Wednesday, April 8, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 20

மான்சி அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த அத்தனை கண்களும் அவளை மொய்க்க,. சத்யன் மனதில் திடீரென ஒரு திமிர் வந்து உட்கார,. மான்சியின் இடுப்பில் கைப்போட்டு அவளை தன்னுடன் நெருக்கமாக நிறுத்திக்கொண்டான்

“ என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க,. இவதான் என் மனைவி மான்சி” என்று திமிர் குரலில் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தான்,. அவளுடைய தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றான்

மான்சியும் அவனை விலக்கவில்லை அமைதியாக நின்றாள்,. சத்யன் அவளை அவன் மாமாவின் படுக்கையருகே அழைத்துச்செல்ல,. மான்சி சம்பிரதாயமாக அவரை விசாரித்தாள்



பிறகு சத்யனிடம் திரும்பி “ இங்கே எனக்கு சில டாக்டர்ஸ் தெரியும் நான் போய் அவங்களை பார்த்து இவரை பத்தி விசாரிச்சுட்டு வர்றேன்” என்று கேட்க

“ ம் வா மான்சி நானும் உன்கூட வர்றேன்” என்று அவளுடன் சத்யனும் வெளியே போக... அதன்பிறகுதான் அங்கிருந்தவர்கள் மூச்சே வெளியேவிட்டார்கள்

என்ன பொருத்தமான அழகான ஜோடி என்று அனைவரும் கூற பானுவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது..

மான்சியின் இந்த அலங்காரம் பானுவுக்கு வியப்பாக இருந்தது.. ஆஸ்பிட்டல் வருவதற்கு இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே ,.ஒருவேளை இது தன் புருஷனுக்காக செய்து கொண்ட அலங்காரமா, என்று பானு யோசித்தாள்

எது எப்படியோ அவளுடைய இந்த மாற்றம் எல்லா விஷயத்திலும் இருந்துவிட்டால் போதும்,. அவளும் பிள்ளைகளும் சத்யனுடன் சேர்ந்து வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டாள் பானு

மான்சியும் சத்யனும் அங்கிருந்த டாக்டர்களை விசாரித்து அவன் மாமாவின் நிலைமை பற்றி தெரிந்து கொண்டனர்,. அங்கே மான்சி தெரிந்தவர்கள் சத்யன் யாரென்று கேட்க, அவள் சொல்வதற்கு முன். சத்யன் தானாகவே அவள் கணவன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்

மான்சிக்கு அவனுடைய அதிகப்பிரசங்கித்தனம் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்,. அவனுடன் கைகோர்த்து நடப்பதில் ஒரு இணம் புரியாத சந்தோஷம் மனதில் ஆக்கிரமிக்க,. முடிந்தளவுக்கு அவனை நெருங்கியே நடந்தாள்

மருத்துவமனையின் வராண்டாவில் நடந்து வரும்போது ஆட்கள் யாரும் இல்லை என்றால்,. சத்யன் தனது கையை அவளின் இடுப்பில் வைத்து அழுத்தி பற்றிக்கொண்டு தன்னுடைய பாதி உடல் அவள் மீது உரச நடந்தான்

சில இடங்களில் தன் உதட்டால் அவளின் வெளுத்த தோள்பட்டையை உரசினான்,. இடுப்பை பற்றியிருந்த கைவிரல்களை தொப்புளின் துவாரத்தில் நுழைத்து ஆய்வு நடத்தியபடியே நடந்தான்

மருத்துவமனையில் இருந்து எல்லோரும் வீட்டுக்கு வரும்போது பிரேமாவும் தனது மருமகள் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு வருவதாக அவர்களுடன் கிளம்பிவிட்டாள்,.

பிரேமா வருகிறேன் என்று சொன்னது மான்சிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது,. இருபது நாட்கள் மட்டுமே அவளுக்கு மருமகளாக இருந்தாலும் தன்னை ஒரு தாயை போல கவனித்துக் கொண்ட தன் மாமியாரை தன் வீட்டுக்கு அழைத்து போவதில் மான்சிக்கு சந்தோஷம் தான்

அனைவரும் மான்சியின் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி பத்து ஆகிவிட்டது,. சர்தார்ஜியும் அவர் மனைவியும் செய்து வைத்திருந்த உணவை,. அனைவரும் அரட்டையடித்துக் கொண்டு சாப்பிட்டு முடிக்க,.

