Wednesday, April 29, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 18

செல்வி - சிவா

அன்று சனிக்கிழமை பகல் இரண்டு மணியளவில் அல்சூர் ஃபேம் லிடோ மல்டிப்ளெக்ஸ் வாசலில்

சிவா, "செல்வி, ரெஸ்ட்ராண்டல எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு செல்வி. சொன்னா கேளு. படம் பாக்கலாம்ன்னு வந்தோம். பாத்தாச்சு. தைக்கக் கொடுத்த உன் சுடிதாரை இன்னொரு நாள் வந்து வாங்கிக்கலாம் இல்ல?"

செல்வி, "அப்படின்னா எனக்கு லஞ்ச் வாங்கிக் கொடுக்க மாட்டியா?"

சிவா, "அதுக்கும் உன் சுடிதார் வாங்கறதுக்கும் இன்னா சம்மந்தம். லஞ்ச் சாப்பட எதுக்கு கமர்ஷியல் ஸ்ட்ரீட் போவணும்?"

செல்வி, "நான் சுடிதார் தைக்கக் கொடுத்த இடத்துக்குப் பக்கத்திலதான் வுட்டீஸ் இருக்கு. வெஜிடேரியன் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். நீ அங்கே போயிருக்கியா?"



சிவா, "ம்ம்ம்ஹூம் ... "

செல்வி, "நாம் நாளைக்கு ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கணும்ன்னா நாலு ரெஸ்டாரண்டுக்கு போய் பாத்தா புதுசா எதாவுது கத்துக்க முடியும் இல்லையா?"

சிவா, "ஓ! அதான் மேடம் ஒவ்வொரு தடவை வெளில வரப்பவும் ஒரு புது ரெஸ்டாரண்டுக்குப் போலாம்ன்னு சொல்றியா? சரி வா போலாம்.. இன்னா? காசிராம் சார் கொஞ்சம் டென்ஷன் ஆவாரு. போய் சமாதானம் சொல்லணும்"

செல்வி, "கவலையே படாதே. நான் சொல்லித்தான் அவர் உனக்கு இன்னைக்கு ஹாஃப் டே லீவ் கொடுத்தார்"

அங்கு இருந்து புறப்பட்டு கமர்ஷியல் வீதியை அடைந்தவர்கள், அதன் குறுக்குத் தெரு ஒன்றில் சிவா ஸ்கூட்டரை நிறுத்த செல்வி, "இங்கே லெஃப்ட் சைடில் அந்தக் கடை இருக்கு. ரைட் சைடில் வுட்டீஸ். நான் போயிட்டு வந்துடறேன். வெய்ட் பண்ணு"

சிவா, "சரி, நான் ஒரு தம் அடிக்கறேன்"

செல்வி, "ம்ம்ம் .. உனக்கு அது ஒரு சாக்கு. போதும் ஒண்ணோட நிறுத்திக்கோ"

சிவா, "அப்ப சீக்கரம் வா"

செல்வி, "சரி " என்றபடி ஓடினாள்.

சட்டைப் பையில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன் தன்னிடம் தீப்பெட்டி இல்லாததை உணர்ந்து அந்தத் தெருவின் மூலையில் தனக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டு இருந்தவரை அணுகினான்.

அருகில் சென்றவன், "Can you give me light please?" என்கவும் ஆனந்த் திரும்பினான்.


நால்வரும் ...

சிவா, "ஓ! மிஸ்டர் ஆனந்த். எப்படி இருக்கீங்க?"

ஆனந்த், "I am fine. நீங்க சிவா இல்லையா?"

சிவா, "எங்கே இங்கே நின்னுட்டு இருக்கீங்க?"

ஆனந்த், "தலைவிதி! வெய்ட் பண்ணுடான்னு சொல்லிட்டு பக்கத்தில் இருக்கும் சுடிதார் கடைக்கு அம்மையார் போயிருக்காங்க. நீங்க?"

சிவா, "எனக்கும் அதே தலைவிதிதான் சார்! அதே கடைக்குத்தான் என் ஆளும் போயிருக்கு!!"

இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

சிவா, "சார் நானே உங்களை வந்து பாக்கணும்ன்னு இருந்தேன்"

ஆனந்த், "என்ன விஷயம்?"

சிவா, "எங்கேயாவுது உக்காந்து பேசலாமா. உங்களுக்கு டைம் இருக்கா?"

ஆனந்த், "ஆக்சுவலா நானும் ப்ரீதியும் பக்கத்தில் வுட்டீஸ்ல சாப்பிட்டுட்டு மூவி போலாம்ன்னு இருக்கோம் ... "

சிவா, "நானும் செல்வியும் அங்கேதான் சாப்பிடறதா இருக்கோம். இன்னைக்கு உங்களுக்கு லஞ்ச் நான் வாங்கிக் கொடுக்கறேன். ஓ.கே?"

