Saturday, April 4, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 12

“ எனக்கு உன் படிப்பு என்னான்னு தெரியும் மான்சி... ஆனா இந்த படிப்பை வச்சு இந்த பெங்களுரில் ஏதாவது வீட்டு வேலைக்குத்தான் போகமுடியும்... பெரிய ஆபிஸில் வேலை கிடைக்காது” என்று பானு சொல்ல

மான்சி உடனே “ பரவாயில்லை மேடம் நான் வீட்டு வேலை கூட நல்லா செய்வேன்.. இந்த ஒரு மாசமா தானே பணக்காரன் பொண்டாட்டியா இருந்தேன்... அதுக்கு முன்னாடி ஒரு ஏழை குடும்பத்து பொண்ணுதானே.... அதனால உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது வீட்டுல எனக்கு வேலைக்கு சொல்லுங்க மேடம்” என்று மான்சி தன்னம்பிக்கையுடன் கூற

பானுவுக்கு கண்கலங்கியது .. எழுந்து மான்சியருகே வந்து அவள் முகத்தை தன் அடிவயிற்றோடு அணைத்து... “ உன்னை என்னிக்கு காலேஜ்ல ஒரு வளர்ந்த குழந்தை மாதிரி பார்த்தேனோ அன்னிலேருந்து உன்னை என் மகளாவும் நெனைக்கிறேன் மான்சி.. நீ கஷ்டப்படுவதை நான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேன்னு நெனைச்சியா... நீ இதோ வீட்டில் என்கூடவே இரு எவ்வளவு நாளைக்கு இருக்கனும்னு தோனுதோ அவ்வளவு நாள் இரு... இது உன் வீடும்மா மான்சி” என்று கண்ணீருடன் பானு கூறியதும்



மான்சியும் அவள் வயிற்றில் தன் முகத்தை வைத்துக்கொண்டு கதறிவிட்டாள்... பானுவின் அம்மா வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து “ என்ன பானு நீயும் அவளை அழவைக்கிற... பாவம் அவளே நொந்து போய் வந்திருக்கா ... மொதல்ல அவளை சாப்பிட சொல்லு மத்ததை அப்புறமா பேசிக்கலாம்” என்று இருவரையும் சாப்பிட அழைத்துபோனாள்

மான்சி பசி அகோரமாக இருந்தாலும் .. உணவு தொண்டையை விட்டு உள்ளே இறங்க மறுத்தது...அவள் மனம் முதல் நாள் இரவு சத்யனுடன் கொஞ்சிக்கொண்டே இட்லி சாப்பிட்டது ஞாபகம் வந்தது...

தன் தட்டில் இருந்த இட்லியை எடுத்து அவன் அம்மா முன்பே இவள் வாயருகே கொண்டு வநது ‘ம் வாங்கு மான்சி’ என்று அவன் அதட்ட .. பிரேமா சிரித்தபடி நாசுக்காக சமையலறைக்கு போனதும் ..

சத்யன் அவளை அணைத்து அவன் கையிலிருந்த இட்லியை அவளுக்கு ஊட்டிவிட்டு பிறகு சுற்றுமுற்றும் பார்த்து உடனே அவள் வாயை கவ்வி அவள் வாயிலிருந்த இட்லியை தன் வாய்க்கு மாற்றியது... இப்போது மான்சிக்கு ஞாபகம் வந்தது..

அதெல்லாம் பொய்யா .. எல்லாமே நடிப்பா... இவ்வளவு இயல்பாக கூட ஒரு மனிதனால் மனைவியிடம் நடிக்க முடியுமா... இதெல்லாம் எதற்காக செய்தான் .. இந்த பாழாய்ப்போன உடலுக்காகவா... இது கிடைக்கத்தான் அவ்வளவு அருமையாக வேஷம் போட்டானா, அவன் வேஷத்தை நம்பி ஏமாந்துவிட்டேனே...

