Saturday, April 25, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 7

அருகே வந்த வாலிபன், "Hi, how are you?"

செல்வி, "I am fine. I want to thank you once again"

அந்த வாலிபன், "You are welcome" என்றபடி சிவாவை நெருங்கி கையை நீட்டி, "Hi, I am Anand"

செல்வி மெல்லிய குரலில் சிவாவிடம், "அவரும் தமிழ்தான்" என்று சொல்லச் சொல்ல சிவா, "Hello Sir, I am Siva. It was very kind of you. Thank you so much"

செல்வி வாயடைத்துப் போய் சிவாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆனந்த், "It's Ok. " என்றபிறகு தமிழுக்குத் தாவி "அந்த சமயத்தில் நான் அங்கே இருந்தேன். என்னால் முடிஞ்சுது. அவ்வளவுதான். நீங்க என்ன செய்யறீங்க?"

சிவா தான் பணியாற்றும் உணவகத்தில் பெயரைச் சொல்லி, "குக்கா இருக்கேன்"



ஆனந்த், "வாவ்! உங்க ஸ்பெஷாலிடி என்ன?"

சிவா, "முக்கியமா ஸ்டெக்ஸ். ஆனா மத்த காண்டினெண்டல், இடாலியன் எல்லாம் செய்வேன்"

ஆனந்த், "உங்க ரெஸ்டாரண்டில் ஸ்டெக்ஸ், பாஸ்டா எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். உங்க சமையல் பிரமாதம்"

சிவா, "Thanks sir. I am happy you liked it. மறுபடி வரும்போது உள்ளே சொல்லி அனுப்புங்க. நானே உங்களை ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்"

ஆனந்த், "நீங்களும் ஸ்கூடட்ர் வாங்க வந்தீங்களா?"

சிவா, "ஆமாம் சார். ஒன் அவர்ல டெலிவரி கொடுக்கறதா சொன்னாங்க. அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் நீங்க?"

ஆனந்த், "என் ஃப்ரெண்ட்டுக்கு" என்றபடி அருகே நின்ற ப்ரீதியைக் காட்டி, "வாங்கலாம்ன்னு வந்தோம். சாரி, இன்ட்ரொட்யூஸ் பண்ணலை" என்றபடி ப்ரீதியை கைகாட்டி "ப்ரீதி என் ஃப்ரெண்ட்" என்று அறிமுகப் படுத்தினான்.

சிவா ப்ரீதியைப் பார்த்து, "சாரை இப்போத்தான் மீட் பண்ணினேன். நான் சிவா" என்ற பிறகு செல்வியை கை காட்டி, "செல்வியோட ஃப்ரெண்ட்" என்றான்

ப்ரீதியும் செல்வியும் அறிமுகப் படுத்திக் கொண்டு யார் எங்கு பணி செய்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டனர். செல்வி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் இருந்த தயக்கத்தை சிவா, ஆனந்த் இருவரும் கவனித்தனர்.

ஆனந்த், "இந்த வண்டி எப்படி?"

சிவா, "நல்ல வண்டி சார். ட்ரபிள் ஃப்ரீ வண்டி" என்றபிறகு எப்படி முன்பு இருந்த மாடலை விட இப்போது வந்து இருப்பது உயர்ந்தது என்று விளக்கினான்.

சற்று பேசிய பிறகு ஆடவர்கள் பேச்சில் ப்ரீதியும் செல்வியும் கவனம் செலுத்தியவாறு இருந்தனர்.

சிவா, "நல்ல மைலேஜும் கிடைக்கும்" என்று முடித்தான்.

ஆனந்த், "மைலேஜ்?" என்றபடி ப்ரீதியைப் பார்த்தான்.

ப்ரீதி, "Fuel economy"

ஆனந்த், "இந்தியாவில் எல்லாம் கிலோமீட்டர்ன்னு நினைச்சேன்"

சிவா, "அதெல்லாம் வெள்ளைக் காரங்க விட்டுப் போன வார்த்தைங்க"

ஆனந்தும் ப்ரீதியும் சிவா-செல்வியிடம் இருந்து விடைபெற்று உள்ளே சென்றனர்.

செல்வி, "சிவா, இவ்ளோ நல்லா இங்க்ளீஷ் பேசறே?"

