Saturday, April 25, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 8

ஆனந்த், "சரி நம்ம மேட்டருக்கு வருவோம்"

ப்ரீதி, "என்ன மேட்டர்?"

ஆனந்த், "Having Fun! ஜாலியா இருக்கறது!!"

ப்ரீதி, "அதைப் பத்தி நீ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம் எனக்கே தெரியும் எப்படி ஜாலியா இருக்கணும்ன்னு"

ஆனந்த், "சரி சொல்லு எப்படி இருப்பேன்னு"

ப்ரீதி, "எப்படியோ இருப்பேன் நோக்கு என்ன?"

ஆனந்த், "ஏற்கனவே நீ ஒரு தரம் ஹெல்ப் கேட்டு செய்ய முடியாம போச்சேங்கற கில்ட் கான்ஷியஸ்தான்"

அவனது குறும்பை ரசித்துச் சிரித்தாள். சற்று திரும்பி அருகில் ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.



ஆனந்த், "என்ன சொல்றே? நான் உனக்கு ஒரு அட்வைஸர் மாதிரி இருக்கேன். ஜாலியா இருக்கப் போறது நீதான். அதில் நான் பங்கு கேக்க மாட்டேன்"

ப்ரீதி, "சரி"

ஆனந்த், "உன் லிஸ்டில் என்னெல்லாம் இருந்துச்சு?"

ப்ரீதி, "ம்ம்ம் .. சுதந்திரமா சுத்தணும். அதுக்கு ஒரு டூ வீலர் வாங்கணும்"

ஆனந்த், "ஏன் டூ வீலர்? கார் வாங்கிக்கோயேன்"

ப்ரீதி, "என்னை திவாலவாக்கப் போறியா?"

ஆனந்த், "சரி பரவால்லை விடு. அப்பறம்"

ப்ரீதி, "ட்ரெஸ்ஸஸ் எல்லாம் வாங்கணும்"

ஆனந்த், "சரி, அப்பறம்"

ப்ரீதி, "மொபைல் ஃபோன் வாங்கணும். எம்.பி.3 பாட்டு எல்லாம் டவுன் லோட் பண்ணி கேக்கணும்"

ஆனந்த், "ஐ.பாட் வாங்கேன்"

ப்ரீதி, "அதுவும் வாங்கப் போறேன்"

ஆனந்த், "சரி, அதுக்கு அப்பறம் என்ன?"

ப்ரீதி, "அதுக்கு அப்பறம் என்ன? ஜாலியா இருக்கப் போறேன்"

ஆனந்த், "அதான் எப்படின்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேல்ல?"

ப்ரீதி, "தெரியலை. நீ தானே எக்ஸ்பர்ட். நீயே சொல்லு"

ஆனந்த், "ஷாப்பிங்க் போறது ஒரு விதத்தில் பொண்ணுங்களுக்கு பிடிச்ச ஃபன் தான். மத்தபடி மணிக்கணக்கா எதானும் காஃபீ ஷாப்பில் உக்காந்து அரட்டை அடிக்கணும். நான் சொன்னது எந்த காஃபீ ஷாப் தெரியும் இல்லை?" என்றதும் நிறுத்தி அவளைப் பார்த்து சிரித்தான்.

ப்ரீதி, "சும்மா கிண்டல் அடிக்காதே. அதெல்லாம் நேக்கு இப்போ தெரியும். ஆனா அங்கே எல்லாம் ஒரு காஃபிக்கு அம்பது ரூபா கேப்பா. மணிக்கணக்கா உக்காந்துண்டு இருந்தா பழுத்துடும்"

ஆனந்த், "அவன் அம்பது ரூபா வாங்கறது அஞ்சு ருபா காஃபிக்கு பாக்கி நாப்பத்தி அஞ்சு ருபா நீ உக்காரும் டேபிள்-சேருக்கு வாடகைக்கு. மணிக்கணக்கா உக்காந்து ஒரே காஃபியை சாப்பிடணும். அதான் ஃபன்"

ப்ரீதி, "அதெல்லாம் நான பண்ணினது இல்லை"

ஆனந்த், "கவலையே படாதே. எதுக்கு இருக்கேன் ஃபன் கன்ஸல்டண்ட்?"

மறுபடி அவள் சிரித்ததில் லயித்து அவள் முகத்தையே ஆனந்த் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ப்ரீதி, "என்ன யோசனை? அப்பறம் என்ன?"

