Tuesday, March 17, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 4

அன்று இரவு எட்டு மணிக்கு பரணியும் சைந்தவியும் சத்யன் பிளாட்டுக்கு வர... சத்யன் சைந்தவியை தன் கையில் வாங்கிகொண்டு “வாங்க அங்கிள்” என்று உள்ளே போனான்

சைந்தவியை ஒரு சேரில் உட்காரவைத்து விட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்து சவியின் முகத்தை அவுட்லைனாக வரைந்து அதில் பென்சிலாலேயே வண்ணம் தீட்டி சைந்தவியிடம் கொடுக்க

அவள் அதை வாங்கி பார்த்துவிட்டு “ என்ன அங்கிள் இதுதானா நான் ஒரே கறுப்பா இருக்கேனே” என்று சினுங்க

“இல்லடா செல்லம் அங்கிள் நாளைக்கு உன்னை அழகா வரைஞ்சு தர்றேன் இன்னிக்கு அங்கிளுக்கு நிறைய வேலையிருக்கு சரியா” என்று சத்யன் குழந்தையை சமாதானப்படுத்தினான்

பரணி எழுந்துவந்து சைந்தவியை தூக்கிக்கொண்டு “சரி சத்யன் நீங்க உங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க நாங்க கிளம்புறோம்” என்று வாசலை நோக்கி போனவர் மறுபடியும் வந்து

“என்ன சத்யன் ரொம்ப டல்லா இருக்கீங்க இன்னிக்கு நிறைய ஒர்க்கா” என அன்புடன் விசாரிக்க



“ ஒர்க் அதிகம் இல்ல அங்கிள் ஆனா ஈவினிங்ல இருந்து ஒரே தலைவலி அதான்” என்று சத்யன் நெற்றியை தடவிக்கொண்டே கூற

“ஏதாவது சாப்பிட்டீங்களா சத்யன்.. இல்ல என் வீட்ல இருந்து எடுத்துட்டு வரவா” என பரணி வற்புறுத்தி கேட்க

“ அதெல்லாம் வேண்டாம் அங்கிள்.. ஹோட்டல்ல இருந்து டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சத்யன் மறுத்ததும்

“சரி சத்யன் நீங்க சாப்பிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க நான் கலையில பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு பரணி சவியுடன் வெளியேறினார்

சத்யனுக்கு தலைவலி அதிகமாக வாங்கி வந்த டிபனை சாப்பிடாமலே படுத்துவிட்டான்

மறுநாள் காலை ஒன்பது மணிவரை சத்யனை வீட்டைவிட்டு வெளியே வர காணாமல் பரணி சத்யன் வீட்டு கதவை தட்டினார்

வெகுநேரம் கழித்து சத்யன் வந்து கதவை திறந்து விட்டு “வாங்க அங்கிள்” என்று அழைத்துவிட்டு திரும்பி போக

“ என்ன சத்யன் இப்பதான் எழுந்திருச்சீங்களா.. ஆபிஸ் போகலையா உடம்பு எதுவும் சரியில்லையா” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க

சத்யன் சோர்வுடன் சோபாவில் விழுந்து “ ஆமா அங்கிள் நைட்டெல்லாம் ஒரே பீவர்... மாத்திரை எடுத்துகிட்டும் சரியாகளை அங்கிள்” என நலிந்த குரலில் கூற

“என்ன சத்யன் நீங்க ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல.. நான் உடனே வந்திருப்பேன்” என்ற பரணி வேகமாக வந்து சத்யன் நெற்றியில் கைவைத்து பார்த்தார்

சத்யனின் நெற்றி நெருப்பாய் சுட பரணி சட்டென்று கையை எடுத்துவிட்டு “வாங்க சத்யன் ஆஸ்பிட்டல் போகலாம்” என்றவர்

அவன் கையைப் பற்றி தூக்கியவர் மறுபடியும் கையை விட்டுவிட்டு அவன் முகத்தை உற்று பார்த்தார்