சிவா, "ஒரளவுக்கு பேசுவேன் செல்வி. என் பழைய ஓனரம்மாட்ட கத்துகினது. அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் ஜெர்மனும் கத்துட்டேன். இங்கே உக்காந்துனு இருக்கறதுக்கு பதலா பக்கத்தில் ஒரு டீ அடிச்சுட்டு வரலாம் வா" என்று அவளை அழைத்தான்.

சிவா செல்வியின் மனத்தில் பல படிகள் உயர்ந்து இருந்தான்.


அடுத்த நாளில் இருந்து சிவாவும் செல்வியும் புது ஸ்கூட்டரில் ஒன்றாக காலை புறப்படுவதும். மாலை செல்வி தனியாக அதை ஓட்டி வருவதும் வழக்கமானது.

ஒரு நாள் இரவு தன் வேலை முடிந்து சிவா வெளியில் வந்தபோது செல்வி ஸ்கூட்டரில் வந்து அவனுக்காக காத்து இருந்தாள்.

சிவா, "இன்னா செல்வி? இந்த நேரத்துக்கு எதுக்கு வந்து இருக்கே?"

செல்வி, "உன்னைக் கூட்டிட்டுப் போலாம்ன்னு"

சிவா, "எதுக்கு நானே வந்து இருப்பேன் இல்லை?"

செல்வி, "நீ வர்ற ஒழுங்கு தெரியும். நேத்து அந்த எத்திராஜ்கூட போய் தண்ணி அடிச்சுட்டு வந்தேதானே? அதான் ஆண்டி இனிமேல் என்னை வந்து உன்னை கூட்டியாறச் சொன்னாங்க"

சிவா, "அதுக்காக இந்த நேரத்தில எதுக்கு வந்தே?"

செல்வி, "சுத்தியும் பாரு சிவா. எத்தனை பொண்ணுங்க நடந்துட்டு, வண்டில எல்லாம் போயிட்டு இருக்காங்க. ஏன்தான் நீ இப்படி பயப் படுவியோ தெரியலை. சரி வா போலாம். நானும் இன்னும் சாப்படலை"

சிவா, "நீ ஏன் இன்னும் சாப்படலை?"

செல்வி, "நீ எதானும் எடுத்துட்டு வருவேன்னுதான்"

சிவா, "கொஞ்சம் இரு ..." என்ற பிறகு செல்வி அவனை அழைப்பதைப் பொருட் படுத்தாமல் உணவகத்தில் பின் வாசலில் நுழைந்தான். ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு செல்வி அவனைப் பின் தொடர்ந்தாள்.

உணவகத்தின் நவீன சமையலறைக்குள் சென்ற சிவா முன் புறம் இருந்த மேனேஜரிடம், "கொஞ்ச நேரம் சார். வூட்ல சாப்பாடு செய்யலையாம். நான் எனக்கு செஞ்சு எடுத்துட்டு போயிடறேன்" என்று குரல் கொடுத்து பதிலுக்குக் காத்திராமல் அங்கு இருந்த ஏப்ரன் ஒன்றை (சமையல் காரர்கள் போடும் உடலின் முன்பாகத்தை மட்டும் மறைக்கும் உடை) அணிந்து செல்வியின் பக்கம் திரும்பி, "இன்னா சாப்படறே?"

அவனை வாஞ்சையுடன் பார்த்த செல்வி, "ம்ம்ம் ... நூடுல்ஸ்?"

சிவா, "அதைவிட ருசியா ஒண்ணு பண்ணறேன்" என்றபடி செயலில் இறங்கினான்.

செல்வி, "என்ன?"

சிவா, "இப்போ இருக்கறதை வெச்சுட்டு சீக்கரமா செய்றா மாதிரி ஒரு பாஸ்தா" என்றபடி ஏற்கனவே வேகவைத்து இருந்த கிளிஞ்சல் வடிவில் இருந்த பாஸ்தா (சேமியா போன்றது) பேஸை ஒரு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்தான்.

செல்வி, "அது என்னது?"

சிவா, "பாஸ்தாங்கறது நம்ம சேமியா இல்லாங்காட்டி நூடில்ஸ் மாதிரித்தான். வெவ்வேற ஷேப்பில் இருக்கும். மைதா மாவு இல்லன்னா கோதுமை மாவுல செஞ்சது. நாங்க மொத்தமா போட்டு வேக வெச்சு ரெடியா வெச்சுக்குவோம். அதான்" என்றபடி மற்ற தேவையான பொருட்களை எடுத்து மேசையில் குவித்தான்,

செல்வி, "என்னல்லாம் போடுவே?"

