Thursday, April 9, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 21

அவளுடைய இறுகிய அணைப்பால் கண்விழித்த சத்யன், தன் பங்குக்கு அவளை இறுக்கியணைத்து கொண்டு குனிந்து அவள் காதருகில் தன் உதட்டை வைத்து “ மான்சி” என்றான்

“ம்” என்றாள் மான்சி

“ நான் ஒன்னுமே பண்ணலை,.. நீயாதான் வந்த” என்று கிசுகிசுப்பாக சத்யன் கூற

“ ம்ம்” என்றாள் மறுபடியும்

“ நீயாதான் தூக்கத்தில் என்னை கட்டி புடிச்சிக்கிட்ட” என்றான் மறுபடியும்

“ ம்ம்ம்” என்று மான்சி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும் போதே வெளியே மறுபடியும் கதவை தட்டு சத்தம் கேட்டது

“ வெளிய கதவை தட்டுறாங்க மான்சி நான் போய் கதைவை திறக்கவா” என்று சத்யன் ரகசியமாக கேட்க

“ம்ஹூம்” என்று கூறிவிட்டு மான்சி அவனை விடாமல் இறுக்கி கொள்ள,..


சத்யனுக்கு அந்த காலை வேளையில் முகம் முழுவதும் புன்னகையாய் இருக்க, கடவுள் சொர்க்கத்தை அவன் கைகளில் கொடுத்து அதை பாதுக்காக்கும் பனியையும் கொடுத்தது போல் இருந்தது

சத்யன் இன்னும் சற்று குனிந்து அவள் உச்சியில் முத்தமிட, மறுபடியும் கதவு தட்டும் சத்தம் அதோடு ப்ரணேஷ் அப்பா அப்பா என்று அழைக்கும் குரலும் சேர்த்து கேட்டது

மகனின் குரல் கேட்டதும் இருவருமே தங்கள் பிடியை தளர்த்தி விடுபட,. மான்சி அவன் முகத்தை பார்க்காமலேயே தலையை கவிழ்ந்தவாறு கட்டிலில் இருந்து இறங்கினாள்

சத்யன் அவள் கைகளை பிடித்து இழுத்து தன்மீது போட்டு அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட, மான்சி அவனை பிடித்து தள்ளிவிட்டு எழுந்தாள்

சத்யன் அவளை ஏமாற்றமாக பார்க்கம,,, மான்சி திரும்பி அவனை பார்த்து “ ச்சு பல் கூட விளக்காம இதென்ன கூத்து ,. நான் சீக்கிரமா கிளம்பி ஆஸ்பிட்டல் போகனும்,.. நீங்க போய் கதவை திறங்க” என்று அவன் ஏமாற்றத்துக்கு தன்னால் முடிந்த விளக்கத்தை கொடுத்துவிட்டு மான்சி பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்

சத்யன் சிரித்தபடியே அவள் முகம் இருந்த தன் மார்பை தடவி பார்த்துக்கொண்டே எழுந்து போய் கதவை திறக்க,.

அவன் கதவை திறந்தது தான் தாமதம் பிள்ளைகள் இருவரும் அப்பா என்று கத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தனர்,.

சத்யனும் உற்சாகமாக அவர்கள் இருவரையும் அள்ளிக்கொண்டு கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தான்

பிள்ளைகளுடன் இவனும் சேர்ந்து சிறுபையன் போல கட்டிலில் கட்டி உருண்டு விளையாட ஆரம்பித்தான்

பாத்ரூமில் இருந்து வந்த மான்சிக்கு அவர்களை பார்த்ததும். தானும் அவர்களுடன் சோர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவர்களை நெருங்க,. அப்போது அவளுடைய மொபைல் ஒலித்தது

எடுத்து பேசிய மான்சி இதோ இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டு,.. விளையாடிக் கொண்டு இருக்கும் பிள்ளைகளையும் சத்யனையும் ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டு ஆஸ்பிட்டல் கிளம்ப ஆயத்தமானாள் 

