Saturday, April 4, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 14

மான்சியும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்து சேர ஏழுநாட்கள் ஆனது,... அதன்பின்னர் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இருபத்திநாலு மணிநேரம் போதவில்லை, புதிதாக அன்னம்மா என்ற ஒரு ஐம்பது வயது பெண்மணியை குழந்தைகளை கவணிக்க என்று வேலைக்கு நியமித்தார்கள்,

குழந்தைகளுக்கு ஒரு நல்லநாளில் சிலநிமிடங்கள் மூத்தவனுக்கு ப்ரணவ் ஆனந்த் என்றும், இளையவனுக்கு ப்ரணேஷ் ஆனந்த் என்றும் பெயர் வைத்தார்கள், ஆனந்த என்ற அந்த பெயர் சேர்ப்பு பற்றி பானு மான்சியிடம் எதுவுமே கேட்கவில்லை என்றாலும், குறும்புடன் அவளை பார்த்து சிரித்துக்கொண்டாள்



மான்சி லேசாக அசடுவழிய “ இல்லம்மா அவங்க வீட்ல எல்லார் பேருக்கும் கடைசியில் ஆனந்த்னு இருக்கும் அதான்..... நான் வச்ச பெயர் சரிதானம்மா” என்று மான்சி கேட்க

“ ம்ம் இதுதான் சரி மான்சி.... பரம்பரையாக வரும் பெயர்களை மாற்றக்கூடாது ”.. என்றாள் பானு சிரிப்பை அடக்கிக்கொண்டு

குழந்தைகளுடன் இரண்டு மாதம் இருந்த மான்சி , தாய்ப்பாலை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு பவுடர் பாலை பழக்கிவிட்டாள்,.. அதன்பிறகு மான்சி தனது கல்லூரி படிப்பை தொடர ஆரம்பித்தாள்,

அவர்கள் எட்டுவைத்து நடக்க ஆரம்பித்தபோது, அவர்கள் இருவரையும் பிடித்து நிறுத்த நான்குபேர் தேவைப்பட்டார்கள், பானு நிறைய நாட்கள் இவர்களின் குறும்பை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, தனக்கு உடல்நலக்குறைவு என்று கல்லூரிக்கு டாக்டர் சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு வீட்டில் குழந்தைகளுடன் கொட்டமடித்தாள்

நாளுக்கு நாள் குழந்தைகள் வளரவளர அவர்களின் குறும்புத்தனம் அவர்களைவிட அசுரத்தனமாக வளர்ந்தது,.. பானுவின் அழகான குட்டி அரண்மனை சந்தைக்கடை போல் ஆனாது.. பானு முடிந்தவரை அவர்களை அடக்கி பார்ப்பாள், அடங்கவில்லை என்றால் எப்படியாவது போங்கடா என்று தலையில் கைவைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்துவிடுவாள்

பிறகு குழந்தைகளே அமைதியாகி பானுவிடம் வந்து அமர்நது.. மழலையாய் சிரித்து அவளை கொஞ்சும்போது,.. பானுவுக்கு அவர்கள் இன்னும் குறும்பு செய்து எதையாவது உடைத்துவிட்டு மறுபடியும் தன்னை கொஞ்சமாட்டார்களா என்று இருக்கும்

மான்சியை அம்மா என்றும், பானுவை பானும்மா என்று குழந்தைகள் கூப்பிட, பானு அந்த அழைப்புக்காகவே அவர்களை சுற்றினாள், தூங்கும் போதுகூட அவர்களை விட்டு விலகாமல் அருகில் அமர்ந்து குழந்தைகளின் முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பாள்

இருவரின் முதலாமாண்டு பிறந்தநாளின் போது கல்லூரியில் தன்னுடன் பணிபுரியும் அனைவரையும் அழைத்து வீட்டில் விருந்துவைத்து ரொம்ப தடல்புடலாக கொண்டாடினாள் பானு.. இருவருக்கும் சத்யனின் படம் வைத்த லாக்கெட்டை செயின் பரிசாக குழந்தைகளின் கழுத்தில் போட்டாள் பானு

குழந்தைகள் தங்களின் அப்பாவை மறக்ககூடாது என்று நினைத்த பானுவின் அம்மா, அடிக்கடி சத்யனின் புகைப்படத்தை குழந்தைகளிடம் காட்டியே வளர்த்தாள்,

