Saturday, April 25, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 9

சற்று நேரத்துக்குப் பிறகு ஆனந்த் விக்ரம் ஷாவின் அறைக்குள் செல்வதை ப்ரீதி கவனித்தாள். பிறகு இறுகிய முகத்துடன் ஆனந்த் வெளியில் வருவதையும் கவனித்தாள்.

அன்று மாலை ஆனந்த் அவளது இருக்கைக்கு வந்து, "வா போலாம். நீ கேட்ட கலர் வண்டி வந்து இருக்காம். ரெடியா வெக்கச் சொன்னேன். போய் எடுத்துண்டு வரலாம்'

சிறு குழந்தையின் குதூகலத்துடன் ப்ரீதி, "ஹை, வந்துடுத்தா?"

அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஆனந்த், "ம்ம்ம் ... Let's go"

ஸ்கூட்டருடன் அதே நிறத்தில் ஒரு ஹெல்மெட்டும் வாங்கினர்.

ஆனந்த், "ம்ம்ம் .. சுத்தறதுக்கு வண்டி கிடைச்சுடுச்சு. உன்னோட நெக்ஸ்ட் ப்ளான் என்ன?"

ப்ரீதி, "இப்போ முதல்ல கோவுலுக்கு"



ஆனந்த், "கோவிலுக்கா?"

ப்ரீதி, "ஆமா வண்டியை மொதல்ல கோவிலுக்குத் தான் எடுத்துண்டு போணும்"

ஆனந்த், "சரி வா"

ஷோரூமுக்கு வெளியே வந்ததும் ஆனந்திடம் சாவியைக் கொடுத்து,

ப்ரீதி, "நீ ஓட்டிண்டு வா"

ஆனந்த், "No way! Moreover, உன் ஹெல்மெட் என் தலைக்கு சின்னது. So my pretty lady! please chauffer me around" என்று அவளைப் பார்த்து சிரித்தான்.

ப்ரீதி, "நான் எப்படி உன்னை பின்னாடி உக்காந்திண்டு ஓட்ட முடியும்?"

ஆனந்த், "ஏய், நீயா இழுக்கறே? ஸ்கூட்டர்தானே இழுக்கப் போறது?"

ப்ரீதி, "இல்லை ஆனந்த். என்னால நம்ம ரெண்டு பேரையும் வெச்சுண்டு பாலன்ஸ் பண்ண முடியாது"

ஆனந்த், "இதில பாலன்ஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், என் ரெண்டு காலையும் நல்லா தரையில் ஊணிட்டு பின்னாடி உக்காந்துக்கரேன். நீ வண்டியை எடுத்தப்பறம் காலை தரையில் இருந்து எடுக்கறேன். ஸ்டாப் பண்ணச்சேயும் உன் பாலன்ஸ் போகாம இருக்க நான் காலை தரையில் ஊணிக்கறேன். ஓ.கே?"

அவனை ஒரு விதமான பயத்துடன் பார்த்த ப்ரீதி ஸ்கூட்டரில் அமர்ந்தாள். பின்னால் அமர்ந்த ஆனந்த் முன்பக்கமாக குனிந்து, "ம்ம்ம் .. ஸ்டார்ட் பண்ணு" என்றபோது அவனது மூச்சுக் காற்று அவள் கழுத்திலும் முதுகிலும் பட்டு அவளை இம்சித்தது. 

முதலில் சீரான வேகத்தில் ஓட்டத் தொடங்கியவள் ஆனந்தின் அருகாமை தந்த சிலிர்ப்பில் வேகத்தை வெகுவாகக் குறைத்தாள். அடுத்த சிக்னலில் நின்றபோது ஆனந்த் அவள் ஹெல்மெட்டை தட்டினான். கழட்டி தலையை பின்புறம் திருப்பி அவனைப் பார்க்க, "நான் இறங்கி பொடி நடையா உனக்கு முன்னாடி கோவிலுக்கு போய் வெய்ட் பண்ணட்டா?"

