Thursday, March 5, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 11


“சொல்லுங்க என்ன பேசனும்... இந்த கவரை யார் கொடுத்தாங்க” என்றாள் மான்சி அவள் குரலில் முன்பிருந்த துடிப்பு சுத்தமாக இல்லை

“ மூணுமாசம் முன்னாடி ஒருவேலையா பாபநாசம் போயிருந்தேன் அப்போ உன் மாமா அண்ணாமலையை பார்த்தேன் அவர்தான் இதை உன்கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்தார்” என்று சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே கூற

“சரி அதை ஏன் இவ்வளவு நாள் கழிச்சு இப்போ கொண்டுவந்து கொடுக்கிறீங்க” என்றாள் மான்சி

“அப்போ குடுக்கனும் தோனலை இப்போ தோனிச்சு அதான் எடுத்துட்டு வந்தேன்” என்ற சத்யன் அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ஜக்கை இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்து

“ மான்சி நான் அப்போவே இந்த லட்டரை பிரிச்சு படிச்சிட்டேன்.... அடுத்தவங்களுக்கு வர்ற லட்டரை படிக்கிறது தப்புதான்.... அது எனக்கு அப்போ தோனலை....
மான்சி இந்த லட்டர் எழுதியிருக்கிற ரகுவும் நீயும் ஒருத்தரையொருத்தர் விரும்பியிருக்கலாம்....
அதை மறைச்சோ இல்லை மறந்தோ நீ என்கூட வாழனும்னு அவசியமில்லை மான்சி... நீ எப்ப வேனும்னாலும் ரகுவை தேடிப்போகலாம்...
அதுக்கு நீ என்கிட்ட விடுதலை கேட்டாலும் நான் தருவதற்கு தயரா இருக்கேன்.....


பிடிக்காத ஒருத்தன் கூட சேர்ந்து வாழ்ற இந்த நரக வாழ்க்கை இனிமே உனக்கு வேனாம் மான்சி....
நீ எப்ப வேனும்னாலும் இங்கிருந்து போகலாம் அதனால எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் சமாளிச்சிக்கிறேன்” என்று நீளமாக பேசிவிட்டு அவள் பதிலை எதிர்பார்த்து சத்யன் நின்றான்

அவ்வளவு நேரம் தலைகுனிந்து இருந்த மான்சி இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து "அப்போ நான் இங்கே இருக்க வேனாம் போன்னு சொல்றீங்களா" என்றாள்

"இல்ல நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை... பிடிக்காத இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம்..... விருப்பமில்லாத இந்த பந்தத்தை நீ எந்த கட்டாயத்தினாலும் அனுபவிக்க வேண்டாம்ன்னுதான் அப்படி சொன்னேன் மான்சி"

" உங்களுக்கு எப்படி தெரியும் இது எனக்கு பிடிக்காத பந்தம்னு .... உங்களுக்கு ஒரு உன்மை சொல்லட்டுமா... எனக்கு சின்னவயசுல இருந்தே எனக்கு சொந்தமானதை அடுத்தவங்களுக்கு விட்டுகொடுக்க மாட்டேன் .... என் அப்பா என் அம்மாவை மறந்த ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு வந்தபிறகு நான் அவரை அப்பான்னு கூப்பிடுறதையே விட்டுட்டேன்.. ... என் அம்மாவோட ரூமுக்குள்ள இருந்து அவங்களோட கொஞ்சி பேசுற சத்தம் கேட்டது அது மட்டும்தான் காரணம்....

"முதலில் எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை தான்.... ஆனா உங்களோட ஒருவாரம் சேர்ந்து வாழ்ந்த பிறகு உங்க முரட்டுத்தனமும் வேகமும் எனக்கு ரொம்ப பயத்தை உண்டுபண்ணாலும் எனக்கு அது பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியாம இருந்தேன் .... அப்புறம்தான் அன்னிக்கு நம்ம ரெண்டுபேருக்கும் பிரச்சனை வந்ததே அன்னிக்கு அண்ணாமலை மாமா வந்து இதோ போல ஒரு லட்டரை எடுத்துட்டு வந்து என்கிட்ட குடுத்தார்.... அதுல ரகு என்னை பத்தி தன்னோட காதலை பத்தி விரிவா சொல்லியிருந்தார்.... எனக்கு அதை படிச்சுட்டு ரொம்ப வேதனையா இருந்தது .... ரொம்பநேரம் கண்ணீர்விட்டு அழுதேன் .... அப்பதான் நீங்க வந்து வற்புறுத்தி கூப்பிட்டீங்க நானும் வரமுடியாதுன்னு சொன்னேன் அப்புறம் நீங்க ரொம்ப கோபமா பேசிட்டு போய்ட்டீங்க .... நீங்க போனதுக்கப்புறம் தான் என் மனசே எனக்கு புரிஞ்சது ரகுவோட கடிதம் மறந்துபோச்சு நீங்க பேசினது மட்டும்தான் ஞாபகம் வந்தது ... நான் இல்லாம உங்களால இருக்க முடியாது எப்படியும் நீங்க வந்து என்னை தூக்கிட்டு உங்க கட்டில்ல போடுவீங்க அணைச்சுப்பீங்க அப்படியெல்லாம் நெனைச்சு ரொம்ப ஏங்கிபோய் உங்களுக்காக காத்திருந்தேன்.... அப்பதான் என் மனசே எனக்கு புரிஞ்சது நான் உங்களைவிட்டு பிரியமுடியாதுன்னு நெனச்சேன்...மறுநாளும் உங்களுக்காக ரொம்ப ஆசையோட ஏக்கத்தோடு காத்திருந்தேன் "

