Saturday, April 4, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 13

கல்லூரி,. கல்லூரி விட்டால் வீடு,.. வீட்டில் இருக்கும் வேலைகள் ,. மான்சி வாழ்க்கை அமைதியாக ஓடியது,…

ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஒருநாள், பானு கல்லூரி லைப்ரரியில் அமர்ந்து தனது அலுவல்களை கவனித்துக்கொண்டிருக்க,.. கல்லூரியின் பியூன் ஓடிவந்து “உங்களை ஹெச்ஓடி கூப்பிடுறார்” பானுவை அழைத்தான்

என்ன விஷயம் என்று தெரியவில்லையே என்று குழம்பிய படி பானு அவனுடன் போனாள், பியூன் கல்லூரி லேபுக்கு போக, அவனை தொடர்ந்து போன பானு அங்கே மான்சியை ஒரு பெஞ்சில் படுக்க வைத்திருப்பதை பார்த்து பதறி அவளருகே ஓடினாள்



அப்போது மான்சியை கல்லூரியின் டாக்டர் ஒருவர் பரிசோதித்து கொண்டு இருக்க, அவரிடம் பானு கண்கலங்கிபடி “ மான்சிக்கு என்னாச்சு சார்” என்று கேட்டாள்

டாக்டர் மான்சியின் மணிக்கட்டை பிடித்து அதன் துடிப்பை அறிந்துகொண்டு, பிறகு பானுவின் பக்கம் திரும்பி “ இவங்க ஹஸ்பண்ட் எங்க இருக்கார்” என்று கேட்க

பானு சட்டென உஷாராகி “ மிலிட்டரியில் இருக்கார் சார், லீவு முடிஞ்சு போன மாதம்தான் போனார் டாக்டர்” என்று கூறினாள்

“ ஓ அப்படியா .. அவருக்கு உடனே தகவல் சொல்லுங்க,. அவர் அப்பா ஆகிட்டார்னு, அப்பாவான தெம்பில் நம் நாட்டு எதிரிங்க கிட்ட சந்தோஷமா சண்டை போடுவார்” என்று கூறிய டாக்டர் ஏதோ பெரிய நகைச்சுவையை கூறிவிட்டது போல விழுந்து விழுந்து சிரிக்க, பானுவுக்கு இருந்த மனநிலையில் அந்த சிரிப்பு எரிச்சலாக இருந்தது

பானு மான்சியை பார்த்தாள், அவள் கண்மூடிக் கிடந்தாள், ஆனால் மயக்கம் இல்லை டாக்டர் சொன்னது அவள் காதுகளில் விழுந்தது என்று அவள் முகபாவனை காட்டிக்கொடுத்தது

பானு மான்சியின் தோளில் கைவைத்து மான்சி என்று கூப்பிட்டதும் , பட்டென்று கண்விழித்து மான்சி பானுவை பார்த்தாள், மன்சியின் முகத்தில் இருந்தது வெட்கமா, சந்தோஷமா, சங்கடமா, என்று பானுவால் இணம் காணமுடியவில்லை

பெஞ்சில் இருந்து எழுந்து அமர்ந்த மான்சி “ மேடம் நான் பஸ்ஸில் வீட்டுக்கு போறேன், நீங்க ஈவினிங் வாங்க” என்று தலைகுனிந்தவாறு கூறிவிட்டு எழுந்திருக்க

“இரு மான்சி நானும் பர்மிஷன் போட்டுட்டு உன்கூட வர்றேன், இந்த நிலைமையில் நீ தனியாக போகவேண்டாம், நீ இங்கயே இரு நான் இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு பானு அவசரமாக ஆபிஸ் ரூமை நோக்கி ஓடினாள்

சிறிதுநேரத்தில் பானு மான்சி இருவரும் காரில் வீட்டை நோக்கி போய்கொண்டு இருந்தனர், காரில் பானு மான்சியிடம் எதுவும் கேட்கவில்லை. வீட்டிற்கு போனதும் மான்சி தன் பையை வைத்துவிட்டு சோபாவில் குத்தங்கால் இட்டு உட்கார்ந்து கொள்ள

இவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் எதிர்பாராத பானுவின் அம்மா “ என்ன பானு ரெண்டு பேரும் இந்த நேரத்தில் வந்திருக்கீங்க, காலேஜ் லீவா பானு” என்று விசாரிக்க
“ஆமாம்ம்மா நீ பாட்டி ஆயிட்டேன்னு காலேஜ் லீவு விட்டுட்டாங்க” என்று பானு மான்சியை பார்த்துக்கொண்டே சிறு சிரிப்புடன் சொல்ல

ஏற்கனவே தலைகுனிந்து அமர்ந்திருந்த மான்சி இன்னும் தலையை குனிந்து கொண்டாள். அது நாணத்தாலா என்று தெரியவில்லை

பானுவின் அம்மா வேகமாக வந்து மான்சியின் அருகில் அமர்ந்து, அவள் முகத்தை நிமிர்த்தி “ மான்சி உண்மையாவா ஏன்டி என்கிட்ட கூட சொல்லலை” என்று சந்தோஷமாக கேட்க

மான்சி கலங்கிய கண்களுடன் “ இது எப்படின்னு எனக்கு எதுவுமே தெரியாது பாட்டிம்மா” என்று சொன்னதும்

பானு அம்மா மான்சியை தன் தோளோடு அணைத்துக்கொன்டு “ அதுக்கு ஏன்டா கண்கலங்குற.. எல்லாம் ஆண்டவன் செயல், உனக்கு என்ன வேனும்னு சொல்லு நான் செய்து தர்றேன்” என அன்போடு கூற

“ கொஞ்சம் இருங்கம்மா, அவளுக்கு பலகாரம் செய்து அப்புறம் போடுவீங்க, மொதல்ல அவ இந்த புது பிரச்சனைக்கு என்ன முடிவு எடுத்துருக்கான்னு கேளுங்க,” என்று தன் தாயாரை அதட்ட பேச

“ அதுக்கு ஏன் அவ மிரட்டுற மாதிரி கேட்கிற, எல்லாம் அவ சரியான முடிவுதான் எடுத்திருப்பா, என்ன மான்சி” என்று பானுவின் அம்மா மான்சியை பார்க்க

மான்சி சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு “ எனக்கு இந்த குழந்தை வேனும், அவர் எனக்கு உண்மையா இல்லைன்னாலும், நான் அவருக்கு உண்மையான மனைவியாத்தான் இருந்தேன், இந்த குழந்தை நான் அவர் மேல வச்சிருந்த உண்மையான காதலுக்கு கிடச்ச பரிசு, இந்த குழந்தையை நான் நல்ல படியா பெத்துகிட்டு நல்லா வளர்ப்பேன், என்று உறுதியான குரலில் கூற

பானு அவளை அணைத்துக்கொண்டு “ மான்சி நீ இந்த முடிவைத்தான் எடுப்பேன்னு எனக்கு தெரியும், புருஷனை விட்டு விலகி வந்ததும் வயிற்றில் எத்தனை மாத கருவா இருந்தாலும் அதை அழித்துவிட்டு, வேற ஒருத்தரை கல்யாணம் செய்த்துக்கிற இந்த முற்போக்கான காலத்தில், நீ இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மான்சி” என்றவள் தன் அம்மாவிடம் திரும்பி

"அம்மா நாம ரெண்டு பேர் மட்டும் வாழ்ந்த இந்த குட்டி அரண்மனைக்கு , மொதல்ல ஒரு தேவதை வந்தா, இப்போ அந்த தேவதைக்கு ஒரு குட்டி இளவரசன் வரப்போறான், என்று பானு சந்தோஷமாக கூச்சலிட்டு சொன்னாள்

“ ஏன் பானு அப்புறமா இளவரசியா இருந்தா என்ன பண்ணுவ” என்று அவள் அம்மா பதிலுக்கு சிரித்தபடி கேட்க

