Monday, March 30, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 2

சத்யன் கோபமாக தனக்கு இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு போய் படுத்துக்கொண்டு குமுறினான்

அவன் அப்பாவின் மிரட்டலுக்கு சத்யன் பயப்படவேண்டியதில்லை,... கம்பெனியில் இவன் பங்குகளை விற்றாலே சில கோடிகள் தேறும்.... ஆனால் தயங்குவது அவன் அம்மாவுக்காகத்தான் அவள் இவனுக்காகவே வாழ்பவள்,...

' சிறுவயதிலிருந்து இவன் செய்யும் தவறுகளை மறைத்து மன்னித்து அரவனைப்பவள்,... அதனால்தான் சத்யன் என்ன நடந்தாலும் தன் தாயைவிட்டு போககூடாது என்று முடிவோடு இருந்தான்,...

‘ அவனைப்பொறுத்த மட்டில் இந்த பணம் வீடு எதுவுமே தேவையில்லை,... கம்பெனி அவன் அப்பா பெயரில் இருந்தாலும் அதை நடத்துவது இவன்தான்,... அதிலிருந்து வரும் லாபங்களில் இவன் பங்கே ஏராளமாக வரும்,...

அதுமட்டுமின்றி சென்னை நகரின் முக்கியமான இடங்களில் இருக்கும் மூன்று செராமிக்ஸ் ஷோரூம்ங்களில்,... ஒன்று இவன் பெயரில் இருக்கிறது ,... இவற்றின் சேமிப்பில் இவன் அண்ணாநகரில் ஒரு பிளாட் வாங்கி அதை மாயாவின் பெயரில் எழுதி வைத்திருக்கிறான்,... இப்போது இருவரின் குடித்தனமும் அங்கேதான் நடக்கிறது

மாயா, அவளை நினைத்த மாத்திரமே சத்யனுக்கு முகம் உடனே மலர்ந்தது,.. மாயா ஒரு விளம்பர மாடல்,... ஒருமாதிரி வெளுத்த அழகி,... மும்பையை சேர்ந்தவள்,... சத்யனின் கிரானைட் கம்பெனிக்கு ஒரு விளம்பரத்திற்கு மாடலாக வந்தவள்,...

‘சத்யனின் நோயாளி மனைவி இறந்து போய் ஒருவருடம் கழித்து,.. அவன் கம்பெனிக்கு நடிக்க வந்தவள் சத்யனின் கம்பீரத்தில் மயங்கி சென்னையிலேயே தங்கிவிட்டாள்... சத்யனும் அவளின் வளவளப்பான தேகத்தில் சொக்கிப்போய் அவள் வீட்டுக்கு அடிக்கடி போய்வந்தவன்,... வாடைகை வீட்டில் இருந்தவளை சொந்த வீடு வாங்கிக்கொடுத்து நிரந்தரமாக வைத்துக்கொண்டான்,...

அவளையே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவுசெய்து,..கடந்த ஒருமாதத்துக்கு முன்பு அவன் அப்பாவிடம் சொல்ல,... அவர் ஒரு தனியார் துப்பறியும் நிருவனத்தை அனுகி மாயாவை பற்றிய தகவல்களை சேகரிக்க சொன்னார்,... அவர்கள் மாயாவை பற்றி கொடுத்த தகவல்கள் தயானந்தனுக்கு மட்டுமல்ல சத்யனுக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது

மாயா ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள்,...சத்யனை சந்திப்பதற்கு முன் ஏழுமுறை அபார்ஷன் செய்திருக்கிறாள்,... அதைவிட மோசம் அவள் சத்யனைவிட மூன்று வயது பெரியவள்,.... சத்யனை சந்திப்பதற்கு முன்புவரை அத்தனை கெட்ட பழக்கங்களும் இருந்திருக்கறது,.... இப்போதும் வெளிநாடுகளுக்கு ஸ்டார் நைட் என்று போய்விட்டு அந்த பழக்கத்தை தொடர்கிறாள் என்று துப்பறியும் நிறுவனம் கொடுத்த தகவலில் சொல்லப்பட்டிருந்தது

ஆனால் சத்யன் அதையெல்லாம் நம்ப மறுத்தான்,... அவளை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக தன் அப்பா சதி சொல்கிறார் என்று தன் அம்மாவிடம் சாதித்தான்,...

