Wednesday, March 25, 2015

விவேகம் - அத்தியாயம் - 3

முகத்தில் ஒரு பெருமிதப் புன்னகையுடன் விவேக் சுரேஷின் அறையிலிருந்து தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

விமலா வந்து எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

சந்தோஷக் குரலில் "ஹாய் விமலா" என்றவனை முறைத்து, "என்ன சந்தேகம் தீந்துதா?"

"என்ன சந்தேகம் ?" என்று முதலில் கேட்டு மறைக்கப் பாத்தவன் பிறகு அசடு வழிந்து "ம்ம்ம் தீந்துது. நான் சுரேஷ் கேபினுக்கு போனதை பாத்தியா"

"நீ ஊருக்கெல்லாம் கேக்கற மாதிரி உன்னோட சைஸை தண்டோரா போட்டப்ப நாலு அறை அறையலாம்னு வந்தேன். அதுக்குள்ள சுரேஷ் அவர் கேபினுக்கு கூட்டிட்டு போயிட்டார்"

"ஆக்சுவலி நீயும்தான் அந்த கதை எல்லாம் கொடுத்து என்னை மிஸ்லெட் பண்ணிட்டே"

அவன் எதை குறிப்பிடுகிறான் என்பதை கணத்தில் கணித்த விமலா, "ஆமா, நீ ரொம்ப தெளிவா இருந்தே நான் உன்னை மிஸ்லெட் பண்ணிட்டேன். சரி விடு. மணிபால் ஹாஸ்பிடலுக்கு போகணுமா வேண்டாமா?"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஓ.கே"

"சரி, அடுத்தது என்ன?"

"என்ன நீ? என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருக்கே?"

சில கணங்கள் தடுமாறிய விமலா, "நீ எதாவுது எக்கு தப்பா மாட்டிக்க கூடாதுங்கற அக்கரையில கேட்டேன்"

"சரி, அடுத்தது செக்ஸ் சாட் (sex chat)" என்றான்.

"எதுக்குடா? அதெல்லாம் வேலையில்லாம இருக்கறவங்க பண்ணறது"

"இப்பெல்லாம் பொண்ணுங்க இதெல்லாம் சர்வசாதாரணமா பண்ணறாளுக"



"உனக்கு தெரியுமா?"

"தீபக்தான் சொன்னான் .. அதுவுமில்லாம செக்ஸ் சாட் பண்ணும்போது அவங்க இம்ப்ரெஸ் ஆனாங்கன்னா "

"ஆனாங்கன்னா?"

"அடுத்த விஷயத்துக்கு அவங்ககூடவே ... "

"அடுத்த விஷயம்னா?"

"டேட்டிங்க் .. "

"டேய், இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? உன் வைஃப்கிட்ட உன்னை எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற ஆளா காமிச்சுக்க எவளோ ஒருத்தி கூட சுத்தப் போறயா?"

"விமலா, உங்கிட்ட சொல்லறதுக்கு என்ன? எனக்கு பொண்ணுங்ககூட சரியா பேசவே முடியாது. முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு அன்னிக்கு நைட்டே அவகூட ... அப்படி எல்லாம் இருக்கணும்னா முடியுமா சொல்லு. அதான் மத்த பொண்ணுங்ககூட ஃப்ரீயா பழகி அந்த கூச்சம் போயிடுச்சுன்னா எனக்கு வரப்போறவ டிஸ்ஸப்பாயின்ட் ஆகாம இருப்பா இல்லையா?"

"டேய், உனக்கு வரபோறவளும் இந்த மாதிரி டேட்டிங்க் எல்லாம் பண்ணி இருந்தா?"

"பண்ணி இருந்தா என்ன? எனக்கு இருக்கற மாதிரி அவளுக்கும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கலாம் இல்லை"

"ஆர்வத்துக்கு மேல ஏதாவுது ஆகி இருந்தா?"

