Thursday, March 19, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 5

சத்யன் இப்போதெல்லாம் மான்சி வரும் நேரங்களில் சசின்னசின்னதாக திருட்டுத்தனமான வேலைகள் செய்ய ஆரம்பித்தான்

அவள் வரும் நேரங்களில் வேன்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு அசந்து தூங்குவது போல் நடிப்பான்

அவள் இவனருகில் வந்து சார் என்று அழைத்தால் எழ மாட்டான்.. இரண்டாவது முறையாக சத்யன் எழுந்திருங்க என்று அழைத்தும் தான் எழுந்திருப்பான்

தரையில் உட்காரமுடியவில்லை என்று சொல்லி டேபிள் சேரில் அமர்ந்து சாப்பிடுவான்... ஏன்னென்றால் அப்போ தானே அவள் நின்றுகொண்டு உணவு பறிமாறும் அழகை தலைகவிழ்ந்தபடி ரசிக்க முடியும்


அப்படி ரசிக்கும் போதுதானே அவள் கவணிக்காமல் இருக்கும்போது அவள் இடுப்பையும் வயிற்றயும் பார்த்து அதன் நடுவில் இருக்கும் அழகுத் தொப்புளையும் ரசிக்க முடியும்

இப்போதெல்லாம் சத்யன் அவள் புடவைக்குள் மறைந்திருக்கும் தொப்புளை தன் கண்களால் தடவிக்கொண்டுதான் ஒரு வாய் உணவுகூட சாப்பிடுவது

சத்யனை அவள் ஆழகுத் தொப்புளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதச்சொன்னால்... அந்த கட்டுரையை பிழையில்லாமல் நூறு பக்கத்துக்கு எழுதுவான் அவ்வளவு தேறிவிட்டான்

இந்த கூத்தெல்லாம் ஐந்து நாட்கள்தான் நடந்தது அதன்பிறகு கஞ்சனா வந்துவிட சத்யனின் ஏமாற்றத்தை அளவிட யாராலும் முடியாது... அவளை காணாமல் அந்தளவுக்கு சோர்ந்து தளர்ந்து போய்விட்டான்

அவன் உடல் நன்றாக தேறிவிட ஒன்பதாவது நாள் அவன் பரணி காஞ்சனா உதவியுடன் தலைக்கு குளித்தான்

அன்று மாலை மான்சியும் சைந்தவியும் சத்யன் வீட்டுக்கு வர சைந்தவி ஓடிவந்து சத்யன் மடியில் உட்கார்ந்து கொண்டாள்

தன் மடியில் அமர்ந்த சவியை தூக்கிப் போட்டு பிடித்த சத்யன் “ ம் என் செல்லத்தை பார்க்காம பத்துநாளா எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிருச்சு” என்று கொஞ்சினான்

“எனக்கும்தான் அங்கிள் உங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.. அதான் இன்னிக்கு அம்மா வந்தவுடனேயே கூட்டிட்டு போகச்சொல்லி அழுதேன் அப்புறமாதான் கூட்டிட்டு வந்தாங்க” என்று சைந்தவி தன் மழலை மொழியில் படபடவென பேச

சத்யன் குழந்தையை வாரியணைத்து முத்தமிட்ட படியே மான்சியை பார்க்க... அவள் முகத்தில் புன்னகையுடன் இவர்கள் கொஞ்சுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்

புன்னகை சிந்தும் அவள் இதழ்களை பார்த்த சத்யன்... நாம் என்றைக்கு இந்த ஈர இதழ்களில் தன் உதட்டால் முத்தக் கவிதை எழுத போகிறோமோ என்று ஏங்கினான்

அதன்பின் சத்யன் உடல் நிலை சரியாகி தன் ஆபிஸ்க்கு போக ஆரம்பித்தான்... ஆனால் சரியாக மான்சி கிளம்பும் நேரத்துக்கு தனது நேர அட்டவணையை மாற்றிக்கொண்டான்

இருவரும் ஒன்றக லிப்டில் பயனிக்கும் அந்த நிமிடங்களுக்காக சத்யன் முதல்நாள் இரவிலிருந்தே கற்பனையில் மிதக்க ஆரம்பித்துவிடுவான்

லிப்டில் கூட்டம் அதிகமாக இருந்தால் சத்யன் பாடு இன்னும் கொண்டாமாகிவிடும் ... அவளை கூட்டத்தில் பாதுக்காப்பவன் போல் நெருக்கமாக நின்று கொள்வான்...

