Thursday, March 5, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 12


சத்யன் வெளியே போனதும் சிறிதுநேரம் அங்கே நின்றவள் “ அவ்வளவு வேகமா என்னை அணைக்கிற மாதிரி பிடிச்சான் அப்புறம் ஏன் உதறிவிட்டு போயிட்டான் அதுக்கள்ள நான் சலிப்பாயிட்டேனா” என நினைத்துக் கொண்டிருந்த மான்சிக்கு ரேகா கிளம்ப வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வர அவளும் மாடியை விட்டு கீழே வந்தாள்

ரேகாவிடம் கலாவதி சோபாவில் அமர்ந்து பேசிகொண்டு இருக்க சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தான்

மான்சி மெதுவாக வந்து சத்யன் பக்கத்தில் அமர்ந்து கொள்ள... சத்யன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ரேகாவிடம் “ அப்புறம் நீங்க என்ன பண்ணப்போறீங்க ரேகா மேல படிக்கப் போறீங்களா ... இல்லை மேரேஜ் பண்ணிக்கப் போறீங்களா”... என சம்பிரதாயமாக கேட்க

“ மேல படிக்க போறேன் சார்.. மான்சி கூட எம்எஸ்சி பண்ணப்போறதா சொன்னா” என்று ரேகா பாதியில் நிறுத்த

சத்யன் மான்சியிடம் திரும்பி “அப்படியா மான்சி நீ என்கிட்ட சொல்லவேயில்லை.... ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா .. என்னையும் என் குடும்பத்தையும் என் சொத்துக்களையும் பார்த்துக்க மான்சிக்கு இந்த படிப்பறிவு போதும்னு நெனைக்கிறேன்... என் மான்சி சொல்றே” என்று மான்சியிடம் கேட்க

அவள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள் ...



ரேகா எழுந்துகொண்டு “ அப்போ நான் கிளம்புறேன் மான்சி ... உன்கிட்ட பேசனும்னா எந்த நம்பர் பேசறது ஏதாவது நம்பர் குடு மான்சி” என்று கேட்டதும்

சத்யன் முந்திக்கொண்டு தனது கார்டை எடுத்து ரேகாவிடம் கொடுத்து “இதிலே என்னோட செல் நமபர் இருக்கு அதுக்கு பேசுங்க நான் மான்சிகிட்டு குடுக்கிறேன்” என்று கூற

“சரிங்க சார் பை மான்சி” என்று ரேகா வெளியே போக ... அவளை வழியனுப்ப மான்சியும் கூடவே கேட்வரை போனாள்


கேட்டருகே போனதும் ரேகா நின்று “மான்சி உன் புருஷன் நல்லவராதான் தெரியுது... என்ன கொஞ்சம் முரட்டுக் குணம் போல இருக்கு... நீ கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்க...
அவர் பேசுறத பார்த்தா எங்கே அவரைவிட்டு நீ பிரிஞ்சு போயிடுவியோங்கற பயம் அதிகமா தெரியுது மான்சி....
இயல்பாவே பணக்கார பசங்க அவ்வளவா கட்டுபாடோட இருக்கறதில்லை...
இவரும் அதுபோலன்னு நெனைச்சுக்கிட்டு அவரை திருத்தி குடும்பம் நடத்து மான்சி....
அவர் உன் மேல வச்சுருக்கறது ஆசையா அன்பா எதுன்னு எனக்கு சொல்லத்தெரியவில்லை மான்சி...
ஆனா எதுவாயிருந்தாலும் இனி உன் வாழ்க்கை அவரோடதான் அதை மட்டும் மறக்காத....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ... இன்னும் ரெண்டு நாள்ல ரகு இந்தியா வரறான்... அவனுக்கு உன்னை பத்தின எந்த விஷயமும் தெரியாது... அவன் வந்ததும் நான் எப்படியாவது பேசி சமாளிச்சுக்கிறேன்.. நீ எதுவும் அதைப்பத்தி கவலைப்படாதே... சரி மான்சி எனக்கு நேரமாச்சு கிளம்பறேன் ... ஏதாவது விஷயமிருந்தா போன் பண்றேன்” என்ற ரேகா மான்சியை தன் தோளோடு அணைத்து ஆறுதலாய் முதுகை வருடிவிட்டு கண்கலங்க மான்சியிடம் விடைபெற்றாள்

மான்சிக்கு ‘கல்லூரியில் அவ்வளவு அரட்டையடிக்கும் ரேகா இப்போது இவ்வளவு பொறுப்புடன் பேசியது ஆச்சரியமாக இருந்தது

அடுத்தநாள் மான்சி தோட்டத்தில் மாயனுடன் ரோஜா செடிகளுக்கு மண் அனைத்து கொண்டிருக்க... மாயன் தொட்டிகளை ஒரே சீராக அடுக்கிக்கொண்டு இருந்தான்

