Thursday, March 5, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 10


மான்சி அப்படியே சரிந்த கீழே உட்காரவும் மாயன் பதறிப்போய் “சின்னம்மா என்னாச்சு உங்களுக்கு” என்று கேட்க

“ எனக்கு ஒன்னுமில்ல மாயா என்னை கொஞ்சம் அங்கே கூட்டிட்டு போங்க” என்று அவனை நோக்கி கையை நீட்ட

“சரி வாங்கம்மா” என்று மாயன் அவளை கைதாங்களாக அழைத்து போய் வெளியே விட்டான்

வெளியே வாசற்படிக்கு நேரே முத்துவை கிடத்தியிருக்க அவன் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அமுதா தன் முகத்தில் அறைந்தபடி கதறிக்கொண்டு இருந்தாள்
முத்துவின் பிள்ளைகள் இருவரும் அவன் காலடியில் உட்கார்ந்து அவன் முழங்காலை தொட்டு அழுதுகொண்டு இருந்தனர்

முத்துவைச் சுற்றிலும் நின்று வேலைக்காரர்கள் கண்ணீர்விட... கலாவதி கூட அழுதுகொண்டிருந்தாள்... பார்ப்பதற்கு அந்த இடமே சாவு வீடுபோல இருக்க.... இதை தாங்கமுடியாத மான்சியும் கதற ஆரம்பித்தாள்

சற்று நேரத்தில் சட்டையை மாட்டிக்கொண்டே அங்கு வந்த சத்யன் அங்கிருந்த சூழ்நிலையை பார்த்து அதிர்ந்து போய் மான்சியை பார்த்தான்

அவன் வந்ததை உணர்ந்த மான்சி திரும்பி ‘அடப்பாவி ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டயே நீ நல்லா இருப்பியா’ என்பது போல் கேவலமாக சத்யனை பார்க்க

‘ நான் ஏதுவும் செய்யலை மான்சி’ என்பது போல் அவன் பதிலுக்கு பரிதாபமாக தலையசைத்தான்

மான்சி வேகமாக படிகளில் இறங்கி அமுதாவின் மடியில் கிடந்த முத்துவின் கையை பிடித்து நாடியை பார்த்தாள்... அது ஊமைத் துடிப்பாய் துடித்துக்கொண்டிருக்க

“ஐயோ முத்துவுக்கு இன்னும் எதுவும் ஆகலை உயிர் இருக்கு சீக்கிரமா ஆஸ்பிட்டல் கொண்டு போங்க” என்று சத்தமிட்டு மான்சி கத்த.... அங்கிருந்தவர்கள் தங்கள் அழுகையை நிறுத்திவிட்டு அமுதாவை விலக்கி முத்துவை தூக்க...




மான்சி வேகமாக பிரம்மை பிடித்துப்போய் நின்றிருந்த சத்யனை நெருங்கி அவன் சட்டையை பிடித்து உலுக்கி “முத்துவை காப்பாத்துங்க சீக்கிரம் காரை எடுங்க” என்று கத்தியதும்

அமுதாவும் ஓடிவந்து சத்யனின் காலில் விழுந்து அவன் பாதத்தில் தன் முகத்தை வைத்து “சின்னய்யா என் புருஷனை காப்பாத்துங்க சின்னய்யா.. அவர் இல்லன்னா நானும் என் குழந்தைகளும் செத்துப்போய்ருவம்ய்யா” என்று அவன் கால்களை பற்றிக்கொண்டு கதற

அமுதாவின் வார்த்தைகள் சத்யனின் மூளையை சென்று தாக்க தலையை உலுக்கி தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்த சத்யன் “ மாயா முத்துவை பெரிய வண்டியில் பின்சீட்ல ஏத்து கூட யாராவது ரெண்டு பேர் உட்காருங்க” என்று உரத்த குரலில் உத்தரவிட்டு விட்டு.. வீட்டுக்குள் ஓடி தேவையான பணத்தையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு வந்து காரில் ஏறி காரை கிளப்ப.... எடுத்த எடுப்பிலேயே அவன் கைகளில் கார் சீறிப்பாய்ந்தது

சற்றுநேரத்தில் அந்த இடத்தில் இருந்தவர்கள் கலைந்து போக அமுதாவின் பிள்ளைகள் மட்டும் தனியாக நின்றனர்... மான்சி அவர்களை நெருங்கி இருவரின் கையையும் பிடித்து வீட்டுக்குள் அழைத்து போக

முத்துவின் இளையமகன் மான்சியின் கைகளை சுரண்டி “ அக்கா எங்க அப்பா செத்துப்போய்ட்டாரா இனிமே வரவே மாட்டாரா” என்று கண்கலங்கி கேட்க

மான்சி மண்டியிட்டு உட்கார்ந்து இருவரையும் தன் தோள்களில் சாய்த்து கண்ணீர் விட்டு கத்தி கதறி அழ... மறுபடியும் அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டது

கலாவதிக்கு மான்சியை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது.... வேலைக்காரர்கள் மான்சியிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து வீட்டுக்குள் கூட்டிச்சென்று உணவு கொடுத்து பிள்ளைகளை சமாதானம் செய்தனர்

