Tuesday, April 7, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 17

மறுநிமிடம் அவன் உள்ளத்தில் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் தவிடுபொடியானது,.. இவளா என் மான்சி,.. இவளா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதியில் சந்தித்த என் வாழ்க்கையின் விடிவெள்ளி,.... இவளா என்னுடன் ஒரே அறையிலும் எட்டு நாட்கள் ஈருயிர் ஓருடலாக வாழ்ந்தவள், சத்யனுக்கு கண்ணை இருட்டுவது போல இருந்தது

தலையை உலுக்கிக்கொண்டு மறுபடியும் மான்சியை பார்த்தான்,. தோள்பட்டை வரை வெட்டப்பட்ட கூந்தல்,.. கண்களில் பெரியதாக ஒரு கூலிங்கிளாஸ்,. கழுத்தில் இருந்து முழங்காலுக்கு கீழே வரையிலும் ஒரு நீளமான கறுப்பு கோட்,.. அதே கறுப்பு நிறத்தில் சூட்,.. காலில் குதி உயர்ந்த கறுப்பு ஷூ, கையில் ஒரு சிறிய பெட்டி, இவ்வளவுதான் மான்சி

சத்யனுக்கு மான்சியை பார்த்ததும் ஒரு பிரபலமான ஹாலிவுட் நடிகையின் ஞாபகம் தான் வந்தது,.. சத்யன் அவளிடம் மாற்றம் எதிர்பார்த்தான் தான், ஆனால் இவ்வளவு மாற்றங்கள் எதிர்பார்க்கவில்லை,.. நிச்சயம் இவள் தன்னை ஏற்று கொள்ளமாட்டாள் என்று அவன் மனம் உறுதியுடன் கூற சத்யன் அவளையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்


மான்சியின் கைகளை பற்றிய பிள்ளைகள் அவளை சத்யன் இருக்கும் பக்கமாக அழைத்து வந்தனர்,.. மான்சி குனிந்து அவர்களிடம் ஏதோ பேசி சிரித்தபடியே வந்தவள், சத்யன் அருகில் வந்ததும் தான் நிமிர்ந்தாள்

மான்சி சத்யனை அங்கே பார்த்து அதிர்ச்சி அடைந்தாளா என்று அந்த பெரிய கூலிங்கிளாஸை மீறி சத்யனால் அவள் கண்களை பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை,..

அவள் உடல் வாசனை சத்யன் மீது மோதும் அளவுக்கு இருவரும் அருகருகே நின்றிருந்தனர்,.. சத்யன் அவளையே இமைக்காமல் பார்த்தான்,.. அவளும் அவனின் பார்வையை தாங்கி நிமிர்ந்து நின்றாள்,..

இருவரும் பேசா மடந்தைகளாக நிற்க்க,. “ அம்மா என்ன அப்படி பார்க்கிறீங்க அப்பா தான்ம்மா எங்ககூட பெங்களூரில் இருந்து சிங்கப்பூர்க்கு ஒன்னாவே வந்தாரும்மா,.. அப்பாகூட ஏதாவது பேசும்மா” என்று ப்ரணேஷ்தான் சூழ்நிலையை கலைத்தான்

மான்சிதான் முதலில் நிதானத்துக்கு வந்தாள்,.. சத்யனை அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை,.. ஏன் இங்கே வந்தான் என்ற கேள்வியை விட,.. ஏன் இப்படி இருக்கிறான் என்ற கேள்விதான் மான்சியின் மனதில் எழுந்தது

வெகுநேரமாக இருவரும் இப்படியே நிற்க்கிோம் என்று உணர்ந்த மான்சி சட்டென தன் வலதுகையை சத்யன் முன் நீட்டி முகத்தில் செயற்கையாக ஒரு புன்னைகையை பூசிக்கொண்டு “ ஹலோ சத்யன் ஹவ் ஆர் யூ இங்கே எப்படி” என்று மேன் நாட்டக்காரி போல கேட்க

