Tuesday, March 31, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 4

அவள் அமர்ந்ததும் சத்யன் எழுந்துவிட்டான்,... தன் சட்டை பாக்கெட்டை தடவிப்பார்த்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தன் உதட்டில வைத்தவன்,.. மறுபடியும் உதட்டிலிருந்து எடுத்துவிட்டு மான்சியை திரும்பி பார்த்தான்

“ நான் சிகரெட் பிடிக்கறதால உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று கேட்க

இல்லை என்பது போல் மான்சி வேகமாக தலையசைத்தாள்,... அவளுக்கு அவன் எப்படி சிகரெட் பிடிக்கிறான் என்று பார்க்கவேண்டும் போல் இருந்தது

சத்யன் தனது லைட்டரால் சிகரெட்டை பற்றவைத்து,.. புகையை உள்ளிழுத்து மூக்கின் வழியாக விட,... மான்சி அதை வெகுவாக ரசித்தாள்

ஆனால் சத்யன் மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்த சிகரெட்டில் பற்றவைத்தான்,.. அப்படி பற்றவைக்கும் போது அவன் விரல்கள் நடுங்கியதை மான்சி நன்றாக கவணித்தாள்

ச்சே பாவம் சொல்ல சங்கடப்படுகிறான் போல என்று நினைத்தாள்,... ஏன் நாமே அந்த பேச்சை ஆரம்பித்து வைத்தால் என்ன,... நமக்குத்தானே எல்லாமே தெரியுமே என்று நினைத்தாள்

மான்சி மெதுவாக கட்டிலைவிட்டு எழுந்து அவன் பின்னால் போய் நின்று “ நங்க என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்கு தெரியும்” என்று ஆரம்பிக்கவும்

சத்யன் வெடுக்கென திரும்பி அவளை பார்த்தான்,... வாயிலிருந்த சிகரெட் நழுவி தரையில் விழுந்தது,… “ நீ என்ன சொல்ற மான்சி” என்றான் அதிர்ந்த குரலில்



அய்யோ ஊரில் பாதி பேருக்கு தெரிஞ்ச என் கதை இவளுக்கும் தெரிஞ்சு போச்சா என்று சத்யனின் உள்ளம் கொதித்தது,... ஆனால் இதை பற்றி நாம சொல்வதாகத்தானே இருந்தோம் என்பதை மறந்துவிட்டான்

இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தவிப்பில் இருந்த அவனுக்கு மான்சியின் இந்த பேச்சு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது

“ஆமாங்க எனக்கு நீங்க என்கிட்ட என்ன சொல்ல இப்படி தடுமாறுறீங்கன்னு,.... அக்காவை பத்தி தானே சொல்லப்போறீங்க,... அதுதான் எனக்கு தெரியும்” என்று மான்சி முகமலர பளிச்சென்று சொல்ல

“ அக்காவா” என்று மறுபடியும் அதிர்ச்சியுடன் கேட்க

“ நீங்க உங்க மொதல்ல மனைவியை தானே இன்னும் மனசுல நினைச்சுகிட்டு என்கூட பேச பயப்படுறீங்க,... எனக்கும் உங்க மனசு புரியுதுங்க,... நீங்க எப்போ அவங்களை மறந்து நான் வேனும்னு நெனைக்கிறீங்களோ அப்போ நாம சேர்ந்து வாழலாம்,...இதுதானே உங்க பிரச்சனை,... இப்படித்தானே சொல்லபோறீங்க,.... நீங்க மனசு மாறி வர்றவரைக்கும் நான் காத்துகிட்டு இருக்கேன்,... போதுமா ” என்று மான்சி எல்லாம் தெரிந்த பெரிய மனுஷியாக கூற

அவள் பேச்சை கேட்ட சத்யனுக்கு தனது தலையில் அடித்துக்கொள்ளலாமா என்று இருந்தது,... இந்தக்காலத்தில் இப்படி ஒருத்தியா என்று நினைத்தான்,... இப்படியொரு அப்பாவியை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு அவனை கொன்றது

ஆனால் எவ்வளவுதான் மனம் குமுறினாலும்... தைரியத்துடன் உடனுக்குடன் சில முடிவுகள் எடுத்தான் சத்யன்,... எக்காரணம் கொண்டும் மான்சியை விட்டு பிரிவதில்லை என்ற முடிவு,.... மாயா வந்ததும் கொஞ்சம் பணத்தை கொடுத்து அவளை சரிகட்ட வேண்டும் என்ற முடிவு....

