Thursday, March 26, 2015

விவேகம் - அத்தியாயம் - 7

அடுத்த நாள் காலையில் அவன் அலுவலகம் செல்லுமுன் விவேக்கின் தந்தை அவனை கைபேசியில் விளித்தார்,

அவர் “டேய், விவேக் ஒரு பொண்ணு பாத்து இருக்கோம்.” என்றதும் 

விவேக் “என்னப்பா அதுக்குள்ளயா?” அதிர்ந்தான்

“ஆமாண்டா. உங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு. ஜாதகத்திலயும் பேசிக்கான பொருத்தம் எல்லாம் இருக்கு. எதுக்கும் நம்ம பணிக்கர் கிட்ட அனுப்பி இருக்கேன். அனேகமா அவரும் ஓ.கேன்னுதான் சொல்லுவார். மத்த டீடெயில்ஸ் எல்லாமும் ஓ.கே. ஷீ இஸ் ஹெல்தி அண்ட் ஸூடபிள் ஃபார் யூ இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ். நீயும் பாத்து ஓ.கே சொன்னா ஃபைனலைஸ் பண்ணிடலாம்”

சிறிது நேரம் மௌனம் காத்த விவேக், “நான்தான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேனேப்பா. நீங்களும் அம்மாவும் பாத்து ஓ.கே சொன்னா போதும்னு. நீங்களே ஃபைனலைஸ் பண்ணிடுங்க. கல்யாணத்துக்கு எப்ப லீவ் எடுக்கணும்னு எனக்கு கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க”



“சரி, பொண்ணு டீடெயில்ஸ் ஃபோட்டோ எல்லாம் ஈமெயில்ல அனுப்பவா?”


“ஓண்ணும் வேணாம் .. "

"சரி, அப்ப நாங்க பாத்து ஃபைனலைஸ் பண்ணற போண்ணு உனக்கு ஓ.கேதானே?"

"ஓ.கே ப்பா"

"இரு உங்க அம்மா உங்கிட்ட பேசணுமாம் ..."

"ம்ம்ம் கொடுங்க"

"டேய் விவேக் போண்ணு யாருன்னு .... " சிறு சத்தங்களுக்கு பிறகு எதிர்முனையிலிருந்து இணைப்பு துண்டிக்கப் பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு மறுபடி வந்த அழைப்பில் அவனது தாய், "சாரிடா கண்ணா லைன் கட் ஆயிடுச்சு ... எல்லாம் உங்க அப்பா சொன்ன மாதிரியேதான் .. " என்று விடைபெற்றார். தன் தாயின் குரலில் சிறு கேலி இருந்ததைப் போல் உணர்ந்தான்.

அலுவலகத்தில் முதலில் ஒரு டீம் மீட்டிங்க்.

விமலா மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். கலவரத்துடன் விவேக், “ஏய், என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்க?”

“ஒண்ணுமில்லை .. கொஞ்சம் உடம்பு சரியில்லை”

“என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லைப்பா .. “ என்றவாறு தலை குனிந்தாள் .. 

“என்னவோ நீ மறைக்கற .. என்ன ஆச்சு சொல்லுடீ” என்று விவேக் வற்புறுத்த

“ஐய்யோ .. விடேன் ..” என்றவள் அவன் காதருகே வந்து “லேடீஸ் பராப்ளம்” என்று கிசு கிசுத்தாள்.

“ஓ, பீரியட்ஸ் ?”

“ம்ம்ம்”

“ரொம்ப கஷ்டமா இருக்கா? “

“ம்ம்ம் .. இன்னிக்கு ரெண்டாவுது நாள். கொஞ்சம் அதிகமா இருக்கு. அடி வயித்தை வலிக்குது ..”

“எதாவுது மெடிசின் சாப்பிட்டியா?”

“ம்ம்ம் சாப்பிட்டேன் . நாளைக்கு சரியாயிடும் .. “

“லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் இல்லை?”

“முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அப்பறம் இந்த டீம் மீட்டிங்க். சுரேஷை பத்திதான் உனக்கு தெரியுமே. மீட்டிங்க் வரலைன்னா கடுப்பாயிடுவாரு”

“அதுக்காக? என்னடி நீ?”

“மூணு நாளுக்கு முன்னதான் நீ எனக்காக அவர்கிட்ட் பேசி இருக்கே. இப்ப நான் திடீர்னு லீவ் போட்டா?”

“நீ சும்மா இரு “ என்று எழுந்தவன் அந்த டிஸ்கஷன் ரூமுக்கு வெளியில் சென்று அங்கு வந்து கொண்டு இருந்த சுரேஷை வழியில் பார்த்து விமலா உடல் நிலை சரியில்லை, சொல்ல தயக்கப் பட்டு அமர்ந்து இருக்கிறாள் என்று சொன்னான்.

டிஸ்கஷன் ரூமுக்குள் நுழைந்த சுரேஷ் முதலில் விமலாவை பார்த்து, “விமலா, உனக்கு உடம்பு சரியில்லைன்னா எதுக்கு ஆஃபீஸுக்கு வந்தே? நான் ஒண்ணும் அவ்வளவு கொடுமை காரன் இல்லை .. இப்ப நீ புறப்பட்டு போ” என்றதும்

விமலா, “இட்ஸ் ஓகே. ஐ கேன் மேனேஜ் .. “ என்று முடிக்க முடிக்க விவெக் இடைமறித்து, “ஓண்ணும் வேண்டாம் “ என்று எழுந்து சுரேஷிடம், “ப்ளீஸ் சுரேஷ் ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் .. என்னோடது எல்லாம் அப் டு டேட் .. நீங்க மத்தவங்களுதை ரிவ்யூ பண்ணி முடிக்கறதுக்குள்ள வந்துடுவேன்” என்ற சுரேஷின் பதிலுக்கு காத்திராமல் விமலாவின் கையை பற்றி அந்த அறைக்கு வெளியில் இழுத்து வந்தான்.

தன் பைக்கில் அவளை அமர்த்திக் கொண்டு தன் ஃப்ளாட்டிற்கு வந்து

“நீ இங்க சாங்காலம் வரைக்கும் ரெஸ்ட் எடு .. சாங்காலமா நீ ஓ.கேவா இருந்தேன்னா உன்னை உன் பீ.ஜீல கொண்டு விடறேன்”

“எதுக்குடா .. நானே என் ஸ்கூட்டில பீ.ஜீக்கு போயிருப்பேன் இல்லை?”

“அவ்வளவு தூரம் எதுக்கு இப்படி இருக்கும்போது ரைட் பண்ணிட்டு போகணும் .. “ என்றவன் “அப்பறம் எதாவுது வேணுமா? மத்யானம் உனக்கு நான் லஞ்ச் வாங்கிட்டு வர்றேன்”

“ஒண்ணும் வேணாம் .. உன் ஃப்ரிட்ஜ்ல எதாவுது இருக்கும் எடுத்து ரீ-ஹீட் பண்ணி சாப்பிட்டுக்கறேன்”

“எதுக்குடீ பழசெல்லாம் .. வேண்டாம்”

“ஐய்யா சாமி, நீ இப்ப கிளம்பறயா?” என்று அவனை துரத்தினாள்.

மாலை விவேக் அவளை பீ.ஜீ விடுதிக்கு அழைத்து சென்றான்.