மான்சி ஏதோ யோசனையாக இருந்தவள் பிறகு மெதுவாக “மாயா” என்று அழைக்க

உடனே கைவேலையை அப்படியே விட்டுவிட்டு வந்த மாயன் “ சொல்லுங்க சின்னம்மா” என்றான்

“மாயா உனக்கு முத்து இப்போ எங்க இருக்காருன்னு தெரியுமா” என மெதுவாக கேட்க

“ம் தெரியும்மா கொஞ்சநாள் முன்னாடி அவன் சொந்தக்காரங்க வந்து இங்கே இருக்கிறே சாமானெல்லாம் எடுத்துட்டு போனாங்க அப்போ விசாரிச்சேன்... பத்தமடை பக்கத்தில் ஏதோ கிராமத்தில் இருக்கான்னு சொன்னாங்க... ஆனா ரொம்ப கஷ்டப்படுறதா சொன்னாங்க... நம்ம சின்னய்யா கணக்குப்பிள்ளை கிட்ட கொஞ்சம் பணம் கொடுத்து முத்துகிட்ட குடுக்க சொல்லிருக்காரு ஆனா அவன் வேனாம்னு திருப்பி அனுப்பிட்டான்” என்று கேட்டதற்கு மேலேயே மாயன் தகவல் சொல்ல

“மாயா நாளைக்கு நாம போய் முத்துவ பார்த்துட்டு வரலாம்.. யாராவது கேட்டா நான் எனக்கு தேவையான துணிகள் வாங்க போறோம்னு சொல்லு... போய்ட்டு வந்தபிறகு சொல்லிக்கலாம்... சின்னய்யா வந்ததும் நான் கார் கேட்கிறேன் நாளைக்கு காலையில ரெடியாயிரு மாயா” என்று சொல்ல

மாயனுக்கு இவங்க ஏன் அவனை பார்க்க குழப்பமாக இருந்தாலும் மான்சி எதையுமே ஞாயமாக செய்வாள் என்று நம்பிக்கையில் “சரிம்மா போகலாம்” என்றான்

அன்று இரவு சத்யனின் அறைக்கு கதவை விரலால் தட்டிவிட்டு உள்ளே போனாள் மான்சி


அவளைப் பார்த்த சத்யன் “புருஷன் ரூமுக்குள்ள கதவை தட்டிட்டு வர்ற ஒரே பொண்டாட்டி நீயாதான் இருப்ப... சரி ஏதோ விஷயமா வந்திருக்க இப்போ உன்னை டென்ஷனாக்க வேனாம்.... சொல்லு மான்சி என்ன விஷயம்’” என சத்யன் கேட்டதும்

“எனக்கு நாளைக்கு கொஞ்சம் கார் வேனும்.. திருநெல்வேலி வரைக்கும் போய் எனக்கு சில சாமன்களை வாங்கனும்” என மான்சி தலைகுனிந்தபடி கேட்டாள்

“கொஞ்சம் கார்னா எப்படி மான்சி... ரெண்டு வீல் மட்டும் குடுத்தா போதுமா” எனறு சத்யன் குறும்புக் குரலில் கேட்க

மான்சி சட்டென நிமிர்ந்து சத்யனை பார்க்க... அவன் உதடுகளில் சிரிப்பு தவழ “ ம் சொல்லு மான்சி ரெண்டு வீல் போதுமா” என்று மறுபடியும் கேட்க
மான்சி எதுவும் சொல்லாமல் அவனை முறைத்தாள்

“சரி சரி முறைக்காதே... திருநெல்வேலிக்கு தான போகப்போற நானே கூட்டிட்டு போறேன்”

“இல்ல வேண்டாம் நானும் மாயனும் போறோம்” என்று மெதுவாக ஆரம்பித்தவள் பிறகு வேகமாக “உங்களால இப்போ கார் குடுக்க முடியுமா இல்ல நான் பஸ் புடிச்சு போய்க்கவா” என்று வீம்புடன் கூறியதும்

அவள் முகத்தையே பார்த்த சத்யன் "ம் சரி காலையில எடுத்துட்டு போ சாவி என் சட்டை மாட்ர ஸ்டான்ட்ல மாட்டியிருக்கும் பாரு” என்றவன் "மாயன் கூட போகலாம் ஆனா என்கூட வரக்கூடாது அப்படித்தானே... நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்... ஆனா உன்னை கடிச்சு தின்றதவிட அப்படியே முழுங்கிட்டா எனக்கு உள்ளவே இருப்பேல்ல மான்சி” என்று சத்யன் அவளை நெருங்கி நிற்க்க அவனுடைய வாசனை மான்சியின் மீது மோதியது

