Wednesday, April 29, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 16


ப்ரீதி - ஆனந்த்

ஆனந்த், "நான் திரும்பிப் போகச்சே உன்னையும் என் கூட கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்"

ப்ரீதி, "என்ன சொல்றே? ஏன் கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்?"

ஆனந்த், "நீ கம்பி எண்ணிட்டு இருந்தா எப்படி உன்னை என் வீட்டுக்கு போக முடியும்?"

ப்ரீதி, "என்ன சொல்றே?"

ஆனந்த், "க்ரேட் விக்ரம் ஷானால நீ ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கே. நானும் அதே பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கேன். அந்த பிரச்சனையை சால்வ் பண்ணலைன்னா நாம் ரெண்டு பேரும் கம்பி எண்ண வேண்டி இருக்கும்"

ப்ரீதி முகத்தில் பீதி படர, "ப்ளீஸ் ஆனந்த், புதிர் போடாதே. You know I am only a Software Engineer அப்படி என்ன பிரச்சனை?"


ஆனந்த், "இப்போ இந்தக் கோலத்தில் இன்னும் கொஞ்ச நேரம் பேசினா எனக்கு மூட் வந்துடும். உன் மூடையும் நான் இப்போ கெடுத்துட்டேன். சோ, பேசாம போய் குளிச்சுட்டு ரெடி ஆகி வா" என்ற ஆனந்த் அவள் முகத்தில் தெரிந்த தோய்வைக் கண்டு, அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

ப்ரீதி, "என்ன நீ! என்னென்னவோ சொல்லி பயமுறுத்திட்டு அடுத்த நிமிஷம் இப்படி கிஸ் அடிக்கறே?"

ஆனந்த், "பயப் பட வேண்டிய விஷயம்தான் ஆனா இப்போதைக்கு அதைப் பத்தி கவலைப் பட்டு பிரயோஜனம் எதுவும் இல்லை. நீ சொன்ன மாதிரி பகவான் இருக்கார். சோ ஜாலியா இரு!"

ஆனந்த் தன் கழுத்தைக் கட்டியபடி தன் மார்பில் தஞ்சம் புகுந்தவளின் முகவாயை பிடித்து நிமிர்த்தி, "பயப் படாதே! நானும் இருக்கேன்" என ஆறுதல் அளித்தான்.

குளித்து முடித்து வந்த பிறகு ஆனந்த் குளியலறையை ஆக்கிரமித்தான். அவன் வெளியில் வந்த போது சமையல் அறையில் இருந்து வந்த தாளிப்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.

ஆனந்த், "ஹே! என்ன பண்ணிட்டு இருக்கே?"

ப்ரீதி, "ம்ம்ம் ... பசிக்கறது. நோக்கு பசிக்கலையா?"

ஆனந்த், "ஃப்ரிட்ஜில் பால் இருக்கு. அதோ அந்த ஷெல்ஃபில் ஸீரியல்ஸ் இருக்கு எடுத்து சாப்பிட வேண்டியதுதானே?"

ப்ரீதி, "ம்ம்ம் பார்த்தேன். சும்மா இருந்தா என் மண்டையே வெடிச்சுடும் போல இருந்தது. எதானும் கைக் காரியத்தில் இறங்கிலாம்ன்னு நினைச்சேன். தெனமும் ஸீரியல்ஸ் தானே சாட்டுண்டு இருப்பே வேற எதானுன் செய்யலாமான்னு பாத்தேன். கிச்சனில் சமையலுக்கு தேவையானது எல்லாம் இருந்தது. சோ, உப்மா செஞ்சு இருக்கேன். ஆனா தொட்டுக்க எதுவும் செய்யலை"

ஆனந்த், "வாவ், பரவால்லை. தொட்டுக்க சர்க்கரை, ஊருகாய், இட்லி மிளகாய் பொடின்னு நிறைய இருக்கு. வா லெட்ஸ் ஈட்"

இருவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்த போது ..