நடக்கக்கூட முடியாமல் தள்ளாடிய மான்சியை கலாவதி தன் தோளில் சாய்த்துக்கொண்டு போய் சத்யனின்அறையில் விட்டுவிட்டு வெளியேறினாள்
தனது அறைக்கு போய் கட்டிலில் விழுந்த மான்சிக்கு கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை

‘ ஐயோ கடவுளே முத்துவுக்கு எதுவும் ஆகக்கூடாது.... அவன் பிள்ளைகள் அனாதைகளாக ஆகிவிடுமே.... கடவுளே முத்து செத்துவிட்டால் என் புருஷன் அல்லவா அதுக்கு காரணம்... அப்போ சத்யன் கொலைகாரனா.... என் புருஷனால் ஒரு குடும்பமே அழியப்போகிறதா.... ஐயோ வேண்டாம் வேண்டாம்’ என்று கதறியது மான்சியின் மனம்

முத்து அமுதாவை அடித்து கண்டிப்பான் என்றுதான் மான்சி நினைத்திருந்தாள்... ஆனால் முத்து எடுத்து இந்த முடிவு அவள் மனதை ரொம்பவே பாதித்தது....

தன் மனைவியை தவரான நிலையில் பார்த்துவிட்டு முத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்றால்.... நான் ஏன் இந்த நான்கு மாதமாக என் புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு உயிரோடு இருக்கிறேன்’ என்ற கேள்வி மான்சியின் மனதில் பலமாக எழுந்தது

அன்று முழுவதும் பிடிவாதமாக எதுவுமே சாப்பிடாமல் அழுதபடி படுத்துக்கொண்டு கண்ணீரில் கரைந்தாள் மான்சி

முத்துவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் ஓடிய சத்யன் அவனை எமர்ஜென்ஸியில் சேர்த்துவிட்டு தனக்கு தெரிந்த சில பெரிய டாக்டர்களை அழைத்துவந்து முத்துவின் நிலையை சொல்ல... அவர்களும் அவனை காப்பாற்ற போராடினார்கள்

முத்து விஷம் குடித்தது போலீஸ் கேஸ் ஆகிவிட போலீஸ்காரர்கள் மூவர் அமுதாவை விசாரிக்க அவள் கண்ணீரை மட்டுமே அவர்களுக்கு பதிலாக தர மாயன்தான் போலீஸ்காரர்களுக்கு சாமர்த்தியமாக பதில் சொல்லிகொண்டு இருந்தான்....

ஆனால் வெளியே விசாரித்த போலீஸ்காரர்களுக்கு ஒரளவுக்கு விஷயம் தெரிந்துவிட முத்து பிழைத்து வாக்குமூலம் கொடுப்பதற்காக காத்திருந்தனர்

அதற்க்குள் அமுதாவின் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்துவிட அவர்களிடமும் விசாரித்து தங்களுக்கு தேவையான தகவலை சேகரித்துகொண்டனர் போலீசார்

அன்று இருவு மருத்துவர்களின் பெரும் போராட்டத்துக்கு பிறகு உயிர் பிழைத்த முத்து அமுதாவை பார்த்து கண்ணீர் விட்டான்

அப்போது அங்கே வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் “ என்ன முத்து இப்போ பரவாயில்லையா”... என்று விசாரித்துவிட்டு “ ம் ஒரு சின்ன என்கொயரி முத்து... உன் தற்கொலைக்கு என்ன காரணம் அல்லது யார் காரணம் அதைப்பத்தி நீ எங்களுக்கு சொன்னா நாங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சரியாக இருக்கும் முத்து” என்று கேட்க

முத்து அமைதியாக தன் மனைவின் முகத்தை பார்த்தான்... அவளோ அவன் அருகிலேயே நின்றுகொண்டு கைகளை விடாமல் பற்றி கண்ணீர் விட்டுகொண்டு இருந்தாள்

“நீங்க யாருக்கும் பயப்படாதீங்க முத்து எதுவாயிருந்தாலும் சொல்லுங்க... நாங்க அதுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்று போலீஸ் அதிகாரி சத்யனை பார்த்துக்கொண்டே மறுபடியும் கேட்க

“அதெல்லாம் யாரும் காரணம் இல்லை சார்.... எனக்கு ரொம்ப நாளா தீராத வயித்துவலி இருந்துச்சு சார் நேத்து அது ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு... அதான் வலி தாங்க முடியாம விஷத்தை குடிச்சுட்டேன் சார்.... நீங்க நடவடிக்கை எடுக்கிறதா இருந்தா என்மேலதான் சார் எடுக்கனும்” என முத்து நிறுத்தி நிதானமாக கூறினான்

அவன் பதிலால் திகைத்த அதிகாரி “ முத்து நாங்க வெளியே விசாரிச்சதில் எல்லாரும் வேற மாதிரி சொல்றாங்க நீ என்ன இப்படி சொல்றே... யாருக்கும் பயப்படாத முத்து நீ காரணத்தை மட்டும் சொல்லு மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என்று மறுபடியும் அழுத்தமாக கேட்க

