Wednesday, April 1, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 5

ஏன் ஆறுமணிக்கு மாயாவை போய் பார்க்கனும் இப்பவே போய்ட்டா சீக்கிரமா மான்சிய பார்க்க கோயிலுக்கு போகலாமே என்று யோசித்தவன்,... அதை உடனே செயல் படுத்தினான்

மேனேஜரை கூப்பிட்டு தான் வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு உடனே காரை எடுத்துக்கொண்டு மாயாவின் வீட்டை நோக்கி வேகமாக காரை செலுத்தினான்
மாயாவின் வீட்டை நெருங்கியவன் கேட்டுக்கு வெளியவே காரை நிறுத்திவிட்டு இறங்கி காரை லாக் செய்துதான்,... அப்போதுதான் சற்று தொலைவில் இவன் காருக்கு முன்னால் வேறு ஒரு கார் நின்றுகொண்டிருந்தது

யாருடைய காராக இருக்கும் என்று யோசித்தபடி கேட்டை திறந்து உள்ளே போனான்,... காலிங்க் பெல்லை அடிக்க கையை தூக்கியவன் உள்ளே பேச்சுக்குரல்கள் கேட்க பெல்லை அடிக்காமல் சிறிதுநேரம் நின்றுவிட்டு,.. பிறகு கதவை தட்டினான்

கொஞ்சம்நேரம் கழித்து யாரது என்ற மாயாவின் அதட்டலான குரல் கேட்க “ நான்தான் சத்யன்” என்றான் இறுகிய குரலில்

அவன் சொல்லி சிறிதுநேரம் கழித்து கதவை திறந்த மாயா “ என்ன சத்யா அரைமணிநேரம் முன்னாடியே வந்துட்ட” என்று வழிசலாக கேட்க


“ ஏன் அதுனால உனக்கு எதுவும் இடைஞ்சலாக இருக்கா,... என்ன வழிவிடாம நிக்கிற மாயா” என்று நக்கலாக கேட்க

“ ஓ ஸாரி மறந்துட்டேன் சத்யா உள்ள வா’,.. என்று கூறி வழிவிட்டாள்

சத்யன் வீட்டுக்குள் நுழைய அங்கே ஏற்கனவே இரு ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்,... அதில் ஒருவன் சத்யனின் லுங்கியை கட்டியிருந்தான்... மற்றெருவன் சாட்ஸ் போட்டிருந்தான்,... அவர்களின் எதிரில் இருந்த டீப்பாயில் ஒரு தட்டில் வறுத்த முந்திரியும்,... பல உயரங்களில் வேட்கா பாட்டில்கள்லும் இருந்தது,...

இருவருமே சத்யனை பார்த்ததும் அசடு வழிய இளித்து “ வணக்கம் சார்,.. நாங்க மாயா மேடத்தை ஒரு புரோகிராமுக்கு புக் பண்ண வந்திருக்கோம்” என்று சொல்ல

சத்யன் “ஓ அப்படியா” என்று மட்டும் சொல்லிவிட்டு பின்புறமாக கையை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான்

மாயா அவனருகே வந்து உரசியபடி நின்று “இவங்க இப்போ போய்டுவாங்க சத்யா நீ உட்காரு,... ட்ரிங்க்ஸ் எடுத்துக்குறியா ” என்றாள்

“ வேண்டாம் மாயா நான் உன் கூட முக்கியமான விஷயம் பேசனும்,... இப்போ முடியுமா இல்லை நான் போய்ட்டு அப்புறமா வரவா” என்று அவர்களை பார்த்தபடி நக்கலாக கேட்டான்

இவன் கேட்டவுடனே அவர்கள் எழுந்துகொண்டனர் “ மாயா நாங்க போய்ட்டு இன்னொருநாள் வர்றோம்,.. ந சாரை கவணி” என்றவர்கள் சாவதானமாக மாயாவின் படுக்கையறைக்குள் நுழைந்து தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு வந்து மாயாவை பார்த்தபடியே கதவை திறந்துகொண்டு வெளியேறினர்

அவர்கள் போனதும் மாயா சத்யனின் கழுத்தில் தன்கைகளை மாலையாக போட்டு “ஹாய் டார்லிங் என்னை பார்க்காம இருக்கமுடியலையா,... அரைமணிநேரம் முன்னாடியே வந்துட்ட ம்” என்று கிறக்கமாக கேட்க

