Friday, March 20, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 10

சத்யனுக்கு மான்சி சொன்னது மண்டையில் ஏற சிறிதுநேரம் ஆனது ... அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும் சத்யன் முகம் பளிச்சென்று மின்ன ... சந்தோஷமாக “மான்சி உன்மையாவா ” என்று கூவி அவளை விலக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்க்க

அவ்வளவு நேரமாக கதறியழுத மான்சி.... சத்யன் சந்தோஷமாக அவள் முகத்தைப் பார்க்கவும்... சட்டென அவள் முகம் வெட்கச் சிவப்பை பூசிக்கொள்ள... தலைகுனிந்து ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்



சந்தோஷத்தில் அவளின் பின்புறத்தில் கைகொடுத்து அவளை தரையைவிட்டு ஒருஅடி உயரே தூக்கிய சத்யன்... அவளின் வயிற்றில் தன் முகத்தை பதித்து புடவைக்கு மேலே பப்ச்க் என்று சத்தமாக முத்தமிட...

மான்சி கூச்சத்துடன் நெளிந்து அவன் தலைமுடியை பற்றிக்கொண்டு “ ஸ் இறக்கிவிடுங்க.. இவ்வளவு உயரத்தில தூக்கறது ... எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்று கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு கீழே இறங்க முயற்ச்சித்தாள்

அவளை கீழே இறக்கிவிட்டு மூச்சுமுட்ட இறுக்கி அணைத்த சத்யன்.... உடனே விடுவித்துவிட்டு “ஸாரி ரொம்ப இறுக்கி அணைச்சுட்டேன்... மானு இப்படி இறுக்கினா உள்ள பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல” என்று அப்பாவிப் போல கேட்க

மான்சி எதுவும் சொல்லாமல் வெட்கத்துடன் ஓடி கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொள்ள... சத்யன் அவள் பின்னாலேயே போய் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் பக்கமாக புரட்டி திருப்பியவன்

“ ஏன் மான்சி இதை என்கிட்ட மொதல்லயே சொல்லலை”என்று சத்யன் அன்புடன் கேட்க

அவன் புரட்டியதில் மல்லாந்து படுத்த மான்சி “ ஆமா வெளிய சொல்லி சந்தோஷப்படுற மாதிரியா அய்யாவோட வாரிசு உருவாகியிருக்கு... விஷயம் தெரிஞ்சதில் இருந்து நானே பயத்தில் செத்துகிட்டு இருக்கேன் “ என்று மான்சி சத்யனுப் பார்த்து பயந்த குரலில் கூறினாள்

அவள் முகத்தையே உற்று பார்த்த சத்யன் “அதனாலதான் உன் உயிர் போய்டக்கூடாதுன்னு... வயித்திலேயே என் பிள்ளையை கொன்னுடலாம்னு முடிவு பண்ணியா மான்சி” என்று இறுகிய முகத்துடன் கரகரத்த குரலில் சத்யன் தீர்கமாக கேட்க

இவ்வளவு நேரம் தலைக்கு மேலே தூக்கி வச்சு கொண்டானவன் சட்டென மாறிவிட்டது மான்சி வயிற்றில் திக்கென்று ஒரு பயத்தை உண்டாக்கியது ... அவன் முகத்தை கலவரமாக பார்த்தப்படி சட்டென எழுந்து உட்கார்ந்தாள்

“ சொல்லு மான்சி ஏன் என்னோட குழந்தையை கருவிலேயே அழிக்கனும்னு நெனைச்ச... நான் எதை வேனும்னாலும் தாங்குவேன் மான்சி... ஆனா இதை என்னால ஜீரணிக்கவே முடியலை”... என சத்யன் ரொம்ப கவணமாக அவளைத் தொடாமல் இறுக்கத்துடன் கேட்க

அவன் முகமும்... தொடாமல் விலகி அமர்ந்திருந்த விதமும் மான்சியின் பயத்தை அதிகப்படுத்த... நடுங்கும் குரலில் “ இல்ல நான் ரெண்டுநாளா யோசிச்சுதான் இந்த முடிவெடுத்தேன்”.என்று மெல்லிய குரலில் கூற
சத்யன் எதுவும் பேசாமல் ‘எனக்கு இந்த பதில் போதாது’ என்பதுபோல் அவளை நம்பாமல் பார்த்தான்

