Monday, April 20, 2015

அன்பே உன் பேர் என்ன ரதியோ? - அத்தியாயம் - 4

காயத்ரிக்கு காலையில் திருமணம் முடிந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. "கனவா இல்லை நிஜமா? விளையாட்டாக நினைத்தது வினை ஆகி விட்டதா?" அவளுக்கு புரியவில்லை. "இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வா தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வானோ? " என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

மாலையில் ரிசப்சன் என்று சொன்ன போது "என்ன இது என்னை கொஞ்சம்கூட ஓய்வு எடுக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது"என்று மனம் நொந்தாள்.

மாலை நீலாங்கரையை அடைந்தபோது கொஞ்சம் டென்சன் ஆக இருந்தது. செல்வாவை பார்த்தால், கொஞ்சம் கூட கவலைப்படுபவன் மாதிரி தெரியவில்லை.

அவள் தன்னை தானே கடிந்து கொண்டாள். "என்ன இது செல்வாவை அவன் இவன் என்று பேசுவது தவறு. என்னதான் இருந்தாலும் தாலி கட்டிய கணவன் அல்லவா யாராவது பார்த்தால்கூட தப்பாக கதை பரப்பி விடுவார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது" என்று தீர்மானித்தாள். இனி மேலாவது மரியாதையாக கூப்பிடனும் என்று முடிவு செய்தாள்.

6 மணிக்கு மேல் ரிசப்சன் களை கட்டியது. இதற்கு இடையில் பாட்டு கச்சேரி நடக்க, அனைவரும் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். 8 மணி அளவில் செல்வா நண்பர் செந்தமிழ் கலாட்டா செய்து செல்வாவை பாட வைக்க, காயத்ரிக்கோ நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யம்.



"செல்வாக்கு இந்த அளவுக்கு சங்கீதஞானம் உண்டா ? அவர் பாடிய பாடல் எனக்கு சமர்ப்பணம் என்று சொன்னது எனக்கு நம்ப முடியவில்லை. " மேடைக்கு திரும்பிய செல்வாவை பார்த்து என்ன சொல்வதென்று காயத்ரிக்கு புரியவில்லை. unbelievable, superbஎன்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே அவள் வாயிலிருந்து வந்தது.

அதற்குள் கோவையில் இருந்து வந்த செல்வாவின் நண்பர்கள் செல்வா-காயத்ரியை சூழ்ந்து விட அவர்களோடு செந்தமிழ் சேர்ந்துவிட அப்புறம் நடந்த கலாட்டாவை பற்றி சொல்லவும் வேண்டுமா?

செல்வாக்கு நண்பர்கள் அனைவரும் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் செந்தமிழ் மட்டுமே சென்னைவாசி மற்றும் நடுத்தர குடும்பம். செல்வா திருமணத்திற்கு வந்த அவனது௦ 10 நண்பர்களில் நான்கு பெண்களும் அடக்கம். பெண்கள் அனைவரும் செல்வாவை பார்த்து கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

அதிலும் ரேகா செல்வாவை பார்த்து "நீ என்னமோ லவ் பண்ண மாட்டேன், அம்மா அப்பா பாத்த பொண்ணதான் கட்டிக்குவேன்னு சொன்ன. இப்ப என்னடான்னா காதல் பண்ணிக்கிட்டு நிக்கிற?" செல்வா அசடு வழிய நின்றான். அவனை பார்த்து பரிதாபபட்ட காயத்ரி அவனை காப்பாற்ற எண்ணி, "இது லவ் கம் அரேஞ்ச்டு மேரஜ். எங்க ரெண்டு பேரோட அப்பாவும் நண்பர்கள். அதுனால இந்த கல்யாண ஏற்பாடு சீக்கிரம் முடிஞ்சுது."