“அதான் சொல்றேனே சார் வேற எந்த காரணமும் இல்லைன்னு... நீங்க என்ன என்னை பார்த்துக்கிறது... அதுக்கு என் முதலாளி இருக்கார் நீஙக கெளம்புங்க சார் எனக்கு ரொம்ப அசதியா இருக்கு” என்று முத்து அழுத்தம் திருத்தமாக கூற....
வேறு வழியில்லாத போலீஸ் அதிகாரி சத்யனை முறைத்துக்கொண்டே வெளியேறினார்

ஒரு குற்றவாளியைப் போல் சத்யன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நிற்க்க.... அமுதா முத்துவின் பாதங்களை தன் கண்ணீரால் கழுவிக்கொண்டு இருந்தாள்

“இங்கே என்கிட்ட வா அமுதா” என்று முத்து கூப்பிட... உடனே அமுதா அவன் தலைமாட்டில் வந்து நிற்க்க

“ உனக்கு ஏதுவோ என்கிட்ட பிடிக்கலைன்னு நெனைக்கிறேன் அமுதா... ஆனா அது என்னான்னு நான் கேட்க மாட்டேன்....நம்ம பிள்ளைகளை விட்டுட்டு நான் தற்கொலை முயற்சி பண்ணது ரொம்ப தப்புன்னு எனக்கு இப்போ புரியுது அமுதா.... ஆனா இனிமேல் நீ எடுக்கிற முடிவுலதான் எல்லாமே இருக்கு... சொல்லு அமுதா என்ன முடிவு பண்ணிருக்க" என்ற முத்து பதிலுக்காக அமுதாவின் முகத்தை பார்க்க

" ஐயோ கடவுளே நான் என்ன முடிவு பண்ணப்போறேன்... எனக்கு எல்லாமே நீங்கதான் தயவுசெய்து என்னை ஒதுக்கிடாத மாமா... நான் இனிமே எந்த தப்பும்
பண்ணமாட்டேன் இது நம்ம புள்ளைங்க மேல சத்தியம் மாமா.. எனக்கு நீதான் வேனும் வேற எதுவுமே வேனாம்... மொதல்ல நாம இங்கருந்து போயிரலாம் மாமா வேற எங்கயாவது போய் பிச்சையெடுத்தாவது பொழைக்கலாம்... எனக்கு நீதான் மாமா வேனும் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு ஏத்துக்க மாமா " என்று அமுதா முத்துவின் முகத்தில் தன் முகத்தை வைத்து கதறியழ

முத்து அவளை கழுத்தோடு வளைத்து தன் முகத்தில் அழுத்திகொண்டு அவள் உச்சியில் தன் உதடு பதித்து கண்ணீர் விட்டான்

இருவரின் வார்த்தைகளும் சத்யனுக்கு செருப்பால் அடித்தது போல் நிலைமையை புரியவைக்க... இதற்க்கு மேல் தான் இங்கே இருந்தால் அது நாகரிகமாகது என்பதை உணர்ந்த சத்யன் அங்கிருந்து வெளியேறி மாயனிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்

மருத்துவமனையில் இருந்து சத்யன் தன் வீட்டுக்கு போது மணி 12-30 ஆகியிருக்க யாரையும் எழுப்பாமல் தனது அறைக்கு சென்று அமைதியாக படுத்துக்கொண்டான்

அவன் மனம் ரொம்ப தெளிவாக இருந்தது..... அந்த தெளிவை ஏற்படுத்தியது முத்து....

தாலி கட்டிய மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என்று சத்யனுக்கு முத்து இந்த ஒரே நாளில் கற்றுக்கொடுத்திருந்தான்....

தீராத காமத்துக்கும் அழகான தாம்பத்தியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சத்யனுக்கு ஒரு ஆசானாக இருந்து முத்து தெளிவு படுத்தியிருந்தான்....

சத்யனின் பணம் அந்தஸ்து எல்லாமே முத்துவின் கலடியில் பொசுங்கிப்போனது...

முத்துவின் மன்னிக்கும் மனபக்குவமும் அமுதாவின் வார்தைகளும் சத்யனுக்கு பெரிய சவுக்கடியாக வலித்தது....

தன்னுடைய தகாத உறவால் நேற்று அநியாயமாக ஒரு உயிரே போயிருக்குமே என்று மனப்பூர்வமாய் வருந்தினான்....

நேற்று என்னால் இரண்டு குழந்தைகள் தனது தகப்பனை இழந்து அனாதையாகி இருப்பார்களே....என்று உள்ளத்தில் இருந்து உன்மையாய் வேதனைப்பட்டான்


மான்சி நேற்று சொன்ன வார்த்தைகள் அவன் மனதின் அடியாழத்தில் இருந்துகொண்டு வதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை கொன்றுகொண்டிருக்க...

தன் புருஷன் இன்னொருத்தியின் வீட்டுக்குள் போக வெளியே அதை பார்த்துக்கொண்டு காத்திருந்த மான்சியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சத்யனுக்கு புரிந்தது

வேறு ஒருத்தியாக இருந்தால் இதை எப்படி பெரிய பிரச்சனையாக்கி தன்னை பலபேருக்கு முன்னால் அவமானப்படுத்தியிருப்பாள்....