ப்ரீதி, "எதுக்கு அப்படி சொன்னே?"

ஆனந்த், "லுக். சாப்பிடும்போது அதெல்லாம் வேண்டாம். சாப்பிட்டதுக்கு அப்பறம் விவரமா சொல்றேன்"

மேலும் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு முடித்து அவனது ஹாலுக்கு வந்து சோஃபாவில் அருகருகே அமர்ந்தனர்.

ப்ரீதி, "இப்போ சொல்லு என்ன பிரச்சனை அது?"

ஆனந்த், "பிரச்சனை முழுக்க முழுக்க நீயே உன் தலையில் தூக்கி போட்டுட்டது"

ப்ரீதி, "What do you mean .. என்ன பிரச்சனைன்னு சொல்லு"

ஆனந்த், "You are in deep trouble. Thanks to your boss Mr. Vikram bloody Shah who used your naivity and desperation to the hilt" (நீ பெரிய சிக்கலில் மாட்டிட்டு இருக்கே. உன் அப்பாவித்தனத்தையும் வேலைக்கு சேந்த சமயத்தில் உனக்கு இருந்த ஆதங்கத்தையும் உன் பாஸ் விக்ரம் ஷா நல்லா பயன் படுத்திட்டான்)

ப்ரீதி, "அந்த எக்ஸஸ் பில்லிங்க் பத்தி சொல்றியா?"

ஆனந்த், "எக்ஸஸ் பில்லிங்க் அவன் செஞ்ச ரொம்ப சின்ன கோல் மால்"

ப்ரீதி, "வேற என்ன சிக்கல்?"

ஆனந்த், "P.V.S Systems Private Limited தெரியுமா"


ப்ரீதி, "தெரியுமே. ஷா சிஸ்டம்ஸ் க்ரூப்பில் இருக்கும் ஒரு வெத்து கம்பெனி. போட்டிக்கு கொடேஷன் கொடுக்கறதுக்கும் இன்கம் டாக்ஸை குறைக்கறதுக்காகவும் விக்ரம் ஷா ஆரம்பிச்ச கம்பெனி. பேருக்கு நான் அந்த கம்பெனியில் டைரக்டர். என் சாலரியும் அந்த கம்பெனியில் இருந்துதான் வருது. ஏன் கேக்கறே?"

ஆனந்த், "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் நிறைய தில்லு முல்லுல சம்மந்தப் பட்டு இருக்கு. அதுக்காக அரெஸ்ட் பண்ணினா உன்னைத் தான் அரெஸ்ட் பண்ணுவாங்க"

ப்ரீதி, "என்ன சொல்றே? என்ன தில்லு முல்லு?"

ஆனந்த், "Fraudulent Commercial Practice அப்பறம் Information Theft"

ப்ரீதி, "அந்த எக்ஸஸ் பில்லிங்க் Fraudulent Commercial Practiceதான் ஒத்துக்கறேன். ஆனா விக்ரம் ஷா கம்பெனிகளில் இருக்கறவாளுக்கும் அதில் பங்கு இருக்குன்னு சொன்னார். தகவல் திருட்டைப் பத்தி நேக்கு ஒன்ணும் தெரியாது. But, என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணுவாங்க?"

ஆனந்த், "ஏன்னா நீ தான் பி.எஸ்.வி சிஸ்டம்ஸ்க்கு மேனேஜிங்க் டைரக்டர். அதாவது நீதான் அந்த கம்பெனியை நடத்திட்டு இருக்கே. ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் ரெக்கார்டில் அப்படித்தான் இருக்கு"

சில கணங்கள் யோசித்த ப்ரீதி ஸ்தம்பித்து அமர்ந்து இருந்தாள்.