வியாழன் அன்று மாலை அவர்கள் அலுவலகத்துக்கு வெளியில் சாலையோர டீக் கடை ஒன்றில் விவேக், தீபக் சுரேஷ் மூவரும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

“இந்த கடையில தான் மிளகாய் பஜ்ஜி மிளகாய்ல போடறாங்க .. மத்த கடைல எல்லாம் பாக்க மிளகாய் மாதிரி ஒரு குடை மிளகாய் இருக்குமே அதுல போடறாங்க” என்று தீபக் விமர்சிக்க

சுரேஷ் “எங்களுக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசாதெ .. “ என்றவாறு அருகில் இருந்து ஒயின் ஷாப்பைக் காட்டி, “நீ அந்த கடையில போய் தண்ணி அடிச்சுட்டு இங்க வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறதை பாத்து இருக்கேன்” என்றதும் தீபக் சிறிது வழிந்தான்.

“டேய், மாப்ளே உனக்கு இந்த காரம் ஓ.கேவா” என்ற தீபக்கிடம்

விவேக், “எனக்கு இந்த காரம் ஓ.கேதான்.” என்றான்.

அப்போது ஸ்கூட்டியில் அவர்களருகே வந்த விமலா திரும்பி நின்று இருந்த சுரேஷைப் பார்க்காமல், “சரியான ஆள்டா நீ, எத்தனை தடவை நான் உங்கிட்ட் இந்த கடைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லி இருப்பேன்? இப்ப என்னை விட்டுட்டு வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறயா?. எனக்கும் வாங்கி கொடு” என்று அங்கு இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். 

திரும்பிய சுரேஷைப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்து, “சாரி சார், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” என்று மரியாதையுடன் எழுந்து நிற்க

சுரேஷ், “என்னம்மா நீ, நோ ஃபார்மாலிடீஸ் .. உக்காரு .. “ என்ற பிறகு விவேக்கைப் பார்த்து, “என்னடா பாத்துட்டு இருக்கே? அவளுக்கும் வாங்கி கொடு”

விமலாவை முறைத்த விவேக், “ஏய், வேண்டாம். உனக்கு இது ரொம்ப காரம்”

குரலை தாழ்த்தி அவனருகே நகர்ந்தவள் சிறு பிள்ளை போல், “எல்லாம் நான் சாப்பிடுவேன் ...“

“எப்ப நீ நான் சொல்றதை கேட்டு இருக்கே? சாப்பிட்டு தொலை”

வேகமாக தனக்கு ஆர்டர் செய்தது வருவதற்கு முன் விவேக்கின் தட்டில் இருந்ததை எடுக்க முற்பட .. “இருடீ .. உனக்கு சூடா வரும்.. அதுக்குள்ள நான் எதிர் கடைக்கு போய் மினரல் வாட்டர் ஒரு பாட்டில் வாங்கிட்டு வரேன். எப்படியும் சாப்பிட்டுட்டு ஆ ஊன்னு கத்துவே. தேவை படும்” என்று எழுந்து சென்றான்.

தீபக், “என்ன விமலா, உன்னை இப்படி தாங்கறான்?” என்றான் கிண்டலாக

“அவன் எப்பவும் இப்படிதான் தாங்குவான். நீதான் நோட்டீஸ் பண்ணலை”

அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தையும் விவேக்கிடம் விமலா எடுத்துக் கொள்ளும் உரிமையையும் விவேக்கிற்கு விமலா மேலிருக்கு கரிசனத்தையும் பார்த்தவாறு சுரேஷ் அமர்ந்து இருந்தார்.


இருவரும் கேஃபடேரியாவில் இருந்து அவர்கள் இருக்கைக்கு வந்தனர்.

விமலா வருவதற்கு முன்னமே அவள் டீமில் இருந்த அனைவருக்கும் சுரேஷ் அவளுக்கு ஐ.பி.எம்மில் வேலை கிடைத்ததை அறிவித்து இருந்தார்.

எல்லோரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல,
 தீபக், "சோ விமலா, எங்களுக்கு எல்லாம் நாளைக்கு ஒரு பெரிய ட்ரீட் ஓ.கே?"