ஆனந்த், "என்ன சார்? சும்மா வுட்டீஸ்ல லஞ்ச் வாங்கிக் கொடுத்து கணக்கை செட்டில் பண்ணிடலாம்ன்னு பார்க்கறீங்களா? நான் நீங்க வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் வாங்கிக் கொடுப்பீங்கன்னு இல்லை நினைச்சேன்?"

சிவா, "சார், நான் வேலை செய்யும் ரெஸ்டாரண்ட் உங்க ரெஸ்டாரண்ட்டுன்னு நினைச்சுக்கோங்க. எப்ப வேணும்ன்னாலும் அங்கே நீங்க வரலாம். ஆனா நீங்க நான்-வெஜ் சாப்பிடுவீங்களா?"

ஆனந்த், "ஜோரா!"

சிவா, "அப்படின்னா, நீங்க எப்ப எங்க ரெஸ்டாரண்டுக்கு வந்தாலும் பே பண்ணாதீங்க"

ஆனந்த், "Come on Siva. I was just joking"

அதற்குள் மகளிர் இருவரும் பேசியபடி அவர்களிடம் வந்தனர்.

ப்ரீதி, "ஆச்சா! யூ.எஸ்ல இருந்துண்டு எப்படி நீ சிகரெட் பிடிக்க கத்துண்டே? You have to stop it soon"

செல்வி, "நானும் சிவாட்ட அதைத்தான் சொன்னேன்"

ஆனந்த், "எனக்கு எங்க தாத்தா கத்துக் கொடுத்தார். நீங்க எப்போ ஆரம்பிச்சீங்க சிவா?"

செல்வி, "அய்யா கொஞ்ச நாள் காதல் தோல்வில இருந்தார். அப்போ வந்தது இந்தப் பழக்கம்"

சிவா, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். சும்மா ரீல் விடறா. அப்பப்ப குடிப்பேன். சரி, வாங்க சாப்பிடப் போலாம்"

கீழே இருக்கும் செல்ஃப் சர்வீஸ் பகுதியை விடுத்து மேல் தளத்திற்கு வந்து நால்வரும் அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்தபின் ...

ஆனந்த், "என்ன சிவா எதுக்கு என்னை பார்க்கணும்ன்னு இருந்தீங்க?"

சிவா, "முதல்ல சாப்புடுங்க சார். அப்பறம் பேசலாம்"

உணவருந்தி முடித்து ஆடவர் இருவரும் காஃபி மற்றும் மகளிர் இருவரும் மில்க் ஷேக் அருந்திக் கொண்டு இருக்கும்போது ..

சிவா, "அன்னைக்கு செல்வியை அவனுக் கிட்டே இருந்து காப்பாத்தினீங்க இல்லையா?"

ஆனந்த், "ஆமா."

சிவா, "அதில ஒருத்தன் யூ.எஸ்ஸுக்குப் போயிருந்தான். போன வாரம் திரும்பி வந்து இருக்கான்"

ஆனந்த், "தெரியும் .. "

ப்ரீதி, "யாரு?"

ஆனந்த், "நந்தகுமார். டெஸ்டிங்க் டீம் மெம்பர்"

ப்ரீதி, "ஓ! ALSO விக்ரம் ஷாவோட ஜால்ரா"

ஆனந்த், "ம்ம்ம் நீங்க சொல்லுங்க சிவா"

சிவா, "அவன் செல்வியை போன வாரம் வழி மறிச்சு மிரட்டினான். இவ எதிர்த்துப் பேசினதும் உன் மானத்தை வாங்கறேன்னு சொல்லிட்டு செல்ஃபோனை எடுத்து எதையோ தேடி இருக்கான். அது செல்ஃபோனில் இல்லைன்னதும் அப்பறம் கவனிச்சுக்கறேன்னு சொல்லிட்டு பிச்சுகிட்டான்"

ஆனந்த், "செல்ஃபோனில் என்ன?"

சிவா, "தெரியலை சார். அன்னைக்கு நடந்ததை எதோ ஃபோட்டோ இல்லைன்னா வீடியோ எடுத்து வெச்சு இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க போனப்ப அவங்க செல்ஃபோனை வெச்சு படம் எடுத்துட்டு இருந்தாங்களா?"

சற்று நேரம் யோசித்த ஆனந்த், "My God! ப்ரீதி!! நான் அன்னைக்கு சொன்னேன் இல்லையா? அந்த கான்ஃபெரென்ஸ் ரூம்?"