சிவா, "சிக்கன், சீஸ் அப்பறம் இது இன்னா சொல்லு பாக்கலாம்?" என்றபடி சில இலைகளை அவளிடம் நீட்டினான்.

செல்வி அதை எடுத்து முகர்ந்து பார்த்தபின் வியப்புடன், "துளசியா?"

சிவா, "ஆமா! இது காட்டுத் துளசி. இதை இடாலில ரோஸ்மேரின்னு சொல்லுவாங்க"

பேசிக் கொண்டே தன் சமையலைத் தொடங்கினான். சுற்றி இருந்த நவீன சமையல் கூடத்தையும் அதில் இருந்தவற்றை சிவா கையாளுவதையும் செல்வி வியப்பில் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அப்போது அங்கு வந்த மேனேஜர் காசிராம், "இதான் செல்வியா சிவா?"

சிவா, "ஆமாம் சார்" என்றபடி செல்வியிடம், "இது எங்க மேனேஜர் காசிராம்" என அறிமுகப் படுத்தினான்.

காசிராம், "எதுக்கும்மா நீ இந்த நேரத்தில வந்து இருக்கே?"

குறும்புச் சிரிப்புடன் செல்வி, "தனியா விட்டா எங்கெல்லாமோ போயிட்டு வீட்டுக்கு வருதுன்னு சிவாவை அவங்க அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றாள்

காசிராம், "என்னடா? நேத்து உனக்கு கொடுத்ததை வழியிலேயே குடிச்சுட்டு வீட்டுக்கு போனியா?"

சிவா, "நான் வூட்டுக்கு எடுத்துனு போலான்னுதான் சார் சொன்னேன். அந்த எத்திராஜ் பய வூட்டுல அவங்க அப்பா புடுங்கி குடிச்சுடுவார்ன்னு வழியிலே ஒரு பஜ்ஜி கடைல உக்காந்து குடிக்க ஆரம்பிச்சான். சரி அவனுக்கு கம்பெனி கொடுக்கலாம்ன்னு நானும் என்னுதை காலி பண்ணினேன்"

செல்வி, "என்ன சார்? நீங்க கொடுத்தீங்களா?"

காசிராம், "அது ஒண்ணும் இல்லைம்மா. இங்க பாரில மிச்சமாகற சரக்க்கை எல்லாம் ஒண்ணா மிக்ஸ் பண்ணி வாரக் கடைசில ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்குவோம். அதான்" என்ற



சிவா, "பாத்தியா? நான் எப்பவும் வெளில போய் குடிச்சது இல்லை தெரியுமா?"

செல்வி, " ரொம்ப ஒழுங்கு. இரு ஆண்டிட்ட போட்டுக் கொடுக்கறேன். உனக்கு வேலை செய்யற இடத்திலயே தண்ணி ஊத்திக் கொடுக்கறாங்கன்னு"

காசிராம் செல்வியிடம், "நீ அக்கௌண்ட்ஸ் படிச்சு இருக்கே இல்லை?"

செல்வி, "ஆமாம் சார். உங்களுக்கு எப்படி தெரியும்?"

காசிராம், "இதோ. தலைவருகிட்ட இருந்துதான். எதுக்கு கேட்டேன்னா, உன்னால சிக்ஸ் டு டென் பார்ட் டைம் வேலைக்கு வரமுடியுமா?"

சிவா, "இன்னா சார்?"

காசிராம், "எப்படியும் உன்னை கூட்டிட்டு போறதுக்கு வருது. அது ஆஃபீஸ் முடிஞ்சப்பறம் இங்கே வந்து பில்லிங்க் மட்டும் பாத்துட்டு உன்னோட போவுட்டும். அதுக்கும் எக்ஸ்ட்ரா துட்டு கிடைக்கும் இல்லை?"

சிவா, "வேணாம் சார் அதுவே காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் கம்ப்யூட்டர் முன்னால் உக்காந்து வேலை செஞ்சுட்டு வருது"

காசிராம், "அவ வேணும்ன்னாலும் நீ அவளை வரவேண்டாம்ன்னு சொல்லுவே மாதிரி இருக்கு? சரி, பேசிட்டு சொல்லு" என்றபடி அகன்றார்

அடுத்த சில நிமிடங்களில் பாஸ்தாவை செய்து முடித்து ஒரு அலுமினிய ஃபாயில் தட்டில் தான் செய்ததை இட்டு அழாக அதை கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் கொண்டு அலங்கரித்து அவளிடம் நீட்டினான்.