பானுவுக்கு கூட இப்போதெல்லாம் மான்சி தன் குழந்தைகளுடன் சத்யனிடம் இனைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தாள்

முதலாமவன் ப்ரணவ் அவன் தாத்தா தயானந்தனை போல் அமைதியானவன், ஆனால் ரொம்ப புத்திசாலியாக இருந்தான், இரண்டாமவன் பரணேஷ் படுசுட்டியாக இருந்தான், எளிதாக அவனை புரிந்துகொள்ளலாம், ஆனால் யாருக்கும் அடங்காதவன்,

பாவம் இவர்களின் பின்னால் ஓடி ஓடி புதிதாய் வந்த வேலைக்காரம்மா ஐந்து கிலோ எடை குறைந்ததுதான் மிச்சம், ஆனாலு அன்னம்மாவுக்கு குழந்தைகள் செய்யும் குறும்பும், அவர்களின் அழகும் கவர்ந்துவிட வேறுவழியின்றி அங்கேயே பணிசெய்தாள்

அவன் செய்யும் குறும்புகளுக்கு துணையாக பெரியவனையும் கூப்பிடுவான், அவன் வரவில்லையென்றால் தான் செய்யும் தவறுகளை அவன் தலையில் கட்டுவான், அதை மான்சி கவனித்துவிட்டு அப்படியே அப்பன் போல என்று மனதுக்குள் கறுவினாள்

மான்சியும் தன் பிள்ளைகளை கவனிக்கவில்லை என்று சொல்லமுடியாது, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் சிறிதுநேரம் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு தன் படிப்பை வீட்டிலும் தொடருவாள்

அவளுக்கு சமீபகாலமாக மனதில் ஒரு பயம், இன்னும் எத்தனை காலத்துக்கு பானுவின் ஆதரவிலேயே வாழமுடியும். பானுவுக்கு ஒரு தம்பி தன் குடும்பத்துடன் அபுதாபியில் இருந்தான், அவன் இந்தியா திரும்பினால், நிச்சயமாக மான்சி தன் குழந்தைகளுடன் பானு வீட்டில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்று நினைத்தாள்

இவள் வெளியேற பானுவும் அவள் அம்மாவும் சம்மதிக்க மாட்டார்கள் என்றாலும், நியாயம் அதுதானே என்று மான்சி நினைத்தாள்.. அதனாலேயே தன் படிப்புதான் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வித்து என்று அவள் தீர்மானமாக நம்பினாள்,

தன் முழுகவனமும் படிப்பில் செலுத்திய மான்சி, அதில் பெரும் வெற்றி கண்டாள்.. இரண்டுவருட படிப்பு முடிந்து அவள் கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, மான்சி முதல் வகுப்பில் தேறிய பட்டயத்தோடு வந்தாள்


அவளின் அறிவு நுனுக்கமும் படிப்பின் உயர்நிலையும் மான்சிக்கு நிறைய மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வலுவில் தேடி வந்தது.. ஆனால் பானு அவள் பெங்களூரில் வேலை செய்வதற்கு சம்மதிக்கவில்லை,

மருத்துவமனை நிர்வாகத்தில் இன்னும் இருக்கும் மேல் படிப்புகளை மான்சி படிக்கவேண்டும் என்று பானு விரும்பினாள், அதன்படி முயற்சி செய்ததில் மான்சியின் வாங்கியிருந்த உயர்ந்த மார்குகள்... சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பிரபல நவீன மருத்துவமனையில் மான்சிக்கு டிரைனிங்கோடு கூடிய வேலையை பெற்று தந்தது

ஆனால் மான்சிக்கு தன் பிள்ளைகளை விட்டு பிரிந்து செல்ல மனமில்லை, பானுவோ மான்சியை சிங்கப்பூர் போகுமாறு ரொம்பவும் வற்புறுத்தினாள், ப்ரணவ் ப்ரணேஷ் எதிர்காலத்தை மனதில் வைத்து முடிவுசெய்யுமாறு மான்சியிடம் கேட்டுக்கொண்டாள்

மான்சி யோசித்து முடிவெடுக்க ஒருவாரம் எடுத்து கொண்டாள், பானுவும் அவள் அம்மாவும் குழந்தைகளை நாங்கள் கவணமாக பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்த பிறகே மான்சி சிங்கப்பூர் புறப்பட தயாரானாள்