அவள் வாசனை இவன் முகத்தில் மோதும்... அவள் வெளுத்த தோள் வளைவைவிட்டு தன் பார்வையை அகற்ற மாட்டான்.... இவ்வளவையும் மான்சிக்கு துளிகூட சந்தேகம் வராதவாறு செய்வான்

ஏய் ரொம்ப பொறிக்கித்தனம் பண்றே என்று எச்சரிக்கும் மனதை ... எது பொறிக்கித்தனம் கடவுள் படைத்த இந்த அழகு சுரங்கத்தை ரசிப்பதா ... இந்த அழகை ரசிப்பது பொறிக்கத்தனம் என்றால் ஊரில் அழகான் பூக்கள் மலரும் எல்லா பூங்காக்களையும் அழித்துவிட வேண்டும்

அவளை பார்த்ததால் சத்யன் தான் பிறந்ததற்கான பிறவிப்பயன் அடைந்துவிட்டதாக எண்ணினான்...

மாலை வேளைகளில் மான்சி வரும் நேரத்தில் சரியா கணக்கிட்டு அவனும் வந்துவிடுவான் ... கீழ் பிளாட்டில் வசிப்பவர்கள் வளர்க்கும் நாயிடம் மான்சிக்கு எப்பவுமே பயம் அதிகம்

அதனால் எப்பவுமே பரணி அவள் வரும் நேரத்திற்கு கீழே வந்து காத்திருந்து அவளை கூட்டிச்செல்வார் .... ஆனால் இப்போது சத்யன் உடன் வருவதால் பரணி கீழே வருவதில்லை

சத்யன் இதுவரை அந்த நாய்க்கு ஒராயிரம் முறை நன்றி சொல்லியிருப்பான்... அந்த நாய் எப்போதாவது குரைத்தால் சத்யனுக்கு இன்னும் சந்தோஷமாகிவிடும் ... ஏனென்றால் அப்போது தானே பயத்தில் இவன் கைகளை பற்றிக்கொள்வாள்



" உனக்கு பிடிக்காத எதையும் ...

" எனக்கு பிடிக்காது என்றாலும்....

" உனக்கு பிடிக்காத அந்த....

" எதிர் வீட்டு நாயை மட்டும் ....

" எனக்கு ரொம்ப பிடிக்கும்...

" அதைப் பார்க்கும் போதெல்லாம்...

" பயந்துபோய் நீ என் கையை ....

" கெட்டியாக பிடித்துக்கொள்கிறாயே!

சத்யனின் வாழ்க்கை பயனத்தில் மான்சியின் பங்கு என்ன என்று தெரியாமலேயே சத்யன் அவளை நினைத்து ஏக்கத்துடன் காத்திருந்தான்

அவனுக்கு மான்சி உடனே வேண்டும் எல்லாவற்றுக்குமோ வேண்டும்... அன்பு ,காதல் சுகம், சந்தோஷம்,பாசம், பரிவு, சண்டை, சச்சரவு, எல்லாமே மான்சியுடன்தான் இனிமேல் நடக்க வேண்டும் என்று நினைத்தான்

ஆனால் இவனுடைய அனைத்து நடவடிக்கைகளை பற்றியும் பரணிக்கு தெரியும் என்பதால் ... முன்பு இவன் சனிக்கிழமை இரவு நேரங்களில் வீடுதிரும்பாததை பற்றி இவனிடமே நேரடியாக கேட்டவரிடம் போய் மான்சியை பற்றி எப்படி பேசுவது என்று குழம்பினான்