“சத்யன் உங்களுக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருக்குன்னு நெனைக்கிறேன்.. முகமெல்லாம் ஒருமாதிரியா இருக்கு... கொஞ்சம் இருங்க நான் என் ஒய்பை கூட்டிட்டு வர்றேன்” என்று அவசரமாக பரணி வெளியே ஓடினார்

தன் முகத்தை கையால் தடவிப்பார்த்த சத்யன் எந்த மாற்றமும் தெரியாமல் போக அப்படியே சோர்வாய் சோபாவிலேயே படுத்துக்கொண்டான்

சிறிதுநேரத்தில் பரணியும் அவர் மனைவி காஞ்சனாவும் வந்து சத்யனை பார்த்தனர்

“ஆமாங்க அம்மைதான் போட்டுருக்கு ஆனா சின்னம்மைதான் ஒருவாரம் பத்துநாள்ல சரியாயிடும்... நீங்க போய் நம்ம வீட்ல இருந்து நல்லா சலவை பண்ணதா உங்க வேட்டி ரெண்டு எடுத்துட்டு வாங்க... நான் இவரு படுக்க ஏற்பாடு பண்றேன்” என காஞ்சனா வேகமாக கூற

பரணி உடனே தன் வீட்டுக்கு போய் இரண்டு வேட்டியை எடுத்துக்கொண்டு வர அதில் ஒன்றை சத்யனை இடுப்பில் கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு ... மற்றொன்றை தரையில் விரித்து படுக்க வைத்தனர்

“ நீங்க போன் பண்ணி உங்க ஆபிஸ்க்கு லீவு சொல்லிட்டு இங்கேயே இவரை பார்த்துக்கங்க.. அப்படியே வாட்ச்மேன் கிட்ட சொல்லி கொஞ்சம் வேப்பிலை எடுத்துட்டு வரச்சொல்லுங்க... நான் போய் இவருக்கு சாப்பிட கஞ்சி வச்சு எடுத்துட்டு வர்றேன்” என்று காஞ்சனா வெளியே போக

தரையில் வேட்டியை விரித்து படுத்திருந்த சத்யன் “ என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம் சார்” என்று சோகமாய் முறுவலிக்க

"என்ன சத்யன் இப்படி சொல்றீங்க எனக்கு ஒன்னுன்னா நீங்க பாத்துக்க மாட்டிங்களா" என்ற பரணி தன் செல்லை எடுத்து உயிர்பித்து தனது அலுவலகத்தை தொடர்புகொண்டு தனது விடுமுறையை கூறிவிட்டு ... மறுபடியும் கால் செய்து கீழே இருந்த வாட்ச்மேனிடம் கொஞ்சம் வேப்பிலை எடுத்து வருமாறு கூறினார்

சத்யனுக்கு பரணீதரனை பார்க்கும்போது தனது தாயாரே மறு உருவில் வந்தது போல் இருந்தது


" தன் மனதை என்னிடம் திறந்துக் காட்டுபவனை நான் அன்புடன் பார்கிறேன்...

" தன்னுடைய கனவுகளை திறந்துக் காட்டுபவனை நான் மதிப்புடன் பார்க்கிறேன்...

" அதே நேரத்தில் என்னைக் கவனிப்பவன் முன்னால் நான் எதற்கு வெட்கப்படுகிறேன் ...

கலீல் ஜீப்ரான் 

சத்யன் தனது ஆபிஸ்க்கு போன் செய்து தன் நிலைமையை சொல்ல .... அவர்கள் எல்லாவற்றையும் தாங்களே பார்த்து கொள்வதாகவும் அவனை நன்றாக ஓய்வெடுக்கம் படி கூறினர்

வாட்ச்மேன் வேப்பிலை எடுத்து வர அதை சத்யனின் தலைக்கு அடியில் வைத்தார் பரணி... சத்யனின் சிவந்த முகம் இப்போது ரத்தச்சிவப்பாக மாறியிருந்தது.... கண்களை முடிக்கொண்டு படுத்திருந்தான் சத்யன்

காஞ்சனா சத்யனுக்கு கஞ்சி வைத்து எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்தாள் அவளுடன் பரணியும் சேர்ந்து எல்லாவற்றையும் சுத்தமாக்கி ஒதுங்க வைத்தார் ...