மான்சி ஏன் அப்படி பொருமையாக இருந்தாள் என்ற சத்யனின் கேள்விக்கு ஒரே பதில்... அவளுக்கு தன்னுடன் வாழ விருப்பமில்லை என்பதுதான்... இது அவனுக்கு தீர்மானமாக தெரியும்

மூன்றுமாதத்துக்கு முன்பு அம்பாசமுத்திரத்தில் தன்னிடம் அண்ணாமலை கொடுத்த ஒரு கடிதத்தின் ஞாபகம் வர சத்யனின் மனம் தன்னிரக்கத்தில் நொந்தது.....

கடைசியில இவளும் மற்றப் பெண்களை போல மனதை ஒருவனுக்கும் உடலை ஒருவனுக்கும் கொடுத்துவிட்டு இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள் என்று நினைத்து வருந்தினான்

அவள் கேட்டால் அவள் விரும்பும் சுதந்திரமான விடுதலையை கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான்...

என்னைவிட்டு பிரிந்து போயாவது அவள் மனதுக்கு பிடித்தவனுடன் நல்லபடியாக வாழட்டும் என்று நினைத்தான்

இதை நினைக்கும்போதே அவன் கண்கள் கலங்க இதயம் வேகமாக துடித்தது.... இப்போதுதான் முதல்முறையாக அவன் இதயம் மான்சிக்காக துடிக்கிறது...
வெளியே மழை இடி மின்னலுடன் சோவென கொட்ட.... சத்யன் மனதிலும் கழிவிரக்கத்துடன் ஈரம் கசிய ஆரம்பித்தது

மான்சியுடன் கழித்த அந்த எட்டுநாள் இரவுகள் ஞாபகத்துக்கு வந்தது.... தனது வலிகளையும் வேதனைகளையும் எப்படி பொருத்துக்கொண்டு ஏன் அப்படி இயந்திரம் போல் கிடந்தாள்....

அப்போதெல்லாம் அவள் ஏன் தன்னை ஆசையோடு அணைத்து உறவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று சத்யனுக்கு இப்போது புரிந்தது....

அதுக்கும் அவன் கண்டுபிடித்த காரணம் அவளுக்கு தன்மேல் எந்தவிதமான் பற்றும் ஏற்ப்படவில்லை என்பதுதான்….

அவளுக்கு தன்னை பிடிக்காததற்க்கு இருக்கும் காரணம் சத்யன் மனதை ரொம்ப வதைத்தது.....

நாளை அந்த கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும்... என்று எண்ணியபடி சத்யன் தூங்கிப்போனான்

அன்று அலைந்ததில் அலுப்பில் நன்றாக தூங்கிவிட காலையில் யாரோ கதவை தட்டியதும் தான் எழுந்தான்

எழுந்துபோய் கதவை திறந்து யாரென்று பார்க்க மாயன்தான் நின்றிருந்தான் “என்ன மாயா” என்று சத்யன் கேட்க

“ சின்னய்யா மணி எட்டாயிருச்சுங்க சரி நீங்களே எழுந்திரிப்பீங்கன்னு பார்த்தேன்... இல்லேன்னதும் அதாங்க கதவை தட்டினேன்.... மான்சியம்மா கூட எப்பவும் காலையில ஐஞ்சு மணிக்கே எழுந்திருச்சிருவாங்க இன்னிக்கு என்னான்னு தெரியலை அவங்களும் நல்லா தூங்கறாங்க போல.... கொஞ்சம் எழுப்புங்கய்யா அம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்று மாயன் சொன்னதும்

“என்னது மான்சி இன்னும் மான்சி எழுந்திருக்கலையா” என்று அதிர்ச்சியுடன் கேட்ட சத்யனுக்கு மனம் துணுக்குற அவசரமாக உள்ளே ஓடி மான்சியின் அறையில் பார்க்க... அங்கே கட்டில் காலியாக இருந்தது

அவன் அதிர்ச்சியுடன் உள்ளே ஓடியதைப் பார்த்து மாயனும் அவனை பின்தொடர்ந்து வந்து பார்த்துவிட்டு “ ஐயோ எங்கய்யா மான்சியம்மாவ காணோம்” என்று அலறியபடி பாத்ரூம் பால்கனி என்று அறை முழுவதும் தேடினார்கள் எங்கேயும் மான்சி இல்லை

மான்சியை காணவில்லை என்ற செய்தி சற்று நேரத்தில் வீடு முழுவதும் நெருப்பு போல் பரவ ஆளுக்கு ஒரு பக்கமாக சல்லடைப் போட்டு தேடினார்கள்....

எங்கேயும் அவள் இல்லையென்றதும் சத்யன் தன் நெற்றியில் அறைந்து கொண்டு கலங்கி தவித்தான்

வீட்டைவிட்டு வெளியே போயிருப்பாளோ என்ற நினைப்பில் வாட்ச்மேனை விசாரிக்க.... அவனோ மான்சி எங்கேயும் வெளியே போகவில்லை என்றான்
வீட்டில் இருந்த அனைவருக்கும் தீடிரென திகில் பற்றிக்கொள்ள...

