Monday, March 16, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 2

சத்யன் தரையில் சரிந்ததும் அவன் மாமா பரமன் வந்து அவனை தூக்கி தன் மார்பில் சாய்த்துக்கொண்டு “ வேன்டாம் மாப்ளே அதைப்பத்தி நெனைக்கவே நெனைக்காத.... உங்கப்பன இத்தோட தலைமுழுகிடு சத்யா” என்று ஆறுதல் கூறினார்

“அந்த பொண்ணுகிட்ட இவன் நல்லா பாசமா பேசுவாண்ணா... அவதான் நம்ம குடியை கெடுத்தவன்னதும் இவனால தாங்க முடியலைன்னா”... என சத்யனின் அம்மா கண்ணீர் விட்டாள்

“அவகெடக்கா நாரச் சிறுக்கி நீ விடு மாப்பள... நாங்களும் இந்த ஆறுமாசமா எப்படி எப்படியோ உங்கப்பனை உள்ள தள்ளனும்னு பார்க்கிறோம்... ஆனா எப்படியாவது ஆளுங்களை புடிச்சு வெளியே வந்துடுறான் மாப்ளே... சாந்தியும் அந்தாளுமேல ஸ்ட்ராங்கா கேஸ் குடுக்க மாட்டேங்குறா... புருஷன் பாசம் தடுக்குது போல’ என்று பரமன் தங்கையை பார்த்து ஏளனமாக சொல்ல... சாந்தி தலையை குனிந்துகொண்டாள்



சத்யனின் தங்கை சங்கீதா தன் அண்ணன் மடியில் கவிழ்ந்து “ அண்ணா நானு நீயி அம்மா மூணுபேரும் செத்துபோயிடலாம்.... என்னால ஸ்கூலுக்கு கூட போகமுடியலை எல்லாரும் உங்கப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆயிருச்சாமேன்னு கிண்டல் பண்றாங்க... அசிங்கமா இருக்குண்ணா” என்று அழ ஆரம்பிக்க

சத்யனுக்கும் அப்படித்தான் தோன்றியது ஆனால் தான் மட்டும் செத்துப் போகவேண்டும் என்று நினைத்தான்.... அவனுக்கும் கண்ணீர் வந்தது... அவன் முதல் காதல் பிஞ்சிலேயே உதிர்ந்து காய்ந்து சருகாகி விட்டது புரிந்தது... அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்

பிறகு தன் மடியில் கவிழ்ந்து அழும் தங்கையை பார்த்தான் .. தன் தோளில் சாய்ந்து கண்ணீர்விடும் தாயை பார்த்தான்.... நான் உயிரைவிட்டுவிட்டால் இவர்களுடைய கதி என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட.. இருவரையும் அணைத்துக்கொண்டான்

அதன்பிறகு சத்யனை அவன் மாமா பரமன் தனியாக அழைத்து போய் மற்ற விவரங்களை கூறினார்

மொதல்ல உங்கப்பா அந்த பொண்ண கல்யாணம் பண்ணனும்னு சாந்திகிட்ட சம்மதம் கேட்டுருக்கான்....
உங்கம்மா முடியாதுன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணவே இந்தாளு சத்தமில்லாம அவளை கூட்டிட்டு வீரபாண்டி கோயிலுக்கு போய் தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்துட்டான்...
இதுக்கு அந்த கேடுகெட்ட பய ஊர்ல நாலுபேரு சப்போர்ட் வேற...
அப்புறமா எனக்கு தகவல் தெரிஞ்சு இங்கருந்து பத்துபேரை கூட்டிட்டு போய் எனனய்யா இதுன்னு கேள்வி கேட்டா...
ஆமா நடந்தது நடந்து போச்சு இனிமே தமிழுகூட சேர்ந்து குடும்பம் நடத்த முடிஞ்சா உன் தங்கச்சியை இங்க இருக்க சொல்லு இல்லேன்னா உன்கூடவே கூட்டிட்டு போயிருன்னு நக்கலா சொல்றான்....
எனக்கு வந்த ஆத்திரத்தில் அவனை அடிக்கப்போய் பெரிய கைகலப்பாயிருச்சு... அத்தோட உங்கம்மாவை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்....
அன்னிக்கே அவன்மேல போலீஸில் பலமா ஒரு கேஸ் குடுத்துருக்கனும் உன் அம்மாதான் வேனாம்னு தடுத்துட்டா....
அதுக்கப்பறம் அந்த பாவி என்னா ஏதுன்னு எட்டிகூட பார்க்கலை.... போனவாரம் ஒரு ஆள் உங்கப்பா அனுப்புன வக்கிலுன்னு வந்தான்....

