Tuesday, April 28, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 14

செல்வி - சிவா

தனது இருக்கைக்கு சென்று அமரும்வரை செல்வியின் படபடப்பு அடங்கவில்லை. உடனே சிவாவிடம் சொல்லலாம் என்று செல்ஃபோனை எடுத்தாள். பிறகு அவன் மார்க்கெட்டுச் சென்று இருப்பதை மனது கூர்ந்து அச்செயலை விடுத்தாள்.

'கடைசியா எதுக்கு அப்படி சொன்னான்?'

'எல்லார் கிட்டயும் என்னைப் பத்தி தப்பா சொல்லப் போறான். அதுக்குத் தான் அப்படி சொல்லி இருக்கணும்'

'பாஸ்கிட்டே நடந்தது எல்லாம் ஒரு அளவுக்கு சொல்லியாச்சு. அதனால் அவர்கிட்ட வந்து அவன் வத்தி வைக்கத் தேவையில்லை. மத்தவங்க, இங்கே வேலை செய்யறவங்க அவன் சொன்னா நம்புவாங்களா?'

'அவன் சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். சிவா என்னை நம்புவான். ஆண்டி என்னை நம்புவாங்க. அது போதும். அப்படி எதாவுது என்னைப் பத்தி வதந்தியைப் பரப்பினான்னா சிவா வேலை செய்யற ரெஸ்டாரண்டில் ஃபுல் டைம் வேலைக்குச் சேர்ந்துட வேண்டியதுதான். என்ன கொஞ்சம் சாலரி குறையும். அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை'



'இனி அவன் என் கிட்ட வாலாட்டினா பப்ளிக் ப்ளேஸ்ல செருப்பைக் கழட்டி காமிச்சு அவனை அவமானப் படுத்தப் போறேன்' என இறுதியாக முடிவெடுத்தாள். அவள் மனது சிறுது நிம்மதி அடைந்தது.

மதிய உணவுக்குப் பிறகு அலுவலகத் தோழிகளுடன் வெளியில் சென்று அக்கட்டிடத்தைச் சுற்றி நடந்து கொண்டு இருந்தபோது. நந்தகுமார் அவளை மறுபடி வழி மறித்தான்.

இம்முறை நாசூக்காக, "எக்ஸ்கியூஸ் மீ" என்று அவளை அழைத்தான்

இறுகிய முகத்துடன் தோழிகளிடம் இருந்து விலகி அவனிடம் சென்ற போது ..

நந்தகுமார், "என்ன நான் காலைல சொன்னதை யோசிச்சியா? அன்னைக்கு நடந்ததை வெச்சு உன் பேரை நாறடிச்சுடுவேன்"

செல்வி, "நீ ஒரு மயிரும் புடுங்க முடியாது. என்னைக் கட்டிக்கப் போறவருக்கும் என் வருங்கால மாமியாருக்கும் அன்னைக்கு நடந்தது எல்லாம் தெரியும். ஏற்கனவே உன் மேல ரொம்ப கோவமா இருக்காரு. இப்போ நான் ஒரு குரல் கொடுத்தா போதும். மவனே, உன்னை பெண்டு நிமித்த ஆள் வந்து நிக்கும். எப்படி வசதி?"

நந்தகுமார், "நான் யாருன்னு உனக்கு தெரியாதுடீ"

செல்வி, "நீ எவ்வளவு பெரிய புடுங்கியா இருந்தாலும் சரி. மூடிகினு போயிட்டே இரு. இல்லை, செருப்பு பிஞ்சுடும்"

நந்தகுமார், "அப்டியா? ஒரு நிமிஷம் நில்லு ... " என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த செல் ஃபோனை எடுத்து அதில் எதையோ தேடினான். சிறுது நேரத்துக்குப் பிறகு அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற குழப்பம் அவன் முகத்தில் தெரிந்தது.

செல்வி அவனை விட்டு அகன்றாள். அவன் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

செல்வி மாலை அலுவலகம் முடிந்த பிறகு வழக்கமாக வீட்டுக்குச் சென்று சிறுது நேரம் அங்கு இருந்த பிறகு தனது பகுதி நேரப் பணிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். அன்று அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் உணவகத்தை அடைந்தாள். அந்நேரத்தில் வழக்கமாக இரவு உணவுக்கு வேண்டியவற்றை மற்றவர் தயாரிப்பதை சிவா மேற்பார்வை செய்து கொண்டு இருப்பான்.