மான்சி முத்துவைப் போல ஏதாவது செய்து கொண்டிருப்பாளோ என்ற சந்தேகம் வர அனைவரும் ஆளுக்கு ஒருபக்கமாக வீட்டைச்சுற்றி இருந்த கிணறு குட்டைகளில் தேட ஆரம்பித்தனர்

சத்யனுக்கு ஏதோ தோன்ற அவசரமாக மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு ஓடினான்... அங்கே அவன் கண்ட காட்சி அவன் இதயத்தை ஒருநிமிடம் செயழிழக்கச் செய்தது

மான்சி அங்கிருந்த தண்ணீர் டேங்க் பக்கத்தில் சரிந்து விழுந்து கிடக்க நேற்று பெய்த மழையில் அவள் உடை முழுவதும் நனைந்து... மழைநீர் வழிந்து அவள் காலடியில் ஒரு சிறு ஓடைபோல் ஓடிக்கொண்டிருந்தது

சத்யன் “அய்யோ மான்சி” என்று போட்ட கூச்சலில் வீட்டில் இருந்த மொத்தப் பேரும் மாடிக்கு வந்துவிட்டனர்

சுதாரித்த சத்யன் மான்சியின் இதயத்தில் காதை வைத்து கேட்க துடிப்பு பலமாக இருந்தது... அதன்பிறகுதான் சத்யனுக்கு நிம்மதியாக மூச்சே வந்தது...

உடனே அவளை கைகளில் வாரியெடுத்துக் கொண்டு படிகளில் தடதடவென இறங்கிய சத்யன் அவளை தன் அறைக்கு கொண்டு சென்று தன் படுக்கையில் கிடத்திவிட்டு... அவளுடைய ஈரமான உடைகளை மாற்றச் சொல்லி தன் அம்மாவிடம் கூறிவிட்டு வெளியே ஓடினான்




உள்ளுர் பெண் டாக்டர் ஒருவருக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்ன சத்யன் மறுபடியும் தன் அறைக்கு வர.... அதற்க்குள் அவளுக்கு உடைகளை மாற்றிவிட்டு ஒரு நைட்டியை அணிவித்திருக்க சத்யன் அவளருகில் உட்கார்ந்து அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்... அவள் கைகள் நெருப்பாக சுட்டது

மான்சி கிழிந்த நாராய் கட்டிலில் உயிரற்ற உடல் போல் அசையாது கிடந்தாள்.... சத்யனின் கண்கள் கலங்கியதுல.... எவ்வளவு அழகாக இந்த வீட்டுக்குள் காலடியெடுத்து வைச்சா இப்போ இப்படி கிடக்கிறாளே.... எல்லாம் என்னாலதான் என்று சத்யன் தன் முகத்தில் அறைந்து கொள்ள

சுந்தரமும் கலாவதியும் அவன் கைகளை பிடித்து கொண்டு கண்ணீருடன் “அவளுக்கு ஒன்னுமில்ல சத்யா நேத்து நடந்த பிரச்சனையால கொஞ்சம் அதிர்ச்சியாயிருக்கா அவ்வளவுதான் நீ பயப்படதடா” என்று கலாவதி அவனுக்கு ஆறுதல் கூற அப்போது டாக்டரை அழைத்துக்கொண்டு மாயன் உள்ளே வர

வந்த டாக்டர் “ நீங்கல்லாம் கொஞ்சம் வெளிய இருங்க” என்று சொல்லிவிட்டு மான்சியை பரிசோதித்தார்

சிறிதுநேரத்தில் வெளியே இருந்த அனைவரையும் உள்ளே அழைத்த டாக்டர் முதலில் கேட்க கேள்வி “ நீங்கல்லாம் மனுஷங்க தானா” என்றுதான்

“ என்ன டாக்டர் சொல்றீங்க மான்சிக்கு என்னாச்சு” என்று கலாவதி கலக்கத்துடன் கேட்க

“ என்ன ஆச்சா... ஏம்மா நீங்களும் ஒரு பெண் தானே... இந்தமாதிரி நிலைமையில இந்த பொண்ணை நீங்க இப்படி நடத்தலாம.. ரொம்ப பாதுகாப்பாக இருக்கனும்னு உங்களுக்கு தெரியாதாம்மா” என்று டாக்டர் கோபமாக கேட்க

“அவளுக்கு என்ன மாதிரி நிலைமை டாக்டர்... எங்களுக்கு ஒன்னுமே புரியலையே” என்று மறுபடியும் கலாவதி கேட்க

டாக்டர்க்கு மெதுவாக ஏதுவோ புரிவது போல் இருந்தது... ஓ இந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் இருக்கறவங்ககளுக்கு தெரியாது போல என்று புரிய

“ இந்த பொண்ணு கிட்டத்தட்ட நாலு மாசத்துக்கு மேல கர்ப்பமாக இருக்கா .... இது உங்க யாருக்கும் தெரியாதா” என்று கேட்க

அத்தனை பேரும் என்னது என்று திகைப்புடன் கேட்க... கலாவதி மகனை திரும்பி பார்க்க... அவன் முகம் சந்தோஷத்தில் பூரித்து போய் “எனக்கு எதுவும் தெரியாதும்மா” என்று உதட்டை பிதுக்கினான்

“என்னங்க இது அதிசயமா இருக்கு உங்க ஒய்ப் கர்ப்பமா இருக்கிற விஷயம் உங்களுக்கே தெரியாதுன்னு சொல்றீங்க” என்று டாக்டர் சத்யனை ஏளனமாக கேட்க... சத்யன் தலையை குனிந்து கொண்டான்

