Monday, March 23, 2015

விவேகம் - அத்தியாயம் - 2

சுரேஷின் கேபினிலிருந்து வெளியில் வந்த விவேக் தீபக்கின் இருக்கைக்கு சென்றான்.

"இங்க ஏண்டா வந்தே .. மவனே இனிமே உன் சகவாசமே வேண்டாம். வந்த வழியே போயிடு"

"சாரிடா மச்சி .. நைட்டு உனக்கு ரொம்ப ட்ரபிள் கொடுத்துட்டேன்"

"எங்க அப்பாகூட என்னை அடிச்சதில்லை .. உன்னால கேவலமா போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்"

"சாரிடா ... ரெண்டு ரவுண்டு ஆனப்பறம் நீ என்னை போதும்னு நிறுத்த சொல்லி இருக்கலாம் இல்லே?"

"ஆமா, நான் சொன்னா கேக்கற நிலமையிலயா இருந்தே"

"சாரி, இனிமேல் அந்த மாதிரி நடக்காதுடா ..."



"இனிமேல் நீ தண்ணி அடிக்கணும்னா உன் கேர்ல் ஃப்ரெண்டை கூட்டிட்டு போய் அடி"

"கேர்ல் ஃப்ரெண்டா? அப்படி யாரும் எனக்கு இல்லையே?"

"அப்ப விமலா உன்னோட கேர்ல் ஃப்ரெண்டு இல்லையா? அவளை மடக்க ட்ரை பண்ணினவனுக எல்லாம் அப்படிதானே சொல்றானுக"

"சும்மா இருடா அவ என்னோட கேர்ல் ஃப்ரெண்டுன்னா இந்நேரம் நான் வானத்துல பறந்துகிட்டு இருப்பேன்"

"உன் மேல அவ்வளவு அக்கறை வெச்சு இருக்கா. நீயே மடக்க வேண்டியதுதானே"

"நானா ? விளையாடறயா? எதாவுது எக்கு தப்பா பேசினா நேரா போய் எங்க அப்பா அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவா. அவங்களுக்கு என்னைவிட அவ மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி"

"அப்ப சரி விடு. நான் ட்ரை பண்ணறேன்"

"சரி. ஆனா ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ். உன்னோடது எல்லாத்தையும் இன்ஷ்யூர் பண்ணினப்பறம் ட்ரை பண்ணு"

"ஏண்டா இப்படி பயமுறுத்தற?"

"உனக்கு அவளை பத்தி தெரியாது. ... சரி விடு. அடுத்தது எப்படா ப்ளான் பண்ணலாம்?"

"அடுத்ததா? என்னை விடுடா சாமி! நான் நேத்து நடந்ததை மறந்து தண்ணி அடிக்க இன்னும் ரொம்ப நாள் ஆகும்"

"டேய் நான் அதை சொல்லலடா .. வேற விஷயம்" என்றபடி கண் அடிப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ செய்தான்

"செக்ஸ் பத்தியா?"

"ம்ம்ம் ..."

"இன்னைக்கு சாங்காலம் உன் ஃப்ளாட்டுக்கு வரேன். அப்ப பேசலாம்"

விவேக் அன்று மாலை தனது ஃப்ளாட்டில் தீபக்கை உற்சாகமாக வரவேற்றான்.

"வாடா, உக்காந்து பேசிட்டு இருக்கலாம். இப்பதான் பீட்ஸா ஹட்டுல ஆர்டர் பண்ணினேன். இன்னும் அரை மணி நேரத்துல பீட்ஸாவும் கூட குடிக்க பெப்ஸியும் வந்துடும்"

"சரி, இப்ப உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்"

"எனக்கு எல்லாம் ஓரளவு தெரியுண்டா .. ப்ராக்டிகலா கத்துக்கணும்"

"ஓரளவு தெரியும்னா? என்ன தெரியும்"

"இன்டர்கோர்ஸ்னா (சேர்க்கை) என்னன்னு தெரியும்"

"அதுதானடா முக்கியமான மேட்டர். உனக்கு அதுவே தெரியும் அப்பறம் என்ன?"