அதுவுமில்லாமல் மான்சிக்கு இருக்கும் இரண்டாவது திருமணத்தை பற்றிய வெறுப்பும் அவனுக்கு பயத்தை கொடுத்தது... நாம் பாட்டுக்க ஏதாவது சொல்லி அப்புறமா இப்போது இருக்கும் இந்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட தன் வாழ்வில் இல்லாமல் போய்விட போகிறது என்று சத்யன் பயந்தான்

சனியன்று மாலை சத்யன் வீட்டுக்கு சைந்தவியுடன் வந்தார் பரணி.... சத்யன் சைந்தவியை வாங்கிக்கொண்டு உள்ளே போய் அவளுக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை கொடுத்தான்

சவி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அந்த சாக்லேட்டை வாங்கி பாதி கடித்துக்கொண்டு மீதியை அவன் வாயில் வைக்க... சத்யன் சிரித்தபடி அதை ரசித்து சுவைத்தான்

“ சத்யன் வரவர நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கறீஙக.... எப்பப்பாரு சாக்லேட்டா தின்றா பல்லு என்னாகப்போகுதோ” என்று பேத்தியைப் பார்த்து குறைசொல்ல

“தாத்தா நான் பாதிதான் சாப்பிட்டேன் மீதியை அங்கிள் கிட்ட குடுத்திட்டேன்... அங்கிள் நீங்க தாத்தாகிட்ட வாயை திறந்து காமிங்க” என்ற சவி சத்யனின் தாடையை பிடித்து ஆட்டி வாயை திறக்க சொல்ல சத்யன் வாயைத்திறந்து காட்டி

“ அங்கிள் இவ பொய் சொல்றா என் வாயில சாக்லேட் இல்லை பாருங்க “ என்று சத்யன் சிரிக்க

சவி அவன் கன்னத்தில் தட்டி “ அய்யோ பொய் அங்கிள் பொய் சொல்றாரு தாத்தா” என்றாள்

பரணி இவர்கள் விளையாட்டை பார்த்து சிரித்தபடி “ இவளை விட்டுட்டு நீங்க எப்படிதான் ஒருவாரம் இருக்கப்போறீங்களோ தெரியலை சத்யன்... அதேபோல இவ எப்படி உங்களை விட்டு இருப்பான்னு தெரியலை” என்று பரணி சொன்னதும்

“ஏன் அங்கிள் எங்கயாவது வெளியூர் போறீங்களா” என்று தனது குரலின் அதிர்ச்சியை மறைக்க முயன்றபடி சத்யன் கேட்க

“ஆமாம் சத்யன் கட்டாக்ல இருக்கிற இவ மாமன் வாசு ஆஸ்ட்ரேலியா போறானாம் அதனால அவன் போறதுக்கு முன்னால ஒருவாரம் எங்க எல்லார்கூடயும் இருக்கனும்னு கிளம்பி வரச்சொல்லியிருக்கான்... பிளைட்டுக்கு அவனே டிக்கெட் எடுத்து அனுப்பிட்டான் ... நாளைக்கு விடிய காலையில கிளம்புறோம் சத்யன்" என்று பரணி சொல்லி முடித்ததும்

சத்யனுக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருந்தது .... அப்போ இன்னும் ஒருவாரத்துக்கு மான்சியை பார்க்கவே மு டியாதா... இந்த ஒருவாரம் அவள் இல்லாமல் என் வாழ்வு சக்கரம் எப்படி சுழலும் ... அவன் நினைவுகள் ஏக்கத்துடன் தவிக்க

" நாங்க கட்டாக் போனதும் நீங்கதான் மான்சியை அடிக்கடி பார்த்துக்கனும்... பவானியம்மா கிட்டயும் சொல்லியிருக்கேன்... எதுக்கும் நீங்களும் சும்மா ஒரு பார்வை பார்த்துக்கங்க" என்று பரணி மறுபடியும் கூற

"என்ன அங்கிள் சொல்றீங்க அவங்க உங்ககூட கட்டாக் வரலியா" என சத்யன் கேட்கும்போது இந்த உலகமே அவன் வாய்க்குள் தெரியும் போல அந்தளவுக்கு வாயை பிளந்துகொண்டு கேட்டான்