" உங்கப்பா தன்னோட சொத்தை ஐஞ்சு பங்கா போட்டு அதில் மூணுபங்கு உங்க மூணுபேர்க்கும் மீதி ரெண்டு பங்கு அவனுக்கும் அந்த சிருக்கிக்கும்ன்னு சொல்லி பத்திரம் எழுதி அந்த வக்கீல்கிட்ட குடுத்தனுப்பியிருந்தான் அதை உன்அம்மா கையால கூட தொடலை...

"எனக்கு என் பிள்ளை இருக்கான் அவன் என்னையும் என் மகளையும் காப்பாத்துவான் அந்தாளோட சொத்து எனக்கு வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டா மாப்ள... அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை.... இதையெல்லாம் சொன்னா உன் படிப்பு கெட்டு போயிரும்ன்னு தான் நாங்க எதுவும் சொல்லலை” என பரமன் விளக்கமாக நடந்ததை சொல்ல 

சத்யனுக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை... இன்னும் நான் வேற மேல படிக்கனும்... தங்கச்சியை படிக்க வச்சு கல்யாணம் பண்ணனும்... அதைவிட அம்மாவை இந்த நிலைமையில் எங்க விட்டுட்டு போறது என்று குழம்பி தன் மாமாவின் முகத்தை பார்க்க

அவர் இவன் மனநிலையை உணர்ந்து “ அவன் கிடக்கான் விடு மாப்ள உனக்கு நான் இருக்கேன்டா... அவன் பணமும் வேண்டாம் அவன் உறவும் வேண்டாம்...

"எங்க சொத்தில் உன் அம்மாவோட பங்கை நாங்களே எடுத்துகிட்டு அதுக்குண்டான பணத்தை அம்மா பேர்ல டெபாசிட் பண்ணிரலாம்ன்னு இருக்கோம்...
இதை நாங்க எல்லாரும் ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்... நீபோய் நல்லபடியா மேல் படிப்பு படி....
சங்கீதாவையும் நல்லா படிக்க வைக்கலாம்... பணத்தை பத்தி நீ கவலையேபடதா.... ஆனா மாப்ள உன் அம்மாவை இங்கருந்து கூட்டிட்டு போய் சென்னையில் வச்சுக்க...
இங்கேருந்தா இங்க கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை அதனால நீ கூட்டிட்டு போயிரு நான் மாசம் ஒருமுறையாவது வந்து உங்களையெல்லாம் பார்த்துக்கிறேன்... என்ன மாப்ள நான் சொல்றது சரிதானே” என்று சத்யனை பார்த்து கேட்டார்

சத்யனுக்கு மனது ஒரளவுக்கு நிம்மதியானலும் தன் குடும்பத்தின் அவல நிலைக்கு காரணமான அந்த தமிழ்ச்செல்வியை போய் பார்த்து அவள் முகத்தில் காறித்துப்பிட்டு வரனும் என்று நினைத்தான்

மறுநாள் யாருக்கும் தெரியாமல் குச்சனூர் கிளம்பி போனான் சத்யன்..... அந்த ஊரில் இருந்த அனைவரும் இவனை பரிதாபமாக பார்ப்பதுபோல் இருக்க ... நாம இங்க வந்தது தப்போ என்று நினைத்தான் சத்யன்... ஆனால் அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அத்தனைபேர் பார்வையையும் தாங்கிகொண்டு தன் வீட்டு வாசலையடைந்தான்

வெளியே இருந்த ஒரு பண்ணையாள் இவனை பார்த்துவிட்டு சங்கடமாக தலையை சொரிந்தாறு “ வாங்க தம்பி அப்பா இல்லை வயக்காட்டுக்கு போயிருக்கார்.... அந்தம்மா மட்டும் உள்ளே இருக்காங்க” என்று சொல்ல
சத்யனுக்கு வயிரெரிந்து அந்த நாய்க்கு இவ்வளவு மரியாதையா என்று நினைத்தவன் “கூப்பிடு அந்தம்மாவை” என்று ஏளனமாக சத்தம் போட்டு சொல்ல

அவன் போய் கூப்பிடுவதற்க்குள் சத்தம் கேட்டு தமிழ்ச்செல்வியே வெளியே வந்தாள்... வந்தவள் சத்யனை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நிற்க்க....

