Saturday, April 4, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 11

சத்யன் போனில் கதறியதும் சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை ... “ டேய் டேய் சத்யா நிதானமா தெளிவா சொல்லுடா எனக்கு ஒன்னுமே புரியலை” என்று பதட்டமாக கேட்க

“ மான்சிக்கு மாயாவை பத்தி எல்லாமே தெரிஞ்சுபோச்சு .. மான்சி லட்டர் எழுதி வச்சுட்டு வீட்டைவிட்டு போய்ட்டா சரவணா” என்று தெளிவாக சொல்லிவிட்டு மறுபடியும் சத்யன் குமுறி கண்ணீர் விட்டான்

“சரி சத்யா இதோ நான் உடனே கெளம்பி வர்றேன்... நீ கொஞ்சம் அமைதியா இருடா” என்று கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்தான்

சத்யன் கலங்கிப் போய் அப்படியே தரையில் சரிந்தான் ... தயானந்தனும் பிரேமாவும்.. மகனின் நிலையை எண்ணி கண்ணீர் விட்டபடி அவன் அருகிலேயே இருந்தனர்

அடுத்த அரைமணிநேரத்தில் சரவணன் சத்யன் அருகில் இருந்தான் ... தன் நன்பன் தரையில் கிடப்பதை பார்த்த சரவணன் அவனும் தரையிலேயே அமர்ந்து சத்யன் தோளைத் தொட்டான்

அவனை பார்த்ததும் சத்யன் எழுந்து உட்கார்ந்து .. சரவணன் கைகளை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு “ என்னை கடவுள் பழிவாங்கிட்டார் சரவணா ... மான்சி இல்லாம என்னால வாழவே முடியாதுடா” என்று குமுற

சரவணன் அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.. பின்னர் “ சத்யா மொதல்ல நடந்தது என்னன்னு எனக்கு டீடெய்லா சொல்லு... அப்புறமா என்ன செய்றதுன்னு கலந்தாலோசிக்கலாம் .. இப்படி அழுது குமுறுனா ஒன்னும் வேலையாகாது” என்று அதட்டலாக சொல்ல


சத்யன்க்கு அவன் கூறிய உண்மை நிலை மனதில் உரைக்க கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்... அவனுடனே சரவணனும் எழுந்துகொண்டான்
மான்சி அழுதி வைத்துவிட்டு போன கடிதம்... அவளுடைய நகைகள் என எல்லாவற்றையும் எடுத்து சரவணனிடம் கொடுத்தவன் .. சரவணன் கையை பிடித்து இழுத்துச்சென்று கம்பியூட்டரின் முன் உட்காரவைத்தான் .. ஆனால் அதை ஆன் செய்யாமல் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு உடல் குலுங்கினான்

சரவணனும் நிலைமையை யூகித்து அதை பார்க்காமல் எழுந்துகொண்டான்... திருந்தி வாழும் இந்த சமயத்தில் தன் நன்பனுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று சரவணனுக்கும் மனம் குமுறியது .. ஆனால் அதை வெளியே காட்டினால் சத்யன் இன்னும் பலகீனமாகிவிடுவான் என்று எண்ணி தனது குமுறலை மறைத்து தைரியமாக நடித்தான்

சரவணன் மான்சியை கடைசியாக பார்த்த வேலைக்காரர்களை கூப்பிட்டு விசாரித்தான்... சத்யனிடம் மான்சியின் மனநிலை குணம் பற்றி விசாரித்தான் பிறகு பிரேமாவை சத்யனுக்கு துணையாக இருக்க சொல்லிவிட்டு தயானந்தனுடன் கீழே போனான்

தயானந்தன்க்கு அந்த சிடியை பற்றிய விஷயம் குழப்பமாக இருந்தது .. தனது அறைக்கு சரவணனை அழைத்து போனவர் .. அவனிடமே அதை பற்றி கேட்க
மாயாவின் மிரட்டலை பற்றியும் அவள் வீட்டில் ரெய்டு நடத்தியது .. என எல்லாவற்றையும் சரவணன் தயானந்தனிடம் சொன்னான்