இன்னேரம் சத்யன் சாப்பிட்டிருப்பானா... இல்லை என்னை காணவில்லை என்ற துக்கத்தில் சாப்பிடாமல் இருக்கிறானா... அவன் ஏன் துக்கப்பட போகிறான் இன்னேரம் அந்த நிர்வாண உடல்க்காரியிடம் உடல் சுகம்காண போயிருப்பான்

மான்சி இதையெல்லாம் நினைத்து தன்னையே வெறுத்தபடி... அந்த இரவு உணவை கஷ்டப்பட்டு விழுங்கினாள்..... பானுவுக்கு மான்சி சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தாலும் அவளை வற்புறுத்தவில்லை

சாப்பிட்டுவிட்டு மூவரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்... பானுவின் அம்மா மட்டும் இரவுக்கான தன்னுடைய மாத்திரைகளை போட்டுக்கொண்டு போய் படுத்துவிட்டாள்

மான்சி அமைதியாக அமர்ந்திருக்க.. பானு அவளருகில் அமர்ந்து “ மான்சி உன் மனசு எனக்கு புரியுதும்மா... நான் என்ன நெனைக்கிறேன்னா. நீ வேலைக்கெல்லாம் போகவேண்டாம் மேற்கொண்டு படி,.. அப்புறமா உனக்கு என்ன தோனுதோ அதன்படி செய் மான்சி,.. அதுவரைக்கும் நீ இங்கே இருக்கறது யாருக்குமே தெரியாது அதுக்கு நான் உத்திரவாதம்” என்று சொல்ல

“ நீங்கசொல்றது சரிங்க மேடம், ஆனா படிக்கறதுக்கு பணம் வேனுமே அதுக்கு என்ன பண்றது” என்று மான்சி பானுவிடம் கேட்டாள்

“ அப்போ நீ எதுக்கு இங்கவந்தே வேற எங்கயாவது போயிருக்கலாமே” என பானு கோபமாக கூற

“ என்னங்க மேடம் நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா” என மான்சி வருந்தினாள்

“ பின்ன என்ன மான்சி உனக்கு சென்னையில் அவ்வளவு பேர் தெரிஞ்சவங்க இருந்தும் என்னைத்தேடி வந்துருக்க, நானும் உன்மேல் உண்மையான அன்பு வச்சிருக்கேன்..ஒன்னு செய்யலாம் மான்சி நீ நல்லா படி...அதுக்கு எவ்வளவு செலவு ஆகுதோ அதை நான் பார்த்துக்கிறேன் ,.. படிச்சு முடிச்சதுக்கப்புறம் நல்லா வேலையில சேர்ந்து என் கடனை திருப்பிக்கொடுத்துடு என்ன நான் செல்றது சரியா” என்று புன்னகையோடு குழந்தைக்கு சொல்வதுபோல் பானு சொல்ல

மான்சியும் குழந்தைபோல் வேகமாக தலையாட்டினாள்... பானுவுக்கு அவளை பார்த்ததும் கண்கலங்கியது.. இப்படியொரு குழந்தை மனம் உள்ளவளுக்கு எப்படி துரோகம் பண்ணமுடிந்தது இவ புருஷனாலா, நிச்சயமா அவன் ஒரு மனுஷ மிருகமாத்தான் இருக்கனும்,.. அவனெல்லாம் நல்லாவே இருக்கமாட்டான்,. என்று மனதுக்குள் சத்யன சபித்தாள் பானு


அதன் பிறகு இருவரும் பானுவின் அறைக்கு போய்,.. பானு கட்டிலில் படுத்துக்கொள்ள,. மான்சி கீழே தரையில் ஒரு பெட்சீட்டை விரித்து படுத்துக்கொண்டாள் ,.. சிறிதுநேரம் இருவரும் பழைய கல்லூரி கதைகளை பேசிக்கொண்டு இருந்துவிட்டு உறங்கிவிட்டனர்

மான்சிக்கு பஸ்ஸில் வந்த உடல் அலுப்பு காரணமாக உடனே உறக்கம் வந்தாலும்,.. சரியாக மூன்றுமணிநேரம் கழித்து விழிப்பு வந்துவிட்டது,.. தூக்க கண்ணில் தன் கைகளால் பக்கத்தில் தடவி சத்யனை தேடினாள்,.. அவனை காணவில்லை,..

எழுந்து பாத்ரூம் போயிருப்பானோ என்று நினைத்தாள்,.. உடம்பெல்லாம் முறுக்குவது போல் இருந்தது... பிறகு சிரமமாக கண்விழித்து பார்த்தாள்,...