செல்வி, "வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்"

சிவா, "சரி" என்றபடி அந்த தட்டை இன்னொரு அலுமினிய ஃபாயில் கொண்டு மூடி பாக் செய்தான்.

ஸ்கூட்டருக்கு அருகே வந்ததும் சிவாவிடம் சாவியைக் கொடுத்தாள்.

சிவா, "இப்ப நீதானே ஓட்டிட்டு வந்தே? நீயே ஓட்டு"

செல்வி, "ம்ம்ம் ... ஏற்கனவே எனக்கு ரொம்ப திமிர்ன்னு ஆண்டி நினைச்சாங்க. உன் வண்டியை நான் ஓட்டிட்டு நீ பின்னாடி உக்காந்துட்டு வரதைப் பாத்தாங்கன்னா மறுபடி என்னை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க"

சிவா குறும்புச் சிரிப்புடன், "அதெல்லாம் நினைக்காது. காசு இருந்தா ஒரு கார் வாங்கி ட்ரைவர் வெச்சினு போவேன். இப்போ ஸ்கூட்டர் வாங்கி ட்ரைவர் வெச்சுனு வந்து இருக்கேன்னு சொன்னா சரின்னுடும்"

செல்வி, "உனக்கு நான் ட்ரைவரா ... " என்றபடி அவனை அடிக்க வந்தாள். அவளிடம் இருந்து தப்ப பின்னால் நகர்ந்தவன் திண்ணை போன்று இருந்த பகுதியில் கால் இடறி அதில் அமர்ந்து பின்புறம் சாய்ந்தான். வேகமாக அவனை நோக்கி வந்த செல்வி அவன் மேல் விழுந்தாள். விழுந்த வேகத்தில் சிவாவின் தலை சுவற்றில் அடிபடாமல் இருக்க அவன் தலைக்கு பின் புறம் கைகொடுத்துத் தடுத்தாள்.

முழுவதும் அவன் மேல் சாய்ந்து அவன் மேல் படர்ந்த வண்ணம் அவனைப் பார்த்து, "நல்ல வேளை தலையில் அடி படலை" என்றாள்.

சிவா தன் கையில் இருந்த பாஸ்தா பாக்கட்டை உயர்த்திப் பிடித்த படி, "நல்ல வேளை இது கீழ விழலை"

அப்போது பின் வாசலை சாத்தியபடி வெளியில் வந்த காசிராம், "டேய், உங்க ரோமான்ஸை வீட்டில் போய் வெச்சுக்குங்க. நைட்டு ரொம்ப லேட்டாச்சு. மாமூல் வாங்கறதுக்காக் ஹொய்சளா வண்டில வர்றவனுக சந்தேகக் கேஸில் பிடிச்சுக்கப் போறாங்க" என்றபடி சென்றார். பெங்களூர் மாநகரத்தில் காவல் துறையினர் ஹொய்சளா என்ற பெயரிட்ட ஜீப்புகளில் இரவு நேர ரோந்து வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அவசரமாக எழுந்த செல்வி, "சாரி சிவா"

சிவா, "சாரி செல்வி. என்னாலதான் உனக்கு கெட்ட பேரு. இனிமேல் இந்த மாதிரி விளையாட்டெல்லாம் வேணாம்"

செல்விக்கு 'என்ன கெட்ட பேரு?' என்ற கேள்வி நுனிநாக்கு வரை வந்தது. பிறகு மௌனம் காத்தாள். ஆனால் தன் தாயிடம் சில நாட்களுக்கு முன் சிவா தனக்குப் பொறுத்தமானவன் இல்லை என்று சொன்னது அவள் மனத்தை உறுத்தியது. 


ஆனந்த் - ப்ரீதி

இரு தினங்களுக்குப் பின் அலுவலகத்தை அடைந்தவள், பணியேற்பதற்கு முன்பு விக்ரம் ஷாவைச் சென்று பார்த்து வர அவரது அறைக்குச் சென்றாள். உள்ளே அவர் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தது தெரிந்தது. அவருக்கு பதிலளித்த குரல் அவளுக்கு பரிச்சயமானதென நினைத்துக் கொண்டு இருந்த போது அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தவனைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்.