மான்சி எதுவும் பதில் சொல்லாமல் அவன் மார்பில் கைவைத்து அவனை தள்ளிவிட்டு தனது அறைக்கு ஓடி கதவை சாத்திக்கொண்டாள்

சத்யன் அவள் தன் மார்பை குனிந்து பார்த்தான் சட்டை லேசாக கசங்கியிருந்தது.... அந்த இடத்தை கையால் தடவியவன் மான்சியின் மூடிய அறைக்கதவை பார்த்தான்... பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது கட்டிலில் படுத்துக்கொண்டான்

மான்சி சத்யன் இருவருமே தனித்து இருந்தாலும் அவர்களின் உணர்வுகளும் தவிப்பும் ஒரே திசையில் பயணம் செய்தது .... இந்த விடுகதைக்கு யார் விடை சொல்வது



" உதடுகள் முந்திக்கொண்டு....

" பேச துடிக்கும்...

" இருந்தும் மௌனமே பேசும்....

" உடல் உற்சாமாய்...

" கட்டிபிடித்துக் கொள்ளவே எண்ணும்...

" வேறுவழியின்றி தனித்தே தவமிருக்கும்...

" காதல்- ஒரு துன்பம்

" காதல் - ஒரு மாயம்

" காதல் - ஒரு நாகரீகம்

" காதல் - ஒரு இனிமை

" முற்பிறவியின் பரவசம்...

" இப்பிறவியின் அதிசயம் - காதல்

மறுநாள் காலை மான்சி தனது பெட்டியில் இருந்து தனது பேங்க் பாஸ் புக்கை எடுத்துக்கொண்டு மாயனுடன் காரில் கிளம்பினாள்

முதலில் தனது கணக்கு இருந்த வங்கிக்கு போகச்சொன்ன மான்சி.. தனது கணக்கில் இருந்த தன் அம்மாவின் பணத்தில் கொஞ்சம் மட்டும் விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டு முத்துவின் வீட்டுக்கு கிளம்பினாள்

மாயன் வழியில் விசாரித்து முத்துவின் வீட்டை கண்டுபிடித்து காரை நிறுத்த அது குடிசை வீடாக இருந்தது .. மான்சி காரைவிட்டு இறங்கி நிற்க்க... மாயன் உள்ளே போய் முத்துவை அழைத்து வந்தான்

முத்துவுக்கு மான்சியை பார்த்ததும் பரபரப்புடன் “என்ன சின்னம்மா திடீர்னு வந்துருக்கீங்க... நீங்க மாயன் கிட்ட தகவல் சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று கூற

“ஏன் முத்து நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா” என்றவள் “ என்ன முத்து வெளியவே வச்சு பேசி அனுப்பிடுவீங்களா வீட்டுக்குள்ளே கூப்பிட மாட்டீங்களா” என்றதும்

“அய்யோ என்னம்மா அப்படி சொல்லிட்டீங்க உள்ளே வாங்கம்மா ஆனா குனிஞ்சு வாங்க” என்று உள்ளே அழைத்து சென்றான்

வீடு இரண்டு தடுப்பாக இருந்தது முத்து உள்ளே பார்த்து “அமுதா இங்க யாரு வந்திருக்காங்கன்னு பாறேன்” என்று கூப்பிட

“யாரு மாமா வந்திருக்காங்க” என்று புடவை முந்தானையில் கைகளை துடைத்தபடி வந்த அமுதா மான்சியை பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்

" என்ன அமுதா நல்லாயிருக்கயா... பசங்களை எங்க காணோம்" என்று மான்சி வலியப்போய் பேச்சுக்கொடுத்ததும் ... அமுதா தனது மவுனம் களைந்து

" ம் நல்லாருக்கேன் சின்னம்மா ... பிள்ளைங்க ஸ்கூலுக்கு போயிருக்காங்க... நிக்கிறீங்களே உட்காருங்கம்மா" என்று ஒரு பிளாஸ்டிக் சேரை போட மான்சி அதில் உட்கார்ந்து கொண்டாள்

" என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... அதுவும் உங்க உடல் நிலை இப்போ சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்... என்னாலதானம்மா அப்படி ஆயிருச்சு" என்று முத்து அப்பாவித்தனமாக கேட்க

" அப்படியெல்லாம் ஒன்னுமில்ல முத்து அது போகனும்னு விதி போயிருச்சு அதுக்குப் போய் யாரை காரணம் சொல்ல முடியும்... அப்புறம் நீங்க என்ன பண்றீங்க ஏதாவது வேலைக்கு போறீங்களா" என மான்சி விசாரிக்க

"சும்மா இங்கே கிராமத்து வேலையெல்லாம் செய்றேன் சின்னம்மா... மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு பேங்க்ல லோன் கேட்டுருக்கேன் தர்றேன்னு சொல்லிருக்காங்க" என்று முத்து கூறியதும் ..