" மான்சிக்கும் சேர்த்துதான் வாசு டிக்கெட் அனுப்பியிருக்கான்... ஆனா அவளுக்கு பேங்கில் இது ஆடிட்டிங் நேரங்கிறதால லீவு கிடைக்கலை... அவ டிக்கெட்டை கேன்ஸல் பண்ணிட்டு நான் காஞ்சனா சவி மூணு பேர் மட்டும் போறோம்... கொஞ்சம் மான்சியை பார்த்துக்கங்க சத்யன்... முன்பு போல அவளுக்கு இப்பல்லாம் பயம் கிடையாது என்றாலும் ... தனியா விட்டுட்டு போறோம் அதான் சொல்றேன்" என்று பரணி கவலையான குரலில் கூற

சத்யன் வேகமாக அவர் அருகில் வந்து அவர் கையை பற்றிக்கொண்டு " என்ன அங்கிள் இப்படியெல்லாம் பேசறீங்க.. என் உயிரைக்கொடுத்தாவது அவங்களை பாதுகாப்பேன் அங்கிள் நீங்க பயப்படாம நல்லபடியா போய்ட்டு வாங்க" என்று சத்யன் பரணிக்கு தைரியம் சொன்னான்

" ரொம்ப நன்றி சத்யன் இதை உங்ககிட்ட நான் முன்னாடியே எதிர்பார்த்ததுதான்" என்ற பரணி சைந்தவியை தூக்கிக்கொண்டு தனு வீட்டுக்கு போனார்

சத்யனின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை... சிறுபையன் போல் விசிலடித்துக்கொண்டு சோபாவில் ஏறி குதித்தான்... வாய்க்கு வந்த சினிமா பாடல்களை தப்புதப்பாக பாடினான் ... இன்னும் ஒருவாரத்துக்கு மான்சியை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் .. இதை நினைக்கும் போதே அவனுக்கு முதுகில் இறக்கை முளைத்து வானில் பறப்பது போல இருந்தது

" உனக்கு சீசனெல்லாம் கிடையாதா....

" ஆண்டு முழுவதும் அழகை கொட்டும்...

" அருவியா நீ

" என்னை நீ முகம் பார்க்கும்...

" கண்ணாடியின் பாதரசமாக மாற்றிவிடு....

" அப்போதாவது தினமும் உன்னைப்...

" பார்த்துக்கொண்டே இருப்பேன்....



மறுநாள் அதிகாலையிலேயே சத்யனும் எழுந்து பரணியை வழியனுப்ப விமான நிலையம் கிளம்பினான்

டாக்ஸியில் சைந்தவி சத்யனைவிட்டு கீழே இறங்கவேயில்லை ...
சத்யனுக்கு இந்த அன்பு குழந்தையை விட்டு தான் எப்படி ஒருவாரம் இருக்கப்போகிறோமோ என்று இருந்தது

அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது சத்யனும் மான்சியும் மட்டும் டாக்ஸியில் வந்தனர் ...

மான்சி எதுவுமே பேசாமல் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக வர

சத்யன் மான்சியை திரும்பி பார்த்து “ என்னங்க ரொம்ப டல்லாயிட்டீங்க குழந்தையை விட்டுட்டு எப்படி இருக்கறதுன்னு தானே .... ஒருவாரம் தானங்க அது கண்மூடி திறப்பதுக்குள்ள ஓடிப்போயிரும்” என்று ஆறுதல் சொல்ல

மான்சி அதற்க்கும் எந்த பதிலும் சொல்லவில்லை காரின் ஜன்னல் வழியா புலர்ந்தும் புலராத அழகான காலைப் பொழுதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்

சத்யன் அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் பேசவில்லை... அவனுக்கு அவளுடைய முகம் வாடியிருந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது...

‘ச்சே எல்லாரும் ஊருக்கு போறதுக்கு நான் சந்தோஷப்பட்டேன்... ஆனா மான்சிக்கு இதிலே ரொம்ப வருத்தம் போல இருக்கு.. என்று அவளை நினைத்து இவன் வருந்தினான்

டாக்ஸி அவர்களின் அப்பார்ட்மெண்ட்க்கு வந்ததும் சத்யன் டாக்ஸிக்கு பணம் கொடுக்க... அவனை கையசைத்து தடுத்த மான்சி

“ இருங்க பணம் நான் கொடுக்கறேன்” என்று தனது கைப்பையை திறந்து பணத்தை தேட....

