Wednesday, April 29, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 17

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சுதர்சனத்தின் அலுவலகத்துக்குள் இருவரும் நுழைந்தனர்.

சுதர்சனம், "வாடா, வாம்மா ப்ரீதி" என்ற பிறகு தன் காரியதரிசியுடம், "இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு யார் கூப்பிட்டாலும் நான் பிஸின்னு சொல்லு. இந்தா என் ஸெல் ஃபோனையும் சைலண்ட் மோடில் போட்டு வெச்சுக்கோ" என்ற பிறகு ஆனந்தையும் ப்ரீதியையும் அங்கு இருந்த டிஸ்கஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.

சுதர்சனம், "என்னம்மா ப்ரீதி இது? இவன்தான் பெரிய மேதாவி மாதிரி தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுண்டு கண்ணைத் திறந்துண்டே கிணத்தில் காலை விட்டு இருக்கான்னா நீயுமா இப்படி அப்பாவித்தனமா மாட்டிப்பே? ம்ம்ம் .. சரியான ஜோடிதான் போ"



ப்ரீதி ஒரு சோகப் புன்னகையுடன், "விக்ரம் ஷா இப்படி செய்யக் கூடிய ஆளுன்னு நேக்கு தெரியலை அங்கிள்"

ஆனந்த், "மாமா, நடந்தது நடந்துடுத்து. இப்போ பேசி பிரயோஜனம் இல்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம்ன்னு பார்க்கலாம். நீங்க என்ன டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி இருக்கேள்?"

சுதர்சனம், "இருந்த ரெண்டு நாளில் நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண முடியலை. நமக்கு என்ன விவரம் எல்லாம் வேணும்ன்னு தெரிஞ்சுண்டப்பறம் மேற்கொண்டு ப்ரோஸீட் பண்ணலாம்ன்னு இருக்கேன். இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச விவரங்கள் என்னன்னா, P.S.V Systems Private Limited கம்பெனியின் வருமானம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்துதான் வர்றது. விக்ரம் ஷாவுக்கு இந்த ஐ.டி கம்பெனிகளைத் தவிற நிறைய ரியல் எஸ்டேட் முதலீடுகள் இருக்கு. அந்த ரியல் எஸ்டேட் டீலிங்க் எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கற பார்ட்டிங்ககூட. ஆர்.ஓ.ஸி (R.O.C - Registrar Of Companies)யில் இருந்து கம்பெனி இன்கார்போரேஷன் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிப் பாத்த போதுதான் ப்ரீதி அதில் மேனேஜிங்க் டைரக்ட்ர்ன்னு பாத்தேன். உடனே உங்கிட்ட சொன்னேன்"

ஆனந்த், "ஓ.கே மாமா, கம்பெனி எப்போ தொடங்கப் பட்டு இருக்கு?"

சுதர்சனம், "சுமார் நாலு வருஷத்துக்கு முன்னாடி"

ஆனந்த், "சோ, ப்ரீதி நீ ஆன்-சைட் போறதுக்கு முன்னாடி இல்லையா?"

ப்ரீதி, "அப்போதான் என் கிட்டே முதல்லே சில பேப்பர்ஸில் சைன் வாங்கினார்"

சுதர்சனம், "ப்ரீதி, உன்கிட்ட எந்த மாதிரி டாகுமெண்ட்ஸ்ல எல்லாம் கை எழுத்து வாங்கினான்?"

ப்ரீதி, "Mostly some official looking documents. ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ், டிபார்ட்மென்ட் ஆஃப் இன்கம் டாக்ஸ், அப்பறம் ஹெச்.டி.எஃப்.ஸி பாங்க் சம்மந்தப் பட்ட டாகுமெண்ட்ஸ். அப்பறம் சில எம்ப்டி லெட்டர் ஹெட்லயும், வெத்து பேப்பர்கள்லயும் கை எழுத்து வாங்கினார்"

அவளை முறைத்த ஆனந்த், "அசடே! அவன் கேட்டான்னா வெத்துப் பேப்பர்ல கை எழுத்துப் போடுவியா?"

ப்ரீதி, "இல்லை ஆனந்த் நான் ரெண்டவது தரம் ஆன்-சைட் புறப்படறதுக்கு முன்னாடி அதைக் கேட்டார். எதுக்குன்னு கேட்டப்ப நான் யூ.எஸ்ல இருக்கச்சே எதுக்கானும் என் கை எழுத்து தேவைப் படலாம்ன்னு முன்னேற்பாடா வாங்கிக்கறதா சொன்னார்"

ஆனந்த், "திரும்பி வந்தப்பறம் அதெல்லாம் யூ.ஸ் பண்ணினானா இல்லையான்னு கேட்டியா?"

சுதர்சனம், "விடுடா! இந்த மாதிரி எல்லாம் நடப்பது சகஜம். எனக்கு தெரிஞ்சு நிறைய நேர்மையான கம்பெனிகளில் கூட டைரக்டர்கள், மேனேஜிங்க் டைரக்டர்கள் எல்லாம் கை எழுத்துப் போட்ட வெத்துப் பேப்பர்கள் ரெடியா வெச்சு இருப்பாங்க"

ஆனந்த், "ஹூம் .. நிஜமா இந்திய பிஸினஸ்ஸை புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப வருஷம் ஆகும்"

சுதர்சனம், "சரி, ப்ரீதி, உன் கிட்டே செக் புக்ல கை எழுத்து வாங்கி இருக்கானா?"