பக்கத்தில் இருந்த கவிதா, "என்னடா நான் லவ் பண்ணுறேன்னு சொன்னப்ப உங்க அம்மாகிட்ட கேக்கனும்னு சொன்ன,
எனக்கு advice பண்ணுன, என்ன காயத்ரி இவன் என்ன பத்தி சொன்னானா?" என்று கேட்க, செல்வா "ஏண்டி கலாட்டா பண்ணுற?காயத்ரி சாரி இவ கிண்டல் பண்ணுறா. இவள் சொல்லுறது உண்மை இல்லை" என்று படபடப்பாக சொல்ல, கவிதா "இங்க பாருடா இபபவே பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆயிட்டான் " என்று கிண்டல் செய்ய, அந்த இடமே கலகலப்பாக ஆனது.

"செல்வா நாங்க நாலு பேரும் உன் பொண்டாட்டி கூட தனியா பேச போறோம், உன்ன பத்தி நெறைய சொல்ல வேண்டி இருக்கு",என்று சொல்லி விட்டு கவிதா, ரேகா மற்றும் மற்ற தோழிகளான வாசுகி, ஜீவாவுடன் கொஞ்சம் தள்ளி சென்று காயத்ரி உடன் பேச ஆரம்பித்தனர்.

கவிதா காயத்ரியிடம், "நாங்க சொன்னதெல்லாம் பொய். செல்வா எங்க நண்பன். நாங்க எல்லாரும் PSG ல ஒன்னா படிச்சோம்.என்னைக்குமே அவன் பொண்ணுங்கள்கிட்ட தப்பா நடந்துகிட்டது கிடையாது. என் கிளாஸ்ல இருக்குற இருபது பொண்ணுங்களும் ஒற்றுமையா இருக்கிற ஒரே விஷயம் அவனோட நட்பு தான். நான் கூட அவன லவ் பண்ணுறதா சொன்னபோது, அவன் சொன்னது இப்பவும் என்காதுல கேட்டுகிட்டே இருக்கு.


"கவிதா, எனக்கு காதலை விட நட்பு பெருசு. இப்பகூட நான் சொன்னா என்னோட அம்மாவும் அப்பாவும் காதல் கல்யாணத்துக்கு ஒதுக்குவாங்க. ஏன்னா நான் வீட்டுக்கு ஒரே பையன். ஆனா என்னோட கல்யாணத்த பத்தி அவங்களுக்கு பல கனவு இருக்கு. அத நான் கலைக்க விரும்பல. அதோட படிக்கிற வயசுல வர்ற காதல் சரியானது கிடையாது. இப்போ நான் என்னோட அப்பா காசுல படிக்கிறேன். எப்போ என் சொந்த கால்ல நிக்கிறேனோ அப்பதான் எனக்கு காதல் பண்ணுற தகுதி வந்து விட்டதா நினைக்கிறேன்.எனக்கு இப்போ அந்த தகுதி இல்லை. என்னை தப்பா நினைக்காதே. நீ எப்போவும் என் தோழியா இருக்கணும்."

அப்போ செல்வா சொன்னப்ப எனக்கு புரியல. அவன் கூட கோபபட்டு நான் ரெண்டு மாசம் பேசல. பிறகு அவனோட அந்த நல்ல குணம், நான் பேசாட்டினாலும் வலிய வந்து பேசும் தன்மை, எனக்கு புடிச்சு போச்சு. திரும்ப நாங்க நண்பர்கள் ஆயிட்டோம்.

நீங்க ரெண்டு பேரும் காதல் கல்யாணம் பண்ணிகிட்டதா எனக்கு செந்தமிழ் சொன்னான். அதுனால எனக்கு சந்தேகம் வந்தது,ஒரு வேளை அவனை பத்தி முழுக்க தெரிஞ்சுதான் நீ ஒத்துகிட்டியான்னு.
.

எதுவாக இருந்தாலும் சரி, அவன் ரொம்ப நல்லவன். அவனை புரிஞ்சிக்க. இதுதான் எங்க வேண்டுகோள். மத்தபடி உனக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம். எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு. எங்க எல்லாரோட வாழ்த்துக்களும் எப்போவும் உங்களுக்கு உண்டு. "

காயத்ரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி அக்கா என்று தலை அசைக்க, கவிதாவுக்கு தன்னை அக்கா என்று அழைத்த காயத்ரியை புடித்து போனது.