ப்ரீதி, "நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி விக்ரம் ஷா சில பேப்பர்ஸ் சைன் பண்ணச் சொன்னார். எதுக்குன்னு கேட்டப்போ இன்கம் டாக்ஸ் குறைக்க வெவ்வேற கம்பெனி பேர்ல கான்ட்ராக்ட்ஸ் எடுக்கறதா சொன்னார். கான்ட்ராக்ட் எடுத்துக்க மட்டும்தான் அந்த கம்பெனி யூஸ் ஆகப் போறதுன்னு சொன்னார். அதுக்கு அப்பறம் வருஷத்துக்கு ஒரு தரம் எதானும் பேப்பர்ஸ் சைன் பண்ணச் சொல்லி அனுப்பினார். அந்த பேப்பர்ஸில் நான் இந்த பேரையும் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் அப்படிங்கற பேரையும் பாத்து இருக்கேன். சில H.D.F.C Bank சம்பந்தப் பட்ட பேப்பர்ஸ்லயும் சைன் பண்ணச் சொன்னார். ஆனா ஆனந்த், நேக்கும் அதுக்கும் வேற எந்த சம்மந்தமும் இல்லை" எனச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் கலங்கின.

ஆனந்த், "I guessed as much .. "

ப்ரீதி, "God! இப்போ என்ன பண்ணறது ஆனந்த்?"

ஆனந்த், "உனக்கும் அந்த தில்லு முல்லுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சட்ட பூர்வமா நிரூபிக்கணும்"

ப்ரீதி, "ஒரு லாயரை வெச்சு கோர்ட்டில் ஃபைட் பண்ணினா முடியாதா?"

ஆனந்த், "நமக்கு லாஸ்ட் ரிஸார்ட் அதுதான். ஆனா ப்ரீதி, அவனோட தில்லு முல்லுகளில் சிலது அமெரிக்காவைப் பொறுத்த மட்டும் தேச துரோகத்துக்கு சமம். அதுக்கு நீ அமெரிக்காவில் இருக்கும் ஹை-கோர்ட்டில் லாயரை வெச்சு வாதாடணும். அப்படியும் அதில் நாம் சம்மந்தப் படலைங்கறதுக்கு தகுந்த ஆதாரம் இல்லைன்னா ரொம்ப ரொம்ப கஷ்டம்"

ப்ரீதி, "எப்படி தேச துரோகம்?"

ஆனந்த், "சில கம்பெனிகளில் இருந்த தகவல்களை திருடி சைனாவில் இருக்கும் கம்பெனிகளுக்கு வித்து இருக்கான். அமெரிக்க சட்டப் படி அந்த மாதிரி தகவல் திருட்டு தேச துரோகத்துக்கு சமம். ஏன்னா அவங்க ஏற்றுமதி பாதிக்கப் படலாம் இல்லையா?"

ப்ரீதி, "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"

ஆனந்த், "அது ஒரு பெரிய கதை. விக்ரம் ஷானால நானும் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லப் போனா நம்ம ரெண்டு பேர் பிரச்சனையும் ஒரே மாதிரிதான்"

ப்ரீதி, "ஒரே மாதிரின்னா?"

ஆனந்த், "Let me explain from the beginning .. You know, நான் ஃப்ரீலான்ஸ் பண்ணப் போறேன்னு சொன்னதும் அப்பா தனி ஆளா பண்ணறதை விட ஒரு கம்பெனியை இன்கார்பொரேட் பண்ணி அந்த கம்பெனி பேரில் கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சா நிறைய இன்கம் டாக்ஸ் சேவ் பண்ணலாம்ன்னு சொன்னார். அவரே அவரோட ஸி.பி.ஏ மூலம் எனக்கு கம்பெனியும் ஆரம்பிச்சுக் கொடுத்தார்"

ப்ரீதி, "உங்க அப்பாவுக்கு இதைப் பத்தி எல்லாம் நல்லா தெரியுமா?" என்று இடைமறித்தாள்