ப்ரீதி, "இல்லை. ஆனா செக் சைன் பண்ண விக்ரம் ஷாவுக்கு அதிகாரம் கொடுக்கும்படி ஹெச்.டி.எஃப்.ஸிக்கு ஒரு லெட்டர் எழுதி அதில் சைன் வாங்கினார். அதே மாதிரி ஒரு நெட்பாங்கிங்க் கஸ்டமர் ஃபெஸிலிடியும் ஒரு ஹை வால்யூ டெபிட் கார்ட்டும் கொடுக்கச் சொல்லி பாங்குக்கு கொடுத்த அப்ளிகேஷனில் சைன் வாங்கி இருக்கார்."

சுதர்சனம், "கம்பெனிகளுக்கு கொடுக்கும் நெட் பேங்கிங்க் ஃபெஸிலிடி பொதுவா அந்த கம்பெனியில் இருக்கும் ஒருத்தர் பேரில்தான் இருக்கும். அந்த நெட் பாங்கின் ஃபெஸிலிடி அப்ளிகேஷன் யார் பேரில் இருந்தது ப்ரீதி?"

ப்ரீதி, "என் பேரில்தான்"

சுதர்சனம், "அந்த நெட் பாங்கிங்க் ஐடி, பாஸ்வர்ட், டெபிட் கார்ட் அப்பறம் அதோட பின் நம்பர் இதெல்லாம் உனக்கு கொரியர்ல வந்து இருக்குமே?"

ப்ரீதி, "ஆமா வந்தது. நான் புறப்படறதுக்கு ஒண்ணு ரெண்டு நாள் முன்னாடி வந்தது. வந்த கவர் எல்லாம் அப்படியே அவர்கிட்டே கொடுத்துட்டேன்"

ஆனந்த், "அவன் ப்ரீதியை ஒரு டம்மியா வெச்சு ஆபரேட் பண்ணி இருக்கான்னு ப்ரூவ பண்ண இதுவே போறும் இல்லையா மாமா"

சுதர்சனம், "நோ வே! அவன் ரொம்ப ஸ்மார்ட்டா மூவ் பண்ணி இருக்கான். நீ வேணும்ன்னா பாரு. லீகலான சமாசாரம் மட்டும் செக் மூலம் போயிருக்கும். மத்தது எல்லாம் நெட் பாங்கிங்க் மூலமாவோ அல்லது கேஷாவோ போயிருக்கும். எல்லாம் ப்ரீதி செஞ்ச மாதிரி இருக்கும்"

ஆனந்த், "சோ, We both are in the same boat"

சுதர்சனம், "More or less"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "என் விஷயத்தில் நான் வாங்கிக் கொடுத்த லாகின் ஐடியை உபயோகிச்சு அவன் தகவல் திருடி இருக்கான். இருந்தாலும் அது என் மூலமா நடக்கலைன்னு நான் ப்ரூவ் பண்ணனும். அந்த தகவல் திருட்டில் ஈடுபட்ட கம்பெனிகளில் ஒண்ணு P.S.V Systems. அதில் நீ மேனேஜிங்க் டைரக்டர். இருந்தாலும் நீ அந்த திருட்டில் இன்வால்வ் ஆகலைன்னு ப்ரூவ் பண்ணனும்"

சுதர்சனம், "சரி இப்போ என்ன ப்ளான் சொல்லு"

ஆனந்த், "ப்ளான் அப்படின்னு ஒண்ணும் இல்லை. நாங்க ரெண்டு பேரும் நிரபராதின்னு ப்ரூவ் பண்ணக்கூடிய விவரங்களை சேகரிக்கணும். அவ்வளவுதான். என் விஷயத்தில் நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ஏன்னா எல்லாம் கம்பியூட்டர் சம்மந்தப் பட்டது. ஆனா ப்ரீதி விஷயத்தில் நீங்க ஹெல்ப் பண்ண முடியும்ன்னு தோணுது"

சற்று நேரம் யோசித்த சுதர்சனம், "உன் விஷயத்தைப் பத்தி நேக்கு தெரியலை. ஆனா இவ விஷயத்தில் இவ எதிலும் இன்வால்வ் ஆகலைன்னு ப்ரூவ் பண்ண முடியுமான்னு நேக்கு தெரியலை. Give me ten minutes. நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன்" என்றபடி வெளியில் சென்றார்.


ப்ரீதியின் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது. கண்கள் குளமாகி அவள் தொண்டையை அடைக்க, ஆனந்த் அவள் கையைப் பற்றியபடி, "ஹேய், என்னது இது. When the going gets tough, the tough gets going. இப்பத்தான் நீ இன்னும் தைரியமா இருக்கணும். நான் இருக்கேனோல்லியோ. Worse comes to worst, நான் இந்திய ஜெயிலுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு வந்துடறேன். என்ன?" என்று பிராமணப் பாஷைக்குத் தாவினான்.

களுக்கென்று சிரித்த ப்ரீதி, "போ! நோக்கு எப்பவும் விளையாட்டுதான்"

ஆனந்த், "ரிலாக்ஸ் ஹனி! மாமா அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு சொன்னார். நாளைக்கு காலைல அப்பாகூட பேசப் போறேன். அப்போ உன்னைப் பத்தியும் சொல்லப் போறேன். He will have some suggestions."

ப்ரீதி, "மொத மொதலா என்னைப் பத்தி பேசப் போறே"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. நான் யூ.எஸ்ல இருக்கச்சேயே உன்னைப் பத்தி அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் தெரியும்ன்னு சொன்னேன். மறந்துட்டியா?"