செல்வி அலுவலகத்தில் இருந்து வீடு செல்லாமல் அங்கு வருவதைக் கண்டவன் முகம் மலர, "ஏய், என்ன நேரா இங்கே வந்துட்டே? ஐய்யாவுக்கு வேலை இருக்கு தெரியும் இல்லை?"

செல்வி முகம் வாடியிருந்தாலும், "தெரியும். ஒண்ணு சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்தேன்"

சிவா, "இன்னாது. ஏன் டல்லா இருக்கே?"

செல்வி, "நந்தகுமார் ஊரில் இருந்து வந்துட்டான்" என்றதும் அவன் முகம் இறுகியது.

சிவா, "மறுபடி உங்கிட்ட வாலாட்டினானா?"

செல்வி, "இல்லை. மெறட்டுனான்"

சிவா, "மவனே! இன்னா மெறட்டுனான்?"

செல்வி, "அன்னைக்கு நடந்ததை வெச்சு என் பேரை நாறடிச்சுடுவேன்னு மெறட்டுனான்"

ஏளனமாகச் சிரித்த சிவா, "எனக்கு ஒண்ணியும் தெரியாதுன்னு நெனச்சுட்டு ரோப் உட்டுப் பாத்து இருப்பான். பேமானி. வா" என்றபடி அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

சிவா, "அவன் ஆஃபீஸ்ஸை உட்டுப் போயிருப்பானா?"

செல்வி, "தெரியலை. ஆனா இப்ப அவன் போற நேரம்தான்"


அப்போது மாலை வேலைக்காக அங்கு வந்த எத்திராஜ், "இன்னா மச்சான்? சிஸ்டர்கூட வெள்ல நின்னு பேசினு இருக்கே"

சிவா, "அந்த நந்தகுமார் பேமானி ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டானாம். செல்வியை இன்னாவோ மெறட்டுனானாம்"

எத்திராஜ், "மவனே! அவன் வந்தவொடனே நாலு சாத்து சாத்தணும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள வந்து மெறட்டுனானா. இன்னும் ஆஃபீஸ்ல இருக்கானா?"

சிவா, "அதான் நானும் இன்னாடான்னு கேக்கலாம்ன்னு வெள்ல வந்தேன். இன்னும் ஆஃபீஸ்லதான் இருப்பான்னு நெனக்கறேன். ஒண்ணு பண்ணு நீ மேல போய் அவன் ஆஃபீஸ்ல இருந்தா கீழே கூட்டினு வா. நான் இங்கே வெயிட் பண்ணறேன்"

எத்திராஜ், "சரி, அப்போ நீ அந்த கேட்டாண்டே வெயிட் பண்ணு. பின்னாடி லிஃப்ட்ல போனாக்கூட அந்த கேட் வழியாத்தான் போகணும்" .

சிவா, "டேய். நீ எதுவும் செய்யாதே. அவன் மேல கை வைக்காதே. ஜஸ்ட் பேசலாம். இன்னாடா?"

எத்திராஜ், "தனியா இருந்தாகூடவா?"

சிவா, "டேய் மயிரு! கை வெக்கற வேலை வேணாம். பேசறதுக்கு கீழே நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு மட்டும் சொல்லு"

எத்திராஜ், "சரி. ஆனா நான் வர்றதுக்கு முன்னாடி அவன் வந்தாக்கா நீ பேச ஆரம்பிக்காதே. இன்னா?" என்ற படி கட்டிடத்துக்குள் நுழைந்தான்

சிவா செல்வியைப் பார்த்து, "நீ இன்னாத்துக்கு இப்போ டென்ஷன் ஆவறே?"

முகம் தோய்ந்த செல்வி, "ஆண்டி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இல்லை?"

சிவா, "அதான் அம்மாவுக்கு எல்லாம் தெரியுமே. எதுக்கு பயப் படறே?"

