Monday, April 27, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 12

ப்ரீதி - ஆனந்த்

சுதர்சனத்தின் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு ப்ரீதி ரெமியுடன் தன் ஷாப்பிங்க்கை தொடர்ந்தாள். ஆனந்த் சிறு அவசர வேலைகள் இருப்பதாகக் கூறி விடைபெற்றுச் சென்றான்.

செல்லுமுன் அவன் ரெமியிடம், "Remi, Just reminding what I told you. உனக்கு ஓ.கேதானே?"

அதற்கு ரெமி, "எனக்கு ஓ.கே ஆனந்த்"

ஆனந்த் சென்ற பிறகு ப்ரீதி ரெமியிடம், "என்ன ஆனந்த் உன்னை ஞாபகம் வெச்சுக்கச் சொன்னார்?"

ரெமி, "எதோ எங்களுக்குள்ளே"

ப்ரீதி, "ரெமி! நீ செய்யறது சரி இல்லை"

ரெமி, "என்ன சரி இல்லை?"

ப்ரீதி, "அவர் என் ஃப்ரெண்ட்"

ரெமி, "ஆனா பாய் ஃப்ரெண்ட் இல்லையே?"

ப்ரீதி, "அப்ப உனக்கு பாய் ஃப்ரெண்டா?"

ரெமி, "எனக்கு அவர் பாய் ஃப்ரெண்ட் இல்லைதான். அதனால என்ன?"

அதற்குள் அவர்கள் நெரிசலான கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் காலடி எடுத்து வைத்து இருந்தனர். உரையாடலை தொடர இயலவில்லை.



அந்த வீதியில் ஒரு முனைக்கு அருகே இருந்த டி.ஸி.எம் மகளிர் துணிக் கடையில் வாங்கி தைக்கக் கொடுத்து இருந்த சுடிதாரை பெற்றுக் கொண்டபின் ப்ரீதி, "இங்கே வுட்டீஸ்லயே சாப்பிட்டுட்டு போகலாம்"

ரெமி, "சரி வா"

அந்த உணவகத்துக்கு சென்று வேண்டிய பண்டங்களை வாங்கிக் கொண்டு மேசைக்கு வந்த பிறகு ப்ரீதி, "உனக்கு அவர் வெறும் ஃப்ரெண்ட் மட்டும்தான்ன்னா ஏன் இந்த ரகசியம்?"

ரெமி, "என்ன ரகசியம்?"

ப்ரீதி, "எதோ ஞாபகம் படுத்தினாரே?"

ரெமி, "விட மாட்டியே? அது ஒண்ணும் இல்லை. அன்னைக்கு உன்னை ட்ராப் பண்ண வந்தப்ப நம்ம பீ.ஜிக்கு பக்கத்தில ஹன்ட்ரெட் ஃபீட் ரோடில் இருக்கற எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பாரில் இருந்து சத்தமா மியூசிக் கேட்டுட்டு இருந்தது. அது என்ன இடம்ன்னு ஆனந்த் கேட்டார். நான் அந்த இடத்தைப் பத்தி சொன்னேன். வர்ற வெள்ளிக் கிழமை நைட்டு போலாமான்னு கேட்டார் நான் ஓ.கேன்னு சொன்னேன்"

ப்ரீதி, "அது என்ன இடம்?"

ரெமி, "அது ஒரு டிஸ்கோதே பார்"

ப்ரீதியின் முகம் சிறுத்ததை ரெமி கண்டு கல கலவென சிரித்தாள்.

ரெமி, "அப்பா! ஏண்டி இப்படி இருக்கே? நீ அவரை லவ் பண்ணறே. ஏன் அதை வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறே?"

ப்ரீதியின் மௌனமே அவளுக்கு பதிலாகக் கிடைத்தது.

அடுத்த நாள் மதியம் ...

ப்ரீதி, "நீ ரெமியை டிஸ்கோதேக்கு போகக் கூப்பிட்டயா?"

ஆனந்த், "ஆமா. அதுக்கு என்ன இப்போ?"

ப்ரீதி, "நீ அவகூட போகக் கூடாது"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி, "உனக்கு எதுக்கு அந்த டிஸ்கோத்தே? அப்படி என்ன இருக்கு?"

ஆனந்த், "சிம்பிள். கொஞ்சம் ஜாலியா இருக்கறதுக்கு"

ப்ரீதி, "இப்போ நீ ஜாலியா இல்லையா?"