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று புரியாமல் பார்த்த மான்சி .. அவனை சற்று நெருங்கி ... “ இந்த முடிவை எடுக்க நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா... எனக்கு கொஞ்சங்கூட இஷ்டமில்ல சத்யா” என அவனை சமாதானப்படுத்தும் விதமாக மான்சி சலுகையாய் அவன் மீது சாய்ந்து கொண்டு சொல்ல
சத்யன் அதற்கும் அசைந்து கொடுக்காமல் அவளை விலக்கிவிட்டு எழுந்து நின்று “இது எனக்கு நீ செய்ற துரோகம்னு உனக்கு புரியலையா மான்சி... இல்ல இவன் பிள்ளைக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்னு வந்த அலட்சியமா..?... என்று சத்யன் விடாமல் கேட்டான்

அவன் முகத்தையே பார்த்த மான்சி “ இதோ பாருங்க சத்யன் நீ என் மேல எவ்வளவு அன்பு வச்சுருக்கீங்கன்னு எனக்கு தெரியாது... ஆனா நான் என் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்தது என்னிக்குன்னா... அது உங்களோட இருந்த அந்த ஒருநாள்தான்... இதை நீங்க நம்பனும் சத்யன்” என்று மான்சி கவலையுடன் சொன்னாள்

சத்யன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு “ நான் கேட்டதுக்கு பதில் இது கிடையாது மான்சி” என்றான்


எதைச்சொன்னாலும் இவன் நம்பமாட்டான் என்று உணர்ந்த மான்சி சிறிதுநேரம் அமைதிக்கு பிறகு... அங்கிருந்த மாத்திரை கவரை எடுத்து வந்து சத்யன் கையில் தினித்தாள்

கொஞ்சநேரத்துக்கு முன்னே இந்த மாத்திரையை பத்தி மெடிக்கல் ஷாப்ல விசாரிக்கப் போறேன்னு சொன்னீங்களே.. அதை இப்போ போய் விசாரிங்க” என கோபமாகக் கூறினாள்

சத்யன் கையிலிருந்த மாத்திரை கவரையும் அவளை மாறிமாறிப் பார்த்துவிட்டு “ நீ சொல்றது எனக்கு புரியலை மான்சி இது என்ன மாத்திரை ” என்று தனிந்து போய் கேட்க

“ ம் கருவை கலைக்கிற மாத்திரைதான்... ஆனா என்னோட நாள் கணக்குக்கு ரெண்டு மாத்திரை போட்டா போதும்னு மெடிக்கல்ல சொன்னாங்க... ஆனா நான் நாலு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்கி மொத்தம் முப்பது மாத்திரை வாங்கினேன்” என்று மான்சி வேகத்தோடு சொல்ல

சற்று அதிர்ந்த சத்யன் அவளை நெருங்கி “ஏன் மான்சி முப்பது மாத்திரை வாங்கின” என்று கலக்கத்துடன் கேட்டான்

“ ம் மொத்தத்தையும் தின்னுட்டு உங்க குழந்தையோட சேர்த்து என் உயிரும் போயிடனும்னு தான் முப்பது மாத்திரை வாங்கினேன்”என்று மான்சி கூறினாள் .. அவன் தன்னை நம்பாத கோபம் அவள் குரலில் தெரிந்தது

சத்யனுக்கு அவள் வார்த்தைகளின் வீரியம் புரிய அவளை இழுத்து தன்னோடு நெருக்கியவன் “ அதுதான் ஏன் மான்சி அப்படி நடக்கனும்... எனக்கு ஒரு வார்த்தை நீ தகவல் சொல்லியிருக்கலாம் ... நான் எப்படியாவது அங்கிள்கிட்ட பேசி சமாளிச்சிருப்பேன்” என்று அவள் காதில் தன் உதடுகளை வைத்து உரசிக்கொண்டே சொன்னான்

“ எப்படி சொல்லச்சொல்றீங்க... எதை சமாளிப்பீங்க சத்யன்... என் அப்பா உங்களை எவ்வளவு உயர்வா நெனைச்சிருக்கார் தெரியுமா... உங்க மேல ரொம்ப மரியாதையும் அன்பும் வச்சிருக்கார் சத்யன்... அவருக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா உங்களை பத்தி எவ்வளவு கேவலமா நெனைப்பாரோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என கூறிய மான்சி அவன் மார்பில் தன் முகத்தை அழுத்திக்கொண்டாள்

சத்யனுக்கு பட்டென மூளையில் ஏதோ மின்னலடிக்க அவளை விலக்கி கட்டிலில் உட்காரவைத்துவிட்டு தானும் அவள் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிக்கொண்டு