அவனது கிண்டலை புரிந்து கொள்ளாமல் ப்ரீதி, "எதுக்கு ஆனந்த்? சிக்னல் இன்னும் ஒரு நிமிஷத்தில் போட்டுடுவான். வண்டியிலேயே சீக்கிரம் போயிடலாம்"

ஆனந்த், "நீ போற வேகத்தில் கோவில் மூடறதுக்குள்ள போக முடியுமான்னு தெரியலை. அதான் சொன்னேன்"

முகத்தை சுழித்துச் சிரித்த ப்ரீதி, "சீ! நான் கூட என்னமோ சீரியஸா சொல்றேன்னு நினைச்சேன். மொத மொதல்ல வண்டியை எடுக்கறேனோன்னோ. அதான்"

ஆனந்த், "மொதல்ல வேகமாத்தான் போயிண்டு இருந்தே. திடீர்ன்னு யாருக்கோ என் proximity என்னமோ பண்ணிடுத்து. கை கால் எல்லாம் நடுங்கி ஸ்பீடை ரொம்பவே குறைச்சுட்டா"

ப்ரீதி, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை"

ஆனந்த், "சரி சிக்னல் போட்டாச்சு. போ" என்றபடி அவள் தோள்களைப் பற்றி அவளது இம்சையை அதிகரித்தான்.

அடுத்த சில தினங்களில் தன் ஸ்கூட்டரில் ஆனந்தை அழைத்துக் கொண்டு போவதில் ஒரு அளவுக்கு தேர்ச்சி பெற்றாள். அப்படியும் அவ்வப்போது ஆனந்தின் கைகள் அவளது தோளை அல்லது இடையை பற்றினால் அவளது உடல் அதிர்வதை தவிற்க முடியாமல் தவித்தாள். சில தினங்களில் ஆனந்த் தன் நண்பன் மூலம் (அவன் பெயரில்) ஒரு ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வி வாங்கினான். அதன் பிறகு அவளது இம்சை வெகுவாகக் குறைந்தது.

அவள் திட்டமிட்டு இருந்த படி செல்ஃபோன், ஐ-பாட் மற்றும் உடைகள் என வாங்கத் தொடங்கினாள்.

ஆனந்த்துடன் மாலை வேளைகளில் காஃபி ஷாப்புகளுக்கும் பல உணவகங்களுக்கும் செல்வது வழக்கமானது. பல முறை அவளது அறைத் தோழி ரெமியும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கதையளப்பதும் வழக்கமானது.


ஒரு நாள் டின்னருக்கு ஆனந்த்துடன் சென்று இருந்தபோது

ஆனந்த், "சோ, இப்போ ஜாலியா இருக்கியா?"

ப்ரீதி, "ம்ம்ம் எஸ். எதைப் பத்தியும் கவலைப் படாம ஜாலியா இருக்கேன்"

ஆனந்த், "இன்னும் எவ்வளவு நாளைக்கு இதே மாதிரி இருக்கப் போறே?"

சட்டென அவன் கேள்வியின் ஆழத்தை புரிந்த ப்ரீதி மௌனமானாள்.

ஆனந்த், "லைஃப் முழுக்கவா?"

ப்ரீதி, "தெரியலை"

ஆனந்த், "அப்படின்னா?"

ப்ரீதி, "எவ்வளவு நாள்ன்னு தெரியலை. ஆனா முன்னே இருந்ததுக்கு இது பெட்டர். சோ. ஐ திங்க் வேற வழி இல்லைன்னா லைஃப் முழுக்க"

ஆனந்த், "அது என்ன வேற வழி இல்லைன்னா?"

ப்ரீதி, "தெரியலை"

ஆனந்த், "எதுக்கு மழுப்பறே? சரி, இதை சொல்லு. உன் லைஃபின் முக்கியமான குறிக்கோள் என்ன? What are your life time goals?"

ப்ரீதி, "எல்லாம் சந்தோஷமா இருக்கணும். மத்தபடி பெரிசா கோல்ஸ் ஒண்ணும் இல்லை"

ஆனந்த், "What do you mean? உன் ப்ரொஃபெஷ்ஷனில் எதானும் சாதிக்கணும், இல்லை மேல படிக்கணும். அப்படின்னு எதுவும் இல்லையா?"