"ஹாய் ப்ரீதி. எப்படி இருக்கே?" என்றபடி ஆனந்த் வைதீஸ்வரன் கை குலுக்க கை நீட்டினான்.

ப்ரீதி, "ஆனந்த், நீங்க இங்கே?"

ஆனந்த், "வந்து ஒரு மாசம் ஆச்சு. உன் டீமில் நான் இப்போ டெக்னிகல் ஆர்கிடெக்ட்"

அவனைப் பார்த்து வாய் பேசாமல் இருந்தவளிடம் தொடர்ந்து, "இன்னும் என் மேல கோவமா? அதான் பகவான் எனக்கு ப்ராக்ஸி கொடுத்து உனக்கு ஹெல்ப் பண்ணிட்டாரே?"

அவனது சரளமான நகைச்சுவையை ரசித்து புன்சிரித்த ப்ரீதி, "அப்போ ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப கொஞ்சம்தான் கோவம்"

ஆனந்த், "அப்ப சரி பண்ணிடலாம். நீ ஷாவை பாக்க வந்தியா? போய் பாத்துட்டு வா. அப்பறம் மீட் பண்ணலாம். ஷா உனக்கு என்னைத் தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லு. எப்படி தெரியும்ன்னு சொல்லு. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை." என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். எதற்கு அப்படிச் சொன்னான் என்று துணுக்குற்றாலும் அதை பொருட்படுத்தாமல் விக்ரம் ஷாவின் அறைக்குள் நுழைந்தாள்.

விக்ரம் ஷா, "சாரி ப்ரீதி. உன் தங்கை கல்யாணத்துக்கு வரமுடியலை. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?"

ப்ரீதி, "நல்லபடியா முடிஞ்சுது சார்"

விக்ரம் ஷா, "சோ, அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு ரெடியா?"

ப்ரீதி, "எஸ் சார்"

விக்ரம் ஷா, "உன்னை டீம் லீடா ப்ரோமோட் பண்ணி இருக்கேன். உன் சாலரியிலும் அதுக்கு தகுந்த ஜம்ப் இருக்கும்"

ப்ரீதி, "ரொம்ப தேங்க்ஸ் சார். என்ன ப்ரோஜெக்டில் அசைன் பண்ணறீங்க?"

விக்ரம் ஷா, "நமக்கு ரொம்ப நாளா பழக்கமான க்ளையண்ட். நீ முதல் முதல்ல இங்கே வந்தப்ப வொர்க் பண்ணிட்டு இருந்தியே அதே க்ளையண்ட். ஒரு பெரிய ப்ராஜெக்ட். உன் டீமைத் தவிற இன்னும் ரெண்டு டீம் இதில் வொர்க் பண்ணும். இந்த வாரத்தில் ஹை லெவல் ப்ரீஃபிங்க். நீ வெளில பாத்து பேசிட்டு இருந்தியே ஆனந்த்? அவன்தான் டெக்னிகல் ஆர்கிடெக்ட். உங்க மூணு டீம்கூடவும் அவன் வொர்க் பண்ணுவான்"

ப்ரீதி, "ஓ.கே சார்"

விக்ரம் ஷா, "உனக்கு ஆனந்தை முதல்லயே தெரியுமா?"

ப்ரீதி, "தெரியும் சார். அவங்க பாட்டி வீடு குன்னூரில் இருந்துது. லீவில் பாட்டி வீட்டுக்கு வருவார். அப்ப பழக்கம் ஆனார்"

விக்ரம் ஷா, "ஓ பர்சனல்? நாட் ப்ரொஃபெஷ்ஷனல்?"

ப்ரீதி, "இல்லை சார். என் பழைய கம்பெனியில் ஒரு ப்ராஜெக்டில் ஆனந்த் ஆன்-சைட் கோஆர்டினெட்டரா இருந்தார். நான் டீம் மெம்பர்"

விக்ரம் ஷா, "சோ அவன்கூட நீ வொர்க் பண்ணி இருக்கே"

ப்ரீதி, "எஸ் சார்"

விக்ரம் ஷா, "டெக்னிகல் விஷயங்களைத் தவிற ப்ராஜெக்ட் சம்மந்தப் பட்ட வேறு எந்த விவரமும் அவனோட டிஸ்கஸ் பண்ணாதே"

ப்ரீதி, "ஏன் சார்?"