ஆனந்த், "உனக்கு எங்க ஃபேமிலியை பத்தி முழுசா தெரியாது இல்லை? எங்க அப்பா சிலிகான் வாலியில் ஒரு பிரபலமான புள்ளி. நிறைய கம்பெனிகளோட அட்வைஸரி போர்ட்டில் இருக்கார். ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் அப்பறம் கார்பொரேட் கவர்னன்ஸ் மாதிரி விஷயங்களுக்கு அவர் நிறைய கம்பெனிகளுக்கு ஆலோசகரா இருக்கார்"

ப்ரீதி, "உங்க ஆத்துக்கு நான் ஏத்தவளான்னு நேக்கு பயமா இருக்கு ஆனந்த். உங்க அப்பா அம்மா என்னை ஏத்துக்கலைன்னாலும் அட்லீஸ்ட் எனக்கு இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வழி பண்ணறயா?" என்று அவள் சொல்லி முடிக்கையில் அவள் கண்கள் குளமாகி இருந்தன.

அவளை இழுத்து இன்னும் அருகே அமரவைத்து அவள் தோள் மேல் கை போட்டபடி ஆனந்த், "கிறுக்கே. இதுக்குத்தான் என் ஃபேமிலியைப் பத்தி எல்லாம் மெதுவா சொல்லலாம்ன்னு இருந்தேன். சரி, நோ மோர் அபௌட் மை மம் அண்ட் டாட் ஓ.கே? நம்ம பிரச்சனைக்கு வருவோம்"

ப்ரீதி, "ம்ம்ம் .. "




ஆனந்த், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விக்ரம் ஷா எனக்கு பழக்கம் ஆனான். நான் கான்ட்ராக்ட் எடுத்து இருந்த அதே பெரிய கம்பெனியில் ஷா சிஸ்டம்ஸும் ஒரு கான்ட்ராக்ட் எடுத்து இருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனியில் தனக்கு ஒரு காண்ட்ராக்ட் வாய்ப்பு இருக்கறதா சொன்னான். ஆனா அமெரிக்காவில் தொடங்கின கம்பெனிக்குத்தான் அவங்க அதைக் கொடுக்க முடியும் அதனால என் கம்பெனி பேர்ல அந்த கான்ட்ராக்ட் எடுத்து அவருக்கு சப்-கான்ட்ராக்ட் கொடுக்க முடியுமான்னு கேட்டான். பத்து பர்ஸெண்ட் கமிஷன் கொடுக்கறதாவும் சொன்னான்"

ப்ரீதி, "Wait a second! Shah Systems Inc அப்படின்னு அமெரிக்காவில் தொடங்கிய கம்பெனி எங்க க்ரூப்பிலயே இருக்கே. எதுக்கு உன் கிட்டே கேட்டார்?"

ஆனந்த், "நானும் அதே கேள்வியைத்தான் அவன்கிட்டே கேட்டேன். அதுக்கு அவன் அந்த கம்பெனி மூலம் இன்னொரு போட்டிக் கம்பெனியில் கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சுட்டு இருக்கறதா சொன்னான். அதனால் தன் கம்பெனிக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைக்காம போகலாம்ன்னு சொன்னான். அவன் சொன்னது ஒரு அளவுக்கு உண்மைதான். அதை நான் சரியா கவனிக்கலை. எனிவே, எனக்கு என்ன? ஒரு கான்ட்ராக்டுக்கான ப்ரொபோஸல் என்னோட கம்பெனியில இருந்து அனுப்பணும். ஆர்டர் வந்தா அவன் எடுத்து செய்யப் போறான். கம்பெனி எனக்கு பணம் கொடுக்கும். அதில பத்து பர்ஸெண்ட் எடுத்துட்டு பாக்கியை அவனுக்கு நான் கொடுக்கப் போறேன். எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க ஒரு சான்ஸ். அவ்வளவுதான்னு நினைச்சுட்டு ஒத்துகிட்டேன்."