அதையெல்லாம் பார்த்து சத்யனுக்கு சங்கடமாக இருந்தது “ அய்யோ அங்கிள் நீங்க ஏன் அதையெல்லாம் பண்றீங்க இன்னும் கொஞ்சநேரத்தில் வேலைக்காரம்மா வந்துடுவாங்க ஆன்ட்டி” என்று சத்யன் மெதுவான குரலில் கூற

அவன் கூறியதை காதில் வாங்காமல் தம்பதிகள் இருவரும் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கைகால்களை கழுவிக்கொண்டு வந்தனர்..

பரணி கஞ்சியை எடுத்துவந்து சத்யன் முன்னால் வைக்க காஞ்சனா அதை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி சத்யனிடம் கொடுத்தாள்

சத்யன் மறுக்காமல் வாங்கி குடித்துவிட்டு “ ரொம்ப நன்றி ஆன்ட்டி” என்று நெகிழ்ந்து போய் சொல்ல

“ மொதல்ல இப்படி நன்றி சொல்லறதை விடுங்க சத்யன் ... இந்தமாதிரியான ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்துக்கனும் இல்லேன்னா அப்புறமா நாமெல்லாம் மனுஷனா பொறந்து என்ன பிரயோஜனம் சத்யன்... நீங்க எந்த சங்கடமும் இல்லாம இயல்பா இருங்க அதுபோதும்” என பரணி சத்யனை அதட்டினார்

“ நீங்க இவர் கூடவே இருந்து பார்த்துக்கங்க நான் போய் மத்தியம் சமையலை பார்கிறேன்... இவருக்கு சரியாகிற வரைக்கும் ஹோட்டல் சாப்பாடே குடுக்ககூடாது அதனால நான் காரம் இல்லாம சமையல் செய்து எடுத்துட்டு வர்றேன் ” என்று சொல்லிவிட்டு காஞ்சனா போய்விட

“ அங்கிள் எனக்கு சரியாகிற வரைக்கும் நான் உங்கவீட்டு சாப்பாடே சாப்பிடுறேன்... ஆனா நீங்க நாளையில இருந்து வேலைக்கு போங்க நான் தனியா இருந்துக்குவேன் அதான் ஆன்ட்டி எதிர் வீட்டில் இருக்காங்களே” என்று சத்யன் வற்புறுத்தி சொல்ல

“ சரி சத்யன் அதை நாளைக்கு பார்க்கலாம் இப்போ நீங்க நல்லா தூங்குங்க” என்று பரணி ஒரே வார்த்தையில் கூறிவிட்டு நியூஸ் பேப்பரில் தனது கவனத்தை செலுத்தினார்

அதன்பிறகு வந்த இரண்டு நாட்களும் பரணியும் காஞ்சனாவும் சத்யனை கவனமாக பார்த்து கொண்டனர்...

அம்மை தொற்று என்பதால் சத்யன் பிடிவாதமாக சைந்தவியை இங்கே அழைத்து வரக்கூடாது என்று சொல்லிவிட்டான்

ஆனால் சத்யன்தான் காய்சலும் பலகீனமும் அதிகமாக எழுந்து உட்கார கூட மிகவும் சிரமப்பட்டான்....

மாலை வேளைகளில் காஞ்சனா குளித்துவிட்டு சத்யன் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி வைத்துவிட்டு சில சாமி பாடல்களை பாடினாள்

சத்யனுக்கு உடல் உபாதைகள் ஒருபக்கம் என்றாலும் மான்சியை பார்த்து இன்றோடு நாலுநாள் ஆயிருச்சே என்று வருத்தம்தான் அதிகமாக இருந்தது....