தயானந்தனக்கு எல்லாமே புரிந்தது “ சத்யன் என்கிட்ட இந்த சிடி மேட்டர் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னான் சரவணா இதை மட்டும் ஏன் மறச்சான்னு தெரியலை.. இப்போ பாரு எவ்வளவு சிக்கலாயிருச்சு ” என்று வருத்தமாக கூறினார்

அவன் அந்த சிடியை பத்தி என்கிட்ட சொல்லவே ரொம்ப சங்கடப்பட்டான் .. அப்புறம் உங்ககிட்ட எப்படி அங்கிள் சொல்வான்.... அதை ஏன்டா அழிக்கலைன்னு அவன் கிட்ட கேட்டேன் அங்கிள் .. இந்த ஒருவாரமா மான்சிகூட ரொம்ப சந்தோஷமா இருந்ததால் அந்த சிடி நினைப்பே வரலைன்னு சொல்றான் பாவம்.. நாம என்ன பண்றது அங்கிள்” என சரவணனும் ரொம்ப வருத்தமாக பேசினான்

“இப்போ நான் ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கவா சரவணா “ என்று தயானந்தன் கேட்க

“ அய்யோ அதெல்லாம் வேனாம் அங்கிள் அப்புறமா விஷயம் எல்லா இடமும் பரவிடும்... நானே இதை எனக்கு தெரிஞ்ச ரெண்டு தனியார் ஆளுங்களை வச்சுத்தான் விசாரிக்க போறேன்” என்று சொல்ல... தயானந்தனும் அதுதான் சரி என்றார்

வெளியே கிளம்பிய சரவணன் மறுபடியும் வந்து “ அங்கிள் சத்யனை தனியா விடவேண்டாம் யாராவது ஒருத்தர் கூடவே இருங்க... நான் இப்பவே போய் இதை பத்தி விசாரிச்சாதான் இது பத்திய விவரங்களை ஓரளவுக்காவது கலெக்ட் பண்ணமுடியும்.. ஆனா மான்சி வீட்டைவிட்டு போய் முழுசா ஏழு மணிநேரம் ஆச்சு... இவ்வளவு நேரத்துக்கு அவ இந்த ஸ்டேடை விட்டே போயிருக்கலாம் எனக்கு அதை நினைத்துதான் பயமா இருக்கு அங்கிள் .. இந்த விஷயத்தை நீங்க உங்க மனசோட வச்சுக்கங்க யார்கிட்டயும் சொல்லவேண்டாம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... நான் கிளம்பறேன் அங்கிள் ” என்று கூறிவிட்டு சரவணன் கிளம்பி போய்விட்டான்

தயானந்தன் சரவணன் கூறிய வார்த்தைகளால் மனசு நொந்துபோனார் ... இந்த பொண்ணு நம்மகிட்டயாவது விஷயத்தை சொல்லியிருக்கலாமே .. என்று வருந்தினார் ... பிறகு மாடிக்கு சத்யனை பார்க்க போனார்

கொஞ்ச நேரத்திலேயே ஒரு மனிதன் தன்நிலை இழந்து தன் சுயநினைவை இழக்க முடியுமா... சத்யன் அப்படித்தான் இருந்தான் ... கட்டிலில் மல்லாந்து விழுந்து விட்டத்தை வெறித்துக்கொண்டு ... கண்கள் நிலைக்குத்தி இருக்க ... கண்ணோரம் நீர் வழிந்தபடியே இருந்தது ... கிட்டத்தட்ட பத்துவயது மூப்பு அவன் முகத்தில் தெரிந்தது

தயானந்தன் அவனருகில் கட்டிலில் அமர்ந்து அவன் கையை பற்றினார்... சத்யன் உடனே தன் வெறித்த பார்வையை தன் அப்பாவிடம் திருப்பினான்