ப்ரீதி, "ஆமா, அதில் விடியோ கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருந்ததுன்னு சொன்னே"

ஆனந்த், "சிவா, என் யூகம் சரியா இருந்தா இது தான் நடந்து இருக்கும். அந்த ரூமில் சுவத்தில் வீடியோ கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. அந்த கேமராவில் இருந்து ஒரு டிஸ்க் அல்லது செல்ஃபோன்ல உபயோகிக்கற மெமரி காட்ரில் பதிவாகும். நான் அந்த ரூமுக்கு உள்ளே போனப்ப நந்தகுமார் சுவத்தில் இருந்த ஒரு ஸ்லாட்டில் இருந்து ஒரு மெமரி கார்டை உருவிட்டு ஓடினான். அனேகமா அங்கே நடந்தது அதில் பதிவாகி இருந்து இருக்கும்."




சிவாவின் முகம் இறுக, செல்வியின் முகம் பேயரைந்ததைப் போல் ஆனது.

சிவா, "அப்படின்னா அதை வெச்சுட்டுத்தான் அவன் செல்வியை மிறட்டி இருக்கான். ஆனா அப்பறம் ஏன் அதை செல்ஃபோனில் தேடினான்னு புரியலை"

ஆனந்த், "அது தொலைஞ்சு போயிருக்கலாம். அல்லது வேற ஃபோனில் மாட்டி வெச்சு இருந்து இருப்பான்"

சிவா, "இப்போ என்ன செய்யறது சார்?"

ஆனந்த், "சிவா, செல்வி எதுக்கு பயப் படணும். அங்கே எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி நான் அங்கே போயிட்டேனே?"

செல்வி, "நீங்க வந்தப்ப நான் எந்தக் கோலத்தில் இருந்தேன்னு நீங்க பாத்தீங்கதானே சார்?"

ஆனந்த், "ஆமா, உன் ட்ரெஸ்ஸை அவன் கழட்டி இருந்தான். உன் விருப்பம் இல்லாம செஞ்சது நிச்சயம் பதிவாகி இருக்கும். தப்பு அவன் மேல தானே?"

ப்ரீதி, "ஆனந்த், இது ஒண்ணும் உன் யூ.எஸ் இல்லை. அந்த வீடியோவை எதாவுது போர்னோக்ரஃபி வெப் சைட்டில் உப்லோட் பண்ணினா அவ மானம் போகும்"

சிவா, "அமா சார்"

செல்வி, "அப்படி மட்டும் நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்"

ஆனந்த், "வெய்ட், வெய்ட்! ஒரு வேளை அப்படி வெப் சைட்டில் அப்லோட் பண்ணினா என்ன ஆகும். உனக்கு நிச்சயம் தெரியவரும் இல்லையா. இன் ஃபாக்ட் அவனே உன் கிட்டே சொல்லுவான். அந்த விடியோவில் அவனும் அவன் ஃப்ரெண்டும் இருந்தாங்க. அப்படி அவன் போட்டா நீயும் நானும் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினா அவன் நிச்சயம் மாட்டுவான். அது அவனுக்கும் தெரியும்."

சிவா, "அவங்க ரெண்டு பேர் முகத்தை எடிட்டிங்க் பண்ணி மறைச்சுட்டுப் போட முடியாதா?"

ஆனந்த், "முடியும். ஆனா அதுக்கான திறமை நந்தகுமாருக்கு இருக்கா அப்படிங்கறது சந்தேகமான விஷயம். அப்படி பண்ணறதுக்கும் நாள் ஆகும்"

ப்ரீதி, "செல்வி, முதல்ல அவன் கிட்டே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி அந்த வீடியோவில் அவன் முகம் பதிவாகி இருந்தா. நீ அவனை பதிலுக்கு மிறட்டு. Let us bye some time"

ஆனந்த், "எதுக்கு சொல்றே ப்ரீதி?"

ப்ரீதி, "நந்தகுமார் விக்ரம் ஷாவுக்கு ஒரு அடியாள் மாதிரி. நிச்சயம் விக்ரம் ஷா பண்ணின தில்லு முல்லுகளில் நந்தகுமாரும் உடந்தையா இருந்து இருப்பான். விக்ரம் ஷா உள்ளே போனா நந்தகுமாரும் உள்ளே போவான்னு நினைக்கறேன். நம் இன்வெஸ்டிகேஷன் எப்படி போகுதுங்கறதைப் பொறுத்து மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்"

சிவா, "வேணாம் மேடம். அவனை தனியா பிடிச்சு நாலு தட்டு தட்டினா கொடுத்துடுவான்"

செல்வி, "வேண்டாம் சிவா, வேற காப்பி எடுத்து வெச்சு இருந்தான்னா? ப்ரீதி மேடம் சொல்ற மாதிரி செய்யலாம். எப்படியும் அவன் இப்போ ஹாஸ்பெடிலில் இருக்கான்"

ஆனந்த், "அது எப்படி?"