மான்சி வெகு அவசரமாக ஆஸ்பிட்டல் கிளம்ப,. சத்யன் தனது பிள்ளைகளுடன் கட்டிலில் கொட்டமடித்து கொண்டிருந்தான்,.. சத்யன் கவிழ்ந்து படுத்திருக்க அவன் முதுகில் அமர்ந்திருந்த ப்ரணேஷ் அவன் தலை முடியை பிடித்துக்கொண்டு “ஏய் குதிரை நல்லா போ” என்று குதிரை சவாரி செய்துகொண்டிருக்க,. அடுத்து சவாரிக்காக ப்ரணவ் காத்துகொண்டு சத்யன் அருகில் உட்கார்ந்திருந்தான்

மான்சி குளித்துவிட்டு வந்து க்ரே கலரில் பேன்டும் இளம் ஆரஞ்சு வண்ணத்தில் சட்டையும் அணிந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கட்டிலருகே வந்தாள்
சத்யன் முதுகில் இருந்த ப்ரணேஷின் முதுகில் வலிக்காமல் ஒரு அறை வைத்து

“ ஏய் வாலு இறங்குடா கீழே,. எவ்வளவு நேரமா முதுகுல உட்காந்து குதிக்கிற அப்பா உடம்பு என்னாகுறது இறங்குடா” என்று அதட்டி ப்ரணேஷை வலுக்கட்டாயமாக இழுத்து கட்டிலில் தள்ளினாள் மான்சி

அவள் குரல் கேட்டதும் கவிழ்ந்திருந்த சத்யன் திரும்பி அவளை பார்த்து “ விடு மான்சி அவங்க குதிக்கிறது எனக்கும் சுகமாத்தான் இருக்கு,. நம்ம பிள்ளைகள் தானே” என்ற சத்யன் அப்போதுதான் அவளை ஏற இறங்க பார்த்தான்

“ என்ன மான்சி இதுதான் பார்டிக்கு போட்டுப்போற டிரஸ்ஸா” என்று கேட்க

“ ம்ஹூம் பார்ட்டி ஈவினிங் தான் அதுக்கு வேற டிரஸ் எடுத்து வச்சிகிட்டேன்.. இது யூஸ்வலா நான் ஆஸ்பிட்டல் போட்டுகிட்டு போற டிரஸ்” என்று சொல்லிவிட்டு அறையில் இருந்து வெளியே போக

சத்யனும் கட்டிலைவிட்டு இறங்கி அவள் பின்னாடியே ஹாலுக்கு வந்தான்
மான்சி சர்தார்ஜியை அழைத்து தன்னுடன் காரில் வருமாறு அழைத்தாள்

“ ஏன் மான்சி அவரை கூட கூட்டிட்டு போற “ என்று சத்யன் கேட்க

“ இல்ல நான் கார்ல போய் ஆஸ்பிட்டல்ல இறங்கட்டு காரை திருப்பி அனுப்பிட்டா, நீங்கல்லாம் எங்கயாவது வெளியே போகனும்னா யூஸ் ஆகும் அதனாலதான் அவரை கூட்டிட்டு போறேன்” . என்று மான்சி சத்யனுக்கு விளக்கம் கொடுக்க

“அப்போ நான் உன்னை ஆஸ்பிட்டல்ல கொண்டு போய் விடுறேன் கொஞ்சம் இரு மான்சி முகம் மட்டும் கழுவிட்டு நான் வர்றேன்” என்ற சத்யன் அள் பதிலை எதிர் பார்க்காமல் அறைக்குள் ஓடினான்

இதென்னடா குழப்பம் நேரமாயிருச்சே என நினைத்து மான்சி தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தாள்,.. அப்போது ரத்னா காபி எடுத்துக்கொண்டு அனைவருக்கும் கொடுக்க, மான்சியும் ஒரு கப் எடுத்துகொண்டாள்

அவள் காபியை குடித்து முடிப்பதற்குள் சத்யன் வந்துவிட்டான்,. வெறும் ஷாட்ஸ்ஸும் டீசர்ட்ம் மட்டும் போட்டுக்கொண்டு தலைமுடியை கைகளால் கோதிய படி ஸ்டைலாக வந்த சத்யனை மான்சி கண்கொட்டாமல் பார்த்தாள்