“ அப்பா என் நிலைமையை பார்த்தீங்களா.. என் எதிரிக்கு கூட இந்த மாதிரி வரக்கூடாது.. நான் மான்சி மேல உயிரையே வச்சுருக்கேன்ப்பா.. எத்தனையோ நாள் அவகிட்ட உண்மையை சொல்லனும்னு நினைப்பேன் ஆனா அதுக்கப்புறம் அவ என்னைவிட்டு போயிடுவாளோ என்ற பயத்தாலேயே மறச்சேன் ... இப்போ எல்லாமே நான் பயந்த மாதிரி நடந்துபோச்சு” என்று சத்யன் அவர் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு சொல்ல

தயானந்தனுக்கு தன் மகனை இந்த நிலையில் பார்க்க தாங்க முடியவில்லை ... சத்யன் மான்சியின் மீது இந்தளவுக்கு உயிரையே வைத்திருப்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை... இவனுடைய அன்பு தோற்றுப்போகக் கூடாது என்று கடவுளை வேண்டினார்

“ சத்யா உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியலை... ஆனா என்னிக்கு இருந்தாலும் மான்சி உன்கிட்ட வந்து சேருவா இதை நீ நம்பனும் சத்யா... உனக்காகத்தான் நானும் உன் அம்மாவும் இருக்கறதே... ஆனா நீ இப்படி இருந்தா அப்புறம் நாங்க எங்க போவோம் சத்யா” என்று கண்கலங்க உருக்கமாக தயானந்தன் பேச

அவர் பேச்சினால் சத்யனின் துக்கம் அதிகரித்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க முயற்ச்சித்தான்

இரவு யாருமே சாப்பிடவில்லை .. அந்த வீடே துக்க வீடுபோல் இருந்தது... வேலைக்காரர்கள் கூட கலங்கிய கண்களுடன் ஒருவரு முகத்தை ஒருவர் பார்த்தபடி நடமாடினார்கள்

சத்யன் அறையில் சரவணின் போனுக்காக எல்லோரும் காத்திருந்தனர்,... கொஞ்சநேரத்தில் சத்யனின் மொபைல் அடிக்க சத்யன் அதை பாய்ந்து சென்று எடுத்தான்

சரவணன்தான் போன் செய்திருந்தான் ... சத்யன் ஆன் செய்து காதில் வைத்து
“சொல்லு சரவணா” என்றான்

“சத்யா மான்சி வீட்டில் இருந்து கிளம்பி ஆட்டோவில் வடபழனி போயிருக்கா அப்புறமா அங்கருந்து வேற ஆட்டோவில் கோயம்பேடு பஸ்நிலையம் போய்ருக்கா... அங்கே போய் நானே நேரடியா விசாரனை செய்தேன்... அவ ஆட்டோவில் இறங்கிய நேரத்துக்கு கிளம்பிய எல்லா பஸ்ஸையும் கணக்கெடுத்து பார்த்தேன்... ஆனா அவ எந்த பஸ்ஸில் போனான்னு யாருக்குமே தெரியலை சத்யா ... நானும் அவ போட்டாவை காட்டி தரோவா விசாரிச்சேன் எந்த தகவலும் கிடைக்கலை சத்யா ” என்று சரவணன் வருத்தமா கூறினான்
சத்யன் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல்... போனை அவன் அப்பாவிடம் கொடுத்துவிட்டு கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்

போனை வாங்கிய தயானந்தன் சரவணனிடம் பேசி விவரங்களை தெரிந்துகொண்டார் பிறகு இணைப்பை துண்டித்துவிட்டு ... சோகமாக சத்யனின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்

அதன்பிறகு வந்து நாட்களில் சத்யன் யாரிடமும் அதிகம் பேசவில்லை... தனக்கு இந்த தண்டனை தேவைதான் என்பதுபோல் ரொம்ப அமைதியாக இருந்தான்…. மான்சியின் நினைவுகளை மனதில் போட்டு தன்னை வதைத்து கொண்டான்