செல்வி, "அவன் மெறட்டினது மட்டும் இல்லை சிவா. ஒரு நிமிஷம்ன்னு சொல்லிட்டு செல் ஃபோனை எடுத்து என்னமே தேடினான். அவன் தேடுனது ஆம்படலைன்னு கொஞ்சம் திரு திருன்னு முழிச்சான்" அதுக்குள்ள நான் அங்கே இருந்து வந்துட்டேன்.

சிவா, "நீ எதாவுது அவனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினியா?"

செல்வி, "ம்ம்ஹூம். ஃபோன்ல அப்பப்போ பேசி இருக்கேன். அவ்வளவுதான். அவன்தான் அடிக்கடி எனக்கு ஜோக்கெல்லாம் எஸ்.எம்.எஸ்ல அனுப்புவான்"

சிவா, "அப்பறம் இன்னாத்துக்கு செல் ஃபோனை எடுத்துப் பாத்தான்? வருட்டும் அவன் கிட்டயே இன்னான்னு கேக்கலாம். ஆனா எதுன்னாலும் நீ பயப் படாதே. ஓ.கே?"

செல்வி, "சரி. இன்னமும் நீ என்னை லவ் பண்றியா?"

சிவா, "அய்யே. சரியான லூசுடி நீ"

சற்று நேரத்தில் சிவாவின் செல்ஃபோன் சிணுங்கியது

சிவா, "எத்திராஜு!" என்றபடி ஃபோனில், "இன்னாடா?"

மறுமுனையில் எத்திராஜ், "பாத்தேன் மச்சான். தனியா மாட்டுனான். நீ தான் கை வைக்காதேன்னு சொல்லிட்டியே. கீழ வாடா கொஞ்சம் பேசணும்ன்னு கராரா சொன்னேன். இன்னா பேசணும்ன்னான். செல்வி மேட்டரா பேசறதுக்கு நீ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன். ஒடனே பின்னாடி லிஃப்ட் வழியா வேகமா போனான். பம்மறான். நீ மெயின் கேட் பக்கம் தானே நின்னுட்டு இருக்கே. வருவான். பாத்துக்கோ"

சற்று நேரத்தில் கட்டிடத்துக்கு வலது புறம் இருந்து நந்தகுமார் பைக்கில் வருவது தெரிந்தது. அவர்கள் நின்று இருப்பதைப் பார்த்ததும் வேகத்தை அதிகரித்தான். குறுக்கே சென்று நிற்காமல் அவனை கையசைத்து நிற்கும் படி சைகை காட்டிய சிவாவை பொருட் படுத்தாமல் நந்தகுமார் வேகத்தை இன்னும் அதிகரித்து சாலைக்குச் சென்றான்.

சிவா, "இன்னாத்துக்கு இவன் இப்படி பயந்துட்டு ஓடறான்?" என்ற போது

சாலைக்குள் வேகமாக பிரவேசித்த நந்தகுமார் வலது புறம் இருந்து வந்து கொண்டு இருந்த மினி லாரியைக் கவனிக்கவில்லை. மினி லாரி அவனை பைக்குடன் சற்று தூரம் அழைத்துச் சென்று முழுவதும் அவன் மேல் ஏறி நசுக்குமுன் அவன் காலை மட்டும் நசுக்கி நின்றது. சுற்றி இருந்தவர் ஆம்புலன்ஸை அழைக்க அருகே இருந்த மணிபால் மருத்துவமனைக்கு 
அவன் எடுத்துச் செல்லப் பட்டான்.

எத்திராஜ், "எப்படி மச்சான் இப்படி ஆச்சு?"

சிவா, "நானும் செல்வியும் கேட்டில் நின்னுகினு இருந்தோம். எங்களைப் பாத்ததும் இன்னும் ஸ்பீட் எடுத்து கேட்டுக்கு வெள்ல வந்தான். ரைட் சைட்ல வந்துனு இருந்த மினி லாரியை அவன் பாக்கல"

எத்திராஜ், "பாரு செல்வி. கடவுளே அவனுக்கு தண்டனை கொடுத்துட்டாரு"

செல்வி, "எனக்கு என்னமோ அவன் மறுபடி தொந்தரவு கொடுப்பான்னு தோணுது சிவா"

சிவா, "நீ ஒண்ணியும் பயப் படாதே. எதுன்னாலும் நான் இருக்கேன். இன்னா?"

செல்வி, "ம்ம்ம் .. " என்று அவன் புஜத்தைப் பற்றி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

அடுத்த நாள் இரவு உணவகத்தில் ...