காயத்ரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. செல்வாவை பற்றி தான் நினைத்து எல்லாம் தவறாக ஆகி விட்டதே.அவனை பற்றி அவன் அப்பா அம்மா தவறாக நினைத்து விட்டார்களே. செல்வா மனது என்ன பாடுபடும். என்னை கட்டாயம் அவன் வெறுப்பான் என்று எண்ணி கண் கலங்கினாள்.


அனைவரும் செல்வா இருக்கும் இடம் வந்தபோது மற்ற நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த செல்வா, "என்ன கவிதா வத்தி வச்சிட்டியா?. இப்ப ரொம்ப சந்தோசமா? " என்று கிண்டலடித்தான் செல்வா.


"டேய் செல்வா, உங்க ஹனிமூனுக்கு ஊட்டில காடேஜ் புக் பண்ணி இருக்கோம். அடுத்த வாரம் முழுக்க. என்ன ஓகே வா"என்று கண் சிமிட்டினான், நண்பன் குரு.

மற்ற நண்பர்களும், "செல்வா நாங்க அவசரமா விமானத்ல வந்தோம் இப்போநைட் சேரன் - ல கிளம்பனும், நாங்க புறப்படுறோம்"என்றுவிடைபெற, கவிதா மட்டும் காயத்ரியிடம் வந்து காதோரமாக, "நீங்க ரெண்டு பேரும் ஊட்டி கிளம்பும்போது எனக்கு போன் பண்ணு, ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.உன் போன் நம்பர் சொல்லு என்று குறித்து கொண்டு, இந்தா என் போன் நம்பர்" என்று கொடுத்து விட்டு கிளம்பினாள்.


நடந்ததை அறியாத செல்வா, மனம் கலங்கி நின்ற காயத்ரியை பார்த்து, தன்னுடன் நடந்த கல்யாணத்தை பற்றி காயத்ரி கலங்குவதாக எண்ணிவிட்டான்.

இந்த இரு மனங்களும் நேர் கோடில் இணைவது எப்போது?

செல்வாவும் காயத்ரியும் ரிசப்சன் முடிந்து மூர்த்தி காஞ்சனா தம்பதியினர் வீட்டுக்கு கிளம்பினர். பார்வதி செல்வாவுடன் "இன்று இரவே முதல் இரவு ஏற்பாடு செய்திருப்பதாக" சொல்ல, "ஏன் அம்மா இன்று முழுக்க அலைச்சல் அதிகம் ஆயிற்றே, வேறொரு நாளில் வைத்து கொள்ளலாமே என்று கேட்க, இவர்கள் பேச்சை கேட்ட காஞ்சனா சிரிப்புடன் "இல்ல மாப்பிள்ளை இன்னைக்கு நல்ல நாள். இத விட்டா இன்னும் ஒரு வாரம் ஆகும். நல்லநேரம் 11 மணிக்கு தொடங்குது. இப்போ மணி 9 .30 வீட்டுக்கு போய்,நீங்க குளிச்சுட்டு ரெடி ஆனா சரியாய் இருக்கும்" என்று சொல்லி விட்டு, "அவனவன் முதல் இரவுக்கு அவசரப்படுவாங்க நம்ம மாப்பிள்ளை என்ன்னன்னா பயப்புடுறார்", என்று மனதுக்குள் சிரித்தாள்.

செல்வா காயத்ரி முதல் இரவுக்கு, இரண்டாவது மாடியில் இருந்த புதிய கெஸ்ட் ரூம் தயாராக இருந்தது. செல்வா படுக்கையில் உக்கார்ந்து காயத்ரிக்காக காத்து கொண்டு இருந்தான். அந்த ஏசி யிலும் அவனுக்கு வேர்த்தது. "இதை தள்ளி போடலாம் என்று நினைத்தால், முடியவில்லையே. சரி காயத்ரி வரட்டும் பேசி கொள்ளலாம்" என்று விட்டு விட்டான்.