அவனுடைய அமைதி தயானந்தன் பிரேமா சரவணன் ஆகியோரை ரொம்ப பாதித்தது…. அவனைவிட்டு அகலாமல் மாற்றிமாற்றி அவனுடன் இருந்தனர் ... தனக்காக அவர்கள் சிரமப்படுவதை தவிர்க்க முடியாமல் தவித்தான்

மான்சியை பற்றிய சரவணின் தேடல் புயல் வேகத்தில் இருந்தாலும் அவளை பற்றிய தகவல்கள் ஆமை வேகத்தில் கூட கிடைக்கவில்லை .... எங்கே போனாலும் அவளை பற்றி எதுவுமே தெரியாமல் முட்டிக்கொண்டு நின்றது

அவள் எங்கே போயிருப்பாள் என்ற கேள்விக்குறி பெரிதாக தொக்கி நின்றது

தனக்காக வருந்தி கண்ணீர் விடும் தன் பெற்றோரை பார்த்து சத்யன் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தான் ... அவன் மனசு மட்டும் மான்சி உனக்குத்தான்... சீக்கிரமே உன்னிடம் வந்துவிடுவாள் என்று சொல்லிகொண்டே இருந்தது

இரவுநேரங்களில் அவள் நினைவில் சத்யன் விடும் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை... அவளுடைய நினைவுகளால் வந்த ஏக்கத்தை சத்யனால் தீர்த்துக்கொள்ளவே முடியவில்லை... அந்த எட்டுநாள் தாம்பத்தியத்தை நினைத்துக்கொண்டு இரவெல்லாம் விழித்துக் கிடந்தான்...மான்சியுடன் சுகித்திருந்த அந்த படுக்கையறை அவனுக்கு நிரந்தரமானது 




பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் ஸ்டான்டில் வந்து இறங்கிய மான்சிக்கு முதலில் குழப்பமாக இருந்தது.... இரவு மணி ஆறு ஆகியிருந்தது ... அடர்த்தியான இருட்டு மெல்ல கவிழ ஆரம்பித்து .... மான்சிக்கு பயத்தில் லேசாக உதறல் எடுத்தது.... ஆனால் நிறைய தமிழ் முகங்களும் தமிழ் குரல்களும் அவளுக்கு தைரியமூட்டியது..

ஆனாலும் மனதுக்குள் இவ்வளவு தைரியமாக கிளம்பி வந்துட்டமே அவங்க இங்கே இல்லாம வேறெங்காவது போயிருந்தா என்ன பண்றது என்று மனம் குழம்பினாள்

மான்சி கையில் பையுடன் அந்த பஸ் ஸ்டான்டையே ஒரு சுற்று சுற்றினாள் ... பானுமதி இருக்கும் கிருஷ்ணராயபுரம் போக எந்த பேருந்தில் ஏறவேண்டும் என்று தெரியவில்லை....

பிறகு ஏதோ யோசனை வந்தவளாக அங்கிருந்த ஒரு எஸ்டிடி போய் தனது கைப்பையை திறந்து சிறிய காகிதத்தை எடுத்து அதிலிருந்த பானுமதியின் பழைய செல்போன் நம்பருக்கு போன் செய்துவிட்டு காத்திருந்தாள்

எதிர் முனையில் சிறிதுநேரத்திலேயே பானுமதியின் குரல் கேட்க மான்சிக்கு நிம்மதியாக மூச்சு வந்தது ... எதிர் முனையில் யார் பேசறது என்று கேட்டதும்

“ மேடம் நான் மான்சி பேசறேன்” என்று மான்சி கூற.... மறுபக்கம் சிறிதுநேர மவுனத்துக்கு பிறகு

“ ஏய் மான்சி எப்புடி இருக்க .. ம்ம் கல்யாண லைப் எப்படி போகுது... உன் வீட்டுக்காரர் நல்லா பாத்துக்கறாரா.... இப்போதான் என் ஞாபகம் வந்தது ” என்று பானு உற்சாகத்துடன் கேட்க