ஆனந்த், "இது வேற மாதிரி ஜாலி அது வேற மாதிரி"

ப்ரீதி, "அப்போ நீ ரெமிகூட அந்த மாதிரி ஜாலியா இருக்கப் போறியா?"

ஆனந்த், "சே சே. அவ இப்போ அவளோட ஃபியான்ஸேயோட எக்ஸ்ளூஸிவ்வாயிட்டா. அவகூட ஜாலியா இருக்க முடியாது. அவளுக்கும் அவ ஃபியான்ஸேவை சீட் பண்ண விருப்பம் இல்லை. சும்மா கம்பெனி கொடுக்க மட்டும் வர்றேன்னு சொன்னா"

ப்ரீதி, "அப்பறம் எதுக்கு அவளை கூட்டிட்டு போறே?"

ஆனந்த், "சிம்பிள். அங்கே போறதுக்கு எனக்கு ஒரு கம்பானியன் வேணும் அவ்வளவுதான். ஒன்ஸ் அங்கே போனதுக்கு அப்பறம் .. I will get to meet other willing girls ..."

ப்ரீதி, "வில்லிங்க் கர்ல்ஸனா?"

ஆனந்த், "ஜாலியா இருக்க ரெடியா இருக்கற பொண்ணுங்க"

ப்ரீதி, "You mean for sex?"

ஆனந்த், "That depends .. ப்ரீதி, ஆனா ஜாலியா இருக்கறதுன்னா மொதல்ல கேர்-ஃப்ரீயா இருக்கறது. கடைசில செக்ஸில் முடிஞ்சாலும் முடியலாம்"

ப்ரீதி, "இங்கே இருக்கற கொஞ்ச நாள்கூட உன்னால செக்ஸ் இல்லாம இருக்க முடியாது. அப்படித்தானே?"

ஆனந்த், "இங்கே இருந்து திரும்பிப் போன உடனே கல்யாணம் பண்ணிப்பேன்னு அம்மாகிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டு வந்து இருக்கேன்னு நான் சொன்னேன் இல்லையா? How do you expect me to find a suitable girl?"

ப்ரீதி, "அங்கே தான் உனக்கு சூட்டபிள்ளான பொண்ணு கிடைக்குமா?"

ஆனந்த், "அங்கே தான் கிடைக்கும்ன்னு சொல்லலை. அதுவும் ஒரு இடம்"

ப்ரீதி, "அந்த மாதிரியான இடத்தில் கிடைக்கும் பொண்ணுங்க உனக்கு சூட்டபிள்ளா இருக்க மாட்டாங்க"

ஆனந்த், "லுக் ப்ரீதி. எதையும் முயற்சி செய்யாம விடக்கூடாது"

அன்று மாலை ரெமி அறைக்குள் நுழையும்போது ப்ரீதி தன் படுக்கையில் படுத்துக் கொண்டு அழுது குலுங்கிக் கொண்டு இருந்தாள்.

ரெமி, "ஏய், என்னாச்சு ப்ரீதி?"

எழுவதற்கும் மனமில்லாத ப்ரீதி, "ஒண்ணும் ஆகலை. நீ உன் வேலையை பாத்துட்டுப் போ"

ரெமி, "ம்ம்ம் ... என் ரூம் மேட் இப்படி அழுதுட்டு இருக்கும்போது என்னால சும்மா இருக்க முடியாது. இதுவும் என் வேலைதான். எதுக்கு அழறே அதை மட்டும் சொல்லு"

ப்ரீதி, "என் தலை எழுத்து. எதுக்கோ அழறேன்"

ரெமி, "உன் தலை எழுத்து என்னன்னு உனக்கு ஏற்கனவே தெரியுமா? என் தலையையும் பாத்து என்ன எழுதி இருக்குன்னு சொல்லேன். ப்ளீஸ்"

ப்ரீதி, "போடி கிண்டல் பண்ணாதே"

ரெமி தன் குரலை உயர்த்தி அழுத்தத்துடன், "ஏய், எழுந்து உக்காரு"

அவளது குரலில் இருந்த கோபம் ப்ரீதியை சற்று தடுமாறச் செய்தது. எழுந்து உட்கார்ந்து விசும்பினாள்.

ரெமி, "கண்ணைத் தொடைச்சுக்கோ. போய் மூஞ்சியை கழுவிட்டு வா"

ப்ரீதி குளியலறையில் இருந்து வந்த போது ...