சத்யன் அதற்க்குள் பணத்தை கொடுத்து டாக்ஸியை அனுப்பிவிட்டான்.. அவனை திரும்பி பார்த்து முறைத்த மான்சி வேகமா லிப்ட்டை நோக்கி போக....
சத்யனுக்கு சங்கடமாக இருந்தது அவள் பின்னாலேயே வேகமாக போய் லிப்டில் அவளுடன் சேர்ந்துகொண்டான்

மான்சி இவன் முகத்தை பார்க்காமல் திரும்பிக்கொண்டு நிற்க சத்யன் என்னடா இது கை எட்டுனது வாய்க்கு எட்டாது போல இருக்கே என்று நினைத்தான்

“மான்சி என்மேல் என்ன கோபம் நான் ஏதாவது உங்க மனசு நோகும்படி தவறா நடந்துகிட்டேனா” என்று சத்யன் வருத்தமாக கேட்க

இவன் வார்த்தைக்கு மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை... அதற்க்குள் அவர்கள் தளம் வந்துவிட இருவரும் லிப்ட்டில் இருந்து வெளியே வந்து அவரவர் வீட்டுபோக திரும்ப...

சத்யன் தன்வீட்டு கதவில் சாவியை நுழைத்து திறந்துகொண்டிருக்க... அவன் பின்னால் இருந்து “ ஒரு நிமிஷம் இருங்க” என்று மான்சியின் குரல் கேட்டது

சத்யன் சட்டென தலையை திருப்பி அவளை பார்த்தான்... மான்சி அவன் முகத்தை நேரடியாக பார்த்து “ உங்களுக்கு என்ன வயசு இருக்கும்” என்று கேட்க

இதென்ன இந்த நேரத்தில் சம்மந்தமில்லாமல் கேட்கிறாளே என்று மனதில் நினைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ இன்னும் நாலுமாசத்தில் முப்பது ஆரம்பிக்கும்” என்றான்

“அப்போ என்னைவிட ஏழுவயசு பெரியவர் நீங்க... அப்பறமா ஏன் என்னை வாங்க போங்கன்னு அத்தனை ங்க போட்டு கூப்பிடுறீங்க... மான்சின்னு பேர் சொல்லி கூப்பிடுங்க” என்று மான்சி முகத்தில் சிறு புன்னகையுடன் கூற

சத்யன் தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை... இவ்வளவு நேரம் முறைத்து கொண்டு வந்தாள் இப்போது அப்படியே மாறிவிட்டாளே... ம்ஹும் இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது என்று நினைத்து அவளை பார்க்க

அவள் கதவை திறந்து உள்ளே போய்க்கொண்டு இருந்தாள்... சத்யன் உடனே “ மான்சி” என்று கூப்பிட... அவள் நின்று திரும்பிப்பார்த்து என்ன என்பதுபோல் கண்ணசைக்க

“ இல்ல சும்மா உங்க பேர் எப்படி இருக்குன்னு கூப்பிட்டு பார்த்தேன்” என்று சத்யன் அசடுவழிய

அவள் உதட்டளவில் சிறு சிரிப்புடன் தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்

சத்யன் மூடிய கதவையே சிறிதுநேரம் நின்று பார்த்தான்... இது அவள் மனக்கதவு திறக்காது என்பதன் அர்த்தமா...

இல்லை இந்த கதவை தட்டினால் திறப்பது போல அவள் மனக்கதவும் என் இதயக் கரங்களால் தட்டினால் திறக்குமா.....

சத்யன் மான்சியை பற்றிய பலத்த யோசனையுடன் தன் வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனான்



" ஒரு தானியங்கி கதவுபோல

" நீ வந்தபோது திறந்து

" நீ உள்ளே சென்றதும்

" மூடிக்கொண்டுவிட்டது

" என் இதயம்

" என் கவிதை புத்தகத்தின்...