"ஆகி இருந்தா என்ன? எனக்கு ஒரு ஞாயம் அவளுக்கு ஒரு ஞாயம்னு சொல்றவன் நான் இல்லை. கல்யாணத்துக்கு அப்பறம் ஒழுங்கா எனக்கு மட்டும் மனைவியா இருந்தா போதும்"

"டேய், நிஜமாவே உனக்கு வரப்போறவ கொடுத்து வெச்சவடா"

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை .. "

"நான் ஒண்ணு கேக்கறேன். எதுக்கு அப்படி முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கணும்? நீயே ஒருத்தியை லவ் பண்ணி நல்லா பழகினதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க கூடாது?"

"இனிமேல் நான் ஒருத்தியை செலக்ட் பண்ணி, அவளை பத்தி நல்லா தெரிஞ்சுக்கற அளவுக்கு பழகி அதுக்கபறம் அவகிட்ட என் லவ்வை சொல்லி அவளுக்கும் என்னை பிடிச்சு இருந்து ... நடக்கற காரியத்தை பேசு .. மோரோவர், நான் அரேஞ்ச்ட் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்"

"ஏன்?"

"பெரியவங்க பாத்து செலக்ட் பண்ணினா எல்லா விஷயத்தையும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க"

"சும்மா ரீல் விடாதே .. ஜாதகத்தை மட்டும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க"

"அதெல்லாம் அந்த காலம். இப்பெல்லாம் அப்படி இல்லை. ப்ளட் க்ரூப் முதற்கொண்டு பாத்து செலக்ட் பண்ணுவாங்க. அதுவும் எங்க அப்பாவை பத்தி உனக்குதான் நல்லா தெரியுமே?"

"தெரியும். எங்க அப்பா அவருக்கு வெச்சு இருக்கற பேர் முன் ஜாக்கிரதை முத்தண்ணா. எப்படியோ போ. நான் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்"

"Quite understandable .. உங்க வீட்டில ரெண்டு தலைமுறையா லவ் மேரேஜ் ... நீ அதுக்கு மேல ஏதாவுது பண்ணாம இருந்தா போதும்"

"அதுக்கு மேலன்னா?"

"லெஸ்பியன் ஆகி ஒரு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது. யூ.எஸ்ல சில ஸ்டேட்ஸ்ல அப்படி சட்ட பூர்வமா பண்ணிக்கலாம்"

"சீ .. அது பர்வர்ஷன் .. நாட் லவ்"

"சரி, உன் ஆளை எப்படி செலக்ட் பண்ணுவே? அவனா வந்து உன்னை ப்ரோபோஸ் பண்ணனும்னு எதிர்பார்ப்பியா இல்லை நீயே அப்ரோச் பண்ணுவியா?"

"அவனா வந்து ப்ரோபோஸ் பண்ணுவான்னு பாத்தேன் .. அவனுக்கு தொடையில நடுக்கம். அதனால நானே செலக்ட் பண்ணிட்டேன்"

"நிஜமா?"

"எஸ் அஃப்கோர்ஸ்"

"யாரு?"

"உங்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது"

"ஏய், என்னோட பர்ஸனல் மேட்டரெல்லாம் கேக்கறே? உன்னோடதை சொல்ல மாட்டியா?"

"ம்ம்ஹூம் .. அதுவும் உங்கிட்ட சொல்லவே போறது இல்லை. "

"ஏ, விமலா, நான் உனக்கு ஒரு ஃப்ரெண்ட் இல்லையா?"

"நீ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்தான் ஆனா இந்த விஷயத்தை மட்டும் நான் உனக்கு சொல்ல முடியாது"

"இப்ப நீ சொல்லலைன்னா நான் அங்கிள் கிட்ட போட்டு கொடுப்பேன்"

"எங்க அப்பா கிட்டயா? நீ போய் சொன்னா 'அப்படியா? ஃபைனலைஸ் பண்ணினதும் விமலாவே எங்க கிட்ட சொல்லுவா' அப்படிம்பாரு"

"திஸ் இஸ் நாட் ஃபேர் .. "

"கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிக்கடா கண்ணா. கல்யாணதப்ப நேராவே பாத்துக்கோ"

"இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணமா?"