சரியாக 11 மணிக்கு அழகு தேவதையாக அறைக்குள் நுழைந்தாள். நிறைய விஷயம் பேச வேண்டும் என்று நினைத்த செல்வா அவளை கண்டவுடன் அனைத்தையும் மறந்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான். குறைவான அலங்காரம், தலையில் மல்லிகை பூவுடன், பட்டு புடைவையில் இருந்து பருத்தி புடவைக்கு மாறியிரிந்த அழகு பாவையை மேலிருந்து கீழாக பார்த்து பரவசம் அடைந்தான்.

கையில் பால் சொம்புடன் இருந்த காயத்ரி, "என்ன செல்வா எவ்வளவு நேரம்தான் என்னை இப்படியே பாப்பிங்க. கால் வலிக்குது please" என்று சிணுங்கினாள்.

செல்வாவுக்கு சுயநினைவு வந்தது. "சாரி" என்று மன்னிப்பு கேட்டு, அவளை கட்டிலில் உட்கார சொல்ல, அவன் பால்சொம்பை தன்னிடம் இருந்து வாங்குவான் என்று எதிர்பார்த்து ஓரகண்ணால் செல்வாவை பார்த்தாள் .

செல்வா என்ன பேசவேண்டும் என்பதை மனதுக்குள் முடிவு செய்து விட்டு பேச ஆரம்பித்தான். "காயத்ரி நமக்கு காலத்தின் கட்டாயத்தினால் கல்யாணம் ஆகி விட்டது. உன்னோட நெலமை எனக்கு புரியிது. நம்ம ரெண்டு பேரோட பெற்றோர்களுக்காக நாம கணவன் மனைவிய நடிச்சுதான் ஆகணும். நாலு சுவத்துக்குள்ள நாம ரெண்டு பேரும் நண்பர்கள், ஆனா வெளியில் கணவன் மனைவி. இதை தொடருவோம்."


"ஒரு வேளை நமக்குள்ள ஒத்து போகலைனா, நாம கணவன் மனைவியாக தொடர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நாம பிரிஞ்சுடலாம். நான் உன்னை கட்டாயபடுத்த விரும்பலை. ஆனால் இப்போவும் எப்போவும் நாம நண்பர்களா இருக்கணும். இதுஉனக்கு புடிச்சுரிக்கா?" என்று கேட்க,

"என்ன இந்த மனுஷன் இப்படி இருக்கார், முதல் இரவு அன்னைக்கு பேசுற பேச்சா இது. பெரிய கண்டிசன் போடுறாரு. சரி, நாம இத சீக்கிரம் உடைக்கணும்" என்று முடிவு செய்து, "நீங்க சொல்லுறது சரி, நான் இப்போ என்ன பண்ணுறது? என்று பாவமாக கேட்க, பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாத செல்வா, சிரித்தபடி "நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். இப்போதைக்கு நீ இந்த கட்டில்ல படுத்துக்கோ, நான் கீழ படுத்துக்கிறேன்" என்று சொல்ல," இல்ல நீங்க மேல, நான் கீழ படுத்துக்கிறேன் please" என்று கொஞ்சலாக சொல்ல. "நோ, எனக்கு ஸ்கூல்ல படிக்கிறப்பவே தரையில் படுத்துத் தான் பழக்கம். அதுனால எனக்கு கஷ்டம் இல்ல", என்று சொல்லியபடி, ஒரு தலையணை மற்றும் போர்வையை எடுத்து தரையில் விரித்து படுத்தான்.

தூங்காமல் விழித்து கொண்டிருந்த காயத்ரியை பார்த்து தூங்கவில்லையா, என்று கேட்டதற்கு, பாவி இப்பிடி என் வயிதேரிச்சல கொட்டிக்கிரியே, என்று முனகி கொண்டு, "ஒன்னுமுள்ள தூக்கம் வர மாட்டேங்குது. எப்போவும் நான் என் அம்மா கையை பிடிச்சு தான் தூங்குவேன், இன்னைக்கு எப்படி தூங்க போறேன்னு தெரியல. நீங்க எனக்காக ஒரு பாட்டு பாடுவிங்களா" என்று கெஞ்சி கேட்க, செல்வா சரி ஒரு பாட்டு பாடுவேன், ஆனா கட்டாயம் தூங்கணும் என்று சொல்லி விட்டு பாட ஆரம்பித்தான்.