சத்யனுக்குள் மிச்சமிருந்த எதுவோ உடைந்து உதிர்வது போல் இருக்க, சம்பிரதாயமாக கூட அவள் கையை பற்றிக் குலுக்காமல் குனிந்து ப்ரணேஷை தூக்கிகொண்டு அங்கிருந்து நகர்ந்தான்

மான்சி நீட்டிய கையை கீழே தொங்க விட்டு தனது பெட்டியை எடுத்துக்கொள்ள,. சர்தார்ஜி அவளுடைய லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போய் காரில் வைத்தார்
சத்யன் மவுனமாக காரின் பின்புறமாக பிள்ளைகளுடன் ஏறிக்கொள்ள, சர்தார்ஜியிடமிருந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு மான்சி காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினாள்

சிங்கப்பூரின் வெண்ணையை போன்று வழுக்கும் சாலையில் மான்சியின் கைகளில் கார் அனாயாசமாக பறந்தது, மிக நேர்த்தியாக காரை மான்சி ஓட்ட,.. பின்னால் இருந்து அதை பார்த்துக்கொண்டே வந்த சத்யனுக்கு மனதுக்குள் ஒரு ஓரமாய் பெருமையாக இருந்தது

கார் வீடுவந்து சேர்ந்தவுடன் சத்யன் மவுனமாக தன் மகன்களுடன் இறங்கி உள்ளே போக,.. மான்சி அவன் பின்னே போனாள்,.. சர்தார்ஜி லக்கேஜ்களை எடுத்து கொண்டுவந்து உள்ளே வைத்தார்

இருவரின் முகத்தையும் பார்த்த பானுவுக்கு எப்போது பூகம்பம் வெடிக்குமோ என்று கலக்கமாக இருந்தது,.. எல்லோரும் அமைதியாக இருக்க,.. மான்சி மட்டும் இயல்பாக இருந்தாள்

சோபாவில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த சத்யனை பார்த்து “ என்ன சத்யன் உங்க வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா,.” என்று மான்சி சம்பிரதாயமாக விசாரிக்க

தலைகுனிந்து இருந்த சத்யன் பட்டென அவளை நிமிர்ந்து நேராகப் பார்த்தான்,.. அவள் இதுநாள் வரை தன்னை பெயர் சொல்லி கூப்பிட்டதே கிடையாது.. ஆனால் இன்று இது இரண்டாவது முறை,.. இது எதை காட்டுகிறது இனி நீ யாரோ நான் யாரோ என்பதையா,..

மான்சி சளைக்காமல் சத்யனின் பார்வையை தாங்கினாள்,..

இதற்க்கு மேல் மவுனமாக இருந்தால் அது தனக்கு பலகீனமாக அமைந்துவிடும் என்றுணர்ந்த சத்யன் “ ம் எல்லாரும் நல்லாருக்காங்க,.... நீ எப்படி இருக்க மான்சி” என்று மெலிந்த குரலில் கேட்க

“ எனக்கென்ன ரொம்ப சூப்பரா இருக்கேன்,. அழகான ரெண்டு பிள்ளைகள்,.. நல்ல படிப்பு,.. அந்தஸ்தான வேலை,.. கார் வீடுன்னு, நல்லாருக்கேன்” என்று மான்சி பட்டென பதில் சொல்ல

அதற்க்கு மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் மவுனமாக இருந்தனர்... அதற்க்குள் பிள்ளைகள் இருவரும் மான்சியின் பெட்டி பிரித்து அதில் இருந்த பொருட்களை ஹாலில் கடைபரப்பி கொண்டு, இது எனக்கு, இது உனக்கு என போட்டி போட்டு கொண்டிருக்க

மான்சி எழுந்து அவர்களிடம் போய் அவரவர் பொருட்களை பிரித்து கொடுக்க,.. ப்ரணவ் “ அம்மா அப்பாவுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலையேம்மா,.. அப்பா பாவம்ல” என்று கூற,.. அவன் கூறியதையே ப்ரணேஷும் கூறினான்