"ஆமா .. இப்ப உன் விஷயத்துக்கு வருவோம். செக்ஸ் சாட் ஓ.கே. இந்த டேட்டிங்க் எல்லாம் மறந்துடு"

முதலில் அவளை முறைத்தவன் இனிமேல் இவளிடம் எதுவும் சொல்லப் போவதில்லை என்று முடிவெடுத்து, "சரி, சொல்லிக் கொடு"

"என்ன?"

"செக்ஸ் சாட்"

"டேய், என்னை என்னன்னு நினைச்சே நீ? எனக்கு அதுல எல்லாம் பழக்கம் இல்லை. தீபக்கிட்ட கேளு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்." என்றவாறு விமலா விடை பெற்றாள்.


அடுதத நாள் விவேக் சோர்வுடன் அமர்ந்திருக்க .. தீபக் அவன் முதுகைத் தட்டி "என்னடா மச்சி அந்த சாட் ரூம்ல எவளாவுது கிடைச்சாளா? எவ்வளவு நேரம் சாட் பண்ணினே"

"ஒரு பத்து லைன்தான் சாட் பண்ணினேன் அப்பறம் அவ லாக் ஆஃப் பண்ணிட்டு போயிட்டா. இந்த செக்ஸ் சாட் எல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு விட்டுட்டேன். "

"யார் கூட சாட் பண்ணினே?"

"கூல்கர்ல்123 அப்படின்னு ஒருத்தியை அந்த சாட் ரும்ல பாத்தேன்"

"அது ஒருத்தியா இல்லை ஒருத்தனான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

திரு திருவென்று விழித்தவன் .. "தெரியல .. ஐடியை வெச்சு பொண்ணுன்னு நினைச்சேன்"

"சரி அப்பறம்?"

"கொஞ்சம் நேரம் அறிமுகம் ஆனதுக்கு அப்பறம் ரோல் ப்ளே பண்ணலாமான்னா"

"ம்ம்ம்ம் .. பெரிய ஆளாயிட்டே .. என்ன ரோல் ப்ளே ப்ண்ணினே"

"நான் வெவ்வேற வெப்சைட்ல பாத்து இருக்கேன் .. அதெல்லாம் எனக்கு பிடிக்கல. சோ, கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் மாதிரி ரோல் ப்ளே பண்ணலாம்னு சொன்னேன். அவளும் நாம் ரொம்ப வித்யாசமான ஆளா இருக்கேன்னு சொல்லி ஒத்து கிட்டா"

"அப்பறம்"

"முதல்ல நான் ஆரம்பிச்சேன், 'நான் ஃபர்ஸ்ட் நைட்டுல பெட்ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'. அதுக்கு அவ 'நான் ரெட் கலர் மெல்லிசான சாரியை லோஹிப் பட்டிட்டு க்ளீவேஜ் தெரியற மாதிரி ப்ளவுஸ் போட்டுட்டு கைல பால் சொம்போட உள்ள வர்றேன்' அப்ப்டின்னா"

"பிச்சுட்டடா .. அப்பறம் .. "

"அதுக்கு நான், 'நான் உங்கிட்ட வந்து பால் சொம்பை வாங்கி பக்கத்துல இருக்கற மேஜைல் வெக்கறேன்' அப்படீன்னேன். அவ அதுக்கு, "நான் என்னோட முந்தானையை லேசா விலக விட்டுட்டு நிக்கறேன்' அப்படின்னா"

"வாவ் அப்பறம்?"

"நான் அதுக்கு, 'நீ என் காலுல விழுந்து என்னை ஆசீர்வாதம் வாங்கிக்கோன்னு சொல்றேன்' அப்படின்னேன்" முகம் சுளிக்க பார்த்துக் கொண்டு இருந்த தீபக்கை பார்த்து, "இப்ப நீ எதுவும் சொல்லாதே .. "

"டெய் மடையா, நீ எந்த செஞ்சுரிலடா இருக்கே .. சரி, என்னதான் சொன்னா சொல்லு"

"'மவனே என்னை என்ன உன் கொத்தடிமைன்னு நினைச்சயான்னு சொல்லி பால் சொம்பை உன் தலைல கொட்டிட்டு வெளில போறேன்' அப்ப்டின்னு சொல்லிட்டு லாக் ஆஃப் பண்ணிட்டா."

