Friday, April 24, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 4

அந்த வாரம் ஒரு நாள் இரவு வீடு திரும்பும் போது அவன் தாய் மரகதம் முகம் இறுகி மௌனம் காத்ததை கவனித்தான். அவனது களைப்பில் எதுவும் அவளிடம் கேட்கத் தோன்றவில்லை.

அடுத்த நாள் காலை எப்போதும் தனக்கு முன் நந்தகுமாருடன் புறப்பட்டுச் செல்லும் செல்வி அன்று வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்ததை கவனித்தான். பிறகு தான் தாயை அழைத்தான்.

சிவா, "அம்மா இன்னாம்மா செல்வி இன்னியும் ஆஃபீஸுக்கு கிளம்பலை?"

மரகதம், "அவ எப்பவோ கிளம்பறா உனக்கு இன்னாத்துக்கு? நீ உன் வேலையை பாத்துகினு போ"

'ஏன் அம்மா ஒண்ணியிம் இல்லாத்தத்துக்கு இப்படி கத்துது?' என்று எண்ணியபடி புறப்பட்டுச் சென்றான்.



அடுத்த நாள் காலை ..

சிவா புறப்படுவதற்கு முன்னமே செல்வி அவன் வீட்டை அடைந்தாள். எப்போதும் குடியிறுக்கும் புன்னகை காணாமல் போய் அவள் முகம் களையற்று இருந்தது.

அவள் அலுவலகத்துக்கு தன்னுடன் வருவதற்காக வந்து இருக்கிறாள் என்று உணர்ந்த சிவா, "இன்னா செல்வி டல்லாருக்கே? நந்தகுமார் அமெரிக்கா போயிட்டாரா?"

தலை குனிந்தவாறே செல்வி "ம்ம்ம்"

இவர்கள் உரையாடலைக் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வந்த மரகதம், "சிவா, இனிமேல் இவ சகவாசமே உனக்கு வேணாம். நீ மட்டும் போ" என்று கடுமையாகச் சொன்னாள்.

சிவா, "இன்னாம்மா சொல்றே? இன்னா ஆச்சு இப்போ?"

மரகதம், "நான் சொல்றத்தைக் கேளு" என்று உரக்கச் சொன்னபிறகு வீட்டுக்குள் சென்றாள்.

அவளைத் தொடர்ந்த சிவா, "அம்மா, இன்னாம்மா இது? எதுக்கு இந்த மாதிரி பேசறே?"

மரகதம், "நீ ரொம்ப அப்பாவிடா. அவ யாரையும் லவ் பண்ணலை. அவங்க அம்மா மாதிரி தொழில் பண்றா"

சிவா ஆத்திரத்தில், "அம்மா .. அவ செஞ்சது உனக்கு பிடிக்கலைன்னா அதுக்காக இந்த மாதிரி எல்லாம் பேசுவியா?" என்று கத்தினான்.

மரகதம், "டேய். நான் ஒண்ணும் சும்மா சொல்லலை. முந்தாநாள் நைட்டு நீ வரதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ரோட் முக்கில் ஒருத்தன் காரில் இவளைக் கூட்டிட்டு வந்தான். தண்ணி அடிச்சு இருந்து இருப்பா மாதிரி இருந்துச்சு. அவன் இவளைக் கைத்தாங்கலா கூட்டிட்டு வந்தான்"

சிவா, "இன்னான்னு விசாரிக்காம எதுக்கு இந்த மாதிரி பழி போடறே?"

மரகதம், "அது மட்டும் இல்லடா. கூட்டிட்டு வந்தவன் அவ அம்மாகிட்ட இன்னாமோ பேசிட்டு நின்னான். அப்பறம் பர்ஸை எடுத்து துட்டு குடுத்தான். அதான் நேத்து காலைல நீ அவளைப் பத்தி கேட்டப்போ வேணாம் போன்னேன். அதுக்கு அப்பறமா அம்மாளும் பொண்ணையும் மறுபடியும் எங்கே வெச்சு பாத்தேன் தெரியுமா? அவங்க அம்மா தொழில் பண்ணிட்டு இருந்தப்ப அடிக்கடி போற டாக்டரம்மா வூட்டாண்ட. ரெண்டு பேரும் என்னை கண்டும் காணாத மாதிரி போனாங்க. இப்ப இன்னா சொல்றே?"

சிவா வாயடைத்துப் போய் நின்று இருந்தான். அடுத்த கணம் கதவைத் திறந்து அழுது சிவந்த கண்களோட செல்வி உள்ளே வந்தாள்.