அவள் பேச்சில் இருந்து அவளும் குடித்திருக்கிறாள் என்று புரிந்துகொண்ட சத்யன்,.. அவளை விலக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தான்,... ஆனால் அவனுக்கு முதல்முறையாக அந்த சோபாவில் உட்கார உடல் கூசியது,.. ஆனால் வேறு வழியில்லை காரியம் ஆகவேண்டும்

“ மாயா இங்கே உட்கார்ந்து நான் சொல்றதை கவணமா கேளு” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் சத்யன்

அவன் முகமே மாயாவுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும்,... வேறு எதுவும் பேசாமல் அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்


சிறிதுநேரம் குனிந்து தன் விரல் நகங்களை ஆராய்ந்த சத்யன்,.. பட்டென நிமிர்ந்து “ எனக்கு போன மாசம் கல்யாணம் ஆயிருச்சு மாயா,... உன்கிட்ட தகவல் சொல்ல முடியலை” என்று சத்யன் சொல்ல

அவ்வளவு நேரம் கவர்ச்சியாக இருந்த மாயாவின் முகம் இப்படிக்கூட ஒரு பெண்ணின் முகம் மாறுமா என்பதுபோல் கொடூரமாக மாறியது ,,... ஆனால் சிலநிமிடங்களில் தன் முகத்தை மாற்றிக்கொண்டாள்

“ என்ன சொல்ற சத்யா இதை சொல்லத்தான் இங்கே வந்தியா,... நீ ரொம்ப நாளா என்னை கான்டாக்ட் பண்ணாதப்பவே எனக்கு சந்தேகம்தான்,... ஏன் சத்யா என்னை கல்யாணம் பண்ணபோறதா உங்கப்பா கிட்ட பர்மிஷன் வாங்கப்போறேன்னு சொன்ன,.. இப்போ பார்த்தா இப்படி சொல்ற” என்று ஏளனமாக மாயா கேட்க

“ ஆமா சொன்னேன் தான் ஆனா எங்கப்பா அம்மா அதுக்கு ஒத்துக்கலை,... அதுக்கும் காரணம் இருக்கு,” என்ற சத்யன் தனது அப்பா துப்பறியும் நிருவனம் மூலமாக சேகரித்த தகவல்களை அவளிடம் விவரிக்க அவள் முகம் பேயறைந்தது போல் ஆனது

அவள் முகத்தையே உற்று கவனித்து கொண்டு இருந்த சத்யன்,.. அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் அவன் அப்பா சொன்ன தகவல்கள் எல்லாம் உன்மை என்று நிரூபித்தது

அதுவரை தடுமாறிய சத்யன் இப்போது கால்மேல் கால் போட்டு சோபாவின் பின்புறம் நன்றாக சாய்ந்து அலட்சியமாக உட்கார்ந்தான்

அவனது அலட்சியத்தை கவனித்த மாயா தன் முகத்தை மாற்றிக்கொண்டு “ அதெல்லாம் உன்மையாவே இருந்தா என்ன செய்யபோற சத்யா,... நான் உன்னை ஏமாத்திட்டேன்னு கொடிபிடிக்க போறியா ம் “ என்று நக்கலாக கேட்டாள்

அவள் அழுது ஆர்பாட்டம் செய்வாள் என்று எதிர்பார்த்த சத்யனுக்கு,... அவளது இந்த பேச்சு வந்த வேலை சுலபமாக முடியும் போல இருந்தது

“ நான் ஏன் கொடிபிடிக்க போறேன் மாயா,.. இனிமேல் அவங்க அவங்க போக்கில் போறதுதான் நல்லது,... இதோ நான் உனக்கு வாங்கி கொடுத்த இந்த வீடு,.. அப்புறம் நகைகள் பொருட்கள் இதையெல்லாம் வச்சுக்க,.. இன்னும் கொஞ்சம் பணம் தர்றேன் அதையும் வச்சுகிட்டு செட்டிலாய்க்க,... நான் இனிமே உன் வழியில வரமாட்டேன்,.. நீயும் என்வழியில் வராதே,.. என்ன மாயா சொல்றே” என்று சத்யன் கேட்க