"அது என்னன்னு தெரியும். எப்படி பண்ணறதுன்னு கத்துக்கணும்"

"சும்மா சாமியார் மாதிரி பேசாதே .. இன்டெர்கோர்ஸ் பண்ணறதை நீ பாத்ததில்லையா .. ஐ மீன் படத்துல இல்லை வீடியோவில?"

"அந்த மாதிரி படம், வீடியோவெல்லாம் நான் பாத்ததில்லை"

திபக் "அப்பறம் எப்படிடா கையடிப்பே? இப்ப நீ கையடிச்சதே இல்லைன்னு சொன்னா ஓங்கி அறைஞ்சுடுவேன்" என்றதற்கு

"கையெல்லாம் அடிப்பேன் .. " என்று விவேக் முனகினான்.

"எதையாவுது பாத்துகிட்டு அடிப்பியா இல்லை எதையாவுது நினைச்சுகிட்டு அடிப்பயா?"

"எங்கிட்ட ஒரு புக் இருக்கு அதைப் படிச்சுட்டு ... "

"என்ன புக் காட்டு ..."

தயக்கத்துடன், "கொஞ்சம் அசிங்கமா இருக்கும் கண்டுக்காதே .. " என்றவாறு கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு பழைய பழுப்பு நிற பக்கங்கள் கொண்ட தமிழில் எழுதியிருந்த சிறிய புத்தகத்தை எடுத்தான். "விஜி மாமி" என்ற தலைப்பில் சரோஜா தேவி எழுதிய புத்தகம்.

"இது யாரு உங்க அப்பா கிட்ட இருந்து சுருட்டினயா?"

"ஆக்சுலா .. வீட்டுல கீழ கராஜ்ல கெடந்துதுடா .. "

"ஹூம் .. அப்பனைப் போல பிள்ளை. சோ, செக்ஸைப் பத்தி எல்லாம் இதுல எழுதி இருக்கும் இல்லை. அதுக்கு மெல என்ன தெரிஞ்சுக்கணும்"

"டேய், இந்த புக் வந்து ரொம்ப வருஷம் ஆயிருக்கும்டா. இப்ப லேடஸ்ட் அட்வான்ஸ்மென்ட்ஸ் எல்லாம் இதுல இருக்காது"

"போடாங்க் ...செக்ஸ் நம்ம கம்பூடர் ஃபீல்ட் மாதிரின்னு நெனைச்சயா .. எவ்வளவு வருஷமானாலும் அதேதான்"

"நான் சொன்னது செய்யற விதத்துல .. "

"நிஜமா கேக்கறேண்டா ... வேற வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பாத்தது இல்லை?"

"சத்தியமா பாத்தது இல்லைடா"

தன் பையிலிருந்து வரும்வழியில் ப்ளாட்ஃபாரத்தில் இருந்த ஒரு திருட்டு டீவீடி கடையில் வாங்கிய டீவீடிகள் இரண்டை எடுத்து கொடுத்தான். இது ரெண்டையும் பாரு அப்பறம், உன் லாப்டாப்புக்கு நெட் கனெக்ஷன் இருக்கு இல்ல?"

"ம்ம்ம் .. டாடா ஃபோட்டான் மொபைல் ப்ராட்பேண்ட் நேத்துதான் வாங்கினேன்"

"நான் ரெண்டு மூணு வெப்சைட் சொல்றேன் ... அதுல நிறைய வீடியோ இருக்கும் ... அதெல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோ" என்றவாறு சில வலைதளங்களின் விலாசத்தை கொடுத்தான்.

பிறகு அவன் எண்பது ரூபாய்க்கு வாங்கிய ரெண்டு டீவீடிகளுக்கு விவேக்கிடம் ஐநூறு ரூபாய் கறந்து கொண்டு தன்னுடைய பிட்ஸாவையும் பெப்ஸியையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.

அடுத்த நாள் ..

விவேக்கின் இருக்கைக்கு விமலா வருகிறாள் கடு கடுத்த முகத்துடன்

"என்ன நீ? நேத்திக்கு என்ன ப்ரோக்ராம்னு எங்கிட்ட சொல்லாம கொள்ளாம போயிட்டே? அவ்வளவு துளிர் விட்டு போச்சா? என்ன பண்ணினே நேத்து?"