“ம் நான் ரெடி மான்சி வா போகலாம்” என்று சத்யன் கூப்பிட்டதும்

“இப்படியே ஷாட்ஸோடய வர்றீங்க:” என மான்சி ஆச்சிரியமாக கேட்க

“ ஏன் நான் உன்கூட பார்ட்டிக்கா வரப்போறேன், சும்மா கார்ல உன்னை கொண்டு வந்து விட மட்டும் தான, அதுக்கு இது போதும், கிளம்பு மான்சி” என்றவன் அப்போது ரத்னா அவனுக்கு காபி எடுத்துவந்து கொடுக்க ...

“ நான் வந்து குடிச்சுக்கிறேன்” என்று கூறிவிட்டு சத்யன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போனான்

சத்யன் காரை ஸ்டார்ட் செய்து கார் செட்டில் இருந்து வெளியே எடுக்க, மான்சி முன்புறமாக அமர்ந்து கொண்டாள்

சிறிது நேரத்தில் சிங்கப்பூர் சாலை கார் வழுக்கிக்கொண்டு செல்ல,. சத்யன் வெகு லாவகமா காரை ஓட்டினான்

மான்சி அடிக்கடி திரும்பி அவனுடைய பக்கவாட்டு தோற்றத்தை ரசித்துக்கொண்டே வந்தாள். இவனுக்கு இப்போது என்ன வயது இருக்கும் , எப்படியும் முப்பத்திநாலு இருக்கும், ஆனால் இன்னும் இளமையை தொலைக்காமல் எவ்வளவு அழகாக இருக்கிறான் என நினைத்தாள்

அவளை திரும்பி பார்த்த சத்யன் “ காலையில பசங்க வந்து தொந்தரவு பண்ணலேன்னா என்ன மான்சி நடந்துருக்கும்” என்று சிரித்தபடி குறும்பு குரலில் கேட்க

மான்சி அதிகாலை நினைவில் முகம் பூரித்து சிவக்க கண்களை மூடிக்கொண்டாள்,.. சத்யன் தனது ஒருகையை நீட்டி அவளை இழுத்து தன் மடிமீது போட்டு கையால் அவளை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்




நிமிஷத்தில் நடந்த இந்த சம்பவத்தில் மான்சி தடுமாறி பிறகு திமிறி “ அய்யோ இதென்ன விளையாட்டு டிரஸ் கலைஞ்சுட போகுது ப்ளீஸ் விடுங்க “ என்று சத்யனிடம் கெஞ்ச

“ டிரஸ் கலைஞ்சு போறளவுக்கு நான் ஒன்னும் செய்யமாட்டேன், சும்மா அப்படியே படுத்துக்க” என்று சத்யன் அதட்ட

மான்சி அந்த அதட்டலில் அடங்கி மெதுவாக திரும்பி அவன் மடியில் தலைவைத்து அவன் முகத்தை பார்த்தவாறு சிரமமாக திரும்பி படுத்து.. “என்ன இன்னிக்கு நான் ஆஸ்பிட்டல் போறதா இல்லையா” என கிண்டல் குரலில் கேட்க

“ம்ம் அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு போயிருவ” என்றவன் தன் ஒருகையால் அவளின் உதடுகளை வருடியபடி “ மான்சி உனக்கு இங்கே ஏதோ பிரச்சனைனு நேத்து காலையில சொன்னியே, வேலையே விட்டுட்டு போறளவுக்கு அப்படியென்ன பிரச்சனை மான்சி” என்று சத்யன் கேட்க

சிறிதுநேரம் மவுனமாக இருந்த மான்சி பின்னர் அவன் மடியிலிருந்து எழுந்து அமர்ந்து “அந்த பிரச்சனைக்காகத்தான் நான் வேலையை விட்டுட்டு போறேன்னு கிடையாது சத்யன்,.. எனக்கு நம்ம பிள்ளைகளை உங்ககிட்ட இருந்து ரொம்ப தூரம் பிரிச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி ஒரு குற்றவுணர்வு",.