அவள் புறப்படும் நாளில் மான்சியின் பெற்ற வயிறு கலங்கியது, ஆனாலும் தன் கண்ணீரை வெளியே காட்டாமல், பிள்ளைகளை பார்த்து புன்னகையுடன் விடைபெற்றாள் மான்சி

அழகிய சிங்கப்பூர் சென்று இறங்கிய மான்சி தனது வேலையில் கவனத்துடன் இருந்தாலும் பிள்ளைகளின் ஞாபகம் அவளை வாட்டியது, ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு பிள்ளைகளுக்காக உழைத்தாள்,,

அவள் வேலை செய்த மருத்துவமனையில் நிறைய தமிழர்கள் வேலைசெய்ததால் மான்சிக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, அவர்களின் அனுசரணை மான்சியை இந்தியாவில் இருப்பது போலவே உணரவைத்தது

இப்போதெல்லாம் தனிமை அவளுக்கு அடிக்கடி சத்யனை ஞாபகப்படுத்தியது, அவன் இப்போது எப்படி இருப்பான் என்று எண்ண வைத்தது. தான் சத்யனை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டதாக உணர்ந்தாள், இனி சத்யனை தன் வாழ்நாளில் எப்போதுமே பார்க்கமுடியாது என்று மனதுக்குள் நினைத்தாள்

இத்தனை ஆண்டுகள் பிரிவில் சத்யன் நிச்சயமாக வேறு திருமணம் செய்திருக்கலாம், அல்லது அந்த சிடியில் அவனுடன் படுக்கையில் இருந்தவளையே கூட திருமணம் செய்திருக்கலாம். இல்லை திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், யாருக்கு தெரியும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள்

சிலநேரங்களில் ஏன் சிங்கப்பூருக்கு வந்தோம் என்று வேதனை படும் அளவிற்கு அவளுக்கு தனிமையில் சத்யனின் ஞாபகம் தொல்லை செய்தது, பிள்ளைகளுடன் இருந்தபோது வராத சத்யனின் ஞாபகம் இப்போது அவளுடைய தனிமையில் உட்புகுந்து ஆட்சி செய்தது

அந்த தனிமையை தொலைக்க மான்சி தன் வேலையில் கவணம் செலுத்தி உழைக்க ஆரம்பித்தாள், தன் உழைப்பினால் நல்ல பெயர் வாங்கிய மான்சி, மருத்துவமனை நிர்வாகம் சம்மந்தமான ஒரு புத்தகத்தையும் தயாரித்தாள்,

அவளின் தயாரிப்பு மருத்துவ சந்தையில் நல்ல அவளுக்கு நல்ல மதிப்பை பெற்று தந்தது. ஏராளமான பணம் ராயல்டியாக கிடைத்தது. அந்த பணத்தை தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கு பயன்படுத்த திட்டமிட்டாள்

அதன்பிறகு அவளுடைய வளர்ச்சி அவளே எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப வேகமாக முன்னேறியது, அவளுடைய டிரைனிங்கும் காண்டிராக்ட்டும் முடிந்துவிட்டாலும், அவளை வெளியே அனுப்ப மனமில்லாத நிர்வாகம் அங்கேயே உயர்ந்த பதவி கொடுத்து தக்கவைத்துக்கொண்டது

மான்சிக்கும் இந்தியா செல்ல மனமில்லை, பிள்ளைகளை இங்கேயே வரவழைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாள், பானுவையும் அவள் அம்மாவையும் கூட இங்கேயே வரவழைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தாள்




இப்போது பிள்ளைகளுக்கு வயது ஆறு ஆகிவிட்டது, இருவரும் முதலாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க, தினமும் அவர்களின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் குறும்புகளும் மான்சி செல் பேசி மூலமாக தெரிந்துகொண்டாள்

அவர்கள் பேசி முடித்ததும், தன் பிள்ளைகளின் தெளிவான அழகான பேச்சில் பூரித்து கண்கலங்குவாள், அவர்களை எப்போது பார்ப்போம் என்று அவள் தாயுள்ளம் ஏங்கி தவிக்கும், சீக்கிரமே என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்வாள்

அவள் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகம் அவளுக்கு இருக்க அழகான வீடும் ஒரு காரும் கொடுத்தது , மான்சி தனக்கு சமையல் மற்ற அனைத்து வேலைகளுக்கும் உதவிக்கு ஒரு சர்தாஜி கணவன் மனைவியை வீட்டோடு வைத்துக்கொண்டாள்... அவர்களும் மான்சிக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காமல் நன்றாக பார்த்துக்கொண்டனர்.