அதன்பிறகு தன்னுடைய இந்த அப்பாவி மனைவி,... அழகு மானைவி,.... வெகுளித்தனமான மனைவி,.... இவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு,.. ஆளே இல்லாத அயல்கிரக்த்துக்கு போய் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு,.. அவளை மட்டுமே ரசித்துக்கொண்டு,... அவளிடம் மட்டுமே சுகித்துக்கொண்டு,.. வாழவேண்டும் என்று நினைத்தான்


தன் சிரிப்பால் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் போக்கும் சக்தி படைத்த,... கடவுள் கொடுத்த இந்த வரத்தை,... தனது பிரச்சனைகளை தீர்த்துவிட்டு வந்து,.. பரிசோதித்து பார்ப்பது என்று முடிவெடுத்தான் சத்யன்

அதன்பின்னர் சத்யனின் முகம் பளிச்சென்று ஆனதும்,.. மான்சி சந்தோஷத்துடன் “நான் சொன்னது சரிதானே” என்று சிரிக்க

இவள் இப்படியே சிரித்துக்கொண்டே இருக்க எதைவேண்டுமானாலும் இழக்கலாம் என்று நினைத்தான் சத்யன்

அவளின் உதட்டை இழுத்து பிடித்து சப்பி ருசிக்கவேண்டும் என்று எழுந்த பேராவலை மறைக்க தடுக்க ரொம்பவே சிரமப்பட்டான் சத்யன்

சரி நான் கீழே படுத்துக்கட்டுமா,.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது,.. எங்க வீட்டில நான் ஒன்பது மணிக்கெல்லாம் டான்னு தூங்கிடுவேன்,... இப்போ மணி ஒன்னாகப் போகுது” என்று பரிதாபமாக கண்களை கசக்கியபடி கேட்டவளை பார்த்ததும்

அவளை வாரியெடுத்து தன் மார்பில் போட்டு மென்மையாக வருடி தூங்க வைக்கவேண்டும் என்று ஏங்கிய மனதை அடக்கியவன்,... பொறு மனமே பொறு அது நிச்சயமாக ஒருநாள் நடக்கும் என்று உறுதியளித்தான்

“ வேண்டாம் மான்சி நீ கட்டிலில் படுத்து தூங்கு நான் வேனா கீழே படுத்துக்கிறேன்” என்று சத்யன் கூற

“ ம்ஹூம் எப்பவுமே நான் எங்க வீட்டில கீழேத்தான் படுப்பேன்,..என்றவள் அவனை நெருங்கி “ உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா,.. நான் கட்டில்ல படுத்தா உருண்டு கீழே விழுந்துடுவேன்,.. நிறையவாட்டி நான் அதுமாதிரி பொத்துன்னு விழுந்திருக்கேன்,...இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க” என்று ரகசியமாக சொல்லிவிட்டு வாயை பொத்திக்கொண்டு அவள் சிரிக்க

சத்யனுக்கு நெஞ்சுக்குள் யாரோ கைவிட்டு பிசைவது போல் இருந்தது,... இனிமேல் இவளை பாதுக்காக்கும் பொறுப்பும் கடமையும் தனக்கு ஏற்ப்பற்விட்டதை உணர்ந்தான்,.. இவளை எந்த நிலையிலும் காயப்படுத்தக் கூடாது என்று எண்ணினான்

மான்சி வாயைத்திறந்து பெரிதாக ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டே கட்டிலில் இருந்து ஒரு பெட்சீட்டை எடுத்து தரையில் விரித்து அதில் ஒரு தலையனையை எடுத்து போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டாள்

சத்யன் அவளை தடுக்க வழியின்றி கட்டிலில் அமர்ந்து,.. படுத்திருந்த மான்சியை பார்த்து “குட்நைட் மான்சி” என்று சொல்ல

மான்சி பட்டென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து,.. நெற்றியில் கைவைத்து “குட்நைட்ங்க” என்றாள்

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது “ஏய் அதை படுத்துகிட்டே சொல்லலாமே,.. இதென்ன ஸ்கூல் வாத்தியாருக்கு வணக்கம் சொல்றமாதிரி ம்ம்” என்று கிண்டல் செய்ய

அசடு வழிந்த மான்சி “அது அது எங்க வீட்ல இதெல்லாம் பழக்கமில்ல அதான்” என்று அதிகப்படியாக வழிய