தொடர்ந்து சிரித்துக் கொண்டு இருந்த தீபக்கை முறைத்து, "இந்த சாட் எல்லாம் எனக்கு சரிப் பட்டு வராதுடா. நீ சொன்னியே அந்த ஸ்போர்ஸ் பார் அதுக்கு போலாமா. அங்க் போன நேரா பொண்ணுங்களை பாத்து பேசலாம்"

"சரி, உன் இஷ்டம் .. இப்பவே சொல்லிட்டேன். அங்க போனா உனக்கு ஹார்ட் லிக்கர் எதுவும் கிடையாது. ஒன்லி பியர். சரியா?"

"அதுகூட வேண்டாம். நான் பொண்ணுங்க யார் கூடயாவுது ஃப்ரீயா பேசணும்"

"அவ்வளவுதானா? டேய் கொஞ்சம் பந்தா பண்ணினா போதும். அங்க casual consensual sex அப்படின்னு அலையற நிறைய பொண்ணுங்களை மடக்கலாண்டா"

"சரி, இந்த வெள்ளிக்கிழமை போலாமா?"

"ஓ,கே, அதுக்கான ட்ரெஸ் உங்கிட்ட இருக்கா?"

:"அதுக்கென்ன ட்ரெஸ்?"

"பார்டிவேர்டா, பெருசா ஒண்ணும் செலவு செய்ய வேண்டாம். முடிஞ்ச வரைக்கு டார்க் கலர்ல ஜீன்ஸ் டீ-ஷர்ட் இல்லைன்னா எதாவது பார்டிவேர் ஷர்ட். கொஞ்சம் ஜிகுஜிகுன்னு இருந்துன்னா நலலது. பொண்ணுங்க தான் எக்கச்சக்கமா காசை செலவு செஞ்சு சின்ன துணியா பொட்டுட்டு வருவாளுக"

"சரி, லைஃப் ஸ்டைல் இல்லை ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில போய் பார்ட்டிவேர் அப்படின்னு கேட்டா கொடுப்பாங்க இல்லை"

"ஓ, ஜோரா உன் பர்ஸ் காலி ஆகிறவரைக்கும் கொடுப்பாங்க ... "


வெள்ளியன்று மாலை ஏழுமணி அளவில் அவனது அப்பார்ட்மெண்ட் காலிங்க் பெல் அடித்தது. பார்ட்டிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த விவேக் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியபடி வாசற்கதவை திறந்தான். அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு கணம் வாயடைத்து போனான்.

கருப்பு நிறத்தில் உடலின் அழகான வளைவுகளை எடுத்துக் காட்டும் படி ஸ்பகதி என்கிற முழங்காலுக்கு சிறிது மேல்வரை இருக்கும் உடை.
தோளைத் தழுவிய வலை போன்ற கரு நீல வண்ண உயர்தர பஷ்மீனா ஷால்..
அதற்கு கீழே கரும் சாம்பல் வண்ணத்தில் வாழைத்தண்டு போன்ற கால்களை தழுவிய ஸ்டாக்கிங்க்ஸ்.
விவேக்கின் தோளுக்கும் மேல் இரண்டு அங்குலம் உயரத்தை அதிகரித்த ஸ்டிலட்டோ ஹை-ஹீல்ஸ் ஷூஸ்.
அலை அலையாக பின்புறத்தை அழகரிக்கும்படி விரித்து விடப்பட்ட அடர்ந்த கூந்தல்.
ஆப்பிள் கன்னங்களுக்கு மெருகேற்றிய லேசான மேக்-அப், மான் விழிகளை சுற்றி மெலிதான ஐலைனர், ரோஜா வண்ண உதட்டை இரத்தச் சிவப்பாக்கிய லிப்-ஸ்டிக்.

தடுமாறிய விவேக்கை பார்த்து, "உள்ள விடமாட்டியா?" என்றாள் விமலா.

"ஏய், நீ இப்ப இப்படி எங்க ... " என்றபடி அவன் வாய் உலர்ந்து போனதை பறைசாற்றினான்.