மான்சி இயல்பாக முத்துவின் குழந்தைகள் படிப்பு.. அமுதா என்ன செய்கிறாள் ... முத்து கிராமத்தில் என்ன வேலைக்கு போகிறான்... என மற்ற விஷயங்களை எல்லாம் கேட்க அமுதா சகஜநிலைக்கு வந்து மான்சியின் காலருகில் உட்கார்ந்து பேச முத்து வெளியே சென்று குளிர்பானம் வாங்கி வந்தான்

" அய்யோ எதுக்கு முத்து கூல்டிரிங்க் வாங்கிட்டு வந்தீங்க நான் குடிக்க மாட்டேனே".... என்றவள் " அமுதா நீ என்ன சாப்பாடு செய்திருக்க அதை எடுத்துட்டு வா எல்லாரும் சாப்பிடலாம் அதான் மத்தியானம் ஆயிருச்சே எனக்கு ஒரே பசி ம் எடுத்துட்டு வா அமுதா" என்று மான்சி கூறியதும்...

அவளை அதிசயமாக பார்த்துக்கிட்டே உள்ளே போய் உணவுகளை எடத்துவந்து வைத்த அமுதா மான்சிக்கு தட்டுவைத்து உணவு பரிமாற ... மான்சி முத்துவையும் அமுதாவையும் தன்னோடு வற்புறுத்தி உட்காரவைத்து சாப்பிட வைத்தாள்

சாப்பிட்டு முடித்ததும் மான்சி மெதுவாக தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து முத்துவிடம் கொடுத்து " முத்து இந்த பணத்தை வச்சு நிறைய பசுமாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்ங்க" என்று சொன்னதும்

முத்து அந்த பணத்தை கடுமையாக வாங்க மறுத்தான் " இந்த பணத்தை நான் கைநீட்டி வாங்கினா நான் என் பொண்டாட்டியை வித்ததுக்கு சமம்" என்று முத்து கடுமையாக கூற

" முத்து மொதல்ல இது யார் பணம்னு நெனைச்சீங்க ... என்னோட பணம் என் அம்மாவோட பணம் .இந்த பணம் எனக்கு தேவையில்லை சரி என் அண்ணனுக்காவது உதவட்டுமேன்னு எடுத்துட்டு வந்தேன் ... முத்து நான் சத்தியமா உங்களை என் கூடப்பிறந்த சகோதரனா நினைக்கிறேன்... நீங்க என்னை உங்க தங்கச்சியா நெனைச்சா இந்த பணத்தை வாங்கிக்கங்க ... இல்லேன்னா விடுங்க" என்று மான்சி கூறியதும்

முத்து அழுதுவிட்டான் "நீங்களா என் தங்கச்சி" என முத்து குமுற... அமுதாவும் அழுதாள்

" ஆமாம் முத்து இனிமேல் நீதான் என் அண்ணன்....இனி எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா உன் வீட்டுக்குத்தான் வருவேன் ... அப்போ நீ எனக்கு சோறு போடுவியா அண்ணா" என்று மான்சி கேட்டதும் அமுதா மான்சியின் கால்களை பிடித்துக்கொண்டு கதறி விட்டாள்

ஒருவழியாக அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து முத்துவின் பிள்ளைகளை பார்த்துவிட்டு மான்சி வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது

முத்து வீட்டில் இருந்து கிளம்பிய மான்சிக்கு மனசு ரொம்ப அமைதியாக இருந்தது... வழியில் தென்பட்ட திருநெல்வேலியின் மொத்த அழகையும் மனதில் உற்சாகத்துடன் ரசித்து கொண்டே வந்தாள்

மாயனுக்கு மான்சியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது... ‘என்னமாதிரி பொண்ணு இவங்க இந்த வயசுலயே இவ்வளவு நல்ல மனசு யாருக்கு வரும் ...இவங்க நல்லா இருக்கனும்... இவங்களை புரிஞ்சிகிட்டு சின்னய்யா நல்லபடியாக குடும்பம் நடத்தனும்... என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தான்

கார் வீட்டுக்குள் நுழையும் போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது... மான்சிக்கு மனசுக்குள் அய்யோ இவ்வளவு நேரம் ஆயிருச்சே.. வீட்டுக்கு தகவல் கூட நாம சொல்லலை... இன்னேரம் சத்யன் வந்திருப்பான்.... இவ்வளவு நேரமாக வீட்டுக்கு வரவில்லை என்றதும் என்ன பேசப்போறானோ... சற்று உதைப்பாகவே இருந்தது...