மான்சி தனது கைப் பெட்டியை திறந்து அதில் இருந்த ஒரு அழகிய உயர்ந்த ரக செல்போனை எடுத்து ப்ரணவிடம் கொடுத்து சத்யனிடம் கொடுக்க சொன்னாள்
ப்ரணவ் அதை கொண்டு போய் சத்யனிடம் கொடுக்க,.. வன் அந்த செல் போனை வாங்கி அதையே பார்த்துக்கொண்டு இருந்தான்

அன்று இரவு சாப்பாடு முடிந்து பானு பிள்ளைகளை அறைக்கு தள்ளிக்கொண்டு போனாள்,.. அப்பா கூடத்தான் படுப்போம் என்று வர மறுத்தவர்களிடம்,..

“ அம்மாவும் அப்பாவும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணிருக்காங்கள்ள அதனால அவங்க நிறைய பேசனும் குட்டிங்களா தயவுசெய்து இன்னிக்கு ஒருநாள் என்கூட படுங்கப்பா ப்ளீஸ்” என்று பானு அவர்களை தாஜா செய்ய

பிள்ளைகளுக்கும் ஓரளவுக்கு புரிந்தது “ டேய் ஆமாம்டா அப்பாவும் அம்மாவும் காலையில இருந்து சரியாவே பேசிக்கலை,.. இப்போ ரெண்டுபேரும் நல்லா பேசட்டும் நாம இங்கேயே பானும்மா கூட படுத்துக்கலாம்” என்று ப்ரணவ் சொன்னதும் ப்ரணேஷ் சரியென தலையசைத்துவிட்டு இருவரும் படுத்துக்கொண்டனர் 


சர்தார்ஜி குழப்பமாக சத்யனை பார்த்துக் கொண்டே சத்யனுக்கு படுக்கையை தரையில் விரிக்க,.. சத்யன் தலைகுனிந்து சோபாவில் அமர்ந்திருந்தான்... அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து மான்சி அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்

கவிழ்ந்து சத்யனின் தலையில் அங்காங்கே தெரிந்த ஒன்றிரண்டு நரைமுடிகள்... கண்ணோரத்தில் இருந்த சுருக்கங்கள்,.. இது சத்யனுடைய வயது முதிர்ச்சியை காட்டுகின்றதா... இல்லை ஏழுவருட கவலைகளை குறிக்கிறதா,.. என்று யோசித்துக்கொண்டிருந்தாள்

சர்தார்ஜியும் அவர் மனைவியும் அவர்கள் அறைக்கு போய்விட.. மான்சி சத்யனை பார்த்து “ என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க சத்யன்” என்று இயல்பாய் கேட்டாள்

சத்யன் தலையை நிமிர்ந்து அவள் கண்களை நேராக பார்த்தான்,.. எவ்வளவுதான் இயல்பாக இருப்பது காட்டிக்கொண்டாலும். அவனுடைய நேரடி பார்வையை அவளால் தாங்கமுடியாமல் தன் இமைகளை கண்களுக்கு குடைபிடித்தாள்

அவள் கண்களை கவிழ்த்ததும் சத்யன் தன் பார்வையால் அவளை அளவிட்டான்,... ஏழு வருடத்திற்கு முந்தய அவள் அழகு துளிகூட மாறவில்லை, மான்சி இரவு உடைக்கு மாறியிருந்தாள், ரோஸ் நிறமும் வெள்ளை நிறமும் கலந்து கட்டம் போட்ட லூசான காட்டன் போன்ட் சட்டை அணிந்திருந்தாள்,..

அந்த உடையில் ரொம்ப சின்ன பெண்போல் இருந்தாள் மான்சி,.. சத்யனின் கண்கள் அவள் கழுத்தில் பதிந்தது,. ஒரு மெல்லிய செயின் அணிந்திருந்தாள்,.. சத்யனின் பார்வை பெரும் தயக்கத்துடன் எதிர்பார்ப்படனும் சற்று கீழே இறங்கியது

மான்சி இரு கைகளையும் கட்டிக்கொண்டு குனிந்தவாறு அமர்ந்திருக்க,. அந்த லூசான சட்டையில் மான்சி மார்பு பிளவு சத்யன் கண்களுக்கு விருந்தாக அமைய,.. அதை பார்த்த சத்யனுக்கு மூச்சடைப்பது போல இருந்தது,..