"ம்ம்ம் .. நீ இந்திரா நகர் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பாருக்குத்தானே போறே? நானும் அங்கதான் வர்றேன். உங்கூட"

"நீ எதுக்கு அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் ..."

"ஏன், நீ போலாம் நான் போககூடாதோ?"

"ஏய், நீ யாரையோ லவ் பண்ணறதா வேற சொல்றே. அவருக்கு தெரியுமா?"

"அவர் தனக்கு தெரிஞ்சுதான் நான் போகணும்னு எதிர்பாக்கற மனுஷன் இல்லை. மோரோவர் அவர் கொஞ்சம் பிஸி"

"இருந்தாலும் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் ஒரு ஆம்பிளை துணை இல்லாமல்"

"அதான் நீ இருக்கியே?"

திடீரென்று தன் திட்டமெல்லாம் தவிடு பொடியாவதை உணர்ந்தவன். "நான் அங்க போறேன்னு உனக்கு யார் சொன்னாங்க? நான் வேற இடத்துக்கு போறேன்."

"இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு சின்மயா மிஷன் கிருஷ்ணர் கோவிலுக்குத்தானே போறே? ... நானும் வர்றேன் போலாம் வா."

"நான் உன்னை அங்க கூட்டிட்டு போக முடியாது"

"நீ ஒண்ணும் கூட்டிட்டு போக வேண்டாம். அந்த மாதிரி இடத்துக்கு என் ஸ்கூட்டில போனா மரியாதையா இருக்காது. நீதான் பந்தாவா ஒரு பைக் வாங்கி இருக்கியே அதுல போய் இறங்கலாம்னு வந்தேன். அங்க போனப்பறம் வாசல்ல தீபக் இருப்பான் அவங்கூட நான் போயிக்கறேன். நீ வேணும்னா தனியா கண்டவளையும் சைட் அடிச்சு மடக்கப் பாரு"

"நான் அங்கிள் கிட்ட போட்டு கொடுக்கப் போறேன்"

"ஓ, சொல்லேன். நீ என்ன சொல்றது. நானே சாயங்காலம் எங்க அப்பா அம்மா கிட்ட நான் உன்கூட போறதா சொல்லிட்டுதான் வர்றேன். லிமிடடை தாண்டாம ஜாலியா போயிட்டு வான்னு எங்க அப்பாவே எனக்கு விஷ் பண்ணினாறு"

"நல்ல அப்பா நல்ல பொண்ணு" என்று முணு முணுத்தவனிடம் "உனக்கு இன்னோண்ணு தெரியுமா? உங்க அம்மாவும் அப்ப அங்கதான் இருந்தாங்க" இப்போது அவனுக்கு உதறல் எடுத்தது. "பயப்படாதே. அவங்க என் கிட்ட உன் சங்கோஜம் போற மாதிரி எல்லார்கிட்டயும் பழக வைன்னு சொன்னாங்க. பத்திரமா பாத்துக்கவும் சொன்னாங்க" என்று ஆறுதலளித்தாள்.

"நீ என்ன என்னை பத்திரமா பாத்துக்கறது. அந்த மாதிரி இடத்தில் நான்தான் உன்னை இப்ப பத்திரமா பாத்துக்கணும். ஏண்டி, என்னை தனியா கொஞ்சம் என்ஜாய் பண்ண விடமாட்டியா?"

"டேய், நீயும் தீபக்கும் போனா உங்க ரெண்டு பேரையும் எல்லாரும் ஹோமோ செக்ஸ் கப்பிள்ன்னு நினைச்சுக்குவாங்க. நான் தீபக்கூட இருக்கேன். உள்ள போகும் போது நீ தனியா போ"

"சொன்னா கேக்க மாட்டே. வந்து தொலை" என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.