ஆனந்த், "அப்பறம் ஸ்டைலா ட்ரெஸ் பண்ணிட்டு நைட் டின்னருக்கு போறது. அங்கேயும் மணிக்கணக்கா அரட்டை அடிக்கறது"

ப்ரீதி, "மறுபடி எக்கச் சக்கமா செலவு செய்யறதுன்னு சொல்லு"

ஆனந்த், "இல்லேன்னா ஒரு பாய் ஃப்ரெண்ட் பிடிச்சுக்கோ. வேற மாதிரி ஃபன் அனுபவிக்கலாம்"

ப்ரீதி, "சீ .. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை"

ஆனந்த், "எந்த மாதிரி பொண்ணு?"

ப்ரீதி, "கண்டவன் கூட என்னென்னமோ பண்ணற மாதிரி"

ஆனந்த், "கண்டவன் கூட எதுக்கு? பாய் ஃப்ரெண்ட் கூடத்தானே?"

ப்ரீதி, "நேக்கு பாய் ஃப்ரெண்ட் யாரும் இல்லை"

ஆனந்த், "மொதல்ல கர்ல் ஃப்ரெண்ட்ஸ் யாரானும் இருக்காளா?"

ப்ரீதி, "நேக்கு ஒரு அளவுக்கு ஃப்ரெண்டா இருந்தவா எல்லாம் இப்போ யூ.எஸ்ல இருக்கா. இல்லேன்னா அவாளுக்கு கல்யாணம் ஆயிடுத்து" என்று சொல்லச் சொல்ல் அவள் குரல் கர கரத்தது.

ஆனந்த், "கல்யாணம் கூட ஃபன் தான். சரி, உன் ஃபேமிலியைப் பத்தி நீ சொல்லவே இல்லையே. எப்படி இருக்கா எல்லாரும்? உன் தங்கை எம்.ஸி.ஏ முடிச்சுட்டு அக்காவோட பாரத்தை அவளும் ஷேர் பண்ணிக்கறாளா? தம்பி?"

ப்ரீதி, "ப்ரியா எம்.ஸி.ஏ முடிச்சுட்டு காக்னிஸாண்டில் வொர்க் பண்ணிண்டு இருந்தா. ஆத்துக்கு எதுவும் கொடுக்க மாட்டா. ரீசண்டா அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து"

ஆனந்த், "ரியலி? யார் மாப்பிள்ளை?"

ப்ரீதி, "அவளோட சீனியர். லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுண்டா"

ஆனந்த், "அவளே செஞ்சுண்டாளா?"

ப்ரீதி, "இல்லை அவா ஆத்துல வந்து பெண் கேட்டப்பறம் அம்மா கல்யாணம் செஞ்சு வெச்சா"

ஆனந்த், "நகை எல்லாம் போட்டு உன் செலவில் செஞ்சு வெச்சாளாக்கும்"

ப்ரீதி மௌனமாக அவனைப் பார்த்தாள். கண்கள் குளமாவதை அவளால் தவிற்க முடியவில்லை.

ஆனந்த், "ஹே, என்னது இது? ஆஃப்டர் ஆல் உன் தங்கைதானே?"

ப்ரீதி மூக்கை உறிஞ்சியபடி, "ஒண்ணுமில்லை விடு ஆனந்த்" என்றாள்.

தொடர்ந்து மௌனமாக சாப்பிட்ட பிறகு அலுவலகத்தை அடைந்தனர்.


மாலை அவளையறியாமல் ப்ரீதியின் கண்கள் ஆனந்தைத் தேடின. அவன் தனது அறையில் இருந்தான். சற்று நேரம் காத்து இருந்தபின் அவனது அறைக் கதவைத் தட்டி உள்ளே சென்றாள். அவனுக்கு எதிரில் அமர்ந்தவள் அவன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.

அவளைப் பார்த்தவன் அருகில் இருந்த காகிதம் ஒன்றில், 'On a con-call till 9 pm' என்று எழுதிக் காட்டினான்.

சிரித்துத் தலையாட்டியபடி எழுந்தாலும் அவள் முகத்தில் ஏமாற்றம் தாண்டவமாடியது.

அடுத்த சில நாட்கள் வேலையில் இருவரும் மூழ்கி இருந்தனர். ஆனந்த், அவனது ப்ராஜெக்ட் வேலைக்கும் அதிகமாக ஏதோ செய்வது போல ப்ரீதி உணர்ந்தாள்.