“ம் சரி சரி படுத்துக்க மான்சி” என்றவன் எழுந்துபோய் அலமாரியில் இருந்து இன்னொரு பெட்சீட்டை எடுத்துவந்து மான்சியின் மீது போர்த்திவிட்டான்

பிறகு குனிந்து அவள் காதருகே “ ஏஸி நடுச்சாமத்தில் ரொம்ப குளிரும் அதான் போர்த்திவிட்டேன்” என்றவன் அவளை முத்தமிட துடித்த உதடுகளை பற்களால் கடித்து அடக்கிக்கொண்டு படுக்கையில் போய் விழுந்தான்

அவர்கள் இருவருக்காக கொடுத்தனுப்பப் பட்ட பால் ஆறி ஏடு விழுந்து புளிக்க ஆரம்பித்தது 




" தேன்நிலவே என் பக்கத்தில் வரும்போது...

" நாம் தேன்நிலவுக்கென்று ...

" தனியாக நாம் எங்கே செல்வது...

" தேன் + நிலவுகள் ஒன்றுகூடி..

" உருவானவள் நீ தானே! 


சத்யன் வெகுநேரம் தூங்காமல் மான்சியை பார்த்துக்கொண்டே இருந்தான்... ஒரு வளர்ந்த பெண்ணாக அவள் தூங்கவில்லை,.. ஒருகாலை நீட்டி,. மறுகாலை மடக்கியிருந்தாள் ,.. இவன் போர்த்திய பெட்சீட் எங்கே சுருண்டு போய்கிடந்தது,... ஒரு கையை மடக்கி தாடைக்கு முட்டுக்கொடுத்து,... மறுகையை அடிவயிற்றில் வைத்துக்கொண்டு,... கடைவாயில் லேசாக எச்சில் வழிந்து தலையனையை வட்டமாக ஈரமாக்கியிருந்தது... தன்னை மறந்து குழந்தை போல உறங்கிக்கொண்டிருந்தாள்

சத்யன் இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.... இதுபோன்ற ஒரு புதுமையான,.. வித்தியாசமான அழகை அவன் பார்த்ததேயில்லை,... அவள் உதட்டின் ஓரம் வழியும் நீரை தன் நாக்கால் எடுத்து சுவைத்து பார்க்க அவன் மனம் ஏங்கியது

அவன் ஏக்கம் தவிப்பு எதையுமே அறியாமல் மான்சி உறங்க,... அவளை நினைத்துக்கொண்டே உறங்கிய சத்யனுக்கு கனவிலும் அவள்தான் வந்தாள்,... ஆனால் மாயாவுடன் வந்து உரிமைப்போர் புரிந்து இவனை மீட்டுக்கொண்டு எங்கோ அழைத்து சென்றாள்,... அங்கே இவர்கள் மட்டும்தான் இருந்தார்கள்,.. சுற்றிலும் ஒரே மலர் கூட்டம்,.. அந்த மலர்களில் மெத்தையிட்டு மான்சி படுத்திருக்க,... அவள் மார்பில் தலைவைத்து இவன் படுத்திருந்தான்,... அந்த கனவின் பிரதிபலிப்பு சத்யன் முகத்தில் தூக்கத்திலும் சந்தோஷமாக தெரிந்தது

காலை யாரோ படபடவென கதவை தட்ட,... உடனே தூக்கம் கலைந்து கண்விழித்த சத்யன் எழுந்து போய் கதவை திறக்க போனவன் நின்று மான்சியை திரும்பிப்பார்த்தான்

மான்சியும் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தாள்,... அவள் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க,... அவள் மார்புகள் இரண்டும் நிமிர்ந்து விம்மி புடைத்துக்கொண்டு தெரிந்தது,...

அவள் கட்டியிருந்த புடவை மார்புக்கு மத்தியில் கிடக்க,.. இரண்டுபக்கமும் உருண்டு திரண்டு இருந்த சதை கோளங்கள்,... சத்யன் நாக்கில் எச்சில் ஊற வைத்தது,...

அதன் நிமிர்ந்த தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் நூலளவு கூட சரியாத தனங்களாகத்தான் இருக்கும்,.. என்று அவன் மனம் கணக்கு போட்டது
அங்கிருந்து கண்களை திருப்ப முடியாமல் ரொம்ப சிரமப்பட்டான்,... அதன் கணப் பரிமாணம் சத்யனை மூச்சடைக்க வைத்தது,...