ப்ரீதி, "இல்லை. இதுதானே மொதல் தரமா நான் உன்னை லவ் பண்ணறதைப் பத்தி சொல்லப் போறே?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... அம்மா தொளைச்சு எடுத்துட்டு இருந்தா ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே அம்மாவுக்கு நான் ஹிண்ட் கொடுத்து இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோன்னு சொன்னேன். இல்லைன்னா அம்மா பொட்டியை தூக்கிட்டு குன்னூருக்கு கிளம்பி இருப்பா"

ப்ரீதி, "உன் பேரில் கேஸ் இருக்கச்சே எதுக்கு உங்க அம்மா உன் கல்யாணத்தைப் பத்தி இவ்வளவு சீரியஸ்ஸா இருக்காங்க?"

ஆனந்த், "அதுவா? உனக்கு எங்க அம்மாவைப் பத்தி தெரியாது. ஜோஸியத்தில் அவங்களுக்கு அபார நம்பிக்கை. எனக்கு கல்யாணம் ஆனாத்தான் எல்லா பிரச்சனையும் தீரும்ன்னு எவனோ சொல்லி இருக்கான். அதான் அப்படி குதிச்சுட்டு இருக்காங்க"

ப்ரீதி, "அந்த ஜோஸியர் சொன்னது சரியா இருக்கணும்ன்னு நான் ப்ரே பண்ணப் போறேன்"

ஆனந்த், "ப்ரே பண்ண வேண்டாம். அந்த ஜோஸியர் சொன்னது சரியா இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சுடும்"

ப்ரீதி, "எப்படி சொல்றே?"

ஆனந்த், "நமக்குத்தான் லாஸ்ட் நைட்டே கல்யாணம் ஆயிடுச்சு இல்லையா?"

முகம் சிவந்த ப்ரீதி அருகில் அமர்ந்து இருந்த ஆனந்தின் தோளில் தலை சாய்த்தாள்.

சற்று நேரத்தில் கதவு திறக்கப் பட இருவரும் ஒதுங்கி அமர்ந்தனர்.

சுதர்சனம், "விக்ரம் ஷா செஞ்ச கொடுக்கல் வாங்கல் எல்லாம் ப்ரீதி செய்யலைன்னு ப்ரூவ் பண்ணனும். அது எப்படி முடியும்ன்னு நேக்கு தெரியலை. அதனாலதான் ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னேன். என் ஃப்ரெண்ட் லாயர் ஒருத்தரோட பேசினேன். அவர் வேற ஒரு வழியில் அப்ரோச் பண்ணலாம்ன்னு சொன்னார்."

ஆனந்த், "என்ன அப்ரோச்?"

சுதர்சனம், "அவன் பண்ணின கொடுக்கல் வாங்கல் அப்பறம் திருட்டுத்தனம் எல்லாம் தெரிஞ்சுண்டு, தன் பேரை அவன் இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் உபயோகிச்சு இருக்கான்னு ப்ரீதியே போலீஸில் அவனைப் பத்தி கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்"

ஆனந்த், "சோ, அப்ரூவம் ஆகறத மாதிரி இல்லையா?"

சுதர்சனம், "You are right. எஃப்.பி.ஐக்காரங்க இன்டர்போல் மூலமா நம் போலீஸை அணுகுவாங்க. போலீஸ் வந்து பிடிக்கறதுக்கு முன்னாடியே ப்ரீதி அந்த கம்ப்ளெயிண்டை கொடுத்து இருந்தா. சந்தேகம் முழுக்க விக்ரம் ஷாபேர்ல வரும். அப்பறம் நாம் லாயரை வெச்சு வாதாடி ப்ரீதி நிரபராதின்னு ப்ரூவ் பண்ணிடலாம்"

ஆனந்த், "ம்ம்ம் ... ஆனா, நீங்க சொல்றது முடியுமா?"

சுதர்சனம், "நிச்சயம் முடியும். ஆனா கொஞ்சம் டைம் எடுக்கும். எஃப்.பி.ஐ போலீஸை அணுகறதை கொஞ்சம் தள்ளிப் போட நீ முடியுமா?"

ஆனந்த், "முடியும்ன்னு நினைக்கறேன். அவங்க தேடப் போற தகவல்களை நாம் தேடித் தரப்போறோம்ன்னா What do they have to loose?"

சுதர்சனம், "அப்படின்னா நான் என் வேலையை தொடங்கறேன். கேஷா அவன் பண்ணின டீலிங்க்ஸ்ஸை தவிற மத்தது எல்லாம் வெவ்வேற இடங்களில் ரெக்கார்ட் ஆகி இருக்கும். அதை எல்லாம் நாம் சேகரிக்க முடியும். இதுவரைக்கும் அந்த கம்பெனி என்னென்ன கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு இருக்குன்னு பார்க்க ஆர்.ஓ.ஸி (R.O.C - Registrar of companies)யில் அவன் சம்பிட் பண்ணின பேலன்ஸ் ஷீட் காப்பி எனக்கு தெரிஞ்ச ஆள் மூலம் வாங்கப் போறேன். அதே மாதிரி இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் சப்மிட் பண்ணின பேலன்ஸ் ஷீட் காப்பியும் வாங்கப் போறேன்"

ஆனந்த், "எதுக்கு ரெண்டு இடத்தில இருந்து ஒரே விவரத்தை வாங்கணும்?"