என்று மான்சி சொல்லிகொண்டு இருக்கும் போதே சத்யன் எழுந்து அவளை நெருங்கி அவள் தோள் பற்றி தூக்கி நிறுத்தி தன் மார்பில் சாய்த்து "மான்சி இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே ஆனா இனிமே உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன் மான்சி " என்று சத்யன் சொல்ல

தன் பலமுழுவதும் திரட்டி அவனை விலக்கித் தள்ளிய மான்சி " ச்சீ இன்னும் அந்த உடம்பு சுகத்துக்காக உங்களை நினைச்சு ஏங்கின மான்சின்னு நெனைச்சீங்களா ... இப்போ நான் வேற மான்சி ... என்னால எதையும் மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது " என்று கூறியவள் வேகமாக பால்கனியில் போய் உட்கார்ந்து கொண்டாள்


மான்சி அப்படி சொல்லிவிட்டு போய் பால்கனியில் உட்கார்ந்துகொண்டதும் சத்யன் அவள் பின்னாலேயே வந்து

“ மான்சி நீ சொல்லறது எனக்கு புரியலை ... எனக்காக ஏங்கினேன் சொல்ற அப்பறமா ஏன் இப்படி உதறித்தள்ளிவிட்டு வர இதிலே எது உன்மை மான்சி” என கேட்க

வெடுக்கென் அவனை திரும்பிப்பார்த்து “ ம் ரெண்டுமே உன்மைதான்.... அன்னிக்கு இருந்த மான்சிக்கு இவன் நம்ம புருஷன் இவனை அணைச்சுகிட்டு படுத்துக்கனும்...
இவனோட சல்லாபிக்கனும் அப்படிங்கற ஆசையெல்லாம் இருந்துச்சு.. ஆனா இப்போ உங்களைப்பார்த்தாலே அருவருப்பா இருக்கு....
உன்மையை சொல்லனும்னா நான் உங்க முகத்தை பார்த்து பேசினா இப்போ இருக்கிற இந்த முகம் என் மனசுல வரவேயில்லை...
அன்னிக்கு அமுதாக்கூட வேகவேகமாக உற்ச்சாகத்தோடு செக்ஸ் பண்ணிகிட்டு இருந்த அந்த முகம்தான் ஞாபகம் வருது....
அப்படி ஞாபகம் வரும்போதெல்லாம் அன்னிக்கு மாதிரியே வாந்தியும் வருது...
தினமும் ஒவ்வொரு முறையும் உங்க முகத்துக்கு முன்னால நான் வாந்தியெடுத்து அதை நிரூபிக்கனும்னு நெனைக்கிறீங்களா” என்று சத்யனைப் பார்த்து மான்சி நேருக்குநேர் கேட்டதும்

சத்யன் மனம் நோக தன்மேல் உருவான அருவருப்பில் கூனிக்குறுகிவிட்டான்... சிறிதுநேரம் தலைகவிழ்ந்து நின்றவன் பிறகு “ சரி மான்சி நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன்...
அதனாலதான் சொல்றேன் நீ ஏன் இந்த அருவருப்பான என்னை சகிச்சுக்கிட்டு இங்கே இருக்கனும்....
நான் உனக்கு விவாகரத்து குடுத்துறேன் நீ உன்னை விரும்புற இந்த ரகுவையே மேரேஜ் பண்ணிக்க...
அதிலே எனக்கு எந்த வருத்தமும் கிடையாது... நான் அதுக்கு தயராகத்தான் இருக்கேன் மான்சி “ என்று சத்யன் வருத்தமுடன் கூறினான்

மான்சி உடனே பதிலடி கொடுத்தாள் “ஏன் யாரோட பொண்டாட்டியாவது மறுபடியும் கிடைச்சுட்டாளா....
ஆனா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை... இதோ இந்த பெட்ரூம்லயேக் கூட கூட்டிட்டு வந்து படுக்க வைச்சுக்கங்க....
நான் அதுக்காக ஏங்கி வருந்த மாட்டேன்” என்று எகத்தாளமாக மான்சி சொல்ல

இப்போது சத்யனுக்கு கோபம் வந்தது ஆனால் கீழே அப்பா இருக்கிறார் என்பதை உணர்ந்து மான்சியை நெருங்கி அவள் கைகளை பற்றி அறைக்குள் இழுத்துவந்து கட்டிலில் தள்ளியவன் அவள் அருகே இடுப்பில் கைவைத்து கொண்டு