பிரேமா தன் வளர்ந்த பேரன்களை தன் மடியைவிட்டு இறக்காமல், இருவருக்கும் மாறி மாறி ஊட்டியபடி கண்கள் கலங்க சாப்பிட்டாள்,.

மான்சிக்கு பிரேமாவை பார்த்து சங்கடமாக இருந்தது,. இவ்வளவு நாட்களாக என் பேரன்களை ஏன் எங்களிடமிருந்து மறைத்தாய் என்று ஒரு வார்த்தை கூட பிரேமா அவளை கேட்காதது மான்சியின் மனதை குத்தியது,.

என்மீது எவ்வளவு அன்பு இருந்தால் எதுவும் கேட்காமல் இருப்பார்கள்,. இல்லை ஒருவே சத்யன் இதை பற்றி யாரும் மான்சியிடம் எதுவும் கேட்ககூடாது என்ு சொல்லியிருப்பான்,. என்று முதன் முறையாக அவள் மனது சத்யனுக்கு சாதகமாக யோசித்தது

அனைவரும் சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அமர,. பானு மான்சியின் காதுகளில் உள்ளே வருமாறு கிசுகிசுக்க,. மான்சி எதற்காக கூப்பிடுறாங்க என்று புரியாமலேயே எழுந்து தனது படுக்கையறைக்கு போனாள்

அவளுக்காக கட்டிலில் அமர்ந்திருந்த பானு வேகமாக எழுந்து மான்சியின் அருகில் வந்து “மான்சி நீயும் சத்யனும் இங்க படுத்துக்கங்க,. நான் பிள்ளைகள் பிரேமா அம்மா எல்லாரும் வெளியே ஹாலில் படுத்துக்கிறோம் மான்சி” என்று கூற

அதிர்ந்துபோன மான்சி “ என்னம்மா விளையாடுறீங்களா,. அவர் ஏன் இங்க படுக்கனும்” என்று கோபமாக கேட்க

" நீதான் புரியாம விளையாடுற மான்சி அந்தம்மா முன்னாடி நீ அவங்க மகனை வெளியிலே படுக்க வச்சா அந்தம்மா மனசு எவ்வளவு பாடுபடும்னு யோசிச்சியா மான்சி,.. ஏற்கனவே சாப்பிடும்போது பார்த்தியா கண்கலங்கி இருந்தாங்க,. ப்ளீஸ் நான் சொல்றத கேளு மான்சி'" என்று பானு கெஞ்சுதாலாக கேட்க

மான்சிக்கு குழப்பமாக இருந்தது ,. பானு சொல்வதும் நியாயமாக பட்டது,. இப்போ இருக்கும் சூழ்நிலையில் சத்யனை வெளியே படுக்கவிட்டால் நிச்சயம் ஏதாவது கேள்வி எழும், என்று நினைத்தவள்

" சரிம்மா நீங்க சொல்ற மாதிரியே செய்ங்க" என்று கூறிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்

பானு அப்பாடா என்று மூச்சுவிட்டு விட்டு பிறகு எழுந்து வெளியே வந்தாள்,. சத்யன் தன் பிள்ளைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருக்க,. அவனருகே போன பானு

" மணி பதினொன்னு ஆகுது அரட்டையடிச்சது போதும் போய் படுங்க சத்யன்,. என்று கூறிவிட்டு பிள்ளைகளிடம் திரும்பி " ஏய் பசங்களா நாம இன்னிக்கு ஹால்ல பாட்டிகூட படுத்துக்கலாம்,. நான் உங்களுக்கு கதை சொல்றேன் என்ன செல்லங்களா" என்று கூறியதும்

அவர்கள் தங்களை மடியைவிட்டு இறக்காமல் கொஞ்சிக்கொண்டே இருக்கும் புது பாட்டியுடன் படுத்துக்கொள்ள கொண்டாட்டமாக சம்மதித்தனர்

சத்யனுக்கு பானு சொன்னது குழப்பமாக இருந்தது,.அவன் என்னாச்சு என்பதுபோல் பானுவை பார்க்க,. அவள் அவன் அம்மாவை ஜாடையில் காட்டி உள்ளே போய் படுக்குமாறு சைகை செய்தாள்

சத்யன் மனதில் இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு இறுக்கம் சூழ மான்சியின் படுக்கையறைக்குள் நுழைந்தான் 

சத்யன் மான்சியின் அறைக்குள் நுழைந்தபோது மான்சி பாத்ரூமில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்,.