பிள்ளைகளின் பள்ளி விடுமுறை வர மான்சி அவர்களை பானுவுடன் சிங்கப்பூருக்கு வரச்சொன்னாள், பானுவும் அதற்க்கான எல்லா ஏற்பாடுகளும் செய்ய ஆரம்பித்தாள்.. ப்ரணவ்க்கும் ப்ரணேஷ்க்கும் தன் அம்மாவை பார்க்கப்போகும் உற்சாகத்தில் குதிக்க ஆரம்பித்தார்கள்

பானுவுக்கு அவர்களை அடக்கி வைப்பது பெரும்பாடாக இருந்தது, சலசலவென்று பேசிக்கொண்டே அவரகள் புத்திசாலித்தமான கேட்க்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பானுவால் ஒன்றுக்கு கூட பதில் சொல்லத் தெரியாது விழிப்பாள் ,
ச்சே பானும்மாவுக்கு ஒன்னுமே தெரியலடா என்று ப்ரணேஷ் சலித்துக்கொண்டால்.. அவனுக்கு ஆமாம் சாமி போடுவான் ப்ரணவ், அவனுக்கு அது மட்டும்தான் தெரியும்

ஆனால் தன் அப்பா மிலிட்டரியில் இருந்து எதிரியுடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை எண்ணி மனம் கலங்குவாள் பானு.... இதற்க்கு என்றுதான் விடிவுகாலம் என கடவுளிடம் கேள்வி கேட்ப்பாள்

இவ்வளவு புத்திசாலியான பிள்ளைகளை இன்னும் எத்தனை நாளைக்குத்தான், அப்பா மிலிட்டரியில் இருப்பதாக ஏமாற்றுவது என்ற கேள்வி மனதில் எழுந்து பானுவை கலங்கவைக்கும்... இந்த முறை மான்சியிடம் இதுபற்றி தீர்மானமாக பாசி ஒரு முடிவெடுக்க வேண்டும் எனறு நினைத்த பானு பிள்ளைகளைவிட
ஆர்வத்துடன் சிங்கப்பூர் புறப்பட தயாரானாள்


" குழந்தையின் இதழ் நிரப்பும்...

" ஒவ்வொரு புன்னகையும்...

" என்றோ எப்பொழுதோ ஒரு...

" பூவில் நிரப்பட்டிருக்கிறது!

" இன்று பேசும் காதல் மொழி...

" என்றோ எப்பொழுதோ ஒரு...

" அந்தப்புரத்தில் பேசப்பட்டிருக்கிறது!

சென்னையில் தனது வீட்டில் இருந்து ஆபிஸ்க்கு கிளம்பிய சத்யன் தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு, காலை உணவுக்காக டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்,

அவனுக்கு தட்டு வைத்து இட்லியை பறிமாறிய பிரேமா “ சத்யா அப்பா உன்கிட்ட பேசனும்னு சொன்னாருப்பா” என்று தட்டில் சட்னியை ஊற்றியவாறு சொல்ல

இட்லியை விண்டு சட்னியில் தொட்டு ஒரு வாய் உண்ட சத்யன் “ என்னவாம்மா நேத்து நைட் வரைக்கும் ஆபிஸ்ல தானே இருந்தோம் எதுவும் சொல்லலையே” என்று தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே,. தயானந்தன் வந்து அவனுக்கு எதிர் சேரில் அமர்ந்தார்

“ என்னப்பா விஷயம் ஏதோ பேசனும்னு சொன்னீங்கலாம்” என்று சத்யன் கேட்க

தயானந்தன் நிமிர்ந்து தன் மகனை பார்த்தார், முப்பத்திநாலு வயதின் முதிர்ச்சி அவன் முகத்தில் தெரியவில்லை என்றாலும்.. அவன் கண்களை சுற்றி இருக்கும் லேசான கரு வளையமும், கண்ணோர சுருக்கமும், மட்டும் தான் அவன் வயதையும் மனதின் ஆழத்தில் இருக்கும் கவலைகளையும் பறைசாற்றியது