இவ்வளவு நாட்களாக அவள் முக அழகையே ரசித்து வந்த சத்யனுக்கு,.. இந்த பேரழகு கண்களை சொக்கவைத்தது

காலையில் இப்படியொரு தரிசனத்தை பார்த்த சத்யன் உடலில் சுறுசுறுவென உணர்ச்சி ஏற,... அவன் கட்டியிருந்த வேட்டி இடுப்புக்கு கீழே கொஞ்சம் கொஞ்சமாக மேடாக உயர ஆரம்பிக்க,... இதுக்கு மேல தாங்க முடியாது என்று முடிவு செய்து,.. அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்

அப்போது மீண்டும் கதவு தட்டப்பட்டது,... சத்யனுக்கு பயங்கர எரிச்சல் வந்தது,... ச்சே என்று கைகளை உதறியபடி “கொஞ்சம் இருங்க வர்றோம்” என்று கதவருகில் நின்று குரல் கொடுக்க

“ அண்ணா நான்தான் வித்தி நீங்க வரவேண்டாம் கதவை திறந்து இந்த காபியை மட்டும் வாங்கிகிட்டு கதவை மூடிக்கங்க” என வித்யாவின் குரல் கிண்டலாக கேட்க

சத்யன் குனிந்து தன் வேட்டியை பார்த்தான்,... அங்கே மறுபடியும் பழயை நிலைமை வந்திருக்க,.. பாதியாய் கதவை திறந்து கை நீட்டி காபி ட்ரையை வாங்கிவிட்டு கதவை மூடிவிட்டான்,..

ஏனென்றால் தரையில் படுத்திருக்கும் மான்சியை பார்த்துவிடக்கூடாது என்று தான்,... ஆனால் அது புரியாத வித்யா,...

“என்னண்ணா டிபனுக்கு கீழே வருவியா இல்லை அதையும் எடுத்துட்டு வந்து தரவா” என்று வித்யா நக்கல் செய்ய

நேரங்காலம் தெரியாமல் அவள் அப்படி நக்கல் செய்தது அவனுக்கு எரிச்சலை மூட்ட“ ஏய் வித்தி போடி மொதல்ல” என்று சத்யன் எரிச்சலாக கத்தினான்

“சரி சரி கத்தாதே போய்ட்டேன்” என்ற வித்தியின் குரல் தேய்ந்து மறைந்தது

சத்யன் காபி ட்ரேயை மேசையில் வைத்துவிட்டு,... அங்கே சொம்பில் இருந்த புளித்த பாலை எடுத்துக்கொண்டு போய் சிங்கில் கொட்டி தண்ணீரை திறந்து விட்டான்

மான்சி தான் போர்த்தியிருந்த பெட்சீட்டை மடித்துக்கொண்டு இருக்க,... சத்யன் சொம்பை மேசையில் வைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி

“ காலையில எழுந்தா குட்மார்னிங் சொல்ற பழக்கமெல்லாம் இல்லையா” என்று அவளை பார்த்து கிண்டலாக கேட்க

மான்சி மடித்துக்கொண்டு இருந்த பெட்சீட்டை கட்டிலில் போட்டுவிட்டு புன்னைகையுடன் “ குட்மார்னிங்” என்றாள்

“ ம்ம் குட்மார்னிங்” என்ற சத்யன் “ ஆனா பர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் எந்த பொண்டாட்டியும் புருஷனுக்கு இப்படி குட்மார்னிங் சொல்லமாட்டா,.. அது தெரியுமா” என்றான் குறும்பாக சத்யன்

“ வேறெப்படி சொல்லுவாங்க,... என்று மான்சி அப்பாவியாக கேட்டாள்

“ ம் இங்கே வா சொல்றேன்” என்று ஆள்காட்டிவிரலை மடக்கி அவளை அழைக்க
குறும்பு கொப்பளித்த அவன் கண்களை பார்த்தவாறே அவனை நெருங்கிய மான்சி “ சொல்லுங்க” என்றாள்

தன் கைகளால் அவள் முகத்தை ஏந்திய சத்யன்,அவளை உற்று பார்த்தான்,.. கள்ளங்கபடமற்ற அவள் முகமும்,.. பொய்களின் பூச்சு இல்லாத அவள் கண்களும்,... சத்யன் மனதை துளைக்க,.. பட்டென அவள் முகத்தை விட்டுவிட்டு