திரும்பிப் பார்த்தவனின் நெத்தியில் பட்டையாக விபூதி. நடுவே ஏதோ கோவிலில் கொடுத்த சந்தனம் ..

"ஏய், என்னாச்சு?" என்று விமலா கத்த சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் மேல் திரும்புவதை விரும்பாத விவேக் அவள் கையைப் பற்றி வெளியே அழைத்து சென்றான்.

"நானே நொந்து போயிருக்கேன். ஏண்டீ, இப்படி கூச்சல் போட்டு என் மானத்தை வாங்கறே?"

"சாரி, என்னாச்சு?" என்று அவனருகில் வந்து கிசு கிசுத்தாள்

"ஒண்ணுமில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை. ஆன்மீகமான விஷயங்கள்ல கான்ஸென்ட்ரேட் பண்ணலாம்னு காலைல சின்மயா மிஷன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்"

"ஏண்டா? முந்தா நாள்தான் மூணு மாசத்துல எல்லாத்தையும் கத்துகிட்டப்பறம் கல்யாணம்ன்னு சொன்னே?"

"சொன்னேன். ஆனா .. "

"இப்ப எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறதில்லேங்கற?"

"ப்ளீஸ். இது பர்ஸனல் விஷயம் விமலா .. "

"சரி, அங்கிள் ஆண்டிகிட்டே சொல்லிட்டயா?"

"இன்னும் இல்லை .. நேத்து நைட்டுதான் தெ... ம்ம்ம் .. டிசைட் பண்ணினேன்"

"என்னமோ மறைக்கற .. நேத்து நைட்டு என்ன பண்ணினே? எவகிட்டயாவுது போய் எய்ட்ஸ் வாங்கிட்டு வந்துட்டயா?"

"சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லை"

"அப்பறம் எப்படி தெரிஞ்சுது ?"

"இல்லை நான் டிசைட் பண்ணினேன்னு சொன்னேன்"

"ஆமா, அதுக்கு முன்னாடி தெரிஞ்சுதுன்னு சொல்ல வந்துட்டு மாத்தி டிசைட் பண்ணினேன்னு சொன்னே. இப்ப மரியாதையா நேத்து நைட்டு என்ன பண்ணினேன்னு சொல்லப் போறயா இல்லையா?"

"ஐய்யோ... நேத்து நைட்டு நான் என் ஃப்ளாட்டுல தான் இருந்தேன். போதுமா?"

"அப்ப திடீர்னு ஞானோதயம் வந்துதா? என்ன தெரிஞ்சுது?"

சுற்று முற்றும் பாத்து குரலை தாழ்த்தி, "என்னால ஒரு பொண்ணை சந்தோஷமா வெச்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சுது"

அதிர்ந்து போய் அவனைப் பார்தவள், "என்ன சொல்றே? சரி, நீ எங்கிட்ட சொல்ல வேண்டாம் முதல்ல வா. மணிபால் ஹாஸ்பிடல் பக்கத்துலதான் அங்க போய் ஒரு டாக்டர் கிட்ட சொல்லு. Let them find out what is wrong with you" என்றபடி அவன் கையை பிடித்து வெளியில் அழைத்துச் செல்ல முற்பட்டாள்.

"வேண்டாம் விமலா ப்ளீஸ். ...எனக்கு கூச்சமா இருக்கு"

"அப்ப எங்கிட்ட சொல்லு. நீதான் என்னை ஒரு பொண்ணாவே பாக்கறதில்லையே"

"அது வந்து ... அந்த விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுக்க நேத்து தீபக் ரெண்டு டீவீடி அப்பறம் சில வெப்சைட்டெல்லாம் பாக்க சொன்னான்..."

"நைட்டு முழுக்க உக்காந்து பாத்துட்டு இருந்தயா?"