“ என்ன மான்சி நான் எவ்வளவோ பொறுமையாக பேசுரேன் நீ என்னை மட்டம் தட்டிக்கிட்டே இருக்க...
ஆமா நான் இன்னொருத்தன் பொண்டாட்டியை வச்சிருந்தேன் தான்...
அதுதான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே இன்னும் நீவேற அதை சத்தம் போட்டு சொல்லனுமா....
இவ்வளவு ரோசா பேசுற நீ இதுக்கு என்னடி பதில் சொல்லப்போற... நீயும் என்கூட ரெட்டை வாழ்க்கை தானே வாழ்ந்திருக்கே...
அதை ஒத்துக்க மனசில்லாம என்னோட குற்றத்தையே மறுபடியும் மறுபடியும் சொல்லி நீ தப்பிச்சுக்கலாம்னு பார்க்காதே....
நான் பொய்னன்னா அப்புறமா ஏன் உனக்கு இந்த லட்டர் வந்தது... நீ ரகுவை காதலிச்சது உன்மைதானே ” என்று சத்யன் கோபமாக கேட்க

அவன் என்னதான் நான் உனக்க விவாகரத்து தர்றேன் நீ போய் ரகுவிடம் சேர்ந்து வாழுன்னு சொன்னாலும்... தன் மனைவி இன்னொருத்தனை காதலிச்சா என்பதை ஏற்றுக்கொள்ளாதது அவன் பேச்சிலேயே தெரிந்தது

“இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க.. நான் ரகுவை காதலிச்சதால நீங்க செய்த இந்த தப்பை மறந்து உங்களோட வாழனும்னா... இல்லை நீ இன்னொருத்தனை காதலிச்சவ அதனால எனக்க வேண்டாம் நீ போயிருன்னு சொல்றீங்களா” என மான்சி நிதானமாக சத்யனை கேட்க

“ ஆமா அப்படித்தான் வச்சுக்க... ஒன்னு என்கிட்ட டைவர்ஸ் வாங்கிகிட்டு ரகுவோட போய் சேர்ந்துரு... இல்லை எல்லாத்தையும் மறந்து என்கூட சேர்ந்து வாழு... ரெண்டில் ஒன்னு முடிவு பண்ணி சொல்லு மான்சி” என சத்யன் தீர்மானமாக கேட்க

மான்சி நிமிர்ந்து உட்கார்ந்தாள் “ நான் என்ன முடிவு பண்றது...கடைசியா நாம இந்த விஷயத்தை பத்தி தெளிவா பேசுறது நல்லது... தயவுசெய்து குறுக்கே பேசாம நான் சொல்றதை கேளுங்க அப்பதான் உங்களுக்கு புரியும்.... இப்போ என்னை ரகுகிட்ட போயிடுன்னு சொல்றீங்களே என் மனசில ரகுவை பத்தின எந்த விஷயமும் இல்லை தெரியுமா”...

“இன்னும் கேட்டா நான் அவனை காதலிக்கவே இல்லைன்னு கூட சொல்லுவேன்... என்ன அப்படி நம்பாம பார்க்கிறீங்க நான் சொல்றது உன்மை”...

“நான் காலேஜ்ல படிச்சப்போ ரகு அவர் தங்கை ரேகாவை கொண்டுவந்து விட வருவார் அப்போ அவர் கேட்கிட்ட நின்னு பார்ப்பார் நானும் பார்ப்பேன் ... மத்தபடி நான் ஒருநாள் கூட அவர் வரலைன்னு ஏங்கி காத்திருந்ததே இல்லை... நான் என் படிப்பு உண்டு நான் உண்டுன்னு இருப்பேன்.... அவரை பார்க்கிற நேரம் தவிர மற்ற நேரத்தில் அவருடைய ஞாபகம் கூட எனக்கு வந்ததில்லை”....

“என் அப்பா அம்மாவை பிரிஞ்சு நான் கிட்டத்தட்ட பத்து வருஷமா தனிமையில ஹாஸ்டல்லயே இருந்தேன் ...

"தனிமை உணர்ந்து வேதனை படும் அந்தமாதிரியான நேரத்தில் ரகுவோட பார்வையும் அவர் எனக்காக காத்திருந்ததும் பார்த்து நமக்காகவும் காத்திருக்க ஒருத்தர் இருக்காரே அப்படின்னு மனசுக்கு ரொம்ப இதமா இருந்துச்சு ....

"ஆனா அவரை கல்யாணம் பண்ணிக்கனும் அவர் கூட சேர்ந்து வாழனும் அப்படியெல்லாம் நான் ஒரு நாள் கூட கற்பனை பண்ணி பார்த்ததில்லை...

“ஒருநாள் ஐஸ்கிரீம் பார்லருக்கு ரேகா கூட போயிருந்தப்ப இன்னிக்கு என்ன நாள் தெரியுமான்னு ரகு கேட்டார்... எனக்கு தெரியலைன்னு சொன்னேன்... உன்னை நான் முதன்முதலாக சந்திச்ச நாள்ன்னு சொன்னார்... எனக்கு அப்பவே நாம ரகுவை உன்மையா காதலிக்கிறேனா இல்லையான்னு சந்தேகம் வந்துச்சு”

“அன்னிக்கு மாமா ரகுவோட லட்டரை குடுத்தப்ப கூட... உன்மையாவே இப்படி ஒரு மனுஷனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டமேன்னு தான் அப்படி அழுதேனே தவிர... அவர் விட்டு இப்படி கல்யாணம் பண்ணிகிட்டேனேன்னு வருந்தவில்லை....