இருக்கும் இடம் மெதுவாக புரிந்தது,.. இரவில் தன்னருகே கணவன் இல்லாத ஏக்கம் அவள் உள்ளத்தையும் உடலையும் வதைத்தது,..சத்யனின் இறுக்கமான அணைப்பு ஞாபகம் வந்தது,.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது

மெல்லிய விசும்பல் ஒலிகேட்டு கண்விழித்த பானு மான்சி எழுந்து அமர்ந்து அழுது கொண்டிருபபதை பார்த்து பதறி எழுந்து அவளருகே வந்து “ என்னாச்சு மான்சி என்று” என்று கேட்க

மான்சிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பரிதாபமாக விழித்தபடி ஒன்றுமில்லை என்று தலையசைக்க,.. பானுவுக்கு மான்சியின் மனநிலை புரிந்தது,..

பானு தரையில் அமர்ந்து மான்சி தன் மடியில் தலைவைத்து படுக்கவைத்து “ இதைத்தான் மான்சி நான் சொன்னது,.. இந்த வயசில் உன்னால தனியா இருக்கமுடியுமான்னு” என்று வருத்தத்துடன் கூறி மான்சியின் கூந்தலை கோதிவிட்டாள்

மான்சி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு பானுவை நிமிர்ந்து பார்த்து “ மேடம் எனக்கு ஆப்பிள் சாப்பிட ரொம்ப பிடிக்கும்தான்,.. ஆனா அதை குப்பையில் இருந்து பொருக்கி சாப்பிடமாட்டேன்,.. அதைவிட பட்டினிகிடந்து செத்துவிடுவேன்” என்று சொல்ல

அவளின் அந்த ஒருவார்த்தை பானுவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது “ என்னை மன்னிச்சுடு மான்சி தெரியாம சொல்லிட்டேன்,. இனிமேல அதைப்பத்தியே பேசமாட்டேன்,. வாழ்க்கையில் எந்த பிடிப்புமே இல்லாமல் வாழ்ந்த எனக்கு,.. ஒரு அழகான அறிவான மகள் கிடைச்சுருக்கா,. இனி உன்னோட முன்னேற்றம்தான் என் லட்சியம் மான்சி” என்று உணர்ச்சிகரமாக பானு பேச

அவளுடைய மெல்லிய வருடலில் மான்சியின் விழிகள் மறுபடியும் தூக்கத்தை தழுவியது

மறுநாள் காலை மான்சி கொஞ்சம் தெளிவடைந்திருந்தாள்,.. அன்று சனிக்கிழமை என்பதால் பானுவுடன் தோட்டவேலைகள் எல்லாம் பார்த்தாள்,.. நன்றாக பசியெடுத்து அதிகமா சாப்பிட்டாள்,..

பானுவின் அம்மாவுடன், சேர்ந்து சமையல் செய்கிறேன் என்று கிச்சனை ஒரு வழியாக்கினாள்,. மாலை அவளே காபி போட்டு பானுவுக்கும் அவள் அம்மாவுக்கும் கொடுத்து “ ம்ம் காபி நல்லா போடுறியே” என்று பாராட்டு வாங்கினாள்,..

டிவி சீரியலில் தொட்டதற்கெல்லாம் பொசுக்கென்று கண்ணீர் விட்ட கதாநாயகியை பார்த்து,.. தன் சோகத்தை மறந்து விழுந்து விழுந்து சிரித்தாள்,..

தான் கல்லூரியில் படிக்கும் போது லெக்சரர்களுக்கு வைத்த பட்ட பெயர்களை பானுவிடம் கூறி கைகொட்டி சிரித்தாள் ,.. ஆனால் சிரிப்புக்கு பின்னால் இருந்த சோகம் பானுவின் மனதை வாட்டியது

இதுவரை தாயும் மகளுமாக தனித்திருந்து யோகியைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் இந்த சிறு பெண்ணின் சிரிப்பும் பேச்சும் அவர்களுக்கு புத்துயிர் கொடுத்தது போல் இருந்தது