மாயா சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு “ஸோ நீ எல்லாம் பிளான் பண்ணிதான் செஞ்சுருக்க,.. அதனால இனிமே பேசி பிரயோஜனம் இல்ல,... சரி பணம்னா எவ்வளவு குடுப்பே” என்று நேரடியாக பேரத்துக்கு வந்தாள்

ச்சே இவளுடனா இத்தைநாளா இருந்தோம் என்று சத்யனுக்கு உடலெல்லாம் கூச, அவளிடம் பணத்தை பற்றி பேசவே அருவருப்பாக இருந்தது,... ஆனால் வேறுவழி இல்லை பேசித்தான் ஆகவேண்டும்

“ ஒரு ஐஞ்சு லட்சம் தர்றேன் மாயா,.. அவ்வளவுதான் என்னால் முடியும்,.. ஏன்னா இந்த வீடு மத்ததெல்லாம் கணக்கு பார்த்தா கிட்டத்தட்ட நாற்பதுலட்சம் தேறும் அதான் சொல்றேன்” என்று சத்யன் கூற

சிறிதுநேரம் மவுனமாக இருந்த மாயா பிறகு எழுந்து நின்று “ ஓகே சத்யா நான் கொஞ்சம் வெளியே போகனும்,.. நீ கிளம்பு,. உன்னோட புது நம்பர் கொடுத்துட்டு போ நான் யோசிச்சு முடிவு சொல்றேன்” என்று திமிராக சொல்ல

சத்யன் அவளை முறைத்தபடி எழுந்து தனது புது நம்பரை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்

காரில் ஏறியமர்ந்த சத்யன் அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடித்தான்... பிறகு கர்சீப்பால் தன் முகத்தை துடைத்தவன் மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தான்,... மணி ஆறரையை நெருங்க சத்யன் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்து தன் கம்பெனிக்கு விரைந்தான்

கம்பெனியில் இருந்த தனது அறைக்கு ஓடியவன் அங்கிருந்த பாத்ரூமில் குளித்துவிட்டு ,.. எப்போதும் அங்கே இருக்கும் மாற்றுடையை எடுத்து போட்டுக்கொண்டு,... அவசரமாக வெளியே வந்து காரில் ஏறி அமரவும் அவனது அம்மா போன் செய்யவும் சரியாக இருந்தது

" இதோ கிளம்பிட்டேன்ம்மா இன்னும் கால்மணிநேரத்தில் கோயில்ல இருப்பேன்" என்று கூறி இணைப்பை துண்டித்தவன் எடுத்த எடுப்பில் காரை பறக்கவிட்டான் 




சத்யன் காரை கோயிலின் ஓரம் நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே போகவும்... மான்சி அவன் எதிரில் வரவும் சரியாக இருந்தது

சத்யன் அவள் எதிரில் நின்று தன் இடுப்பில் கையூன்றி தலையை பக்கவாட்டில் சாய்த்து... கண்சிமிட்டாமல் அவளை பார்க்க... அவன் பார்வையால் மான்சி முகம் வெட்க சிவப்பை பூசிக்கொண்டது

“ ம்ம் எவ்வளவு நேரமா பார்ப்பீங்க... நேரமாகுது உள்ள வாங்க.. அத்தை உங்களுக்காக வெயிட் பன்றாங்க” என்று வெட்கத்தில் மெலிந்த குரலுடன் மான்சி கிசுகிசுப்பாய் கூற

“ ம்ம் என்ன சொன்ன,... என் காதில விழவே இல்லை,... இப்படி பக்கத்தில் வந்து சொல்லு மானு” என சத்யன் குறும்பாக சொல்ல

“ நான் சத்தமாத்தானே சொன்னேன்,.. எல்லாம் நல்லாத்தான் கேட்ருக்கம்” என்று மான்சி சினுங்கலுடன் கூறினாள்

அவளின் சினுங்களை ரசித்த சத்யன் எட்டி அவள் கையை பிடித்து தன்னருகில் இழுத்து “ இப்போ என்ன செய்வ ம்” என்றவன்,.. மான்சி சுற்றிலும் பார்த்து சங்கடமாக நெளிவதை பார்த்தவன் “ சரிவா மான்சி உள்ளே போகலாம்” என்று அவள் கைகோர்த்து அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் போனான்

மான்சியின் அருகில் நின்று சத்யன் தெய்வத்தை தரிசனம் செய்ததை பார்த்த அவன் அம்மா பிரேமாவுக்கு கண்கலங்கியது ... இவர்கள் இருவரும் இப்படியே பலகாலம் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்தால் அந்த தாய்.

சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்து பிறகு சத்யன் மான்சியை தன்னுடன் காரில் வருமாறு அழைக்க,...அவள் அனுமதிக்காக மாமியாரை பார்த்தாள்

“அதான் கூப்பிடுறான்ல போம்மா நான் இந்த கார்ல வர்றேன்” என்று பிரேமா அனுமதி வழங்கியதும்,..

மான்சியின் முகம் பளிச்சென்று மின்ன வேகமாக சத்யன் திறந்துவிட்டு வழியாக முன்பக்கமாக ஏறி சத்யன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்

சத்யன் மெதுவாக விசிலடித்தபடி காரை ஸ்டார்ட் செய்தான்,... சிறிது தூரம் போனதும் திரும்பி மான்சியை பார்த்து

“ என்ன மான்சி அம்மாகிட்ட கேட்டுதான் என்கூட வருவியா,..என்றவன் . “ச்சே என்ன பொண்டாட்டிடா சத்யா உனக்கு” என்று குறும்பாக நெற்றியில் தட்டிக்கொண்டான்

“ பின்னே அவுங்க கூடத்தானே வந்தேன்,.. அப்புறம் எப்படி உங்ககூட வரமுடியும் அதான் கேட்டேன்” என்று மான்சி கூறியதும்

ஒரு கையை நீட்டி அவளை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டவன் “ இதுதான் மான்சி எனக்கு உன்கிட்ட பிடிச்ச விஷயம்,... யார் மனசும் நோகாமல் நடக்கிறது” என்று கூறி சிரித்தான்

அவன் மார்பில் சரிந்திருந்த மான்சி தன் விரல்களால் அவன் சட்டையின் மேல் பட்டனை திருகிக்கொண்டே “ என்ன இன்னிக்கு இப்படியெல்லாம் பண்றீங்க” என்று வெட்கமாக கேட்க

“ ஏய் நான் என்ன பண்ணேன்... இன்னும் எதுவுமே ஆரம்பிக்கலை மான்சி” என்று குறும்புத்தனமாக கூறிய சத்யன் தன்கையால் அவள் இடுப்பை சுற்றிவளைத்து தன்னுடன் இன்னும் அதிகமாக அவளை இறுக்கி கொண்டான்

அவனுடைய இந்த செயல்கள் மான்சி இதுவரை அனுபவித்தறியாத ஒன்று,... இதுவரையில் இருவரும் அதிகபட்சம் கைகளை மட்டும்தான் கோர்த்துபடி நடந்திருக்கிறார்கள்

“ என்ன மான்சி எதுவுமே பேசமாட்டேங்குற,.. இதெல்லாம் உனக்கு பிடிக்கலையா,... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நாம இப்படி விலகியே இருக்கறது,... இதுபோல சின்னசின்னதா தொட்டுக்கிட்டா ஒன்னும் தப்பில்லை,... அப்பதானே அடுத்த ஸ்டெப் போகமுடியும்” என்று சத்யன் கண்சிமிட்டி சொல்ல

“ என்னது அடுத்த ஸ்டெப்” என்று மான்சி அவன் முகத்தை பார்க்காமல் கவிழ்ந்துபடி கேட்க

“ என் முகத்தை நிமிர்ந்து பாரு சொல்றேன்” என்று சத்யன் கூற

மான்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள்,.... சத்யன் அவள் இதழ்களை பார்த்தபடி தன் உதட்டை நாக்கால் தடவி ஈரப்படுத்தி கண்சிமிட்டி சிரித்தான்

மான்சி சிலிர்த்துப் போய் பட்டென அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்

சத்யனுக்கு அவளை ரொம்ப சீண்டி விட்டு விட்டோமோ என்று வருத்தமாக இருந்தது “ என்ன மான்சி இதெல்லாம் பிடிக்கலையா,... சட்டுனு விலகிப்போய்ட்ட” என்று வருத்தமாக கேட்டான்

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மான்சி அதில் இருந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் காண சகிக்காமல் “நான் பிடிக்கலைன்னு சொன்னேனா இங்கப்போயா இதெல்லாம் பேசுவாங்க” மேலே சொல்லாமல் மான்சி உதட்டை கடித்து நிறுத்த