பெங்களூர் இந்திரா நகர் நூறடி சாலையில் இருக்கும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பார்....வாசலில் நிறுத்தி இருக்கும் கார்களில் பாதிக்கும் மேல் வெளி நாட்டுச் சரக்குகள். நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே அதிகாரபூர்வமான மொழி. பெண்களனைவரும் போட்டி போட்டு கொண்டு உடையின் அளவை குறைத்து வெளிப்பட்ட தோலின் பரப்பளவை அதிகரிக்கும் முயற்சியில் இருந்தனர். ஆண்களோ, அவரவருக்கு தெரிந்தது போல் "கூல்" என்ற வார்த்தைக்கு உவமானமாக காட்சியளிக்கும் முயற்சியில் இருந்தனர்.

உள்ளே நுழைந்த கணத்திலிருந்து விவேக்கிற்கு வேர்க்கத் தொடங்கியது. அவளை தீபக்குடன் இருக்க வைத்து விட்டு மற்ற பெண்களுடன் பேசிப் பழகலாம் என்று வந்தவன் உள்ளே நுழைந்தது முதல் விமலாவின் பின்னாலே சுற்றிக் கொண்டு இருந்தான்.

"எனக்கு ஒரு ஃப்ரூட் பஞ்ச் நீ என்ன ட்ரிங்க் சாப்பிடறே?" என்ற விமலாவை வாய் பிளகக்ப் பார்த்தவன் "உனக்கு ட்ரிங்க்ஸ் பத்தி எல்லாம் தெரியுமா?"

"ஓ, எங்க அப்பா எங்க வீட்டுலயேதான் ட்ரிங்க் பண்ணுவார். கண்ட இடத்துக்கும் போய் குடிக்க கூடாதுன்னு எங்க அம்மாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அவர் ட்ரிங்க் சாப்பிடும் போது நான் ஃப்ரெஷ் லைம் சோடா இல்லைன்னா ஃப்ரூட் ஜூஸ் குடிச்சு கம்பெனி கொடுப்பேன். அப்பறம், அது என்னோட பஷ்மீனா ஷால். உங்கம்மாவோட புடவை கொசுவம் இல்லை. அதை கொஞ்சம் விடறயா?"

"ஹி ஹி .. நான் ஒரு பியர் சாப்பிடறேன்"

"இதுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கியா?"

"இல்லை .. விஸ்கி மாதிரி தூக்காதுன்னு தெரியும் அதனாலதான் .. "

சிறிது நேரத்தில் ஒரு மக் பியரை குடித்து ஏப்பம் விட்டவன், "நான் டாய்லெட் போயிட்டு வந்துடறேன்"

"பியர் ரொம்ப குடிச்சாத்தான் மூச்சா வரும்னு சொல்லுவாங்க. உனக்கு ஒரு மக்கிலயே வந்துடுச்சா?"

"தெரியல .. " என்றவாறு சென்று திரும்பியவனை வழி மறித்த ஒரு பெண் அவனிடம், "ஹாய் ஹாண்ட்ஸம் ஐ அம் லீனா" என்று கையை நீட்டினாள்.

சற்று திணறிய பிறகு "ஹாய், ஐ அம் விவேக் .. " என்று ஒரு வழியாக சொல்லி முடித்தான்.

"தனியா வந்து இருக்கியா?"

"ஆமா ... இல்லை ... வந்து ..."

அவனது தடுமாற்றத்தைக் கண்டு சிரித்தபின், "உன் கேர்ல் ஃப்ரெண்டை கழுட்டி விட்டுட்டு வா .. நான் வெய்ட் பண்ணறேன்"

"இல்லை ... வேண்டாம்"

அவள் அருகில் வந்து உறச விவேக்கின் இதயத்துடிப்பு அதிகமானது,

அவள் "உன்னோட செல் நம்பர் கொடு ..." என்றதும் அதிவேகமாக தன் நம்பரை ஒப்பித்து விட்டு ஓட்டமெடுத்தான்.

விமலாவிடம் வந்தவன் அவளருகே ஒரு வாலிபன் அந்த இருட்டிலும் கருப்பு கண்ணாடி அணிந்து சட்டை பேண்டெல்லாம் பள பளக்க தலை முடி மின்சார விளக்குகள் பொருத்தியதைப் போல் ஜொலிக்க ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தான். விமலா வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். அருகில் சென்றதும் விமலா, "திஸ் இஸ் மை பாய் ஃப்ரெண்ட் விவேக்" என்று அவனுக்கு அறிமுகப் படுத்த அந்த வாலிபன் அவர்களை விட்டு நகர்ந்தான்.