" ஒருபக்கம் திருப்பபடுகிறது....

" நீ கண்மூடி கண் திறக்கும் போது!

அதன்பிறகு வந்த மூன்றுநாட்களும் சத்யன் மான்சி உறவில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே சீராக போனது... எதிரெதிரே பார்த்துக்கொண்டால் ஒரு சிறு புன்னகையோடு அவர்களின் பயணம் தொடர்ந்தது

சத்யனின் தவிப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்க ... அவளுக்காக ரொம்பவே ஏங்க ஆரம்பித்தான்.... இவளை நினைத்து நினைத்தே தன்னுடைய இளமை வீணாகிவிடுமே என்று வேதனைப்பட்டான்

ஒருபக்கம் பரணி தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சங்கடமாக இருந்தது ... மறுபக்கம் மான்சியின் மீதான சத்யனின் காதல் வானுயர வளர்ந்து... கடலளவுக்கு ஆழமாகவும் போய் கொண்டேயிருந்தது

அன்று தேதி ஒன்று என்பதால் சத்யன் அவனுடைய உழியர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு வேலையோடு வீட்டுக்கு வந்துவிட்டான்....

வந்தவன் பால்கனியின் கதவை திறந்து அங்கே ஒரு சேரை போட்டு அமர்ந்துகொண்டு நிமிடத்துக்கு ஒருமுறை கீழே எட்டி பார்த்தபடி மான்சியின் வரவுக்காக காத்திருந்தான்...

மணி ஆறானது இன்னும் மான்சி வரவில்லை ஒருவேளை இன்று ஒன்னாம் தேதி என்பதால் பேங்கில் வேலை நிறைய இருந்ததோ என்று எண்ணியபடி அவள் வருகையை பார்த்திருக்க

மணி எட்டானது என்றதும் சத்யனுக்கு பதட்டம் அதிகரிக்க இவ்வளவு நேரம் இங்கே காத்திருந்ததற்கு பேசாமல் நாமே போய் பார்த்துவிட்டு வந்திருக்கலாமோ என்று கவலையாக இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான்

அப்போது அவனுடைய செல் ஒலிக்க அவசரமாக அதை ஆன் செய்து பேசினான் ... எதிர் முனையில் பழக்கமில்லாத ஆண் குரல் கேட்க ஏதோ ராங் நம்பர் போல என்று நினைத்து அலட்சியமாக பேசினான்

“ சார் நீங்கதானே சத்யன் “ என்று எதிர் முனை ஆண் குரல் கேட்க

“ ஆமா சொல்லுங்க என்ன விஷயம்” என்றான் சத்யன்

“ சார் நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசறோம் .. உங்களுக்கு மான்சின்னு யாரவது தெரியுமா” என்று எதிர் முனையில் கேட்டதும்

சத்யனுக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது “ தெரியும் சொல்லுங்க சார் அவங்களுக்கு என்னாச்சு” என்று சத்யன் உட்சபட்ச பரபரப்பில் கேட்டான்

“ அவங்களுக்கு ஆபத்து ஒன்னும் இல்ல சார் ... ஆனா ஜி ஹச்ல அட்மிட் பண்ணிருக்கோம் உடனே வர்றீங்களா” என்று அந்த ஆண் குரல் நிதானமாக சொல்ல

சத்யனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது “ சார் ஆபத்தில்லேன்னு சொல்றீங்க அப்புறமா ஜி ஹச்ல அட்மிட் பண்ணிருக்கறதா சொல்றீங்க என்ன சார் நடந்தது” என்று கொஞ்சம் கோபமாக சத்யன் கேட்டதும்