விவேக் அதற்கு, "டேய், இப்பதாண்டா அவளுக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சு இருக்கு. ஃபர்ஸ்ட் மந்த் சம்பளம் வாங்கினதுக்கு அப்பறம் கொடுக்க சொல்லு"


தீபக், "அதெல்லாம் முடியாது ... இந்த வீக் எண்ட் எதாவுது ஒரு எக்ஸைட்மென்ட் வேணும். இப்போதைக்கு சிக்கினது விமலா. அவ நாளைக்குத்தான் கொடுக்கணும்னு இல்லை. இன்னைக்கே கூட கொடுக்கலாம்" என்று தன் நகைசுவை திறனைக் காட்ட பலரும் அதை ஆமோதிக்க

விமலா விவேக்கை தனியே அழைத்து சென்று, "நான் நாளைக்கு ஊருக்கு போறேன். அதனால இன்னைக்கே ட்ரீட் கொடுத்துடலாமா?"
 

"நாளைக்கே போறயா?
 "

"ம்ம்ம் .. அதான் சொன்னேன் இல்ல"


"சரி, எந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்?" 

"இங்க இருக்கற எல்லாரும் போறமாதிரி இடத்துக்கு .. ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்"
 

"சரி, நான் ஏற்பாடு பண்ணறேன் விடு. அப்பறம் உன் ட்ரெயின் டிக்கெட்டும் புக் பண்ணிடறேன். எந்த ட்ரெயின்ல புக் பண்ணறது?"
 

"எதுன்னாலும் பரவால்லை"
 

"இல்லைடீ, காலைல புறப்படற ட்ரெயின்னா ஓ,கேவா? உனக்கு பேக் பண்ண டைம் வேண்டாமா?"
 

"எனக்கு பேக் பண்ண டைம் எல்லாம் ஆகாது. எங்கிட்ட இருக்கற பெரிய ஸூட்கேஸுலயும் டஃப்ஃபல் பேக்லயும் இருக்கறதை எல்லாம் எடுத்து துணிக்க ரொம்ப நேரம் ஆகாது. நைட்டே படுக்கறதுக்கு முன்னாடி பண்ணிடுவேன்"
 

முகத்தில் பெரும் ஏமாற்றத்துடன் விவேக், "இல்லை ... நாளைக்கு உங்கூட எங்கேயானும் வெளில போலான்னு .. "
 

"என்னது? வெளில போலாமா? என்ன ஐய்யா இப்ப ஊர் சுத்தறதுல ருஸி கண்ட பூனையாயிட்ட மாதிரி இருக்கு?"
 

"நீயும் ஊருக்கு போறே. அப்பறம் உன் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் தனியா போக முடியாதுன்னு ... "
"ஏன் போக முடியாது? கவலையே படாதே. நான் கல்யாணம் முடிஞ்சு வந்தப்பறம் அடிக்கடி வெளில போலாம். நாளைக்கே நான் கிளம்பணும் ப்ளீஸ்" 

'சரியான கிறுக்கு. இவ சொன்ன மாதிரி என் கூட ஊர் சுத்தினா இவ லவ்வர் டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவான். இவ கல்யாணத்துக்கு அப்பறம் ஆஃபீஸ்ல அதுவும் ஆஃபீஸ் நேரத்துல மட்டும்தான் மீட் பண்ணப் போறேன்' என்று மனதுக்குள் முடிவெடுத்து, "சரி, இட்ஸ் ஓ.கே. அப்ப நாளைக்கு கிடைக்கற ட்ரெயின்ல பண்ணறேன்"