கண்களை அங்கிருந்து எடுக்க முடியாமல் இன்னும் சற்று ஆழமாக பார்வையை செலுத்தினான்,.. பருத்த மார்புகளின் மேல் பக்கம் சதை பிதுங்கி பளீரென்று தெரிய,.. சத்யனுக்கு உள்ளுக்குள் ஏதோ வேக வேகமாக விழித்துக்கொள்ள ஆரம்பித்தது

சட்டென உடல் சூடாக சத்யன் தன் பார்வையை திருப்ப ரொம்பவே சிரமப்பட்டான்,.. அடிப்பாவி இந்த சின்ன விசயத்துக்கே என்னை இப்படி பலவீனப்படுத்தி விட்டாளே இவளிடம் நான் எதை விளக்கி எப்படி சொல்லப்போறேன் என்று தவித்தான் சத்யன்



அவள் நிமிர்ந்து உட்காரக்கூடாதா எனனை இப்படி வதைக்கிறாளா என்று சத்யன் எண்ணும்போதே,.. மான்சி சட்டென நிமிர்ந்தாள்... அய்யோ அவள் பார்த்துவிட போகிறாளே என்று சத்யன் அவசரமாக தன் பார்வையை வேறு பக்கம் திருப்புவதற்குள்,.. மான்சி சத்யனை கவனித்துவிட்டாள்

ஆனால் மான்சி எதுவும் சொல்லாமல் கொஞ்சம் நிமிர்ந்து மட்டும் அமர்ந்து “ நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலை,” என்று அமைதியாக கேட்க

சத்யன் அவளின் அமைதியான பேச்சில் சற்றே நிம்மதியடைந்த “ இங்கே அம்மாவோட அண்ணன் ஒருத்தர் இருக்கார்னு உனக்கு தெரியுமே மான்சி,.. அவருக்கு நாளைக்கு பைபாஸ் சர்ஜரி நடக்க போகுது,.. அவர் அம்மாவை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டார் அதனால் நானும் அம்மாவும் வந்திருக்கோம்” என்று சத்யன் கூற

“ அப்போ இங்கே உங்க அம்மாவும் வந்திருக்காங்களா சத்யன் ” என்று மான்சி ஆச்சரியத்துடன் கேட்டாள்

சத்யன் மனம் அவள் பேச்சக்களை ஒவ்வொன்றாக மனதில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தது,.. அவன் அம்மாவை அத்தை என்று அழைக்காமல் உங்க அம்மா என்று அழைத்தது,.. சத்யன் மனதில் மேலும் விரக்த்தியை ஏற்ப்படுத்தியது

இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ ஆமாம் மான்சி ஏர்போர்ட்டில் இருந்து அப்படியே மாமா வீட்டுக்கு போய்ட்டாங்க,.. நான் பசங்களோட இங்க வந்துட்டேன்” என்ற சத்யன் கொஞ்ச கொஞ்சமாக இயல்பானான்

“ சரி பசங்களை எங்கே சந்திச்சீங்க” என்று மான்சி நிதானமாக கேட்டாள்

“ பெங்களூர் ஏர்போர்ட்ல பார்த்தேன்,.. அவங்களே என்னை கண்டுபிடிச்சு வந்து என்கிட்ட பேசினாங்க,. எனக்கு முதலில் ஒன்னுமே புரியலை அப்புறமா புரிஞ்சதும் என் சந்தோஷத்துக்கு அளவேயில்லை மான்சி” என்ற சத்யன் அன்றைய நினைவில் பளிச்சென்று முகம் மலர்ந்தான்