பானு அப்படி கேட்டதும் மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... உதட்டை கடித்து கண்ணீரை அடக்கியவள் “மேடம் நான் இப்போ பெங்களூர் வந்திருக்கேன்... மெஜஸ்டிக் பஸ் ஸ்டான்டில் இருக்கேன்.... ஒரு பூத்ல இருந்து பேசறேன் .. உங்க வீட்டுக்கு வரதுக்கு வழி தெரியலை மேடம்” என்று மான்சி தழுதழுத்த குரலில் கூறியதும்

மான்சி குரலில் பானுவுக்கு ஏதோ புரிந்திருக்கவேண்டும் வேறு எதைப்பற்றியும் கேட்க்காமல் “ சரி மான்சி நீ எந்த இடத்தில் இருக்கேன்னு மட்டும் சொல்லு... நான் இன்னும் கொஞ்சநேரத்தில் அங்கே வந்து கூட்டிட்டு போறேன்.... நீ இந்த நேரத்தில் எங்கயும் தேடிக்கிட்டு அலைய வேண்டாம்... இல்லேன்னா ஒன்னு செய் போனை அந்த பூத்ல இருக்கறவர் கிட்டகுடு நான் விவரம் கேட்டுக்கிறேன் ” என்று அன்பாக சொன்னாள்

மான்சி உடனே திரும்பி அந்த பூத்தில் இருந்த கால் ஊனமுற்றவரை அழைத்து போனை அவரிடம் கொடுத்தாள்.... அவர் கன்னடத்தில் பானுவிடம் இருக்கும் இடத்தை பேசிவிட்டு போனை திரும்பவும் மான்சியைடம் கொடுத்தார் ..
மான்சி போனை வாங்கி காதில் வைத்து மேடம் என்றதும் “ மான்சி நீ அந்த போன் பூத்லயே உட்காரு... எனக்கு அந்த இடம் தெரியும் நான் இதோ கொஞ்சநேரத்தில் வந்துர்றேன்” என்று கூறிவிட்டு பானு உடனே வைத்துவிட்டாள்

அந்த பூத்காரர் ஒரு சேரை எடுத்து ஓரமாக போட்டு மான்சியை உட்காரச்சொல்ல... மான்சி அதில் உட்கார்ந்து பானுவுக்காக காத்திருந்தாள்

பானு சொன்னதுபோலவே இடத்தை கண்டுபிடித்து கரெக்டாக வந்துவிட்டாள்.... வந்தவள் அந்த பூத்கார்க்கு கன்னடத்தில் நன்றீ சொல்லிவிட்டு, மான்சியிடம் வேறு எதுவுமே கேட்காமல் .... “வா மான்சி போகலாம்” என்று மான்சியின் பையை எடுத்துக்கொண்டாள்

மான்சியும் எதுவுமே பேசாமல் ஒரு பொம்மைபோல் அவள் பின்னால் போனாள் ... பஸ்ஸ்டாண்டுக்கு வெளியே கார் பார்க்கிங்கில் இருந்த செர்ரி நிற காரின் கதவை திறந்து மான்சியின் பையை பின் சீட்டில் வைத்த பானு முன்பக்க கதவை திறந்து “உட்கார் மான்சி” என்று சொல்ல ... மான்சி காரில் உட்கார்ந்துகொண்டாள்

காரை பானுவேதான் ஓட்டினாள் ... பெங்களூரின் பலத்த ட்ராபிக்கில் கொஞ்சம் மெதுவாகவே காரை ஓட்டினாள் பானு... சிறிதுதூரம் போனதும் மான்சியின் பக்கம் திரும்பி எதுவும் பேசாமல் பார்வையால் பார்த்து என்ன என்பதுபோல் கேட்டாள் பானு

அதுவரை தன்னை கட்டுப்படித்திக் கொண்டு இருந்த மான்சி .. பானுவின் பார்வையை பார்த்ததும் .. தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குமுறி கண்ணீர் விட ...