அன்று காலையில் அவள் வேலைக்கு போகும் நேரத்தில் மெதுவாக எழுந்து பால்கனிக்கு வந்து பார்த்தான் ஆனால் நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை ... சத்யன் ஏமாற்றத்துடன் வந்து படுத்துக்கொண்டான்

நான்காவது நாள் பரணியின் ஆபிஸில் செக்கியூரிட்டி சம்மந்தமாக முக்கியமான மீட்டிங் என்பதால் லீவு கிடைக்காமல் பரணி ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டார்... சத்யனிடம் வந்து சொல்லிவிட்டுதான் போனார்

அன்று காலையில் காஞ்சனா கொடுத்த இரண்டு இட்லியை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு சோர்வுடன் சத்யன் படுத்துவிட்டான்

நல்ல உறக்கத்தில் தன்னருகில் ஒரு வித்தியாசமான வாசனையை உணர்ந்து சத்யன் சட்டென கண்விழித்து பார்த்தான் .. அவன் கண்களையே நம்பமுடியாமல் மறுபடியும் கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்

மான்சிதான் அவனருகே மண்டியிட்டு அமர்ந்து தன் கையி்ல் இருந்த உணவுகளை கவனமாக கீழே வைத்துகொண்டிருந்தாள்...

சத்யனுக்கு இப்போது நீ பார்ப்பது உன்மைதான் என்று அவன் கண்கள் உணர்த்தியது... சத்யனுக்கு அவள் வாசனையும் அவள் அருகாமையும் ஒரு ஏகாந்த நிலையை ஏற்படுத்தியது

அந்த ஏகாந்தத்தை மறுபடியும் தனது கண்களை மூடி அனுபவித்த சத்யன்... எங்கே தான் கண்களை மூடியிருக்கும் சமயத்தில் அவள் கனவுபோல் கலைந்துபோய் விடுவாளோ என்ற பயத்தில் பட்டென கண்களை திறக்க

அப்போது மான்சியும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்... அவன் கண்விழித்து தன்னை பார்த்ததும் அவசரமாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்

“ அம்மா சாப்பாடு கொடுத்தனுப்பினாங்க எழுந்து கை கழுவிட்டு சாப்பிட வாங்க” என்று மான்சி வேறு பக்கம் திரும்பிக்கொண்டே மெதுவாக சொல்ல

அந்த தேன் குரல் சத்யனின் காதுகள் வழியாக இறங்கி அவன் மனதுடன் ரகசிய ஒப்பந்தம் செய்தது.. இனி என் குரலை நீ அடிக்கடி கேட்கலாம் என்றுதான் ஒப்பந்தம் செய்தது

சத்யனுக்கு அவள் தன்னை முதன்முதலாக நேரில் அருகில் சந்திக்கும் போது தான் இந்த நிலைமையில் இருக்கிறோமே என்று வருத்தமா இருந்தது

அய்யோ ரொம்ப நேரமாக எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறோமே அவள என்ன நினைப்பாள்.. அவளுக்கு ஏதாவது பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் வர

“ ஏன் எப்பவுமே ஆன்ட்டி தானே எடுத்துட்டு வருவாங்க... அவங்களுக்கு என்னாச்சு” என்று திரும்பியிருந்த அவளின் பக்கவாட்டு முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டே சத்யன் கேட்க

சிறிதுநேரம் மவுனமாக இருந்த மான்சி பிறகு “ அம்மா வரக்கூடாது அதனாலதான் என்கிட்ட சாப்பாடு குடுத்தனுப்பினாங்க” என்றாள்

சத்யனுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தாலும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மவுனமாக இருக்க...