ப்ரீதி, "மேல படிக்க ஆசைதான். ஆனா இவ்வளவு வயசானப்பறம் படிக்க முடியுமான்னு தெரியல. ப்ரொஃபெஷனல்லயும் சாதிக்கணும்ன்னு நேக்கு எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் என் ப்ரொஃபெஷ்ஷன் நேக்கு சம்பளம் கொடுக்கற ஒரு ஸோர்ஸ். அதுக்கு நான் நாள் முழுக்க உழைக்கணும். அவ்வளவுதான்"

ஆனந்த், "அப்ப வாழ்க்கையில் என்னதான் செய்யணும்ன்னு இருக்கே?"

ப்ரீதி, "மத்தவா எல்லார் மாதிரி இருக்கணும்ன்னு இருந்தேன். I don't think that is going to happen"

ஆனந்த், "மத்தவா எல்லார் மாதிரின்னா? கல்யாணம் பண்ணிண்டு குடும்பம் நடத்தணும்ன்னா?"

ப்ரீதியின் ஆமென்ற தலையாட்டலிலும் அவள் கண்களிலும் அவள் மனதுக்குள் இருந்த தனிமை பறைசாற்றியது.

ஆனந்த், "சரி, ஏன் அது நடக்காதுன்னு சொன்னே?"

ப்ரீதி, "அம்மாவுக்கு நேக்கு கல்யாணம் செஞ்சு வெக்கறதில் இன்ட்ரெஸ்ட் இல்லை"

ஆனந்த், "உங்க அம்மாவை இதில் எதுக்கு இழுக்கறே? உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கோல்லியோ?"

ப்ரீதி, "நேக்கு மட்டும் இன்ட்ரெஸ்ட் இருந்தா?"

ஆனந்த், "ப்ரியாவுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு?"

ப்ரீதி, "அவளோட சீனியரை லவ் பண்ணினா. அதனால"

ஆனந்த், "So what stops you from finding your match?. நீயும் உனக்கு பிடிச்சவனை செலக்ட் பண்ணிக்கோ. உன்னை யார் தடுக்கப் போறா?"

ப்ரீதி, "நேக்கு அதெல்லாம் ... என்னால அந்த மாதிரி எல்லாம் ... I just don't know Anand" என்று அவனை பரிதாபமாகப் பார்த்தாள்.

ஆனந்த் குறும்புச் சிரிப்பு மாறாமல், "சரி, லவ் மேரேஜ் வேண்டாம் அரேஞ்ச்ட் மேரேஜே பண்ணிக்கோ. எப்படின்னு நான் சொல்றேன். பாரத் மேட்ரிமனி மாதிரி வெப் சைட்டில் உன் அம்மா கொடுத்தா மாதிரி ஒரு இன்ஸர்ட் கொடுக்கலாம். நிச்சயம் நிறைய ஆஃபர் வரும். நீயே பாத்து செலக்ட் பண்ணு ஓ.கேவா?"

ப்ரீதி, "இல்லை"

ஆனந்த், "ஏன்?"

பதிலேதும் சொல்ல முடியாமல் சற்று நேரம் திணறிய பிறகு, "இன்னும் அஞ்சு ஆறு மாசத்துக்கு இப்போ இருக்கறா மாதிரி ஜாலியா இருந்துட்டு அப்பறமா யோசிக்கறேனே?"

ஆனந்த், "எப்போ? நான் திரும்ப யூ.எஸ் போனப்பறமா?"

ப்ரீதி ஏதும் பேசாமல் தலை குனிந்தாள்.

பிறகு பேச்சை மாற்ற ப்ரீதி, "உங்க ஊர்ல எல்லாம் இப்படி மேட்ரிமனி சைட்ல பாத்துதான் பண்ணி வெப்பாளா?"

ஆனந்த், "யூ.எஸ்ல இருக்கும் இன்டியன்ஸுக்கு நடுவே இந்த சைட் எல்லாம் கொஞ்சம் ஃபேமஸாயிண்டு வர்றது. ஆனா என்னை மாதிரி யூ.எஸ்லயே பிறந்து வளர்ந்தவா நிறைய பேருக்கு யூ.எஸ்ல இருக்கும் மத்தவா மாதிரி பண்ணிக்கத் தான் இஷ்டம்"

ப்ரீதி, "மத்தவா மாதிரின்னா எப்படி?"