சுதர்சனம், "இந்தியால அப்படித்தான். ரெண்டு டிபார்ட்மெண்டும் கேப்பாங்க. இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் காரங்க சில விஷயங்களை பார்ப்பாங்க. R.O.C அந்த அளவுக்கு டீப்பா பார்க்க மாட்டாங்க. எல்லா கம்பெனிகளும் இந்த லூப் ஹோலைப் பயன் படுத்திண்டு ஐ.டி.டிபார்ட்மெண்டுக்கு கொடுக்கும் போது இன்னும் கொஞ்சம் கவனமா திருத்தங்கள் செஞ்சு கொடுப்பாங்க."

ஆனந்த, "பட் மாமா, பேலன்ஸ் ஷீட்டில் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல் எதுவும் எழுதி இருக்க மாட்டான்"

சுதர்சனம், "தெரியும். எல்லாத்தையும் லீகலான சமாசாரமா மாத்தி எழுதி இருப்பான். அதுக்கான் ப்ரூஃபும் தயாரிச்சு இருப்பான். ஆனா நமக்கு ஒரு பாட்டர்ன் தெரிய வரும். தகவல் திருட்டு நடந்த தேதிகளுக்கும் அவனோட கொடுக்கல் வாங்கல் தேதிகளும் ஒத்துப் போனா அதை வெச்சு அந்த கொடுக்கல் வாங்கல்களை மட்டும் இன்வெஸ்டிகேட் பண்ணலாம்"

ஆனந்த், "பேலன்ஸ் ஷீட் ப்ராஃபிட் அண்ட் லாஸ் (Balance Sheet and Profit and Loss) ஸ்டேட்மெண்டில் இருந்த நமக்கு ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனும் தெரியாதே"

சுதர்சனம், "அதுக்கு அவன் பேங்க் அக்கௌண்டோட ஸ்டேட்மென்ட் வாங்கணும்"

ஆனந்த், "அதுக்கு எங்கே போறது. பேங்கில் கேட்டா கொடுப்பாங்களா?"

சுதர்சனம் ப்ரீதியைப் பார்த்துச் சிரித்தபடி, "ஒரு கம்பெனியின் மேனேஜிங்க் டைரக்டர் கேட்டா எது வேணும்ன்னாலும் கொடுப்பாங்க"




ஆனந்த், "ஆமா! எம்.டி மேடம் நம்ம பக்கத்திலேயே உக்காந்து இருக்கறதை மறந்துட்டேன். சரி, ஆனா விக்ரம் ஷாவுக்கு தெரியாம எப்படி செய்யறது? அவனுக்கு அந்த பேங்க் ப்ராஞ்சில் ஆளுங்க நிச்சயம் இருப்பாங்க இல்லையா?"

சுதர்சனம், "ம்ம்ம் .. அதுக்கும் ஒரு வழி இருக்கு. இன்னொரு நெட் பாங்கிங்க் ஐடி வாங்கணும்"

ஆனந்த், "ஏற்கனவே இவ பேரில் அவங்க நெட் பாங்கிங்க் ஐடி கொடுத்து இருக்காங்க. எப்படி இன்னொரு ஐடி கொடுப்பாங்க?"

சுதர்சனம், "புதுசா ஒரு ஃபினான்ஸ் மேனேஜரை அப்பாயிண்ட் பண்ணி இருக்கறதாவும் அவருக்கு நெட் பாங்கிங்க் வசதி வேணும்ன்னு ஒரு லெட்டர் கொடுத்தா அந்த ஃபினான்ஸ் மேனேஜர் பேரில் நெட் பாங்கிங்க் ஐடி கொடுப்பாங்க"

ஆனந்த், "ப்ரீதி, மாமாவை உன் கம்பெனி ஃபினான்ஸ் மேனேஜரா அப்பாயிண்ட் பண்ணறதில் உனக்கு ஆட்சேபணை எதாவுது இருக்கா?"

மூவரும் சிரிக்க சுதர்சனம், "டேய், இந்த விளையாட்டு புத்தி உன்னை விட்டு இன்னும் போகலையே. சீரியஸான விஷயம் டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கோம்"

ப்ரீதி, "ம்ம்ம் .. சொல்லுங்க அங்கிள்"

ஆனந்த், "ஹெல்லோ! யாரானும் தெருவில் போறவனையா ஃபினான்ஸ் மேனேஜர்ன்னு சொல்லப் போறோம்? You are the ideal candidate for that. அதனாலதான் கொஞ்சம் கிண்டலா சொன்னேன்"

சுதர்சனம், "சரி, சரி, அதுக்கும் மொதல்ல எனக்கு அவன் ROCக்கு சப்மிட் பண்ணின டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேணும்"

ஆனந்த், "எதுக்கு?"

சுதர்சனம், "பேங்குக்கு லெட்டர் கொடுக்க அந்த கம்பெனி லெட்டர் ஹெட் வேணும் இல்லையா? ROCயில் சப்மிட் பண்ணினதை ஒரு கலர் ஃஜெராக்ஸ் எடுத்துத் தரச் சொல்லறேன். அதை வெச்சு நாம் ஒரு லெட்டர் ஹெட் ப்ரிண்ட் பண்ணி அதில் எழுதின லெட்டரை பேங்குக்கு கொடுக்கலாம்"

ஆனந்த், "சரி, அதுவும் விக்ரம் ஷாவுக்கு தெரியாம இருக்குமா?"