அப்போது மான்சியிடம் அசைவு தெரிய டாக்டர் அவளிடம் போய் “மான்சி இப்போ எப்படிம்மா இருக்கு” என்று அவள் கன்னத்தில் தட்டி கேட்க

“ம்ம்” என்ற மெல்லிய முனங்கல் மான்சியிடம் இருந்து வந்தது

“இங்க பாரு மான்சி கண் திறந்து என்னை பார்த்து நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்று டாக்டர் சொன்னதும் மான்சி தன் கண்களை திறந்தாள்

“ ம் வெரிகுட்... சரி மான்சி கடைசியா உனக்கு எப்ப பீரியட்ஸ் வந்ததுன்னு கரெக்டா சொல்லு” என டாக்டர் கேட்க

“ என் கல்யாணத்துக்கு பத்துநாள் முன்னாடி” என்று திக்கித்திணறியபடி மான்சி கூறினாள்

“அப்போ இப்ப நீ எத்தனை மாசம்னு உனக்கு தெரியுமா”

“ம் நாலு முடிஞ்சு ஐஞ்சாவது மாசம்” என்றாள் மான்சி

"அப்போ நீ கர்ப்பம் என்ற விஷயம் உனக்கு தெரியும் தானே" என்று டாக்டர் கேட்க

" ம்ம் தெரியும்" என மான்சி கூறியதும் ... டாக்டர் வேறு எதுவும் அவளிடம் கேட்காமல் கலாவதி அழைத்துக்கொண்டு வெளியே வர மற்றவர்களும் அவர்கள் பின்னாலேயே வந்தனர்

" இதோ பாருங்கம்மா அந்த பொண்ணு மனசுல என்ன பிரச்சனைன்னு தெரியலை தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்க எல்லார்கிட்டயும் மறச்சிருக்கா... ஆனா நீங்க அதை நெனைச்சு இப்போ சந்தோஷப்பட முடியாது ... ஏன்னா அவ இப்ப ரொம்ப வீக்கா இருக்கா... கடுமையான பீவர் வேற இருக்கு... இப்போ அவ இருக்கிற நிலைமையில் பவரான மருந்துகள் எதுவும் குடுக்க முடியாது.... அதனால அவங்களுக்கு அபார்ஷன் ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கு நீங்க அவங்களை ரொம்ப கவணமாக பாத்துக்கனும்.... இன்னிக்கு எப்படி இருக்குன்னு பார்த்திட்டு நாளைக்கு வேனா திருநெல்வேலி பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் ஏதாவது அவசரம்னா என்னோட நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வர்றேன் " என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்ப

அனைவரும் சந்தோஷப்படக்கூட முடியாமல் மான்சியின் அறைக்கு போனார்கள்... அவள் நன்றாக தூங்கிகொண்டு இருக்க

சத்யன் அவளைவிட்டு நகராமல் அன்று முழுவதும் பக்கத்திலேயே இருந்தான்...


அன்று இரவு சத்யன் ஒரு போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்துக்கொள்ள... மான்சி கட்டிலில் படுத்திருந்தாள் .... நள்ளிரவில் அவளிடம் இருந்து வேதனையான குரல் வர

சத்யன் சட்டென கண்விழித்து எழுந்து கட்டிலை நெருங்கி மான்சியை பார்க்க அவள் வயிற்றை கையால் பிடித்துக்கொண்டு கதறினாள்

"அய்யோ மான்சி என்ன பண்ணுது சொல்லு மான்சி" என்று சத்யன் கத்தி கேட்க

மான்சி புழுவாய் துடித்து அவன் பிடியில் இருந்து நழுவி கீழே விழுந்தாள்.... சத்யன் குனிந்து அவளை தூக்குவதற்குள் கீழே கிடந்த மான்சியின் கால்களுக்கு நடுவே இருந்து அவளுடைய உதிரம் வெள்ளமாய் பெருக்கெடுத்து வர ...

சத்யனுக்கு எல்லாம் புரிந்து போனது ... முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சு போச்சு ... தன் கைகளால் தன் முகத்தில் அறைந்து கொண்டு கூக்குரலிட்டு ஓவென்று சத்யன் கத்த அத்தனை பேரும் அங்கே கூடிவிட்டனர்

சத்யன் போட்ட கூச்சலில் அனைவரும் தூக்கம் கலைந்து ஓடிவர .... கலாவதி மான்சியின் நிலையை பார்த்துவிட்டு அய்யோ என கண்ணீர் விட்டு அழுதுகொண்டே அவசரமாக ஆண்களை வெளியே போகச்சொல்ல.... எல்லோரும் வெளியே போக சத்யன் மட்டும் அங்கேயே இருந்தான்

“ சத்யா கொஞ்சம் வெளிய போப்பா” என்று கலாவதி சொல்ல

“ ம்ஹூம் நான் மான்சிய விட்டு எங்கயும் போகமாட்டேன்” என்று பிடிவாதமான குரலில் கூறிய சத்யன் மான்சியின் அருகில் அமர்ந்து அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் கன்னத்தை தட்டி