பகல்போய் இரவும் வந்தது,.. மான்யின் பேச்சும் சிரிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது,.. அவளையே கவனித்துக்கொண்டிருந்த பானு,. உணவு முடிந்து படுக்க போகும் முன பானு ஒரு டம்ளர் பாலும் ஒரு சிறு மாத்திரையில் பாதியை உடைத்து மான்சியிடம் கொடுத்து

“ இதை போட்டுக்கிட்டு படு, மான்சி நல்லா தூக்கம் வரும்,. ஆனா இது இன்னிக்கு மட்டும்தான் தருவேன்,.. நாளைக்கெல்லாம் நீ மனசை திடப்படுத்திகிட்டு நார்மலா தூங்கனும் சரியா” என்று அன்போடு கூற

மான்சி சரியென்று தலையசைத்து அந்த மாத்திரையை போட்டுக்கொண்டு.. புதிதாக போடப்பட்ட மற்றொரு கட்டிலில் போய் படுத்துக்கொண்டாள்,.. சிறிதுநேரத்தில் எந்த கவலையும் நினைவும் இல்லாமல் அமைதியாக உறங்கினாள்

பானு அவளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு,.. ‘இனிமேல் தான் நமக்கு இவளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புகள் அதிகம்’ என்று எண்ணினாள் ,.. பிறகு அவளும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு படுத்து தூங்கிப்போனாள்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பானுவும் அவள் அம்மா மான்சி மூவரும் கூடி,.. சில விஷயங்களை பேசி முடிவு செய்தனர்

பானு லைப்ரரியனாக வேலை செய்யும் மருத்துவம் மற்றும் நிர்வாகம் கல்லூரியில் மான்சியை மருத்துவமனை நிர்வாக படிப்பு,. அதாவது மருத்துவமனை அட்மினிஸ்ட்ரேட்டர் ஆபிஸர் படிப்புக்கு சேர்ப்பது எனறு முடிவு செய்தார்கள்

இப்போது அந்த படிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் மான்சியை அதை படிக்கவைக்க பானு முடிவு செய்தாள்,.. அதை உடனே செயல் படுத்தவும் செய்தாள்,..

கல்லூரிக்கு பானுவுடனே காரில் சென்ற மான்சி,. வரும்போது பானுவுடனே வந்தாள்,.. மான்சியை பற்றி கேட்ப்பவர்களிடம்,.. மான்சி தன் அக்கா மகள் என்றும் அவள் கணவன் மிலிட்டரியில் வேலைக்கு போயிருப்பதாக கல்லூரியில் கூறினாள் பானு,.. அதற்கேற்றாற் போல் மான்சியை தன்னை அம்மா என்று கூப்பிட வைத்தாள் பானு

கல்லூரியில் இருந்து மான்சி வீட்டுக்கு வந்ததும் பானுவின் அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாமல்,.. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்தாள்,..

எனென்றால் அப்போதுதானே உடல் களைத்துப் போய் இரவுநேரங்களில் சத்யனின் நினைவின்றி நன்றாக உறங்கலாம்,.. அவளுடைய இந்த யுக்தி சிலநேரங்களில் பலித்தது,.. சிலநேரங்களில் தோல்வியில் முடிந்தது,...

நாளாக நாளாக சத்யனின் நினைவுகளை தன் அடிமனதில் போட்டு புதைத்துவிட்டு,.. தன் படிப்பில் முழுகவனமும் செலுத்தினாள்,.. ஆனால் அதற்க்கும் பெரும் தடைவந்தது 

சத்யன் தன்நிலைக்கு திரும்ப வெகுநாள் ஆனது,..சரவணன் குடும்பஸ்தனாக இருந்தாலும் அவன் குடும்பத்தை மறந்து தனது நன்பனின் வீட்டில் அவனுக்காக தவமிருந்தான்,... நிறைய நாட்கள் சத்யனுடன் அங்கேயே படுத்துக்கொண்டான்

சரவணனுக்கு தன் நன்பனை பார்க்கவே பயமாக இருந்தது,. சத்யன் மான்சி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை,... சோகத்தில் துவண்டுபோன சத்யனை வெளிக்கொணர ரொம்பவே சிரமப்பட்டான்

மான்சியை பற்றிய விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே நின்றது,.. அவளின் அம்மா அப்பா சொந்தக்காரர்கள் பழைய தோழிகள் என அனைவரிடம் இதுவரை மூன்று நான்கு முறை விசாரித்துவிட்டான்,.. ஆனால் தகவல்தான் எதுவும் கிடைக்கவில்லை