ஆனந்த், "ம்ம்ம்... டேட்டிங்க் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுண்டப்பறம் ஒருத்தரோட ஒருத்தர் எல்லா விதத்திலும் நல்லா பழகி நல்லா தெரிஞ்சுண்டு அதுக்கு அப்பறம் கல்யாணம் செஞ்சுக்க"

ப்ரீதி, "எல்லா விதத்திலும்ன்னா?"

ஆனந்த், "In every way"

ப்ரீதி, "You mean including sex?"

ஆனந்த், "Of course including sex"

ப்ரீதி, "சீ .. அப்பறம் பிடிக்கலைன்னா விட்டுவாளா?"

ஆனந்த், "ஆமா"

ப்ரீதி, "நீ இன்னும் டேட் எல்லாம் பண்ண ஆரம்பிக்கலையாக்கும்"

ஆனந்த், "ஓ! நான் நிறைய டேட் பண்ணி இருக்கேன். But I didn't want to be exclusive with anyone"

ப்ரீதி, "அப்பறம் எதுக்கு டேட் பண்ணினே?"

ஆனந்த், "ஜாலியா"

ப்ரீதி, "சோ. அய்யாவுக்கு எல்லாத்துலும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்காக்கும்"

ஆனந்த், "யூ மீன் செக்ஸ்? அதில எக்ஸ்பீரியன்ஸ் நான் காலேஜில் இருக்கச்சேயே வந்தாச்சு. பட், அது கேஷுவல் செக்ஸ்"

ப்ரீதி, "அது என்ன கர்மம்?"

வாய்விட்டு சிரித்த ஆனந்த், "கேஷுவல் செக்ஸ் அப்படின்னா ஒரு பொண்ணும் ஆணும் ஜாலியா செய்யறது. கேர்ல் ஃப்ரெண்ட் பாய் ஃப்ரெண்ட் அப்படின்னு இருக்கணும்ன்னு இல்லை. கேர்ல் ஃப்ரெண்ட் பாய் ஃப்ரெண்ட் அப்படின்னு இருந்தாலும் எக்ஸ்க்லூசிவ் ரிலேஷன்ஷிப் (exclusive relationship) அப்படின்னு இல்லைன்னா அவா மத்தாவாகூடவும் செய்யலாம். கேர்ல் ஃப்ரெண்டோ பாய் ஃப்ரெண்டோ அதை அப்ஜெக்ட் பண்ண மாட்டா"

ப்ரீதி, "இந்த கர்மம் எல்லாம் பண்ணினப்பறம் எப்படி கல்யாணம் செஞ்சுக்குவா?"

ஆனந்த், "கல்யாணம் ஆனப்பறம் ஒருத்தருக்கு ஒருத்தர் கமிட்டடா இருப்பா"

ப்ரீதி, "உனக்கு வரப்போறவொ அப்படி இருந்தா உனக்கு ஓ.கேவா?"

ஆனந்த், "ஓ.கே மட்டும் இல்லை. In fact I want her to be experienced in sex. அவளுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாத்தான் இன்னும் ஜாலியா இருக்கலாம். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாத்தையும் நானே கத்துக் கொடுக்கணும்"

ப்ரீதி, "சீ ..."

ஆனந்த், "என்ன சீ? கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேற யாரோடயும் செய்யப் போறது இல்லை. அதே மாதிரி அவளும் இருக்கப் போறா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜாலியா இருந்தா என்ன?"

ப்ரீதி, "ஜாலியா இருக்க ஒரு லிமிட் வேண்டாம்? சே, கொஞ்சம் கூட கன்ட்ரோல் இல்லாம ..."

ஆனந்த், "எதுக்கு கன்ட்ரோல் பண்ணனும்?"

ப்ரீதி, "அது பாவம் பண்ணறா மாதிரி"

ஆனந்த், "எது? செக்ஸ்ஸா? கல்யாணத்துக்கு அப்பறமா செஞ்சா அது புண்யமா?"

ப்ரீதி, "ஆமா. that is pro-creation"

ஆனந்த், "சோ, குழந்தை பெத்துக்கணும்ன்னா மட்டும்தான் செய்யணுமா?"