அவனின் மவுனத்தை தவறாக கணித்த மான்சி அவன் முகத்தை நேராக திரும்பி பார்த்து

“ ஏன் நான் கொண்டு வந்தா சாப்பிட மாட்டிங்களா... என் அம்மா ஐஞ்சு நாளைக்கு வரமாட்டாங்க நான்தான் சமையல் செய்து எடுத்துட்டு வருவேன் ” என்று படபடவென கூற

“என்ன அப்படி சொல்லிட்டீங்க மொதல்ல சாப்பாட்டை எடுத்துவைங்க எனக்கு பயங்கர பசி நான் கைகழுவிட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் இயல்பாக சத்யன் கூறியதும்

மான்சியும் பதிலுக்கு புன்னகைத்து “ ம் எடுத்து வக்கிறேன் நீங்க போய் கைகழுவிவிட்டு வாங்க ” என்று உணவுகளை தட்டில் எடுத்து வைக்க

சத்யன் மெதுவாக கைகளை ஊன்றி சிரமமாக எழுந்திரிக்க முயற்சிக்க... காலையிலிருந்து ஒரே நிலையில் படுத்திருந்ததால் கைகால்களை சட்டென அசைக்க முடியாமல் தடுமாறினான்

ச்சே மான்சிக்கு முன்பு இதென்னடா சங்கடம் என்று நினைத்த சத்யன் தரையில் கைகளை அழுத்தமாக ஊன்றி எழ நினைக்க ... அப்போது மான்சி அவன் கையை தன் கைகளால் வலுவாக பற்றி அவனை தூக்கி எழுப்பினாள்

சத்யனுக்கு அந்த நிலை சங்கடமாக இருந்தாலும்... அவன் மேல் வானத்து தேவதைகள் வாசனை மிகுந்த மலர்களை வாரியிறைத்து வாழ்த்து பாடினர்
அதுவரை இருந்த உடல் சோர்வு மனத்தளர்ச்சி அனைத்தும் பறந்து போக... தான் அன்றுதான் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தான்

தனது மிச்ச வாழ்நாளை யாருக்காவது தாரைவார்த்து கொடுத்துவிட்டு... இவளின் கையை பிடித்துக்கொண்டே உயிரை விட்டுவிடலாமா என்று நினைத்தான்

மனமேயில்லாமல் அவள் கையை விலக்கி விட்டு மெதுவாக போய் கைகழுவிவிட்டு வந்த சத்யன் சாப்பிட தட்டின் முன் அமர்ந்தான்

மான்சி அவனுக்கு கவனமாக உணவு பரிமாற ... அவன் தட்டில் என்ன இல்லை என்பதை உடனுக்குடன் பார்த்து அவன் கேட்கும் முன்பே பரிமாறினாள்

சத்யன் எதுவுமே சொல்லாமல் அவள் வைத்ததையெல்லாம் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சீக்கிரமாக சாப்பிட்டுவிட

மான்சி எல்லவற்றையும் எடுத்து டேபிளில் வைத்துவிட்டு “நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வர்றேன் நீங்க நல்லா தூங்குங்க” என்று கூறிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்

சத்யன் தன் வாழ்நாளின் உணவு மொத்தத்தையும் இன்றே சாப்பிட முடியவில்லையே என்று வருந்தினான் 



" இறந்த காலமாய் இருந்த என் வாழ்வில்...

" நிகழ்காலமாய் வருகின்றவளே...

" நீ என் எதிர்காலமாவது எப்போது



மான்சி அவள் வீட்டுக்கு போனதும் சத்யனின் நன்பர்கள் சிலர் அவனை பார்க்க வந்தனர்.