"மனைவி அமைவதல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று பாட, கன்னத்தில் கைவைத்து கொண்டு ரசித்து கேட்டாள் காயத்ரி.என்ன ஒரு இனிமையான குரல் என் கணவனுக்கு. நான் அதிஷ்டசாலி தான், என்று நினைத்து கொண்டே கேட்டாள்.

பாட்டு முடிய செல்வாவும் உறங்கி விட்டான். நெற்றியில் கையை மடக்கி வைத்து கொண்டு அவன் தூங்கிய காட்சி காயத்ரிக்கு பிடித்து இருந்தது. சத்தம் போடாமல் மெல்ல நடந்து வந்து அவன் அருகில் உட்கார்ந்து அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தாள்.



செல்வாவுக்கு திடீர் என்று விழிப்பு வந்தது. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்ததால் எழுந்தான். மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் பாத்ரூம் போய் விட்டு திரும்ப வந்து படுக்கலாம் என்று நினைத்து, அதற்கு முன்னால் காயத்ரி எப்படி தூங்குகிறாள் என்று அறிய ஆவல் கொண்டான்.

கட்டிலில் அவளை காணவில்லை, சுற்றுமுற்றும் தேடிய அவன் கண்கள் தரையில் நிலைத்து நின்றது. செல்வாவின் தலையணைக்கு அருகில் தரையில் ஒருகளித்து உறங்கி கொண்டிருந்தாள் காயத்ரி. போர்வை எதுவும் இல்லாததால் அவள் உடல் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது. தலையில் கைவைத்து கொண்டு " என்ன பெண் இவள் என் அருகில் உட்கார்ந்தவாரே தூங்கிவிட்டால் போல, சரி முதலில் கட்டிலில் உள்ள தலையணை மற்றும் போர்வையை எடுத்து போர்த்தி விடலாம் என்று எண்ணி அவளை முழுக்க போர்வை
கொண்டு போத்தி விட்டு, அருகிலே அவனும் படுத்தான். அவள் முகம் வட்டமான நிலவு போல் இரவுவிளக்கில் பளபளக்க,அவளை பார்த்து கொண்டே மனநிம்மதியுடன் உறங்கினான்.
காலை 5 . 30 மணி அளவில் எழுந்து தனது வழக்கமான யோகா, மற்றும் உடற் பயிற்சிகளை முடித்தான். மணி இப்போது 6 . 30 .கதவை தட்டும் ஓசை. அவனுக்கு புரிந்தது. காயத்ரியை எழுப்பினான். அரக்கபரக்க எழுந்தவளிடம், "இந்த பாரு உங்க அம்மா தான் கதவை தட்டுறாங்க, கொஞ்சம் உன்னோட புடவையை கலைத்து, மற்ற உடைகளையும் கலைத்து நமக்கு முதல் இரவு நடந்த மாதிரி நடந்து கொள். இங்கே நடந்தது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம், வருத்தபடுவார்கள். தயவுசெய்து நான் சொன்னபடி செய்".

தலையை அசைத்து அவன் சொன்னது போல், உடைகளில் சில மாற்றங்களை செய்தபின் கதவை திறந்தாள் காயத்ரி. அதற்குள் கட்டிலுக்கு தலையணை மற்றும் போர்வையை மாற்றி, கட்டிலில் படுத்து உறங்குவது போல் நடித்தான் செல்வா.

காஞ்சனா வாசலில் நின்று காயத்ரியை வெளியே அழைத்து "என்னடி எல்லாம் ஒழுங்காக நடந்ததா?" என்று கேட்க, ஆமாம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, வெளியில் இருந்த பாத்ரூமில் குளிக்க சென்று விட்டாள்.