“மான்சி இங்க பாரும்மா கண்ணைத்திறந்து என்னை பாரு மான்சி” என்று கதறியபடி அழைக்க

மான்சி வெகு சிரமப்பட்டு கண்களை திறந்து சத்யனை பார்த்து “ எல்லாமே போச்சா... இப்போ என் வயித்துல எதுவுமே இல்லை தானே” என்று தடுமாறியபடி மிக மெல்லிய குரலில் கூற

சத்யனுக்கு என்ன பதில் சொல்வது புரியாமல் குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை வைத்து அவளை தன் மார்போடு அணைத்து கண்ணீர் விட்டான்
கலாவதி இருவரையும் பார்த்து கலங்கி சத்யனின் தோளில் கைவைத்து

“அவளை விடு சத்யா சுத்தம் பண்ணிட்டு மொதல்ல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்” என்றதும்

சத்யன் ஆவேசமாக “ம்ஹூம் நான் இங்கேயே இருக்கேன் நீங்க சுத்தம் பண்ணுங்க இவ என் பொண்டாட்டி தான நான் இங்கதான் இருப்பேன்” என்று சத்யன் பைத்தியக்காரனைப் போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல

கலாவுக்கு தன் மகனைப் பார்த்து ‘இவனுக்கு புத்தி பேதலிச்சு போச்சா’ என்று நினைத்து “டேய் சத்யா சொல்றதை கேளுடா இன்னும் கொஞ்ச நேரத்தில் மான்சிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலைன்னா ரொம்ப ஆபத்துடா” என்று கெஞ்சியவள் “மாயா இங்கவா” என்று வெளியே பார்த்து குரல் கொடுக்க

மாயன் உடனே உள்ளே வந்தான்.... “மாயா சத்யனை வெளியே கூட்டிட்டு போ... அப்படியே நம்ம அன்னம்மா கிட்ட உடனே வெந்நீர் வச்சு எடுத்துட்டு வரச்சொல்லு” என்று உத்தரவிட்ட கலாவதி

சத்யனின் மடியில் இருந்த மான்சியின் தலையை வலுக்கட்டாயமாக பிடுங்க... மாயன் சத்யனின் தோளைப் பற்றி தூக்கினான்

சத்யனை ரொம்ப சிரமப்பட்டு தூக்கிய மாயன் “வாங்கய்யா வெளிய போகலாம்.. நம்ம சின்னம்மாவுக்கு நல்லாயிரும் நீங்க பயப்படாம வாங்கய்யா” என்று சத்யனை வெளியே தள்ளிக்கொண்டு போனான்

“இல்ல மாயா அவளுக்கு இந்த நிலைமை வந்ததுக்கு காரணமே நான்தான் மாயா... ஆனா நான் நல்லாதானே இருக்கேன்... அவளுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தெரியலை” என்று என்னவோ அவன் பிரச்சனைக்கு மாயனுக்கு விடை தெரியும் என்பதுபோல் மாயனின் முகத்தை பார்த்தபடி சத்யன் கேட்க

மாயனுக்கு சத்யனை பார்க்க பரிதாபமாக இருந்தது ச்சே எப்படி தலை நிமிர்ந்து திமிராக நடப்பவன் ஒரே நாள்ல பைத்தியக்காரன் போல ஆயிட்டானே என்று மாயன் வருந்தினான்

சிறிதுநேரத்தில் மான்சியை இரண்டு பெண்கள் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வர.. சத்யன் வேகமாக மான்சியின் அருகே போய் அவளை தன் கைகளில் தூக்கிகொண்டு காருக்கு போனான்

சத்யனுக்கு மான்சி நிலைமை ரொம்ப மோசமாக இருப்பது போல் இருந்தது... மாயனை காரை ஓட்டச்சொல்லி விட்டு இவன் பின் சீட்டில் உட்கார்ந்து மான்சியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான்

மான்சியின் முகம் ரத்தப்பசையற்று வெளுத்து போயிருக்க... சுத்தமாக நினைவற்று கிடந்தாள்....

சத்யன் காரில் கலாவதி பின்புறம் சத்யனுடன் ஏறிக்கொள்ள... சுந்தரம் முன்னே மாயனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தார்... கார் கிளம்பி வேகமெடுக்க... சத்யன் மான்சியின் உடல் குலுங்காமல் அவள் இடுப்புக்கு அடியில் கைவிட்டு அவளை ஒருக்களித்தவாறு திருப்பி தன் வயிற்றோடு அணைத்துக்கொள்ள... கலாவதி மான்சியின் கால்களை தன் மடியில் வைத்துக்கொண்டாள்


கார் படுவேகமாக திருநெல்வேலியை நோக்கி போக... சத்யன் மான்சியின் இடுப்பில் இருந்த தனது கையில் ஈரமாது போல் இருக்க... வெளிச்சத்தில் கையைப் பார்த்வன் “அம்மா இங்க பாருங்களேன்” என்று அலற... கலாவதி அவன் கையை பார்த்தாள்

சத்யன் கையெல்லாம் மான்சியின் உதிரம் வழிந்தது... எந்த கைகளில் அவன் குழந்தை தவழ வேண்டுமோ அந்த கைகளில் அவன் குழந்தை கரைந்து உதிரமாய் வழிந்தது...