“ என்ன விஷயம் சொல்லுங்கப்பா” என்று சத்யன் மறுபடியும் கேட்க

சிறிதுநேரம் தயங்கிய தயானந்தன் பிறகு ஒரு பெரிய மூச்சுடன் “ ஒன்னுமில்ல சத்யா மான்சி உன்னைவிட்டு பிரிஞ்சு போய் இன்னைக்கோட ஏழு வருஷம் ஆகுது, நீயும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்ப, உன்னை பார்த்து ஒவ்வொரு நாளும் நானும் உன் அம்மாவும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கோம், நீ இனிமே ஏதாவது முடிவு பண்ணனும் சத்யா எங்களுக்காகப்பா” என்று தயானந்தன் வருத்தமாக கூறினார்

“ அதுக்கு என்னப்பா செய்றது என் தலையெழுத்து அப்படி, இனிமே அதை மாத்தவா முடியும், என் வாழ்க்கை அவ்வளவுதான்” என்று கூறிய சத்யன் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டிலேயே கைகழுவினான்

“ என்னப்பா சத்யா இப்படி சொல்ற, இத்தனை கோடி சொத்தையும் ஆள்றதுக்கு ஒரு வாரிசு வேண்டாமா சத்யா” என்று பிரேமா முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியபடி கேட்க

சத்யன் சாவதானமாக ஈரக்கையை நாப்கினால் துடைத்துக் கொண்டே “ அதுக்கு என்னம்மா பண்றது,, அப்பா முன்னல்லாம் சொத்தை என்னோட ரெண்டு மகளுங்களுக்கு எழுதி வைக்கப்போறேன்னு சொல்வார், அதை உண்மையாவே செய்யச்சொல்லுங்க , அவ்வளவுதான், எனக்க எதுவுமே வேண்டாம், நான் இப்படியே இருந்துட்டு போறேன்” என்று சத்யன் சொல்ல

பிரேமாவின் கண்களில் அதுவரைக்கும் முட்டிக்கொண்டு இருந்த கண்ணீர் பொலபொலவென கொட்ட “ அப்படி மட்டும் சொல்லாதடா, நீ எங்களுக்கு ஒரே மகன்டா, உன்க்கு இப்படியொரு நிலைமைன்னா நாங்க அதை பார்த்துகிட்டு எப்படி இருக்க முடியும்” என ஒரு தாயாக கண்ணீருடன் பிரேமா கேட்க

“ நீ கொஞ்சம் அழாம சும்மா இரு பிரேமா” என்று தன் மனைவியை அதட்டிய தயானந்தன் சத்யனிடம் திரும்பி

“ சத்யா மான்சி போய் ஏழு வருஷமாச்சு, நான் நேத்து நம்ம வக்கீல் கிட்ட கன்சல்ட் பண்ணேன், கோர்ட்ல அப்லை பண்ணி மீச்சுவல் டைவர்ஸ் வாங்கலாம்னு சொல்றார், அதாவது மனைவி காணமல் போய் ஏழு வருஷம் ஆனதால் ஈசியா டைவர்ஸ் கிடச்சுடும்ன்னு சொன்னார், கோர்ட்ல அப்லை பண்ணி டைவர்ஸ் வாங்கிகிட்டு, வேற ஏதாவது பொண்ணை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் ”,என்று தயானந்தன் பழயை மிரட்டல் தொனியில் கூற

சத்யன் நிதானமாக எழுந்து டேபிளில் கையூன்றி நின்று தன் அப்பாவை நேராக பார்த்து “என்ன அப்பா முன்ன மாதிரி மிரட்டி பார்க்கிறீங்களா, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மான்சி என்னைவிட்டு போனவுடனே எனக்கு உடனே தற்கொலை செய்துகிட்டு செத்துப்போய்டனும்னு அடிக்கடி தோனுச்சு, ஆனா உங்க ரெண்டு பேரையும் மனசுல நெனைச்சுதான் நான் அந்த முடிவை கைவிட்டேன், ஆனா அதை அப்பவே செய்திருக்கலாமோன்னு இப்போ தோனுது, என்னை பொருத்தவரையில் என் உயிர் மான்சிதான், அவ போனப்பிறகு நான் வெறும் கூடுதான், இந்த வெறும் கூடுக்கு மறுபடியும் உயிர் கொடுக்க முயற்சிக்காதீங்க, அது உங்களால் முடியாது” என சத்யன் தீர்மானமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்

அவன் வார்த்தைகளின் தாக்கத்தால் வாயடைத்துப் போய் பெற்றவர்கள் கண்கலங்கி நிற்க்க, போன சத்யன் மறுபடியும் அவர்களை நோக்கி வந்தான்