செல்வி, "ஆண்டி. இதை எங்க அம்மா கேட்டு இருந்தா போய் தூக்கு மாட்டிட்டு செத்து இருப்பாங்க. சத்தியமா சொல்றேன் சிவா நான் நடத்தை கெட்டவ இல்லை. ஆனா அந்த நந்தகுமாரை நம்பி ஏமாந்துட்டேன். அதான் ஆண்டி அன்னைக்கு பாத்தது" என்றபடி குலுங்கி அழுதாள்.

சிவா, "இன்னா ஆச்சு செல்வி?"

செல்வி, "அடுத்த நாள் ஊருக்குப் போறதால பார்டி கொடுக்கறாங்கன்னு ஆஃபீஸுக்கு வரச்சொன்னான். நான் போனப்ப யாரும் இல்லை. அவனும் அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன் மட்டும் இருந்தாங்க. மத்தவங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்கன்னு சொல்லி எனக்கு குடிக்க கோக் கொடுத்தான். குடிச்சுட்டு எனக்கு தலை சுத்தலா வந்துச்சு. மயக்கமான மாதிரி இருந்தேன். அப்ப" என்ற படி மேலும் அழுது குலுங்கினாள்.

சிவா, "நீ ஒண்ணும் சொல்லாதே செல்வி. எங்கே அந்த தேவடியாப் பையன்?"

செல்வி, "அவன் அடுத்த நாள் காலைலியே போயிருப்பான்"

மரகதம், "இதெல்லாம் மொதல்லயே யோசிக்க புத்தி இல்லை. முன்னே பின்னே தெரியாதவனை எல்லாம் லவ் பண்ணினா இப்படித்தான் சோரம் போய் வந்து நிக்கணும்"

செல்வி மேலும் கேவி அழுதாள்.

சிவா, "அம்மா. அதுவே கஷ்டத்தில் இருக்கு. நீ ஏம்மா இன்னும் கஷ்டப் படுத்தறே. அவளாவா போனா. அந்த திருட்டுப் பேமானிப் பய அவளை ஏமாத்தி கெடுத்துட்டான்"

செல்வி விசும்பல்களுக்கு இடையே, "நேத்து முழுக்க அம்மா நீ கெட்டுப் போலைன்னு எனக்கு சமாதானம் பண்ணினா. ஆனா இப்போ சொல்றேன் சிவா. நான் அன்னைக்கு நைட்டே செத்துத் தொலைஞ்சு இருப்பேன். எங்க அம்மாவை தனியா வுட்டுட்டு போவ மனசு வரலை" என்றாள்.

சிவா, "இன்னா நடந்துச்சு?"

செல்வி, "என்னை ஒரு ரூமுக்கு தூக்கிட்டுப் போய் ட்ரெஸ்ஸைக் கழட்டி ... " என்று மறுபடி அவமானம் தாங்காமல் அழுது குலுங்கினாள்.

அப்போது உள்ளே வந்த விஜயா, "ட்ரெஸ்ஸைக் கழட்டி அவளைக் கட்டிப் பிடிச்சுக் கசக்கிக் கடிச்சு இருக்கானுங்க. மேல எதுவும் செய்யறதுக்கு முன்னாடி அந்த புண்ணியவான் ஆஃபீஸுக்கு எதோ வேலையா வந்து இருக்கார். இவ முனகல் சத்தம் கேட்டு அந்த ரூமுக்கு வந்து இருக்காரு. அவனுக ரெண்டு பேரையும் அடிச்சு விரட்டிட்டு இவளை வூட்டுக்கு கூட்டியாந்தார். டாக்டர் கிட்டே கூட்டிட்டு போவச் சொல்லி பணம் கொடுத்தார்"

இன்னும் நம்பிக்கையற்ற குரலில் மரகதம், "ஒண்ணியும் நடக்கலைன்ன அப்பறம் டாக்டர் இன்னாத்துக்கு?"

செல்வி அழுது குலுங்கியபடி தன் சுடிதாரின் முன்பக்கத்தை ப்ராவுடன் சேர்த்துக் கிழித்தபடி "இதுக்குத் தான் டாக்டர்கிட்டே போனோம்" என்றாள்.

அவளது மார்பகங்கள் பல் பதிந்து கன்றிப் போய் இருந்தன.

சிவா தன் தாயை சுட்டெரிப்பது போல பார்த்தபடி, "அம்மா, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே" என்றதும் மரகதம் வாயடைத்து நின்றாள்.

பிறகு அங்கு இருந்த டவல் ஒன்றை எடுத்து செல்வியின் மேல் போத்தினான்.