சத்யன் அவளை ஏறஇறங்க பார்த்தான்...அவளின் நிறைமாத வயிறு உப்பியிருந்தது ... அவன் அப்பா ஈஸ்வரனுடன் நிறைவாக குடும்பம் நடத்தும் பூரிப்பு அவள் முகத்தில் தெரிந்தது... தனது தாயின் இடத்தில் இருக்கும் அவளை பார்த்து சத்யனின் மனம் கொதித்தது

அதற்க்குள் அங்கே நிறையபேர் கூடிவிட சத்யன் சண்டையிடதான் வந்திருக்கிறான் என்று நினைத்து சிலர் அவனை சமாதானம் செய்ய முயற்சிக்க

சத்யன் அனைவரையும் உதறித் தள்ளினான் " என்னை விடுங்கய்யா எல்லாரும் ஊராய்யா இது ... எங்கம்மாவை விரட்டிட்டு இந்த கேடுகெட்டவளை வச்சு குடும்பம் நடத்துறான் எங்கப்பன் அதை கேட்க எவனுக்கும் தைரியமில்லை என்னை வந்து மடக்கறீங்களா... என்றவன் தமிழ்செல்வி பக்கம் திரும்பி "

" என்னடி ஊரையே உனக்கு சப்போர்ட் வளைச்சு போட்டுட்டியா.... ஏன்டி ஊர்ல உனக்கு வேறெந்த மாப்பிள்ளையும் கெடைக்கலையா எங்கப்பன் தானா கிடச்சான்.... உன் அழகுக்கு தெருவிலே வந்து நின்னா நீ நான்னு போட்டி போட்டு உன்னை ***** வருவானுங்களே அதைவிட்டுட்டு இந்த கிழவனை போய் ஏன்டி புடிச்சிகிட்ட.... சொத்து வரும்னு தானே அதை நீ சும்மா கேட்டா கூட எங்கம்மா குடுப்பாங்களேடி ...

" ச்சே நான் உன்னை எவ்வளவோ உயர்வா நெனைச்சேன் நீ இப்படி அடுத்தவ புருஷனுக்கு ஆசை படுறவன்னு இப்பத்தானே தெரியுது.... நல்லவேளை நான் தப்பிச்சேன் எங்கப்பன் மாட்டிக்கிட்டான்... இன்னும் எத்தனை நாள் அவன்கூட இருக்க போறியோ தெரியலை .... ச்சே நீயெல்லாம் ஒரு பொம்பளை" என்ற சத்யன் கத்தியவாறே அவளை பார்த்து காறியுமிழ்ந்துவிட்டு ரோட்டில் இறங்கி விருவிருவென நடந்தான்

ஏனோ அவன் மனமே இப்போ நிம்மதியாக இருந்தது ... ஏதையோ சாதித்த திருப்தி இருந்தது .... இனி வாழ்க்கையில் எந்த தடையுமின்றி முன்னேறலாம் என்று எண்ணமிட்ட வாறு பெரியகுளம் வந்தான் 

இது நடந்து சிலநாட்கள் கழித்து சத்யன் சென்னையில் இருக்கும் தன் நன்பன் ஒருவன் உதவியுடன் சென்னை புறநகர் பகுதி மேடவாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தன் அம்மாவையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு போனான் சத்யன்

பரமன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்... சத்யனின் சில நன்பர்களும் அவனுடைய சென்னை வாழ்க்கைக்கு பெரிதும் உதவினர்

சத்யன் தனது தங்கை சங்கீதாவை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்தான்.... தானும் மேல் படிப்புக்காக சென்னை பிலிம் ஸ்கூலில் சேர்ந்து மூன்று வருடம் படித்தான்...