“ அம்மா சொல்ல மறந்துட்டேன், சிங்கப்பூரில் இருக்க மாமாவை பார்க்கனும்னு சொன்னியே அதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், அவரோட ஹார்ட் ஆப்ரேஷன் அண்ணிக்கு நாம சிங்கப்பூர்ல இருப்போம், என்ன ஒன்னு சென்னையில் இருந்து சிங்கப்பூர்க்கு ஏர் டிக்கெட் கிடைக்கலை, பெங்களூரில் இருந்துதான் கிடைச்சது, நாளை மறுநாள் நைட் பதினொன்னுக்கு பிளைட், நாம இங்கருந்து காலையிலயே கார்ல் கிளம்பிட்டா சரியாயிருக்கும், நீ நாளைக்கே எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுரும்மா” என்றவன் தன் அப்பாவிடம் வந்து

“ அப்பா கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காம ரிலாக்ஸா இருங்க, எல்லாம் விதிப்படிதான் நடக்கும், நானும் அம்மாவும் வர்றவரைக்கும் சரவணனை வந்து அடிக்கடி உங்களை பார்த்துக்க சொல்லிருக்கேன், ஆபிஸ்லயும் மனேஜர்கிட்ட சொல்லி எல்லாம் சரியா ஏற்பாடு செய்திருக்கேன், அதனால எந்த டென்ஷன்னும் இல்லாம இருங்க, அப்போ நான் ஆபிஸ் கிளம்பறேன்ப்பா” என்று கூறிவிட்டு தனது வேக நடையுடன் வாசலை நோக்கி போனான் சத்யன்,...
வானம் மெல்லியச் சாரலாய் மழை தூவி, பகலெல்லாம் தகித்த பூமியை குளிர்விக்க, எலும்பை ஊடுருவாத மெல்லிய இதமான குளிர் எங்கும் பரவி விரவியிருந்தது,

பெங்களூர் இன்டர்நேஷனல் விமானநிலையம் சத்யனும் அவன் அம்மா பிரேமாவும் லவுஞ்சில் காத்திருக்க, சிங்கப்பூர் செல்லும் விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பால்,பயனிகள் அனைவரும் எரிச்சலுடன் அமர்ந்திருந்தனர்

சத்யன் தன் கையில் இருந்த ஆங்கில நாளிதழை ஆறாவது முறையாக புரட்டி மூலைமுடுக்கெல்லாம் தேடி கண்டுபிடித்து செய்திகளை படித்துக்கொண்டிருந்தான்.

பிரேமா சுற்றிலும் நடமாடிக்கொண்டிருந்த மனிதர்களை தன் பார்வையால் எடைபோட்டு கொண்டிருந்தாள், லேசான குளிருக்கு இதமாக ஒரு கப் காபி குடித்தால் நன்றாகயிருக்கும் என்று நினைத்தாள்

“ சத்யா ஒரு கப் காபி வாங்கிட்டு வரியா” என மகனை கேட்டாள்

சத்யன் உடனே எழுந்து கையிலிருந்த பேப்பரை மடித்து இருக்கையில் போட்டுவிட்டு “இதோ வாங்கிட்டு வர்றேன்ம்மா” என்று கேன்டீனை நோக்கிப்போனான்

விமானம் ஒரு மணிநேரம் தாமதம் என்றதும் அதிகமாக எரிச்சலைடைந்தது பானுதான், அவளால் பரணவ் ப்ரணேஷ் இருவரையும் சமாளிக்க முடியவில்லை, இதுவரை இருவரும் அந்த லவுஞ்சையே ஐந்து முறை சுற்றி வந்துவிட்டார்கள்,

அவர்களை வழியனுப்ப வந்திருந்த அம்மாவையும், கல்லூரியில் உடன் வேலை செய்யும் இரண்டு நன்பர்களையும், விமானம் தாமதமா புறப்படும் என்றதும். பானு வீட்டுக்கு அனுப்பிவிட்டாள்,

சிறிதுநேரம் அந்த இரட்டையர்களின் பின்னாலேயே ஓடியவள், ஒரு கட்டத்தில் களைத்துப்போய், எங்காவது சுற்றுங்கள் என்று இருக்கையில் அமர்ந்துவிட்டாள், ஆனால் பாதுகாப்பான இடம் என்பதால் பயமில்லாமல் இருந்தாள்