ப்ரீதி, "அப்படி இல்லை ... "

ஆனந்த், "பின்னே?"

ப்ரீதி, "என்னால நீ சொல்றதை ஒத்துக்க முடியாது"

ஆனந்த், "ப்ரீதி, செக்ஸ்ஸும் ஒரு ஃபன் தான். லைஃபில் முக்கியமான ஃபன். கல்யாணத்துக்கு முன்னாடி செய்யணும்ன்னு அவசியம் இல்லை. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் புருஷனுக்கும் ஆம்படியாளுக்கும் நடுவே நிறைய செக்ஸ் இருந்தாத்தான் லைஃப் நன்னா இருக்கும். இதை ஒத்துக்கறியா?"

ப்ரீதி, "ம்ம்ம் .. தெரியலை"

ஆனந்த், "தெரியும் ஆனா ஒத்துக்க மனசு வரலை. செக்ஸ் அப்படின்னா ஏதோ பாவம்ன்னு நினைச்சுண்டு இருக்கே"

ப்ரீதி, "ஆமா மத்தவா கூட செஞ்சா அது பாவம் தான்"

ஆனந்த், "அது கல்யாணம் ஆனப்பறம்"

ப்ரீதி, "அதுக்கு முன்னாடியும்தான்"

ஆனந்த், "அதுக்கு முன்னாடி மத்தவா யாரு நம்மவா யாருன்னே தெரியாதே"




ப்ரீதி, "எப்படியோ போ. ஆனா ... "

ஆனந்த், "ஆனா?"

ப்ரீதி, "இனிமேலயும் அந்த மாதிரிதான் இருக்கப் போறியா?"

ஆனந்த், "அந்த மாதிரின்னா?"

ப்ரீதி, "எல்லாரோடயும் செக்ஸ் வெச்சுண்டு?"

ஆனந்த், "எனக்கு இன்னும் நாலு மாசம் தான் டைம். திரும்ப போன உடனே கல்யாணம் அப்படின்னு அம்மாவும் அப்பாவும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கா. அது வரைக்கும் தான் நான் ஜாலியா இருக்க முடியும்"

ப்ரீதி, "பொண்ணு? அவாளே செலக்ட் பண்ணிட்டாளா?"

ஆனந்த், "No way! At best they can suggest. ஆனா செலக்ட் பண்றது நான்தான்"

ப்ரீதி, "எப்படி உங்க யூ.எஸ்ல மத்தவா செலக்ட் பண்றா மாதிரியா?"

ஆனந்த், "முடிஞ்ச வரைக்கும் அந்த மாதிரித்தான்"

ப்ரீதி, "இங்கே இருந்துண்டு சாருக்கு எப்படி அந்த மாதிரி செய்யறதா உத்தேசம்?"

ஆனந்த், "இங்கே இருந்தா என்ன? நீ எங்கே இருக்கே தெரியுமா? பேங்களூர். இங்கே எல்லாம் முடியும்"

ப்ரீதி, "இங்கே அந்த மாதிரி கர்ல்ஸ் எப்படிப் பட்டவான்னு நேக்கு நன்னா தெரியும். அந்த மாதிரி எவ பின்னாடியாவுது நீ போனே. அப்பறம் நடக்கறதே வேற"

ஆனந்த், "சரி, நீயே சஜ்ஜஸ்ட் பண்ணு யார் சரியா இருப்பான்னு. அதே மாதிரி நான் உனக்கு சஜ்ஜஸ்ட் பண்றேன். ஓ.கேவா?"

ப்ரீதி, "ஒண்ணும் வேண்டாம். இங்கே இருக்கற வரைக்கும் ஜாலியா மட்டும் இருந்துட்டு அங்கே போனப்பறம் நீ வேணுன்ற கர்மம் எல்லாம் பண்ணி செலக்ட் பண்ணிக்கோ"

ஆனந்த், "சரி, அப்படின்னா ஜாலியா டேட்டிங்க் மட்டும் பண்ணவா?"

ப்ரீதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடுத்தது.

ப்ரீதி, "ஒண்ணும் வேண்டாம்"

ஆனந்த், "ஓ! நான் மட்டும் ஜாலியா இருக்கறது நோக்கு பொறுக்கலை. சரி, நீயும் ஜாலியா டேட்டிங்க் பண்ணு"

ப்ரீதி, "Anand! I am going to kill you"

ஆனந்த், "But why?"