ஆனந்துக்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு என்று கணிக்க ப்ரீதி மறைமுகமாக, "எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் அது?" என்று கேட்டாள்.

ஆனந்த், "மொத்த வேல்யூ ரெண்டு லட்சம் டாலர். என்னோட கமிஷன் இருபது ஆயிரம். சுருக்கமா சொன்னா என்னோட ஒன்றரை மாச வருமானம். போதுமா டீடெயில்ஸ்?" என்றபடி அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ப்ரீதி, "சாரி, உன் சொந்த விஷயத்தை தெரிஞ்சுக்கணும்ன்னு கேக்கல ரிஸ்க் எடுக்கற அளவுக்கு பெரிய ப்ராஜெக்டான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்"

ஆனந்த், "ஏய், இனி என் சொந்த விஷயம் உன் சொந்த விஷயம்ன்னு தனித்தனியா எதுவும் இருக்கக் கூடாது. ஓ.கே?"

ப்ரீதி, "ம்ம்ம்" என்றபடி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

ஆனந்த், "சோ ... அந்த ப்ராஜெக்டை என் கம்பெனி பேர்ல எடுத்துட்டேன். பொதுவா நடக்கும் பேரம், டிஸ்கஷன் எதுக்கும் என்னை கூப்படலை. அதைப் பத்தியும் எனக்கு சந்தேகம் வந்து இருக்கணும். அது ஒரு டெஸ்டிங்க் ப்ராஜெக்ட் ஒரு வருஷத்தில் முடிஞ்சுது. அதுக்கு அப்பறம் திடீர்ன்னு ஒரு நாள் என்னைத் தேடி எஃப்.பி.ஐ வந்தது. ஏன்னு கேட்டா என் கம்பெனி மூலம் தகவல் திருட்டு நடந்து இருக்கு அதுக்காக அரெஸ்ட் பண்ணறோம்ன்னு சொன்னாங்க. நான் எந்த விதமான தகவலும் திருடலைன்னு சொன்னேன். அப்பாவும் எனக்காக உத்திரவாதம் கொடுத்தார். அதுக்கு அவங்க நான் திருடலைன்னாலும் திருட்டுக்கு உடந்தையா இருந்து இருக்கேன்னு சொன்னாங்க. விக்ரம் ஷா எடுத்து செஞ்ச ப்ராஜெக்ட்டுக்காக அந்த கம்பெனியின் மெயின் சர்வருக்கு ஒரு லாகின் ஐ.டியும் பாஸ்வர்டும் எனக்கு கொடுத்து இருந்தாங்க. நான் அதை விக்ரம் ஷாவுக்கு அனுப்பி இருந்தேன். அந்த லாகின் ஐ.டி மூலம்தான் தகவல்கள் திருடப் பட்டு இருக்கு. விக்ரம் ஷாதான் திருடி இருக்கான்னு சொன்னேன். என் உதவி இல்லாமல் அவன் திருடி இருக்க முடியாது அதனால என் மேல இருக்கும் கேஸை ட்ராப் பண்ண முடியாதுன்னு சொன்னாங்க. அப்பா அவருக்கு தெரிஞ்ச அரசாங்கத்தில் இருக்கும் ஒரு பெரிய புள்ளிகிட்ட உதவி கேட்டார். அவரும் எனக்காக உத்திரவாதம் கொடுத்தார். கடைசியா எஃப்.பி.ஐகாரங்க தற்காலிகமா என் கேஸை சஸ்பன்ஸில் வைக்கறதாவும் அந்த கும்பலை பிடிக்க உதவி செஞ்சா கேஸை ட்ராப் பண்ணறதா சொன்னாங்க. நான் நிரபராதின்னு நிரூபிக்க தேவையான ஆதாரங்களை கண்டுபிடிக்க அவங்க உதவி செய்யறதாவும் சொன்னாங்க. அவங்க ஏற்பாடு செஞ்சுதான் நான் இந்த ப்ராஜெக்டில் சேர்ந்தேன். விக்ரம் ஷாவுக்கு இந்த விவரம் தெரியாது. கம்ப்ளெயிண்ட் கொடுத்த கம்பெனிகளில் ஒண்ணுதான் நாம் இப்போ பண்ணிட்டு இருக்கும் ப்ராஜெக்ட் கொடுத்தது"

ப்ரீதி, "சோ அதுக்காகத்தான் இந்தியா வந்தியா?"