விக்ரம் ஷா, "நத்திங்க். அவனுக்கு தேவை இல்லாத விஷயம். அதான்"

ப்ரீதி, "பட், எக்ஸ்ட்ரா ரீஸோர்ஸஸ்க்கு நாம் பில் பண்ணறது அவனுக்கு தெரியாதா?" என்று அவர்கள் உண்மையில் இருப்பதுக்கு அதிகப்படியான ஆட்கள் இருப்பதாக காட்டி வாடிக்கையாளரிடம் பணம் வசூலிப்பதைப் பற்றிக் கேட்டாள்.

விக்ரம் ஷா, "அஃப் கோர்ஸ் அது அவனுக்கும் தெரியும். ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ப்ராஜெக்ட்டில் அவனே இன்வால்வ் ஆகி இருக்கான். ஆனா, இந்தப் ப்ராஜெக்ட்டில் அப்படி நடப்பது அவனுக்குத் தெரிய வேண்டாம்"

ப்ரீதி, "ரிவ்யூ மீட்டிங்க்கில் அவங்க எல்லாம் எங்கேன்னு அவர் கேட்டா?"

விக்ரம் ஷா, "இதைப் பத்தி சுகுமார்கிட்ட பேசினேன். டெக்னிகல் ரிவ்யூவில் மட்டும் அவன் கலந்துக்குவான். அதில நாம் போடற எக்ஸ்ட்ரா ரீஸோர்ஸஸ் இல்லாத மாதிரி பாத்துக்கணும்ன்னு சொன்னான். அவன் உனக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணுவான். யூ மே கோ நவ்" என்று விடை கொடுத்தார்.

முன்பு குழுத் தலைவனாக இருந்த சுகுமார் இப்போது ப்ராஜெக்ட் மேனேஜராக பதவி உயர்வு பெற்று இருப்பதை உணர்ந்தாள். அந்தப் பதவிக்கு சற்றும் லாயக்கு இல்லாதவன் அவன் என்று அவள் நன்கு அறிந்து இருந்தாள். பெரிய நிறுவனங்களின் மதிப்பு அவள் மனத்துக்கு வெட்ட வெளிச்சமானது. ப்ரீதியின் மனதில் விக்ரம் ஷாவின்மேல் வைத்து இருந்த மதிப்பு மிகவும் குறைந்து இருந்தது. இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த நிறுவனத்தை விட்டு அகல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

தன் இருக்கைக்கு வந்தவளுக்கு ப்ராஜெக்ட் தொடக்க மீட்டிங்குக்கு வருமாறு கணிணி மூலம் தகவல் வந்து இருந்தது.

அந்த டிஸ்கஷன் ரூமில் அவளைத் தவிற சுகுமார், ஆனந்த் மற்றும் சக டீம் லீடர்கள் இருந்தனர். தவிற பாலி கான்ஃபரென்ஸர் மூலம் வாடிக்கையாளரின் பிரதிநிதிகள் மூவர் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்டனர்.

சுகுமார் தொடங்கப் போகும் ப்ராஜெக்ட்டைப் பற்றி விளக்கினான். அவனது விளக்கம் பாதியிலேயே அமெரிக்க பிரதிநிதி ஒருவரின் ஆட்சேபணைக்கு உள்ளானது. ஆனந்த் இடைமறித்து ஒரு வழியாக மீட்டிங்கை முடித்தான். இந்த ப்ராஜெக்ட்டில் ஆனந்த் ஒரு முக்கியப் பங்கு வகிப்பான் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இப்படிப் பட்ட ஒரு ப்ராஜெக்ட் எப்படி ஷா சிஸ்டம் நிறுவனத்துக்குக் கிடைத்தது என்று ப்ரீதி முதற்கொண்டு அங்கு இருந்த பலரும் மனதுக்குள் வியந்தனர்.

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவள் குன்னூரில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தாயிடம் பேசியதையும் அதன் பிறகு வழி நெடுக தன் மனதில் எழுந்த கொந்தளிப்பையும் நினைவு கூர்ந்தாள். தாயின் மற்றும் உடன் பிறப்புக்களின் நடத்தையில் வெறுப்புற்றவள் இனிமேல் முதலில் தனக்கு என்று சுயநலத்துடன் வாழ முடிவெடுத்து இருந்தாள்.