அவள் எண்ணத்தின் நாயகன் அவளுக்காக வீட்டுவாசலிலேயே காத்திருந்தான்.... மான்சி காரைவிட்டு இறங்கியதுமே வேகமாக அருகில் வந்தவன்.. “ எங்கபோன மான்சி காலையில ஒன்பது மணிக்கு போனவ இன்னேரத்துக்கு வர்றே... கேட்க ஆள் இல்லைன்னு நெனைச்சியா...” என்று சத்யன் கோபமாய் இரைந்து கத்தினான்

மான்சி அவன் கத்தலுக்கு மிரலாமல் “ அதான் வந்துட்டேன்ல அப்புறம் ஏன் சத்தம் போடுறீங்க... நான் இதுவரைக்கும் எங்கயாவது வெளியே போயிருக்கேனா... இன்னிக்குத்தானா போனேன்... அதுக்குப் போய் இப்படி வெளியவே வச்சு சத்தம் போடுறீங்க.... எனக்கு இந்த வீட்ல சுதந்திரமா வெளியே போகக்கூட உரிமை கிடையாதா ” என மான்சி மெல்லிய குரலில் சொல்ல

சத்யன்க்கு மான்சி தன்னை எதிர்த்து பேசியது புரிந்தாலும் அவள் குரலில் இருந்த மென்மை அவனை சட்டென பணியவைத்தது “அதுக்கில்ல மான்சி இவ்வளவு நேரம் காணோமேன்னு நான் ரொம்ப பயந்துட்டேன்.. ஒரு போனாவது பண்ணியிருக்கலாம்ல மான்சி” என ரொம்ப இரங்கிய குரலில் கேட்டதும்

“மறந்துட்டேன் இனிமேல் எங்கயாவது போனா நேரமாச்சுன்னா கரெக்டா போன் பண்ணிறேன்” என்ற மான்சி வீட்டுக்குள் போக அவள் பின்னாலேயே வந்த சத்யன்

“எங்க மான்சி திருநெல்வேலி போய் ஏதோ வாங்கனும்னு சொன்ன எந்த பையும் கணோம்” என்று கேட்க..... மான்சி பிரேக்கடித்தாற் போல் நின்றாள்

“என்னாச்சு மான்சி எதுமே வாங்கலையா... அப்போ இவ்வளவு நேரம் எங்கதான் போயிருந்த”என்ற சத்யனின் குரலில் கொஞ்சம் கடுமை ஏறியிருந்தது

ஒருகணம் தடுமாறிய மான்சி ‘ ச்சே நாம என்ன தப்பா பண்ணிட்டு வந்தோம் இவன் கேட்கும் கோள்விக்கெல்லாம் பயந்து போய் நிக்க’ என நினைத்து திரும்பி அவன் முகத்தை நேருக்குநேர் பார்த்து “முத்து வீட்டுக்குத்தான் போனேன் இப்போ என்ன பண்ணப் போறீங்க” என்று கேட்க

சத்யன் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டான்... மான்சி சிறிதுநேரம் அவனையே பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டாள்

அதிர்ச்சியில் அப்படியே நிற்ப்பவனை பார்த்து அருகில் வந்த மாயன் ... முத்து வீட்டுக்கு போனதில் நடந்தது அனைத்தையும் சொல்ல .... சத்யன் தலைகுனிந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ சரி மாயா நீ உன் வீட்டுக்கு போ நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு மாடியில் தனது அறைக்கு போனான்

மான்சி தனது அறை கட்டிலில் அமர்ந்து சத்யன் அதிர்ந்து போன முகத்தை பற்றியே நினைத்துக்கொண்டு இருக்க ... அறையின் கதவை திறந்து சத்யன் அவள் எதிரில் வந்து நின்றான்...

மான்சி உடனே எழுந்து நிற்க்க... அவள் தோள்களை பற்றி மறுபடியும் உட்காரவைத்து “ ஏன் மான்சி முத்துவை மட்டும் அண்ணனா ஏத்துக்க முடிஞ்ச உனக்கு என்னை புருஷனா ஏத்துக்க முடியலை அப்படித்தானே மான்சி” என்று அவள் கண்களை நேருக்குநேர் பார்த்து கேட்டான்

மான்சி அவன் நேர் பார்வையால் சற்று தடுமாறி “ முத்து எந்த தப்பும் செய்யலை” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்ல

"ஆமாம் நான் மட்டும்தான் தப்பு செய்தவன் ஒத்துக்கிறேன்... ஆனால் என் தப்பை கண்டிக்காத உன்னை என்ன சொல்றது...

" நீ எனக்கு கொடுத்த அந்த சுதந்திரம் தான என்னை மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ண வச்சுது...