அந்த கொஞ்சநேரத்தில் அங்கிருந்தவர்களில் பாதி பேருக்கு ப்ரணேஷ் பழக்கமானவனாக மாறிவிட, அனைவரும் ஒரே மாதிரியாக இருந்த அந்த இரட்டையர்களை பார்த்து வியந்தனர்

ப்ரணேஷ் பின்னாலேயே திரிந்த ப்ரணவ் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென ப்ரணேஷின் சட்டையை பிடித்து இழுத்தான்

மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு சிறு குழந்தையின் பிஞ்சு பாதங்களை வியப்புடன் தொட்டு தொட்டு ரசித்துக்கொண்டிருந்த, ப்ரணேஷ் சலிப்பாக திரும்பி பார்த்து “ என்னடா ப்ரணவ்” என கேட்க

ப்ரணவ் அவன் காதருகில் “ டேய் பிரஷு அதோ ஒருத்தர் வர்ராரே அவரை பாறேன்” என்று கிசுகிசுப்பாய் கூற

ப்ரணேஷ் சட்டென திரும்பி அவன் காட்டிய திசையில் பார்த்தான், அங்கே சத்யன் கையில் காபி கப்புடன் வந்துகொண்டிருந்தான்

“ டேய் ப்ரவ் அது யாருடா போட்டோவில பார்த்த அப்பா மாதிரியே இருக்கார், ஆனா அவரு ஏன்டா இங்க இருக்கார்” என்று ப்ரணேஷ் ஆச்சரியமாக கேட்க

“ எனக்கு அது தான்டா தெரியலை, வாடா கிட்டக்க போய் நம்ம அப்பா தானான்னு பார்க்கலாம்,”என ப்ரணவ் கூப்பிட்டதும்

ப்ரணேஷ் திரும்பி பானுவை பார்த்தான், அவள் கையில் இருந்த கன்னட வாரஇதழில் கவணமாக இருக்க, “ சரி வாடா தள்ளி நின்னு பார்க்கலாம், அப்புறமா நம்ம அப்பாதான்னா கிட்டப்போய் பேசலாம்” என்று பெரியமனிதன் போல் கூறினான்

இருவரும் அங்கிருந்து நகர்ந்து சத்யன் அமர்ந்திருந்த வரிசையில் காலியாக இருந்த பக்கத்து இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர், இருவரும் சத்யனுக்கு கேட்காதபடி காதில் குசுகுசுவென்று பேசியவாறு, சத்யனை எட்டி எட்டி பார்த்தனர்



“ டேய் பிரவ் இவரு அப்பாவே தான்டா, எனக்கு நல்லா தெரியும், வாடா போய் பேசலாம்” என்று ப்ரணேஷ் ப்ரணவை கூப்பிட

ம்ஹூம் நான் வரமாட்டேன்., அது வேற யாராவதா இருந்தா, அவரு வேற பேப்பரை வச்சி மூஞ்சியை மறைச்சுகிட்டு இருக்கார், இன்னும் கொஞ்சநேரம் இரு பார்க்கலாம்” என்று பரணவ் புத்திசாலித்தனமாக பேசினான்

சத்யன் மறுபடியும் நியூஸ் பேப்பரில் தனது கவனத்தை செலுத்தியிருக்க, அப்போது அவன் செல் அழைத்தது, பேப்பரை மடித்துவிட்டு செல்லை எடுத்து நம்பரை பார்த்துவிட்டு, ஆன் செய்து காதில் வைத்தான்

ஹலோ சொல்லுங்க மாமா நான் சத்யன் தான் பேசறேன்” என்றான்

....................................

“ ஆமாம் மாமா ப்ளைட் ஒரு மணிநேரம் லேட்டாதான் கிளம்புதாம்,”

.........................................................

“ அம்மா இதோ பக்கத்தில் தான் இருக்காங்க.. இதோ குடுக்கிறேன்” என்றவன் செல்லை தன் அம்மாவிடம் கொத்து “ மாமா பேசறார்ம்மா பேசுங்க “ என்று கூறினான்

செல்லை வாங்கிய பிரேமா தன் அண்ணனிடம் குடும்பநலம் விசாரித்து பேசத்தொடங்கினாள்... பிறகு பேசி முடித்து செல்லை சத்யனிடம் கொடுத்துவிட்டு “சத்யா பாத்ரூம் போய்ட்டு வர்றேன்” என்றுவிட்டு எழுந்து போனாள்