"நீங்க என்கூட சண்டை போட்டுட்டு போன அடத்த நிமிஷமே நான் ரகுவை பத்தின அத்தனையும் மறந்துட்டேன்”...

"அன்னிக்குத்தான் என் மனசே எனக்கு புரிஞ்சுது... அந்த ஒரே நாள்ல நான் உங்களுக்காக ஏங்கித்தவிச்சு ரொம்பவே நொந்து போனேன்.... என் வாழ்க்கையில் அந்த மாதிரி கொடுமையான தனிமையை பீல் பண்ணதே இல்லை... ஒரு நைட் முழுக்க உங்க நெனைப்பிலேயே வெந்துபோனேன்”....

“ஆனா மறுநாள் உங்களோட சுயரூபம் தெரிஞ்சப்ப.... உங்க மேல எனக்கு இருந்த ஏக்கம். தவிப்பு. ஆசை.,அன்பு, எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டேன்...

"இப்போ அதையெல்லாம் புதைச்ச இடத்தில் பெரிய மரமே வளர்ந்து போச்சு... அந்த மரத்தை நீங்க வெட்ட முயற்சி பண்ணாலும் அது மறுபடியும் துளிர்விடத்தான் செய்யும்....அதனால நாம இனிமேல் அதை பத்தி பேசறதை விட்டுரலாம்”

“எல்லாத்தையும் மறந்து என்கூட சேர்ந்து வாழுன்னு சொன்னீங்க அதவும் என்னால முடியாது.... உங்களோட தகாத உறவுக்கு ஒரு பலி கொடுக்கவேண்டியிருந்தது அது நானா முத்துவா என்ற போட்டியில் சம்மந்தமேயில்லாமல் என் குழந்தை பலியாயிடுச்சு... அத்தோட நமக்குள்ள இருந்த எல்லாமே முடிஞ்சுபோச்சு”...

“உங்ககூட சேர்ந்து வாழததுக்கு நான் இனிமேலும் எதுக்காக இங்கே இருக்கனும்னு நெனைச்சீங்கன்னா அதை நீங்களே முடிவு பண்ணிக்குங்க....
நீங்க என்னை இங்கருந்து அனுப்பினா நான் நிச்சயமா ஒரு விடுதியில தங்கி ஏதாவது ஒரு வேலையை தேடி பொழைச்சுக்குவேன்...
வேற யார்கிட்டயும் போகமாட்டேன்...
இனிநீங்க என்னை அனுப்புறதா வேண்டாமான்னு நிதானமா யோசிச்சு காலையில சொல்லுங்க.... என்னால இதுக்கு மேல பேச முடியலை தூங்கனும் ப்ளீஸ்” என்று மான்சி சிறு கெஞ்சலுடன் முடிக்க

“சரி மான்சி நீ தூங்கு ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கிளியர் பண்ணிடு நான் போயிர்றேன் அப்புறமா தூங்கு” என்று சத்யன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி சொல்ல

“ம் கேளுங்க” என்றாள் மான்சி

“ நீ ரகுவை பத்தி சொன்னதை நான் ஏத்துக்கிறேன் நம்புறேன்.... ஆனா எனக்காகத் துடிச்சேன் தவிச்சேன் ஏங்கினேன் அப்படின்னு நீ சொல்றதை என்னால நம்ப முடியலை மான்சி” என்று சத்யன் நிதானமாக கூற




“ ஏன் நம்பமுடியலை... ஒருவேளை உங்க பணத்துக்காகத்தான் நான் வாழ்ந்தேன் உங்ககூட படுத்தேன்னு சொல்லப்போறீங்களா” என்று மான்சி நக்கலாக கேட்க*

உன்னுடைய நக்கல் பேச்சு என்னை ஒன்றும் செய்யாது என்பதுபோல அதே அலட்சியத்துடன் கைகட்டி நின்றபடி “ அது அப்போ இருந்த சத்யன் அப்படி சொன்னான்... இப்போ அப்படியில்லை நீ எப்படிப்பட்டவன்னு நான் புரிஞ்சு திருந்திட்டேன்.... ஆனா அதுக்காக நான் கொடுத்த விலை என்னோட உயிரிலிருந்து உருவான என் குழந்தை”....என்ற சத்யன் கட்டியிருந்த கைகளை பிரித்து தன் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான்....

ஒருவேளை அழுகிறானோ என மான்சி நினைக்க.... மறுபடியும் தொண்டையை கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான்

“ நான் சொல்ல வந்ததே வேற மான்சி.... நீ எனக்காக ஏங்கி தவிச்சது உனெமையா இருந்தா நான் அமுதா வீட்டுக்கு போறதை ஏன் தடுக்கலை...?...
நான் அவ வீட்டுக்கு போறதை ஏன் தினமும் நின்னு வேடிக்கைப் பார்த்த...?...
உன்மையாவே நீ என்னை நேசித்து கணவனா ஏத்துகிட்டு இருந்திருந்தால் ஏன் என்னை அமதா வீட்டுக்கு போறதை தடுத்து நிறுத்தி என்னை திருத்தி உன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்களை....?