"நீ என்னை இழுத்துவந்து உன்னை முந்தானைக்குள்ள போட்டு மூடியிருந்தா நான் ஏன் மான்சி இன்னொருத்தி புடவை முந்தானையை தேடி போகப்போறேன்....

"உனக்கு உன் புருஷனை எப்படி உன்கிட்ட புடிச்சு வச்சுக்கனும்னு தெரியலை... ஆனா அந்த இயலாமையை என்கிட்ட உன் கோபத்தால காட்டுற...

"நீ இப்போ எல்லாருக்கும் ஒரு தேவதை மாதிரி தெரியிற..... ஆனா என்னை மட்டும் குற்றவாளியாக எல்லார் முன்னாடியும் நிறுத்திட்ட....

" எனக்கு ரொம்ப சந்தோஷம் மான்சி... நீயும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கேன்னு பார்க்கிறேன் மான்சி...

" எனக்கும் எவ்வளவு பொறுமை இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்க வேனும்ல” என்று வருத்தமான குரலில் கூறிய சத்யன் அவள் தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் சரி வா சாப்பிடலாம் என்றான்

மான்சியும் அவன் கண்களை பார்த்துக்கொண்டே சரியென தலையசைக்க... அவள் தோளை பற்றி அணைத்தவாறு எழுப்பி தன்னோடு இணைத்துக்கொண்டு சத்யன் சாப்பிடுவதற்காக மாடியில் இருந்து கீழே வந்தான்

மான்சியும் அந்த மென்மையான அணைப்பை விட்டு விலகத் தோன்றாமல் அமைதியாக அவனுடன் வந்தாள்

" உன்னோடு சண்டையிட்டு....

" நான் எதற்காக அழுகிறேன் என்று...

" எனக்கேத் தெரியவில்லை...

" பைத்தியம் என்று ....

" நீ சொன்னாலும்....

" எனக்கு கவலையில்லை...

சத்யன் மான்சியுடன் கீழே வந்து சாப்பிட ....கலாவதிக்கு அவர்களுக்குள் ஒரு சகஜநிலை ஏற்ப்பட்டிருப்பதாக எண்ணி மகிழ்ந்தாள்

இருவரும் அமைதியாக சாப்பிட சத்யன் மட்டும் அவளை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்...

சத்யனுக்கு முன்பே சாப்பிட்டு முடித்த மான்சி மாடிக்கு போய்விட... சத்யன் அவசரவசரமாக சாப்பிட்டான்... சற்றுமுன் மான்சி அவனுடைய அணைப்பை தவிர்க்காமல் அவனுடன் கீழே வந்தது சத்யன் மனசில் சிரு நம்பிக்கை உருவாகியிருந்தது...

இன்று ஏதோ நடக்கப்போகிறது என அவன் உள்ளுணர்வு சொல்ல அதனாலேயே அவன் வேகமாக சாப்பிட்டு முடித்து கலாவதி கொடுத்த பாலைக்கூட அருந்தாமல் அவசரமாக மாடிக்குப் போய் தனது அறையின் வழியாக மான்சியின் அறைகதவை நெருங்கி கைவைத்து தள்ள... கதவு அந்த பக்கமாக பூட்டப்பட்டிருக்க சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது

ச்சே என்னதான் நெனைச்சுகிட்டு இருக்கா நானும் எவ்வளவு நாள்தான் பொறுத்துப் போறது.... தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் சத்யன்...

தன் வலதுகையை மடக்கி சுவற்றி குத்தியவன் படுக்கைக்கு வந்து தொப்பென்று கவிழ்ந்து விழந்து தலையனையில் முட்டிக்கொண்டான்

மறுபடியும் மான்சியின் அறைக்கதவை திரும்பி பார்த்த ச்சே நாளைக்கு மொதல் வேலையா குறுக்கே இருக்கிற இந்த சுவற்றை சுத்மா இடிச்சுத் தள்ளிறேன்.... அப்புறம் இந்த மாதிரி எப்படி தனியா போய் படுக்கிறானு பார்க்கிறேன் என்று கறுவினான்

ஏன் இப்போ இந்த கதவை எட்டி ஒரு உதைவிட்டு திறந்துகிட்டு உள்ளே போய் அவளை இங்கே தூக்கிட்டு வந்தா என்ன.... என்று யோசித்த சத்யன் உடனே அந்த யோசனையை கைவிட்டான்.... ச்சே இப்பத்தான் கொஞ்சம் நல்ல படியா முகத்தை பார்த்து பேசற அதையும் கொடுத்துக்க கூடாது என்று நினைத்தான்