சத்யன் அவர்களிடம் தனது ஆபிஸ் பொறுப்புகள் சிலவற்றை தற்காலிகமாக ஒப்படைத்து அவர்களிடம் விளக்கம் சொல்லி அனுப்பினான்

சத்யன் மனதில் ஆயிரம் கனவுகள் மற்றும் ஏக்கங்களுடனும் இரவு எப்போது வரும் என்று காத்திருந்தான்.... அப்போது தானே மான்சி வருவாள்

அவன் காத்திருப்பை பொய்யாக்காமல் மான்சி இரவு உணவை எடுத்துக்கொண்டு தன் அப்பா பரணியுடன் வந்தாள்

சத்யன் பரணியை பார்த்ததும் தனது பார்வையை மான்சியின் பக்கம் திருப்பாமல் கண்ணியம் காக்க... பரணி இயல்பாக சத்யனுடன் பேசினார்

“என்ன சத்யன் இன்னிக்கு மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களாமே காஞ்சனா சொன்னா” என பரணி கேட்டதும்

தன்னருகில் அமர்ந்து கீழே கிடந்த நியூஸ் பேப்பர்களை சேகரித்து கொண்டிருந்த மான்சியின் உடலிலிருந்து வந்த ஒருவித மனோகரமான மயக்கம் வாசனையில் தன்னை மறந்து கண்மூடியிருந்த சத்யன் பரணி சொன்னது காதில் விழமால் இருக்க

“என்ன சத்யன் ஏதாவது பலத்த யோசனையா” என்று பரணி மறுபடியும் கேட்க

திடுக்கிட்டாற்ப் போல் கண்விழித்த சத்யன் “என்ன சார் கேட்டீங்க” என்றான்

“இல்ல மதியம் உங்க பிரண்ட்ஸ் வந்தாங்களான்னு கேட்டேன்.... நீங்க தூங்கிகிட்டு இருந்தீர்களா சத்யன்” என பரணி கூறியதும்

சத்யன் லேசாக அசடு வழிய அவசரமாக மறுத்து “ இல்ல அங்கிள் நான் தூங்கலை சும்மா கண்மூடியிருந்தேன் அவ்வளவுதான்...என்றவன்

“ ம் பிரண்ட்ஸ் வந்தாங்க அங்கிள் ஆபிஸ வேலை சம்மந்தமாக பேச நான்தான் வரச்சொல்லியிருந்தேன்... அதான் பேசிட்டு உடனே போய்ட்டாங்க”....

“ம் ஆபிஸில் கொஞ்சம் கவணம் செலுத்துங்க சத்யன் அதுதான் உங்கள் உழைப்பு” என சத்யன் கூற

“சரிங்க அங்கிள் அப்புறம் சவி என்ன பண்றா அங்கிள் ஆறுநாளா அவளை பார்க்காம ரொம்ப கஷடமா இருக்கு... எப்போ எனக்கு சரியாகும்ன்னு தெரியலை ” என்று சத்யன் சலிப்பாக சொல்ல

“ அவ அங்கே உங்களுக்கு மேல தவிச்சுக்கிட்டு இருக்கா... இப்பக்கூட என்னை அங்கிள் கிட்ட கூட்டிட்டு போம்மான்னு ஒரே பிடிவாதம்” என்று சொன்னது மான்சிதான்

சத்யனுக்கு தன் உடலும் மனமும் அந்தரத்தில் பறப்பது போல் இருந்தது ... பின்னே மான்சியல்லவா அவனுக்கு பதில் சொன்னாள்

அவனுக்கு தன்னை பற்றி நினைக்கவே ஆச்சிரியமாக இருந்தது... சிலநாட்களுக்கு முன்புவரை இவள் யாரென்று தெரியாது... ஆனால் இப்போது என் உயிர்த்துடிப்பதே இவளுக்காத்தான்... இரவு தூங்கி காலையில் கண்விழிப்பதே இவளை காணத்தான் என்றுணர்ந்தான்

மான்சி சத்யனுடன் சகஜமாக பேசியது பரணிக்கு கூட ஆச்சிரியமாகத்தான்

“அப்பா நீங்க போய் சவியை பார்த்துக்கங்க... அம்மாவால அவளை சமாளிக்க முடியாது....நான் இவருக்கு நைட் சாப்பாடு எடுத்து வச்சிட்டு வர்றேன்” என்று மான்சி கூறியதும்