" உன்னோட இந்த செயல் எப்படியிருக்குன்னா ..ச்சே இவன் எங்கயாவது எவகிட்டயாவது ஒழிஞ்சு போகட்டும் நம்மளை நிம்மதியா விட்டாப் போதும்ங்கற மாதிரி இருக்கு மான்சி”.. என்று சத்யன் நிறுத்த

“இல்ல இல்ல சத்தியமா நான் அப்படி நினைக்கலை என்னால அப்ப எதுவும் சிந்திக்க முடியலை அதான் உன்மை” என மான்சி வேகமாக மறுத்து பேச ...

"இல்ல மான்சி நீ சொல்றதை என்னால ஒத்துக்கொள்ள முடியாது...
" மூணுமாசமாவா உன்னால சிந்திக்க முடியாம அவ வீட்டுக்கு அனுப்பிட்டு கைகட்டி நின்னு வேடிக்கைப் பார்த்த ...
"அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒரு உன்மையான பொண்டாட்டி என்ன பண்ணியிருப்பாள் தெரியுமா...
"நான் அமுதா வீட்டுக்குள்ளே போனவுடனேயே வீட்டு கதவை தட்டி எங்களை வெளியே இழுத்து வந்து எங்க ரெண்டுபேரையும் கொலை செய்திருப்பாள்...
"தன்னோட புருஷனை இன்னொருத்திக்கு விட்டுகொடுத்துட்டு சும்மா நின்னு வேடிக்கை பார்த்திருக்க மாட்டாள்....
"இல்லை நான் மென்மையானவள் ரொம்ப பயந்தவள் என்னால கொலையெல்லாம் செய்யமுடியாது அப்படின்னு நீ சொன்னா.. "என்னை உன் அன்பால திருத்த முயற்சி பண்ணிருக்கனும் ...
"என்னால செக்ஸ் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு உனக்கு தெரியும்... அப்போ நீ என்ன பண்ணியிருக்கனும் உன் அழகால என்னை மயக்கி என்னை உன் காலடியில விழவைத்து வேடிக்கை பார்த்திருக்கனும்...
"இப்படி உன் அன்பை காட்ட எந்த முயற்சியுமே பண்ணாம நீ ஏங்கினே தவிச்சுப் போன அப்படின்னு சொல்றதை நான் எப்படி நம்புறது மான்சி...

" நீ இதை பத்தி நல்லா யோசிச்சு எனக்கு காலையில ஒரு பதிலைச் சொல்லு... இல்லை நிரூபிச்சு காட்டு... ஆனா மறுபடியும் பொய் மட்டும் சொல்லாதே"... என்ற சத்யன் அவளை நெருங்கி அவள் கண்களை பார்த்துகொண்டே அவள் கீழுதட்டை தன் விரல்களால் தடவி " ஏன்னா இந்த அழகான உதடுகள் பொய் பேசுவதை நான் விரும்பலை மான்சி..என்று சத்யன் கூறிவிட்டு தனது அறைக்கு போக

தன் உதட்டை தடவிய அவன் விரல்களை தட்டிவிடக் கூட தோன்றாமல் மான்சி விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்



" ஒன்று நீ பேசு அல்லது...

" உன் விழிகள் பேசட்டும்...

" இருவரும் ஒரே சமயத்தில்....

" பேசினால்

" நான் எப்படி கேட்பது

" மூன்றாவது கண்ணால்....

" பரமசிவன் செய்ததை ...

" நீ உன் கடைக்கண்ணாலேயே...

" செய்துவிடுகிறாயே...

" நீ என்னை சுட்டெரிப்பதைதான்

" சொல்கிறேன் அன்பே..!


சத்யன் அவன் அறைக்கு போனதும் மான்சிக்கு ஒன்றுமே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ...

சத்யனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது .....சத்யன் கேட்ட கேள்விகளை அவள் மனமே அவளிடம் திருப்பிக்கேட்டது

அப்படின்னா நான் அந்த ஒருவார உடல் சுகத்துக்காகத்தான் ஏங்கினேன்னா .... மற்றபடி என் புருஷன் என்ற பாசம் நேசம் என் மனதில் இல்லையா...

அவனக்கு மட்டும்தான் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்தால் எனக்குக்கூட அதே செக்ஸ் உணர்வுதான் அன்று அவனை நாடி தேடி அலைந்ததோ..

அப்படின்னா நான் தாலிகட்டிய புருஷன் மேல் அன்பு ஆசை என்று சும்மா ஒரு கௌரவப் போர்வையை போர்த்திக்கொண்டு நாடகம் ஆடுகிறேனா....