பானு ஒருகையால் அவள் தோளை தட்டி “ மான்சி அழாதே எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் ப்ளீஸ்ம்மா அமைதியாயிரு” என்று ஆறுதலாய் சொன்னதும் .. மான்சி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்

சிறிதுநேரத்திலேயே பானுவின் வீடு வந்துவிட்டது.. வீடு கச்சிதமாக அழகாக கார் செட் வசதியுடன் சுற்றிலும் அழகான தோட்டத்துடன் நன்றாக இருந்தது...
பானு காரை செட்டில் நிறுத்திவிட்டு இறங்க... மான்சியும் இறங்கிக்கொண்டு தன் பையை எடுத்துக்கொண்டாள் .. பானுவின் அம்மா வெளியே வாசலிலேயே காத்திருந்தார்

பானுவின் அம்மா மான்சியை ஏற்கனவே சென்னையில் இருந்தபோது அடிக்கடி வீட்டில் சந்தித்திருப்பதால் மான்சியை பார்த்து சினேகமாய் புன்னகைத்தாள் ... மான்சி பதிலுக்கு சோகமாய் புன்னகைத்தாள்

மூவரும் வீட்டுக்குள் போனதும் ... பானு மான்சியை கைபிடித்து சோபாவில் அமர்த்திவிட்டு தானும் பக்கத்தில் அமர்ந்து “ அம்மா மான்சிக்கு காபி கலந்து எடுத்துட்டு வாங்க” என்று சொல்ல ... உடனே பானு அம்மா உள்ளே போய்விட்டாள்

பானு மான்சியின் பக்கம் திரும்பி அமர்ந்து “ இப்போ சொல்லு மான்சி என்ன நடந்தது ஏன் தனியா இவ்வளவு தூரம் வந்தே... ம் தயங்காம சொல்லு மான்சி” என்று ஆதரவாக கூற

மான்சி அதுக்காகவே காத்திருந்தது போல குமுறலும் , கண்ணீரும் ,ஆத்திரமும், கோபமுமாக... தன் மனதில் இருந்தவற்றை கொட்டித் தீர்த்தாள்

அத்தனையும் கேட்ட பானு மான்சியின் கண்ணீரை அடக்க வழிதெரியாமல் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்... காபியுடன் வந்த பானுவின் அம்மாவும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றுவிட்டாள்

மான்சி கட்டுபடுத்தவே முடியாதபடி கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்க...சுதாரித்த பானு மான்சியின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு “ அழாத மான்சி கொஞ்சம் அமைதியா இரு... அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம் ... இப்படி ஒரு சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி ஏமாத்திருக்கானே அவனெல்லாம் மனுஷன் தானே.. அவனை நீ சும்மா விட்டுட்டு வந்தது ரொம்ப தப்பு ... போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி உள்ள தள்ளிருக்கனும்” என்று பானு ஆத்திரமாக பேசினாள்

“ எப்படிங்க மேடம் முடியும் .. அவங்க பெரிய பணக்காரங்க அவங்களை எதிர்த்து நான் மட்டும் என்ன பண்ணமுடியும்.... என் அப்பா அம்மா உதவியும் எனக்கு கிடைக்காது.. என்னை சமாதானம் செய்து அங்க கொண்டு போய் விடத்தான் பார்ப்பாங்க.... என்னோட மனச புரிஞ்சுக்க மாட்டாங்க மேடம்” என மான்சி கண்ணீருக்கு ஊடே பதில் சொல்ல

“ அப்புறம் என்னதான் செய்றது மான்சி... இதுமாதிரி ஆளுங்களை சும்மா எப்படி விடுறது.” என்று பானு கொதித்துப்போய் பேசினாள்