சுதர்சனம், "நெட் பாங்கிங்க் சமாசாரம் எல்லாம் ஹெட் ஆஃபீஸில் இருந்துதான் வரணும். நாம் ப்ராஞ்சில் அப்ளிகேஷன் கொடுத்தாலும் அது ஹெட் ஆஃபீஸுக்குத்தான் போகும். நாம் ப்ராஞ்சில் அப்ளிகேஷன் கொடுக்கப் போறது இல்லை. ஹெச்.ஓல நேக்கு தெரிஞ்சவா மூலம் அப்ளிகேஷனை மூவ் பண்ணலாம். இன்னொரு நெட் பாங்கிங்க் ஐடி இருக்கும் விவரம் கம்பியூடர்ல பதிவாகும். ப்ராஞ்சுக்கு அதைப் பத்தி எந்தத் தகவலும் வராம என்னால பாத்துக்க முடியும். சோ, ப்ராஞ்சில் இருக்கறவங்க யாருக்கும் தெரியப் போறது இல்லை"

ஆனந்த், "அவங்க கம்பியூட்டரில் பி.எஸ்.வி சிஸ்டத்தோட ரெக்கார்ட்ஸைப் பாத்தா தெரிய வரும் இல்லையா?"

சுதர்சனம், "எதுக்குப் பார்க்கப் போறாங்க? எதாவுது என்கொயரி வந்தாத்தானே?"

ஆனந்த், "குட் திங்கிங்க் மாமா! நீங்களே ஒரு குட்டி விக்ரம் ஷா ரேஞ்சுக்கு இருப்பேள் போல இருக்கே?"

ப்ரீதி, "ஆனாந்த் ... " என்றபடி அவனை முறைக்க,

அதைப் பார்த்துச் சிரித்த சுதர்சனம், "சொல்லுவேடா, நேக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்"

ஆனந்த் தன் கைகளை சரணடைவது போல உயர்த்தினான்.

சுதர்சனம், "சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறேள் அதை சொல்லு"

ஆனந்த், "முதல்ல அவன் தகவலை எப்படி திருடினான்னு கண்டு பிடிக்கணும். அடுத்ததா அதை யாருக்கு கொடுத்தான்னு கண்டு பிடிக்கணும்"

சுதர்சனம், "எதுக்கு? எஃப்.பி.ஐக்கு கொடுக்கவா?"

ஆனந்த், "அது மட்டும் இல்லை. இந்த ரெண்டுலயும் எதாவுது ஒரு விதத்தில் நானோ ப்ரீதியோ இன்வால்வ் ஆகி இருக்க முடியாது அப்படிங்கற ப்ரூஃப் இருக்கான்னு பாக்கணும்."

சுதர்சனம், "குட். அதுக்கும் பாங்க் ஸ்டேட்மெண்ட் வந்ததுன்னு உதவியா இருக்கும் இல்லையா?"

ஆனந்த், "எப்படி?"

சுதர்சனம், "திருடின தகவலை கொடுத்த அப்பறம் அதுக்கான பணம் வந்து இருக்குமோல்லியோ? யார் எல்லாம் ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கஸ்டமர்ன்னு ப்ரீதிக்கு தெரிஞ்சு இருக்கும். அந்த கஸ்டமர்ஸ்ஸை தவிற வேற யாராவுது பணம் கொடுத்து இருந்தா அது அனேகமா தகவல் வித்த பணமாத்தானே இருக்கும்? எந்த தேதியில் யார்கிட்டே இருந்து பணம் வந்து இருக்குன்னு தெரிஞ்சா அது நோக்கு உதவியா இருக்கும் இல்லையா?"

ஆனந்த், "வாவ்! மாமா!! Why the hell are you wasting your time doing this business? நீங்க டிடெக்டிவ் ஏஜென்ஸி மாதிரி ஒரு ஃபினான்ஷியல் இன்வெஸ்டிகேடிங்க் ஏஜன்ஸி ஆரம்பிக்கலாமே?"

சுதர்சனம், "மொதல்ல உங்க ரெண்டு பேர் கைலயும் வெலங்கு மாட்டாம இருக்க வழியை பார்க்கலாமா?"

ஆனந்த், "Cool மாமா. But think about what I told you .. "

சுதர்சனம், "பட், அன்னைக்கு வேற என்னவோ விவரம் எஃப்.பி.ஐக்கு சேகரிச்சுக் கொடுக்கணும்ன்னு சொல்லிண்டு இருந்தே"

ஆனந்த், "ம்ம்ம் ... அந்த கம்பெனிகளோட மேனேஜர்கள் எந்த விதத்தில் சம்மந்தப் பட்டு இருக்காங்கன்னும் பாக்கணும்"

சுதர்சனம், "எதுக்கு?"

ஆனந்த், "அவன் திருடின விவரங்கள் ஒரு ஸீனியர் மேனேஜர் உதவியில்லாம நேக்கு கொடுத்த லாகின் ஐ.டியை மட்டும் வெச்சுண்டு ஆக்ஸஸ் (access - அணுக) பண்ணி இருக்க முடியாதுன்னு அவா நம்பறா. சோ, எப்படி தகவல் திருடப் பட்டு இருக்குன்னு தெரிஞ்சா அது உறுதியாயிடும். அப்போ எந்த மேனேஜர் எல்லாம் உதவி இருக்கான்னும் தெரிஞ்சுடும். அதை வெச்சுண்டு அந்த மேனேஜர்களுக்கும் விக்ரம் ஷாவுக்கும் என்ன லிங்க் இருக்குன்னு பார்க்கணும்"

சுதர்சனம், "லிங்க் என்ன? பணம் கொடுத்து இருப்பான்"

ஆனந்த், "அவா சந்தேகப் படும் மேனேஜர்கள் ஒவ்வொருத்தருக்கும் கம்பெனியில் ஷேர் இருக்கும். கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி காரியத்தை பணத்துக்காக மட்டும் செய்வாளான்னு சொல்ல முடியாது"

சுதர்சனம், "சோ, விக்ரம் ஷாவுக்கு அவா மேல வேற எதோ விதத்தில் ஒரு ஹோல்ட் இருக்கணும் இல்லையா?"