ரெமி, "இந்தா மொதல்ல இந்த டீயைக் குடி"

அமைதியாக ரெமி கொடுத்த தேனீரை பருகியபடி ப்ரீதி தன் படுக்கையில் அமர்ந்து இருந்தாள்.

ரெமி, "சொல்லு. எப்படி உனக்கு ஆனந்த் மேல லவ் வந்தது?"

ப்ரீதி பதிலளிக்காமல் ரெமியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரெமி, "கம் ஆன். நீ அவரை லவ் பண்ணலைன்னு புளிகனது போதும்"

குன்னூர் வீட்டுக்கு கோமளா மாமியில் வருகையில் தொடங்கி சமீபத்தில் நடந்தது முதல் ப்ரீதி சொல்லி முடித்தாள்.

ரெமி, "சரி, ஏன் இன்னும் உன் லவ்வை ஆனந்த்கிட்ட சொல்லாம இருக்கே?"

ப்ரீதி, "அவர் என்னை வெறும் ஃப்ரெண்டா மட்டும்தான் பார்க்கறார். என்னை மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்க அவருக்கு இஷ்டம் இல்லை"

ரெமி, "வேற எந்த மாதிரி பொண்ணு வேணுமாம்?"

ப்ரீதி, "உன்னை மாதிரி எல்லா விஷயத்திலும் எக்ஸ்பீரியன்ஸோட இருக்கற பொண்ணு"

ரெமி, "சே! தெரிஞ்சு இருந்தா இந்த ஃபிலிப் பையனுக்கு ஓ.கே சொல்லி இருக்க மாட்டேன்" என்று அவளை மேலும் கடுப்பேற்றி ப்ரீதியின் முறைப்பைப் பெற்றாள். தொடர்ந்து, "எனிவே. நான் உனக்கு காம்பெடிஷனா வரப் போறது இல்லை. அந்த கவலையே வேண்டாம். ஆனா எல்லா விஷயத்திலும் எக்ஸ்பீரியன்ஸோட இருக்கும் பொண்ணுதான் வேணும்ன்னு ஆனந்த் சொல்லி இருக்க மாட்டார்ன்னு எனக்கு தோணுது"

ப்ரீதி, "இல்லை. என் கிட்ட அப்படித்தான் சொன்னார்"

ரெமி, "நான் சொல்றேன். ஆனந்த் மாதிரி ஆளுங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற பொண்ணைவிட எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னாலும் எக்ஸ்பெரிமெண்ட் பண்ண ரெடியா இருக்கற பொண்ணுதான் பிடிக்கும். நீ ஒத்துக்கறியா"

ப்ரீதி, "ஏப்படி சொல்றே?"

ரெமி, "எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற பொண்ணுங்கன்னா ஏற்கனவே மத்தவங்க கை பட்ட பொண்ணுங்க. அப்படி இல்லாம ஃப்ரெஷ்ஷா இருந்தா எந்த ஆம்பளைக்கும் கிக் அதிகமா இருக்கும். இது எனக்கு தெரிஞ்ச விஷயம் உனக்கு தெரியாத விஷயம். நான் சொன்னா நம்பு"

ப்ரீதி, "சரி. அதனால் என்ன இப்போ?"

ரெமி, "இப்படி யோசிச்சுப் பாரு. அவர் ஃபேமிலி பாக்ரௌண்ட்டை வெச்சுப் பார்க்கும் போது. அவங்க பேரண்ட்ஸ் அவர் உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா"

ரெமி, "நிச்சயமா அது ஆனந்துக்கும் தெரிஞ்சு இருக்கும். இல்லையா?"

ப்ரீதி, "ஆமா"

ரெமி, "நீயே ஏன் அந்தப் பொண்ணா இருக்கக் கூடாது?"

மௌனம் காத்த ப்ரீதியிடம் ரெமி தொடர்ந்து, "ப்ரீதி, இப்படி யோசிச்சுப் பாரு. நீ லவ் பண்ணற ஆளுக்கு பிடிக்காத மாதிரி இருந்து என்ன பிரயோஜனம்? எப்படியும் உங்க அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறது இல்லை. ஆனந்துக்கு பிடிச்ச மாதிரி நடந்துட்டா .. அவரே உன் கிட்டே ப்ரோபோஸ் பண்ண சான்ஸ் இருக்கு. இல்லைன்னாலும் நீ அவர்கிட்டே ப்ரோபோஸ் பண்ணலாம். I am sure he will accept you"

ப்ரீதி, "அதெல்லாம் நடந்ததுக்கு அப்பறம் அவர் ஒத்துக்கலைன்னா .. I will die"