முன்னிரவில் எல்லோரும் அலுவலகத்துக்கு அருகில் இருந்த மெயின் லாண்ட் சைனா (Mainland China) ரெஸ்டாரன்டில் கூடி அவர்களுக்கு விவேக் ரிஸர்வ் செய்து இருந்த ஒரு பெரிய டேபிளில் அமர்ந்தனர். எல்லோருக்கும் ஆர்டர் செய்து இருந்த புஃப்ஃபே உணவைத் தவிற விமலா சொன்னபடி தீபக் போன்ற சிலருக்கு தனியாக பியர் மற்றும் ஒயின் ஆர்டர் செய்து இருந்தான். பேச்சும் கும்மாளமுமாக பொழுது கழிந்தது.சுரேஷ் தன் ஒயின் க்ளாஸை தூக்கி ஸ்பூனால் தட்டி எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிறகு, "ஹே கய்ஸ் அண்ட் கால்ஸ்! தேர் ஈஸ் ஒன் மோர் குட் நியூஸ்" என்றார். பிறகு, "நம்ம டீம்ல ஒருத்தர் ரைஸிங்க் ஸ்டார் அவார்ட்டுக்கு நாமினேட் ஆகி இருக்கார். As per our Center Head that person stands the best chance of getting it (நம் செண்டர் ஹெட் சொன்னதிலிருந்து அந்த நபருக்கு அனேகமா அந்த அவார்ட் கிடைச்சுடும்)" என்றார் 

தீபக் அதற்கு, "சார், இந்த அளவுக்கு எல்லாம் நீங்க பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை .. " என்று எதிரில் டேபிளின் மறுபுறம் அமர்ந்து இருந்த விவேக்கிடம் கை நீட்டி, "மாப்ளே, கங்க்ராட்ஸ்டா" என்றதும் ஒரு பெரும் ஆரவாரம் அந்த மேசையை நிறப்பியது.
 

விமலா அருகில் இருந்த விவேக்கிடம் ஒவ்வொருவராக கைகொடுத்து வாழ்த்தியதை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.
 

விமலாவின் பார்வையை சுரேஷ் கவனிக்க தவறவில்லை.



திங்களன்று காலை விவேக் வேண்டா வெறுப்பாக அலுவலகத்துள் நுழைந்தான். சனிக் கிழமை அதிகாலை விமலாவை ஷடாப்தி எக்ஸ்ப்ரெஸ்ஸில் வழி அனுப்பி விட்டு தன் ஃப்ளாட்டுக்கு சென்றவன் அன்று காலையே வெளியில் வந்து இருந்தான்.

வேலையில் அவனது உத்வேகம் அவனிடமிருந்து விடைபெற்றுப் போனது போல் உணர்ந்தான்.

டீம் மீட்டிங்க்கின் போது எப்போதும் போல் போன வார வேலைகளை அவன் முடித்து இருக்க மற்ற சிலர் தலையை சொறிந்தனர். எப்படியும் சனிக்கிழமை விவேக் வருவான் எஞ்சி இருக்கும் வேலைகளை எப்படி முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பான் என்று நினைத்து அவர்கள் ஏமாந்து இருந்தனர். டீமுக்கு கொடுத்த ப்ராஜெக்ட் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்ற நோக்கத்துடன் விவேக் சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தில் முக்கால் பங்கு மற்றவருக்கு உதவுவதிலே கழிப்பான். இது சுரேஷுக்கும் ஓரளவு தெரிந்த விஷயமே. இருப்பினும் மற்றவரிடம் இது போல் வேலைகள் இனி பெண்டிங்க் இருக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார்.

மீட்டிங்க் முடிந்து வெளியில் வரும்போது தீபக் கோபத்துடன் விவேக்கிடம், "டேய், எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு சனிக்கிழமை நீ ஹெல்ப் பண்ணனும்னு உங்கிட்ட வெள்ளிக் கிழமையே சொன்னேந்தானே? ஏண்டா இப்படி சரியான நேரத்துல காலை வாரிட்டே .. " என்று கத்தினான்.