ப்ரீதி, "இப்படி யோசிச்சுப் பாறேன்? Preserving virginity. கல்யாணம் வரைக்கும் ரெண்டு பேரும் கன்னி கழியாம இருக்கறதும் ஒரு ஃபன் தான். I mean கல்யாணத்துக்கு அப்பறம் முதல்ல செய்யறச்சே"

ஆனந்த், "ஃபன்னா? சான்ஸே இல்லை! அது பொம்மனாட்டிக்கு ஃபன் இல்லை. மொதல் தரம் வலிக்கும். அட்லீஸ்ட் ஹஸ்பண்டுக்கு தெரிஞ்சு இருந்தா ஃபர்ஸ்ட் நைட் ஒரு அளவுக்கானும் நல்லா இருக்கும். ரெண்டு பேருக்கும் அனுபவம் இருந்தா ஃபர்ஸ்ட் நைட் சூப்பரா இருக்கும்"

ப்ரீதி, "அதுக்குப் பேர் ஃபர்ஸ்ட் நைட் இல்லை"

ஆனந்த், "கல்யாணத்துக்கு அப்பறம் அதுதானே ஃபர்ஸ்ட் நைட்? Any way, I have never had sex with a virgin so far. இது வரைக்கும் கன்னி கழியாத பொண்ணோட நான் பண்ணினது இல்லை"

ப்ரீதி, "சீ கர்மம் கர்மம்"

ஆனந்த், "Hey, அதனால்தான் எனக்கு ஈசியா கத்துக்க முடிஞ்சுது. இல்லைன்னா ரெண்டு பேருக்கும் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சு இருக்காது. பாதிலயே விட்டு இருப்போம். அது எப்படின்னா ..."

ப்ரீதி, "போதும் உன் எக்ஸ்லனேஷன் ... ஆனா அந்த மாதிரி பொண்ணுங்க நோக்கு இங்கே கிடைக்குமான்னு தெரியலை. ஐ மீன் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் ஆன பொண்ணுங்க"

ஆனந்த், "ஏன், உன் ரூம் மேட்டே இருக்காளே?"

ப்ரீதி, "நோக்கு எப்படி தெரியும்?"

ஆனந்த், "அவளே நேக்கு ஹிண்ட் கொடுத்தா"

ப்ரீதி, "ஆனந்த், திஸ் இஸ் டூ மச்"

ஆனந்த், "ஹே, அவ வரேங்கறா உனக்கு என்ன?"

முகத்தில் கோபம் கொப்பளித்தாலும் ஆனந்த் கேட்ட கேள்விக்கு அவள் மனதில் பதில் இல்லை.

அறைக்குத் திரும்பியவள் ரெமியிடம், "ஏய், ரெமி ஆனந்தை நீ டேட்டிங்க்கு கூப்பிட்டியா?"

ரெமி, "டேட்டிங்க்ன்னு நான் சொல்லலை. அவனுக்கு வேணும்ன்னா எனக்கு ஓ.கேன்னு சொன்னேன்"

ப்ரீதி, "உனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளைக்கு துரோகம் பண்ணப் போறியா"

ரெமி, "ப்ரீதி, ஃபிலிப் ஒண்ணும் உத்தமன் இல்லை. துபாய்ல அவனுக்கு ரெண்டு கல்யாணம் ஆன கேர்ல் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னு அவனே சொல்லி இருக்கான். அப்படி யாரும் கிடைக்கலைன்னா எதாவுது ரஷ்யன் எஸ்கார்ட்டோட போவேன்னு சொல்லி இருக்கான்"

ப்ரீதி, "அவனுக்கு நீ இங்கே செய்யறது தெரிஞ்சா?"

ரெமி, "தெரிஞ்சா என்ன ஒண்ணும் ஆகாது. இன் ஃபாக்ட அவனோட ப்ரதர்கூடத்தான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்"

ப்ரீதி, "கர்மம் கர்மம். ஏண்டி இந்த மாதிரி இருக்கீங்க எல்லாம்?"