ரெமி, "அதெல்லாம் நடக்காம இருந்தா நீ கன்னிகா ஸ்த்ரீயா வயசானதுக்கு அப்பறம் சாகப் போறே. ஏய், ஏன் இப்படி நெகடிவ்வா யோசிக்கறே? இப்போதைக்கு உன் எய்ம் ஆனந்தை செட்யூஸ் பண்ணி உன் கிட்ட ப்ரோபோஸ் பண்ண வைக்கறது. நிச்சயம் அதில் நீ ஜெயிப்பேன்னு யோசி"

ப்ரீதி, "இதெல்லாம் தப்பில்லையா?"

ரெமி, "உன்னை நிறையப் பேர் கூடவா ஜாலியா இருக்கச் சொல்றேன். ஆனந்த்கூட மட்டும்தானே? நீ ஆனந்தை லவ் பண்ணறே. நீயா வேற யாரையும் லவ் பண்ணப் போறது இல்லை. உங்க அம்மாவும் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கப் போறது இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி அது தப்பு? இப்படி யோசிச்சுப் பாரு. நீங்க ரெண்டு பேரும் லவர்ஸ்ன்னு வெச்சுக்கலாம். ஆனந்த் உன் கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வெச்சுக்கலாம்ன்னு சொன்னா என்ன சொல்லுவே?"

ப்ரீதி, "கல்யாணத்துக்கு அப்பறம் வெச்சுக்கலாம்ன்னு சொல்லுவேன்"

ரெமி, "அதுக்கு அவர் இப்போ செக்ஸ் வெச்சுகிட்டாத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா? ஒத்துக்க மாட்டியா?"

ப்ரீதி, "தெரியலை .... ம்ம்ம்ம்... அவர் மேல நம்பிக்கை இருந்தா மே பீ ஒத்துப்பேன்"

ரெமி, "இதுவும் அதே மாதிரி சிச்சுவேஷன்தான்னு எடுத்துக்கோ. அதுக்கு அப்பறம் அவர் உன்னை லவ் பண்ணினாலும் பண்ணாட்டியும் அது ஒரு ஜாலியான அனுபவம்ன்னு எடுத்துக்கோ. எனக்கு இப்போ வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு. திரும்பி வர இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆகும். அதுக்குள்ளே நல்லா யோசிச்சு முடிவு பண்ணு"

ப்ரீதி, "ஏன் இப்படி அவசரப் படுத்தறே?"

ரெமி, "ஏன்னா, வெள்ளிக் கிழமை எனக்கு பதிலா நீ போகணும்ன்னா உன்னை ரெடி பண்ண எனக்கு நிறைய டைம் தேவை"



ஒரு மணி நேரம் கழித்து ..

ரெமி, "என்ன முடிவு பண்ணி இருக்கே?"

ப்ரீதி, "நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்யாம நாளைக்கு லஞ்ச் டைம் அப்போ நானே ஆனந்த்கிட்டே ப்ரோபோஸ் பண்ணினா?"

ரெமி, "There is every chance he will say yes. ஆனா நீ சொன்ன மாதிரி அவருக்கு ஒரு அவுட் கோயிங்க் பர்ஸன்தான் தனக்கு லைஃப் பார்டரா வரணும்ன்னு இருந்தார்ன்னா அவர் ஒத்துக்க மாட்டார். ஆனா, ப்ராப்ளம் அது இல்லை. அதுக்கு அப்பறம் உன் கிட்டே பேச அவருக்கு தர்மசங்கடமா இருக்கும் உன்னை அவாய்ட் பண்ணுவார். அது உனக்கு ஓ.கேவா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம். அட் லீஸ்ட் அவர் இங்கே இருக்கப் போற இந்த நாலஞ்சு மாசமாவுது அவரோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்ன்னு இருக்கேன்"

ரெமி, "சோ என்ன செய்யப் போறே?"