ஆனந்த், "நான் அதுக்கு முன்னாடியே வரணும்ன்னு இருந்தேன்"

ப்ரீதி, "எதுக்கு?"

ஆனந்த், "கல்யாணம் பண்ணிக்கோன்னு அம்மா கொடைஞ்சு எடுத்துட்டு இருந்தா. ஒரு நாள் தண்ணி அடிக்கும் போது என் தாத்தாகிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். அடுத்த நாள் அம்மாகிட்டே போட்டுக் கொடுத்துட்டார். அம்மா உடனே நீ போய் அவளோட பேசி கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணறியா இல்லை நான் குன்னூருக்குப் போய் அவங்க அம்மாட்ட பேசட்டான்னு குதிக்க ஆரம்பிச்சுட்டா. கெஞ்சி கூத்தாடி அவளை வெயிட் பண்ண வெச்சு இருந்தேன்"

ப்ரீதி, "சோ நேத்தி வரைக்கும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதை நீ முடிவு பண்ணலையா?"

ஆனந்த்,"ஏ ப்ரீதி, அதான் சொன்னேன் இல்ல? I wanted you since the first telecon. கல்யாணம் செஞ்சுக்கறதை ஃபைனலைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. லவ் மேரேஜ்ஜா இல்லை அர்ரேஞ்ச்டு மேரேஜ்ஜான்னு நேத்து வரைக்கும் முடிவாகலை"

ப்ரீதி, "பட், பி.எஸ்.வி சிஸ்டம்ஸ் தகவல் திருட்டுல இன்வால்வ் ஆயிருக்குன்னு எப்படி தெரிஞ்சுது?"

ஆனந்த், "எஃப்.பி.ஐகாரங்க எனக்கு ஒரு லிஸ்ட் கொடுத்தாங்க. அதில் பி.எஸ்.வி சிஸ்டம்ஸ் இருந்தது. ஆனா அதில் நீ சம்மந்தப் பட்டு இருக்கேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. மாமாகிட்ட அந்த லிஸ்டை கொடுத்து அந்த லிஸ்டில் இருந்த கம்பெனிகளைப் பத்தி ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்ல விசாரிச்சு சொல்ல சொல்லி இருந்தேன். உன் பேரை பாத்ததும் மாமா அலற ஆரம்பிச்சுட்டார். உடனே அம்மாட்ட சொல்றேன்னு ஆரம்பிச்சுட்டார். I don't know what mom and dad will say. சோ, கொஞ்ச நாள் சும்மா இருய்யான்னு சொல்லி நான் வந்த வேலையைப் பத்தி விவரமா சொன்னேன்."


ப்ரீதி, "அப்படீன்னா எனக்கு கஷ்டம் வரப் போறதுன்னு தெரிஞ்சுண்டே நேத்து அந்த மாதிரி எல்லாம் செஞ்சியா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... நம்ம ரெண்டு பேருக்கும் கஷ்டம் வரப் போறதுன்னு தெரிஞ்சுண்டே நேத்து அந்த மாதிரி எல்லாம் செஞ்சேன். இன் ஃபாக்ட் முதல்லே அம்மா அப்பாவை இங்கே ஒரு வாரத்துக்கு வரச் சொல்லி சின்ன அளவில் கல்யாணத்தை முடிச்சுக்கலாமான்னு யோசிச்சேன். ஒரு வேளை இந்திய சட்டத்தில் எதாவுது லூப் ஹோல் மூலம் நீ தப்பிச்சாலும் தப்பிக்கலாம். ஆனா எனக்குத் தேவையான ஆதாரம் கிடைக்கலேன்னா நான் மாட்டிக்கறதுக்கு உறுதி. சோ, கிடைச்ச சான்ஸை எதுக்கு வீணாக்கணும்?" என்றபடி அவள் தோள் மேல் போட்டு இருந்த கையை அவள் இடைக்கு இறக்கி இழுக்க ப்ரீதி அவன் மடியில் சரிந்தாள். தரையில் படிந்து இருந்த அவள் கால்களை தூக்கி சோஃபாவில் கிடத்தி அவளை சரியாக தன் மடியில் தலை வைத்துப் படுக்க வைத்தான். குனிந்து அவள் இதழ்களைக் கவ்விச் சப்பியபடி முத்தமிட்டான்.