" இப்போ வேனும்னா அதெல்லாம் சரியா இருக்கலாம்... ஆனா பசங்களோட பிற்காலத்தில் தகப்பன் என்ற உறவு கேள்வி குறியாகிவிடும்னு தோனுச்சு அதான் இந்தியாவுக்கே போயிடலாம் முடிவு பண்ணேன்” என்று மான்சி கூற

சத்யன் அவளை திரும்பி பார்த்து “ ஆக என்னையும் சேர்த்து வச்சு பார்த்து முடிவு பண்ணிருக்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு மான்சி, ஆனா நீ இன்னும் அந்த பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்லை மான்சி , இல்ல அதை தெரிஞ்சுக்க எனக்கு தகுதியில்லைனு நெனைக்கறயா மான்சி” என இறுக்கமான குரலில் கேட்க

“ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க, நான் அந்தமாதிரி நினைக்கலை” என்றவள் தலையை குனிந்தவாறு “ நான் வேலை செய்யும் ஆஸ்பிட்டல்ல சீப் டாக்டரோட மகன் தீபக்னு ஒருத்தன் லன்டனில் மேற் படிப்பு முடிச்சுட்டு இங்கே பிராக்டீஸ் பண்ண வந்திருக்கான்,. அவன் என்னை எந்த நிமிஷத்தில் பார்த்தானோ அப்ப இருந்து என்னை லவ் பண்றதா சொல்லி ரொம்ப தொந்தரவு பண்ணான்”,

“ நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ ரெண்டு குழந்தைகளுக்கு அம்மானு எல்லாமே அவனுக்கு தெரியும், ஆனாலும் அவன் என்னையும் என் பிள்ளைகளையும் நல்லபடியா பார்த்துக்கிறேன்னு ஒரே தொல்லை பண்றான்,. நான் அவனோட அப்பாகிட்ட இவனை பத்தி கம்ப்ளைண்ட் பண்ணேன், ஆனா அவரும் அவனுக்கு சப்போர்ட் பண்ணித்தான் பேசறார்,

“ உன் பிள்ளைகளுக்கு அவங்க பிற்காலத்துக்கு உதவற மாதிரி கொஞ்சம் சொத்துக்களை எழுதி வச்சிடலாம், நீயும் என் மகனும் சேர்ந்து இந்த ஆஸ்பிட்டல்லை நல்ல படியா கவனிச்சுக்குங்கனு லூசுத்தனமா பேசறார்,. அவருக்கு என்னோட நிர்வாக திறமையும், அவர் மகனின் மருத்து படிப்பும் சேர்ந்தா இந்த மருத்துவமனை நம்பர் ஒன்னாயிடும் ஒரு கற்பனை, அதனால்தான் இந்தமாதிரி பேசுறாரு”

“ தீபக் அவன் அப்பா தன்னை ஆதரிக்கிறார்னு தெரிஞ்சவுடன் ரொம்ப துணிச்சல் அதிகமாயிடுச்சு,, கிரீட்டிங்ஸ் கார்டெல்லாம் வாங்கிகிட்டு ஒரு பத்து நாளைக்கு முன்னாடி வீட்டுக்கே வந்துட்டான், அப்புறம் நான் சர்தார்ஜியை அவன் கூட பேசிகிட்டு இருக்க சொல்லிட்டு நான் சமையல் பண்ற மாதிரி உள்ள போய் சமாளிச்சேன், அதனாலதான் இந்த ஆஸ்பிட்டல்ல இருநது வேலையை ரிசைன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன் சத்யன்” என்று மான்சி கூறி முடித்துவிட்டு சத்யனை நிமிர்ந்து பார்த்தாள்

அவன் முகம் பாறையைவிட கடினமாக இறுகி போயிருந்தது,. மான்சிக்கு உள்ளுக்குள் சில்லென்ற உணர்வு ஏற்பட மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டாள்

மருத்துவமனை வந்துவிட காரை வெளியிலேயே நிறுத்திய சத்யன் அமைதியாக ஆனால் இறுகிப்போய் அவள் பக்கம் திரும்பாமல் அப்படியே உட்கார்ந்திருக்க,.