ப்ரீதி, "நீ அவரோட டிஸ்கோதேக்கு போகாதே"

ரெமி, "ஏய், கிறுக்கு, ஆனந்துக்கு ஃபிலிப்பைப் பத்தி தெரியும். என் கிட்ட சும்மா கம்பெனி கொடுக்கத்தான் வரச் சொன்னார். His idea is to find someone there. நான் போலேன்னா வேற யாரையாவுது கூட்டிட்டுப் போவார். ஏன் உன் ஆஃபீஸ்லயே யாராவுது இருப்பாங்களே"

ப்ரீதி, "ஆமா, அந்த சோனியா எனக்கு கீழே வொர்க் பண்ணறா. இருந்தாலும் அவர்கிட்ட டெய்லி வந்து வழியுவா"

ரெமி, "ம்ம்ம் ... அவ அவர்கூட போனா அவளே மொதல்ல ஆனந்துக்கு ரூட் போடப் பாப்பா. ஏய், Anand is prize catch. நிறைய பொண்ணுங்க அவர் பின்னால போக ரெடியா இருப்பாங்க. அதைப் புரிஞ்சுக்கோ"

ப்ரீதி கண்கள் கலங்க, "போகட்டுமே. அவருக்கே என் மேல இன்டரெஸ்ட் இல்லாதப்போ நானா எதுக்கு போய் அந்த மாதிரி எல்லாம் வழியணும்"

ரெமி, "மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது. நான் சொல்றேன். அவருக்கு உன் மேல இன்டரெஸ்ட் நிறைய இருக்கு. இல்லைன்னா he won't do all that he has been doing ... மே பீ ... நீ ரொம்ப கட்டுப் பெட்டியா இருக்கறேன்னு அவருக்கு ஒரு சின்ன ஹெசிடேஷன் இருக்கலாம். அவர் எதிர்பார்க்கற மாதிரி நீயும் மாடர்ன்தான்னு நீ ப்ரூவ் பண்ணு. அப்பறம் பாரு"

ப்ரீதி, "பட் ... நீ சொல்றா மாதிரி செக்ஸ் எல்லாம் ... "

ரெமி, "ஏய், நான் ஒண்ணும் எடுத்த எடுப்பில் அவரை பெட்டுக்கு கூப்பிடச் சொல்லலை. ஒரு வேளை அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அதுக்கும் நீ தயாரா இருக்கணும்ன்னு சொன்னேன்"

ப்ரீதி, "சரி, இப்போ நான் என்ன செய்யணும்?"

ரெமி, "Let us take one step at a time .. மொதல்ல நீ அவர்கூட டிஸ்கோத்தேக்கு போறது ... "

ப்ரீதி, "சரி ... "

ரெமி, "ஓ.கே. அதுக்கான பார்ட்டி வேர் உன் கிட்டே இல்லை. நாளைக்கு நமக்கு ஒரு பெரிய ஷாப்பிங்க் ட்ரிப் இருக்கு. அடுத்த மூணு நாளும் உனக்கு கொஞ்சம் ட்ரெயினிங்க் கொடுக்கப் போறேன். வெள்ளிக் கிழமை மத்தியானம் வந்துடு உன்னை ஒரு ப்யூட்டி பார்லருக்குக் கூட்டிட்டு போகப் போறேன்"
வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணியிலிருந்து ...

ப்ரீதி, "ரெமி, இந்த ப்ரா விழுந்துடாதே?"

ரெமி, "Oh! Don't worry my girl. You have an excellent pair of boobs. They will hold your bra tight"

ப்ரீதி, "சீ!"

ரெமி, "என்ன சீ? எப்பவும் அங்கி மாதிரி எதையாவுது போட்டுட்டு இருக்கறதால உன்னுது C சைஸ் கப்புன்னு நான் நினைக்கவே இல்லை. அதுவும் உன் ஹைட்டுக்கு அட்டகாசமா இருக்குடி. எனக்கு உன்னை மாதிரி ஸ்ட்ரக்சர் இருந்து இருந்தா ஃப்லிப் இப்படி கல்யாணத்தை தள்ளிப் போட்டு இருக்க மாட்டான்"

சற்று நேரத்தில் ...

ப்ரீதி, "ஏய், ரெமி. என்னடீ இது இந்த ஜீன்ஸ் இப்படி டைட்டா இருக்கு?"

ரெமி, "வாவ், திரும்பி நின்னு கண்ணாடியில் உன் பம்ஸ்ஸைப் பாரேன்? நான் மட்டும் ஒரு ஆம்பளையா இருந்தா இப்பவே உன்னை டாகி ஸ்டைலில் பண்ண ஆரம்பிச்சுடுவேன்"

ப்ரீதி, "டாகி ஸ்டைலுன்னா ... " என்றவள் முந்தைய தினம் ரெமி அவளுக்குப் புகட்டிய செக்ஸ் பாடம் மனதில் வர "சீ ... வேற எதுவும் உனக்கு ஞாபகம் வராதா?"