தயானந்தனும் பிரேமாவும் தங்கள் மகனின் நிலையை எண்ணி வருந்தி இளைத்து போக,.. அவன் அக்காவும் தங்கையும் அடிக்கடி வந்து தங்கள் பங்குக்கு பேசி பேசியே துக்கத்தை கிளறிவிட்டு விட்டு போனார்கள்

சத்யன் யாரிடமும் எதுவும் பேசுவதுமில்லை,. எதுவும் கேட்பதுமில்லை,. அவனை பொருத்தவரை மான்சிதான் எல்லாமும்,.. அந்த எல்லாமும் அவனை விட்டு போனபிறகு வேறு எதுவுமே அவனுக்கு தேவையிருக்கவில்லை,..

அவன் மனமெல்லாம் மான்சியின் நினைவுகள் அராஜகமாக ஆக்கிரமித்திருக்க,.. அந்த ஆக்கிரமிப்பில் சத்யன் தன்னையே மறந்திருந்தான்,.. அவனுக்கு தற்போதைய தேவை என்று ஒன்றுமேயில்லை,.. வாழ்கையில் எல்லாவற்றையும் அடைந்து அனுபவித்து முடித்து இறுதிகட்டத்தில் இருப்பவன் போல இருந்தான் சத்யன்

அவனுக்கு நடப்பு நிலைமை புரிந்தது,.. தன் தலையெழுத்து இதுதான் என்று அவனால் இருக்கமுடியவில்லை,.. மான்சி வேண்டும் என்று ஏங்கிய மனதை அடக்கவும் வழிதெரியவில்லை,..



இரவுநேரங்களில் அவளுடைய உடைமைகளை எடுத்து தன்மீது போட்டுக்கொண்டு விடியவிடிய விழித்துக்கிடந்தான்,.. பகலில் உணவை மறந்து காலநேரம் தெரியாமல் உறங்கினான்,..

மான்சியை பிரிந்த துக்கம் அவனை பெரிதும் வாட்டியது,.. காமத்துக்கு மட்டும் அவன் தவிக்கவில்லை,.. அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் மனதில் பதித்து வைத்திருந்ததால் தவிப்பு இன்னும் அதிகமானது

அவனுடைய ஏக்கம் வார்த்தைகளில் வடிக்க முடியாதளவுக்கு இருந்தது,.. கட்டிலில் படுத்தாள் மான்சி அவனருகில் படுத்து மீசைமுடியை பிடித்து இழுத்து அவனை துடிக்கவைத்தாள்,.. தன் நாக்கு நுனியால் அவன் உதட்டை தீண்டி விளையாடினாள்,.. அவன் வெற்று மார்காம்பை தன் ஆள்காட்டிவிரலால் சுரண்டி சிலிர்க்க வைத்தாள்,..

காலையில் கண்விழித்தால் அவன் முதுகில் கைவைத்து பாத்ரூமுககு தள்ளிக்கொண்டு போனாள்,.. இவன் அவளையும் சேர்த்து உள்ளே இழுத்துக்கொண்டு போய் சில சில்லரை சிலுமிஷங்களுடன் இருவரும் சேர்ந்து குளித்தார்கள்

காலை உணவுக்கு டேபிளில் அமர்ந்தால், அவனை உரசிக்கொண்டு அருகில் அமர்ந்து அக்கரையாக உணவு பறிமாறினாள்,.. சாப்பிட்டு கைகழுவியதும் துடைக்க தன் முந்தானையை கொடுத்துவிட்டு வெட்கமாய் சிரித்தாள்

இவன் ஆபிஸ்க்கு கிளம்பி வெளியே வந்து நின்றதும் கதவருகே நின்று கையசைத்துவிட்டு,.. யாரும் அறியாமல் அவள் எதர் பார்க்காத தருனத்தில் இவன் கொடுக்கும் அவசர முத்தத்தை வாங்கிக்கொண்டு,. ரகசியமாக உதட்டை துடைத்துக்கொண்டு இவனை பார்த்து செல்லமாக முறைத்தாள்