என்னை பற்றி எனக்கே உணர்த்திவிட்டு போகிறானே இதில் எது உன்மை... என்று மனம் கலங்க அவள் தன்னைப்பற்றிய சுயசிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்

அப்போதுதான் அவளுக்கு முக்கியமாக ஒன்று ஞாபகத்துக்கு வர முகம் பளிச்சென்று ஆனது

இவன் என்னை பற்றி சுற்றிக்காட்டியது எல்லாம் பொய்... அன்று முத்து வந்தபோது கூட அய்யோ இவன் மாட்டிக்கொள்ளப் போகிறானே என்றுதானே கண்ணீர் விட்டேன்....
எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று சிறிது நேரம் தவித்தேனே

அதெல்லாம் வெறும் வேசமா இல்லையே அன்று நான்விட்ட கண்ணீர் நிஜம்

அப்புறம் முத்துவை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்ற போது இவனுக்கு எந்த அவமானமும் நேரக்கூடாது என்று மொட்டைமாடியில் உட்கார்ந்து இரவெல்லாம் அழுதது பொய்யா அதனால் தானே என் வயிற்றுக் குழந்தையைக் கூட இழந்தேன்...

அவன் என்னை குற்றவாளியைப் போல் கேள்விகேட்டு மடக்கிய போது நான் ஏன் இதையெல்லாம் சொல்ல மறந்தேன் என்று தன்னையே நொந்தாள்...

என்னையா ஏமாற்றுக்காரி என்றாய் இரு இதோ வர்றேன் என்று அவன் அறைக்கு செல்லும் இடைக்கதவை தள்ளித்திறந்து கொண்டு உள்ளே போனாள்


அங்கே சத்யன் வெறும் சாட்ஸ்ஸுடன் கட்டிலில் கவிழ்ந்து ஒருகாலை நீட்டி மறுகாலை மடக்கி மடக்கிய காலுக்கு கீழே ஒரு தலையனையும் பக்கதில் ஒரு தலையனையையும் வைத்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு பெண்ணை அணைத்தபடி தூங்குவதுபோல் படுத்திருக்க...
அவன் முகம் மான்சியின் பக்கமாக திரும்பியிருக்க அவன் உதடுகள் லேசாக விரிந்து அதிலிருந்து கோடாக உமிழ்நீர் வழிந்து தலையனையை லேசாக நனைத்திருந்தது...
அவனது தலைமுடி கலைந்து நெற்றியில் வழிந்து ஒரு கண் மட்டும் மறைத்திருந்தது....
அவன் கைகள் தலையனையை இறுக்கி நசுக்கி தன் மார்போடு அணைத்து கொண்டிருந்தது....

அவனை அந்தமாதிரி நிலையில் மான்சி இதுவரை பார்த்ததேயில்லை... அவளையும் அறியாமல் அவள் உடலிலும் மனதிலும் பரபரவென சில மாற்றங்கள் நிகழ....

அய்யோ இது என்ன அசிங்கம் இவ்வளவு இறங்கி விட்டேனே என அஞ்சியவளாக அவனை எழுப்பி தான் சொல்ல வந்ததை சொல்லாமல் அவசரமாக தனது அறைக்கு ஓடிப்போனாள்

அறைக்குள் போய் தன் முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் ... அவளுக்கு தனது பலகீனத்தை நினைத்து பயம் வந்துவிட்டது... இத்தனை நாள் அவனை அவன் அருகாமையை நினைத்து ஏங்கிய மனது இப்போது அவனை வெகு அருகில் கண்டதால் இன்னும் அதிகமாக ஏங்க ஆரம்பித்தது

சிறிதுநேரம் வரை அழுத மான்சி பிறகு பாத்ரூம் போய் தன் முகத்தை நன்றாக தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டு வந்தாள்....பிறகு சிறிது தெம்பு வர கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தாள் ...
நான் ஏன் அவனிடம் போய் என்னுடைய சுய விளக்கத்தை சொல்ல வேண்டும்....

மனைவியின் மீது உன்மையான அக்கறை உள்ளவன் எதையும் தானாகவே தெரிந்து கொள்ளட்டும்....
அதுவரை அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பக்கூடாது என்று ஒருமனதாக மான்சி முடிவெடுக்க

‘ம்ம் இந்த முடிவில் நீ எவ்வளவு நாள் பலமாக இருக்கிறாய் என்று பார்க்கலாம்... இதோ கொஞ்சநேரம் அவனை படுக்கையில் அந்த நிலையில் பார்த்ததற்கே இப்படி தடுமாறிப் போகிறாய் நீ எப்படி உன் முடிவில் உறுதியாக இருப்பாய்’ என்று அவள் மனம் அவளை ஏளனம் செய்ய

“ச்சீ போ எப்படி இருக்கபோகிறேன் என்று பார்’ என மனதிடம் சவால் விட்டுவிட்டு மான்சி கர்வத்துடன் கால்களை நீட்டி படுத்துவிட்டாள்

மறுநாள் சத்யனை எந்தவிதத்திலும் சந்திக்க முடியாதபடி தனது அன்றாட அலுவல்கள் சிலவற்றை மாற்றி அமைத்துக்கொண்டாள் ...

சத்யனும் அவள் நடவடிக்கைகளை கவனித்து அவளுக்கு இந்த வீட்டை விட்டு என்னைவிட்டு போக மனமில்லை ....