“ அது ஒன்னுமில்ல மான்சி அதை பிறகு ஒருநாள் சொல்றேன்,... நீ போய் பல் தேய்ச்சுட்டு வா காபி குடிக்கலாம்” என்று அவள் தோள் பற்றி திருப்பி பாத்ரூம் நோக்கி அனுப்பினான்

இவன் பல் தேய்த்து விட்டு இருவரும் காபியை பருகினர் “நீ என்ன படிச்சிருக்கே மான்சி” என்று சத்யன் கேட்டதும்

“பி சி ஏ படிச்சேன்,.. நான் ரொம்ப நல்லா படிப்பேன் தெரியுமா,.. எனக்கு டாக்டர்க்கு படிக்கனும்னு சின்ன வயசில் இருந்து ஆசை,.. ஆனா வசதி இல்லாததால படிக்க முடியலை,... நீங்க பெரிய பணக்காரர் தானே,.. நீங்க ஏன் டாக்டர்க்கு படிக்கலை” என்று சத்யனை பார்த்து கேனத்தனமாக கேட்டாள்

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ பணக்காரங்க எல்லாருமே டாக்டர்க்கு படிச்சா அப்புறமா நோயாளிகளுக்கு பஞ்சம் வந்திடும்னு தான் படிக்கலை”,... என்றவன்

“ மான்சி எனக்கு எங்கப்பாவோட கிரானைட் பிசினஸ் மேல ஆர்வம்,.. அதனால எம்பிஏ முடிச்சுட்டு அப்பாவோட பிசினஸை பார்த்துக்கிறேன்” என்று பொறுமையாக எடுத்து கூறினான்

“ஓ அப்படியா” என்று மான்சி கண்களை விரிக்க

இன்னும் ஏதாவது கூறி அவளை கண்கள் விரித்து ஆச்சரியப்பட வைக்கலாமா என்று சத்யன் நினைத்தான்

“ சரி மான்சி குளிச்சுட்டு கீழே போகலாம்,... டிபன் ரெடியாயிருக்கும் சாப்பிடலாம்,... உன்னோட டிர்ஸ் பாத்ரூமில் இருக்குன்னு நெனைக்கிறேன் ” என சத்யன் கூற

“ஆமாம் பாத்ரூமில் என்னோட டிரஸ் இருக்குன்னு வித்தி அண்ணி சொன்னாங்க” என்றவள் பாத்ரூமை நோக்கி போக

“ மான்சி கொஞ்சம் இரு” என்று அவளை நெருங்கிய சத்யன் “ மான்சி நைட் என்ன நடந்ததுன்னு வித்தி ஏதாவது நோண்டி நோண்டி கேட்பா,... நீ எதையும் சொல்லாதே,.. ஏதாவது சிரிச்சு சமாளிச்சுரு என்ன சரியா” என்றான்

சரியென்று தலையசைத்துவிட்டு பாத்ரூம் உள்ளே போய்விட்டாள் மான்சி



அதன்பிறகு வந்த நாட்களில் சத்யன் அவளைப்பார்த்து இரவில் ஏங்கி ஏங்கி தவிப்பதை தாங்கமுடியாமல்,.. அந்த பெரிய படுக்கையறைக்குள்ளே இருந்த ஒரு சிறிய டிரசிங் ரூமை அவளுக்காக ஒதுக்கி இரவில் அங்கே படுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டான்

நிறைய விருந்துக்கும் கோயில்களுக்கும் அந்த அழகு பதுமையை அழைத்துக்கொண்டு போய்வந்தான்,.. மான்சியின் அம்மா வீட்டுக்கு இரண்டுமுறை அழைத்து போய் அங்கிருந்தவர்களுடன் மான்சி கொட்டமடித்து சிரிப்பதை ரசித்தான்

தன் நன்பர்கள் வீட்டுகளுக்கு அழைத்துச் சென்றான்,... அதில் அவனுடைய நெருங்கிய நன்பன் சரவன குமார் ஐபிஎஸ் வீட்டுக்கு போனபோது அங்கிருந்த சரவனன் குடும்பத்தாருக்கு மான்சியை ரொம்பவும் பிடித்து போனது,... வீட்டுக்கு கிளம்பும் போது அவளுக்கு நிறைய பரிசுகள் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்

அவளிடம் நிறைய பேசி அவளை பற்றி நன்றாக தெரிந்து கொண்டான்,... தன்னுடைய இளமைகாலங்களை பற்றி அவளிடம் சிரிக்க சிரிக்க நிறைய சொன்னான்,...