சிவா, "பரவால்லை செல்வி. அதான் இன்னாமோ சொல்லுவாங்களே. தலைக்கு வந்ததுன்னு .. அந்த மாதிரி உட்டுடு. போய் வேற ட்ரெஸ் போட்டுட்டு வா. ஆஃபீஸுக்குப் போலாம்" என்று தாயையும் மகளையும் வழியனுப்பினான்.

தாயின் போக்கில் மனம் வெறுத்தவனாக வீட்டுக்கு வெளியில் வந்து செல்விக்காக காத்து இருந்தான்.


ப்ரீதி-ஆனந்த்

2004 இன் எல்லை

அடுத்த நாள் ப்ரீதி புதிய ப்ராஜெக்ட்டுக்கு மாற்றப் பட்டாள். அவளது டீம் லீடரான சுரேஷை சந்தித்தாள்.

சுரேஷ், "வெல்கம் டு திஸ் ப்ராஜெக்ட் ப்ரீதி. உன் பழைய டீம் லீட் உன்னைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்கான். வெங்கட் சார் கிட்ட இருந்தும் மெயில் வந்து இருக்கு. அவரைப் போய் மீட் பண்ணினே போல இருக்கு?"

ப்ரீதி, "ஆமாம் சார். எனக்கு ஆன்-சைட் போகணும். அதுக்கு சான்ஸ் கொடுக்கச் சொல்லி அவர்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணறதுக்கு மீட் பண்ணினேன்"

சுரேஷும் அவளது குடும்ப நிலையைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டான்.

ப்ரீதி, "இந்த் ப்ராஜெக்டில் போக சான்ஸ் கிடைக்கும் இல்லை சார்?"

சுரேஷ், "முதல்ல என்னை சார் மோர்ன்னு கூப்பிடறதை விடு. சுரேஷ்ன்னு பேர் சொல்லி கூப்டா போதும். அப்பறம் நீ கேட்ட கேள்வி ... எஸ் .. வெங்கட் சொன்ன மாதிரி நிச்சயம் சான்ஸ் இருக்கு. ப்ராஜெக்ட் நாம் தொடங்கி ரெண்டு வாரம் தான் ஆச்சு. ஆனா ஆனந்த் அங்கே மூணு மாசமா செஞ்சுட்டு இருக்கான். ஃபங்க்ஷனல் ஸ்பெக்ஸ், டிசைன் ஆர்கிடெக்சர் எல்லாம் அவன்தான் செஞ்சு இருக்கான். இப்போ ஆன்-சைட் கோ-ஆர்டினேஷனும் அவனையே பண்ண சொல்லி இருக்காங்க. தேவையான ஆளுங்களை நம்ம டீமில் இருந்து அங்கே வர வெச்சுக்க அவனுக்கு பர்மிஷன் கொடுத்து இருக்காங்க. சோ, நீ அங்கே போறது அவன் கையில் தான் இருக்கு. அவனுக்கு ஆள் வேணும்ன்னு இருந்தா நிச்சயம் கேப்பான். அப்படி கேட்டா உனக்குத்தான் அந்த சான்ஸ்."

ப்ரீதி, "உங்களுக்கு அந்த ஆனந்தை முதல்லயே தெரியுமா?"

சுரேஷ், "ம்ம்ஹூம் ... இந்த ப்ராஜெக்ட் கிக் ஆஃப்ஃபுக்கும் நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபருக்கும் நான் ரெண்டு வாரம் அங்கே போயிருந்தேன். அப்பத்தான் அவனை முதல் முதலா மீட் பண்ணினேன்"

ப்ரீதி, "அவர் எப்படி?"

சுரேஷ், "எக்ஸலண்ட் கை. வெரி ப்ரொஃபெஷனல். துளி கூட பந்தா இல்லாத ஆள். இதுல தமாஷ் என்னன்னா அவன் வருஷத்தில் ஒன்பது மாசம்தான் ஐ.டி வேலை செய்வானாம். பாக்கி நாளை டென்னிஸ் அப்பறம் ஃபோட்டோக்ராஃபிக்காக செலவு செய்வானாம். நேஷனல் ஜியாக்ரஃபி அவனுக்கு ஒவ்வொரு வருஷமும் எதாவுது அசைன்மெண்ட் கொடுக்குமாம். அவன் சொன்னதுக்கு அப்பறம் என்.ஜி சைட்டில் போய் பாத்தேன். அட்டகாசமா ஃபோட்டோ எடுத்து இருக்கான்"

ப்ரீதி அது தனக்குத் தெரிந்த ஆனந்த்தாகத்தான் இருக்கும் என்று உணர்ந்தாள்.