இத்தனை நாளும் தனக்குத் தானே தடைபோட்டதால் இழந்த சுதந்திரத்தையும், தியாகம் செய்து இருந்த சிறு சிறு இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் எண்ணி இருந்தாள்.

மேசையில் இருந்த டைரியை எடுத்து ஒரு பட்டியல் இடத் தொடங்கினாள்:

- 'நான் முதலில் எனக்காக வாழப் போகிறேன்'
- 'அம்மா தம்பி தங்கை யாரைப் பத்தியும் கவலைப் படாம, முதலில் எனக்கு என்ன வேணுமோ அதை நான் பண்ணிப்பேன்'
- 'எங்கே வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் போகணும் ... ஒரு டூ வீலர் வாங்கணும்'
- 'நல்ல ட்ரெஸ்ஸஸ் எல்லாம் வாங்கணும்'
- 'ஒரு நல்ல மொபைல் ஃபோன் வாங்கணும். எல்லாரையும் மாதிரி காதில் ஹெட் ஃபோன்ஸ் போட்டுட்டு பாட்டுக் கேக்கணும்'
- 'ஜாலியா இருக்கணும் ... I want to have fun ..... how?'

மேற்கண்ட வரிகளை எழுதியபிறகு குழப்பத்துடன் ஆழ்ந்து யோசித்த படி இருந்தாள். 


"அதைப் பத்தி நீ கவலைப் பட வேண்டாம். Fun consultant Anand at your service" என்றபடி பின்னால் இருந்து வந்த ஆனந்தின் குரலைக் கேட்டு அவசரமாக டைரியை மூடி திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்.

ப்ரீதி, "மத்தவா டைரியை படிக்கறது அநாகரீகம்"

ஆனந்த், "அநாகரீகம் அப்படின்னா நாகரீகத்துக்கு ஆப்போஸிட்தானே"

ப்ரீதி, "ஆமா"

ஆனந்த் அவள் கவனிக்கும் படி அவளை தலை முதல் கால் வரை பார்த்து, "நீ ரொம்ப நாகரீகமா இருக்கியா?"

ப்ரீதி அவன் தனது தோற்றத்தைக் குறிப்பிடுகிறான் என்று உணர்ந்து, "நாகரீகம்ன்னா ஃபாஷன்னு மட்டும் அர்த்தம் இல்லை. டீஸண்டா நடந்துக்கறதுக்கும் சொல்வா"

ஆனந்த், "நான் அப்ப இன்டீஸண்டா நடந்துட்டேனா?"

ப்ரீதி, "பின்னே? மத்தவா டைரியை படிக்கறது இன்டீஸண்ட் இல்லாம பின்னே என்ன?"

ஆனந்த், "ஹெல்லோ! ஊருக்கே தெரியறா மாதிரி டேபிளில் திறந்து வெச்சு அப்படி கொட்டை எழுத்தில் எழுதிட்டு மோட்டுவளையைப் பாத்துட்டு இருந்தா"

கல கலவென சிரித்த ப்ரீதி, "பரவால்லையே? மோட்டுவளைன்னு எல்லாம் பேசக் கத்துண்டு இருக்கே"

ஆனந்த், "பின்னே கோமளா பேரன்னா சும்மாவா? வா, லஞ்சுக்குப் போலாம்"

ப்ரீதி, "நான் என் பீ.ஜில இருந்து லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்து இருக்கேன்"

ஆனந்த், "போற வழியில் அதை யாரானும் பிச்சைக்காரனுக்கு கொடுத்தடலாம்"

ப்ரீதி, "நோ!"

ஆனந்த், "ஏன் அவன் கூட அதை சாப்பட மாடானா?"

அவனை முறைத்த ப்ரீதி, "ஐ டோண்ட் வாண்ட் டு வேஸ்ட்"

ஆனந்த், "அதான் பிச்சைக்காரனுக்கு கொடுக்கலாம்ன்னு சொன்னேன். வேஸ்ட் பண்ணனும்ன்னா குப்பைத் தொட்டில போடலாம்ன்னு சொல்லி இருப்பேன்"

ப்ரீதி, "பட் இங்கே எங்கே போய் லஞ்ச் சாப்பிடறது?"