இதுவரை அவனுக்கு எவ்வளவோ சலுகைகள் கொடுத்த அவன் அம்மா மாயா நல்லவளாகவே இருந்தாலும் அவளை சத்யன் திருமணம் செய்து கொள்ள முழுமூச்சாக மறுத்தாள்,... மீறினால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்று ஒரேயடியாக கூறிவிட்டாள்

அதன்பிறகு ஆரம்பித்ததுதான் இந்த பெண் தேடும் படலம்,... மான்சியை ஒரு திருமணவீட்டில் பார்த்துவிட்டு அவன் அம்மாவுக்கு பிடித்துப்போய்,... அவள்தான் இந்த வீட்டின் மருமகள் என்று முடிவே செய்துவிட்டார்கள்

சத்யனுக்கு இன்று மாலை கோயிலில் சந்தித்த மான்சியின் ஞாபகம் வந்தது,... ம் குழந்தை முகமாக இருந்தாலும் நல்ல அழகுதான்,... ஆனால் ரொம்ப சின்னவயசாக இருக்கா,... பாவம் அவளையும் இந்த சிக்கலில் மாட்டிவிடக் கூடாது,... அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான்

இவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மான்சியை திருமணம் செய்து கொண்டால்,... அதன்பின் மாயாவிடம் எதை சொல்லி சமாளிப்பது,... ரொம்பவும் கோபப்படுவாளே,... தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்வாள்,... இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது

ஆனால் தன்னை பிரிந்து வாழ மாயா நிச்சயமாக சம்மதிக்கமாட்டாள்.... அவளும் இந்த சமயம் பார்த்து இந்தியாவில் இல்லை,... ஒரு புரோகிராம்க்காக மாஸ்கோ போயிருக்கிறாள்,... மாயா வரும் வரை திருமணத்தை தள்ளியும் போட முடியாது,...

ஏனென்றால் அவள் வெளிநாட்டுக்கு போயிருப்பது அப்பாவுக்கு தெரியும்,... அதனால் அவள் வருவதற்குள் திருமணத்தை முடிக்கத்தான் பார்ப்பார்,... முடியாது என்று மறுத்தால் அம்மா கண்ணீரிலேயே கரைந்து போய்டுவாங்க,....
திருமணம் முடிந்தபிறகு நிச்சயமாக இரட்டை வாழ்க்கை வாழமுடியாது,... பாவம் இந்த மான்சியையும் ஏமாற்ற முடியாது,... மாயாவையும் சமாளிக்க வேண்டும்

இதற்க்கெல்லாம் ஒரேவழி இவர்களின் ஏற்பாட்டின் படி திருமணம் செய்து கொள்ளவேண்டும்,... பிறகு மாயா வரும்வரை இந்த மான்சியை தொடக்கூடாது,... மாயா வந்தபிறகு அவளிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லி அதன்பிறகு,... இந்த மான்சிக்கு ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து டைவர்ஸ் வாங்கிக்கலாம்,..இதைவிட்டால் வேற வழியில்லை

அதுவரை யாருக்கும் இது தெரியாதவாறு பார்த்துக்கனும்,... முக்கியமாக அந்த மான்சிக்கு தெரியக்கூடாது,....

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவளை தொடாமல் இருப்பதற்காக என்ன காரணம் சொல்வது,...ஏதாவது ஒரு காரணத்தை சொன்னாலும் அதை அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே,... இது சத்யனுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது

சரி அதை திருமணத்திற்கு பிறகு பார்க்கலாம்,... இப்போது முதல் வேளையாக காலையில் எழுந்ததும் அம்மாகிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிறனும்,... இல்லேன்னா அப்பாவால மறுபடியும் ஒரு பூகம்பம் வெடிக்கும்

எல்லாவற்றையும் சரியாக யோசித்து பிளான் பண்ணிய சத்யன்,.... தூங்கும் போது இரவு மணி ஒன்றாகிவிட்டது

காலையில் எழுந்து அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும்,... எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,... தயானந்தன் தன் மகனை சந்தோஷத்துடன் தழுவிக்கொண்டார்

அடுத்த ஒரே வாரத்தில் திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றது,.... சத்யனின் இரண்டாம் திருமணம் என்பதால் அதிக ஆடம்பரம் இல்லாமல்,... வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது 


சத்யன் தன் காரில் சென்னை திநகரில் இருந்த தனது செராமிக்ஸ் ஷோரூமை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொன்டிருந்தான்,... அவன் மனம் முழுவதும் நாளை நடக்கவிருக்கும் திருமணத்திலேயே இருந்தது,...