ரெமி, "எந்த மாதிரி? இந்தப் பீ.ஜிலயே எடுத்துக்கோ. உன்னை மாதிரி அம்மாஞ்சிகளை விரல் விட்டு எண்ணிடலாம். அதுவும் உன்னை மாதிரி அழகான அம்மாஞ்சிங்க ரொம்ப ரொம்ப கம்மி"

ப்ரீதி, "வாட் எவர். நீ இனிமேல் ஆனந்த் பக்கமே போகக் கூடாது"

ரெமி, "ஏன் உனக்கு வேணும்ன்னா நீயும் அவனோட போ. நம்ம ரெண்டு பேரில் யார் வேணும்ன்னு அவனே டிசைட் பண்ணட்டும்"

மேலும் அவளிடம் பேசாமல் குளியல் அறைக்குள் சென்றாள். அங்கு கண்ணாடி முன் நின்று இருந்தவள் சற்று நேரத்தில் அழுது குலுங்கினாள்.

'சே, அவன் என்ன பண்ணினா என்னன்னு ஏன் என்னால விட முடியலை'

அவள் மனத்தின் மறுபுறம், 'ஏன்னா நீ அவனை லவ் பண்ணறே'

ப்ரீதி, 'எஸ் ஐ லவ் ஹிம்'

மனது, 'அப்ப அவனண்ட சொல்லேன்'

ப்ரீதி, 'நான் சொன்னப்பறம் அவன் என்னை லவ் பண்ணலைன்னு சொன்னா என்னால அதை தாங்க முடியாது'

மனது, 'நிச்சயம் அவன் அப்படித்தான் சொல்லுவான். ஏன்னா அவனுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன பொண்ணுதான் வேணும். உன்னை மாதிரி கன்னிகா ஸ்த்ரீ இல்லை'

மேலும் அழுது குலுங்கினாள்.

சில நாட்களுக்குப் ப்ரீதி பிறகு ரெமியை அழைத்துக் கொண்டு சஃபீனா ப்ளாஸா என்ற ஷாப்பிங்க் செண்டருக்கு சென்று இருந்தாள். அவர்கள் வாங்க வேண்டி இருந்ததை வாங்கி முடித்த பிறகு வெளியில் வந்த போது ..

ப்ரீதி, "ஏய், ரெமி! பக்கத்து பில்டிங்க்ல எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் ஆஃபீஸ் இருக்கு. அவரைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணறியா? இல்லைன்னா நீயும் என்னோட வா"

ரெமி, "உனக்கு தெரிஞ்சவர்ன்னா வயசானவரா இருக்கும். நான் க்ரௌண்ட் ஃப்ளோரில் இருக்கும் கடைங்களை விண்டோ ஷாப்பிங்க் பண்ணிட்டு இருக்கேன். நீ போய்ட்டு வா"

ப்ரீதி ப்ரோக்கர் சுதர்சனத்தின் அலுவலகம் இருந்த தளத்தை அடைந்தாள். அவரது அலுவகலத்தை அடையுமுன் வாசலருகே ஆனந்த் அவருடன் பேசிக் கொண்டு இருப்பது கேட்டது.

சுதர்சனம், "ஏண்டா இன்னும் மூணு மாசத்தில் திரும்பி போறச்சே கம்பி எண்ணப் போறியா இல்லை கல்யாணம் பண்ணிக்கப் போறியா?"

ஆனந்த், "மாமா, என் மேல தப்பு இல்லைன்னு க்ளையண்டே எனக்கு ரைட்டிங்க்ல கொடுத்தாச்சு"

சுதர்சனம், "தெரியும் அக்கா சொன்னா. என்னமோ ப்ரெஸ்டீஜ் பத்மநாபன் மாதிரி அதைப் பண்ண மாட்டேன் இதைப் பண்ண மாட்டேன் சொல்லிண்டு இருந்தியோன்னோ? அதான் சும்மா கொஞ்சம் சீண்டினேன்"

ஆனந்த், "Anyway, I messed up once. Thanks to Dad's intervention I got away. இனி அந்த மாதிரி நடக்கச் சான்ஸே இல்லை. திரும்பிப் போனதும் நான் சொந்தமா ஒரு கன்ஸல்டிங்க் சர்வீஸ் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன். இப்ப க்ளையண்டுக்கு ஹெல்ப் பண்ணத்தான் இந்த ப்ராஜெக்ட்டில் இருக்கேன்"