ஆனந்த், "உனக்கு ஐ சைட் ப்ராப்ளம் எதுவும் இல்லையே? சுத்திலும் எத்தனை ரெஸ்டாரண்ட் இருக்கு?"

ப்ரீதி, "எல்லாம் நான் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட்"

ஆனந்த், "அங்கே வெஜிடேரியனும் கிடைக்கும் தெரியுமோன்னோ?"

மௌனம் காத்த ப்ரீதியிடம் தொடர்ந்த ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "இல்லை. எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லை" என்று பரிதாபமாகச் சொன்னாள். பிறகு ஆனந்த் அவளைப் பார்த்த பார்வையில் இருந்த அரவணைப்பில் உறுகினாள்.

ஆனந்த், "அதான் சொன்னேன் இல்லை. ஃபன் கன்ஸல்டண்ட் ஆனந்த்கூட இருக்கும்போது எதைப் பத்தியும் ஒர்ரி பண்ணக் கூடாதுன்னு? Fun starts with having good food .. ஜாலியா இருக்கறதுக்கு ஃபர்ஸ்ட் ஸ்டெப் நல்லா நாக்குக்கு ருசியா சாப்பிடறது. வா" என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றான்.

அவளுக்கு பல வருடங்களுக்கு முன்னால் அவனுடன் காரில் சென்றது நினைவுக்கு வந்தது.

செல்லும் வழியில் ஆனந்த், "ஒரு வழியா மத்தவா பேசறா மாதிரியும் பேசக் கத்துண்டே போல இருக்கு?"

ப்ரீதி, "பின்னே? காலேஜில் இருக்கச்சேயே கத்துண்டேன். சுத்தி எல்லாம் கோயமுத்தூர் பாஷை பேசிண்டு இருப்பா. நான் மட்டும் நம்மாத்து பாஷை பேசி நிறைய பேர் சிரிச்சா. அப்பறம் மத்தவா மாதிரி பேசக் கத்துண்டேன். ஆனா" என்று நிறுத்தினாள்.

ஆனந்த், "ஆனா?"

ப்ரீதி, "உன்னண்டே சில சமயம் ஆத்து பாஷை வர்றது. சில சமயம் மத்தவா பேசறா மாதிரி வர்றது"

ஆனந்த், "வெல்கம் டு தி க்ளப்"



ப்ரீதி, "அப்படீன்னா?"

ஆனந்த், "எனக்கும் அதே கஷ்டம்தான்னு சொன்னேன்"

ப்ரீதி, "ஓ" என்றவாறு சிரித்தபடி அவனுடன் நடந்தாள்.

முதலில் அந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு கூட்டம் நிறம்பி வழிய சற்று தூரம் நடந்து அந்த சாலையில் இருந்த இன்னொரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றான்.

இருவருக்கும் ஒதுக்கப் பட்ட மேசையில் அமர்ந்ததும். புத்தகம் போன்று இருந்த மெனு இருவருக்கும் கொடுக்கப் பட்டது. ப்ரீதி எந்தப் பக்கத்தில் தொடங்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.

ஆனந்த் சரளமாக இருவருக்கும் ஆர்டர் செய்தான்.

ப்ரீதி, "நீ ஆர்டர் பண்ணினதில் நான் வெஜ் ஒண்ணும் இருக்காதுதானே?"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி. எப்படி நீ ரெண்டு வருஷம் சியாட்டல்ல மேனேஜ் பண்ணினே?"

ப்ரீதி, "இண்டியன் ஸ்டோர்ல வேணுன்ற பதார்த்தமெல்லாம் வாங்கிண்டு அபார்ட்மெண்டில் நானே சமைச்சுப்பேன்"

ஆனந்த், "வெளில சாப்பிட்டதே இல்லையா?"

ப்ரீதி, "எப்பவானும் என் ஃப்ரெண்ட்ஸோட போவேன். மோஸ்ட்லி சாலட்ஸ். அப்பறம் அன்னபூர்ணா கஃபேன்னு ஒரு வெஜிடேரியன் சௌத் இண்டியன் ரெஸ்டாரண்ட் இருக்கு"

ஆனந்த், "தெரியும். ப்ராட்வே ஸ்ட்ரீட்ல இருக்கு. அங்கே சாப்பிட்டு இருக்கியா?"

ப்ரீதி, "ம்ம்ம் .. "


No comments:

Post a Comment