அன்று கோயிலில் மான்சியை சிறிதுநேரமே பார்த்தாலும்,.. அவள் முகம் நன்றாக ஞாபகம் இருந்தது,...அன்று ஏதாவது ஒரு வார்த்தை அவளிடம் பேசியிருக்கலாம்,.. என்று இப்போது நினைத்தான்

ம்ம் மான்சி என்ற பெயர்கூட நல்லாத்தான் இருக்கு,... ஒருவேளை எனக்கு மா என்ற எழுத்தில் பெண்கள் அமையவேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டானோ,...மாதங்கி,.. மாயா, மான்சி,.. ம்ஹூம்,.... இதை எண்ணி சத்யனுக்கு தன்னைமீறி சிரிப்பு வந்தது

அவளுக்கு முகம் குழந்தைத்தனமாக இருந்தாலும்..நல்ல ஐந்தாம் பிறைப் போன்ற நெற்றியும்,... யப்பா அந்த கண்கள்தான் எவ்வளவு பெரிசு,...செதுக்கிய புருவமும்,.. பார்த்த கொஞ்சநேரத்திலேயே படபடவென அடித்துக்கொன்ட அந்த இமைகளும்,... பாலில் தவறிவிழுந்த கருப்பு திராட்சை போல மிதந்து உருண்ட கருவிழியையும்,... பார்த்த யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது

அவளின் கத்தி போன்ற கூர்மையான மூக்கில் மூக்குத்தி போட்டிருந்தாளா என்று நினைவுபடுத்திப் பார்த்தான்,.. ம்ம் பச்சைக் கல்லில் சிறுபுள்ளி போல மூக்குத்தி போட்டிருந்தாள்,...

மாசுமருவற்ற அவளுடைய கன்னங்கள் ஞாபகம் வந்தது,... இப்படி ஒரு புள்ளி கூட இல்லாமல் கூட யாருக்காவது கன்னங்கள் அமையுமா,...ஏன் இதோ இவளுக்கு அமைந்திருக்கிறதே,... லேசாக விழுந்த கன்னக்குழி கூட சத்யனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது

அவள் உதடுகள் எப்பவுமே இப்படித்தான் ஈரமாக, சிவந்து இருக்குமா,... லேசாக வாயை திறந்துகொண்டு அவள் தன்னை பார்த்ததால் அவளின் பற்கள் கூட நன்றாக தெரிந்தது,.. வெள்ளையாக பளீரென்று முன்பல் லேசாக உயர்ந்து,... ம்ம் இவளையெல்லாம் சிரிக்க வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்து நாள் பூராவும் ரசிக்கலாம், ... அந்த கொடுப்பினை யாருக்கு இருக்கோ,...

எது எப்படியோ என்னை பிரிந்தபின் அவள் வேறு யாரையாவது திருமணம் செய்து நல்லபடியாக வாழ எல்லா ஏற்பாடுகளும் செய்யவேண்டும்,... நமக்கு தெரிந்தாற்ப் போல் யாராவது நல்லவனை தேடி,.. அவனிடம் நான் இவளை தொடவே இல்லை என்ற உன்மையை நிரூபித்து அவனுக்கு இவளை மறுமணம் செய்து கொடுத்துவிடவேண்டும்

அவள் என்ன படித்திருக்கிறாள் என்று தெரியவில்லையே,... என்ன படித்திருந்தாலும் அவளுக்கு படிப்பில் ஆர்வமிருந்தால்,.. விவாகரத்துக்கு பிறகு மேல் படிப்புக்கு அவளுக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று உறுதியாக எண்ணினான்



ஆனால் அவள் என்னை ஏன் திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டாள்,... அவள் வீட்டில் வற்புறுத்தி இருப்பார்களோ,... ச்சே பாவம் ஏழையாய் பிறந்தாலே இப்படித்தான் எல்லாவற்றுக்கும் கட்டுப்பட வேண்டும் போல

அவள் என்னை திருமணம் செய்துகொண்டு வந்துமோ எதையுமே சொல்லக்கூடாது,... பாவம் சிறுபெண் இந்த நிச்சயம் ஏமாற்றத்தை தாங்கமாட்டாள்,...