ஆனந்த், "எஸ். சிக்கலான சமாசாரம்தான். இதை அப்ரோச் பண்ண எந்த தகவல் கிடைச்சாலும் எஃப்.பி.ஐக்கு உபயோகமாகும்"

சுதர்சனம், "சரி, ஆல் தி பெஸ்ட். நான் செய்ய வேண்டிய காரியங்களை ஆரம்பிக்கறேன்" என்றபடி இருவருக்கும் விடை கொடுத்தார்.

கட்டிடத்துக்கு வெளியே வந்த பிறகு ...

ஆனந்த், "எங்கேயானும் ஒரு காஃபி இல்லைன்னா ஸாஃப்ட் ட்ரிங்க் சாப்படலாமா? பக்கத்தில உக்காந்து பேசற மாதிரி இடம் எதானும் இருக்கா"

ப்ரீதி, "பக்கத்தில ஸஃபீனா ப்ளாஸாக்குள்ளே மாக் ஃபாஸ்ட் ஃபூட்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு ஆனா அது ஒரு நான்-வெஜ் ரெஸ்டாரண்ட்"

ஆனந்த், "நோக்கு எப்படி தெரியும்?"

ப்ரீதி, "ரெமியோட வந்து இருக்கேன். பீட்ஸா பர்கர்ன்னு அவ எதானும் வாங்கி சாப்பிடுவா. அங்கே ஹாட் சாக்லேட் நன்னா இருக்கும். They must have coffee also"

ஆனந்த், "இப்போத்தான் நீ எங்க ஊர் பாஷை பேசறே. When there is hot chocolate why settle for coffee? போலாம் வா"

இருவரும் அந்த உணவகத்தில் ஹாட் சாக்லேட் அருந்தியபடி ...

ப்ரீதி, "ம்ம்ம் .. சொல்லு"

ஆனந்த், "நமக்கு மூணு வேலை இருக்கு. மூணையும் ஒரே சமயத்தில் பேரலல்லா செஞ்சா சீக்கிரம் முடிக்கலாம்"

ப்ரீதி, "நீ மாமாட்ட சொன்னது நேக்கு சரியா புரியலை என்னென்னன்னு சொல்லு. அப்பறம் எப்படி செய்யப் போறோம்ன்னு சொல்லு"

ஆனந்த், "ஒண்ணு என் லாகின் ஐ.டியை உபயோகிச்சு அவன் எப்படி அந்த கஸ்டமர் லிஸ்ட்டை திருடினான்னு கண்டு பிடிக்கறது. அதே சமயத்தில் மேனேஜர்கள் யாராவுது உதவி இருக்காங்களான்னும் தெரிஞ்சுடும். இப்போதைக்கு உதவி இருப்பாங்கன்னு அஸ்ஸ்யூம் பண்ணிக்கலாம். ரெண்டாவது அவன் யார்கிட்டே அந்த லிஸ்டை வித்தான்னு கண்டு பிடிக்கறது. மூணாவுது அந்த மேனேஜர்களுக்கும் விக்ரம் ஷாவுக்கும் என்ன சம்மந்தம்ன்னு கண்டு பிடிக்கணும்"

ப்ரீதி, "எல்லாம் எதோ டிடெக்டிவ்ஸ் செய்ய வேண்டிய வேலையா இல்லை இருக்கு. நம்மால முடியுமா?"

ஆனந்த், "நம்ம முதல் ரெண்டு ஐடத்தை எடுத்துப்போம். ஒரு கஸ்டமர் லிஸ்டை டவுன் லோட் பண்ணி இருக்காங்க. அதுக்கு அப்பறம் அந்த லிஸ்ட் சைனால இருக்கும் ஒரு கம்பெனிக்கு போயிருக்கு. நேர்முகமா அந்த லிஸ்ட கைமாறி இருக்கும்ன்னு எனக்கு தோணலை. அனேகமா ஈமெயில் அல்லது எஃப்.டி.பி (F.T.P - File Transfer Protocol) மூலமா போயிருக்கும். ட்ரேஸ் பண்ண முடியும்ன்னு தோணுது. ஆனா அந்த மூணாவுது காரியத்துக்கு எதானும் க்ளூ கிடைச்சால் ஒழிய ரொம்ப கஷ்டம்"

ப்ரீதி, "முதல் ரெண்டு காரியமே எப்படி முடியும்ன்னு தெரியலை ஆனந்த்"

ஆனந்த், "நான் சொல்றேன். என் லாகின் ஐ.டி எப்ப எல்லாம் யூஸ் பண்ணப் பட்டு இருக்குன்னு ஒரு லிஸ்ட் அந்த கம்பெனி எனக்கு கொடுத்து இருக்கு. ஒவ்வொரு தடவை யூஸ் பண்ணின கம்பியூட்டரின் ஐ.பி அட்ரெஸ்ஸும் (IP Address) அதோட கேட்வே ஐ.பி அட்ரெஸ்ஸும் (Gateway IP Address) இருக்கு. அந்த லிஸ்டில் இருக்கற ஐ.பி அட்ரெஸ்ஸை வெச்சுட்டு எப்ப எல்லாம் உங்க ஆஃபீஸ்ஸுக்கு உள்ளே இருந்து யூஸ் பண்ணி இருக்காங்கன்னு தெரியும் இல்லையா?"