“ஒன்னுமில்ல சத்யா பயப்படாதே இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போயிரலாம்” என்று குழந்தைக்கு சொல்வதுபோல் சத்யனுக்கு சொன்னாள்


மருத்துவமனையின் வாசலில் கார் நின்றதும் சத்யன் ஸ்ட்ரச்சர் வருவதற்கு முன்பே மான்சியை கைகளில் ஏந்திக்கொண்டு உள்ளே ஓடிய சத்யனை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர்

மான்சியை மருத்துவமனையில் அனுமதித்த சத்யன் அங்கேயே தவம் கிடந்தான்... ஒரு மருத்துவக்குழுவே மான்சியை கவணிக்க... அதிக உதிரப்போக்கு ஏற்ப்பட்டதால்... அவளுக்கு நிறைய ரத்தம் தேவைப்பட்டது....

ரத்தவங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரத்தம் மான்சிக்கு செலுத்தப்பட்டது
மான்சிக்கு நினைவுதிரும்பவே ஐந்துநாள் ஆனது...
அதுவரைக்கும் சத்யன் வீட்டுக்கே போகாமல் அவளருகிலேயே இருந்தான்.... மான்சியின் நிலைமை அண்ணாமலைக்கு தெரிவிக்கபட்டு அவரும் ராணியும் அங்கே வந்துவிட்டனர்

மான்சி தனது கால்களால் நடந்து வீட்டுக்கு வர பதினைந்து நாள் ஆனது.... சத்யன் தனது கட்டிலில் மான்சியை படுக்கச் சொல்ல..... அவள் தனது அறையிலேயே தங்கிக்கொள்வதாக கூறி மறுத்துவிட்டாள்

சத்யன் இப்போதெல்லாம் அதிகநேரம் வீட்டில் இருந்தான்... மான்சி எங்கே போனாலும் அவளை பின்தொடர்ந்தான்...
எப்படித்தான் அவளை தொடர்ந்து சென்றாலும் அவள் இவனை கவணிக்கவில்லை...
விரக்த்தியின் உச்சத்தில் இருப்பவள் போல் சூன்யத்தை வெறித்தபடி உட்கார்ந்திருப்பாள்
அவளின் அந்த ஜீவனிழந்த கண்களை பார்த்து சத்யன் ரொம்ப வேதனைபட்டான்....
அவள் தன்னை சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்துகிறாள் என்று நினைத்தான்....
அந்த அலட்சியத்தின் காரணமும் அவனுக்கு புரிந்தது,,,, அவளுக்கு இப்போது என்ன தேவை என்பதும் அவனுக்கு புரிந்தது

அன்று இரவு சத்யன் தனது பீரோவில் தேடி அண்ணாமலை கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கு போனான்...

மான்சி தூங்காமல் பால்கனியில் இருந்த சோபாவில் உட்கார்ந்து இருட்டை வெறித்துக்கொண்டு இருக்க

சத்யன் அவளருகே போய் “மான்சி” என்று அழைக்க....

திடீரென கேட்ட குரலால் திடுக்கிட்டு திரும்பிய மான்சி சத்யனைப் பார்த்ததம் சோபாவில் இருந்து எழுந்தாள்

“பரவாயில்லை மான்சி உட்காரு” என்று சத்யன் சொல்ல




அவன் சொன்னது காதில் விழாதது போல் மான்சி நின்றுகொண்டே இருந்தாள்.... காரணம் அங்கே ஒரு இருக்கைதான் இருந்தது... அதில் அவள் உட்கார்ந்தால் சத்யன் எங்கே உட்காருவான் என்ற எண்ணம்தான்

அதை புரிந்துகொண்ட சத்யன் “மான்சி நான் உன்கூட கொஞ்சம் பேசனும் ள்ள போய் பேசலாமா.... ஏன்னா இதுக்கு கீழே அப்பாவோட ரூம் இருக்கு நாம பேசறது அப்படியே கேட்க்கும் அதனாலதான் சொல்றேன்” என்ற சத்யன் அவளின் பதிலுக்காக காத்திருக்க

சிறிதுநேர அமைதிக்கு பிறகு “என்கிட்ட உங்களுக்கு பேசறதுக்கு என்ன இருக்கு” என்றாள் மான்சி

பழைய சத்யனாக இருந்திருந்தால் இன்னேரம் என்னடி திமிரா என்று எகிறியிருப்பான் ஆனால் இப்போது இருக்கும் சத்யனுக்கு அவள் வார்த்தை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை

அமைதியாக அவள் முகத்தையே பார்த்த சத்யன் தன் கையில் வைத்திருந்த கவரை அவள் முன் நீட்டி “இது விஷயமா பேசனும் மான்சி” என்று சொல்ல

அவள் அந்த கவரை உற்று பார்த்துவிட்டு எந்த அதிர்வும் இல்லாமல் “ ம் பேசலாம்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு உள்ளே போனாள்

அவளை பின் தொடர்ந்த சத்யன் அவள் கட்டிலில் உட்கார இவன் அங்கிருந்த ஒரு சேரை இழுத்து அவள் எதிரில் போட்டு உட்கார்ந்தான்



No comments:

Post a Comment