முதலில் எதையாவது சொல்லி சமாளித்துவிட்டு,... பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையை அவளுக்கு புரியவைக்க வேண்டும்,...
அவளை பார்த்தாள் நல்லவள் போல்தான் இருக்கு,... அதனால் நிச்சயமாக என்னை புரிந்துகொள்வாள்,... யாரிடம் காட்டிக்கொடுக்க மாட்டாள்

எதுவானாலும் நாளை இரவு தெரிந்துவிடும்,... ஒருவேளை நாளை இரவு அவள் ஏதாவது பிரச்சனை செய்து,... ஊரை கூட்டி கலாட்டா பண்ணிவிட்டால் என்ன செய்வது,...

அப்படி ஊரைக் கூட்டி கலாட்டா செய்தால்,... அதன்பிறகு அவளுக்கு இந்த சத்யன் யார் என்று அவளுக்கு புரியவைக்க வேண்டியதுதான்.,... என்று நினைத்துக்கொண்டான்

மான்சியை பற்றியே யோசித்துக்கொண்டே வந்ததில் நேரம் கடந்து போனதே தெரியவில்லை,... அவன் வீடு வந்துவிட்டது ,...

காரைவிட்டு இறங்கிய சத்யனுக்கு ,.. ஒருவிஷயம் ஆச்சர்யமாக இருந்தது,... இவ்வளவு நேரம் அந்த மான்சியை பற்றியேதான் நினைத்துக்கொண்டு வந்தோமா என்று ஆச்சர்யத்துடன் புன்னகைத்தபடி தனது அறைக்கு போனான்

ஆனால் அவன் கவணத்தில் வராத இன்னொரு விஷயமும் இருந்தது,... அது சத்யன் இவ்வளவு நேரமாக மாயாவை பற்றியும் சுத்தமாக அவன் மனதில் நினைக்கவில்லையே அதுதான்

மான்சிக்கு சத்யன் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது,... என்னை பிடிக்காமலா சம்மதிச்சுருப்பார் என்று நினைத்து மனதை ஆறுதல் படுத்திக்கொன்டாள்

ஆனால் அவனுடன் போனிலாவது பேசவேண்டும் அவன் குரலை மறுபடியும் கேட்கவேண்டும்,... அவன் சம்மதத்தை அவன் வாயால் சொல்லி கேட்கவேண்டும் என்ற ஆவலை அவளால் அடக்கமுடியவில்லை...

திருமணத்துக்கு முதல் நாள்,..தன் அப்பாவிடம் சத்யனின் செல் நம்பரை கேட்டு வாங்கி,... தன் அப்பாவின் செல்லை எடுத்துக்கொன்டு மாடிக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து,... உள்ளமும் உடலும் லேசாக உதறலெடுக்க அவன் நம்பரை செல்லில் அழுத்திவிட்டு காத்திருந்தாள்

இரண்டே ரிங்கில் எதிர் முனையில் எடுக்கப்பட்டது,... சத்யனின் கம்பீரக் குரல் “ ஐ ஆம் சத்யன்,... யூ ” என்றது

மான்சிக்கு உதறல் அதிகமானது,.. என்ன பேசுவது என்பதே மறந்து போனது ,.. நாக்கெல்லாம் வரண்டு போனது,.... உள்ளங்கையில் ஏற்ப்பட்ட வியர்வையில் செல் ஈரமானது,.. எச்சிலைக் கூட்டி விழுங்கி வரண்ட தொண்டையை சரிசெய்து கொண்டு,.. பேச வாய்த் திறப்பதற்க்குள்

“ஏய் யாரது கால் பண்ணிட்டு பேசாம இருக்கறது” என சத்யனின் குரல் அதட்டியது

அந்த அதட்டலில் மான்சி பட்டென வாய் திறந்து “ நான் மான்சி” என்றாள் பதட்டமாக

சத்யன் சட்டென அமைதியானான்,... இவ்வளவு நேரம் அவளை பற்றிய சிந்தித்து கொண்டிருக்க அவளே போன் செய்யவும்,... அதுவும் அந்த குரலின் இனிமையில் சத்யனும் சிறிது தடுமாறினான்

அவனிடமிருந்து பதில் இல்லாது போகவே மான்சி கலவரத்துடன் “லைன்ல இருக்கீங்களா” என்று மெல்லிய பயந்த குரலில் கேட்க

சத்யனுக்கு அவளுடைய பயந்த குரல் மனதை என்னவே பண்ணியது,... ச்சே நாம பேசாம இருக்கவும் ரொம்ப பயந்துட்டாளா,... கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவன் நிமிர்ந்து மல்லாந்து படுத்துக்கொண்டு,... அவளை சமாதானப் படுத்தும் விதமாக