“ ஏன் இதுக்கு போய் நீங்க இவ்வளவு சந்தோஷப்படனும்,.. ஏன் இத்தனை வருஷத்துக்கு உங்களுக்கு வேற பசங்க இருந்திருக்கனுமே” என்று மான்சி நிதானமாக கேட்க

அப்போதுதான் மலர்ந்த சத்யனின் முகம்,.. வெயில் பட்ட அனிச்சம் மலராய் வாடியது... அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்தது... ஆனால் இதற்க்கு என்ன பதில் சொல்லவது என்று அவன் யோசிக்கவே இல்லை... “ ஏன் மான்சி அப்படி கேட்டகிற நான் உனக்காகவே இவ்வளவு நாள் காத்திருந்தேன்,... என்னிக்காவது ஒருநாள் நீ எனக்கு திருப்பி கிடைப்பன்னு எனக்கு தெரியும் மான்சி” என்று சத்யன் பட்டென்று பதில் சொன்னான்

“ இது நம்புற மாதிரி இல்லையே சத்யன்” என மான்சி நக்கலாக கேட்க

அவளின் நக்கல் சத்யனின் கோபத்தை தூண்டியது “ எதை நம்புற மாதிரி இல்ல,.. நடந்தது என்னன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்காம என்னை தவிக்க விட்டுட்டு வந்தியே அதை நம்பமுடியலையா மான்சி,.. இல்ல எனக்கு பிறந்த பிள்ளைகளை இத்தனை நாளா என்கிட்ட இருந்து மறைச்சு வைச்சிருந்தயே அதை நம்ப முடியலையா” என கோபத்தில் உக்கிரமாக சத்யன் கேட்க

முதன்முறையாக சத்யனின் கோபத்தை பார்த்த மான்சிக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு “ அந்த கருமத்தை நான் விசாரனை வேற பண்ணனுமா,.. அதன் தெள்ளத்தெளிவா படமா எடுத்து வச்சிருந்தீங்களே,.. அதை பார்த்துட்டு உங்ககூட வாழறதுக்கு நான் என்ன எச்சில் இலைக்கு அலையும் நாயா” என்ற மான்சியின் இந்த வார்த்தைகள் சத்யனின் முகத்தில் அறைந்தது போல இருந்தது

முகம் இறுக்கமாக கண்களை இறுக மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தி பார்த்தான் முடியவில்லை,.. பிறகு கண்களை திறந்து மான்சியை நேராக பார்த்தான்,.. அவன் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது
மான்சிக்கு அவனின் இறுகிய முகத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்து ரொம்ப அதிகமாக பேசிவிட்டோமோ கொஞ்சம் நிதானித்து இருக்கலாமோ என்று வருத்தத்துடன் எண்ணினாள்

“ என்னை எச்சில் இலைன்னு சொல்றியா மான்சி,.. பரவாயில்லை சொல்லு மான்சி ஏன்னா அந்த வார்த்தை எனக்கு தகுதியானதுதான் மான்சி,.. ஆனா நானும் ஒரு எச்சில் இலையை நம்பித்தான் ஏமாந்து என் ஏழு வருஷ சொர்கத்தை இழந்துட்டேன் ,.. நீ இதை நம்பனும் மான்சி,.. ஆனா நான் உன்னை கோயில்ல பார்த்த அந்த நிமிஷத்தில் இருந்து என் விரல் நுனிகூட வேறெந்த பொண்ணு மேலயும் படலை,... இது சத்தியம் மான்சி” என்ற சத்யன் உறுதியான குரலில் கூற

சிறிதுநேரத்திற்கு மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை பிறகு “ அப்போ நான் பார்த்தது உண்மையில்லைன்னு நீங்க பொய் சொல்லப் போறீங்களா” என்று ஏளமாக கேட்க