“டென்ஷன் ஆகாதீங்க சார்... அவங்க பேங்கில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வர்றதுக்கு மின்சார ரயில்ல வந்திருக்கங்க .. அவங்களை பின்தொடர்ந்து எவனோ வந்து அவங்க ரயில் இருந்து இறங்கினதும் அவங்க பேக்கை அந்த ஆளு பிடிங்கியிருக்கான் இவங்க தராம போராடியிருக்கங்க இதனால அந்தாளு கத்தியால அவங்க வலது உள்ளங்கையில கிழிச்சிட்டான்... எங்களுக்கு உடனே தகவல் வந்தது ... நாங்க போறதுக்குள்ள அந்த பிக்பாக்கெட் எஸ்கேப் ஆயிட்டான் ... இவங்களுக்கு கையில் காயம் அதிகமா இருந்ததால நாங்க உடனே ஜி ஹச் அட்மிட் பண்ணிட்டோம்... சார் போதுமா தகவல் இனிமேலயாவது கிளம்பி வர்றீங்களா” என்று அந்த போலீஸ்காரர் நக்கலாக கேட்க

“ இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் சார்” என்ற சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு உள்ளே ஓடி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து எறிந்துவிட்டு பேன்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு பீரோவில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து பான்ட் பாக்கெட்டில் வைத்தபடி வெளியே வந்து கதவை பூட்டிகொண்டு லிப்ட்டை நோக்கி ஓடினான்

லிப்டிற்காக காத்திருக்காமல் படிகளில் இறங்க முற்பட்டவன் திடீரென்று ஞாபகம் வந்து மறுபடியும் மான்சியின் ஹவுஸ் ஓனர் பவானி வீட்டு கதவை தட்டினான் ...
உடனே கதவு திறக்கபட்ட யாரு என்றபடி பவானியம்மாள் எட்டி பார்க்க
சத்யன் அவளிடம் தனக்கு போனில் வந்த மொத்த விபரங்களையும் சொல்லி தன்னுடன் வருமாறு கூப்பிட்டான்

“ அய்யோ அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப பயந்தது இதுல இப்படி வேற ஆகிபோச்சே... கொஞ்சம் இரு சத்யன் என் வீட்டுகாரர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்” என்று அந்தம்மாள் உள்ளே போக

சத்யனுக்கு அந்த இடத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் நிற்பது போல் இருந்தது

தாமதம் செய்யாமல் உள்ளேயிருந்து வந்த பவானியம்மாள் கூடவே தனது கணவரையும் கூட்டி வந்தாள்

அவர்கள் இருவருக்கும் ஒரு ஆட்டோவை பிடித்து கொடுத்துவிட்டு சத்யன் தனது பைக்கில் கிளம்பினான்... ஒரு இயந்திரம் போல் தனது பைக்கை செலுத்தினான் சத்யன்

மான்சிக்காக அவன் உயிர் துடிக்கும் ஓசை வெளியே கேட்கும் போல இருந்தது...
அவனின் சிவந்த முகம் மேலும் சிவந்து அந்த இருட்டில் ஜொலித்தது...

அந்த ஆள் பையை பிடுங்கும் போது அவள் ஏன் போராடவேண்டும் ச்சே எடுத்திட்டு போட நாயேன்னு விசிறி அவன் முகத்தில் அடித்திருக்கலாம்... அதைவிட்டு விட்டு இப்படி கையை கிழிச்சுகிட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்காளே... என்று மான்சியை நினைத்து சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது

பைக் ஓட்டுவதில் இருந்து ஒரு கையை எடுத்து 'பைத்தியக்காரி பைத்தியக்காரி' என்று சத்தமாக சொல்லியவாறு நெற்றியில் அடித்துக்கொண்டான்.... பக்கத்தில் போகிறவர்கள் சத்யனை திரும்பி பார்த்தனர்

சத்யன் இதுவரையிலும் அந்த மாதிரி ஒரு வேகத்தில் பைக்கை ஓட்டியதில்லை ... அவன் மனதுக்கும் அவன் பைக்கும் இறக்கை முளைத்து விட்டிருந்தது

சத்யன் மருத்துவமனையை சென்றடையும் போது பவானியம்மாள் வரும் ஆட்டோ வரவில்லை... சத்யன் பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்து எவ்வளவு எடுத்துகொடுக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கேயிருந்தவனிடம் பைக் டோக்கனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே ஓடினான்

உள்ளேபோய் என்கொயரியில் விசாரிக்கும் போதே ஒரு போலீஸ்காரர் அவனருகே வந்து " நீங்கதான் சத்யனா" என்று கேட்க