“சரி சத்யன் நான் வீட்டுக்கு போறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க” என சொல்லிவிட்டு பரணி கிளம்பினார்

மான்சி, சத்யனை சுற்றி இரைந்து கிடந்த வேப்பிலை சருகுகளை கைகளால் சேர்த்து வாறி ஓரமாய் போய் போட்டுவிட்டு அவன் எதிரில் உட்கார்ந்து மாரியம்மன் தாலாட்டு பாடல்களை தன் தேன் குரலில் பாட

சத்யன் படுத்தவாறே அதை கண்மூடி ரசித்தான்.... திடீரென கண்திறந்த சத்யனின் கண்ணெதிரில் உட்கார்ந்திருந்த மான்சியின் இடுப்புதான் தெரிந்தது

விக்கித்துப் போன சத்யன் தனது விழிகளை அந்த சுந்தரப் பிரதேசத்தை விட்டு நகர்த்த முடியாமல் அங்கேயே நிலைக்கவிட்டான்.

சத்யனின் பக்கவாட்டில் அவள் உட்கார்ந்திருந்ததால் அவளின் ஆலிலை போன்ற மான்சியின் வயிறு சற்று குழிந்து இருக்க அவ்வளவு அருகாமையில் அவள் வயிற்றின் மெல்லிய ரோமங்களை கூட சத்யனால் பார்க்க முடிந்தது

சத்யன் மெதுவாக தன் பார்வையை அவள் இடுப்புக்கு மேலே உயர்த்தினான்... மான்சி கையை மடக்கி பாட்டு புத்தகத்தை வைத்திருந்ததால் அவள் இடது பக்க சேலை ஒதுங்கி அவள் இடது மார்பின் பக்கவாட்டு தோற்றம் தெரிந்தது

அதன் கணப் பரிமானம் சத்யனை மூச்சடைக்க செய்தது... அவளை சந்தித்த இத்தனை நாட்களில் சத்யனின் பார்வை அவள் முகத்துக்கு கீழே இறங்கியதில்லை... ஆனால் இன்று அவளுடைய வனப்பை கண்களால் தடவி கருத்தில் பதித்துகொண்டிருந்தான்

சத்யனுக்கு குழிந்த அந்த வயிற்றுப் பள்ளத்தில் தன் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது...
அப்படி முகத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவளின் அடிமார்பை தனது மூக்கால் உரச வேண்டும் போல் இருந்தது...
அப்படி மூக்கால் உரசி கொண்டே அந்த மார்பின் வனப்பை தன் கைகளால் தடவி பார்க்க வேண்டும் போல் இருந்தது...
அப்படி கைகளால் தடவி பார்த்துக்கொண்டே அந்த மார்பின் கணத்தை தூக்கி எடையை அறிய வேண்டும் போல் இருந்தது
சத்யன் கண்களாலேயே விழுங்கி தனது இரவு பசியை போக்கிக்கொண்டிருக்க...

‘அடப்பாவி இந்த நிலைமையில் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது நீ என்னடான்னா இப்படி அவளை அணுஅணுவாக ரசிக்கிற... அதுவும் அவ சாமிபாட்டு பாடிக்கிட்டு இருக்கும் போது ச்சை என்ன மனுஷன்டா நீ ’ என்று அவன் மனம் அவனை குத்தியது

லேசான குற்ற உணர்வில் சத்யன் தவிக்க ... அவன் உணர்ச்சிகளோ எந்தவித குற்ற உணர்வுமின்றி மறுபடியும் மறுபடியும் அவள் அழகை கண்களால் தடவிப்பார்த்து ரசித்தது