“ இல்லை நான் இனிமேல் பொய் சொல்லனும்னு அவசியமில்லை மான்சி,.. நீ பார்த்தது நிஜம்தான்,.. ஆனா அது எப்படி வந்ததுன்னு நீ தயவுசெய்து கேட்கனும் மான்சி,.. கேட்டுட்டு நீ என்ன வேனும்னாலும் முடிவெடு மான்சி,. என்ற சத்யன் அவன் வாழ்வில் வீசிய மாயா எனும் சூறாவளியை பற்றி ஒன்றுகூட மறைக்காமல் எல்லாவற்றையும் மான்சியிடம் கூறினான்


அவன் கூறியவற்றை எல்லாம் எந்தவித முகமாற்றமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்த மான்சி,.. அவன் முடித்து வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்

என்ன மான்சி எதுவுமே பேசமாட்டேங்கற,... என்னை ஏதாவது கேளு இல்லை இப்போ சொன்னியே எச்சில் இலைன்னு அது மாதிரி இன்னும் ஏதாவது கேவலமா பேசு,.. ஆனா அதுக்கு எனக்கு தகுதியிருக்குன்னு நீ நெனைக்கலாம் மான்சி ,.. அது ரொம்ப தவறு மான்சி,. நீ வந்தபிறகு நான் எந்த தப்பும் செய்யலை,.. உன்னைத்தவிர வேறொரு பொண்ணை நான் கனவிலே கூட நெனைக்கலை மான்சி,..

“ என்னோட வருத்தமெல்லாம் என்னன்னா, எட்டுநாள் நாம ரெண்டுபேரும் எவ்வளவு அன்யோன்யமா வாழ்ந்தோம்,. நாம வாழ்ந்ததில் செக்ஸ் மட்டும் இல்ல மான்சி,. அந்த எட்டு நாள் வாழ்க்கையில் எட்டு வருஷத்து இல்லறத்தை நாம் அனுபவிச்சது உண்மைதானே மான்சி,..அந்தநாட்களில் ஒருமுறை கூடவா நீ என் காதலை புரிஞ்சுக்கலை,. ஒருமுறை கூடவா என் நேசம் உனக்கு புரியாமப் போச்சு,.. ஆனா நான் நீயும் என்னை உயிரா விரும்புறதா தான் நெனைச்சேன் மான்சி,.. அது இல்லைன்னு இப்பத்தான் தெரியுது எனக்கு”
.
.ஆனா நான் உன்னை உயிரா நேசிசதை என்னால நிரூபிக்க முடியும் மான்சி,.. எப்படின்னு பார்க்குறியா,.. இந்த ஏழு வருஷத்தில் ஒருநாள் கூட நான் சந்தேகப்படலை. இவ்வளவு நாள்ல நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருப்பேன்னு நான் ஒருநாள் கூட கற்பனை பண்ணி பார்த்ததில்லை தெரியுமா மான்சி,”

நீ என்னிக்காவது ஒருநாள் என்கிட்ட வந்துருவேன்னு முழுசா நம்பினேன்,. அது எத்தனை வருஷமா இருந்தாலும் உனக்காக காத்திருந்து உயிரைவிடனும்னு தான் நெனைச்சேனே தவிர,. உன்னை ஒரு முறைக்கூட சந்தேகப்பட்டதில்லை மான்சி,. நான் அந்தளவுக்கு உன்னை நம்பினேன்”

ஆனா இருபதுநாள் ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தோம்,. எட்டு நாள் கரைகாணா சொர்க்க வாழ்க்கையை அனுபவிச்சோம்,.. அப்படியிருந்தும் என் மேல நம்பிக்கை இல்லாம ஏன் என்னை விட்டு வந்த மான்சி?,.. என் குழந்தைகளோட பிறப்பை ஏன் மறச்ச மான்சி?,.நீ இல்லாத இந்த ஏழு வருஷமும் நான் ஒரு நடைபிணமாய் வாழ்ந்தேன் தெரியுமா மான்சி? ,.. எந்த விசாரனையும் இல்லாம என்னை குற்றவாளியாக்கி, மரணத்தை விட பயங்கரமான உன் பிரிவை ஏன் எனக்கு கொடுத்தமான்சி? ” என்று சத்யன் மூச்சுவிடாமல் பேசி அவள்மீது கேள்வி கணைகளை தொடுக்க

மான்சி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்,..அவளால் எதுவுமே பேசமுடியவில்லை,.. அவன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவளை குடைந்தது,.. இவன் சொல்வதை பார்த்தால் நான்தான் குற்றவாளி என்பது போல இருக்குதே,, என மான்சி குழம்பிக் கொண்டு இருக்க , ..