அடுத்த நாள் மாலை அவளது இருக்கைக்கு ஆனந்த் வந்தான்.

ஆனந்த், "என்ன லேடி? என்ன செஞ்சுட்டு இருக்கே? ஜாலியா இருக்க ஆரம்பிச்சாச்சா?"

ப்ரீதி, "என்னமோ பெரிய அட்வைஸர்ன்னு சொன்னப்பறம் கண்டுக்காம விட்டா என்ன செய்யறதாம்? அதான் வேற அட்வைஸர் யாரானும் இருக்காங்களான்னு பாத்துண்டு இருக்கேன்"

ஆனந்த், "சாரி, இப்போ ப்ராஜெக்ட் தொடக்கத்தில் கொஞ்சம் வெலை அதிகமா இருக்கும். இன்னைக்கு நான் ஃப்ரீ. I am at your disposal. என்ன செய்யலாம் சொல்லு"

ப்ரீதி, "டூ வீலர் வாங்கணும்"

ஆனந்த், "அதுக்கான ரிஸர்ச் எல்லாம் பண்ணிட்டியா?"

ப்ரீதி, "என்ன ரிஸர்ச்?"

ஆனந்த், "எந்த டூ வீலர் வாங்கணுங்கற ரிஸர்ச்"

ப்ரீதி, "அதெல்லாம் நான் பண்ணிட்டேன். நேக்கு ஹோண்டா ஆக்டிவா வாங்கணும்"

ஆனந்த், "உன்னண்டே ட்ரைவிங்க் லைஸன்ஸ் இருக்கா?"

ப்ரீதி, "ஆன்-சைட் போறதுக்கு முன்னாடி தேவையா இருக்கும்ன்னு வாங்கினேன். ஆனா அங்கே நான் ட்ரைவ் பண்ணவே இல்லை"

ஆனந்த், "சரி, Let's go"

ஒரு ஆட்டோ பிடித்தனர். செல்லும் வழியில்,

ப்ரீதி, "இங்கே நீ எப்பவும் ஆட்டோதானா?"

ஆனந்த், "விக்ரம் ஷா தன்னோட ஸ்பேர் காரை யூஸ் பண்ணிக்கச் சொல்லி இருக்கார். ஆட்டோ கிடைக்காத சமயத்ல மட்டும் அதை எடுத்துட்டு வருவேன். வேற ஒரு காருக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கேன். பாக்கலாம்"

ஹோண்டா ஷோ ரூமை அடைந்ததும் அங்கே ஒரு பெண் ஆனந்தைக் கை காட்டி தன்னுடன் இருந்த இளைஞனிடம் ஏதோ சொல்வதை ப்ரீதி கவனித்தாள். ஆனந்த் அவர்களை நோக்கிச் செல்ல ப்ரீதி உடன் நடந்தாள்.

அந்தப் பெண்ணுடனும் இளைஞனுடனும் ஆனந்த் பேசத் தொடங்கினான். அவர்கள் பேசுவதைப் பார்த்தவாறு ப்ரீதி அருகில் நின்று இருந்தாள்.

சற்று நேரத்துக்குப் பிறகு ஆனந்த அவர்களுக்கு ப்ரீதியை அறிமுகம் செய்து வைத்தான்.

சிவாவுடன் அறிமுகமான பிறகு ப்ரீதி செல்வியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

ப்ரீதி, "நீங்க எங்கே வொர்க் பண்ணறீங்க?"

செல்வி, "கார்ல்டன் டவர்ஸ்ல இருக்கும் ஒரு இன்வெஸ்ட் கம்பெனில அக்கௌண்ட்ஸ் செக்ஷனில் இருக்கேன். நீங்க?"

ப்ரீதி, "அதே பில்டிங்கில் இருக்கும் ஷா சிஸ்டம்ஸ் கம்பெனில சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியரா இருக்கேன்"

தனது நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும் செல்வியின் முகம் வெளுப்பதை ப்ரீதி கவனித்தாள். அதன் பிறகு அவள் சகஜமாக பேசவில்லை. இருவரும் ஆடவர்கள் பேச்சில் கவனம் செலுத்தினர்.

அவர்களிடம் இருந்து விடைபெற்று உள்ளே சென்றனர்.

ப்ரீதிக்கு பிடித்த நிறம் அவர்களிடம் இருக்கவில்லை. மறு நாள் வருவதாகக் கூறி விடைபெற்றனர்.