"சாரிடா .. எனக்கு .. வர மூட் இல்லை"

"என்னது? உனக்கு ஆஃபீஸ் வர மூட் இல்லையா? சும்மா ரீல் விடாதே. "

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை ... எனக்கும் மூட் அவுட் ஆகும் .. அந்த மாதிரி முந்தாநாள் ஆச்சு. வரமுடியலை"

"போதுண்டா! உனக்கு ஹெல்ப், அட்வைஸ் எல்லாம் வேணுங்கறப்ப மட்டும் நான் வேணும். எனக்கு ஒரு ஹெல்புன்னா நீ செய்ய மாட்டே. எதுக்கு மூட் இல்லைன்னு கப்ஸா விடறே? விமலாகூட எங்கேயாவுது சுத்திட்டு இருந்து இருப்பே"

விவேக்குக்கு மூக்கின் மேல் கோபம், "ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் ... விமலா சனிக்கிழமை காலைல ஆறரை மணிக்கே ஊருக்கு போயிட்டா" என்று திரும்ப கத்தினான்

சற்று தூரம் போனபின் இவர்கள் வாக்கு வாதத்தைக் கேட்டு திரும்பி வந்த சுரேஷ், "இங்க நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க ரெண்டு பேரும்" என்றுதும் இருவரும் மௌனம் காத்து அவருடன் நடந்தனர்.

"கிவ் மீ டென் மினிட்ஸ். உங்க திங்க்ஸை வெச்சுட்டு ரெண்டு பேரும் வாங்க" என்றபடி தன் அறைக்குள் சென்றார்

பத்து நிமிடத்துக்குப் பிறகு விவேக்கும் தீபக்கும் சுரேஷின் அறைக்குச் சென்றனர். எதிரில் அமர்ந்த இருவரையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் தீபக்கிடம்

"என்னடா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே?"

"ஒண்ணுமில்லை பாஸ் .. சனிக் கிழமை இவங்கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன். வராம கழுத்தை அறுத்துட்டான். கேட்டா மூட் இல்லைன்னு அஸால்டா சொன்னான். எனக்கு கோவம் வந்துருச்சு. இட்ஸ் ஓ.கே"

விவேக் தொடர்ந்து, "இல்லை சுரேஷ் இவன் சொல்லியும் வராம இருந்தது என் தப்பு. அட்லீஸ்ட் நான் ஃபோன் பண்ணியாவுது சொல்லி இருக்கணும்"

அதற்கு விவேக் தீபக்கிடம் "ஏண்டா நீதான் அவனை ஃபோன்ல கூப்புட்டு இருக்கலாம் இல்லையா?" என்க

தீபக், "நான் பத்து தடவையாவுது கூப்பிட்டு இருப்பேன் பாஸ்"

விவேக் தலை குனிந்து, "நான்தான் ஸ்விச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தேன்" என்றான்



தீபக் அதற்கு "ஏன்?" என்றதும் மௌனம் காத்தான்.

சுரேஷ், "விவேக் என்னடா நீ எப்பவும் அப்படி பண்ண மாட்டியே? என்ன ஆச்சு?"

மறுபடி விவேக் மௌனம் காக்க சுரேஷ், "உனக்கும் விமலாவுக்கும் எதாவுது சண்டையா?"

"சே, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சார்" என்று மறுத்தான்.

"எனக்கு என்னமோ அவ ஊருக்கு போனதுனாலதான் நீ அப்ஸெட் ஆன மாதிரி இருக்கு. என்ன விஷயம்? உனக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு"

சிறிது நேர மௌனம் காத்த விவேக், "அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது"

"ஏன், உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்கறாளா?" என்று தீபக் கேட்டதும்.

"அவன் யாருன்னே எனக்கு தெரியாது"

சுரேஷ், "விவேக் நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது"

விவேக், "இல்லை சுரேஷ் சொல்லுங்க"

"டூ யூ லவ் ஹர்?"

சில நிமிடங்கள் மௌனம் காத்த விவேக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர தலையை மட்டும் ஆமென்று ஆட்டினான்.

"ஆனா நீ அவகிட்ட் சொல்லல. அப்படித்தானே?"

மறுபடி அவன் தலையாட்டியவனின் அடக்க முடியாத அழுகை வெடித்தது. மேசையில் தலைகுனிந்து குலுங்கினான். 



No comments:

Post a Comment