சுதர்சனம், "அப்ப உன் கல்யாணப் ப்ளான் எவ்வளவு தூரத்தில் இருக்கு"

ஆனந்த், "ம்ம்ம் ... ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. திரும்ப போறச்சே எல்லாம் வொர்க் ஆயிடும்ன்னு நினைச்சுண்டு இருக்கேன்"

சுதர்சனம், "ஆனா நீ ஆயிரத்து எட்டு கண்டிஷன் வெச்சு இருந்தியே அதெல்லாம்?"

ஆனந்த், "அதெல்லாமும்தான்"

சுதர்சனம், "டேய், வேண்டாண்டா நெருப்போட விளையாடறா மாதிரி அது"

ஆனந்த், "அதெல்லாம் ஒண்ணும் இல்லை"

சுதர்சனம், "இதுக்கெல்லாம் அவசியமே இல்லை. அக்காவும் அத்திம்பேரும் வந்து பேசினா அடுத்த முஹூர்த்தத்தில் கல்யாணம் நடந்துடும்"

ஆனந்த், "ம்ம்ம்ஹூம் ... I want it to happen this way"

சுதர்சனம், "Then you better move fast ... "

ஆனந்த், "ஓ.கே. ஸீ யூ மாமா"

சுதர்சனம், "வந்ததில் இருந்து ரெண்டு தரம் தான் ஆத்துக்கு வந்தே. மாமி கேட்டுண்டே இருக்கா. எப்போ வரே?"

ஆனந்த், "ம்ம்ம் .. வரேன்" என்றபடி விடைபெற்று வெளியில் வந்து ப்ரீதியின் மேல் மோதினான்.

ஆனந்த், "ஹே, ப்ரீதி! ஷாப்பிங்க் போறேன்னு சொன்னே?"

ப்ரீதி, "இங்கே மிஸ்டர் சுதர்சனம் சாரைப் பாக்க வந்தேன். நோக்கு அவரை தெரியும் போல இருக்கு?"

அவள் அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டு இருப்பாள் என்று யூகித்த ஆனந்த், "தெரியுமாவா? அவர் என் மாமா. My mother's brother"



ப்ரீதி, "அப்பறம் ஏன் உன் தாத்தா யூ.எஸ்ல இருக்கர்?"

ஆனந்த், "அவர் யூ.எஸ்ல ஆறு மாசம் இங்கே ஆறு மாசம் இருப்பர். சரி அப்பறம் பேசலாம்" என்றபடி விடைபெற்றுச் செல்லுமுன்,

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை வாசலில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த சுதர்சனம், "இருடா. என்ன விஷயம் ப்ரீதி? எங்கே இந்தப் பக்கம்?"

ப்ரீதி, "ஒண்ணும் இல்லை அங்கிள். இங்கே பக்கத்தில ஷாப்பிங்க் வந்தேன். அப்படியே உங்களை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்"

சுதர்சனம், "ஓ! அப்படியா? உள்ளே வா ஒரு வா காஃபி சாட்டுட்டு போவியாம். நீயும் வாயேண்டா போய் என்ன கிழிக்கப் போறே?"

ப்ரீதி, "இல்லை அங்கிள் கீழே என் ரூம் மேட் வெய்ட் பண்ணிண்டு இருக்கா" என்று சொல்லச் சொல்ல ஆனந்தைப் பார்த்தாள்.

ஆனந்த், "நீ வேணும்ன்னா மாமாட்ட பேசிட்டு வா. நான் ரெமிக்கு கம்பனி கொடுக்கறேன்"

அவசரமாக ப்ரீதி "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு ஒண்ணா போலாம்"

ஆனந்த் சுதர்சனத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

சற்று நேரம் சுதர்சனத்திடம் நலம் விசாரித்த பிறகு ப்ரீதி விடைபெற்று ஆனந்துடன் வெளியே வந்தாள்.

அவள் மனதில் ஆனந்தைப் பற்றி ஆயிரம் கேள்விகள்.


No comments:

Post a Comment