப்போ தெரியுதா உன் அப்பன் லட்சணம்” என்று மாமா சொல்ல சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்

வெகுநேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த சத்யன் பிறகு சுதாரித்து தன் அம்மாவிடம் போய் அவள் கையை பற்றி “ அம்மா நீ எதுக்கும் கவலை படாதம்மா உனக்கு நான் இருக்கேன் என்று சொல்ல

சாந்தி தன் மகன் தோள் சாய்ந்து கண்ணீருடன் “அந்த முண்டை என் வாழ்க்கையில மண்ணள்ளிப் போடுவான்னு எதிர்பார்க்கலை சத்யா” என்று கதற

“யாரும்மா அந்த பொம்பளை” என்று சத்யன் ஆத்திரமாக கேட்டான்

“எல்லாம் அந்த பாவி தமிழ்ச்செல்வி தான் சத்யா... என்னை இப்படி நட்டாத்துல விட்ட முண்ட நல்லா இருப்பாளா சத்யா” என்று சத்யனை பார்த்து கண்ணீர் விட்டு கேட்க

அவளுக்கு பதில் சொல்லும் நிலைமையில் சத்யன் இல்லை அவன் கண்கள் இருட்ட சரிந்து தரையில் விழுந்தான்


" பூவென்று பெண் தழுவிப்...

" பொய்யென்று போனவுடன்...

" பூ வென்று துப்பிவிட்டு...

" புலம்பி அழும் நிர்வாணம்...

" ரோமக்கால் ஆசையிலும்...

" ரோஜாக்கள் வாடையிலும்...

" ரோகத்தால் கொண்டவுடன்..

" நோய்கொடுக்கும் நிர்வாணம்!


No comments:

Post a Comment