சத்யனை பார்த்ததும் லேசாக புன்னகைத்த மான்சி..... “ நீங்க பெட்ல படுத்துக்குங்க,. நான் கீழே படுத்துக்கிறேன்”என்று கூற

சத்யன் அவசரமாக “இல்ல இல்ல நான் கீழே படுத்துக்கிறேன்,. நீ பெட்ல படுத்துக்கோ மான்சி ” என்று சொல்ல

மான்சி அவன் சொன்னதையே காதில் வாங்காமல் ஒரு மெத்தை விரிப்பை எடுத்து தரையில் விரித்து அதில் தலையனையை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்

அவள் தன்னுடைய பேச்சை கேட்காதது சத்யனுக்கு எரிச்சலை கிளப்ப,. எதுவும் பேசாமல் கட்டில் அமர்ந்து மான்சியை பார்த்தான்

மான்சி நேற்று போலவே இன்றும் வெள்ளைநிற காட்டன் குர்தா ஜிப்பா அணிந்திருந்தாள். கைகளை மடக்கி கழுத்துக்கு கீழே முட்டுக் கொடுத்து,. கால்களை மடக்கி அடிவயிற்றில் வைத்துக்கொண்டு படுத்திருந்தாள்

சத்யனுக்கு அவளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது,. ஆனால் இவள் ஏன் இப்படி குறுக்கிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்று நினைத்தவன்,. ஒருவேளை ஏசி ரொம்ப குளிருதோ, என எண்ணி கட்டிலில் கிடந்த மற்றொரு பெட்சீட்டை எடுத்துப்போய் மான்சியின் மீது போர்த்திவிட்டான்

தன்மீது பெட்சீட் போர்த்தப்பட்டதுமே விழித்து அவனை பார்த்த மான்சி “ எல்லா பெட்சீட்டையும் வெளியே எடுத்துட்டு போய்ட்டாங்க,.இது ஒன்னுதான் இருக்கு இதையும் எனக்கு போர்த்திட்டா, உங்களுக்கு குளிருனா நீங்க என்னப் பண்ணுவீங்க” என கேட்க

நின்ற வாறு குனிந்து அவளை பார்த்த சத்யன் “ எனக்கு குளிராது, நீயே போர்த்திக்கோ” என்று கூறிவிட்டு கட்டிலுக்கு திரும்பினான்

அதெப்படி குளிராது, இந்த ஊரை பத்தி உங்களுக்கு தெரியாது, பயங்கரமா குளிரும்”என்று மான்சி சொல்ல

சத்யன் நின்று திரும்பி அவளை நிதானமாக பார்த்து “ மான்சி உனக்கு ஒருவிஷயம் தெரியுமா,. இப்போ இந்த ஊரே ஐஸ் மாதிரி ஆனாலும் எனக்கு குளிராது, ஏன்னா எனக்குத்தான் இன்னிக்கு விடிஞ்சதில் இருந்து கபகபன்னு உடம்பே பத்திகிட்டு எரியுதே” என்று கூறிவிட்டு கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டான்

மான்சிக்கு அவன் கூறியதன் அர்த்தம் வெகு தாமதமாய் புரிய. மனம் துடிக்க உடல் சிலிர்க்க உதடுகளை கடித்து கொண்டு பட்டென கண்களை மூடி போர்வையால் தலையை மூடிக்கொண்டாள்,.

அவள் முகத்தையாவது பார்த்துக்கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த சத்யனுக்கு,. அவள் அப்படி முகத்தை மூடிக்கொண்டது ஏமாற்றமாக இருந்தது,.
வெகுநேரம் அவள் போர்வையை விலக்குவாள் என்று காத்திருந்த சத்யன்

ஒருவேளை தூங்கிப் போய்விட்டாளோ என்று எண்ணி “ மான்சி” என்று மெதுவாக குரல் கொடுத்தான்

சிறிதுநேரம் கழித்து “ம்” என்று மட்டும் போர்வைக்குள் இருந்து குரல் வந்தது

ஓ முழிச்சுக்கிட்டு தான் இருக்கா என நினைத்தவன் “ எனக்கு தூக்கமே வரலை மான்சி ஏதாவது பேசலாமா” என்று சத்யன் மெல்லிய குரலில் கேட்டான்

“என்ன பேசனும்”....