"நைட்டு முழுக்க இல்லை .. ஒரு மூணு மணி வரைக்கும் பாத்தேன் .. அப்பதான் என்னால அதெல்லாம் முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்"

"நீ ஆம்பளையே இல்லைங்கறயா? உனக்கு எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு இல்லே?"

"கேலி பண்ணறயா? எனக்கு இருக்க வேண்டியது இருக்கு. ஆனா நான் அந்த வீடியோல பாத்த மாதிரி இல்லை. அப்பறம், அந்த மாதிரி என்னால முடியாது"

"எனக்கு ஒரு சந்தேகம்டா. நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கியா இல்லை போர்ன் ஸ்டார் ஆகலாம்னு இருக்கியா?"

"சீ .. "

"அப்பறம் ஏண்டா ஏதோ வீடியோவை பத்துட்டு அந்த மாதிரி இல்லை அந்த மாதிரி முடியாதுங்கற? முக்கியமான மேட்டர் மட்டும் பண்ணினா போதும்." என்ற பிறகு குரலை தாழ்த்தி, "ஐ மீன் இன்டர்கோர்ஸ் ..." என்றாள்

"அதை தான் நானும் சொல்றேன் .. என்னால அவ்வளவு நேரமெல்லாம் தாக்கு பிடிக்க முடியாது" என்று ஒருவழியாக போட்டு உடைத்தான்

அவன் சொல்லி முடிக்க குலுங்கி சிரித்த விமலா, "தயவு செஞ்சு வெளில யார்கிட்டயும் சொல்லிடாதே. பைத்தியகாரா அந்த வீடியோஸ் எல்லாம் விட்டு விட்டு எடுத்து இருப்பாங்கடா"

"இல்லையே எனக்கு அந்த டௌட் வந்துது. அப்பறம் உத்துப் பாத்தேன். ஒரே ஃப்ரேம்தான் அவ்வளவு நேரம் ஓடுச்சு"

"சரி, நீ என்ன மாதிரி வீடியோ பாத்தே?" அதற்கு விவேக் பதில் சொல்ல திணறியதைப் பார்த்து பரிதாபப் பட்டு, "இதை மட்டும் சொல்லு .. நீ பாத்தது இண்டியன் சரக்கா ஃபாரின் சரக்கா?"

"ஃபாரின்"

"அதான். நீ நம்ம ஊர் ஆளுங்க நடிச்ச வீடியோ எதாவுது பாரு. அப்பறம் உன்னால முடியுமா இல்லையான்னு டிசைட் பண்ணு"

ஓரளவு தெளிவு அடைந்தவன். "உங்கிட்ட இருக்கா?"

"அறைஞ்சன்னா .... என்னை என்னன்னு நினைச்சே நீ? உன் தீபக் கிட்டயே கேளு அவன் அரேஞ்ச் பண்ணுவான்" என்றவள் தொடர்ந்து "சரி, செக்ஸ் கதையெல்லாம் படிச்சது இல்லையா நீ?"

"ஒரே ஒரு கதைதான் படிச்சு இருக்கேன். கொஞ்சம் பச்சையா எழுதி இருக்கும் ..ஆனா அது ரொம்ப நாளைக்கு முன்னால வெளிவந்த புக். புதுசா எதுவும் படிச்சது இல்லை"

"சரி, நான் உனக்கு கொஞ்சம் PDF ஃபைல்ஸெல்லாம் ZIP பண்ணி உன்னோட பர்ஸனல் மெயில் ஐடிக்கு அனுப்பறேன். நல்ல காதல் கதைங்க. கூடவே செக்ஸும் இருக்கும். கதைங்க எல்லாம் படிக்கவும் நல்லா இருக்கும். உனக்கு வேணுங்கற விஷயமும் அதுல இருக்கும். படிச்சு பாரு. நீ எவனோ ஃபாரின்காரனை பாத்துட்டு தப்பா முடிவு எடுத்து இருக்கே. அதை எல்லாம் படிச்சதுக்கு அப்பறமும் உனக்கு அந்த சந்தேகம் இருந்துதுன்னா நேரா மணிபால் ஹாஸ்பிடலுக்கு போறோம்" என்றவாறு விடை பெற்றாள்.