" எனக்கு இளவரசினாலும் ஓகேதான், என்ன நாம மூனு பேரும் பொம்பளைங்களா இருக்கோம், நம்மல மிரட்டி அதட்ட ஒரு இளவரசன் இருந்தா நல்லாருக்கும், நீ என்ன மான்சி” என்று மான்சியை கேட்க

“ அதெல்லாம் எனக்கு தெரியாது என்னோட வேலை சுமக்க வேண்டியது மட்டும்தான், அது ஆணோ பெண்ணோ பெத்து உங்ககிட்ட குடுத்துறேன், அதை வளர்க்க வேண்டியது உங்க பொருப்பு, நான் என் படிப்பையும் முன்னேற்றத்தையும் பார்க்கனும்” என்று மான்சி கறாராக கூறுவதுபோல் குறும்பாக கூற

“ ம் அதைவிட எங்களுக்கு வேறென்ன வேலையிருக்கு, இனிமே நீ ஒரு வேலையும் செய்யகூடாது, உன் வயித்துல இருக்குற இந்த அரண்மனை வாரிசை நல்லபடியா பார்த்துகிட்டு, உன் படிப்பில் கவணம் செலுத்தினா போதும்” என்று பானு கூறியதும், சிரிப்புடன் மான்சி தலையாட்டினாள்

மான்சி கருத்தரித்ததில் பானுவின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை, கோயில் கோயிலாக சுற்றியும் அவளுக்கு கிடைக்காத குழந்தைச் செல்வம், மான்சிக்கு கிடைத்ததில் அவள் ரொம்ப சந்தோஷமடைந்தாள்,

குழந்தையின்மையால் தொலைந்து போன தன் வாழ்க்கையே மறுபடியும் கிடைத்தது போல் ஆனந்தத்தில் மிதந்தாள் பானு, மான்சியையும் குழந்தையையும் நல்லபடியாக எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இப்போது திட்டமிட்டாள்,

மான்சிக்கு முழுதாக இரண்டு மாதம் முடிந்ததும், ஒரு நல்லநாள் பார்த்து அவளை ஒரு கைராசியான பெண் மருத்துவரிடம் அழைத்து போனாள் பானு, அங்கிருந்த கர்பிணிப் பெண்களின் வரிசையில் அமர்ந்தாள் மான்சி

அவளுடைய டோக்கன் எண் அழைக்கப்பட, பானு மான்சியை அழைத்துக்கொண்டு உள்ளே டாக்டர் அறைக்கு போனாள், மான்சிக்கு எல்லா பரிசோதனைகளும் முடித்தார் டாக்டர்,

பானு டாக்டர் சொல்லும் வார்த்தைக்காக அவர் முகத்தை பார்த்து காத்திருக்க, அந்த பெண் டாக்டர் மான்சியை பார்த்து “ உன் ஹஸ்பண்ட் எங்கம்மா இருக்கார்” என்று கேட்க

மான்சி தடுமாற்றத்துடன் பானுவை பார்க்க, பானு பட்டென பதில் சொன்னாள் “ அவ புருஷன் மிலிட்டரியில் இருக்காரு டாக்டர் ,என்ற பானு “என்ன ஏதாவது சிக்கலா டாக்டர்” என்று பயந்த குரலில் கேட்க

“ சிக்கலெல்லாம் எதுவும் கிடையாது, இவங்க வயித்துல இரட்டை குழந்தைகள் உருவாகியிருக்கு, இவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா கவணமா இருக்கனும் அவ்ளோதான் பயப்படும்படி எதுவும் இல்லை” என்று டாக்டர் மலர்ந்த முகத்துடன் கூற

பானு வியப்பில் வாய் பிளந்து மான்சியை பார்க்க, அவள் சந்தோஷத்தில் முகம் மலர, வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, பூரிப்பில் உடல் மிதக்க, பானுவை பார்த்தாள்

அதன்பிறகு டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டு, மான்சியின் ரிப்போட்டர்களையும் வாங்கிக்கொண்டு இருவரும் சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தார்கள்

பானுவின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததும், ரொம்ப சந்தோஷத்துடன் மான்சி கட்டியணைத்துக் கொண்டாள், அன்றிலிருந்து மான்சியை ஒரு மகாராணியைப் போல் உணர வைத்தார்கள், தாயும் மகளும்