நிமிர்ந்து அமர்ந்தவனை கன்னம் சிவக்க காதலுடன் பார்த்த ப்ரீதி, "நீ மாட்டிக்கப் போறேன்னா நானே போய் போலீஸ்ல எல்லாத்தையும் சொல்லிட்டு சரணடைஞ்சுடுவேன்"

ஆனந்த், "ரெண்டு பேரும் ஜெயிலில் ஹனி மூன் கொண்டாடலாம்ன்னு பார்க்கறியா?"

பதிலேதும் சொல்லாமல் சிணுங்கிச் சிரித்த ப்ரீதியின் கன்னத்தை தடவியபடி ஆனந்த், "பைத்தியம். நீ இந்தியாவில் கம்பி எண்ணுவே நான் அமெரிக்காவில் கம்பி எண்ணுவேன். அதைவிட கொடுமை வேண்டாம். Let us think positive. தப்பிக்க வழியைப் பார்ப்போம். அந்த கம்பெனியில் நீ மேனேஜிங்க் டைரக்டரா இருக்கறது விக்ரம் ஷா பண்ணின தில்லு முல்லுகளை கண்டுபிடிக்க நமக்கு கிடைச்சு இருக்கும் ஒரு நல்ல சான்ஸ். மாமா நமக்கு ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லி இருக்கார்."

ப்ரீதி, "அவர் பண்ணின தில்லு முல்லுகளோட விவரம் தெரிஞ்சு நமக்கு என்ன லாபம். கடைசில அது எல்லாம் நான் செஞ்சேன்னுதானே அவா எடுத்துப்பா?"

ஆனந்த், "தில்லு முல்லுகளை செஞ்ச விதம் அதாவது அவனோட மோடஸ் ஆபராண்டி (Modus Operandi - செயல் முறை) தெரிஞ்சுதுன்னா அதை வெச்சே உனக்கும் எனக்கும் அந்த தகவல் திருட்டில் எந்த விதமான சம்மந்தமும் இல்லைன்னு ப்ரூவ் பண்ணலாம் இல்லையா?"

ப்ரீதி, "ஒத்துப்பாளா?"

ஆனந்த், "அதை மட்டும் வெச்சுண்டு ஒத்துக்க மாட்டா. வேற ஒரு விஷயத்தையும் எஃப்.பி.ஐ என்னை கண்டு பிடிக்க சொல்லி இருக்கு"

ப்ரீதி, "வேற என்ன விஷயம்?"

ஆனந்த், "அந்த நாலு கம்பெனிகளிலும் உள்ளே இருக்கும் யாரோ அவங்களுக்கு உதவி செஞ்சு இருக்க வாய்ப்பு இருக்குன்னு எஃப்.பி.ஐ சந்தேகப் படறாங்க. அதாவது, அந்த கம்பெனி எனக்கு கொடுத்த லாகின் ஐ.டியைத் தவிற வேற ஒரு மேனேஜரோட லாகின் ஐ.டியை உபயோகிச்சு இருந்தாலும் அந்த தகவல்களை திருடி இருக்க முடியும் இல்லையா?"