"சரி .. இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு. வா போலாம் நிறைய வேலை இருக்கு" என்றவாறு இருக்கைக்கு செல்ல திரும்பினான்.

இரண்டொரு நாட்களுக்கு பிறகு விவேக் தீபக்கின் இருக்கைக்கு வந்து அவனிடம் ஒரு பழுப்பு நிறக்கவரில் அவன் கொடுத்த டீவீடிகளை கொடுத்தான்.

"என்னடா மாப்ளே? எல்லாம் தெரிஞ்சுகிட்டயா? அடுத்தது ப்ராக்டிகல்ஸ் ஆரம்பிக்கலாமா?" என்று ஆரம்பித்தவன் விவேக்கின் முகத்தைப் பார்த்து அவன் துயரத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தான்.

"என்னடா ஆச்சு?"

"நீ கொடுத்த குடுத்த டீவீடியெ பாத்தப்பவே நினைச்சேன் நான் இதுக்கெல்லாம் லாயக்கில்லைன்னு. இப்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு. நீ இதுவரைக்கும் எனக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு தாங்க் பண்ணலாம்னு வந்தேன். இன்னைக்கு சாயங்காலம் நான் இஸ்கான் கோவிலுக்கு போகப் போறேன்"

"டேய், என்னடா சாமியாராட்டம் பேசறே? என்னாச்சு முதல்ல இருந்து சொல்லு"

"நீ கொடுத்த டீவீடி அப்பறம் வெப்சைட்டெல்லாம் பாத்து முதல்ல நொந்து போயிட்டேன்"

"நொந்து போயிட்டியா? எதுக்கு"

"வெப்சைட்டுல இருந்த ஃபோட்டோஸ் எல்லாம் பாக்கும் போது ஒண்ணும் எனக்கு அப்படி தோணலே. என்ன? கொஞ்சம் சர்கஸ் பண்ணற மாதிரியெல்லாம் காமிச்சு இருந்துது. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போனா என்னாலயும் முடியும்ன்னு நினைச்சேன். அப்பறம் வீடியோஸ் பாக்கும்போதுதான் தெரிஞ்சுது ... அந்த மாதிரி எல்லாம் ... ம்ம்ம் .. அவ்வளவு நேரமெல்லாம் என்னால் முடியாதுன்னு நொந்து போயிட்டேன்"



"ஏன் படத்துல அவங்க பண்ணும்போது நீயும் கூடவே கையடிச்சு பாத்தியா?"

அவ்வளவு எளிதில் அதை கண்டு பிடிப்பான் என்று விவேக் உணர்ந்து இருக்கவில்லை. பரிதாபமாக ஆமென்று தலையாட்டினான்.

"டேய், அவனுகெல்லாம் வையக்ராவை தின்னுட்டு ரொம்ப நேரம் நடிக்கறதுக்காக பண்ணுவானுக. அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சுதுன்னா எவனாவுது காசைக் கொடுத்து வாங்குவானா? அதுக்குத் தான். உண்மையில அவ்வளவு நேரம் பண்ணமுடியாது. அதைப்பாத்துட்டு நீ லாயக்கு இல்லைன்னு சொல்றேயே. நான் நம்ம ஊர் ஆளுக நடிச்ச ரியலிஸ்டான வீடியோ கொஞ்சம் குடுக்கறேன். அதுங்களைப் பாத்துட்டு அப்பறம் முடிவு எடு"

"அதைத்தான் விமலாவும் சொன்னா ...."

அதிர்ந்தவன், "மவனே இதையெல்லாம் அவகிட்ட ஏண்டா சொன்னே?"

"அதை விடுடா. சொல்லாட்டி எங்க அப்பா அம்மாகிட்ட போய் எதையாவுது போட்டுக் கொடுத்துடுவா. அதனால அப்ப சொன்னேன். ஆனா இப்ப நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எனக்கு கல்யாணம் வேண்டாம்னு முதல்ல எங்க அப்பா அம்மா கிட்டதான் சொல்லப் போறேன்"

"என்ன தெளிவு வந்துது? எவ்வளவு நேரம் உன்னால தாக்கு பிடிக்க முடியும்னு ஸ்டாப்வாட்ச் வெச்சுப் பாத்தியா?"