சிவா, "அன்னைக்கு இவளை மிறட்டினதுக்கு அப்பறம் நான் அவன்கிட்டே பேசறதுக்காக சொல்லி அனுப்பி இருந்தேன். எனக்கு பயந்துட்டு என்னை அவாய்ட் பண்ணிட்டு வண்டியை எடுத்துட்டு வேகமா போய் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு. அவன் வரதுக்கு இன்னும் ரெண்டு வாரம் ஆவும்"

ஆனந்த், "அப்படின்னா இன்னும் ரெண்டு வாரத்துக்கு கவலை இல்லை. அவன் வந்ததுக்கு அப்பறம் சிவா, நீங்க அவன் கிட்டே பேச வேண்டாம். செல்வியே பேசி அந்த வீடியோவைப் பத்தின முழு விவரம் தெரிஞ்சுகட்டும். ப்ரீதி சொன்ன மாதிரி பதிலுக்கு மிறட்டட்டும். அப்படி அவன் எந்த வெப் சைட்டிலாவுது போட்டான்னா அவன் தான் போட்டான்னு சுலபமா கண்டு பிடிச்சுடலாம். போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்."

செல்வி, "அதுக்குள்ளே என் மானம் கப்பல் ஏறிடும்"

ப்ரீதி, "ஆனந்த், நான் அவ நிலைமையில் இருந்தாலும் அப்படித்தான் ஃபீல் பண்ணுவேன். அந்த நிலமைக்குப் போக விடக் கூடாது"

ஆனந்த், "சரி, இன்னும் நமக்கு டைம் இருக்கு. இன்னும் ரெண்டு வாரத்தில் நாங்க எந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்ன்னு சொல்றோம். அதுக்கு அப்பறம் என்ன செய்யறதுன்னு ப்ளான் பண்ணலாம். இப்போதைக்கு சிவா, செல்வி டோண்ட் வொர்ரி."

சிவா, "எனக்கும் சார் சொல்றதுதான் சரின்னு படுது செல்வி"

செல்வி, "சரி. ஆனா இந்த பிரச்சனை தீர்ற வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்காதே"

சிவா, "சரி"

ப்ரீதி, "ஏன் செல்வி? கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவன் இன்னும் தயங்குவான் இல்லையா?"

செல்வி, "உங்களுக்கு நந்தகுமாரைப் பத்தி தெரியாது. நைஸா பேசிட்டே முதுகில் கத்தியை ஏத்தறவன் அவன்"

ஆனந்த், "சோ! Tough luck Siva!! நீங்க கொஞ்ச நாள் பொறுத்துக்கணும்"

சிவா, "அது பரவால்லை சார். எங்க அம்மாதான் என்னை தொளைச்சு எடுக்கறாங்க"

ப்ரீதி, "உங்க அம்மாவுக்கு இந்த வீடியோ விஷயம் தெரிஞ்சா?"

சிவா, "ஒரு ப்ராப்ளமும் இல்லை. அவளோட அம்மா வேணும்ன்னா கொஞ்சம் கஷ்டப் படுவாங்க. ஆனா எங்க அம்மா அப்படியான்னு கேட்டுட்டு போய்கினே இருக்கும்"



ப்ரீதி, "அப்பறம் என்ன செல்வி? உன் குடும்பமும் உனக்கு சப்போர்ட்டுக்கு இருக்கும் போது எதுக்கு இப்படி பயப் படறே?"

செல்வி கண்கள் கலங்க, "எனக்கு அவமானம் வர்றதைப் பத்தி நான் பயப் படலை மேடம். இன்னும் கொஞ்ச நாளில் இவர் சொந்தமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போறார். அந்த சமயத்தில் என்னைப் பத்தி தப்பா பேச்சு வந்தா. இவருக்கு கஷ்டம். இவர் ஆரம்பிக்கப் போற பிஸினஸுக்கு பிரச்சனை."

சிவா, "ஐய்யே, மக்கு! ஏன் இந்த மாதிரி யோசிக்கறே? எவ்வளவோ பெரிய அவமானத்தை எல்லாம் தாங்கினு இருந்து இருக்கேன். இது துஜுபி செல்வி"

பதில் பேசாமல் செல்வி விசும்பினாள்.

ஆனந்த், "சிவா, You are really lucky to get someone like Selvi. பயப் படாதே செல்வி. நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிடலாம்"



No comments:

Post a Comment