"என்னை எதுக்கு உன் பாய் ஃப்ரெண்டுன்னு சொன்னே"

"ஏன், நீ ஆம்பளை இல்லையா? இல்லை நீ என் ஃப்ரெண்ட் இல்லையா?"

"எனக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரி பேசறதை நிறுத்து. பாய் ஃப்ரெண்டுன்னா அதுக்கு அர்த்தம் வேற. இதையே நீ உன் லவர் கிட்ட சொல்லி இருப்பியா?"

"நிச்சயம் சொல்லி இருப்பேன். அவர் ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டார். சரி, யாருடா அந்த பொண்ணு உங்கிட்ட வந்து ஈஷினா?"

"அவ பேரு லீனா"

"அந்த தடிச்சி பேரு லீனாவா? தமாஷா இல்லை? என்ன? அவகூட அடுத்த ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணிட்டயா?"

"என்ன விளையாடறயா?"

"இல்லை, நீ அவகிட்ட உன் செல் நம்பரை கொடுத்தியா இல்லையா?"

"கேட்டா பயத்தில வாய் தவறி சொல்லிட்டேன்"

"எப்படியோ நீ மடக்கறயோ இல்லையோ. உன்னை மடக்க ஆள் கிடைச்சுட்டா. நீ வேணும்னா பாரு உனக்கு நாளைக்கு அவகிட்ட இருந்து ஃபோன் வரும்"

"அதெல்லாம் வராது ... "

"சரி, காசை கொடுத்து வந்தாச்சு அந்த டான்ஸ் ஃப்ளோருக்கு போய் ஆடலாமா?"

"டான்ஸா? எனக்கு அதெல்லாம் தெரியாது"

"அங்க பாருடா தீபக் ஆடறான் பாரு ..."

"ஆடறானா, ஃபிட்ஸ் வந்தவன் மாதிரி வெலுக் வெலுக்குன்னு உதறிகிட்டு இருக்கான்"


சற்று நேரத்தில் டீ.ஜே என்று அழைக்கப்படும் டிஸ்க் ஜாக்கி "ஹேய் ட்யூட்ஸ் அண்ட் கால்ஸ், அடுத்தது வருவது கப்பிள் ஸ்பெஷல். மத்தவங்க எல்லாம் டான்ஸ் ஃப்ளோரை விட்டு விலகுங்க" என்று அறிவித்து மெதுவான தாளத்துடன் ஒரு மென்மையான மேற்கத்திய இசையின் சில வரிகளை ஒலிபரப்பி நிறுத்த சில தம்பதியினரை தவிற டான்ஸ் ஃப்ளோரில் இருந்த மற்றவர் கரகோஷத்துடன் விலக அமர்ந்திருந்த வேறு சில தம்பதியினரும் எழுந்து டான்ஸ் ஃப்ளோரை நோக்கி சென்றனர். அப்போது விவேக் விமலா அருகே வந்த ஒரு தம்பதியினர், "நீங்க ஜாய்ன் பண்ணலையா? இது லவர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க அப்பறம் எங்கேஜ்மென்ட் ஆன கப்பிள்ஸுக்கு மட்டும் .. கம் ஆன்" என்று அழைக்க, விமலா முகம் சிவந்தாள்.

விவேக் வியர்த்து வெல வெலத்து, "இல்லை .. வேண்டாம் ... எனக்கு டான்ஸ் தெரியாது" என்று மழுப்ப அதற்கு அந்த வாலிபன், "டான்ஸ் எல்லாம் தெரியணும்னு இல்லை. சும்மா லைட்டான ம்யூசிக்குக்கு தகுந்த மாதிரி உடம்பை அசைத்தா போதும். வேணும்னா அந்த ஸ்லோ பீட்ஸுக்கு ஸ்டெப்ச் போட்டுக்கலாம். வாங்க நாங்க காமிக்கறோம்" என்றவாறு டான்ஸ் ஃப்ளோருக்குள் நுழைந்தனர்.