அம்மா மகள் உத்தரவின் படி மான்சி எந்த வேலையும் செய்யாமல், தனது படிப்பையும், தனது வயிற்றுப் பிள்ளையையும் பார்த்துக்கொன்டாள், ஆனால் மறைக்க முடியாத மனதின் ஏக்கங்கள் அவளை காட்டிக்கொடுத்தது

இதுபோன்ற நிலையில் சத்யனின் அருகாமைக்கு மான்சியின் மனது ஏங்கியது, ஆனால் தன்மானம் கொண்ட மனது, அந்த ஏக்கத்தை உடனே பொசுக்கியது, அவனின் துரோகத்தை மறந்து அவனுக்காக ஏங்குகிறாயா, என்று ஏசியது

அவள் மணிவயிற்றுப் பிள்ளைகள் வயிற்றில் வளரவளர மான்சியின் வைராக்கியமும் சேர்ந்து வளர்ந்தது, நெருப்பாய்ச் சுட்ட நினைவுகளால், அவள் நெஞ்சம் புடம்போட்ட பொன்னாக மாறியது



இரவில் அவளருகிலேயே படுத்துக்கொள்ளும் பானு, மான்சியின் மனப்போராட்டங்களை உணர்ந்து ஒருநாள் காலையில் எழுந்து “ மான்சி நான் சொல்றேன்னு தப்பா எடத்துக்காதே, நான் வேனும்னா சென்னைக்கு போய் சத்யனை பார்த்து பேசி இங்கே கூட்டிட்டு வரவா” என்று மெதுவாக கேட்க

மான்சி சீற்றத்துடன் நிமிர்ந்து பானுவை பார்த்து “ என்னன்னு பேசப்போறீங்க, பாவம் மான்சி வயித்துல பிள்ளை உண்டாயிருக்கா,அவ ரொம்ப பாவம் அதனால வந்து அவளை பாருங்கன்னு கெஞ்ச போறீங்களா” என்று வெடுக்கென கேட்டுவிட்டாள் மான்சி

“ அய்யோ நான் அதுக்கு சொல்லலை மான்சி, இந்த நிலைமையில் மனசுல நெறைய ஆசைகள் இருக்கும், அதெல்லாம் நிறைவேறினால் தான் பிறக்கிற குழந்தைக்கு நல்லதுன்னு அம்மா சொன்னாங்க மான்சி, அதான் உனக்கு உன் புருஷனை பார்க்கனும்னு தோனுச்சுனா, போய் கூட்டிட்டு வரலாமேன்னு கேட்டேன்” என்று பானு பொறுமையாக எடுத்து சொல்ல

மான்சி கொஞ்சம் தணிந்து “ அப்படியில்லம்மா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அதுக்காக இன்னொருத்திக் கூட படுத்திருக்கும் போது நான் போய் ரெண்டுபேருக்கும் நடுவுல படுத்துக்க முடியுமா சொல்லுங்க, அதுபோல தான் இதுவும், எனக்கு மனசுல அவரை பத்தி ஏக்கங்கள் இருக்கு, காதல் ஆசை எல்லாம் இருக்கு , ஆனா அதைவிட தன்மானமும் சுயகௌரவமும் அதிகமா இருக்கும்மா, அதை எந்தநாளும் நான் விட்டுகொடுக்க மாட்டேன்” என்று மான்சி உறுதியாக கூறினாள்

“ சரிசரி அதுக்கு ஏன் இப்படி எமோஷனல் ஆகுற, உன்னோட சேர்ந்து வயித்துல இருக்கிற உன் பிள்ளைங்களும் அவங்க அப்பாவை இப்பவே வெறுத்துட போறாங்க” என்று மான்சியின் பெரிய வயிற்றை தடவியபடி பானு கூற

பானு விளையாட்டுக்கு கூறினாலும் அவள் வார்த்தைகள் மான்சியின் மனதில் ஆழமாய் விழுந்தது, அப்படியானால் சத்யன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் வளரவளர அவர்களுக்கு அவன் நல்லவனாகத்தான் தெரியவேண்டும், இல்லையென்றால் அவர்களின் பிற்காலம் பாதிக்கப்படும்,அதற்காக என்ன செய்யவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினாள்