அவளின் குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த சத்யன் “ நான் செய்தது பெரிய தவறுதான் இல்லேன்னு சொல்லலை மான்சி ,. ஆனா அந்த தவறை நீ என்னிடம் வந்த பிறகு நான் செய்யவில்லை,.. இப்போ உனக்கு ஓரளவுக்கு உலக நடப்பு தெரிஞ்சிருக்கும் மான்சி,... திருமணத்திற்கு முன்னாடி எத்தனை ஆண்கள் உத்தமனா இருக்காங்கன்னு உன்னால சொல்ல முடியுமா மான்சி,.



“ அந்த இருபது நாளும் உன்கிட்ட உண்மையை சொல்லமுடியாத நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்,.. சொன்னா நீ எங்க என்னைவிட்டு போய்டுவியோன்னு எத்தனை நாள் பயந்து கிடந்தேன் தெரியுமா, உன்னை முதல் நாளே தொடாததுக்கு காரணமே இந்த பயந்தான்,.. அந்த மாயாவோட பிரச்சனை தீர்ந்ததுக்கு பிறகுதான் உன்கூட வாழனும்னு நெனைச்சேன் மான்சி,.. அதேமாதிரி அந்த பிரச்சினை தீர்ந்து நான் வெளியே வந்துட்டேன் என்று தெரிந்த பிறகுதான் உன்னை தொட்டேன் மான்சி ,. இதெல்லாமே உனக்கு தெரிஞ்ச உண்மைகள் தான் ,. இப்போ நான் உன்கிட்ட கேட்கறது என்னன்னா எனக்கு நீயும் என் பிள்ளைகளும் வேனும் மான்சி,.. நீ இப்போ இருக்கும் தகுதிக்கு என்னை ஏத்துக்குவியான்னு தெரியலை,. எனக்கு என் பிள்ளைகள் வேண்டும் மான்சி” என்று சத்யன் அவளை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு கேட்க,.

மான்சியால் அவனுக்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை,. அவன் வார்த்தைகளின் நியாயம் அவள் முகத்தில் அறைந்தது,. அவன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவளை குற்றவாளியாக்கியது

அப்போது சத்யன் பட்டென சோபாவில் இருந்து எழுந்து எதிரில் அமர்ந்திருந்த மான்சியின் காலருகில் மண்டியிட்டு அவளின் முழங்காலை தன் கைகளால் கட்டிக்கொண்டு அவள் மடியில் தலைசாய்த்து குமுறி கதறி கண்ணீர் விட ஆரம்பிக்க ..

மான்சி அவனின் இந்த திடீர் தாக்குதலில் தடுமாறி என்ன செய்வது என்று புரியாமல் தன் மடியில் இருந்த சத்யனின் தலையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்,.

அவளையும் அறியாமல் அவள் கைகள் அவன் கேசத்தை வருடிவிட,. அது சத்யனின் அழுகையை இன்னும் அதிகமாக்கியது,. மான்சியின் கண்களும் கலங்க ஆரம்பித்தது




" அன்பே நான் கொடுத்த முத்தம்....

" உன் உதட்டிலேயே தேங்கிக் கிடக்கிறது....

" கொடுத்த நானே நிம்மதியின்றி....

" தவிக்கும் போது....

" அதை வாங்கிய நீ எப்படித்தான்...

" நிம்மதியுடன் உறங்குகிறாயோ!

" இன்னும் என் காதுகளில் ...

" ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

" அந்த முதல் முத்தத்தின் சத்தம்!




No comments:

Post a Comment