அன்று வெயிட்டர் பணி செய்த எத்திராஜ், "செல்வி, இதான் லாஸ்ட் பில். இத்தோட நீ கவுன்டர் க்ளோஸ் பண்ணிடலாம்"

செல்வி, "சரி, இந்த மாச டிப்ஸ் அக்கௌண்டும் ரெடியா இருக்கு. கேஷ்ஷை சார்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு டிப்ஸ் அக்கௌண்டும் கொடுக்கறேன்"

எத்திராஜ், "ஓ மாசக் கடைசின்னு மறந்தே போச்சு. எவ்ளோ டிப்ஸ்ஸு என்னுது?"

செல்வி கணிணித்திரையைப் பார்த்த படி, "உன்னுது த்ரீ தௌஸண்ட். என்ன மஜா பண்ணப் போறியா?"

எத்திராஜ், "சொல்லாதே. உங்க ஆள் அதுல ஒரு பைசா கைவெக்க உட மாட்டான்"

செல்வி, "யாரு சிவாவா?"

எத்திராஜ், "ஆமா. ஏண்டா இந்த ரெஸ்டாரண்டுல வேலைக்கு சேந்தோம்ன்னு இருக்கு. வர்ற டிப்ஸ், சம்பளம் எதையும் செலவு செய்ய உட மாட்டான்"

சிரித்த படி செல்வி, "சிவா உன் பணத்தை என்னா செய்யுது?"

எத்திராஜ், "நான் எதுவும் கேக்க மாட்டேன். அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வான்னு உட்டுடுவேன். இன்னா அப்பப்போ கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சா முடியாது. பரவால்லே. இந்த வேலையே அவனாலதான் வந்துச்சு"

சிறிது நேரத்துக்குப் பிறகு தன் பணியை முடித்த செல்வி கிச்சனுக்குச் சென்றாள். சிவாவும் மற்ற இரு சமையல் காரர்களும் ஊழியர்களுக்குத் தேவையான சிறு சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தனர்

சிவா, "இன்னைக்கு இன்னா சாப்படறே செல்வி?"

செல்வி, "நீ என்னா சாப்படப் போறே?"

சிவா, "வூட்டுல அம்மா கத்திரிக்காய் காரக் கொழம்பு வெச்சு கருவாடு வருக்கறேன்னு சொல்லி இருக்கு"

செல்வி, "அப்பன்னா உனக்கு என்ன தோணுதோ அதை எனக்குப் பண்ணிக் கொடு"

சிவா, "ம்ம்ம்ம் ... பேக்ட் பாஸ்டா. எப்படியும் காசிராம் சார் இன்னைக்கு டிப்ஸ் அக்கௌண்ட் செட்டில் பண்ணறதுக்கு கூப்புடுவார். இன்னைக்கு வேற ஒரு அக்கௌண்டும் செட்டில் பண்ணிக் கொடுப்பாரு. கொஞ்ச நாழி ஆவும் பாஸ்டாவை ஒவன்ல வெச்சா நான் சார் கேபினுக்குப் போயிட்டு வரதுக்குள்ளே ஆயிடும்" என்றபடி சுருசுருப்பானான்.

செல்வி, "இன்னொரு அக்கௌண்ட் இன்னாது அது?"

சிவா பிரகாசித்த முகத்துடன், "வீக்லி தண்ணிக் கோட்டா"

செல்வி இறுகிய முகத்துடம் அவனைப் பார்க்க அவள் முறைப்பை கவனமாகத் தவிர்த்து அவளுக்கு பேக்ட் பாஸ்டா செய்வதில் ஈடுபட்டான்.

சில நிமிடங்களில் ஒரு பீங்கான் கிண்ணத்தை ஒவனில் வைத்தபடி செல்வியிடம், "சார் கேபினுக்குப் போயிட்டு வர்றேன். டைமர் செட் பண்ணி இருக்கேன். அஞ்சு நிமிஷத்தில் ஆயிடும். வந்து பேக் பண்ணறேன்" என்றபடி சென்றான்.

செல்வி வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து காத்து இருந்தாள்.