சத்யன் மறுபடியும் அந்த பேப்பரை படிக்கலாமா வேண்டாமா என யோசித்தவாறு அதை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்

ப்ரணேஷ் ப்ரணவ் கையில் தட்டி “ டேய் நான்தான் சொன்னேன்ல அப்பாதான்னு இப்பப்பாரு அவர் செல்போன்ல பேரு சத்யன்னு சொன்னாரு, நீ வந்தா வா இல்லேன்னா போ, நான் போய் பேசத்தான் போறேன்” என்று எழுந்த ப்ரணேஷ் சத்யனின் இருக்கையின் அருகில் போய் நின்று சத்யனை உற்று பார்க்க

சத்யன் தன்னை ஒரு அழகு சிறுவன் உற்றுப்பார்த்ததும் கையிலிருந்த பேப்பரை மடியில் வைத்துவிட்டு ப்ரணஷை பார்த்து “ ஹாய் குட்டிப்பையா என்ன அப்படி பார்க்கிற” என்று சிரிப்புடன் கேட்க

சத்யனையே பார்த்த ப்ரணேஷ்க்கு அவன் தன் அப்பாதான் என்று புரிந்துபோக “ நீங்க எங்க அப்பாதானே” என்று நேரடியாக கேட்க

சத்யன் சட்டென விதிர்த்துப் போய், முகத்தில் லேசான கலவரத்துடன் “ என்னப்பா சொல்றே யாரு உன் அப்பா, ஆள் தெரியலையா,நீ யாருப்பா, யார் கூட வந்தே” என்றான்

“ எல்லாம் எனக்கு ஆள் தெரியும், நீங்கதான் எங்க அப்பா” என்ற ப்ரணேஷ் சற்று தள்ளி அமர்ந்திருந்த ப்ரணவை பார்த்து “ டேய் பிரவு இங்க வாடா” என்று கூப்பிட,... ப்ரணவ் உடனே எழுந்து அவர்களிடம் வந்தான்

“ டேய் பிரவ் இவரு நம்ம அப்பா தானடா, நான் கேட்டா யாருப்பா நீன்னு கேட்கிறார்” என கூற

அதுவரை தள்ளி நின்றிருந்த ப்ரணவ் புத்திசாலித்தனமாக “ நீங்க சத்யன் தானே,” என்று நேரடியாக கேட்டான்

சத்யனுக்கு குழப்பமாக இருந்தது, என்னவோ குளோனிங் செய்தது போல் இரண்டு சிறுவர்கள் தன்னை அப்பா என்றதும், பிறகு இருவரும் நீங்கதானே சத்யன் என்று கேட்டுதும் அவனுக்கு குழப்பமாக இருந்தாலும், அந்த இருவரின் முகத்தையும் எங்கே பார்த்தது போல் இருந்தது

“ ஆமாம் என் பேருதான் சத்யன், நீங்க ரெண்டுபேரும் யாரு, உங்க பேர் என்ன” என்ற சத்யன் அய்யோ இவர்கள் என்ன என்று அடித்துக்கொள்ளும் மனதை அடக்கமுடியாமல் தவித்தபடி சிறுவனுக்கு பதில் கூற

“ அப்பா எங்கள தெரியலை, எங்க போட்டோவெல்லாம் உங்களுக்கு அனுப்பி வச்சேன்னு பானும்மா சொன்னாங்களே, அப்போ எங்க போட்டா உங்களுக்கு வரவேயில்லையா, நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியவே தெரியாதா, ஆமா நீங்க எப்போ மிலிட்டரியில் இருந்து வந்தீங்க, நீங்க வரும்போது எங்களுக்கு நிறைய கன் எடுத்துட்டு, வருவீங்கன்னு பானும்மா சொன்னாங்களே, எடுத்துட்டு வரலையா” என்று ப்ரணேஷ் வழக்கம் போல வழவழவென நிறுத்தாமல் பேசிகொண்டே போக

அவன் கையை பிடித்து பேசாதே என்பதுபோல தடுத்த ப்ரணவ் “ அப்பா நான் ப்ரணவ் ஆனந்த் , இவன் ப்ரணேஷ் ஆனந்த் , நாங்க ட்வின்ஸ்,நீங்கதான் எங்க அப்பா சத்யன், நாங்க ரெண்டு பேரும் மான்சியம்மா வோட பசங்க, இப்போ தெரியுதா ” என்று ப்ரணவ் பட்டென கூறியதும்



No comments:

Post a Comment