மறுபடி ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் ப்ரீதி தங்கி இருக்கும் பி.ஜி விடுதியில் இறங்கினர்.

ப்ரீதி, "என்னை இறக்கி விட்டுட்டு நீ இதிலயே போய்க்கோயேன்?"

ஆனந்த், "I like to walk"

ப்ரீதி, "கேக்கவே இல்லை. நீ எங்கே தங்கி இருக்கே?"

ஆனந்த், "டைமண்ட் டிஸ்ட்ரிக்ட் ஒரு அப்பார்ட்மென்டில். விக்ரம் ஷாவோடது"

ப்ரீதி, "ஓ, அப்ப ஆஃபீஸுக்கு ரொம்ப பக்கம் இல்லை?"

ஆனந்த், "ம்ம்ம்... அல்மோஸ்ட் எதிரில"

திடீரென ப்ரீதி, "அவாளை நோக்கு எப்படி தெரியும்?"

ஆனந்த், "அவாளைன்னா? யாரை?"

ப்ரீதி, "இன்னைக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வெச்சியே சிவா செல்வி"

ஆனந்த், "அந்த சிவாவை இன்னைக்குத்தான் மீட் பண்ணினேன். செல்வியை முன்னாடி தெரியும்"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "பொறாமையா?"

ப்ரீதி, "பொறாமையா? நேக்கு என்ன பொறாமை?"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி. அந்த சிவாதான் அவளோட பாய் ஃப்ரெண்ட்டுன்னு நினைக்கறேன்"

ப்ரீதி, "சரி நோக்கு அந்த செல்வியை எப்படித் தெரியும்"

ஆனந்த், "நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணினேன்"

ப்ரீதி, "என்ன ஹெல்ப்?"

ஆனந்த், "அவளை ரேப் பண்ண இருந்தவங்ககிட்டே இருந்து அவளை காப்பாத்தினேன்"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "போன வாரம் நைட் பத்து மணி இருக்கும். ஒரு கான் கால் அட்டெண்ட் செய்யறதுக்காக் ஆஃபீசுக்கு வந்தேன். கார்னர்ல ஒரு ரூம் இருக்கு இல்லை"

ப்ரீதி, "ஆமா. அது எப்பவும் பூட்டி இருக்கும்"



ஆனந்த், "அதில இருந்து I heard a girl moaning in distress"

அதிர்ச்சி அடைந்த ப்ரீதி, "what?"

ஆனந்த், "பக்கத்தில் போய் கதவை தள்ளிட்டுப் பாத்தா ரெண்டு பேர் இந்தப் பொண்ணோட ட்ரெஸ்ஸைக் கழட்டிட்டு இருந்தாங்க. On fellow was mauling and biting her while the other was busy undressing her lower garments. ஐ திங்க் அவளை ட்ரிங்க் பண்ண வெச்சு இருக்காங்கன்னு நினைக்கறேன். அவளைக் கட்டாயப் படுத்தறா மாதிரி இருந்தது. உள்ளே போய் சத்தம் போட்டேன். அதில ஒருத்தன் உங்க கம்பெனியில் வொர்க் பண்ணறவன். அவன் பேரு நந்தகுமார்"

ப்ரீதி, "ஆமா. அவன்கூட கான் காலில் பேசி இருக்கேன். இப்போ அவன் நான் இருந்த ப்ராஜெக்ட்டுக்கு ஆன்-சைட் போயிருக்கான். ஆனா அவன் சுத்தமா எதுக்கும் லாயக்கு இல்லாதவன். விக்ரம் ஷா அவனை எதுக்கு அனுப்பி இருக்கார்ன்னு தெரியலை"

ஆனந்த், "அவன் தான். என்னை வேலையைப் பாத்துட்டு போன்னான். அதுக்குள்ளே அந்தப் பொண்ணு அழுதுட்டே எழுந்து என் கிட்ட வந்தா. அவங்க கட்டாயப் படுத்தறாங்கன்னு தெரிஞ்சுது. அந்த நந்தகுமார் கூட இருந்தவன் என்னை அடிக்க வந்தான். I wacked him. அந்த நந்தகுமார் அதுக்குள்ள ஓடிட்டான்"

ப்ரீதி கண்களில் குழந்தைத் தனம் பளிச்சிட, "WACKED HIM அப்படின்னா? டிஷ்யூம் டிஷ்யூம்ன்னு ரஜனி மாதிரி சண்டை போட்டியா?"