“ சொல்லு மான்சி லைன்லதான் இருக்கேன்” குரலில் இனிமையை வரவழைத்துக் கொண்டு கேட்டான்

மான்சி அந்த குரலின் கம்பீரங்கலந்த இனிமையில் சொக்கிப் போனாள்,... அவன் குரலில் ஒலித்த தன் பெயர் அவள் காதில் கவிதை போல் கேட்டது,... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

“ சும்மா உங்ககிட்ட பேசலாம்னு தான் போன் பண்ணேன்”,.. என்றாள்

“ம் என்ன பேசனும் பேசு நான் கேட்கிறேன்” சத்யனுக்கு இவள் விடியவிடிய பேசினால் கூட கேட்க்கலாம் என்று எண்ணினான்

“ அது.... அது... வந்து என்னை” என்று மேலே பேசமுடியாமல் மான்சி தயங்கி நிறுத்தினாள்

“ம் சொல்லு வந்து, என்னை, அதுக்கடுத்து என்ன” சத்யனின் குரலில் லேசான கிண்டல்

அவன் தனது தயக்கத்தை கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்த மான்சி “ ம் என்னை உங்களை பிடிச்சுருக்கா” என்றாள் பட்டென

சத்யன் யோசித்து,,. மனதுடன் ஆலோசித்து,.. பதில் சொல்வதற்குள்,.. அவன் உதடுகள் அவன் கட்டுப்பட்டை மீறி அவள் கேள்விக்கு பதிலாக “ ம் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறிவிட்டது

இப்போது அவளிடம் என்ன சொன்னோம் என்று சத்யனுக்கே குழப்பமாகிவிட்டது,.. இவளுடன் இன்னும் நாலு வார்த்தைக் கூட சரியாக பேசவில்லை,... அதற்க்குள் அவள் குரலுக்கும், வார்த்தைக்கும் என்ன சம்மதிக்க வைத்துவிட்டாளே,.. இது எப்படி?

சத்யனின் சம்மதத்தை அவன் வாயால் கேட்ட மான்சிக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பதே மறந்து,, ஒரு மோனநிலைக்கு போனாள்

நிதானித்த சத்யன் “ என்ன மான்சி பேச்சயே காணோம்,... என்னாச்சு,.. உனக்கு என்னை பிடிச்சுருக்கா” என்று பதிலுக்கு கேட்டான்

அவன் அப்படி கேட்டதும்,... ச்சே என்னோட சம்மதத்தையும் கேட்கிற இவரைப்போய் அன்னிக்கு தப்பா நெனைச்சிட்டோமே என வருந்தி ,.. “ம்ம்” என்றாள்

“ம்ம்ன்னா இது வார்த்தையா மான்சி” என்றான் சத்யன்

“ம்ம்ன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தம்,.. இதுகூடவா உங்களுக்கு தெரியாது,... அய்யோ அய்யோ ”என்று மான்சி தனது குழந்தை குரலில் கூறிவிட்டு சிரிக்க


“ ஆமா,... ஏன் என் சிரிப்பு நல்லால்லையா,.. ஏன்டி இப்படி சிரிக்கிறேன்னு எங்கம்மாக் கூட திட்டுவாங்க,... ஆனா கண்டுக்காம மறுபடியும் அவங்க முன்னாடியே நல்ல சிரிச்சு காமிச்ட்டு உதைவாங்குவேன்” என்று வெகுளித்தனமாக படபடவென பேசிய மான்சி,... ரொம்ப பேசிட்டமோ என்று தயங்கி நிறுத்திவிட்டாள்

சத்யனுக்கு அவளின் வெகுளித்தனமான குரலில் இவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது போல் இருந்தது,... இவளையா ஏமாற்ற வேண்டும்,... இவளையா திருமணம் ஆனதுமே விலக்கி வைக்கவேண்டும்,... இவளையா விவாகரத்து செய்யவேண்டும்,... என்ற சரமாரியான கேள்விகள் சத்யனின் நெஞ்சை குத்திக் குடைந்தது,...