அவனையே பார்த்த மான்சி பின்னர் காரைவிட்டு இறங்கி சுற்றிலும் பார்த்தாள், அந்த காலை வேலையில் சாலை வெறிச்சோடி கிடந்தது... பிறகு காரை சுற்றிக்கொண்டு அவன் பக்கமாக வந்தவள், கார் கண்ணாடியை விரலால் தட்ட,

சத்யன் கண்ணாடியை இறக்கிவிட்டு என்ன என்பதுபோல் அவளை பார்த்தான்

மான்சி உள்ளே கையை நீட்டி அவன் டீசர்ட் காலரை கொத்தாக பற்றி தன் முகத்தருகே இழுத்தவள் “ உங்களுக்கு இன்னொரு விஷயம் நான் சொல்ல மறந்துட்டேன் சத்யன், நேத்து காலையிலயே அவன் ஆஸ்பிட்டல்ல என்னை வந்து பார்த்து என்ன முடிவு பண்ணிருக்க மான்சின்னு கேட்டான்” என்று கூறிவிட்டு மான்சி அரைகுறையாக நிறுத்த

சத்யன் அவ்வளவு அருகாமையில் அவள் முகத்தையும் ஈர இதழ்களையும் பார்த்து மனம் சற்றே தடுமாறினாலும் சமாளித்து கொண்டு “ நீ அவனுக்கு என்ன பதில் சொன்ன” என்று அடைத்த குரலில் கேட்க

அவன் கண்களையே உற்றுப் பார்த்த மான்சி அதிலிருந்த தடுமாற்றத்தை கண்டு மனதுக்குள் சிரித்தபடி “ ம் நான் என்ன சொன்னேன்னா கேட்கிறீங்க,.. ஆறடி உயரத்துல ஆஜானுபாகுவா ஆணழகனா தேவலோக கந்தர்வன் மாதிரி என் புருஷன் இந்தியாவில் இருந்து வந்துருக்காரு அவரை வந்து உனக்கு முடிவு சொல்லச்சொல்றேன்னு சொன்னேன், அதுக்கப்புறம் ஒருநிமிஷம் கூட அவன் அங்கே நிற்க்கலை ஓடிட்டான், என்ன நான் சொன்னது சரிதானே” என்று மான்சி குறும்பு குரலில் கூறிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்

சத்யனுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை காற்றில் பறக்கவிட, நிம்மதியாக தன் கண்களை மூடி மறுபடியும் மான்சி கூறியவைகளை மனதில் கொண்டுவந்து சிந்திக்க

சத்யன் எதிர்பார்க்காத தருணத்தில் மான்சி அவனை பட்டென தன் பக்கம் இழுத்து உதடுகளை முரட்டுத்தனமாக கடித்து இழுத்து சப்பி தன் நாக்கால் அவன் நாக்குடன் அவனை சமாதானம் செய்வது போல் தடவிக்கொடுத்து, அவன் கடவாயில் எச்சில் வழிய ஒரு அற்புத முத்தத்தை வழங்கிவிட்டு நிமிர்ந்தாள்

சத்யன் சற்றுமுன் என்ன நடந்தது என நினைக்கும் முன் “ இப்போ மனசு நிம்மதியாச்சா, வீட்டுக்கு போய் பிள்ளைகளை எங்கயாவது வெளியே கூட்டிட்டு போங்க,. இல்லேன்னா உங்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க அவங்க நேத்தே வீட்டுக்கு வரச்சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டாங்க, அதனால அங்கயே கூட்டிட்டு போங்க,.. நான் வீட்டுக்கு வர இன்னிக்கு லேட்டாகும் அதனால சமர்த்து பையனா இருங்க , என்று சொல்லிவிட்டு காரைவிட்டு மான்சி நகர்ந்து ஆஸ்பிட்டல் உள்ளே போக

சத்யன் அவளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகு உற்சாகமாக விசிலடித்தபடி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்

சத்யன் அன்று முழுவதும் உற்சாகத்தோடு அவன் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதுபோல வின்னில் பறந்தான்,. மான்சியிடம் அடிக்கடி போன் செய்து பேசினான்