ப்ரீதி, "பட், ஆன்சைட்ல இருக்கும் யாராவுது யூஸ் பண்ணி இருந்தா அது எந்தக் கம்பியூட்டர்ல இருந்து பண்ணினாங்கன்னு தெரியாதே?"

ஆனந்த், "இல்லை. ஆன்-சைட்டில் இருந்தவங்க யாரும் உபயோகிக்கலை. அந்த லிஸ்டில் அந்த கம்பெனிக்கு வெளில இருந்து யூஸ் பண்ணின லாகின் டீடெயில்ஸ் மட்டும் தான் இருக்கு. மேலோட்டமா பாத்தா எல்லாம் உங்க ஆஃபீஸ்ல இருக்கும் கம்பியூட்டர்ஸ் மாதிரித்தான் தெரியுது. ஒண்ணு நிச்சயம். ஏன்னா உங்க ஆஃபீஸ்ல இருக்கும் இன்டர்நெட் கேட்வே மூலமா லாகின் பண்ணி இருக்காங்க."

ப்ரீதி, "ம்ம்ம் ... கேட்வே ஐ.பி அட்ரெஸ்ஸை வெச்சுட்டு எங்க ஆஃபீஸ்ஸுக்கு உள்ளே இருந்து யூஸ் பண்ணப் பட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். ஆனா எந்த கம்பியூட்டர்ன்னு நிச்சயமா சொல்ல முடியாது"

ஆனந்த், "டி.ஹெச்.ஸி.பி ஸர்வர் (DHCP Server) ஒவ்வொரு கம்பியூட்டர் லாகின் பண்ணும் போதும் அதுக்கு புதுசா ஐ.பி அட்ரெஸ் அஸைன் பண்ணும் அதனால தானே?"

ப்ரீதி, "இல்லை. டெஸ்க் டாப் வொர்க் ஸ்டேஷன் (Desktop Workstation) எல்லாத்துக்கும் மோஸ்ட்லி ஐ.பி அட்ரெஸ் சேஞ்ச் ஆகாது. லாப் டாப் உபயோகிக்கறவங்களுக்குத்தான் ஐ.பி அட்ரெஸ் சேஞ்ச் ஆயிட்டே இருக்கும்"

ஆனந்த், "முதல்ல இதைச் சொல்லு. அந்த கம்பெனிக்காரங்க எதுக்கு அந்த லாகின் ஐ.டி கொடுத்தாங்க? டெஸ்டிங்க் டீம் உபயோகிக்கறதுக்க்கு இல்லையா?"

ப்ரீதி, "ஆமா!"

ஆனந்த், "டெஸ்டிங்க் டீமில் யாராவுது லாப் டாப் உபயோகிக்கறாங்களா?"

ப்ரீதி, "அந்த டீம் லீட்கிட்டே லாப் டாப் இருக்கு. ஆனா ஆஃபீஸ்ல இருக்கும் போது அதை உபயோகிக்க மாட்டான். என்னை மாதிரி அவனுக்கும் ஒரு டெஸ்க் டாப்பும் கொடுத்து இருக்கு"

ஆனந்த், "சோ! யாராவுது லாப் டாப் மூலம் உபயோகிச்சு இருந்தா அது அனேகமா தகவல் திருடறதுக்காகத்தான் இருக்கும் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா ஆனந்த்! நீ சொல்றது சரி. டி.ஹெச்.ஸி.பி லாக் (DHCP Log) பாத்தா அந்த லாப் டாப்போட மாக் அட்ரெஸ்ஸும் தெரிஞ்சுடும். சரி. எப்போ லாகின் பண்ணி இருக்காங்க அப்படிங்கறதை வெச்சுட்டு எப்படி திருடினாங்கன்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"

ஆனந்த், "டெஸ்டிங்க் டீம் உபயோகிச்சது போக மீதி எப்போ எல்லாம் என் லாகின் ஐடி உபயோகப் படுத்தப் பட்டு இருக்குன்னு பாத்தா அந்த லிஸ்ட் ரொம்ப சின்னதாத்தான் இருக்கும். அதை மட்டும் வெச்சுட்டு அந்த சமயங்களில் சர்வரில் என்ன எல்லாம் நடந்து இருக்குன்னு பாக்கணும். நிச்சயம் வழக்கமா உங்க டீம் செய்யும் வேலையைத் தவிற வேற எதாவுது நடந்து இருக்கும். கண்டு பிடிச்சுடலாம்ன்னு தோணுது"

ப்ரீதி, "சரி, தகவலை எப்படி, யாருக்கு வித்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"

ஆனந்த், "என்ன திருடப் பட்டு இருக்குன்னு நமக்குத் தெரியும். அந்த லிஸ்ட் உங்க ஆஃபீஸில் இருக்கும் கம்பியூட்டர்ல எதாவுது ஒண்ணுல ஸ்டோர் செஞ்சு வெச்சு இருப்பாங்கன்னு தோணுது. எனக்கு எல்லா கம்பியூட்டருக்கும் ஆக்ஸஸ் இல்லை. உனக்கு இருக்கு இல்லையா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... அட்மின் லாகின் ஐ.டி பாஸ்வர்ட் எங்கிட்ட இருக்கு"

ஆனந்த், "முதல்ல எங்கேயாவுது அந்த லிஸ்ட் இருக்கான்னு தேடுவோம்"

ப்ரீதி, "இன்னொரு விஷயம் ஆனந்த்! அந்த லிஸ்ட் எந்த ரூபத்தில் இருக்குன்னு தெரிஞ்சா எப்படி திருடப் பட்டு இருக்குன்னும் தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு"

ஆனந்த், "எந்த ரூபம்ன்னா?"