காசிராமின் அறையில் இருந்து இரு கவர்களையும் இரு அரை லிட்டர் பெட் பாட்டில்களை ஏந்தியபடி சிவா வந்தான். அவளருகே காத்து இருந்த எத்திராஜ், "ஹப்பா! வீக்லி கோட்டாவும் வந்துருச்சா. இன்னா சிவா போற வழியிலே ... " என்றபடி இழுத்து செல்வியைப் பார்த்தான்.

சிவா பதில் சொல்வதற்கு முன் செல்வி, "அந்த ரெண்டு பாட்டிலையும் என் கைல கொடு" என்று சிவாவுக்கு ஆணையிட்டாள்.

சிவா, "இன்னா செல்வி வாரத்துக்கு ஒருதரம்தானே"

செல்வி, "தெரியும். நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் வீக்லி ஆஃப் மறந்துருச்சா? காலைல சீக்கரமா என்னை கடைக்கு அப்பறம் மூவிக்கு கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கே. இன்னைக்கு நைட்டு தண்ணி அடிச்சா காலைல சீக்கரம் எந்திரிக்க மாட்டே"

எத்திராஜ், "செல்வி, வூட்டுக்கு எடுத்துனு போனா எங்க அப்பா எடுத்து எனக்கு ஒரு சொட்டுகூட கொடுக்காம குடிச்சுருவாரு"

செல்வி, "அதான் உன்னுதையும் என் கைல கொடுன்னு சிவாட்ட சொன்னேன்"

எத்திராஜ், "இன்னா செல்வி இது? அவன் இன்னாடான்னா வர்ற பணத்தை எல்லாம் எடுத்து வெச்சுட்டு பைசா பைசாவா கொடுக்கறான். நீ இன்னாடான்னா ஓசில வர்ற தண்ணையை எடுத்து வெச்சுக்கறே. ரெண்டு பேரும் என்னை ஜாலியா இருக்க உடக் கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்க." என்று சலித்தபடி வெளியில் சென்றான். அவனைப் பின் தொடர்ந்த செல்வி அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தாள்.



ஏமாற்றத்தில் முகத்தைச் சுருக்கிக் கொண்டு தனது பேக்ட் பாஸ்தாவை பாக் செய்து கொண்டு இருந்த சிவாவிடம் வந்தவள், "ஐய்யோ. இப்போ இன்னா ஆயிடுச்சுன்னு இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருக்கே?"

சிவா, "ஒண்ணும் இல்லே போ"

செல்வி, "சரி, எத்திராஜ் பணத்தை பேங்கில் தனியா போட்டு வெக்கறையா?" என்று பேச்சை மாற்றினாள்.

சிவா, "இப்பத்துக்கு ஆர்.டியில போட்டுட்டு இருக்கேன்"

செல்வி, "இப்பத்துக்குன்னா?"

சிவா, "பில்டிங்க் ரெடி ஆனதும் நம்ம ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அவன் பணத்தையும் என்னுது கூட போட்டு அவனுக்கும் ஷேர் கொடுக்கலாம்ன்னு இருக்கேன். எப்படியும் இங்கே அவனுக்கு கொடுக்கற சம்பளம் அவனுக்குக் கொடுக்க முடியும். அத்தோட ரெஸ்டாரண்ட்லயும் பங்கு இருந்தா அவனுக்கு வருங்காலத்துல ஒதவும் இல்லையா?"

தன் சம்பளப் பணத்தை ஏன் எதற்கு என்று கேட்காமல் கொடுக்கும் எத்திராஜுக்கும் நண்பனுக்குத் தன் தொழிலில் பங்கு கொடுக்கும் தன் வருங்காலக் கணவனுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தில் செல்வி மனம் நெகிழ்ந்தாள்.

கண்கள் பனிக்க, "எவ்வளவு ஷேர் கொடுக்கப் போறே?"

சிவா, "அவன் பணம் எவ்வளவோ அந்த அளவுக்கு" என்றபடி செல்விக்குத் தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.