ப்ரீதி, "நான் இப்ப எந்த வொர்க்கை எடுத்துக்கணும்?"

சுரேஷ், "முதலில் உனக்கு ஒரு ஸ்மால் மாட்யூல் அசைன் பண்ணறேன். அதுக்கு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஃபுல் ப்ராஜெக்டையும் நீ புரிஞ்சுக்க ஏற்பாடு பண்ணறேன். வீக்லி ரிவ்யூ மீட்டின் ஆனந்த்கூட ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இருக்கும். அதில நீயும் கலந்துக்கோ"

ப்ரீதி, "ஓ.கே. மிஸ்டர் சுரேஷ்"

சுரேஷ், "மிஸ்டரும் வேண்டாம்ன்னு உனக்கு தனியா சொல்லணுமா. சுரேஷ்ன்னு மட்டும் கூப்பிட்டா போதும்"

இறுகிய முகத்தில் சிறு உற்சாகச் சிரிப்புடன் தனக்கு ஒதுக்கப் பட்ட புதிய இருக்கைக்குச் சென்றாள்.

வெள்ளி வரை தனக்குக் கொடுத்த வேலையை செவ்வனே செய்தாலும் அடிக்கடி வெள்ளியன்று ஆனந்துடன் பேசப் போகிறோம் என்ற எண்ணம் அவள் மனதில் ஒரு விதமான கிளு கிளுப்பை ஏற்படுத்தியது.




வெள்ளியன்று காலை பத்து மணிக்கு ரிவ்யூ மீட்டிங்க் தொடங்கியது

சுரேஷ், "குட் ஈவ்னிங்க் ஆனந்த்"

ப்ரீதி முதலில், 'எதுக்கு குட் ஈவ்னிங்க்?' என்று எண்ணிய மறுகணம் எதிர்முனையில் இருப்பவருக்கு அது இரவு நேரம் என்று உணர்ந்தாள்.

எதிர்முனையில் முன்னம் கேட்ட அதே குரல் இன்னமும் சற்று முதிர்ச்சி அடைந்து வசீகரமான கர கரப்புடன், "ஹாய் சுரேஷ். குட் மார்னிங்க்"

சுரேஷ், "என் கூட என் புது டீம் மெம்பர் ப்ரீதி சதாசிவமும் இருக்கா"

ப்ரீதி, "ஹல்லோ மிஸ்டர் ஆனந்த்"

ஆனந்த், "ஹே ஹே ப்ரீதி.. தட்ஸ் நைஸ் டு ஹியர். பட். மீட்டிங்கில் மிஸ்டர் எல்லாம் வேண்டாம். ப்ராஜெக்ட் நடுவில் சண்டை போடும் போது ஒவ்வொரு தடவையும் என் பேருக்கு முன்னால் மிஸ்டர் போட்டு என்னை திட்ட வேண்டி இருக்கும். பதிலா இப்போ இருந்தே வெறும் ஆனந்த்ன்னு மட்டும் கூப்பிட்டு பழகிக்கோ. ஓ.கே?"

ப்ரீதி, "ஓ.கே. ஆனந்த்"

ஆனந்த், "சுரேஷ், லெட் மீ ஃபர்ஸ்ட் டாக் டு ப்ரீதி. ஓ.கே?"

சுரேஷ், "நோ இஸ்ஸ்யூஸ் கோ அஹெட்"

ஆனந்த், "ஐ நோ ஒன் ப்ரீதி சதாசிவம் ஃப்ரம் கூனூர். ஆர் யூ ஹர்?"

அதற்கு முன்பு அவளுடன் பழகியவர் யாரேனும் சந்தோஷப் புன்னகையில் ஜொலித்த அவள் முகத்தை அப்போது பார்த்து இருந்தால் மயக்கமுற்று விழுந்து இருப்பர். நான்கு வருடத்துக்கு முன்னால் காணாமல் போன பொலிவு அவள் முகத்தில் தோன்றியது.

ப்ரீதி, "எஸ். நீங்க கோமளா மாமி பேரன் தானே?"

ஆனந்த், "எஸ் வெரி மச். அன்ஃபார்ச்சுனேட்லி மை பாட்டி இஸ் நோ மோர்"

ப்ரீதி, "தெரியும். தாத்தா எப்படி இருக்கார்?"