அவள் பிசியாக இருந்தததால் இரண்டொரு வார்த்தைகளே பேச சத்யன் புரிந்து கொண்டு அவளை அதிகம் தொந்தரவு செய்யவில்லை

அன்று மாலை பிள்ளைகளுடன் பானு பிரேமா என எல்லோரையும் அழைத்துக்கொண்டு சத்யன் அவன் மாமா வீட்டுக்கு போனான், அங்கே சத்யனுக்கும் பானு மற்றும் பிள்ளைகளுக்கும் ராஜ உபச்சாரம் நடந்தது ,

அனைவரும் அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு நாளை போகுமாறு சத்யனின் மாமா வீட்டினர் அவனிடம் கெஞ்சி கேட்க,. என்ன சொல்வது என்று புரியாமல் சத்யன் பானுவை பார்த்தான்

" நாங்க இங்கயே இருக்கோம் சத்யன் நீ வீட்டுக்கு போ, அப்புறம் ாருமே இல்லாமல் மான்சிக்கு போரடிக்கும் " என பானு சத்யனிடம் கண்சிமிட்டி சொல்லி சிரிக்க

அவள் சொன்னதை கேட்டு சத்யனுக்கு புதிதாக ஒரு வெட்கம் வர , அதை பார்த்து பானு இன்னும் அதிகமாக சிரித்தாள்

சத்யன் இரவு உணவுக்கு பின் மான்சி வீட்டுக்கு கிளம்பினான், அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் சர்தார்ஜி அவனை சாப்பிட சொல்ல ,

சத்யன் சாப்பிட்டுவிட்டதாக கூறிவிட்டு படுக்கையறைக்குள் போய் தன் உடைகளை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தான் அவனுக்கு மான்சி எப்போது வருவாளோ என்று ஏக்கமாக இருந்தது,

அப்போது அவனுடைய செல் ஒலிக்க , நிச்சயம் மான்சியாகத்தான் இருக்கும் என்று எண்ணி சத்யன் செல் எடுத்து பார்க்க, மான்சிதான் கால் செய்திருந்தாள்

சத்யன் ஆன் காதில் வைத்து " சொல்லு மான்சி" என்றான்



" சத்யன் நீங்க உடனே நான் சொல்ற ஹோட்டலுக்கு வாங்க, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை ப்ளீஸ் உடனே வர்றீங்களா" என்று மான்சி தடுமாற்றமான குரலில் பேச

சத்யன் கட்டிலில் இருந்து பதறி எழுந்து " என்னம்மா ஆச்சு காலையில நல்லாத்தானே இருந்த ரொம்ப உடம்பு சரியில்லையா குரலே ஒருமாதிரியா இருக்கு" என அவசரமாக கேட்க

" அதெல்லாம் நான் பிறகு சொல்றேன்,. நீங்க வரும்போது சர்தார்ஜியை கூட கூட்டிட்டு வாங்க, நான் அந்த ஹோட்டல் கார் பார்க்கிங்கில் இருக்கும் எங்க ஆஸ்பிட்டல் கார்ல இருக்கேன்,. நீங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க" என்று ஹோட்டல் பெயரை சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாள்

சத்யன் பதறியபடி எழுந்து வெளியே ஓடி சர்தார்ஜியிடம் விவரம் சொல்ல, அவரும் பதட்டத்துடன் "அய்யோ மேடத்துக்கு என்னாச்சு சீக்கிரம் போகலாம் வாங்க" என்று வெளியே ஓடினார்

சத்யன் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, சத்யனின் கைகளில் கார் ராக்கெட் வேகத்தில் சீறி பாய்ந்தது


" நீ எது கேட்டாலும் நான் விட்டுக் கொடுக்கிறேன்...

" அப்போது தானே ஆனந்தத்தில்எல்லையில்

" நீ என்னை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறாய்

" விட்டுக் கொடுப்பதும் கட்டிப் பிடிப்பதும்...

" காதலில் சுகம்தான்..

" ஆனால் காதலை விட்டுக்கொடுக்க முடியாது..

" என்பதை தவிர 

No comments:

Post a Comment