“தூக்கம் வரவரைக்கும் எதாச்சும் பேசுவோம் மான்சி, நீ மொதல்ல முகத்தை மூடியிருக்கும் அந்த பெட்சீட்டை விலக்கு மான்சி” என சத்யன் கூறியதும்

தயக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக போர்வையை தன் உதடுகள் வரை இறக்கிய மான்சி “என்ன பேசனும் பேசுங்க” கண்களை மூடிக்கொண்டே

“ கண்ணைத் திறந்தா தான பேசமுடியும்,. பார்க்கமுடியத அளவுக்கு நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன் மான்சி” என சத்யன் கூறியதும்

மான்சி கண்களை திறந்து அவனை பார்த்து “ம் சொல்லுங்க” என்றாள்

சிறிதுநேரம் என்ன பேசுவது என்று புரியாமல் அவளையே பார்த்த சத்யன்,. பிறகு “ நீ என்னை மன்னிச்சுட்டியா இல்லையான்னு எனக்கு தெரியனும் மான்சி ப்ளீஸ்” என்று கெஞ்சுதலாக கேட்டான்

மான்சி மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு “ அது ஏன் இப்போ கேட்கிறீங்க” என்று காற்றுடன் பேசினாள்


“ எனக்கு தெரிஞ்சாகனும் மான்சி, உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம ரொம்ப அவஸ்தையா இருக்கு மான்சி,. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் வெளிப்படையாக சொல்லும்மா நான் ஏத்துக்கிறேன்” என சத்யன் வருத்தமாக கேட்க

வெகுநேரம் மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை பிறகு போர்வையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவள் “ நான் உண்மையை சொல்லனும்னா,எனக்கே அதை பற்றி ஒன்னுமே புரியலை,. என் உணர்வுகள் உங்க பக்கத்துலயே நான் இருக்கனும்னு சொல்லுது,. ஆனா என் மனசு முன்னால நடந்தது எதையுமே மறக்காம உங்களை வெறுக்க சொல்லுது, நான் எதன்படி நடப்பதுன்னு எனக்கே பயங்கர குழப்பமா தான் இருக்கு”

“ ஆனா ஒரு சராசரி குடும்பத்து பொண்ணா இருந்து யோசிச்சி பார்த்தா,. நம்ம பிள்ளைகளின் எதிர்காலம்,. இன்னிக்கு ஆஸ்பிட்டல்ல பார்த்த குடும்ப உறவுகள்,. கண்ணீரோட தன் பேரன்களை கொஞ்சும் உங்க அம்மா இவங்க எல்லாமே ரொம்ப முக்கியமா தெரியுது, எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேனும் சத்யன்,. அதுவரைக்கும் என்னை எந்தவிதத்திலும் தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்” என்று மான்சி கண்கலங்க சத்யனை கையெடுத்துக் கும்பிட

சத்யன் சட்டென கட்டிலில் இருந்து குதித்து இறங்கி, ஒரே தாவலில் மான்சி அருகே வந்து மண்டியிட்டு, அவளின் குவித்திருந்த கையை பற்றிக்கொண்டு

“என்ன மான்சி இது, நீ சொன்னா நான் புரிஞ்சுக்க போறேன்,.. இதுக்குப்போய் ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசறே,” என்று வருந்தியவன் அவள் கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு

“ எனக்கு உன் மனசு புரியுது மான்சி, இன்னும் எத்தனை நாள் ஆனாலும் நான் உன் பதிலுக்காக காத்திருப்பேன், நான் ஏழு வருஷமா நடைப்பிணமாய் வாழ்ந்தது போதும் மான்சி,. இனிமேல் என் வாழ்க்கையில் ஜீவன் இருக்கனும் மான்சி,.. ஆனா நான் இப்போ முழுக்க முழுக்க உனக்கு புருஷன், நம்ம பிள்ளைகளுக்கு தகப்பன் இதை மட்டும் நீ மனசுல வச்சு முடிவெடு மான்சி எனக்கு அது போதும்” என சத்யன் கூறியதும்