மறுநாள் காலை மான்சி தனது பெட்டியின் அடியில் இருந்து அவளும் சத்யனும் இருக்கும் கல்யாண போட்டோ ஒன்றை எடுத்து வந்து பானுவிடம் கொடுத்தாள்

அந்த படத்தை வாங்கி பார்த்த பானு “ என்ன மான்சி இது இத்தனை நாளா எங்க இருந்தது, இப்போ திடீர்னு எடுத்துட்டு வந்து கொடுக்கிற,” என்று கேட்க

மான்சி பானுவின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து தரையை பார்த்தபடி “ நான் அங்கருந்து வரும்போது எடுத்துட்டு வந்தேன்ம்மா, ஆனா ஏன் இதை எடுத்துட்டு வந்தேன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு புரியலை, நான் ஒருநாளும் அதை எடுத்து பார்க்கலை, ஆனா இப்போ இந்த படம் எனக்கு நெறைய பிரண்ட் போட்டு பெரிசாக்கப்பட்டு வேனும்” என்று கேட்டாள்

அவளை ஆச்சர்யமாக பார்த்த பானு “எதுக்கு மான்சி” என்றாள்

இப்போது பானுவை நேராக பார்த்த மான்சி “ பொறக்கப் போற என் பிள்ளைகளிடம் இவர்தான் உங்கப்பான்னு காட்டனும், ஏன் என் பிள்ளைகள் அப்பா யார்னு தெரியாம வளரனும், அவங்க தினமும் அவங்க அப்பா முகத்தை பார்த்து வளரட்டும்” என்று மான்சி கூறியதும்

பானுவுக்கு மான்சியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது, எப்படி குழந்தைத்தனமாக இருந்தவள் இப்போது எவ்வளவு தீர்க்கமாக தீர்மானமாக பேசுகிறாள், என்று நினைத்தாள்

மான்சி கேட்டது போல் மான்சி சத்யனின் அந்த சிறய திருமணப் படம் பெரிதாகப்பட்டு நிறைய பிரிண்டுகள் போடப்பட்டு மான்சியிட் தரப்பட்டது,



அந்த படங்களில் இருந்த சத்யனின் மயக்கும் கண்களும், அழகு முகமும், திடமாக இருந்த மான்சியை அசைத்து பார்த்தது, ஆனால் அவள் அசையவில்லை

சத்யனின் படத்தை பார்த்து பார்த்து தன் மனதில் உரமேறிய மான்சிக்கு அந்த மாத இறுதியில் அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது, மான்சி தன் பக்கத்தில் கிடத்தப்பட்டிருந்த தன் பிள்ளைகளை பார்த்து பூரித்தாள்

இரண்டில் அதில் ஒரு குழந்தை கூட மான்சியின் பரம்பரையை கொண்டு பிறக்கவில்லை, ச்சே கஷ்டப்பட்டு வலிச்சு பெத்துக் கிட்டது நான், ஆனா ஜாடை மட்டும் அவங்க வீட்டு ஆளுங்களை போல ரெண்டும் இருக்குதுங்க, மான்சிக்கு எரிச்சலாக வந்தது

ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு இணம் புரியாத ஒரு நிறைவு, சந்தோஷம், பூரிப்பு, என்று உண்டானதை மான்சியால் தடுக்க இயலவில்லை.



" ஈருயிர் ஓருடலாய் தலைக்கோதிக்...

" கிடந்த காலம் எத்தனை?

" எதிர்பார சம்பவங்கள் எத்தனை?

" சில இரவுகள் பேச்சிலே கடந்தன...

" சில இரவுகள் மூச்சுக்காற்று மோதிக்கிடந்தன...

" இப்படி பல இரவுகள் இறந்தகாலமான பின்னும்...

" என் காதல் மட்டும் அப்படியே நிகழ்காலமாய்!!!! 

No comments:

Post a Comment