பாத்ரூம் போய் ஷவரை திறந்து அதன் கீழே நின்று தண்ணீரில் நனைந்து தனது தாபத்தை தனித்து சத்யன் மனசும் உடலும் ஒரு கட்டுக்குள் வர அமைதியாக வந்து கட்டிலில் படுத்து கண்மூடினான்

சிறிதுநேரத்தில் அவனது செல் ஒலிக்க.... இந்த நேரத்தில் யார் என்று எடுத்து பார்த்தான் புதிய நம்பராக இருந்தது... செல்லை உயிர்பித்து தன் காதில் வைத்து ஹலோ என்றான்... எதிர் முனையில் இருந்து ரேகாதான் பேசினாள்

“ சார் நான் ரேகா பேசுறேன் நல்லாருக்கீங்களா சார்” என்றாள்

“ம் நல்லாருக்கேன் ரேகா என்ன இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க ஏதாவது பிரச்சனையா” என சத்யன் பணிவுடன் கேட்க

“ பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைங்க சார் மான்சி கூட கொஞ்சம் பேசனும் தூங்கிட்டாளா”

“ம் இப்போதான் போய் படுத்தா தூங்கிட்டாளா என்னன்னு தெரியலை ஏதாவது அவசரம்னா சொல்லுங்க எழுப்பி குடுக்கிறேன்”

“ஆமாம் அவகிட்ட பேசனும் கொஞ்சம் எழுப்பி குடுங்க சார்” என்று ரேகா கெஞ்சுவது போல் பேச

“சரி கட் பண்ணி மறுபடியும் கால் பண்ணுங்க” என்ற சத்யன் செல்லை எடுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கதவை தட்டினான்

உள்ளே இருந்து சிறிதுநேரம் கழித்து “யாரு” என்று மான்சி கதவை திறக்காமல் கேட்க

அவள் கதவை திறக்காமல் யார் என்று கேட்டதும் சத்யனுக்கு கோபம் வந்தது “ ம் உன் புருஷன் உன் பிரண்ட் ரேகா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்” என நக்கலாக சொல்ல

மான்சி கதவை பாதியாக திறந்து கையை வெளியே நீட்டி செல்லை கேட்க.... சத்யன் நீட்டிய அவள் கையை பற்றி “ ஏன் மான்சி இப்படி பயப்படுற... நான் உன்னை என்ன பண்ணிடப்போறேன் மான்சி... எனக்கும் புரியுது மான்சி நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்... நீயா மாறுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என சத்யன் பேசிக்கொண்டு இருக்கும் போதே செல் ஒலிக்க

“ம் இந்தா பேசிட்டு என்னை கூப்பிடு” என்று போனை அவளிடம் கொடுத்துவிட்டு போய் படுத்துவிட

மான்சி அவன் முதுகை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டு பிறகு தன் அறைக்குள் போனாள்

செல்லை உயிர்ப்பித்து காதில் வைத்து ”சொல்லு ரேகா என்ன இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க” என்று கேட்க

“மான்சி எப்படி இருக்கடி” என்றவள் மான்சியின் பதிலை எதிர் பார்க்காமல் “
மான்சி ரகு இன்னிக்கு விடியற்காலம் வந்துட்டான்.... வந்ததும் உன்னை பத்திதான் விசாரிச்சான்...
நான் மொதல்ல எதுவும் சொல்லலை மத்தியானம் சாப்பிட்டதும் உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும் போது..
அம்மா அப்பா கிட்ட உன்னை காதலிக்கிறத சொல்லி... உன் மாமாவை பார்த்து பேசனும்னு சொன்னான்..
அப்புறமாதான் நான் வேற வழியில்லாம உனக்கு கல்யாணம் ஆகிட்ட விஷயத்தை சொன்னேன்
ஆனா உன்மேல் தப்பில்லஉன் மாமாவின் வற்புறுத்தலாலதான் நீ சம்மதிச்சேன்னு ஒரு வழியா சொன்னேன் மான்சி...
அப்போ ரூமுக்குள்ள போனவன் வெளிய வரவேயில்ல அம்மாவும் அப்பாவும் ரொம்ப பயந்து போய்ட்டாங்க....
இப்போதான் வெளிய வந்து உன்னை பார்க்கனும்னு சொன்னான்... அம்மா வேனாம் அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வரப்போகுதுன்னு தடுத்தாங்க...
அதுக்கு ரகு என்னால என் மான்சிக்கு எந்த பிரச்சனையும் வராது.. நான் அவ எப்படி சந்தோஷமா இருக்காளான்னு பார்த்துட்டு மட்டும் வந்திறேன்னு கிளம்பிட்டான் மான்சி நாங்க எவ்வளவு தடுத்தும் அவன் கேட்கலை மான்சி” என்று ரேகா கலவரத்துடன் பேச