“ மான்சி எனக்கு இப்போ ஒரு விஷயம் தெளிவா புரியனும்... உனக்கு என்கூட சேர்ந்து வாழ்றதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ... ஆனா உன் அப்பா என்னை தவறா நெனைப்பார் ... மரியாதையின்றி ஏதாவது பேசுவார்னுதான் பயப்படுறியா.. அதுக்குத்தான் என்னைவிட்டு விலகி விலகி போனியா மான்சி” என்று தவிப்புடன் சத்யன் கேட்க

மான்சிக்கு அவன் தவிப்பு புரிந்திருக்க வேண்டும்... அவன் கைகளுக்குள் இருந்த தன் கையை எடுத்து அவனுடைய கத்தை மீசையை பிடித்து இழுத்து அவன் உதட்டில் தன் இதழ்களை பதித்துவிட்டு உடனே விலகி

“ பின்னே தன்னோட அப்பா எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தன்னுடைய புருஷனை பத்தி ஏதாவது தரக்குறைவா பேசினா எந்த பொண்ணுதான் பொறுத்துக்குவா சொல்லுங்க... நான் மட்டும் எப்படி பொறுத்துக்குவேன் சத்யன்” என்று குரலில் குறும்பு கொப்பளிக்க மான்சி கூறியதும்

அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யன் காதில் வீணையின் நாதம் போல ஒலித்தது.... சத்யனுக்கு இந்த பிரபஞ்சமே தன் காலடியில் இருப்பது போல இருந்தது... தனக்காக மட்டுமே உலகம் உருவானது போல் இருந்தது…. அந்த நிலவை தன் கைகளில் ஏந்தியிருப்பது போல உள்ளம் பூரித்தது

சட்டென அவளை படுக்கையில் தள்ளி அவள்மீது படர்ந்த சத்யன் அவள் முகமெல்லாம் தன் உதட்டால் முத்த கவிதை எழுதினான்.... தன் பற்களால் மென்மையாக அவள் கன்னத்து சதைகளை கடித்து பற்த் தடங்களால் ஓவியம் வரைந்தான் ... தன் நாக்கால் அந்த ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினான்

“ ச்சு என்ன இது மூஞ்சி பூராவும் எச்சியாக்கிட்டீங்க... மொதல்ல வெளியே போய் உங்க மாமனாரை சமாதானப்படுத்துங்க... அப்புறமா வந்து என் முகமெல்லாம் நக்கி நக்கி முத்தம் குடுப்பீங்க” என்று கூறிய மான்சி சத்யனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்

ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு எழுந்த சத்யன் “ ம் இந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்டி மான்சி இந்த உலகத்தையே உன் காலடியில் கொண்டுவந்து வைப்பேன்” என்றவன் அவளை கைகொடுத்து எழுப்பினான்

எழுந்து நின்றவளின் வயிற்றில் குனிந்து முத்தமிட்டு விட்டு... பிறகு அவளின் வலதுகையை பற்றிக்கொண்டு “ சரி வா மான்சி போகலாம்” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக வெளியே போனான்

வெளியே பரணி அமைதியாக சோபாவில் உட்கார்ந்திருக்க ... காஞ்சனா அவர் காலடியில் அமர்ந்திருந்தாள் ... சைந்தவி அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் சத்யனை பார்த்ததும் ஓடிவந்து அவன் காலை கட்டிக்கொள்ள... சத்யன் குனிந்து குழந்தையை தூக்கி முத்தமிட்டு மறுபடியும் கீழே இறக்கிவிட்டான்

பிறகு மான்சி கையைப் பிடித்துக்கொண்டு பரணியின் கால்களில் விழுந்தான் சத்யன்... இவனின் இந்த தடாலடி செயலால் பதறிப்போன பரணியும் காஞ்சனாவும் வேகமாக எழுந்தனர்



“ சத்யன் என்ன இது மொதல்ல எழுந்திருங்க” என்று பரணி குனிந்து சத்யனை தூக்க... அப்போதுதான் தன் மகளும் தனது காலடியில் கிடப்பதை உணர்ந்து சத்யனை தூக்காமலேயே நிமிர்ந்தார்

“ எழுந்திருங்க சத்யன்.. எழுந்து என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க” என்று பரணி கண்டிப்பான குரலில் கூற

சத்யன் அமைதியாக எழுந்து மான்சியையும் எழுப்பி தன் பிடியில் வைத்துக்கொண்டு பரணியை பார்த்து “ அங்கிள் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் விரும்பறோம் ... மேரேஜ் பண்ணிக்க ஆசைபடுறோம் ... நான் மான்சியையும் சைந்தவியையும் நல்லபடியா பார்த்துக்குவேன் அங்கிள்... மான்சிய என்கிட்ட குடுத்துடுங்க” என்று சத்யன் நிதானமாக ..தைரியமாக அவர் முகத்தை நேருக்குநேர் பார்த்துக் கேட்டான்

பரணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ... காஞ்சனாவின் முகத்தில் டியூப்லைட் போட்டது போல் பளிச்சென்று ஆனது

“ என்னங்க அமைதியா இருக்கீங்க அவர்தான் கேட்கிறார் இல்ல.. சரின்னு சொல்லுங்க” என்று தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகும் சந்தோஷத்தில் ஒரு தாயாய் காஞ்சனா கேட்க

பரணி சத்யனை நேராக பார்த்து “ நீங்க மான்சிகிட்ட பேசனும் நீங்க கொஞ்சம் வெளிய போங்கன்னு சொன்னப்பவே...இப்படித்தான் இருக்கும்னு நான் யூகிச்சேன் சத்யன்... எனக்கு இதுல எந்த அப்ஜெக்ஷன்னும் இல்ல சந்தோஷம்தான் சத்யன்.... என் மகளுக்கு மறுபடியும் ஒரு வாழ்க்கை அமைவதில் எனக்கு ரொம்ப விருப்பம்தான்... ஆனா நீங்க கிராமத்து ஆள் ... இப்படியொரு விதவையை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்ல சம்மதிப்பார்களா... அவங்ககிட்ட பேசிட்டு வாங்க சத்யன்... உடனே மத்த ஏற்பாடுகளை செய்யலாம்” என பரணி கூறியதும்

சத்யன் சிறிது நேரம் தலைகுனிந்து நின்றிருந்தான் பிறகு நிமிர்ந்து அவரை பார்க்காமல் சற்று திரும்பி “ எனக்கு சொந்தம் என் மாமா பரமனும் என் தங்கச்சி சங்கீதாவும்தான் இவங்க ரெண்டு பேரும் இதுக்கு நிச்சயமா சம்மதிப்பாங்க ... ஆனா அவங்ககிட்ட எல்லாம் நான் சம்மதம் கேட்கும் நிலையில் இப்போ இல்லை... இந்த கல்யாணம் இன்னும் ரெண்டு மூணுநாள்ல நடந்தாகனும் அங்கிள்” என்று சத்யன் சொன்னதும்

“ ஏன் அவ்வளவு அவசரம் சத்யன்” என்று பரணி வேகமாக கேட்க

சத்யன் ரொம்பவே தடுமாறி பிறகு சமாளித்து நிமிர்ந்து “ நீங்க கட்டாக் போயிருந்தப்ப நாங்க ரெண்டுபேரும் ஒருநாள் சேர்ந்து வாழ்ந்துட்டம் அங்கிள்... இதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தான் ரெண்டுபேரும் தவிச்சுக்கிட்டிருந்தோம் ... ஆனா இப்போ சொல்லியே ஆகவேண்டிய நிலைமை” என்று சத்யன் தயங்கி நிறுத்திவிட்டு மான்சியை பார்க்க



அவள் தன் வாயை பொத்திக்கொண்டு குமுறியபடியே தன் அறைக்கு போக திரும்பினாள்... சத்யன் அவளை நகரவிடாமல் தடுத்து அவள் கைகளை பிடித்துக்கொண்டு “இரு மான்சி நான் பேசிக்கிறேன் நீ பயப்படாதே” என்று அவளை சமாதானப்படுத்தியவன்

பரணியிடம் திரும்பி “ அங்கிள் அன்னிக்கு நடந்த எங்களோட உறவால் மான்சி வயித்துல என் குழந்தை உருவாகியிருக்கு.... இப்போ மான்சி கர்ப்பமா இருக்கா அங்கிள் அதனால உடனடியா எங்க கல்யாணத்தை முடிக்கனும்” என்றவன்

அவரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “ தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கனும் அங்கிள் ... இதில் மான்சி மேல எந்த தப்பும் இல்ல .. நான்தான் அவளோட பலகீனத்தை பயன்படுத்தி தவறா நடந்துகிட்டேன்” என்று சத்யன் வேண்டுதலாக கெஞ்சிக்கொண்டிருக்க

“ இல்லே இல்லேப்பா அவர் மேல மட்டும் தப்பில்ல... நானும்தான் அதுக்கு சம்மதிச்சேன்.. அவர் எதுவும் சொல்லாதீங்கப்பா “ என்று கதறியபடி மான்சி தன் அப்பாவின் கால்களில் விழுந்தாள் ... 



No comments:

Post a Comment