செல்வாவும் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து உள்ளே இருந்த பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வர, அவனுக்கு காபி தயாராக இருந்தது. குடித்து முடித்த போது காயத்ரி ரூமுக்குள் நுழைந்து அவனுக்கு தேவையான உடைகளை வைத்துவிட்டு வெளியேற,புதிய உடைகளை மாற்றி கொண்டு வெளியே வந்தான் செல்வா. வாசலில் அவனுக்காக காத்து கொண்டிருந்த காயத்ரி, "கீழே வாங்க போகலாம், சீக்கிரம் சாப்பிடுங்க,
நம்ம (உங்க) வீட்டுக்கு போக வேணும்னு அம்மா சொன்னாங்க".
கீழே இறங்கி வந்தபோது அவனுக்கு முன்னே அவன் மாமனார், மாமியார், காயத்ரி தங்கை திவ்யா அனைவரும் காத்து கொண்டிருந்தனர். மூர்த்தி "என்ன மாப்பிளை சீக்கிரம் சாப்பிட்டு காயத்ரியோட நீங்க கிளம்புங்க, நாங்களும் உங்களோட வரலாம்னு பாக்கிறோம். உங்களுக்கு சம்மதம் தானே?"

"என்ன மாமா நீங்க இதுக்கெல்லாம் என்கிட்ட எதுக்கு கேக்கணும், வாங்க போகலாம்" என்று சொல்லி விட்டு, குட்மார்னிங் அத்தை, திவ்யா என்று சொல்லிவிட்டு, காயத்ரியுடன் காலை உணவுக்கு என்று உட்கார்ந்தான்.

அனைவரும் ஜம்புலிங்கம் வீட்டுக்கு செல்ல, அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. செல்வா காயத்ரியை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். செல்வா, மூர்த்தி, காஞ்சனா சோபாவில் உட்கார,காயத்ரிசெல்வாபக்கத்தில்நின்றுகொண்டிருந்தாள். பார்வதி அவளையும் திவ்யாவையும் உட்கார சொல்ல, பரவா இல்லை,அத்தை என்று சொல்லி நின்று கொண்டிருந்தாள் காயத்ரி.

பார்வதி சமையல் அறைக்கு செல்ல காயத்ரியும் அவள் பின்னாலே சென்று காபிபோட உதவி செய்தாள். பார்வதிக்கு தன் மருமகள் ரொம்ப அழகு என்பதில் பெருமை, இப்போதோ தனக்கு உதவி செய்வதில் ரொம்ப சந்தோஷம். கணவனுக்கு அருகில் உட்கார தயங்குகிறாள், என்னதான் படித்து இருந்தாலும், பண்பாடு மறக்காத பெண்ணாக இருக்கிறாள். இப்படி ஒரு மருமகள் கிடைக்க தவம் செய்து இருக்க வேண்டும் என்று ஆச்சர்யபட்டாள் பார்வதி.
.

காபி tray யை எடுத்து சென்று அனைவருக்கும் காபி கொடுத்தாள் காயத்ரி. பருத்தி புடைவையில் அழகு தேவதையாக மிளிர்ந்த காயத்ரியை காபியுடன் சேர்ந்து, கண்களால் பருகினான் செல்வா.

"டேய் செல்வா கவிதா இப்போ தான் போன் பண்ணினா, உன் செல்போன் தொடர்பு கிடைக்காததால என்னை கூப்பிட்டா,உன்னோட தேன்நிலவுக்கு ஊட்டில புக் பண்ணுதன கன்சல் பண்ணி குனூர் தாஜ் ஹோட்டல்ல ஒருவாரம் புக் பண்ணி இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும், சேரன்ல டிக்கெட் புக் பண்ணி உன்னோட மெயில் ஐடிக்கு அனுப்புச்சு இருக்காளாம்.காயத்ரியை அவளோட போன்ல கூப்பிட சொன்னா."

செல்வா "முதல் இரவே இன்னும் முடிய காணோம், இந்த நேரத்தில அது ஒன்னுதான் குறைச்சல்," என்று முனகி விட்டு,தனக்காக honey moon trip புக் செய்து கொடுத்திருக்கும் நண்பர்களுக்காக, அவர்களின் அன்புக்காக போகலாம் என்று முடிவு செய்து, காயத்ரியை பார்க்க அவள் சரி என்று கண்களால் சொன்னாள்.