மறுபடியும் அவனை குறைசொல்ல எழுந்த மனதை .. “ ஆண் கடவுளோ பெண் கடவுளோ அவர்களின் உணர்வுகளின் சங்கமமும் சேர்க்கைதான் மனிதப்பிறவி... இதில் மறுப்பேதும் உண்டா ... அப்படியிருக்க இப்போ நான் அவளை ரசிப்பதை எந்த கடவுளும் குற்றமென்று சொல்லமாட்டார்... நீ அடங்கியிரு’ என்று சத்யன் தன் மனதை அடக்கிவிட்டு அவள் அழகை அள்ளிப் பருகும் அற்புதத்தை சீராக செய்தான்

மான்சி பாடல்களை படித்துவிட்டு எழுந்துகொள்ள... அவளையே பார்த்துக்கொண்டிருந்த சத்யன் திகைத்துப்போய் சட்டென தன் பார்வையை விலக்கி திரும்பிக்கொண்டான்

“நீங்க டிபன் சாப்பிட்டீங்கன்னா நான் கிளம்புவேன்” என்று மான்சி அவன் முகத்தை பார்க்காமல்

சத்யன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய் கைகழுவிவிட்டு வந்து அமர மான்சி தட்டுவைத்து அதில் உணவை வைத்தாள்

சத்யனுக்கு இவ்வளவு நேரம் அவளை பார்த்ததில் மனம் பதைத்துப் போயிருந்தது... ச்சே எவ்வளவு அக்கறையோட சாப்பாடு போடுறா... இவ்வளவு நேரமா நான் இவளை என் கண்களால் சாப்பிட்டு பசியாறினேன் என்று தெரிந்தால் என்னை பற்றி என்ன நினைப்பாள்

அப்புறமா பரணி அங்கிள் என்மேல் வச்சுருக்கும் மரியாதை என்னாகும்... இனிமேல் இதுபோல நடந்துக்கக் கூடாது என்று தன் உணர்வுகளுக்கு சத்யன் கடிவாளமிட்டான்

ஆனால் உணர்வுகளுக்கு கடிவாளமிட யாராலும் முடியாது என்பது சத்யனுக்கு தெரியவில்லை



அவன் குனிந்து சாப்பிட்டாலும் அவன் நினைவுகள் அவளை தலைநிமிர்ந்து ரசித்துக்கொண்டிருந்தது

“சட்னியில உப்பு இருக்கா” என்ற மான்சியின் குரல் சத்யனின் நினைவுகளை கலைத்தது

தலை நிமிராமலேயே “ம் இருக்கு” ஆனால் அவன் நாக்கு சுவையறியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தது

அவனுக்கு பயம் எங்கே தலைநிமிர்ந்தால் தன் மனம் இருக்கும் நிலையில் ஏதாவது தவறாக நடந்து கொண்டுவிடுவமோ என்றுதான்

அவன் உணவு பரிமாறும் அவள் விரல்களை பார்த்தான்... எவ்வளவு அழகான காந்தல் விரல்கள் ... அந்த விரல்களின் நுனியில் முத்தமிட்டால் எப்படி இருக்கும் என்று அவன் நினைத்தான்

இப்போது கடவுள் அவனெதிரே வந்து அந்த விரலை முத்தமிட உனக்கு ஒரு சந்தர்பம் அளிக்கிறேன் ஆனால் அதற்க்கு நீ என்ன திருப்பி தருவாய் என்று கேட்டால் ... சத்யன் உடனே உயிரைத்தருவேன் என்பான்


" காதல் என்றால் கட்டுப்பாட்டுடன்....

" உள்ளம் மட்டும் கலப்பது அல்ல...

" காதல் என்றால் எல்லை மீறிய ...

" மோகத்தீயில் உடல் மட்டும் கலப்பது அல்ல...

" உள்ளமும் உடலும் சரிநிகராக கலந்து...

" ஒருவரையொருவர் ஜெயிக்க முற்பட்டு..

" இருவரும் தோற்று விழுவதுதான் காதல்!


No comments:

Post a Comment