ஆனால் இப்போதெல்லாம் சத்யன் மான்சியை தூரத்தில் இருந்து தொடாமல் ரசிக்க கற்றுக்கொண்டான்,... அவள் சிரிப்பும் பேச்சும் அவனுக்கு போதுமானதாக இருந்தது,.. அதிகபட்சமாக இருவரும் வெளியிடங்களில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி இருந்தனர்

மான்சியிடமும் இப்போது நிறைய மாற்றங்கள்,... யாரிடம் எப்படி பேசவேண்டும்,.. எப்படி நடந்து கொள்ளவேண்டும்,... வேலைக்காரர்களை எப்படி வேலை வாங்கவேண்டும் என்று பிரேமா தன் மருமகளுக்கு சரியாக பாடம் நடத்தினாள்

தன்னுடைய பழைய செல்லயும் சிம் கார்ட்யும் மாத்தி புதியதாக வாங்கி வைத்துக்கொண்டான்,....

சத்யன் மான்சி திருமணம் ஆகி சரியாக இருபத்தியிரண்டாம் நாள்,... மாலை மூன்று மணி,.. சத்யன் தன் கம்பெனியில் மாலை உணவை முடித்துவிட்டு ஓய்வாக சேரில் சாய்ந்து மான்சி இப்போது என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று யோசித்து கொண்டு இருந்தான்

அப்போது பியூன் வந்து “உங்களை பார்க்க ஒரு லேடி வந்திருக்காங்க சார்” என்று சொல்ல

இந்த நேரத்தில் யார் என்று குழம்பிய சத்யன்,... “சரி வரச்சொல்லு” என்று கூறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்

சிலநிமிடங்கள் கழித்து கதவு தட்டப்பட “ எஸ் கமின்” என சத்யன் அழைக்க
உள்ளே வந்தவளை பார்த்து தன் முகம் மாறாமல் காக்க சத்யன் ரொம்ப சிரமப்பட்டான்,.. அவன் தன்னை நிதானிப்பதற்குள்

“என்ன சத்யன் என்னை ஞாபகம் இருக்கா,.. நான்தான் மாயா,.. உங்ககூட மூனு வருஷமா குடும்பம் நடத்தின பைத்தியக்காரி” எனறு நக்கலாக இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டாள்

மாயா தொடைகளை கவ்வி பிடித்த டைட் ஜீன்ஸும்,.. மேலே அசிங்கமான வாசகம் எழுதப்பட்ட டீசர்டும் அணிந்திருந்தாள்,... தோள்வரை கூந்தல் வெட்டிவிடபட்டு இருக்க அதை நொடிக்கொரு முறை சிலுப்பிவிட்டுக்கொண்டாள்,.... கிழடு தட்டிப்போன அவள் முகத்தை அதிக மேக்கப் போட்டு இளமையாக காட்ட பெரும் முயற்ச்சி எடுத்திருப்பது நன்றாக தெரிந்தது

“ என்ன மாயா ஏன் இப்படியெல்லாம் பேசறே.. வா மொதல்ல வந்து உட்காரு” என்றான் சத்யன்

அவன் எதிரில் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்த மாயா “ வேற எப்படி பேச சத்யா கிட்டத்தட்ட ஒருமாசமா உங்ககிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை,.. அதான் மறந்துட்டீங்களான்னு கேட்டேன்,.. பரவாயில்லையே என் பேர்கூட ஞாபகம் வச்சிருக்கீங்க” என்று சத்தமாக அவள் மறுபடியும் நக்கல் செய்ய

இப்போது அவளிடம் ஏதாவது பேசினாள் கம்பெனியில் தன் மானம் கப்பலேறி கட்ல் கடந்து போய்விடும் என்பதை உணர்ந்த சத்யன்

“ மாயா என்னோட பழைய மொபைல் காணாமல் போச்சு,... அதில் இருந்த உன் நம்பர் மிஸ்ஸாகிட்டதால என்னால உன்னை தொடர்பு கொள்ள முடியலை,. அதுதான் உன்மை,... நீ எங்க இருக்கான்னு வேற எனக்கு தெரியாது மாயா,.. இது கம்பெனி இங்கே எதுவும் பேசவேண்டாம் நீ வீட்டுக்கு போ நான் ஈவினிங் ஆறுமணிக்கு வர்றேன்” என்று சத்யன் தயவுடன் சொல்ல