ரெமி, "நீ அப்படி இருக்கே நான் என்ன செய்ய?"

ப்ரீதி, "நான் இந்த ஜீன்ஸைத்தான் போட்டுக்கணுமா. என்னண்டே வேற கம்ஃபர்டபிளான ஜீன்ஸ் இருக்கே?"

ரெமி, "நான் சொல்றதை மட்டும் செய்"

இன்னும் சற்று நேரத்தில் ..

ப்ரீதி, "ரெமி, ஐய்யைய்யோ. சின்ன சைஸை கொடுத்துட்டாண்டி"

ரெமி, "எது இந்த நூடில் ஸ்ட்ராப் டாப்பை சொல்றியா?"

ப்ரீதி, "ஆமா"

ரெமி, "இதுக்கு என்ன? It hugs your bossoms and waist nicely"

ப்ரீதி, "பட் இடுப்புக்கு கீழே வர மாட்டேன்றதுடீ"

ரெமி, "ஆமா. அதுக்கு என்ன?"

ப்ரீதி, "இடுப்பு கொஞ்சம் வெளில தெரியறது"

ரெமி, "நீ புடவை கட்டினா தெரியறது இல்லையா? அந்த மாதிரித்தான்"

ப்ரீதி, "பட் அதில முந்தானையால மறைச்சுக்கலாமே?"

ரெமி, "ம்ம்ம்ஹூம் ... அடுத்த பார்ட்டிக்கு நான் உனக்கு புடவை கட்ட சொல்லிக் கொடுக்கப் போறேன். கம் ஆன் இன்னும் அரை மணி நேரத்தில் ஆனந்த் வந்துடுவார். சீக்கிரம்"

அரை மணி நேரத்தில் ஆனந்தின் ஸ்கார்ப்பியோவின் ஹாரன் சத்தம் கேட்டது.

ப்ரீதி, "ரெமி, இன்னும் கொஞ்சம் நேரம் இந்த ஹை ஹீல்ஸை போட்டு நடந்து பராக்டீஸ் பண்ணி இருக்கணும். டான்ஸ் ஃப்ளோரில் ஸ்லிப் ஆகி விழுந்துடுவேனோன்னு பயமா இருக்குடீ. "

ரெமி, "கூல் மை கர்ல்! ரிலாக்ஸ்!! ஜாலியா போய் என்ஜாய் பண்ணிட்டு வா"



ப்ரீதி பலியாட்டுக் களையுடன், "சரி"

ரெமி, "ஏய்! நான் சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோ. அனேகமா ஆனந்த் இன்னைக்கு உன்னை பாத்ததும் ஃப்ளாட்டாயிடுவார். வேற எந்தப் பொண்ணையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்ன்னு நினைக்கறேன். அப்படி அவர் யாரையாவுது பார்த்தா என்ன செய்யணும்ன்னு ஞாபகம் இருக்கு இல்லை?"

ப்ரீதி, "இருக்கு. ஆனா அதெல்லாம் செய்வேனான்னு தெரியலை"

ரெமி, "ஏய், இது உன் வாழ்க்கைப் பிரச்சனை. ஞாபகம் வெச்சுக்கோ. If you play your cards right no way some chit will take Anand away from you"

ப்ரீதி, "சரி" என்றவாறு புறப்பட்டாள்.

ரெமி, "ஏய், இருடி .. அவசரப் படாதே"

ப்ரீதி, "But he is waiting ..."

ரெமி, "So? இரு ... "

சில நிமிடங்கள் கழித்து ரெமியின் செல் ஃபோன் சிணுங்கியது.

ரெமி, "ஹெல்லோ ஆனந்த், சாரிப்பா. என்னால இன்னைக்கு வர முடியாது ... "

மறுமுனையில் ஆனந்தின் எரிச்சல் ஒலித்தது

ரெமி, "ஹே கூல் கூல் ... உனக்கு வேற ஒரு கம்பானியன் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். I am sure you will appreciate. ஒரு அஞ்சு நிமிஷம் பொறு அவ வந்துட்டே இருக்கா" என்று இணைப்பைத் துண்டித்து ப்ரீதியிடம், "ஆல் தி பெஸ்ட். இப்ப போ"

ப்ரீதி கண்கள் பனிக்க, "தாங்க்ஸ் ரெமி"

ரெமி, "ம்ம்ம் .. ம்ம்ம் .. We should make our men wait but not for long" என்றபடி வழியனுப்பினாள்.


No comments:

Post a Comment