ஆபிஸிலிருந்து இவன் அடிக்கடி செய்யும் போன் கால்களுக்கு,.. சலிக்காமல் இவனுடன் காதல் பேச்சு பேசி ஏங்கவைத்தாள்,... பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் போன் செய்து இன்னும் நீங்க சாப்பிட போகலையா என்று செல்லமாய் மிரட்டினாள்... ஏய் மணி பன்னிரண்டுதானே ஆகுது என்று இவன் கேலிசெய்தால்,.. எதிர் முனையில் அவள் அசடுவழிய, இல்ல இப்போவே சொன்னாத்தானே சரியான நேரத்துக்கு நீங்க சாப்பிடுவீங்க என்று மென் குரலில் கூறி இவனை தவிக்கவைத்தாள்

மாலை ஐந்தானதும் உங்களுக்கு நைட்டுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கம் சாக்கில் போன் செய்து இவன் எப்போது வருவான் என்று தெரிந்துகொண்டு,. அவன் வருகைக்காக வாசலில் காத்திருந்து,.. அவனை பார்த்ததும் பளிச்சென்று சிரித்து கை பொட்டியை வாங்கிகொண்டாள்

இவன் அறைக்கு போய் முகம் கழுவி உடைமாற்றுவதற்குள் காபியுடன் வந்து காத்திருந்தாள்,.. அவள் எடுத்து வந்த காபியை இருவரும் மாறிமாறி குடித்தபடி ஆகாத கதையை பேசி ஆக்கப்பூர்வமாக சிந்தித்தார்கள்

இரவு உணவின் போது அவனும் அவளும் மட்டும் கடைசியாக உண்பது போல் அமைத்துக்கொண்டு,. ஒருவரை ஒருவர் கொஞ்சிக்கொண்டே உணவை உண்ணாமல் காலம் கடத்திவிட்டு இறுதியில் அய்யோ நேரமாகிவிட்டதே என்று அரக்கப்பரக்க சாப்பிட்டனர்

எல்லாம் முடிந்து படுக்கையறைக்கு வந்ததும் யார் முதலில் ஆரம்பிப்பது என்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்ப்பார்கள்,.. சில சமயங்களில் மான்சி பொறுக்கமுடியாமல் ஓடிவந்து அவனை அணைத்துக்கொள்வாள,.. சிலசமயங்களில் சத்யன் அவளை தாவியணைத்து தன் தாபத்தை அணைப்பில் காட்டுவான்

அதன் பிறகு இருவரும் இரவு எவ்வளவு தூங்கினார் என்பதைவிட,.. எவ்வளவு நேரம் தூங்காமல் கிடந்தனர் என்றுதான் கணக்கிடவேண்டும்,.. சிலநேரம் செயல் இவனுடையதாகவும், அதை துடிக்கத் துடிக்க அனுபவிப்பது அவளாகவும் இருக்கும்,. சிலநேரம் இவள் தன் திறமையை அவனுடைய உடலில் காட்டி அவனை துடிக்கவைத்து ரசிப்பாள்

இரவில் கணக்கிலடங்கா புணர்ச்சியும் உணர்ச்சியும் அவர்களின் உடலை களைத்துப்போக வைத்தாலும்,.. ஒருவருக்கொருவர் அணைத்து தடவி ஆறுதல் படுத்திக்கொள்வார்கள்,... கடுமையான சேர்க்கையால் சோர்ந்துபோன உடல் பாகங்களுக்கு முத்தமிட்டு முத்தமிட்டு புத்துணர்ச்சி கொடுத்துக்கொள்வார்கள்

எண்ணிலடங்கா முறை எத்தனையோ விதமாக தங்களின் உடல்களை உறவாடவிட்டாலும் அவர்களின் உடல் தாகம் தணியாமல்,.. மறுபடியும் மறுபடியும் காலம் நேரம் இடம் ஏதுமின்றி உறவுகொண்டார்கள்

மான்சியை பிரிந்த இந்த கொஞ்சநாட்களில்,.. சத்யன் இவற்றையெல்லாம் எத்தனை ஆயிரம் முறை நினைத்துப் பார்த்தான் என்று கணக்கேயில்லை,.. ஆனால் ஒவ்வொருமுறையும் அதில் இருக்கும் சுகத்தின் மூலமாக நிம்மதியடைந்தான்

ஏன் நாம் தற்கொலை செய்துகொள்ளகூடாது என்று பலமுறை எண்ணினான்,.. ஆனால் அவன் அப்படி எண்ணும் ஒவ்வொருமுறையும் அவன் கண்முன்னால் அவன் பெற்றோரும் சரவணனும் வந்தனர்,.. தனக்கென சிரமப்படும் இவர்களை மேலும் கண்ணீர் கடலில் ஆழ்த்துவதா என்று நினைப்பான்,..