ஆனந்த், "அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஓங்கி மூஞ்சில குத்தினேன். தொப்புன்னு விழுந்துட்டான்"

கல கலவென சிரித்த ப்ரீதி, "அப்பறம் என்னாச்சு?"

ஆனந்த், "அப்பறம் என்ன? நான் செல்வியை கூட்டிட்டு அவ வீட்டில் கொண்டு விட்டுட்டு வந்தேன்"

ப்ரீதி, "ஓ மை காட். விக்ரம் ஷாகிட்ட அந்த நந்தகுமாரைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணினயா?"

ஆனந்த், "எஸ். ஆனா விக்ரம் ஷா அதை பெருசா எடுத்துக்கலை. அது மட்டும் இல்லை. அந்த ரூம் மறுபடி லாக் பண்ணிட்டாங்க. பட், அந்த ரூம்ல சில விஷயங்கள் நோட்டீஸ் பண்ணினேன்"

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "அந்த ரூமில் இருந்த ஃபர்னிசர். ஓரத்தில் ஒரு டேபிள் சில சேர் இருந்தது. ஆனா சுத்தி கௌச் அப்படிம்பாளே அந்த மாதிரி சோஃபா. வேணும்னா அதுல படுத்துக்கலாம். ஒரு சுவத்தில ஒரு சின்ன பெட். அப்பறம் சுவத்தில் வீடியோ கேமரா மாதிரி ஃபிக்ஸ் பண்ணி இருந்தது. நல்லா கவனிச்சாத்தான் கேமரா இருக்கறது தெரியும். அந்த மாதிரி ஃபிக்ஸ் பண்ணி இருந்தது"

ப்ரீதி, "இதெல்லாம் நடக்குதுன்னு நேக்கு தெரியாது"

ஆனந்த், "ஷா சிஸ்டம்ஸ்ல நடக்கறது நிறைய நோக்கு தெரியாது" என்றபடி விடைபெற்றான்.


ஆனந்த சென்ற பிறகு ப்ரீதி தன் அறைக்குச் சென்றாள்.

மேலிருந்த பால்கனியில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அவளது அறைத் தோழி ரெமி ப்ரீதி அறைக்குள் நுழைந்ததும்

ரெமி, "ஹே, ப்ரீதி. உன் பாய் ஃப்ரெண்ட் ரொம்ப ஸ்மார்ட்ப்பா"

ப்ரீதி, "யாரு?"

ரெமி, "அதான் இப்போ பேசிட்டு இருந்தியே"

ப்ரீதி, "அவர் என் பாய் ஃப்ரெண்ட் இல்லை"

ரெமி, "பின்னே?"

ப்ரீதி, "வெறும் ஃப்ரெண்ட் மட்டும்தான்"

ரெமி, "ஏன்? அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா?"

ப்ரீதி, "அவருக்கு கல்யாணம் இன்னும் ஆகலை"

ரெமி, "அப்பறம் ஏன் அவன் உன் பாய் ஃப்ரெண்ட் இல்லைன்னு சொல்றே?"

ப்ரீதி, "அவர் என்னை அந்த மாதிரி பார்க்கலை"

ரெமி, "It doesn't matter. நீ அவனை என்ன மாதிரி பார்க்கறே?"

ப்ரீதி சற்று நேரம் மௌனம் காத்த பிறகு, "நான் அவரை எப்படி பார்க்கறேங்கறது முக்கியம் இல்லை. அவர் என்னை அந்த மாதிரி பார்க்கணும் இல்லை?"

ரெமி, "ஏண்டி இந்த மாதிரி அம்மாஞ்சியா இருக்கே. நீ முதல்ல அவன்கூட லேசா அந்த மாதிரி பழகு. அவன் உண்மையாவே அந்த மாதிரி நினைக்கலைன்னா அவனே சொல்லிடுவான். அதுக்கு அப்பறம் நீயும் அவனை வெறும் ஃப்ரெண்டா மட்டும் பாரு"

ப்ரீதி, "என்னை அவர்கிட்ட வழிய சொல்றியா? அதுக்கு அப்பறம் அவர் என்னண்டே அந்த மாதிரி நினைச்சுப் பழகலைன்னு சொன்னா அதை விட அசிங்கமே வேண்டாம்"

ரெமி, "சரி, எந்த மாதிரி நினைச்சுட்டு உன் கூட பழகறான்னு அவன் கிட்ட ஓபனா கேளு"

ப்ரீதி, "அதெல்லாம் என்னால முடியாது"

ரெமி, "ம்ம்ஹூம். இந்த ஜென்மத்தில் உங்க அம்மா உனக்கு கல்யாணம் செஞ்சு வெக்கப் போறது இல்லை. நீயாவும் யாரையும் செலக்ட் செஞ்சுக்கவும் மாட்டே"

ப்ரீதி பதிலேதும் சொல்லாமல் குளியலறைக்குள் சென்றாள்.