என்னதான் பிள்ளைகளை பார்த்து சந்தோஷமடைந்தாலும் எந்த வயதில் கணவனின் ஆதரவு தேவையே அந்த வயதில் கணவனை பிரிந்த கவலை சாந்தியை உள்ளுக்குள்ளேயே சிறிதுசிறிதாக அரிக்க ஆரம்பித்தது... அதன் விளைவு சில பெயர் புரியாத நோய்கள் சாந்தியின் உடம்பில் குடியேற உடல் நாளுக்குநாள் நலிவடைந்தது

சத்யனுக்கு இதுவே பெரும் கவலையாக இருந்தது... தனது படிப்பு தன் தங்கையின் படிப்பு இவற்றுடன் தனது அம்மாவையும் கவணமுடன் பார்த்துக்கொண்டான்...

ஆனால் சத்யன் எவ்வளவுதான் கவணமாக பார்த்தாலும்.. பணத்தை வாரியிறைத்து வைத்தியம் செய்தாலும் சாந்தியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நலிவடைந்தது

சத்யனின் மூன்றாமாண்டு படிப்பின் போது சாந்தியின் உடல்நிலை சற்று மேசமாக சத்யன் பரமனுக்கு போன் செய்து உடனே வரவழைத்தான்...

பரமனிடம் சாந்தி தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தன் உயிர் போவதற்குள் திருமணம் நடத்த சொல்ல...
அவரும் தனது தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தீவிரமாக சங்கீதாவுக்கு மாப்பிள்ளை தேடினார்

இறுதியாக தன் மனைவியின் அக்கா மகன் கைலாஷ்க்கு சங்கீதாவை பேசிமுடித்த பரமன்... திருமண பொருப்புகள் அனைத்தையும் தனதாக்கிக்கொண்டு சிறப்பாக நடத்தினார்



சங்கீதாவின் திருமணத்தை பற்றி ஈஸ்வரனுக்கு சொல்லவில்லை என்றாலும்... தன் மகளின் திருமணத்தை கேள்விப்பட்டு தனது கடமையை செய்ய வந்தவரை சத்யன் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினான்

சங்கீதா தன் கணவன் வீட்டுக்கு போய்விட ... படிப்பு முடிந்த சத்யன் தனது நன்பர்களுடன் சில விளம்பர கம்பெனிகளுக்கு தனியாக சில விளம்பர படங்களை தயாரித்து கொடுத்தான் ... அவை நல்லமுறையில் வந்து இவனுக்கு பேர் வாங்கி கொடுக்க... சத்யன் மெதுவாக வாழ்க்கையின் அடுத்த படிகளில் கால் வைத்தான்

கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை கொண்டு முன்னேறிய சத்யன் தன்னுடைய 27 வயதில் தன் தாயை இழந்தான் ...

சங்கீதா நோயின் தீவிரத்தில் தான் துன்புறுவதை கண்டு கண்ணீர் விட்ட தன் மகனை காண சகிக்காத அந்த தாய் தனியாக அவனை தவிக்க விட்டுவிட்டு தனது கல்லறை தேடி போய்விட்டாள்

தாயின் இழப்பு சத்யனை ரொம்பவே பாதிக்க சத்யன் தன் வாழ்க்கையில் விரக்த்தியின் உச்சத்துக்கே போய்விட்டான் ...
பரமன்தான் அவனை தேற்றினார்
தன் மனைவியின் மரணத்தை கேள்விப்பட்டு ஈஸ்வரன் குச்சனூரில் இருந்து கிளம்பி வருவதற்குள் சத்யன் தன் தாயின் இறுதி சடங்கை முடித்திருந்தான்
ஈஸ்வரனுக்கு இதைவிட வாழ்க்கையில் பெரிய அவமானம் வேறென்ன இருக்கமுடியும்...
தன் மனைவின் இறுதி காரியங்களை கூட செய்யமுடியாத அவர் தலைகுனிந்து குச்சனூர் போய் சேர்ந்தார்


“ நியாமாக வாழ்ந்தவர்களை எளியமுறையில் இறக்க கடவுள் வழிசெய்கிறார் “

“ வந்தால் சிகிச்சை பெறவேண்டுமே என்று எதிர்பார்க்காத ஒரே நோய் மரணம் ஒன்றுதான்”

தன் தாயின் மரனத்தால் சோர்ந்து முடங்கிப்போன சத்யனை அவன் நன்பர்களும் பரமனும்தான் அறிவுரைகள் சொல்லி நடப்பு வாழ்க்கைக்கு திருப்பினர்...