" ஆமா சார் எங்க இருக்கா மான்சி" என்று சத்யன் பரபரப்புடன் கேட்டான்

" இப்போதான் சார் தையல் போட கூட்டிட்டு போயிருக்காங்க வாங்க போகலாம்" என்று போலீஸ்காரர் தனது தொப்பையை தூக்கிக்கொண்டு முன்னால் போக ... சத்யன் ஏன் இந்தாள் இவ்வளவு மெதுவா போறான் என்று எரிச்சல் பட்டுக்கொண்டே பின்னால் போனான்

தையல் போடும் அறையை சத்யன் அடைந்தபோது... மான்சி ஒரு பெஞ்சில் காலை நீட்டி உட்கார்ந்திருக்க.... அவள் வலது கையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிரந்தது

ஒரு நர்ஸ் பெண்மணி தையல் போடுவதற்காக ஊசியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதில் நரம்பை கோர்த்து மான்சியின் கையின் சதையில் பச்சையாகவே ஊசியை குத்தி தையல் போட .... மான்சி வலியால் துடித்தாள்

அவ்வளவு நேரம் அறையின் வாசலில் நின்றிருந்த சத்யன் மான்சி துடிப்பதை பார்த்ததும் உள்ளே ஓடிவந்து மான்சியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி தன் மார்பில் பதித்தகொண்டான்

மான்சி முதலில் திமிறினாலும் பிறகு தன்னை அணைத்தது சத்யன் என்றதும் ... அவன் மார்பில் இருந்த தன் முகத்தை நிமிர்த்தி சத்யனை பார்த்து கண்ணீருடன் " ரொம்ப வலிக்குது" என்று சொல்ல

சத்யனுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் நர்ஸ்ஸிடம் " என்ன மேடம் அப்படி தையல் போடுறீங்க ரொம்ப வலிக்குமே ... மயக்க மருந்து ஏதாவது குடுத்துட்டு பண்ணகூடாதா " என்று கோபமாக கேட்க

" என்ன சார் என்னா ஊர்லயிருந்து வந்திருக்கீங்க இதுக்குப்போய் மயக்கம் குடுப்பாங்களா.... சும்மா ஒரு எட்டு தையல்தான் சார் இன்னும் கொஞ்சநேரத்தில் ஆயிடும்" என்று சொன்ன நர்ஸ் தனது வேலையில் மும்முரமாக இருக்க

சத்யன் மான்சியை பார்த்தான் ... அவள் பல்லை கடித்து வலியை பொறுத்தாள்... அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துபடியே இருக்க ...



சத்யன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து அவள் கண்ணீரை துடைத்துவிட்டு... தையல் போடுவதை அவள் பார்க்காதவாறு முகத்தை திருப்பி தன் மார்போடு அணைத்து பிடித்துக்கொண்டு அவள் உச்சந்தலையில் தனது தாடையை வைத்துக்கொண்டான்

மான்சியி் வலது உள்ளங்கையின் நடுவில் காயம் நல்ல ஆழமாக பிளந்து கொண்டு இருந்தது ... நர்ஸ் உள்ளங்கையின் இரண்டு பக்க சதையையும் இழுத்து வைத்து தையல் போட... மான்சியின் ரத்தம் தரையில் சொட்டியது

அதை பார்த்த சத்யனுக்கு கண்களில் கண்ணீர் வந்தது அவள் தலையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு சத்யன் கண்ணீர் விட ..

மான்சி தன் தலையில் பட்ட ஈரத்தால் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ... அவள் நிமிர்ந்த வேகத்தில் சத்யனின் கண்ணீர் அவள் கன்னத்தில் விழுந்து வழிந்தது ...

மான்சி எதுவும் சொல்லத் தோனாமல் அவன் முகத்தையோ பார்த்தாள் ... சத்யனின் கண்ணீரை பார்த்ததும் அவளுக்கு தன் வலி மறந்துவிட்டது

சத்யனின் கண்ணீரை காணப் பொறுக்காமல் அந்த வானமும் கண்ணீர் வடித்தது 

No comments:

Post a Comment