சத்யன் அவசரமாக “ வேற எங்க மான்சி பேசனும்” என்றான்

அவன் அவசரத்தை கண்டு மான்சிக்கு சிரிப்பு வந்தது தன் உதட்டு நுனியை துருத்தி “ வெவ்வே நான் ஒன்னும் சொல்லமாட்டேன்,.. பாவம் இவரு சின்ன பாப்பா ஒன்னுமே தெரியாது” என கையை ஆட்டியபடி பழித்து காட்டி குறும்பு பேச

“ உதட்டையா சுழிச்சு காட்ற நீ வா வீட்டுக்கு அதை கடிச்சிர்றேன்” என சத்யன் பதிலுக்கு குறும்பு பேசினான்

அதற்க்குள் வீடு வந்துவிட சத்யன் காரைவிட்டு இறங்கி மறுபக்கம் வந்து மான்சிக்கு கதவை திறந்துவிட்டு.. தன் இடைவரை குனிந்து “ இறங்குங்க மேடம்” என்றதும்

மான்சி தனது வழக்கமான நாணத்துடன் சிரித்தபடி இறங்கி உள்ளே போனாள்


இருவரும் உடைமாற்ற மாடிக்கு போக ,... பிரேமா நேரமாகிவிட்டது சாப்பிட்டுவிட்டு ஒருவழியாக போய்விடுமாறு கூறியதும்,...

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி என்ன உணவு பரிமாறினார்கள் என்று பார்க்காமலேயே சாப்பிட்டு முடித்துவிட்டு மாடிக்கு போனார்கள்

மான்சி தான் படுத்துக்கொள்ளும் அந்த சிறிய அறைக்கு போக திரும்பினாள்,... “கொஞ்சம் நில்லு மான்சி” என்ற சத்யனின் குரல் அவளை தடுக்க
மான்சி நின்று அவனை திரும்பி பார்த்தாள்,... அவன் தன் இருகரங்களையும் அவளை நோக்கி விரித்து நீட்டி வா என்பது போல் தலையசைக்க

மான்சி வரவில்லை அவன் கண்களையே பார்த்தாள்,.. மறுபடியும் சத்யன் அவளை தன் குரலால் வாவென்று அழைத்தான்

அவன் குரலின் வசீகரம் அவளை மெதுவாக அடியெடுத்து வைக்கவைத்தது,... இரண்டடி எடுத்து வைப்பதற்குள் சத்யன் அவசரக்காரனாய் வேகமாக வந்து அவளை அள்ளிக்கொண்டான்

மான்சியை நொருங்க அணைத்து,.. பிறகு விலகி அவளை தன் வலக்கையில் கிடத்தி இடக்கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அவளின் மூடிய கண்களில் முத்தமிட்டான்,... அவள் கிறங்கிப்போய் தலையை துவளவிட்டாள்

கணக்கிட முடியாத சந்தோஷத்துடன் சிரித்தபடி சத்யன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்,... அவள் நினைவு தப்பியவள் போல கண்கள் சொருக இதழ்களை பிளந்துகொண்டாள்

சத்யன் அவள் மூக்கு நுனியை தன் நாக்கு நுனியால் தீண்டி தீண்டி அவளை சிலிர்க்க வைத்தான்,... அவள் இதழ்கள் துடிக்க கண்களை லேசாக திறந்து அவனை பார்த்தாள்

சத்யன் அவளின் துடிக்கும் இதழ்களை தனது அனலாய் தகித்த சூடான உதட்டால் அழுத்தி முத்தமிட,.. மான்சிக்கு அவன் கொடுத்த சூடான அந்த முதல் முத்தம் அவள் உயிர்வரை சென்று தாக்கியது

மறுபடியும் மறுபடியும் அவள் ஈர இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு தன் கொதித்த உதட்டின் சூட்டை தணித்துக்கொள்ள முயற்ச்சித்தான் சத்யன்

அவன் உதட்டின் சூடு தணிந்தது ஆனால் அதைவிட பலமடங்காக உடல்முழுதும் பத்திக்கொண்டது,.. இன்னும் அவள் இதழ்களை பிளந்து தனது ஆராய்ச்சியை சத்யன் ஆரம்பிக்கவில்லை

அதற்க்குள் கொதிக்க ஆரம்பித்தது அவன் தேகம்,... ஆனால் மான்சிக்கு உடல் சில்லிட்டு போயிருந்தது,.. தன்னுடைய இந்த அதிரடியால் பயந்து போய்விட்டாளோ என்று நினைத்த சத்யன் ...