அவள் மனதுக்குள் ஒரு சிறு பட்டி மன்றம் தொடங்கியது ...

'ஆனந்த் என்னை கர்ல் ஃப்ரெண்டா பார்க்கறானா?. சான்ஸே இல்லை. அவனுக்கு நான் ஜஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும்தான்.' என்று அவள் மனதின் ஒரு புறம் கேட்க

மறுபுறம், 'ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி நீ அவனை லவ் பண்றேன்னு நினைச்சியோல்லியோ?' என்றது

'அதெல்லாம் வெறும் இன்ஃபாச்சுவேஷன்னு அப்பவே நான் தெரிஞ்சுண்டேன்'

'அவன் உன்னை லவ் பண்றானோ இல்லியோ. நீ அவனை லவ் பண்ணேன்? He can't stop that'

'ம்ம்ம்.... ஆறு மாசம் கழிச்சு அவன் போனப்பறம் உக்காந்துண்டு அழணுமா? I don't want any more dissappointments in my life. நேக்கு ஃப்ரெண்ட்ஸுன்னு யாருமே இல்லை. இந்த ஆறு மாசத்துக்கானும் ஒரு நல்ல ஃப்ரெண்ட் இருக்கான்னு நினைச்சுண்டு ஜாலியா இருக்கப் போறேன்'

'அவன் போனதுக்கு அப்பறம்?'

'இவ்வளவு நாள் எப்படி இருந்தேனோ அதே மாதிரி இருக்கப் போறேன். அது பழக்கப் பட்டதுதானே?'

'கடைசில அந்த ரெமி சொன்ன மாதிரிதான் நடக்கப் போறது'

'ஆகட்டும் என் தலைவிதி அப்படித்தான்னா என்ன செய்ய முடியும்?'

ஆனந்துடன் இருக்கும் நேரங்களை ஒரு கணம் நினைவு கூர்ந்தாள். அச்சமயங்களில் மனத்தில் எந்த பாரமும் இல்லாமல் அவளால் சிரித்துப் பேச முடிவதை உணர்ந்தாள்.



அடுத்த சில நாட்கள் ஆனந்த் ப்ராஜெக்ட்டின் நுணுக்கங்களை அவளுக்கும் மற்ற இரு டீம் லீடர்களுக்கும் விளக்கினான். அவளுக்குப் பிடித்த நிற ஸ்கூட்டர் இன்னும் ஷோருமுக்கு வந்து இருக்கவில்லை. மதிய உணவு இடைவேளையை அவனுடன் கழித்தாலும் ப்ராஜெக்ட்டைப் பற்றி மட்டுமே இருவரும் பேச முடிந்தது.

அந்த ப்ராஜெக்ட்டில் எத்தனை நபர்கள் பணியாற்றப் போகிறார்கள் என்ற பேச்சை ஆனந்த் எழுப்பினான்.

சுகுமார், "அதை நாங்க இன்டர்னலா டிஸ்கஸ் பண்ணி க்ளையண்டுக்கு இன்ஃபார்ம் பண்றோம் ஆனந்த்"

ஆனந்த், "Its not a problem. ஆனா ப்ராஜெக்ட்டில் வொர்க் பண்ணறவங்க கூட நான் interact பண்ணினா அவங்களுக்கு எந்த டவுட் வந்தாலும் உடனே என்னால சால்வ் பண்ண முடியும். ப்ராஜெக்ட் சீக்கரம் முடியும். இல்லைன்னா ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் இந்த மூணு பேரும் இன்வால் ஆகணும்"

சுகுமார், "அது தான் அவங்க வேலை"

ஆனந்த், "O.k. Suite your convenience" என்றபடி அந்த மீட்டிங்க்கை முடித்தான்.

No comments:

Post a Comment