அந்த வாலிபன் தன் இடது கையால் அப்பெண்ணின் இடையை வளைத்து வலக்கையை அவளது இடக்கையுடன் கோர்த்து நிற்க அவன் தோளில் சாய்ந்தவள் விமலாவை பார்த்து 'வா' என்று கைகாட்டினாள்.

சில கணங்கள் அவளையும் விவேக்கையும் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கையை பிடித்து இழுத்தவாறு டான்ஸ் ஃப்ளோருக்குள் பிரவேசித்தாள். விவேக்கை அவளெதிரில் நிறுத்தி மற்றவரைப் போல அவன் இடக்கையை எடுத்து தன் இடையை சுற்றி போட்டு தன் இடக்கையால் அவனது வலக்கையை கோர்த்தாள். இசை தொடங்கியதும் அதற்கேற்ப அவனையும் சேர்த்து மெதுவாக அசைந்தாள். வேறு வழியின்றி முகத்தில் பலியாட்டுக் களையுடன் விவேக்கும் அவ்வாறே இயங்கினான். அவன் தோளில் தலை சாய்ந்தவளை குனிந்து பார்த்து, 'சே, எவ்வளவு அழகா இருக்கா? இவ லவ்வர் கொடுத்து வெச்சவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே தோளிலிருந்து தலையை நிமிர்த்திய விமலா அவனை பார்த்து சிரித்து தன் மன்மதக் கலசங்கள் அவன்மீது பதியும்படி அவனை இறுக்கினாள்.

அந்த பாடல் முடிய முடிய அதன் உச்சக் கட்டத்தில் சுற்றி இருந்தவர்களின் கரகோஷத்துடன் டான்ஸ் ஃப்ளோரில் இருந்த தம்பதியினரில் பலர் முத்தமிடத் தொடங்கினர். மற்றவரையும் சுற்றி இருந்தவர் உற்சாகப் படுத்த முதலில் தயங்கிய தம்பதியினர் ஒவ்வொருவராக தங்கள் முத்தத்தை தொடங்க. சுற்றி நடக்கும் விபரீதத்தை கண்டு கதி கலங்கிய விவேக் வேகமாக விமலாவுடன் டான்ஸ் ஃப்ளோரை விட்டு அகல முயல அவனைப் பற்றி இழுத்த விமலா தான் அணிந்து இருந்த ஹை-ஹீல்ஸின் உதவியால் எளிதாக அவன் கழுத்தை வளைத்து அவன் இதழோடு இதழ் பதித்தாள். பீதியில் கண்கள் அகல முகம் வெளுத்து இருந்த விவேக்கையும் அவன் கழுத்தை இரு கைகளாலும் வளைத்து அவன் உதடுகளை தன் மெல்லிதழால் சுவைத்துக் கொண்டிருந்த விமலாவையும் பார்த்த சுற்றி இருந்தவர் கரகோஷம் இன்னும் அதிகரிக்க தீபக் வாயடைத்து நின்று இருந்தான்.

தங்கள் டின்னரை முடித்துக் கொண்டு வெளியில் வந்த மூவரும் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. விமலாவின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை நிரந்தரமாக குடியேறி இருந்தது.



தீபக் விடை பெற்றுக் கொண்டு சென்றதும் விவேக், "உனககு என்னடி ஆச்சு?" என்று உரத்த குரலில் தன் கோபத்தை வெளிப்படுத்த முயல.

"முதல்ல வண்டி எடு. நீ ரெண்டு பியர் குடிச்சு இருக்கே. சீக்கரம் போனா ட்ரங்கன் ட்ரைவிங்க்குக்கு பிடிக்கற போலீஸ் என்னை பொருப்பா நீ சீக்கரம் வீட்டுக்கு கூட்டிட்டு போறதை பாத்து விட்டுடுவாங்க. லேட்டாச்சுன்னா சந்தேகம்" என்றதும் உதறலெடுத்த விவேக்

"சீக்கரம் வண்டில ஏறித் தொலை" என்றபடி தன் பைக்கை கிளப்பினான்



No comments:

Post a Comment