அது மட்டுமில்லாமல்,.. நாம் இறந்த பின் மான்சி வந்துவிட்டாள் என்றால் அப்புறம் என்னுடைய இழப்பை அவள் எப்படித் தாங்குவாள்,..அப்படி அவள் வந்தபின் மிச்சமிருக்கும் இருக்கும் வாழ்நாளை எப்படி அவளுடன் இன்பமாக கழிக்கமுடியும்,.. என்று பிற்காலத்தில் நம்பிக்கை வைத்து அந்த தற்கொலை எண்ணத்தை கைவிடுவான்

இதிலிருந்து வெளியே வந்து தன் நிகழ்காலத்தை உணர சத்யனுக்கு நிறைய நாள் ஆனது,.. சரவணன் உதவியுடன் மறுபடியும் வீட்டைவிட்டு வெளியே வர ஆரம்பித்தான்.. சரவணனுக்கு தன் நன்பனை பழயை நிலைக்க கொண்டுவர பெரிதும் பாடுப்பட்டான்

சத்யன் முகத்தில் மழிக்கப்படாத தாடி மீசையும்,.. சரிவர பாராமரிக்கப் படாத உடலும்,.. கண்களை சுற்றி விழிந்த கருவளையமும்,.. அதிக சிகரெட்டால் கருத்துப்போன உதடுகளுமாக,..பொண்டாட்டியை பறிகொடுத்த ஒருவன் எப்படி இருப்பானோ அதுபோல் இருந்தான்

அவனால் முடிந்தவரை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்ச்சித்தான்,.. அதுகூட தன்னையே நினைத்து வேதனையுறும் தன் பெற்றோருக்காக,.. அதற்கு சரவணன் தன்னால் முடிந்தவரை அவனுக்கு பெரும் உதவி செய்தான்

தனது கடுமையான வேலைகளை ஒதுக்கிவிட்டு சத்யனை பகலில் வெளியே அழைத்துவரும் சரவணன் பூங்காக்கள் சினிமா என்று கூட்டிச்சென்று மனதை மாற்ற முயற்ச்சித்தான்,.. சத்யனிடம் பேசி சிரமப்பட்டு அவன் தாடி மீசையை மழிக்கவைத்தான்

நாட்கள் செல்ல செல்ல சத்யனும் மெல்ல மெல்ல மாறினான்,.. ஆனால் அவன் மனம் மட்டும் மான்சியை துளியளவும் மறக்காமல் தன் கற்பனைகளால் அவளின் நினைவுகளை மேலும் மேலும் மெருகேற்றியது

அவளுடைய கற்பனையே அவனுடைய வாழ்க்கை என்று மாறியவன்,.. நிச்சயம் என்றாவது ஒருநாள் அவள் என்னிடம் வந்து சேர்வாள் என்று நம்பினான். என் உண்மை காதல் அவளை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடம் என உறுதியாக நம்பினான்

ஆனாலும் சில சமயங்களில் அவள் எங்கேபோய் என்னமாதிரி கஷ்டப்படுகிறாளோ என்று கலங்கி கண்ணீர் விட்டான்,.. இரண்டு செட் உடைகளுடன் போனாளே,.. கையில் பணம் கூட எடுத்து போகவில்லையே,.. செலவுக்கு என்ன செய்கிறாளோ தெரியவில்லையே,...