ப்ரீதி, "முதல்ல உன் தகவல் திருட்டு விஷயத்தில என்ன தகவலை திருடி இருக்காங்க அதைச் சொல்லு"

ஆனந்த், "சக்கரை மில், பெரிய மாவு மில் மாதிரி தொழிற்சாலைகளுக்குத் தேவையான் மெஷின்களை அந்தக் கம்பெனி உற்பத்தி செஞ்சு விக்குது. அந்த மெஷின்கள் எல்லாம் பழசாகும் போது அதுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸும் அந்த கம்பெனி விக்குது. ஏறக்குறைய முப்பது சதவிகித வருமானம் ஸ்பேர் பார்ட்ஸ் விக்கறது மூலம் அந்தக் கம்பெனிக்கு வருது. ஒரு சைனா கம்பெனி இந்த கம்பெனியோட ஸ்பேர் பார்ட்ஸ் டிசைன்களைத் திருடி அதே மாதிரி டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிச்சு இருக்கு. யார் யார் எல்லாம் அந்த ஸ்பேர் பார்ட்ஸ்களை ரெகுலரா வாங்கறாங்கன்னு தெரிஞ்சா அவங்களோட டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸை விக்கறது சுலபம் இல்லையா? அதுக்காக அந்த கம்பெனியோட வாடிக்கையாளர்கள் லிஸ்டை விக்ரம் ஷா என் பேரில் எடுத்த ப்ராஜெக்ட் செஞ்சுட்டு இருக்கும் போது திருடி வித்து இருக்கான். அந்த கம்பெனியோட சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ் காம்பெடிடர் கிட்ட அவங்க கஸ்டமர் லிஸ்ட் இருப்பதை கண்டு பிடிச்சு இருக்கான்"

ப்ரீதி, "மை காட்! நான் ஆன்ஸைட் போன சமயம் அந்த மாதிரி டேட்டாவை நானே எக்ஸ்ட்ராக்ட் பண்ணி டெஸ்ட் டீமுக்கு அனுப்பி இருக்கேன்"

ஆனந்த், "நினைச்சேன். நீ அந்த மாதிரி அனுப்பின ஒவ்வொண்ணும் உனக்கு ஞாபகம் இருக்கா?"



ப்ரீதி, "சிலது ஞாபகம் இருக்கு. இல்லைன்னா என்னோட ஔட்லுக் ஆர்கைவில் பார்த்தா தெரிஞ்சுடும்"

ஆனந்த், "ஓ! எடுத்து அனுப்பச் சொல்லி உனக்கு ஈமெயில் வந்து இருக்கா? லவ்லி! F.B.I will have a lot of fun. அப்படி உனக்கு வந்த ஒவ்வொரு ஈமெயிலையும் நீ எனக்கு ஃபார்வர்ட் பண்ணனும். ஓ.கே?"

ப்ரீதி, "சரி"

ஆனந்த், "ம்ம்ம் .. Get ready மாமாவைப் போய் பார்க்கலாம்"

ப்ரீதி, "முதல்ல என் பி.ஜிக்கு போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டுப் போலாம்"

ஆனந்த், "என் நேத்து போட்டு இருந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன?"

ப்ரீதி, "ஹல்லோ! தி இஸ் நாட் தி யூ.எஸ். அந்த மாதிரி ட்ரெஸ்ஸைப் போட்டுண்டு வெளில போக வரமுடியாது" என்ற படி எழுந்து நின்றாள். அமர்ந்து இருந்தவாறே அவளை அருகே இழுத்து அவள் பின் புறங்களைத் தடவியபடி ஆனந்த், "இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தில் பாத்து ரசிக்கலாமேன்னு கேட்டேன்"

அவன் தலை முடியைக் விரல்களால் கோதியவாறு ப்ரீதி, "நைட்டு ரசிச்சது போதும் நீயும் புறப்படு"




No comments:

Post a Comment