காயத்ரி கவிதா உடன் பேசி எல்லா விவரங்களையும் வாங்கி கொண்டாள். இன்று இரவே கோவை கிளம்ப வேண்டும் என்றும்.நாளை ஒரு surprise கிபிட் காத்திரிப்பதாகவும் கவிதா சொன்னாள். இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொள்ள, காயத்ரியும் சரி என்று சொல்லி போனை துண்டித்தாள்.

இருவரும் ஒரு வாரத்துக்கு தேவையான உடைகளை பேக் செய்து கொண்டு இரவு சேரனில் kovai கிளம்பினர். காலை கோவை ரயில் நிலையத்தில் AC கோச்சை விட்டு இறங்கிய இருவரையும், கவிதா மற்றும் ரேகா பூங்கொத்துடன் வரவேற்க, கோவையின் சில்லென்ற காற்று அனைவரையும் வருடியது. தூக்க கலக்கத்தில் இருந்து அப்போது தான் விடுபட்டு இருந்த காயத்ரி,கவிதாவை, அக்கா என்று தாவி அணைத்து கொண்டாள்.

"பாசமலர்களே கிளம்புவோமா" என்று இருவரையும் கிண்டல் செய்த செல்வாவை தோளில் கவிதா கிள்ள, "ஐயோ" என்று கத்தி கொண்டு, "சண்ட வேணாம் சமாதானமா போய்டலாம் என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டு அனைவரும் கவிதா கொண்டு வந்திருந்த இன்னோவாவில் ஏறினர்.

அவர்கள் இருவரையும் ரெசிடென்சி ஹோட்டலில் விட்டுவிட்டு 11 மணிக்கு திரும்ப வருவதாக சொல்லி விட்டு கவிதா மற்றும் ரேகா கிளம்பினர்.

11 மணிக்கு இருவரும் தயாராகி காத்துகொண்டிருக்க கவிதா மட்டும் இன்னோவாவில் வந்து இருவரையும் பிக் அப் செய்து,ராஜ வீதியில் இருந்த பதிவாளர் அலுவலகத்தின் வாசலில் இறக்கி விட்டு காரை பார்க் செய்து விட்டு வருதாக கவிதா விடைபெற்றாள்.

எதற்கு இங்கே இறக்கி விட்டால் என்று சிந்தனை செய்து கொண்டே இருவரும் இறங்கி அலுவலக வளாகத்தில் நுழைய அங்கேசெந்தமிழ், ரேகா, ஜீவா, வாசுகி, ரகு, ரமேஷ், ரோஹித், டேவிட், பாஷா எல்லாரும் இருந்ததை பார்த்து ஆச்சர்ய பட்ட செல்வா,செந்தமிழை பார்த்து "நீ இங்க எப்படிடா வந்த? நீதான எங்கள நேத்து சேரன்ல வழி அனுப்பி வச்ச", என்று கேட்க, " டேய்இதல்லாம் கவிதாவோட surprise giftல ஒன்னு. கவிதா டிக்கெட்டுக்கு காசு தந்தா, அதுனால காலை முதல் ப்ளைட்லவந்துட்டேன்", என்று சொல்ல, கவிதாவும் அந்த நண்பர்கள் கூட்டத்தில் கலந்தாள்.

"செல்வா நாங்க எல்லோரும் சேர்ந்து சாய்பாபா காலனில ஒரு பிளாட் வாங்கி இருக்கோம், அத உங்களோட திருமண பரிசாகுடுக்கலாம்னு இருக்கோம்" என்று சொல்ல. செல்வா உணர்ச்சி வசப்பட்டு "கவிதா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு,நட்புளையும் தான். நண்பர்கள்ன ஏதோ டிவி வாஷிங் மிசின் மாதிரி கிப்ட் வாங்கி தருவாங்க. பிளாட் வாங்கி தருவது எங்கயுமேநடக்காது" என்று சொல்லி அன்புடன் கண்டித்தான்.