மான்சி மெதுவாக அவனிடமிருந்து தன் கைகளை உருவிக்கொண்டு “சரி நேரமாகுது நீங்க போய் தூங்குங்க, எல்லாம் சரியாயிடும் ” என்று கூற
சத்யன் அரைமனதாக அவளைவிட்டு விலகி எழுந்து கட்டிலில் போய் படுத்துக்கொண்டான்,. மான்சியும் படுக்கையில் படுத்துக்கொண்டாள்
சிறிதுநேரம் கழித்து “மான்சி தூங்கிட்டய” என்ற சத்யனின் கரல் கேட்டு மறுபடியும் கண்விழித்த மான்சி “ இன்னும் என்ன” என்று கேட்க

“ ஒன்னுமில்ல மான்சி இப்போதான் குளிர்ற மாதிரி இருக்கு” என்று சத்யன் அசடு வழிய

“ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க யாரோ காலையில இருந்து உடம்பே பத்திகிட்டு எரியுதுன்னு சொன்னாங்க” என்று மான்சி அவன் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நக்கலாய் சொல்ல

“ அப்போ சொன்னேன் ஆனா இப்போ குளிருதே மான்சி என்ன பண்றது” என்று சத்யன் வழிய

“ சரி இந்தாங்க” என்று தன்மீது இருந்த பெட்சீட்டை எடுத்து அவனை நோக்கி மான்சி நீட்ட

அதை வாங்காமல் “ அப்புறம் உனக்கு என்ன பண்ணுவே மான்சி” என்று அக்கரையுடன் சத்யன் கேள்வி கேட்க

“ பரவாயில்லை நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன், நீங்க போர்த்திக்கோங்க” என்ற மான்சி அந்த பெட்சீட்டை சுருட்டி கட்டிலை நோக்கி வீசியடிக்க. சத்யன் அதை கையில் பிடித்தான்




“ ஆம்பளை என்னாலயே குளிர் தாங்க முடியலை நீ எப்படி தாங்குவ மான்சி,. இந்த பெட்சீட் தான் ரொம்ப பெரிசா இருக்கே மான்சி” என்று சத்யன் வழியவழிய பேச

“ அதனால பெட்சீட்டை ரெண்டா கிழிச்சுரலாம்னு சொல்றீங்களா” என மான்சி இன்னும் அதிக நக்கலாக கேட்க

“ அதில்லைம்மா ஏன் ரெண்டு பேருமே போர்த்திக்க கூடாது மான்சி” என்று சத்யன் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக கேட்க

“ என்ன விளையாடுறீங்களா இவ்வளவு நேரம் நான் சொன்னதுக்கெல்லாம தலையாட்டி, நான் காத்திருக்கேன் மான்சின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பேசுறீங்க” என்று மான்சி கோபமாக கேட்க

“ அய்யோ நீ தப்பா புரிஞ்சுகிட்ட மான்சி,. இந்த பெட்சீட் கிட்டத்தட்ட ஆறுபேர் போர்த்திக்கலாம்,. இங்கே நாம ரெண்டு பேர்தானே, ஆளுக்கெரு மூலையில் போர்த்திக்கிட்டு படுத்துக்கலாமே, நீ வெறுமென படுத்தா அதை பார்த்துகிட்டே எனக்கு நைட்டெல்லாம் தூக்கம் வராது மான்சி,. நான் உன்னை டச்சே பண்ணமாட்டேன் மான்சி நம்பு” என்று சத்யன் உருதியான குரலில் கூற

மான்சி அவனையே உற்று பார்த்தாள்,. அவன் முகத்தில் இருந்து அவளால் பொய்யை கண்டுபிடிக்க முடியவில்லை,. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயமா இவளாலும் குளிர் தாங்கமுடியாது, என்ன செய்யலாம், சிறிது மவுனத்திற்கு பிறகு மெதுவாக எழுந்து கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டாள்

சத்யன் மனது அந்த அறையை விட்டு வெளியே போய் வானத்தில் பறக்க ஆரம்பிக்க,. உற்சாகத்தில் கும்மாளமிட்ட உள்ளத்தை கட்டுபடுத்திக் கொண்டு, கட்டிலின் மறுமூலையில் நகர்ந்து அந்த பெட்சீட்டை இருவருக்கும் சேர்த்து போர்த்திக்கொண்டு படுத்தான்

சத்யனுக்கு முதுகாட்டி படுத்திருந்த மான்சி கொஞ்சநேரத்தில் சத்யன் பக்கத்தில் அதிக அசைவை உணர்ந்து அவன் தன் பக்கமாக நகர்ந்து வருகிறான் என்று புரிய