"எவ்வளவு நேரம் பண்ணனும்ங்கறதை விடுடா. என்னோடது ரொம்ப சின்ன சைஸ்"

"அதை எப்படி கண்டு புடிச்சே"

"அந்த வீடியோல பாத்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்துது. அவனுகளுதெல்லாம் பெருசு பெருசா இருந்துது. சரி, ஃபாரினர்ஸுக்கு அப்படித்தான் இருக்கும்ன்னு விட்டுட்டேன். அப்பறம் விமலா PDFல போட்டு இருந்த கதைங்க 
கொஞ்சம் கொடுத்தா. அந்த கதை எல்லாம் படிச்சப்பறம் எனக்கு கன்ஃபர்ம் ஆயிடுச்சு"

"என்ன கதைங்க ?"

"ஸ்க்ரூட்ரைவர்ன்னு ஒருத்தர் எழுதினது. கதை எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒண்ணு ரெண்டு கதைங்களை படிச்சுட்டு அழுதுட்டேன். மத்ததெல்லாம் ஜாலியான கதைங்க. அந்த கதைல வர்ற ஹீரோ எல்லாம் நம்மள மாதிரி சாதாரணமான ஆளுங்கதான். ஆனா அந்த ஹீரொங்களுக்கு எட்டு இஞ்சு இல்லேன்னா உலக்கை மாதிரி இருக்கும்ன்னு எழுதி இருந்துச்சு. அந்த கதைல வர்ற ஹீரோங்ககூட கம்பேர் பண்ணினாலும் என்னோடது ரொம்ப சின்னதுடா"

"டேய், கதைகள்லயும் படிக்கறவங்களுக்கு கிளு கிளுப்பா இருக்கணும்னு அப்படி எழுதுவாங்கடா. எல்லாருக்கும் அப்படி இருக்காது. மத்த விஷயங்கள்ல சாதாரணமான ஆளா காமிச்சு இருந்தாலும் செக்ஸ் கதைங்கள்ல ஹீரோவை செக்ஸ் விஷயத்துல ஹீரோ மாதிரிதான் காமிச்சு இருப்பாங்க"

"அப்ப ஒரு ஹீரோன்னா அப்படி இருக்கணும்னு நீயே ஒத்துக்கற இல்லை?" என்று தான் தீபக்ககை மடக்கியதில் பெருமிதத்தோடு தொடர்ந்தான், "எனக்கு வரப் போறவளூக்கு நான் ஒரு ஹீரோவா இருக்கணும் காமெடியனா இருக்க கூடாது"

"டேய், என்ன சைஸா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் கொடுக்க முடியும். என்னோடது கூட அவ்வளவு பெருசு இல்லைதான். ஆனா நான் போயிட்டு வந்தவளுக கிட்ட கேட்டுப் பாரு எப்படி இருந்ததுன்னு"

"ஆமா நீ காசு குடுத்து போயிருப்பே. உங்கிட்ட காசை வாங்கிட்டு உன்னைப் பத்தி நல்லாத்தான் சொல்லுவாளுக"

"டேய், உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல"

"புரியறதுக்கு இதுல இதுக்கு மேல ஒண்ணும் இல்லை" என்றவன் குரலை சிறிது உயர்த்தி "ஐ ஹாவ் அ ஸ்மால் பீனிஸ். இதை வெச்சுட்டு நான் அவமானப் பட விரும்பல. அவ்வளவுதான்"

அப்போது தீபக்கின் இருக்கைக்கு வந்த சுரேஷுக்கு அவர்கள் பேசிய கடைசி சில வாக்கியங்கள் துல்லியமாக கேட்டது.

"ம்ம்க்க்கும் .. " என்று கனைத்து அவர்கள் கவனத்தை கவர்ந்த சுரேஷ், "எல்லாருக்கும் முன்னாடி என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையாடா உங்க ரெண்டு பேருக்கும்?" என்று கடிந்து, "என் கேபினுக்கு வாங்க . "

சுரேஷின் கேபினுக்குள் இருவரும் நுழைந்தனர்.