மீதமிருந்த தனது அம்மாவின் பணம் நகைகள் மற்றும் இவனது உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சேர்த்து ... சத்யன் அண்ணாநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு இரட்டை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்கி அங்கே குடிபெயர்ந்தான்...

கையில் இருந்த பணத்தை கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டான்... அவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக இருக்க கஷ்டமாக இருந்தாலும்.. அங்கே கிடைத்த தனிமையால் மனதுக்கு நிம்மதியாக இருந்தது..
சங்கீதாவும் அவள் ஒரு வயது மகனுடன் அவள் கணவன் இருக்கும் மஸ்கட் போய்விட்டாள்... ஒவ்வொருநாள் இரவும் சங்கீதாவும் கைலாஷ்ம் போன் செய்து சத்யனிடம் பேசி அவன் மனதில் இருக்கும் அனாதை உணர்வை போக்க முயற்ச்சித்தனர்

நல்ல அழகான அமைதியான அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள்... கார் பார்கிங் செய்ய வசதியான இடம் குழந்தைகள் விளையாட சிறிய பூங்கா.. அக்கம்பக்கம் யாரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும்...ஒருவரையொருவர் பார்த்தவுடன் ஒரு புன்னகைக்க பஞ்சம் இருக்காது

சத்யனுக்கு இப்போதெல்லாம் வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்ப சுலபமாக இருந்தது... வங்கியில் கடன் பெற்று சொந்தமாகவே விளம்பரபட நிறுவனம் நடத்தும் சத்யன் முப்பதுபேர் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்துக்கு எம் டி யாக இருந்து திறமையாக செயல்பட்டான்

தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் வீட்டில் இருந்து கொண்டு தனது முன்னேற்றத்துக்கான வழிகளை பற்றி சிந்தித்து சரியாக செயல் படுத்தினான்...
வெளியே யார் முகத்தையும் பார்க்க தேவையிராத அந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை சத்யனுக்கு ரொம்ப பிடித்துப்போனது

அவனது நட்பு வட்டாரம் சிகரெட்டையும், மதுவையும், பெண்களையும், அவனுக்கு அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. எல்லாவற்றிலும் அளவோடும் கவனத்தோடும் இருந்தான்

வார கடைசி நாட்களில் மட்டும் தன் நன்பர்களுடன் மது அருந்தும் சத்யன்... தனது வாலிப வயதின் தாக்கங்களை சில பழகிய பெண்களிடம் தனித்துக் கொண்டான்

இன்னும் நான்கு மாதங்களில் முப்பதை எட்டப்போகும் சத்யன் தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்திக்கவே இல்லை... இப்போதெல்லாம் அவன் தங்கை சங்கீதா போன் செய்தால் அவன் திருமணத்தை தவிர வேறு எதைபற்றியும் பேசுவது கிடையாது

சத்யனின் மாமா பரமன் அடிக்கடி வந்து அவனை பார்த்துவிட்டு போவார்... ஆனால் போகும்போது மறக்காமல் அவன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டார்... சத்யன் எதையாவது சொல்லி அவரை சமாளித்து அனுப்புவான்

தனது ஓய்வு நேரங்களில் அழகான ஓவியங்களை வரையும் சத்யன் அதுவும் போரடித்தால் வீட்டை கீழே இறங்கி வந்து பூங்காவில் விளையாடும் மழலைகளின் அழகை பார்த்துக் கொண்டு பொழுது போக்குவான்

அன்றும் அப்படித்தான் பூங்காவில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து குழந்தைகளின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்தான்...