“ என்ன பேசவேயில்லை,.. உங்களுக்கும் என் சிரிப்பு பிடிக்கலையா,... அப்படின்னா இனிமே உங்க முன்னாடி சிரிக்கமாட்டேன்,... உங்களுக்கு எப்படி பிடிக்கும்னு சொல்லுங்க அது போல நடந்துக்கிறேன்,.. சரியா” என்று மான்சி வருத்தமான குரலில் கூற

“ இல்லம்மா வேண்டும் நீ இவ்வளவு நாளா எப்படி இருந்தியோ அதேமாதிரி இரு,... யாருக்காகவும் மாறவேண்டாம்,... எனக்கு உன் சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு போதுமா” என்றான் சத்யன் தடுமாறிய குரலில்

“ம் சரி” என்றாள் மான்சி,.... அவள் செல்லில் பணம் தீர்ந்து போனதற்கான பீப் ஒலி வந்தது,... அய்யோ தானாக லைன் கட்டாகிவிட்டால் அவன் தப்பா நினைப்பானோ என்று எண்ணிய மான்சி அவசரமாக

“ நான் வச்சிரட்டுமா” என்று மெலிந்த குரலில் கேட்க

அவள் அப்படி கேட்டது சத்யனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் “ ம் வச்சிடு,... நாளைக்கு காலையில கோயில்ல பார்ப்போம்,... குட்நைட் மான்சி ” என்று கூறிவிட்டு தனது இனைப்பை துண்டித்து விட்டு செல்லை பக்கத்தில் போட்டுவிட்டு,.. அய்யோ என்று நெற்றியில் அடித்துக்கொண்டான்

மான்சியின் முகமும், குரலும், சிரிப்பும்,சத்யனின் கட்டுப்பாட்டை உடைத்து விட்டிருந்தன,.. அவன் கண்முன்னே மாயா, மான்சி என்ற இரு பெரிய கேள்விக்குறிகள் வானுயர எழுந்து வளைந்து நின்று பயமுறுத்தியது

சற்று முன் தான் யோசித்த எல்லா விஷயத்திலும் தோற்றுவிட்டதை உணர்ந்தான்,... அடுத்து என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவே கூடாது என்று நினைத்தான்,.... இனி தானே எந்த முடிவையும் எடுக்கக்கூடாது,... எல்லாம் கடவுள் சித்தப்படியே நடக்கட்டும், என்று கண்களை மூடிக்கொண்டான் ... மூடிய கண்களுக்குள் மான்சி வந்து நின்று இவனை பார்த்து கைகொட்டி சிரித்தாள்

சத்யனுடன் பேசியதும் மான்சிக்கு தலைகால் புரியவில்லை,... செல்லை உதட்டில் வைத்து முத்தமிட்டாள்,... கைகளை உயர்த்தி பல்லே பல்லே என்று சர்தார்ஜி டான்ஸ் இரண்டு ஸ்டெப் ஆடினாள்,...

பிறகு தனக்கு தெரிந்த மாதிரி வெஸ்டர்னுக்கு மாறினாள்,...ஆனால் அது அவளது பாவாடை தாவணிக்கு ஒத்துவரவில்லை,....

அந்த இரவுநேரத்தில் மொட்டைமாடியில் அவளுடைய நடனம் தொம் தொம்மென்று என்ற சத்தத்துடன் எதிரொலித்தது

உடனே பரதநாட்டியத்திற்க்கு மாறி,.. இடுப்பை வளைத்து கிளியை தன் வலக்கையில் ஏந்தி நிற்கும் மீனாக்ஷியை போல்,... இவளும் செல்லை தன் வலக்கையில் ஏந்தி இடுப்பை வளைத்து நின்றாள்

அவள் பக்கத்தில் சுந்தரேஸ்வரர்றாக சத்யன்தான் இல்லை,.... மற்றபடி மான்சி அந்த கிளியேந்திய கரத்தாளாகவே நின்றிருந்தாள்





" நீ குழந்தையாக பிறந்து...

“ தேவதையாக வளர்ந்தவளா...

“ அல்லது தேவதையாக பிறந்து....

“ குழந்தையாக வளர்ந்தவளா

“ உன்னை முதன்முதலாக...

“ பார்த்த போதுதான்...

“ ரோஜாவின் அழகையும்

“ சந்தனத்தின் வாசத்தையும்...

“ தேவகானத்தின் இனிமையையும்...

“ பட்டின் மென்மையையும்...

“ ஈரத் தென்றலின் சிலிர்ப்பையும்...

“ மொத்தமாக உணர்ந்தேன் அன்பே! 



No comments:

Post a Comment