"டேய் நாங்க எல்லாரும் சாதாரண நண்பர்கள் இல்லைடா, அதோட நீ MBA படிச்சப்ப எங்க எல்லாருக்கும் Operations Reasearchசொல்லி கொடுத்து 90 மார்க்குக்கு மேல வாங்க வச்ச. ஆனா எந்த கிப்டும் வாங்க மாட்டேன்னு சொன்ன, எங்களுக்கு மனசுகேக்கல. உன்ன மாதிரி நண்பனுக்கு அதுவும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு கிப்டா கொடுக்கிறதுல பெருமையா இருக்கு. இதை நீகட்டாயம் எத்துகிடனும் என்று ரகு சொல்ல, எல்லாரும் கோரசாக "செல்வா ப்ளீஸ்டா" என்று கெஞ்ச.

"சரி ஆனா ஒரே கண்டிசன் இத காயத்ரி பெயர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணனும் அப்படின்னா எனக்கு ஓகே," என்று சொன்னான்.

இவர்களின் நட்பை நினைத்து ஆச்சர்யபட்டு இருந்த காயத்ரிக்கு கடைசியில் செல்வா சொன்னது புரியவில்லை. "என்னசொன்னிங்க" என்று கேட்ப
தற்குள் அவள் பர்சை எடுத்து அவளது பான்கார்டை வெளியே எடுத்து பத்திரம் எழுதுபவரிடம் கொடுத்தாள் கவிதா.போலரிட் கேமராவில் காயத்ரியை போட்டோவும்எடுத்தனர்.

அடுத்த 1 மணி நேரத்தில் சார்பதிவாளர் உள்ளே அழைக்க, செல்வா காயத்ரியை அழைத்து கையெழுத்திட வைத்தான்.

கிருஷ்ணா ஸ்வீட்ல இருந்து வாங்கி வந்த மைசூர்பாகை அனைவருக்கும் கொடுத்தான் ரமேஷ்.

ரகு தான் கொண்டு வந்திருந்த Xylo காரில் ஆறு பேரை கூட்டி கொண்டு செல்ல, பின்னாலே இன்னோவா காரில் செல்வா காயத்ரி உட்பட ஆறு பேர் பின் தொடர்ந்தனர். இருபது நிமிடத்தில் சாய்பாபா காலனியை அடைந்தவுடன், அனைவரும் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகில் இருந்த அந்த புதிய அடுக்கு மாடி குடிஇருப்பில் நுழைந்து முதல் மாடியில் அமைந்து இருந்த 101 என்ற எண்ணிட்ட பிளாட்டின் கதவைதான் கொண்டு வந்திருந்த சாவியை கொண்டு திறந்தான்.

கவிதா "முதல்ல வீட்டு ஒனற வர சொல்லுங்க" என்று சொல்லி காயத்ரியை வலதுகாலை எடுத்து உள்ளே வர, அதை தொடர்ந்து செல்வா மற்றும் நண்பர்கள் தொடர்ந்தனர்.



அது 1260 சதுர அடிகள் கொண்ட பிளாட். வரவேற்பறை, கெஸ்ட்ரூம், இரண்டு படுக்கை அறைகள் பாத்ரூமுடன், சமையல் அறை (italian kitchen), பெரியஹால் (with french window) இவற்றுடன், எல்லா வசதிகளுடன், குடியேற தகுந்ததாக இருந்தது.

"உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீடு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறோம், வாழ்த்துக்கள்" என்று சொல்லி பிறகு, "இப்போ எல்லோரும் அன்னபூர்னாவில் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு கிளம்பலாம் என்றாள்" கவிதா.

மதிய உணவு முடிந்த உடன் 2 மணி அளவில் ஏற்கனவே வரசொல்லி இருந்த அவள் வீட்டு டிரைவரை கூப்பிட்டு, "இவங்க ரெண்டு பேரையும் குனூர் தாஜ் ஹோட்டல் டிராப் செய்து விட்டு வந்துவிடு" என்று சொல்லி விட்டு "வாழ்த்துக்கள்" சொல்லி விட்டுகிளம்பினாள்.

அவளை தொடர்ந்து அனைத்து நண்பர்களும் விடை கொடுக்க செல்வா காயத்ரியை சுமந்து கொண்டு இன்னோவா குனூர் விரைந்தது.


நட்பு தான் எவ்வளவு வலியது?

No comments:

Post a Comment