அவளின் படிப்பு கூட அவள் வாழ்க்கைக்கு பலமான பாதை அமைத்து தராதே. ச்சே இங்கே இருப்பதெல்லாம் யாருக்காக,.. அவளுக்கு இல்லாத இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்று எண்ணுவான்

பாவி போனதுதான் போனாள் அவள் அம்மா வீட்டுக்கு போய் அங்கிருந்துகொண்டு என்னை எதிர்த்து போராடி தண்டனை வாங்கி கொடுத்திருக்க கூடாதா,.. அவள் எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொண்டு இருப்பேனே ,.. இப்படி பிரிவு எனும் தண்டனையை கொடுத்து என்னை நடைப்பிணமாக்கி விட்டாளே,.. என்று துடித்தான்

சத்யன் கம்பெனிக்கு சென்று அலுவலை கவனிக்க முழுதாக நான்கு மாதம் ஆனாது,. கம்பெனியில் இருக்கும் ஊழியர்கள் தவறிக்கூட இவன் மனம் பாதிக்கும் வகையில் பேசாமல் தங்களது முதலாளியை கவனமாக பார்த்துக் கொண்டனர்

சரவணன் தேங்கிக்கிடந்த தன் அலுவல்களை பார்க்க போய்விட்டாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சத்யனை தொடர்புகொண்டு அவனை பற்றி விசாரித்தபடியே இருந்தான்

சத்யனின் பெற்றோருக்கு அவன் இயல்பு நிலைக்கு திரும்பினாலும்,.. அவனுடைய இளவயது ஏக்கங்களும் தாபங்களும் புரிந்து வருந்தினர்,.. சத்யனும் தன்னை பெற்றவர்கள் தன்னால் மனவருந்த கூடாது என்று அவர்கள் முன்பு இயல்பாக இருப்பது போல நன்றாகவே நடித்தான்,... ஆனால் அறைக்கதவை சாத்திக்கொண்டு கண்ணீர்விட்டான்,... ஒவ்வொரு வினாடியும் மான்சியின் நினைவு அவன் மனதை சல்லடை கண்ணாக துளைத்தது



நாட்கள் மாதங்களாகி ,.. மாதங்கள் வருடங்கள் ஆகிவிடம் போல் இருந்தது ஆனால் மான்சியை பற்றி இம்மி தகவல் கூட கிடைக்கவில்லை,.. சத்யன் விரக்த்தியுடன் தனது கடைமையை மட்டும் சரியாக செய்துகொண்டிருந்தான்,..
அவனை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்களுக்காக சத்யன் அந்த கடமையை செய்யவேண்டியிருந்தது

ஆனால் என்னதான் தன் கடமையை அவன் சரியாக செய்தாலும்,.. மாலைவேளையில் வீட்டுக்கு வர ரொம்பவே கஷ்டமாக இருந்தது,.. வீட்டுக்கு வந்தால் மான்சியின் நினைவுகள் அவனை வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் மனதை முடமாக்கியது

அதனால் சத்யன் அதை தவிர்க்க தன் கவணம் முழுவதையும் தன் தொழிலில் காட்டினான்,.. இரவுபகல் பாராது கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்,.. அதில் ஜெயித்தும் காட்டினான்

அவனுடைய வாழ்க்கை தரம் மேன்மேலும் செழித்தோங்கினாலும்,... அவன் மனதளவில் மான்சியின் நினைவால் ரொம்ப பின்தங்கி இருந்தான்,.. என்றாவது ஒருநாள் என் மான்சி என்னை வந்து சேர்வாள் என்ற நம்பிக்கை மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்து விட்டது


“ நீரிலே வாழும் மீன்களும் நத்தைகளும்...

“ நிலத்திலே சாவதென்ன?

“ நிலத்திலே வாழ்கின்ற மனிதனும் மிருகமும்...

“ நீரிலே சாவதென்ன?

“ சீருலாம் பேருலாச் சிறப்புகள் கொண்டவரும்..

“ சிறுமையில் அழிவதென்ன?

“ சேரிடம் அறியாமல் சேர்ந்ததாலோ?

“ அல்லது சிறுமதிப் போக்கினாலோ?

“ அய்யா தாசியின் மார்பிலும்..

“ தவுல் கொண்ட தோளிலும்...

“ தழும்புதான் மிச்சமாகும்...

“ அய்யா சன்யாசி பையிலும்..

“ சாவு கண்ட மெய்யிலும்..

“ சாம்பல்தான் மிச்சமாகும்..

“ அய்யா சாம்பல்தான் மிச்சமாகும்!


No comments:

Post a Comment