ஆனால் அவளது தன்மானத்தையும் விட்டுகொடுத்து என்னுடன் சேர்ந்து வாழவும் மனமில்லை என்பது தெளிவாக புரிந்துபோக....

என்னுடன் வாழ விருப்பம் இல்லை இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என்று சொல்லாமல்.....

எப்படியோ இந்த வீட்டில் எனக்கு மனைவியாக அவள் நடமாடினாலே போதும்....

கொஞ்சநாளைக்கு அவள் இஷ்டப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து சத்யன் அவளைவிட்டு ஒதுங்கியே இருந்தான்...
எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவாள் என்று நம்பினான்


சிலவாரங்களுக்கு பிறகு அண்ணாமலையுடன் ரேகா மான்சியை தேடி வர மான்சி எந்த மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் அவளை வரவேற்றாள்

ரேகாவை தனது அறைக்கு அழைத்து சென்ற மான்சி அவளை உட்காரச்சொல்லி விட்டு தானும் அவள் எதிரில் உட்கார்ந்தாள் .... வந்ததில் இருந்து ரேகா தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாதது மான்சிக்கு சங்கடமாக இருந்தது

“ என்ன ரேகா எதுவுமே பேசமாட்டேங்கற... என்மேல பயங்கர ஆத்திரமா இருக்குதா ரேகா” என மான்சி கேட்டதும்


“ஆத்திரம் எதுவும் கிடையாது மான்சி பரிதாபம் தான் இருக்கு.....
நான் அனுப்பின லட்டர் எதுக்குமே உன்கிட்ட இருந்து எந்த பதிலும் வரலேன்னதும் சரி என்னனென்னு பார்த்துட்டு வரலாம்னு உன் மாமா வீட்டுக்கு நேத்து வந்தேன் அப்புறமா தான் ராணி ஆன்ட்டியும் மாமாவும் எல்லா விஷயமும் சொன்னாங்க ....

மொதல்ல உன்மேல ரொம்ப கோபம் வந்தது ... ஆனா உன்னோட நிலைமையும் உன் புருஷனோட நடத்தையையும் கேட்டதும் உன்மேல் பரிதாபமாக இருக்கு மான்சி.... எப்படியோ போற்றி பாதுக்காக்க வேண்டிய உன் அழகெல்லாம் இப்படி ஒரு முரடன் கிட்ட மாட்டிகிட்டு சீரழிஞ்சு போச்சே மான்சி இனிமே இதை மாத்த முடியுமா மான்சி.... என்று ரேகா சொல்லிகொண்டு இருக்கும் போதே

“எதை மாத்தனும்” என்று கேட்டபடி சத்யன் உள்ளே வர பெண்கள் இருவருமே திகைத்துப்போய் எழுந்து நின்றுவிட்டனர்

உள்ளே வந்த சத்யன் நிதானமாக மான்சியின் அருகில் வந்து அவள் கையை எடுத்து தன் கையில் வைத்து விரல்களை விரல்களோடு பின்னிக்கொண்டு

"உன் பிரண்ட் யாரோ உன்னை பார்க்க வந்துருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க அதான் யாருன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன் ரேகாவிடம் திரும்பி

“ என் பொண்டாட்டிக்கு தன் தோழியை பார்த்தும் பேச்சே வரலைன்னு நெனைக்கிறேன்.... நான் மான்சியோட புருஷன் சத்யன்... மரப் பட்டறை சொந்தமா வச்சுருக்கேன் அப்பா ரைஸ்மில் வச்சு நடத்துறார்.... என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்ட சத்யன்

“என்ன டியர் வந்தவங்களுக்கு ஏதாவது குடிக்க குடுத்தியா இல்ல வந்ததில் இருந்து பேசிகிட்டே இருக்கீங்களா” என்று மான்சியிடம் கேட்க

மான்சி ரொம்பவே தடுமாறிப் போனாள் ... திடீரென வந்தான் அவனே அறிமுகம் பண்ணிகிட்டான்... அப்புறம் என்னை வேற டியர்னு சொல்றான்.. கையை வேற புடிச்சுகிட்டு விடமாட்டேங்கறான்... என்னதான் நடக்குது என்று புரியாமல் மான்சி விழிக்க

“ இன்னும் நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே” என்று சத்யன் ரேகாவை கேட்க

ஏற்கனேவே அவன் திடீரென வந்து பேசியதில் தடுமாறிப் போயிருந்த ரேகா அவனுடைய இந்த நேரடி கேள்வியால் மேலும் தடுமாறி “ நான் ரேகா திருச்சியில் மான்சி கூட காலேஜில் ஒன்னா படிச்சவ” என்று சொல்ல

ஒருகணம் சத்யன் முகம் சற்று கடுமையாக மாறி பிறகு இயல்பானது “ ஓ நீங்கதான் ரேகாவா... ரகுவோட தங்கச்சி தானே... மான்சி சொல்லியிருக்கா” என்று மேலும் கூறி ரேகாவின் வயிற்றில் புளியை கரைத்தான் சத்யன்