"என்னடா அது எங்கே என்ன பேசறதுன்னு இல்லை?"

தீபக் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, தலை குனிந்து இருந்த விவேக், "சாரி சுரேஷ். என்னாலதான். இனிமேல் இந்த மாதிரி நடக்காது"

"இல்லை பாஸ் நான்தான் அவனை நோண்டி நோண்டி கேட்டு கடுப்பேத்துனேன் .. and he burst out"

இருவரையும் சற்று நேரம் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்.

"என் நிலைமை உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும் ... ரொம்ப பெருமை படாதடான்னு கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை"

இன்னும் சிரிப்பதை நிறுத்தாமல், "என்ன தண்டனை?"

தீபக்கும் இப்போது சுரேஷுடன் சேர்ந்து கொண்டு "சின்னதா படைச்சுட்டாராம்"

சுரேஷ், "எவ்வளவு சின்னதுன்னு அளந்து பாத்தியா?"

விவேக் "அஃப்கோர்ஸ் "

அவர்கள் மேலும் சிரிக்க, விவேக் மென்மேலும் கடுப்படைந்து எழுந்து நின்றான்

"வெய்ட், வெய்ட் .. உன்னை அவமானப் படுத்தணும்னு சிரிக்கலைடா. உனக்கு இன்னும் ஒண்ணும் தெரியாம இருக்குதேன்னு சிரிச்சேன்"

"என்ன தெரியணும்? என்ன தெரியணுங்கறேன். ஒரு விஷயத்தை வீடியோல பாத்தேன். அப்பறம் ஒரு புகழ் பெற்ற ஆதரும் தன் கதைல வர்ற ஹீரோக்களுக்கு அதே மாதிரி இருக்கறதா எழுதி இருக்கார். கம்பேர் பண்ணறதுக்கு என்னோடதை மெஷர் பண்ணி பாத்தேன்"

"எப்படி மெஷர் பண்ணினே. ஸ்கேல் வெச்சா?"

சிறிது தயங்கியபின் "என்னோடது கொஞ்சம் வளைஞ்சு இருக்கும் .." என்றவனை மேலும் சொல்ல விடாமல், "படுத்து இருக்கும்போது சில சமயம் மடிஞ்சு கூட இருக்குண்டா" என்று தீபக் தன் அறிவாற்றலைக் காட்ட விவேக், "தெரியும். நான் சொன்னது வென் இட் வாஸ் எரெக்ட்"

"பேரிய ப்ராஸஸ்ஸா இருந்து இருக்குமே" என்ற சுரேஷிடம் விவேக், "ஆமா, இட் வாஸ் அ டஃப் ஜாப். ஸ்கேல் வெச்சா சரியா மெஷர் பண்ண முடியாதுன்னு ஒரு மெஷரிங்க் டேப் வாங்கிட்டு வந்து .." என்றதற்குள் தீபக், "அடப்பாவி அது ரொம்ப ஷார்பான தகுடுலுல பண்ணி இருக்கும். அளக்கும் போது கொஞ்சம் அறுந்து விழுந்துருச்சா?"

முறைத்த விவேக், "என்னை அந்த அளவுக்கு மடையன்னு நினைச்சயா? நான் யூஸ் பண்ணினது டெய்லர்ங்க உபயோகிக்கற டேப். அதை I held it along my penis and measured (என் ஆணுருப்பில் மேல் படர்ந்தவாறு பிடித்த் அளந்தேன்)" என்றான்.

மறுபடியும் தீபக், "அளக்கறதுக்குள்ள மறுபடியும் கொஞ்சம் சுருங்கி இருக்குமேடா" என்று கிண்டலடிக்க விவேக் ரொம்ப சீரியஸான முகத்துடன், "அதையும் ஃபாக்டர் பண்ணித்தான் அளந்தேன்" என்றது மற்ற இருவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். விவேக் அழுது விடுவான் போல இருக்கு கஷ்டப் பட்டு சிரிப்பை அடக்கிய சுரேஷ், "சரி, எவ்வளவு இருந்துது .. "

"ஆறேகால் இஞ்ச்சுக்கு கொஞ்சம் அதிகம். செண்டிமீட்டர் கணக்குல சரியா பதினாறு செண்டிமீட்டர்"

"அதை சின்னதுங்கறயா?"