அவனையே சிறிதுநேரம் உற்று பார்த்தவள்,... “ சரி சத்யன் உன்னை நம்பி போறேன்,... சரியா ஆறுமணிக்கு வந்துரனும்,... நான் வழக்கம் போல டின்னரும் ட்ரிங்க்ஸும் ரெடிப் பண்ணி வக்கிறேன்,... ரொம்ப நாளாச்சுடா” என்று அவனை பார்த்து கண் சிமிட்டியவள்

எழுந்து சத்யனை நெருங்கி குனிந்து அவன் சட்டை காலரை பிடித்து தன் முகத்தருகே இழுத்து அவன் உதட்டை கவ்வ முயற்ச்சிக்க,... சத்யன் பட்டென தன் கையை குறுக்கே விட்டான்

“ என்ன சத்யா இது,... எவ்வளவு ஆசையா வந்தேன் ” என்று செல்லமாக சினுங்கியவளை

“ மாயா இது கம்பெனியோட ஆபிஸ் ரூம்,... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மாயா நான் கண்டிப்பா ஆறு மணிக்கு வர்றேன்” என்று சத்யன் கெஞ்சுவது போல் கூறியதும்

“ இட்ஸ் ஓகே சத்யா” என்ற மாயா தன் குலுக்குகிறேன் மார்புகளையும் சேர்த்து குலுக்கிவிட்டு போனாள்

ஸ் யப்பா என்று மூச்சுவிட்ட சத்யன் ,... ஆறுமணிக்கு போய் இவளிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எனறு மலைத்துப்போய் உட்கார்ந்துவிட்டான்
மாலை ஆறு மணி வராமலே போய்விடக்கூடாதா என்று கடவுளை வேண்டினான்


“ கல்லிருக்கும் தேரை கண்டு.....

“ கருவிருக்கும் பிள்ளை கண்டு...

“ உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன்..

“ அதை உண்டு களிப்போர்க்கு அவனே இறைவன்!

“ முதலினுக்கு மேலிருப்பான்....

“ முடிவினுக்கு கீழிருப்பான் ...

“ உதவிக்கு ஓடிவரும் ஒருவன்...

“ அவனை உணர்ந்து கொண்டால் அவனே இறைவன்!

மாயா வெளியேறியதும் சத்யன் தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்.... பிறகு கண்மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நிதானமாக யோசித்தான்

இது எதிர்பார்த்த ஒன்றுதான்... இதற்காக பின்வாங்க முடியாது,... எதிர்கொண்டு சமாளித்துதான் ஆகவேண்டும்,... ஆனால் சரியாக சமாளிக்கவேண்டும் ,... இதனால் மான்சிக்கு ஒரு துரும்பளவுக்கு கூட பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

கண்மூடி மனதில் பலவாறு யோசித்து.... மாயாவிடம் எப்படி பேசவேண்டும் என்று நேர்த்தியாக பிளான் செய்தான்..... தான் யோசித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்ததும்,… நிம்மதியாக இருக்கையில் சாய்ந்தான்

மாலை ஐந்துமணி ஆனது,.. என்னதான் சரியாக பிளான் செய்தாலும் சத்யன் மனதில் ஒரு நடுக்கம் பரவியது,... அந்த நடுக்கம் மாயாவை பற்றி அல்ல,... மான்சியை பற்றிதான்,.. தான் எடுத்த முடிவு மான்சியை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்று உறுதியாக நினைத்தான்

அப்போது அவன் மொபைல் அழைக்க,... சத்யன் எடுத்து யார் என்று பார்த்தான்,... வீட்டிலிருந்துதான் கால் வந்திருந்தது,... ஆன் செய்து காதில் வைத்தான்

மான்சிதான் பேசினாள்,... சத்யன் உடனே “ சொல்லு மான்சி” என்றான்

“ இன்னிக்கு ஆறு மணிக்கு நீங்களும் நானும் கோயிலுக்கு போகனும்னு அத்தை காலையிலேயே உங்ககிட்ட சொன்னாங்கலாம்,... அதான் எத்தனை மணிக்கு வர்றீங்கன்னு கேட்க சொன்னாங்க,.. இப்போ மணி ஐஞ்சு ஆகுது” என்று மான்சி யாழினிம் இனிய குரல் அவன் காதுகளில் ஒலிக்க