ஆனந்த், "நன்னா இருக்கார். இன்னமும் என்னோட டென்னிஸ் விளையாடிட்டு பியர் குடிச்சுட்டு இருக்கார்"

சுரேஷ், "சே, எனக்கு அப்படி ஒரு தாத்தா இல்லை"

ப்ரீதி எதிரில் இருந்த தொலைபேசிக் கருவியுடன் சேர்த்து சுரேஷையும் முறைத்தாள்.

ஆனந்த், "ஓ.கே. ப்ராஜெக்ட்டுக்கு வருவோம்" என்று தொடங்கி சுரேஷிடம் வெவ்வேறு கேள்விகளைக் கேட்டான். சுரேஷ் கொடுத்த பதில்களை அவன் உடனுக்குடன் அலசி ஆராய்ந்ததைக் கண்டு ப்ரீதி அவனது அறிவாற்றலில் மலைத்தாள். தன்னைப் பற்றி எதுவும் அவன் கேட்கவில்லையே என்ற சிறு ஆதங்கம் மனதில் இருந்தாலும், அதற்கு இது தருணம் அல்ல என்று உணர்ந்தாள். ஆனந்த் தனக்கு உதவுவான் என நம்பினாலும் தன் பங்குக்கு தன் வேலைகளை செவ்வனே செய்து அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இருக்க வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

மீட்டிங்க் முடியும் தருவாயில் ஆனந்த், "சுரேஷ் இஃப் யூ டோண்ட் மைண்ட். நீ லாக் ஆஃப் பண்ணிக்கோ. நான் ப்ரீதி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு டிஸ்கனெக்ட் செய்யறேன்"

சுரேஷ், "நோ இஸ்ஸ்யூஸ். பை ஆனந்த். ஓவர் டு யூ ப்ரீதி" என விடை பெற்றான்.

ஆனந்த், "சோ ப்ரீதி. கொஞ்ச நாள் வொர்க் பண்ணிட்டு அதுக்கு அப்பறமா எம்.ஈ பண்ணறதா இருக்கியா?"

ப்ரீதி, "எம்.ஈ எல்லாம் நான் பண்ணறதா இல்லை"

ஆனந்த், "பட் வொய்?"

ப்ரீதி, "எங்க வீட்டில் நான்தான் ஒரே எர்னிங்க் மெம்பர்"

ஆனந்த், "அப்படின்னா?"

ப்ரீதி, "எங்க அப்பா போயிட்டார்"

ஆனந்த், "எங்கே?"

ப்ரீதி, "ஹீ இஸ் நோ மோர்"

ஆனந்த், "ஓ மை காட். ஐ அம் சோ சாரி. அப்போ? எப்படி?"

ப்ரீதி தன் தந்தையின் மறைவைப் பற்றி சொன்னாள்.

ஆனந்த், "உனக்கு ஒரு தங்கை ஒரு தம்பி இல்லே?"

ப்ரீதி, "ம்ம்ம்"



ஆனந்த், "அவா ரெண்டு பேரும் என்ன பண்ணிண்டு இருக்கா?"

ப்ரீதி, "ப்ரியா பி.எஸ்ஸி தர்ட் இயர்ல இருக்கா. அடுத்த வருஷம் எம்.ஸி.ஏ சேரணும்ன்னு இருக்கா. ப்ரசாத் ப்ளஸ் ஒன்னில் இருக்கான். அவன் ஐ.ஐ.டி கோச்சிங்க் க்ளாஸ் எல்லாம் போயிண்டு இருக்கான்"

ஆனந்த், "வொய் யூ செட் ஒரே எர்ணிங்க் மெம்பர், ஆண்டிக்கு வேற இன்கம் எதுவும் இல்லையா?"

ப்ரீதி, "வீட்டு வாடகை கொஞ்சம் வர்றது."

ஆனந்த், "சோ, நீ வீட்டுக்கு பணம் அனுப்பறியா?"

ப்ரீதி, "ஆமாம்"

சற்று மௌனம் காத்த ஆனந்த், "டோண்ட் வொர்ரி. எல்லாம் சரியாயிடும். சீயர் அப். ஓ.கே?"

உடனே அவனிடம் ஆன்-சைட் வாய்ப்பைப் பற்றி கேட்க மனம் துடித்தாலும் அவள் இன்னமும் அந்தப் ப்ராஜெக்டை முழுவதும் புரிந்து கொள்ளவில்லை என உணர்ந்து அந்த எண்ணத்தை விடுத்தாள்.

ப்ரீதி, "ஓ.கே தாங்க்ஸ் ஆனந்த்"

ஆனந்த், "அடுத்த வாரம் பேசலாம். பை"

ப்ரீதி, "பை"


No comments:

Post a Comment