"ஆமா .. நான் வீடியோல பாத்தது எல்லாம் குறைஞ்சது ஒன்பது இஞ்சாவுது இருக்கும். அதெல்லாம் ஃபாரினர்ஸ். நம்ம ஊர்கார ஹீரோங்க வர்ற கதைல எட்டு இஞ்சுன்னு போட்டிருந்தது"

"கிர்த் (சுற்றளவு) அளந்து பாத்தியா"

"அதை அளக்கலே, ஆனா உலக்கை மாதிரி எல்லாம் என்னோடது இல்லை"

அவனிடம் ஏதும் கூறாமல் சுரேஷ் தன் கணிணியின் பக்கம் திரும்பி ஏதோ டைப் செய்த பிறகு கணிணினித் திரையை சிறிது நேரம் பார்த்தான்

"மடையா என்ன விஷயம்னாலும் கூகிள் விக்கிபீடியா அப்படிம்பயே, இந்த விஷயத்தை அங்க போய் பாத்தியா?"

"அதெல்லாமா போட்டு இருப்பாங்க?" என்று ஆச்சர்யப் பட்ட விவேக்கிடம், "விக்கிபிடியாவுல ஹ்யூமன் பீனிஸ் சைஸ் (human penis size) அப்படின்னு ஒரு ஆர்டிகிள் இருக்கு. அதன் படி ஆணுருப்போட சைஸ் என்னன்னா, அதோட நீளத்தையும் தடிமனையும் சேத்தி சொல்லணும்" என்றதற்குள் தீபக் "ஓ, ப்ரா சைஸ்ல ... " என்று ஆரம்பிக்க சுரேஷின் முறைப்பை பார்த்து வாயடக்கினான்.

சுரேஷ் தொடர்ந்து, "உலகம் முழுக்க சர்வே பண்ணி கண்டு பிடிச்சு இருக்காங்க. ஒரு சராசரி ஆணுருப்போட சைஸ், அதாவும் எரெக்டா இருக்கும்போது, அஞ்சு புள்ளி ஒரு இஞ்சுல இருந்து அஞ்சு புள்ளி ஒன்பது இஞ்சுதான். நீ சொல்ற எட்டு இஞ்சு இருக்கறவங்க உலகத்துல ரெண்டு சதவிகிதம் கூட இல்லை"

இடைமறித்த தீபக், "என்ன பாஸ் ஆஃப்ரிக்காவை அவங்க சேக்கலையா?"

"இங்க உலகம் முழுக்கன்னு போட்டு இருக்கு ... " என்ற சுரேஷ் தொடர்ந்து, "அதேமாதிரி சராசரி தடிமன் ஒண்ணரை இஞ்சு. சராசரி சுற்றளவுன்னு பாத்தா நாலே முக்கால் இஞ்ச்"

விவேக் இப்போது மும்மறமாக தன் ஆள்காட்டி விரல் கட்டை விரலின் நுனியின் ஒரு பகுதியை தொடும்படி வளைத்துப் பிடித்த பிறகு இரு விரல்களையும் நீட்டி சுரேஷின் மேசையிலிருந்த ஸ்கேலால் அளந்து கொண்டு இருந்தான்.

"என்னோடது கடப்பாறை மாதிரின்னு இருக்குன்னு எனக்கு அடிக்கடி தோணும் .. கரெக்டுதான்" என்றான் தீபக் மிகப் பெருமையாக.

விவேக்கின் முகத்திலிருந்த சந்தேகக்கோடுகள் விலக ஆரம்பித்து இருந்தன..

"போய் வேலையை பாருங்கடா ... "

வெளியில் வந்து அவர்கள் பொகும்போது தீபக், "டேய், அந்த டேப்பை எனக்கு கொஞ்சம் இரவல் தர்றியா?" என்றான்.




No comments:

Post a Comment