சத்யன் ஒரு நிமிடம் கண்மூடி அந்த குரலை தன் மனதில் மறுபடியும் ஓட்டி ரசித்தான்

“ என்னங்க பதிலையே காணோம் பிஸியா இருக்கீங்களா,.. அப்படின்னா வச்சிரவா” என்று மான்சி கேட்க

சத்யன் சுதாரித்து “ இல்ல மான்சி லைன்ல தான் இருக்கேன்,... இன்னிக்கு ஒரு முக்கியாமான பிரண்டை பார்க்க போறேன்,... அதனால நாளைக்கு கோயிலுக்கு போகலாமா மான்சி” என்று சத்யன் கேட்டதும்

மான்சி சிறதுநேரம் எதுவுமே பேசவில்லை,.. அவளுக்கு இது ரொம்ப ஏமாற்றமாக இருக்கும் என்று அவள் மவுனம் உணர்த்தியது சத்யனுக்கு,.... அவன் உள்ளம் குமுறியது எல்லாம் என்னால் தானே என்று நினைத்து ஏங்கினான்

“ என்னம்மா எதுவுமே பேசலை.... கோயிலுக்கு வரலைன்னு கோபமா,... நான் என்ன பண்றது மான்சி” என்று சத்யன் வருத்தமாக கேட்டான்

“ அய்யோ கோபமெல்லாம் ஒன்னும் இல்லீங்க,... அத்தை என்ன சொல்லுவாங்கனு தெரியலை,... நமக்காக சிறப்பு பூஜைக்கு ரெடி பண்ணிருக்காங்க,... பரவாயில்லைங்க நானும் அத்தையும் போய்க்கிறோம்,” என்று மான்சி அவன் வருத்ததுக்கு சமாதானம் கூறினாள்

“ ம் சரி மான்சி அப்படியே செய்,” என்று சத்யன் சொல்ல

“ ஏங்க அப்புறம் ஒருவிஷயம்,.. உங்க குரல் ஏன் ஒருமாதிரியா இருக்கு.... உடம்புக்கு சரியில்லையா,.. மத்தினாம் வீட்ல வந்து சாப்பிட்டு இருக்கலாமே” என்று மான்சி கரிசனமாக கேட்டதும்

சத்யனுக்கு குப்பென்று தொண்டையை அடைக்க கண்கள் கலங்கியது ,... உதட்டை கடித்து தன் உள்ளக்குமுறலை அடக்கியவன் “ அதெல்லாம் ஒன்னுமில்லடா,.. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றவன் பேச்சை மாற்றும் விதமாக



“ சரி கோயிலுக்கு என்ன கலர் சேலை கட்டிக்கிட்டு போகப்போற மான்சி” என்று கேட்க

“ அதுவந்து நீங்களும் நானும் போன நம்ம கல்யாணத்துக்கு எடுத்த பட்டுபுடவையை கட்டிகிட்டு போகலாம்னு இருந்தேன்,... இப்போ அத்தைகூட போறதால வேற ஏதவாது சேலைதான் கட்டிக்கனும்” என்று சலிப்பாக மான்சி சொல்ல

சத்யனுக்கு அந்த குழந்தை உள்ளம் படைத்தவளை ஏமாற்ற மனமில்லாமல் “ சரி மான்சி ஒன்னு பண்ணு நீ பட்டு புடவையே கட்டிகிட்டு அம்மாக்கூட கோயிலுக்கு வந்துடு... நான் என் பிரண்டை பார்த்திட்டு நோரா கோயிலுக்கு வந்திறேன்,.. ஓகேயா” என்றான்

“ ம்ம் சரிங்க லேட்டானாலும் பரவாயில்லை நான் காத்திருக்கேன்,... நீங்க வந்திருங்க,” என்று மான்சி உற்சாகத்தில் கத்தியது சத்யனின் காதை தாண்டி வெளியே கேட்டது

அவள் உற்ச்சாகத்தில் சத்யன் மனம் துள்ளி குதிக்க “ சரி மான்சி,... போன் வச்சிடு” என்று கூறிவிட்டு இவன் இணைப்பை துண்டித்துவிட்டு....

சேரில் இருந்து எழுந்து நின்று கைகளை உயர்த்தி ஊய்ய் என்று சத்தமாக விசிலடித்தான்.... அவனுக்கு மான்சி மறுபடியும் அந்த மயில் வண்ண பட்டில் பார்க்கப்போகும் உற்சாகம்

No comments:

Post a Comment