மான்சி காதுகள் குப்பென்று அடைத்துக்கொள்ள தடுமாறியபடி கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்

எதிர் முனையில் ரேகா “ ஹலோ ஹலோ” என்று குரல் கொடுத்து “மான்சி லயன்ல இருக்கியாடி” என்று கேட்க

சுதாரித்த மான்சி “இருக்கேன் சொல்லு ரேகா” என்றாள்

“ இப்போ என்னடி செய்யறது மான்சி” என்று ரேகா மான்சியை கேட்டாள்

“ எனக்கு ஒன்னும் புரியலை ரேகா நீயே ஏதாவது யோசனை சொல்லு” என மான்சி பாரத்தை ரேகாவின் மீது சுமத்த

“ நான் சொல்ற மாதிரி செய் மான்சி ... ரகு ஒன்னும் தப்பான எண்ணத்தில் அங்கே வரலை...
அவனுக்கு நீ சந்தோஷமா இருக்கியான்னு பார்க்கனும்... ஏன்னா வற்புறுத்தி உனக்கு கல்யாணம் பண்ணதால அவனுக்கு நீ எப்படி இருக்கியோன்னு சந்தேகம் ... அதான் கிளம்பி வர்றான்.... உடனே நாளைக்கு நைட்டே கிளம்பிறான்...

அதுவரைக்கும் நீ உன் புருஷன் கூட சந்தோஷமா குடும்பம் நடத்துறேன்னு அவனுக்கு உணர்த்திட்டேன்னா போதும் மான்சி...
தயவுசெய்து இதை மட்டும் கரெக்டா பண்ணிடு மான்சி இல்லேன்னா அவன் ரொம்ப நொந்து போயிடுவான் மான்சி....
இப்போகூட நடந்ததுக்கு யார் மேலயும் அவன் குற்றம் சொல்லலை நான் யுஎஸ் போகாம இருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காதுன்னு பழியை தன்மேலயே போட்டுக்கிறான் மான்சி....
நான் சொல்றது உனக்கு புரியுதா மான்சி” என்று மூச்சுவாங்க ரேகா கேட்க

"ம் புரியுது ரேகா நான் முயற்சி பண்றேன் என மான்சி சொன்னதும்

ரேகாவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது என்னடி நான் இவ்வளவு சொல்றேன் முயற்சி பண்றேன்னு சொல்ற... இதோ பார் மான்சி கிட்டத்தட்ட இது ரகுவோட உயிர் பிரச்சனை மாதிரி அந்தளவுக்கு அவன் நொந்து போயிருக்கான்... வேனும்னா நான் இதை பத்தி உன் புருஷன்கிட்ட பேசவா” என்று கேட்டதும் மான்சி அவசரமாக மறுத்தாள்

“ அய்யோ வேனாம் ரேகா நானே சொல்லி புரியவைக்கிறேன்... நாளைக்கு எத்தனை மணிக்கு ரகு இங்கே வருவார்”

“காலையில பத்து மணிக்குள்ள வந்துருவான் மான்சி.. ஜாக்கிரதையா எதையும் செய்டி.. நான் வச்சிரட்டுமா மான்சி ” என ரேகா இணைப்பை துண்டிக்க

மான்சி தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டாள்



அப்போது “பேசிட்டியா மான்சி” என்று கேட்டுக்கொண்டே சத்யன் உள்ளே வர

“ம் பேசிட்டேன்” என்று செல்லை அவனிடம் கொடுத்த மான்சி அவன் முகத்தையே பார்த்தாள்

“என்ன மான்சி ஏதாவது பிரச்சனையா... ரேகா ஏன் இந்த நேரத்தில் போன் பண்ணாங்க” என சத்யன் தன்மையாக கேட்க ... மான்சி பதிலேதும் சொல்லாமல் மவுனமாக இருக்க

“ என்னாச்சு மான்சி ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் பேசினீங்க ஏதாவது பிரச்சனைன்னா சொல்லு மான்சி ... நான் ஏதாவது பண்ண முடியுமா” என்று சத்யன் மறுபடியும் வற்புறுத்தி கேட்டான்

இதுக்கு மேல் மவுனமாக இருப்பது சரியில்லை என்றுணர்ந்த மான்சி “நாளைக்கு ரகு என்னை பார்க்க இங்கே வர்றாராம்” என்றாள் தலைகுனிந்தபடி

சத்யனிடமிருந்து பதில் இல்லாது போகவே நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்... சத்யனின் சலனமற்று இருந்தாலும் அந்த இரவு வேளையில் முகத்தில் முத்துமுத்தாக வியர்த்திருந்தது.... மான்சிக்கு அவன் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது


No comments:

Post a Comment