“ சும்மா அமைதியா படுங்க எனக்கு தூக்கம் வருது,. நாளைக்கு ஆஸ்பிட்டல்ல ஒரு பார்ட்டி வேற அரேஞ்ச் பண்ணிருக்காங்க,. அங்கபோய் என்னால தூங்கி வழியமுடியாது,. அதனால தயவுசெய்து தொல்லை பண்ணாம தூங்குங்க” எனறு மான்சி அதட்ட

“ நான் ஒன்னுமே பண்ணலை மான்சி திரும்பிதான் படுத்தேன்” என்ற சத்யனின் குரல் அவள் காதருகில் கிசுகிசுப்பாய் ஒலித்தது

அவன் தன்னை ரொம்பவும் நெருங்கி இருக்கிறான் என்பதை உணர்ந்த மான்சி “ ப்ளீஸ் நாளைக்கு ரொம்ப முக்கியமான பார்ட்டிங்க, பெரிய பைவ்ஸ்டார் ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணிருக்காங்க... நான் பேங்காக் போய்ட்டு வந்தேன்ல அது விஷயமா சிலர் அங்கருந்து வர்றாங்க, நான்தான் எல்லாரையும் ரிசீவ் பண்ணி எல்லா ஏற்பாடும் செய்யனும்,. அதனால தயவுசெய்து தொந்தரவு செய்யாம அமைதியா படுங்க, இல்லேன்னா நான் வெளியே போய் பிள்ளைங்க கூட படுத்துக்குவேன்” என்று மான்சி சத்யனுக்கு விளக்கமாக எடுத்து சொல்ல

“ நான் எதுவும் செய்யலை ஆனா நீ இந்த பக்கமா மட்டும் திரும்பி படு நான் உன் முகத்தை பார்த்துக்கிட்டே தூங்கிர்றேன்” என்று சத்யன் ஏக்கமாக கேட்க

அதன்பிறகு மான்சி யோசிக்கவே இல்லை பட்டென அவனை பார்த்தவாறு திரும்பி படுத்து “ போதுமா இப்போ கண்ணை மூடி தூங்குங்க” என்று கூறிவிட்டு தன் கண்களை மூடிக்கொண்டாள்

சத்யன் அவள் முகத்தை பார்த்தவாறே எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை

காலையில் பானு கதவை தட்ட மான்சிதான் முதலில் உறக்கம் கலைந்தாள் ,.. மான்சி முதலில் உணர்ந்தது வித்தியாசமான வாசனையை தான்,. என்ன வாசனை என்று நாசியில் நன்றாக இழுத்தாள்,. இந்த வாசனை அவளுக்கு நன்றாக பழக்கப்பட்ட வாசனைதான், கிட்டத்தட்ட ஏழு வருஷத்துக்கு முன்பு உணர்ந்த வாசனை இது என்று அவள் அறிவுக்கு புரிய,. பட்டென கண்களை திறந்து விரித்து பார்த்தாள்

அவள் முகம் சத்யனின் வெற்று மார்பில் புதைந்து இருந்தது,. அவன் மார்பில் இருந்து வந்த வியர்வை கலந்த அவனுடைய ஆண்மை வாசனைதான் அவளை சற்றுமுன் கிறங்கடித்தது போல,..


சத்யன் அவளை தன் கையால் மட்டுமே சுற்றியிருந்தான்,. ஆனால் மான்சி தனது வலதுகாலை அவன்மீது போட்டு இடதுகையை அவன் அக்குளில் கொடுத்து,. வலதுகையால் அவனுடைய முதுகை சுற்றி வளைத்து அவன் மார்பை தன் முகத்தில் வைத்து அழுத்தி கொண்டு இருந்தாள்

மான்சிக்கு எங்கெங்கோ காடுமேடெல்லாம் சுற்றியலைந்து தனது சொந்த இருப்பிடம் வந்தது போல் இருந்து,. எக்காரணம் கொண்டும் தன் முகத்தை அங்கிருந்து எடுக்ககூடாது என்பது போல அவனை இறுக்கி அணைத்து இன்னும் ஆழமாக தன் முகத்தை அவன் மார்பில் வைத்துக்கொண்டாள்



No comments:

Post a Comment