ப்ரீதி, "ஒரு சிம்பிள் டெக்ஸ்ட் ஃபைல் ரூபத்திலா இல்லை ஸிஸ்டத்தில் இருந்து ஜெனரேட் பண்ணின ரிப்போர்ட் மாதிரியா அல்லது ஒரு எக்ஸல் ஃபைலா அப்படின்னு தெரிஞ்சா எந்த வகையில் அதை உருவாக்கி இருக்க முடியும்ன்னு தெரியும் இல்லையா?"

ஆனந்த், "பாரு ஜாலியா ஒரு ஹாட்சாக்லேட் குடிச்சதும் எப்படி உன்னால யோசிக்க முடியுது. இந்த வேலை முடியறவரைக்கும் இதே மாதிரி ஜாலியா இருக்கணும்"

ப்ரீதி, "அதுக்கு அப்பறம்?"

ஆனந்த், "அதுக்கு அப்பறம் எங்க ஆத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்துடுவே. ஜாலியா இருக்க முடியுமான்னு தெரியலை"

ப்ரீதி, "சும்மா பயமுறுத்தாதே. நீ ஜாலியா இருப்பியோ இல்லையோ நான் நிச்சயம் ஜாலியா இருப்பேன்"

ஆனந்த், "எப்படி?"

ப்ரீதி, "ஒரு பேரக் குழந்தையை பெத்துக் கொடுத்தா அத்தையும் மாமாவும் என்னை தலை மேல வெச்சுண்டு கொண்டாடுவா"

ஆனந்த், "ஏன் நான் கொண்டாட மாட்டேனா?"

ப்ரீதி, "நோக்குத்தான் எப்பவும் ஜாலியா இருக்கணுமே. I don't know if you will enjoy being a father"

ஆனந்த், "ஹூம் ... I have given a very wrong impression about myself to you"

ப்ரீதி, "பின்னே என்னவாம்?"

ஆனந்த், "I can be a great Dad you know?"

ப்ரீதி, "பார்க்கலாம்"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு ..

ப்ரீதி, "ஆமா எதுக்கு இன்னும் ஒரு செட் ட்ரெஸ் எடுத்துண்டு வரச்சொன்னே?"

ஆனந்த், "நாளைக்கு போட்டுக்க"

ப்ரீதி, "நைட்டு ஹாஸ்டலுக்குத்தானே போகப் போறேன்?"

ஆனந்த், "நோ வே! இனி வீக் எண்ட் முழுசும் என்னோடதான்"

ப்ரீதி, "வேண்டாம் ஆனந்த்! நேக்கு பயமா இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா?"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி! We will take necessary precautions"

ப்ரீதி, "சே! இந்த மாதிரி எல்லாம் ஓபனா டிஸ்கஸ் பண்ணுவேன்னு நான் கனவுலகூட நினைச்சுக் கூட பாத்தது இல்லை"

ஆனந்த், "வொய் கனவு? அதான் நிஜமாவா நடக்குதே"



ப்ரீதி, "சீ! போடா!!"

ஆனந்த், "சரி, இப்போ சாப்பிட்டுட்டு ஒரு மூவி போலாமா?"

ப்ரீதி, "ம்ம்ம் .. ஃபேம் லிடோல புது தமிழ் படம் வந்து இருக்கு. போலாமா?"

ஆனந்த், "ம்ம்ம் .. போலாம். சாப்பிட என்ன ஆர்டர் பண்ணலாம்?"

ப்ரீதி, "வேற எங்கேயானும் போலாமே ஆனந்த். நேக்கு இந்த நான்-வெஜ் வாசனை கொமட்டறது"

ஆனந்த், "சரி எங்கே போலாம் சொல்லு"

ப்ரீதி, "பக்கத்தில் கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில வுட்டீஸ் இருக்கு. இன் ஃபாக்ட் இப்போத்தான் ஞாபகம் வர்றது. அதுக்கு பக்கத்தில் இருக்கும் கடைல ஒரு புது சுடிதார் வாங்கி தைக்கக் கொடுத்து இருக்கேன். அதையும் வாங்கிண்டு போயிடலாம். நாளைக்கு கோவிலுக்குப் போட்டுண்டு போறதுக்கு யூஸ் ஆகும்"

ஆனந்த், "ம்ம்ம் .. பகவானுக்கு எதுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கறே?"

ப்ரீதி, "இப்பவே சொல்லிட்டேன். நீ வேணுங்கற மாதிரி நான் நடந்துக்கறேனோல்லியோ? அதே மாதிரி நான் வேணுங்கற மாதிரி நீ நடந்துக்கணும். இல்லைன்னா இப்பவே நான் என் பி.ஜிக்குப் போறேன். உங்க அம்மாவை குன்னூருக்கு வரச்சொல்லு"

ஆனந்த், "அம்மா தாயே. நீ எங்கே கூப்டாலும் இனிமேல் வர்றேன். கஷ்டப் பட்டு லவ் மேரேஜுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு இருக்கேன். Please don't spoil the fun"

ப்ரீதி, "அப்படி வா வழிக்கு. வா போலாம்" என்றபடி எழுந்தாள் ...


No comments:

Post a Comment