அப்போது சருக்கில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மூன்று வயது பெண் குழந்தை சரிந்துவந்து கீழே கொட்டப்பட்டிருந்த மண்ணில் விழாமல் பக்கவாட்டில் விழுந்து அழ ஆரம்பித்தது

அதை கவனித்த சத்யன் ஓடிச்சென்று குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய அதற்க்குள் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டார்

குழந்தைக்கு காயம் எதுமில்லை என்றாலும் விழுந்த அதிர்ச்சியில் அழுதுகொண்டே இருந்தது... சத்யன் அவரிடமிருந்து குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டு தட்டி கொடுத்து சமாதானம் செய்ய...

அந்த புதியவனின் சமாதானத்தில் குழந்தை தன் அழுகையை நிறுத்தி சத்யனை பார்த்து சிரித்தது... குழந்தை சிரிக்கவும் சத்யனுக்கும் சிரிப்பு வந்தது ... குழந்தையின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு சத்யன் சிரிக்க... அந்த குழந்தையும் பதிலுக்கு இவன் கன்னத்தில் முத்தமிட்டு அதன் அழகு முகம் மலர கன்னங்கள் குழிய அழகாக சிரித்தது 

“இவ யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்க மாட்டா ஆனா உங்களுக்கு முத்தமெல்லாம் குடுக்கறாளே” என்று வந்தவர் ஆச்சரியமாக சத்யனிடம் சொல்ல

“ம் என்னை இவளுக்கு பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன்” என்று அவருக்கு பதில் சொன்ன சத்யன்.. குழந்தையை பார்த்து “அப்படித்தானே பாப்பா” என்று கேட்டான்

உடனே குழந்தை அவன் தலையில் தட்டி “என் பேரு பாப்பா இல்லை சைந்தவி” என்று சொல்ல..

அந்த நடுத்தர வயது மனிதர் “ஏய் சவி இதென்ன பெரியவங்க கிட்டே மரியாதையில்லாம பேசறே” என்று குழந்தையை அதட்டினார்

“விடுங்க சார் சின்ன பாப்பா தானே... ஸாரி ஸாரி சைந்தவி தானே” என்று குழந்தைக்கு பயந்தவன் போல் நடிக்க... அவன் நடிப்பில் குழந்தையும் அந்த மனிதரும் சிரித்துவிட்டனர்

அவர் சத்யனிடம் “நான் பரணீதரன்... சொந்த ஊர் திருச்சி லால்குடி... ரிட்டையர் மிலிட்டரி மேன்... இப்போ ஒரு பிரபல கம்பெனிக்கு செக்கியூரிட்டி ஆலோசகரா இருக்கேன்... உங்க பிளாட்டுக்கு எதிர் பிளாட்லதான் இருக்கேன்..... இங்கே குடிவந்து இரண்டு மாசம்தான் ஆச்சு .... இவ என் மகள் வயிற்று பேத்தி சைந்தவி.. சரியான வாலு பொண்ணு” என்று தன்னையும் தன் பேத்தியையும் பரணி அறிமுகம் செய்துகொண்டார்

“என்னோட பிளாட்டுக்கு எதிரில் இருக்கீங்களா நான் பார்த்ததேயில்லையே” என்று சத்யன் ஆச்சிரியமாக கேட்க

“ம் நீங்க என்னை பார்த்ததில்லை சார் ஆனா நான் உங்களை தினமும் நீங்க ஆபிஸிலிருந்து வரும்போது பார்ப்பேன்” என்று பரணி சொன்னதும்

“ அய்யோ நீங்க என்னைவிட வயசில் பெரியவர் நீங்க போய் என்னை சார்ன்னு கூப்பிட்டுகிட்டு” என்று பதறிய சத்யன் சத்யன் “என் பெயர் சத்யன்... ட்ரிபிள் எஸ் என்ற பெயரில் சொந்தமா ஒரு விளம்பர நிறுவனம் நடத்துறேன் சார்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்

“ ம் உங்களை பத்தி ஓரளவுக்கு தெரியும் சத்யன்... என் பிளாட் ஓனர் பவானியம்மா சொல்லிருக்காங்க” என்றவர் “ உங்கம்மா கொஞ்சநாளைக்கு முன்னாடி தவறிப்போய்ட்டாங்கன்னு சொன்னங்க ரொம்ப வருத்தப்படுறேன் சத்யன்” என்று வருத்தமான குரலில் பரணி சொன்னதும்