அவளை விலக்கி நிறுத்தி அவள் முகத்தை பார்த்தான் ,.. அவள் கண்களை மூடியிருந்தாலும் அவள் முகத்தில் பயம் இல்லை,.. பதிலாக நாணமும் வெட்கமும் மட்டுமே முகாமிட்டு இருந்தன ,..

சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது,... அவள் காதருகில் குனிந்து " மான்சி நீ கண்ணை திறக்க நான் ஒரு பாட்டு பாடவா" என்று கிறக்கமாக கேட்க

அதற்கும் அவள் கண்திறக்காமல் "ம் பாடுங்க" என்றாள் மயக்கமான குரலில் ,.. சத்யன் தன் தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தான்

" கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச"

" தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச"


இப்போ நீ பாடனும் மான்சி என்றான் சத்யன் கிசுகிசுப்பாக ,... ம்ஹூம் என்று தலையசைத்த மான்சி வெட்கத்துடன் அவன் மார்பில் புதைந்துபோனாள்

சத்யன் அவள் இடுப்பில் கைவிட்டு அலேக்காக தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான்,... அவனுடைய இத்தனை நாள் காத்திருப்பு கட்டவிழ்த்து கொண்டது

அவளை கிடத்திவிட்டு கட்டிலைவிட்டு இறங்கி நின்று அவளை நிதானமாக ரசித்தான்,... கூந்தல் பறந்து விரிந்து தலையனையில் கிடக்க,...அவள் கூந்தல் பூக்கள் சில உதிர்ந்து அந்த கறுத்த கூந்தல் விரிப்பில் வெள்ளை முத்துகளாய் கிடந்தது

சத்யன் அவள் நெற்றியில் தன் உதட்டால் உரசி உரசி முத்தமிட்டதால் அவள் நெற்றிப்பொட்டு இடம்மாறி,.. கோயிலில் இவன் வைத்த கலைந்து நெற்றி முழுவதும் பரவியிருந்தது

அவள் கண்களில் சத்யன் அடிக்கடி முத்தமிட்டதால்,.. கண்களில் தீட்டியிருந்த மை கலைந்து,.. கண்களுக்கு கீழே வரை பரவியிருந்தது

அவள் இதழ்கள் லேசாக பிளந்துகொண்டு உள்ளே இருக்கும் முத்துப்பற்கள் தெரிய,.. சத்யன் அழுத்தி அழுத்தி அவள் இதழ்களில் முத்தமிட்டாதால் அவற்றின் ஈரம் காய்ந்து வரட்சியின் பிடியில் இருந்தது



கட்டியிருந்த பட்டுபுடவை கசங்கி அவள் வலதுமார்பை விட்டு சற்று ஒதுங்கி,... இடது மார்பை முற்றிலும் வெளியே காட்டியது,... அவள் போட்டிருந்த கருநீலநிற ரவிக்கையின் உள்ளே இருந்த வெள்ளைநிற உள்ளாடை பளிச்சென்று தெரிந்தது

அவள் இடுப்பின் அழகை ஏலமிட்டது அவளின் இடுப்பு சேலை,... பாதி மறைத்த நிலையில் அவளின் தொப்புள் ஆழமில்லாது அழகாய் இருந்தது

கால் பகுதியில் பட்டுபுடவை உயர்ந்து கணுக்காலுக்கு மேலே இருக்கும் கெண்டைக்கால் சதை வெண்மையாக மின்னியது,... அதில் துளிர்த்திருந்த வியர்வை துளிகளை பார்த்தால் சோற்றுக்கற்றாழையை பிளந்தால் அதனுள் இருக்கும் வெண்மையான சதையில் உருண்டையாக முத்துக்கள் போல கற்றாழை நீர் பூத்து இருக்குமே அதுபோல் இருந்தது

மொத்தத்தில் மான்சி ரவிவர்மனின் கலைந்த ஓவியம்போல் கிடந்தாள்



No comments:

Post a Comment