“ நீ கொஞ்சம் சும்மா இரு பானு அவ பேசட்டும்”..என்று மகளை அடக்கிய பானுவின் அம்மா .. மான்சியிடம் திரும்பி “ நீ சொல்லு மான்சி என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்க” என மான்சியிடம் அன்போடு கேட்க

மான்சி தன் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் “ நான் இனிமே அங்க போகமாட்டேன்...நான் இங்கதான் இருக்கேன்னு அவங்களுக்கு தெரியக்கூடாது.. எனக்கு இங்கயே ஏதாவது வேலை வாங்கி கொடுங்க... அதை வச்சி நான் பொழச்சுக்கிறேன்” என்று மான்சி தீர்மானமாக கூற

“ மான்சி நீ சொல்றது சரிதான்... ஆனா எவ்வளவு நாளைக்கு அவங்களுக்கு தெரியாம இருக்க முடியும்... நீ வேற ரொம்ப சின்ன பொண்ணு.. நீ எங்கயும் போகவேண்டாம் இங்கயே இரு நான் வேனாம்னு சொல்லலை.... ஆனா அவங்களுக்கு தகவல் சொல்லி அந்த சத்யன் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு நீ வேறொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கறது தான் நல்லது.” என்ற பானு அம்மாவின் கையில் இருந்த காபியை வாங்கி வந்து மான்சியிடம் கொடுத்துவிட்டு
..
“ இந்த காபியை குடி மான்சி” என்றவள் ... “இதை நான் ஏன் சொல்றேன்னா .. நீ ரொம்ப சின்ன பொண்ணும்மா... என்னைப்போல முப்பத்தைந்து வயது பொம்பளையா இருந்தா அம்மா கூடவே இருந்துகிட்டு சுயமா சம்பாதிச்சு தன்னம்பிக்கையுடன் இருக்கலாம் ... ஆனா நீ எவ்வளவு நாளைக்கு அதுமாதிரி இருக்க முடியும்.. உன் வயசு என்ன ஒரு பத்தொன்பது இருக்குமா... இந்த வயசில் தனியா வாழுறது கஷ்டம்மா மான்சி நல்லா யோசிச்சு பாரு ” என்று பானு மான்சிக்கு புரியும் படி தெளிவாக எடுத்து கூறினாள்



மான்சிக்கு இருந்த பசியில் அந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கப்பை கீழே வைத்துவிட்டு பானுவை பார்த்து “ நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் பஸ்ஸில் வரும்போது யோசிச்சுட்டேன் மேடம்... ஏன் மேடம் தனியா வாழ முடியாது .. நான் வாழ்ந்து காட்டுவேன் மேடம்... அதேபோல நான் நிச்சயமா அவரை டைவர்ஸ் பண்ணமாட்டேன்... நான் இப்படியேதான் இருப்பேன்... எனக்கு ஒரு வேலையும் ஏதாவது பெண்கள் விடுதியில் தங்க இடமும் மட்டும் வாங்கி கொடுங்க அதுபோதும் மேடம்... என்னை அங்கே கொண்டு போய் சேர்த்தால் அடுத்த சிலநிமிடங்களில் நான் இறந்த செய்திதான் உங்களுக்கு கிடைக்கும் ” என்று மான்சி குரலில் உறுதியுடன் சொல்ல

அவள் பேசுவதையே பார்த்து கொண்டிருந்த பானுவுக்கு மான்சியின் குழந்தைத்தனம் காணாமல் போய்,.. தவறு செய்த கணவனை எதிர்த்து நிற்க்க துடிக்கும் ஒரு ரோஷமிக்க பெண்தான் கண்ணெதிரே தெரிந்தாள்,.. ஆனாலும் அவள் உறுதியை சோதிக்க “ நீ என்ன மான்சி படிச்சிருக்க” என்று பானு கேட்க

மான்சி பானுவை ஆச்சிரியமாக பார்த்து “ ஏன் மேடம் உங்களுக்கு தெரியாதா... உங்ககிட்டத்தானே பிசிஏ படிச்சேன்” என்று கூறினாள்


No comments:

Post a Comment