ஸ்கூட்டரில் வீட்டை அடைந்த பிறகு சிவா, "செல்வி, ப்ளீஸ் செல்வி. அந்த தண்ணி பாட்டிலை கொடேன்"

செல்வி, "ம்ம்ஹூம் ... சொன்னா கேளு. இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷலா பார்ட்டி மாதிரி அரேஞ்ச் பண்ணித் தரேன். நாளைக்கு நைட் ட்ரிங்க் பண்ணிட்டு அடுத்த நாள் நீ நல்லா தூங்கி மெதுவா ஏந்திரிச்சு வேலைக்கு போ. நான் தனியா ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸ் போயிக்கறேன்." என்றபடி அந்த இரு பாட்டில்களையும் தன் கைப் பையில் போட்டுக் கொண்டாள்.

சிவா, "இன்னாது ஸ்பெஷலா?"

செல்வி, "அதை இப்போ சொல்ல மாட்டேன். நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்கோ"

சிவாவின் வீட்டுத் திண்ணையில் மரகதமும் விஜயாவும் அமர்ந்து இருந்தனர்.

மரகதம், "இன்னாத்துக்கு செல்வி அவனை நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்கோங்கறே"

செல்வி, "அது ஒண்ணும் இல்லை ஆண்டி"

மரகதம், "பாரு விஜயா, கழுத்துல தாலி ஏறதுக்கு முன்னாடியே என் கிட்டே மறைக்கறா உன் பொண்ணு"

செல்வி, "ஐய்யோ ஆண்டி! வேற ஒண்ணும் இல்லை. உங்க புள்ளை இன்னைக்கு தண்ணி அடிச்சே ஆவணும்ன்னு சொன்னாரு. நான் இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு வெச்சுக்கோன்னேன்"

மரகதம், "அதான் வாரா வாரம் நடக்கற வேலைதானே. அத்தவுடு ..." என்றபடி சிவாவிடம், "டேய், நான் கேக்கறப்போ எல்லாம் ஒழுங்கா பதில் சொல்லாம இருக்கே. எப்படா கல்யாணத்தை வெச்சுக்கறதா இருக்கே?"

சிவா, "இன்னும் கொஞ்ச நாளும்மா ... "

மரகதம், "அந்த வேலையே எல்லாம் வேணாம்" என்ற பிறகு செல்வியின் பக்கம் திரும்பி "இன்னாடி நீயும் அவன் கூட சேந்துகினு கல்யாணத்தை தள்ளிப் போடறியா?"

செல்வி, "இல்லை ஆண்டி. சிவாவே முடிவு பண்ணுட்டும்ன்னு விட்டுட்டேன்"

மரகதம், "அவன் எங்கே முடிவு எடுக்கப் போறான்? சொந்த வூடு கட்டி சொந்த ஓட்டல் ஆரம்பிச்சு அதுக்கு அப்பறமா கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னுவான். நீயும் அதைக் கேட்டுகினு சும்மா இருக்கியா?"

மௌனம் காத்த காதலர்கள் இருவரும் எதிரில் தலை குனிந்து நிற்க, மரகதம், "டேய், எப்படியும் சொந்த ஓட்டல் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ஒரு நாள் கூட நீ லீவ் எடுத்துக்க முடியாது. இங்கே சம்பளத்துக்கு வேலையில் இருக்கறப்பவே கல்யாணம் செஞ்சுட்டு கொஞ்ச நாள் புருஷன் பொண்டாட்டியா ஜாலிய இருந்துட்டு அதுக்கு அப்பறம் சொந்த வேலையில் எறங்கு. இன்னா விஜயா நான் சொல்றது?"

விஜயா, "நான் எதுவும் சொல்லலை மரகதம். அவங்க ரெண்டு பேருமா சேந்து முடிவு எடுக்கட்டும்ன்னு வுட்டுட்டேன்"

மரகதம், "நீ உன் பொண்ணுக்கு மேல இருப்பே"

சிவா, "சரிம்மா யோசிக்கறேன்" என்றபடி வீட்டுக்குச் சென்றான். செல்வியும் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

மரகதம் விஜயாவிடம், "இதுங்க ரெண்டையும் இப்படி உட்டா ஒண்ணும் முடிவு எடுக்க மாட்டாங்க. இதுக்கு வேற ஒரு ஐடியா வெச்சு இருக்கேன்"

விஜயா, "இன்னா ஐடியா?"

மரகதம், "இப்போ போ. நான் நாளைக்கு சொல்றேன்" என்றபடி மகனுக்குப் உணவு பரிமாறச் சென்றாள்.





No comments:

Post a Comment