சத்யனுக்கு ஆச்சிரியமாக இருந்தது இந்த ஊரில் இப்படி ஒரு மனிதரா என்று நினைத்தவன் “ பரவாயில்லை சார் உடம்பு சரியில்லாமத்தான் இறந்துபோனாங்க” என்று சகஜமாக பேசினான் சத்யன்

“நான் உங்களை சார்ன்னு கூப்பிடலை அதேமாதிரி நீங்களும் என்னை சார்ன்னு கூப்பிடாதீங்க... அங்கிள்னு கூப்பிடுங்க இல்லேன்னா பெயர் சொல்லி கூப்பிடுங்க” என பரணிதரன் நட்பாய் உத்தரவுப்போட்டார்

சத்யன் அவரைப்பார்த்து சிநேகமாக சிரித்தபடி “ ம் சரிங்க அங்கிள்... வாங்க அந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று சிமிண்ட் பெஞ்சை நோக்கி போனான்

சவியை மறுபடியும் விளையாட விட்டுவிட்டு சத்யனோடு பெஞ்சில் அமர்ந்த பரணிதரன்... உலக விஷயங்கள் பற்றி நிறைய பேசினார்... சத்யனுக்கு அவரை ரொம்பவே பிடித்து போனது...

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்… இருவருக்கும் வயதை மீறிய ஒரு நட்பு துளிர்விட ஆரம்பித்தது... நிறைய பொது விஷயங்களை பேசினார்.. மற்றபடி அவரவர் சொந்த விஷயங்களில் பற்றி இருவரும் விவாதிக்கவில்லை

பரணிதரனுக்கு ஒரு மகன் திருமணமாகி அருணாச்சலப் பிரதேசம் கட்டாக்கில் மனைவி குழந்தைகளுடன் இருப்பதும்... மகள் குடும்பத்துடன் பரணிதரனும் அவர் மனைவி காஞ்சனாவும் இருக்கிறார்கள் என்பதுவரை சத்யனுக்கு தெரியும்

அடுத்தவர் மூக்குநுனியை தொடாத அவரின் நாகரீகமான நட்பு சத்யனை அவர்பால் ஈர்த்தது... சத்யன் இப்போதெல்லாம் மாலைவேளைகளில் பரணிதரனுடன் பேசுவதற்காகவே ஆபிஸில் இருந்து சீக்கிரமாக வர ஆரம்பித்தான்....

அந்த வார இறுதிநாளில் சவியை விளையாட விட்டுவிட்டு இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்



“சத்யன் நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைக்கக்கூடாது” என்று பரணிதரன் மெதுவாக ஆரம்பிக்க

“ என்ன அங்கிள் இப்படி கேட்டுட்டீங்க நீங்க என்ன கேட்டாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன் தாராளமா கேளுங்க அங்கிள்” என்று சத்யன் சொன்னான்

“ வேற ஒன்னுமில்ல சத்யன் நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்கன்னு தெரியும்.. ரெண்டு மூனு முறை உங்களை சனிக்கிழமை டைம்ல பார்ல பார்த்திருக்கேன்... நீங்க விரும்பினா ரெண்டுபேரும் ஒன்னா ஸேர் பண்ணி ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்... ஏன்னா எனக்கு மிலிட்டரி கோட்டாவில நிறைய சரக்குகிடைக்கும் அதனாலதான் கேட்டேன் சத்யன்... உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் ” என பரணிதரன் கூறியதும்

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது “அட என்ன அங்கிள் இதுக்குப்போயா இவ்வளவு சங்கடம்... ம்ம் இன்னிக்கு சனிக்கிழமை எங்க வச்சுக்கலாம் சொல்லுங்க எங்கயாவது பார்லயா’.. என்றவன் திடீரென முகம் மலர “ ஏன் அங்கே இங்கே போகனும் என் வீட்டுலயே வச்சுக்கலாம் அங்கிள் ப்ளீஸ்” என்று சத்யன் கெஞ்சுவது போல கேட்க 


No comments:

Post a Comment