சிறிதுநேரம் அங்கே யாரும் எதுவும் பேசாமல் ஒரு தேவையற்ற மவுனம் நிலவியது

“ நீங்க கொஞ்சநேரம் கீழே வெயிட் பண்ணுங்களேன் நான் என் மனைவிகிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சத்யன் சொன்னதும்

அய்யோ சாமி ஆளை விட்டா போதும் என்று ரேகா “ ம் சரிங்க சார்’’ என்றவள் மான்சியிடம் “ மான்சி நான் கிளம்பனும் கொஞ்சம் சீக்கிரமா கீழே வா” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி திரும்பினாள்

“ நாங்க என்ன கீழே கெஸ்ட உட்கார வச்சுட்டு இந்த கொஞ்சநேரத்தில் பெரிசா என்ன பண்ண முடியும் சும்மா கொஞ்சம் ரொமான்டிக்கா ஏதாவது பேசிகிட்டு இருப்போம் அவ்வளவுதான்... நீங்க போங்க வந்துடுவா” என சத்யன் கேலி குரலில் சொல்ல

ரேகா வேகமாக அறைவிட்டு வெளியே போனதும்... மான்சி சத்யன் பற்றியிருந்த கையை உதறிவிட்டு “உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க.... ஏன் ரேகா முன்னாடி அப்படி நடந்துகிட்டீங்க” என்று கோபமாக கேட்க

அவள் உதறிய கைகளை இன்னும் வலுவாக பற்றி அவளை தன் எதிரில் நெருக்கமாக நிற்கக வைத்து “ ஏன் அப்படி நடந்துகிட்டேனா... நான் உள்ள வரும்போது அந்த ரேகா என்ன சொல்லிகிட்டு இருந்தா... நான் முரடனா... உன் வாழ்க்கை என்கிட்ட வந்து சீரழிஞ்சு போச்சா ... அவ சொல்றா நீயும் இதையெல்லாம் கேட்டுகிட்டு சும்மாவே நிக்கிற... நம்ம புருஷனை பத்தி ஒருத்தி இப்படி கேவலமா பேசறளே அதை மறுக்கனும்னு கூட உனக்கு தோணலை இல்லையா மான்சி... அந்தளவுக்கு உனக்கும் நான் கேவலமா ஆகிட்டேன் இல்லையா மான்சி” எனறு சத்யன் வருத்தமாக கேட்க

மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறி பிறகு சுதாரித்து “ ம் அதுக்குள்ளதான் நீங்க வந்து நாம ரெண்டு பேரு அன்யோன்யமாக வாழ தம்பதிகள்னு சூப்பரா நடிச்சு காமிச்சிட்டீங்களே... இதுல நான் வேற அவளுக்கு விளக்கிச் சொல்லனுமாக்கும்” என்று மான்சி ஏளனமாக சொன்னதும்

"யாருடி நடிக்கிறது நீ இல்ல நானா.... நானும் நீ மாறுவேன்னு பொறுத்துப் பொறுத்து போறேன் ஆனா நீ மாறவேயில்லை...

இப்போ என்னடான்னா இவ வந்து வேற என்னை கேவலமா பேசறா...
" ஏன் மான்சி உனக்கு புருஷன்ங்குற அக்கறை கொஞ்சம் கூட இல்லையா .... மத்த பொண்ணுங்க மாதிரி வாழனும்னு ஆசையில்லையா... ஆனா எனக்கு இருக்கு மான்சி நெறைய இருக்கு ...
"உன்னை எப்படியெல்லாம் வாழவைக்கனும்னு நான் ஆசைபடுறேன் தெரியுமா... உனக்கு அதெல்லாம் எங்கடி புரியப்போகது... உனக்கு கல் மனசுடி...
"இல்லேன்னா உன் வயித்துலே இருந்த என் குழந்தையை என்கிட்டயே மறைச்சிருப்பியா அதுவும் ஒரே வீட்டில் இருந்துகிட்டே....
"இதிலேயே நீ எப்படி பட்டவன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.... இப்பக்கூட உன்னால என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலை பாத்தியா.... ஏன்டி அப்படி முழிச்சு பார்கிறே ..." உன்னை பொண்ணு பார்க்க வந்தப்ப இருந்து இப்போ வரைக்கும் உன்னோட பார்வைகளின் அர்த்தம் எனக்கு புரியவேயில்லை மான்சி" என்று விரக்த்தியாக கூறிய சத்யன் இனி அவளிடம் பேச எதுவுமில்லை என்பது போல் மான்சியை உதறி கட்டிலில் தள்ளிவிட்டு வேகமாக போய்விட்டான்

" ஒனறுமில்லாத விஷயத்தை....

" உலகமே இடியப்போவது போல்...

" முட்டை கண்களோடு...

" அழகு விழிகளை உருட்டி...

" கைகளை விரித்து பேசி.....

" காவியமாக்குகிறாய்....

" உருப்படியான விஷயங்களை.....

" மவுனமே உருவாக .....

" வெளியிட மறுக்கிறாய்....

" ஒரு புரியாத புதிர் தான் நீ...?



No comments:

Post a Comment